Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் போர்க்குற்ற விவகாரம்! பாரதிய ஜனதா தலைவர் – பிரித்தானிய தமிழர் பேரவை லண்டனில் சந்திப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் போர்க்குற்ற விவகாரம்! பாரதிய ஜனதா தலைவர் – பிரித்தானிய தமிழர் பேரவை லண்டனில் சந்திப்பு!

Wednesday, July 20, 2011, 18:07உலகம், தமிழீழம்

லண்டனுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர் திரு. நிதின் கட்காரி தலைமையிலான கட்சியின் உயர்மட்டக் குழுவினரை பிரித்தானிய தமிழர் பேரவையினர் லண்டனில் சந்தித்தனர்.பிரித்தானியாவிற்கு பிரச்சாரப் பணிகளுக்காக வருகைதந்த குழுவில் பாரதிய ஜனதாவின் மகளிர் அணித்தலைவி ஸ்மிருதி இராணி, ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் வசுந்தரா ராய சிந்தியா அம்மையார் மற்றும் டெல்லி மாநில சட்டசபை உறுப்பினர் விஜய் ஜோலி ஆகியோர் அடங்கி இருந்தனர்.

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் மற்றும் மானுடத்திற்கெதிரான குற்றங்களை சுயாதீனமான சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த, பல்வேறு தரப்பினரின் ஆதரவினை திரட்ட பாடுபடும் பிரித்தானிய தமிழர் பேரவை அதன் ஒரு அங்கமாக இந்தியாவின் எதிர்க்கட்சியினரை லண்டனில் சந்தித்து இலங்கையின் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் நிலை குறித்து கலந்துரையாடினர்.

இந்திய அரசு இவ்விடயத்தை இலங்கையோடு கனதியாக எடுத்துச் செல்வது அதன் கடமை என்பதனை ஏற்றுக் கொண்ட திரு. நிதீன் அவர்கள் தாம் இவ்விவகாரத்தை பாராளுமன்றத்தில் எழுப்புவதாகவும் உறுதியளித்தார். அத்தோடு நடைபெறவுள்ள சென்னை மாநாட்டில் தாம் இவ்விவகாரத்தை தமது சக உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவதாக உறுதியளித்தார்.

இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றத்தினை விசாரிப்பதற்காக சர்வதேச சுயாதீன விசாரணையின் தேவை குறித்துக் கேட்டபோது, திரு நிதீன் அவர்கள், ஒரு கொள்கைபற்றுடையுடைய எதிர்க்கட்சி என்ற வகையில், இந்திய அரசு இவ்விவகாரத்தை சர்வதேச அரங்கத்திற்கு எடுத்து செல்ல நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துவதாக உறுதியளித்தார்.

ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல் பெண் முதல்வரான வசுந்தரா ராய சிந்தியா அவர்கள், தமிழரின் நிலை குறித்து அனுதாபம் கொண்டிருப்பதோடு, ஈழத்தமிழர் விவகாரத்தை டெல்லியிற்கு எடுத்துச் செல்வதில் தமிழ்நாடு ஆற்றக்கூடிய பங்கின் முக்கியத்துவத்தினை வலியுறுத்தினார்.

அக் குழுவில் இடம் பெற்றிருந்த பாரதிய ஜனதா மகளிர் பிரிவின் தலைவி ஸ்மிருதி ராணி அம்மையார் தாம் இலங்கையின் கொலைக்களம் காணொளியை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும் இவ்விவகாரத்தை தமது கட்சிக்குள் எடுத்துச் செல்வதாகவும் உறுதியளித்தார்.

இலங்கை தமிழர்களுக்கு நடைபெற்ற இன்னல்கள் குறித்து அறிந்த டெல்லி மாநில சட்டசபை உறுப்பினர் திரு விஜய் யோலி அவர்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்.

பிரித்தானிய தமிழர் பேரவை

20.07.2011

http://www.tamilthai.com/?p=22268

BJP vows to take up Eezham Tamils plight in Indian Parliament

Bharatiya Janata Party President Nitin Gadkari who met a top delegation of the British Tamils Forum (BTF) last weekend in London, has said that the BJP was very serious on taking up the ‘Sri Lanka issue’ in the Indian Lok-Sabha. BTF leaders V Ravi Kumar and S. Pathmanathan, who led the BTF delegation to the meeting with the visiting Indian politicians, expressed hope that the BJP would be consulting Tamil Nadu Chief Minister Ms Jayalalithaa on the plight of Eezham Tamils and that the Indian leaders would also be meeting the Tamil representatives from the occupied country of Eezham Tamils. The BJP is yet to adopt a stand on the accountability issue on the question of Eezham Tamils and the genocide committed on them.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=34203

  • கருத்துக்கள உறவுகள்

ஈழசிக்கலில் பிஜிப்பிக்காரனுக்கு கம்யுனிச்ட் காரன்கள் ஆதரவளித்தாலே போதுமானது. போக மதிமுக+விசி+அதிமுக+பிஜெபி+(கம்னியுஸ்ட்?)...... கூட்டணி அமைய வாய்ப்புகள் உள்ளது அவனுங்க அங்க போய் திமுக+காங்கிரச் கார நாதாறிகளோட போய் ஒட்டிக்குவானுக.. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய தமிழர் பேரவையின் இந்த நடவடிக்கை வரவேற்க்கதக்கது, இப்படியான பயனளிக்கும் விடையங்களை தொடர்ந்து செய்வதன் மூலம் வருங்காலங்களில் அதன் பிரதி பலன்களை பெற்றுகொள்ள முடியும்.

இந்த வார இறுதியில் ஒரு மில்லியன் மலேசியன் ரிங்கேட்டுக்களை ஒரு நிகழ்வில் சேர்த்தும், பல அரசியல்வாதிகளை சந்தித்தும் உள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவிடயம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.