Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழரின் தேர்தல் முடிவிற்கு அரசாங்கம் மதிப்பளிக்கவேண்டும்: சர்வதேச பார்வை

Featured Replies

அரசியல் தீர்விற்கான தேவைக்கே தமிழ் மக்கள் முன்னுரிமை கொடுத்திருக்கின்றார்கள்: சர்வதேச பார்வை

நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் ஆதரவு கட்சியான கூட்டமைப்பிற்கே தமது வாக்கினை கொடுத்துள்ளார்கள். விடுதலைப்புலிகளின் ஆதரவு கட்சியான கூட்டமைப்பு தமிழர்களுக்கான அரசியல் உரிமையினை மையமாக வைத்தே வாக்கு கேட்டுள்ளது. மாறாக அபிவிருத்திக்கு அல்ல. வடக்கு கிழக்கை சுயமாக ஆளவேண்டும் என்ற அடிப்படையில் அவர்களது தேர்தல் கொள்கை இருந்தது.

.

மாறாக போரில் வென்ற மஹிந்த இராஜபக்‌ஷ அரசாங்கமும் அதன் பங்காளிகளான இராணுவ துணைக்குழுக்களும் அபிவிருத்திக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். தாம் வென்றால் முழுமையான அபிவிருத்தி என வாக்காளர்களிடம் கூறினார்கள். அமைச்சர்கள் நாட்டின் தலைவர் மஹிந்த இராஜபக்‌ஷ எல்லோரும் வடக்கு மக்களிடம் வார காலமாக வந்து வாக்குறுதிகளை கொட்டினார்கள். ரிபன்களை வெட்டி புதிய திட்டங்களை ஆரம்பித்து வைத்தார்கள்.

.

போரினால் நலிவடைந்த மக்களுக்கு ஆசை வார்த்தைகளைக்கூறினார்கள். விதவை குடும்பங்களுக்கு பொதிகளை வழங்கினார்கள். இறுதியாக 5 தொடக்கம் 10 டொலர்களுக்கு வாக்குகளை பணம் கொடுத்து வாங்கினார்கள். இறுதியாக கொலை செய்வோம் என மிரட்டியும் பார்த்தார்கள். ஆனால் மக்கள் மெளனமாக இருந்து மஹிந்த அரசுக்கு தமது பதிலை கொடுத்திருக்கின்றார்கள். ஆம் அதுதான் தமக்கு தேவை அரசியல் தீர்வே தவிர அபிவிருத்தி என்பதே அந்த பதில்.

.

மஹிந்த அரசாங்கம் தெற்கில் வென்று உள்ளது. அவர் தெற்கைப்பொறுத்தவரை சிங்களவருக்கு போரை வென்ற ஒரு தலைவர் ஆனால் வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கோ அவர் இப்போதும் ஒரு எதிரிதான்.

.

விடுதலைப்புலிகளின் ஆதரவு கட்சியான கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேசி வருகின்றது. அதிகாரப்பகிர்விற்கு பொலிஸ் மற்றும் நில அதிகாரங்களை தமிழர்கள் கேட்கின்றார்கள். ஆனால் மஹிந்த மறுத்து வருகின்றார். உண்மையாக மஹிந்த அரசு ஜனனாயகத்திற்கு மதிப்பு கொடுக்க வேண்டுமென்றால் அவர் தேர்தல் முடிவுகளை மதித்து தமிழர்களுக்கு விரைவான அதிகார பகிர்வை மேற்கொள்ளவேண்டும்.

தழுவல்: AFP,BBC,ASIA TODAY

Eelanatham

சர்வதேச ஊடகங்களின் பார்வையில் ... தமிழர் தாயகத்தில், கூட்டமைப்பின் தேர்தல் வெற்றியின் பின்னணி!...

tna.png

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

காலகாலமாக ஏமாத்திய சிங்களவன் இப்போது மதிப்பழிப்பான் என்னும் 100 வருடங்களுக்கு காத்திருங்கள் ஏமாந்த ஏமாழித்தமிளினமே.............!

  • கருத்துக்கள உறவுகள்

<_< இந்த ஊடகங்களின் பார்வையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வெற்றி எவ்வாறு பார்க்கப்படுகிறது?? இந்த வெற்றி தீவிரவாதத்துக்கான அதரவு என்று சொல்கிறார்களா அல்லது சிங்களப் பேரினவாதப் பயங்கரவாதத்துக்கான தமிழர்களின் நிராகரிப்பு என்று சொல்கிறார்களா?? தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை அவர்கள் இன்னும் புலிகளின் நிழலாகவே பார்க்கிறார்கள் என்பது தெளிவு. அந்த வகையில் இந்த வெற்றி எமக்குச் சாதகாமனதா அல்லது பாதகமானதா.

எது எப்படியாயினும், சிங்களப் பயங்கரவாதிகளின் முகங்களில் ஓங்கி அறைந்து ஒன்றைத் தாயகத் தமிழர்கள் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள், அதாவது, "எங்களை ஆளும் தகுதியோ, உரிமையோ உனக்குக் கிடையவே கிடையாது " என்பதுதான் அது. சர்வதேசம் புரிந்துகொள்ளுமா??

முதலில் இங்க கன பேருக்கு ஓங்கி முகத்தில் மண்ணில வாழ்கிற தமிழர் அறைய வேண்டும்.

மேலே காட்டப்பட்ட பத்திரிகைகள் பெரும்பாலும் சிங்களம் சார்ந்தவை. அவை அவர்கள் சிங்களத்தின் பிரதிபலிப்பை தான் எழுதுவார்கள்.

<_< இந்த ஊடகங்களின் பார்வையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வெற்றி எவ்வாறு பார்க்கப்படுகிறது?? இந்த வெற்றி தீவிரவாதத்துக்கான அதரவு என்று சொல்கிறார்களா அல்லது சிங்களப் பேரினவாதப் பயங்கரவாதத்துக்கான தமிழர்களின் நிராகரிப்பு என்று சொல்கிறார்களா?? தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை அவர்கள் இன்னும் புலிகளின் நிழலாகவே பார்க்கிறார்கள் என்பது தெளிவு. அந்த வகையில் இந்த வெற்றி எமக்குச் சாதகாமனதா அல்லது பாதகமானதா.

??????????

எது எப்படியாயினும், சிங்களப் பயங்கரவாதிகளின் முகங்களில் ஓங்கி அறைந்து ஒன்றைத் தாயகத் தமிழர்கள் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள், அதாவது, "எங்களை ஆளும் தகுதியோ, உரிமையோ உனக்குக் கிடையவே கிடையாது " என்பதுதான் அது. சர்வதேசம் புரிந்துகொள்ளுமா??

http://www.tamilnet.com/art.html?catid=79&artid=34221

  • கருத்துக்கள உறவுகள்

:( வாருங்கள் நெல்லைய்யன், எத்தனை கேள்விக்குறிகள்?? தலையை வேறு சுவரில் அடித்துக்கொண்டு நிற்கிறீர்கள்??

நான் எழுதியது புரியவில்லையா?? நீங்கள் இணைத்த இணைப்புகளில் இருந்து நான் உணர்ந்ததைத்தான் எழுதினேன். அவர்கள் கூட்டமைப்பை புலிகளின் நிழலாகத்தான் பார்க்கிறார்களோ என்று எண்ணினேன். அப்படி அவர்கள் எண்ணுவது எமக்கு நல்லதா, கெட்டதா என்று எனக்குத் தெரியவில்லை. ஒன்றில் புலிகளைத் தமிழர்கள் இன்னும் ஏற்றுக்கொள்கிறார்கள் என்று நினைக்கிறார்களா அல்லது தீவிரவாதத்தைத் தமிழர்கள் இன்னும் கைவிடவில்லை என்று நினைக்கிறார்களா, அல்லது இது இரண்டுமில்லை, புலிகளின் பாதைதான் சரியானது என்று இவர்கள் நினைக்கிறார்களா??

Edited by ragunathan

ரகுநாதா, ... உங்களுக்கு எழுந்த அதே கேள்விகள் தான், இன்று காலை எழுந்து வழமையாக இலங்கை செய்திகளை தேடும் தளம் சென்ற போது ... ஏற்பட்டது!! ... ஏன் எல்லாமே சேர்ந்து முடிச்சுப் போடுகின்றது? .. இல்லை தமிழ் மக்கள் தமது முடிபை சர்வதேசத்து தெரியப்படுத்தியதை சொல்கின்றனவா???? ... புரியவில்லை!!!

http://www.newsnow.co.uk/h/World+News/Asia/Sri+Lanka

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பத்திரிகைகள் கபட நோக்கத்துடனேயே செய்தியை வெளிவிட்டுள்ளன.வடக்குக் கிழக்கில் தமிழர் கூட்டமைப்பு வென்றுள்ளது என்று எழுதாமல் புலிகளின் தீவிர ஆதரவாளர்கள் வென்றுள்ளார்கள் என்று எழுதுவதில் இந்த வெற்றியை சர்வதேசம் குழப்பத்துடன் உள்வாங்க வேண்டும் என்பதே அவர்களின் அவா.புலிகளை பல நாடுகள் தடைசெய்துள்ளமையால் இந்த வெற்றியை அங்கீகரிக்க அவர்கள் தயங்க வேண்டும் என்பதே இந்த செய்திகளின் நோக்கம்.தமிழர்களின் ஜனநாயக வெற்றிகளையே எமக்குப் பாதகமாக திசைதிருப்பகிறார்கள்.

Edited by புலவர்

'மயிலே மயிலே இறகு போடு' என்றால் அது போடாது. நாம் தொடர்ந்தும் உலகத்தை கீழ்வரும் விடயங்களை கேட்டு இராஜதந்திர ரீதியாக அழுத்தம் கொடுக்கவேண்டும்.

- போர் குற்றங்கள் சுயாதீனமாக விசாரிக்கப்படல் வேண்டும்

- சிங்களம் மீது சர்வதேசம் ஒரு பொருளாதார தடையை கொண்டுவரல் வேண்டும்

- ஐ.நா. ஊடாக ஒரு சுயாதீன வாக்கெடுப்பு நடாத்தப்படல் வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேசமும் புலத்து மக்களும் சோர்ந்துவிட்டபோது

தாயகம் நிமிர்ந்து சொல்லும் செய்தி கனமானது.

புரிந்து கொள்ளுமா உலகம்?

ஆகக்குறைந்தது இணைந்து கொள்ளுமா தமிழுலகம்?

Edited by விசுகு

  • தொடங்கியவர்

தமிழ் பிரதேசத்தை அடையாளப்படுத்த Rebels territory என்றும், கூட்டமைப்பினை குறிப்பிட LTTE proxy என்றும் பாவிப்பது வழக்கமாகி விட்டது. ஏனென்றால் கடந்த 30 வருடமாக உலகிற்கு அறிமுகமான சொல்லை வைத்து செய்தியாளர்கள் இப்போதும் எழுதுகின்றனர்.

ஆனால் இப்போது அனைத்துலக ஊடகங்கள் அவர்களின் tone சற்று மாறித்தான் வருகின்றது. தனித்தாயகம் கேட்டு போராடிய போராளி குழு என்றும், போராளிகள் என்றும் இப்போ பாவிக்கின்றார்கள்.

தமக்கு தேவை என்றால் நலதாகவும் எழுதுவார்கள் கெட்டதாகவும் எழுதுவார்கள். ஆனால் இப்போ புலிகளை கெட்டவர்கள் என எழுதவேண்டிய அவசியம் இல்லை. ( சிங்களத்தினை தவிர)

இன்னும் சில காலத்தின் பின்னர் விடுதலைப்போராளிகள் என எழுதுவார்கள். நிச்சயமாக அந்த காலம் வரும்.

உமையின் கருத்துக்கள் சரியானதாக படுகின்றது.

நடப்பது ஒருவகையான கயிறு இழுத்தல் போராட்டம். இதில் இப்போது எமது பக்கம் தற்போது கொஞ்சம் பலமடைந்துள்ளது. ஒற்றுமையாக உழைத்தால் மாறிவரும் உலக ஒழுங்கில் நாமும் ஒரு சுதந்திர நாடாக மலர முடியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.