Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலண்டனில் தேசியக்கொடியுடன் பேரூந்து பிரச்சாரம்

Featured Replies

Bus%20probaganda.jpg

தமிழீழத் தேசியக் கொடி, தமிழீழத் தேசிய மலர், மற்றும் தமிழீழ தேசம் என்பன பொறிக்கப்பட்ட பேரூந்து ஒன்று லண்டன் நகர வீதிகளில் நேற்று முதல் உலா வருகிறது.

பிரித்தானியாவின் வடமேற்கு லண்டன் பகுதியின் கிங்ஸ்பிறி பகுதியூடாக சென்றுகொண்டிருந்த அந்த அதிசய பேரூந்து எமது கண்ணில் படவே அதை பின் தொடர்ந்து சென்று அந்த வாகன ஓட்டுனருடன் உரையாடினோம்.

அப்போது எந்த இளைஞ்ஞனுள் உறைந்து கிடந்த உணர்வுகளின் வெளிப்பாடே இந்த பேரூந்தும், அதனூடான தமிழீழ அடையாளங்களை வேற்றினத்தவர் மத்தியில் வெளிக்கொணரும் முயற்சியும் என்பது தெரிந்தது.

அந்த பேரூந்தின் நாற்புறமும் பிரித்தானியக் கொடியும், அதனோடு பிரித்தானியப் போர்வீரர்களை நினைவுகூரும் நாளில் அணியும் "பொப்பி" மலரும் பொறிக்கப்பட்டிருந்தது.

அதே போல் அதற்கு அருகில் தமிழீழமும் அடுத்து தமிழீழத் தேசியக் கொடியும், தமிழீழ விடுதலைக்காக போராடி வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களை நினைவுகூரும் நாளில் அணியும் கார்த்திகை மலரும் பொறிக்கப்பட்டிருந்தது.

இதன் கீழே "நான் பெரிது நீ பெரிதென்று வாழாமல் நாடு பெரிது, தமிழ் பெரிது, தமிழ் மானம் பெரிதென்று வாழ்" எனும் வாசகமும் எழுதப்பட்டிருந்ததை காணமுடிந்தது.

Bus%20probaganda002.jpg

இவற்றிற்கும் மேலாக "சிறீலங்காவின் கொலைக்களம்" எனும் ஆவணத்திரைப்படத்தை வெளியிட்டு சர்வதேசங்களின் கவனத்தை ஈர்த்து சிறீலங்காவில் இடம்பெறும் தமிழினப் படுகொலையை வெளிக்கொணர்ந்த "சனல் 4" ஊடகத்திற்கு நன்றி தெரிவித்தும் ஆங்கிலத்தில் வாசகம் பொறிக்கப்பட்டிருந்ததாவது வேற்றின மக்களையும் கவர்ந்தது.

அந்த வாகனத்தில் நாமும் சிறுது தூரம் பயனித்து வீதிகளில் செல்லும் மக்களின் பார்வை எவ்வாறு உள்ளதென்பதை அவதானித்த போது தமிழர் மட்டுமன்றி வேற்றினத்தவரும் வியந்து பார்த்ததோடு தமது கைகளை உயர்த்தி தமது ஆதரவையும், ஊக்கத்தையும் அளித்ததை கண்டோம்.

http://www.eelanatham.net/story/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D

Edited by உமை

முயற்சிகளுக்கு பாராட்டுக்கள்.

புலம்பெயர் தமிழர்கள், பிரித்தானிய மக்கள் என பலருக்கும் நல்ல செய்திகள் குறிக்கப்பட்டுள்ளன.

இதன் கீழே "நான் பெரிது நீ பெரிதென்று வாழாமல் நாடு பெரிது, தமிழ் பெரிது, தமிழ் மானம் பெரிதென்று வாழ்" எனும் வாசகமும் எழுதப்பட்டிருந்ததை காணமுடிந்தது.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத் தேசியக் கொடி, தமிழீழத் தேசிய மலர், மற்றும் தமிழீழ தேசம் என்பன பொறிக்கப்பட்ட பேரூந்து ஒன்று லண்டன் நகர வீதிகளில் நேற்று முதல் உலா வருகிறது.

ACT- FIRSTஅதற்க்கு முதற்கண் நன்றிகள் ..........

இனி கொடியை கண்டதும் சிலர் கிளம்பிவினம் கொடிக்கு எதிராக கதைக்க

Edited by தமிழ் அரசு

முயற்சிக்கு நன்றிகளும், வாழ்த்துக்களும்.

அப்போது எந்த இளைஞ்ஞனுள் உறைந்து கிடந்த உணர்வுகளின் வெளிப்பாடே இந்த பேரூந்தும், அதனூடான தமிழீழ அடையாளங்களை வேற்றினத்தவர் மத்தியில் வெளிக்கொணரும் முயற்சியும் என்பது தெரிந்தது.
இந்த இளைஞன் கூட ஒரு தமிழீழ விடுதலை [புலி] வீரனுக்குச்சமமானவன்.இவருடன் சேர்ந்து நான் உட்பட அனைத்து இளைஞர்களும் களத்தில் குதிக்கவேண்டும் என்பதே என் அவா.

இந்த உறவின் பேரூந்து பிரச்சாரத்திற்கு பாராட்டுக்களும் நன்றிகளும் :)

இப்படி ஒரு பேரூந்து எம்மண்ணில் ஓடும் காலம் வாராதா?? :(

  • கருத்துக்கள உறவுகள்

இளைஞரின் முயற்சி நன்றிக்கும் போற்றுதலுக்கும் உரியது..!

Edited by இசைக்கலைஞன்

பாராட்டுதலுக்குரிய முயற்சி.

இவரும் மற்றய பிரித்தானிய அமைப்புகளும் ஒன்றிணைந்து இதை தொடரும் வழிகளை அமைத்துக்கொள்ளவும் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் பாராட்டத்தக்க, வித்தியாசமான சிந்தனை. இது, பலரின் கவனத்தை ஈர்க்கும்.

கறுப்பு ஜூலை நிகழ்வில் இந்தப் பேரூந்து பலதடவைகள் அந்த இடத்தைச் சுற்றி வலம் வந்ததைக் காணக் கூடியதாக இருந்தது, மீண்டும் அந்த உறவுக்கு நன்றிகளும், பாராட்டுக்களும்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம்

வித்தியாசமான, சிறப்பான சிந்தனை! பாராட்டுக்கள்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.