Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் களமும் தாய்த் தமிழ் எழுத்துப் பிழைகளும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நெடுக்கு, நல்லதொரு முயற்ச்சி, என்னால் இயன்றவரை பிழைவிடாமல் பதிகின்றேன்

உலகில் பேசப்படும் மொழிகளில் தமிழ் மொழி 15வது இடத்தில்!

உலகில் ஆறாயிரத்து எண்ணுற்றுக்கு(6800) மேற்பட்ட மொழிகள் ஏறக்குறைய இருநூறு நாடுகளில் பேசப்படுவதாகவும், இதில் இரண்டாயிரத்து முன்னூறு (2300)மொழிகள் மட்டுமே எழுத்துருவங்களை கொண்டுள்ளதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

இதில் இரண்டாயிரத்து இருநூறு மொழிகள் ஆசியாவிலும், இருநூற்று முப்பது மொழிகள் ஐரோப்பாவிலும் பேசப்படுவதாகவும் கூறப்படுகிறது. இவ்வரிசையில், உலகில் உரையாடப்படும் மொழிகளில் தமிழ் மொழி பதினைந்தவாது இடத்தில் உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

உலகில் மொழி, இனம் ஆகிய அடிப்படையில் உருவாகியுள்ள நாடுகளை பார்க்கும் பொழுது – ஐரோப்பாவில் போலந்து, இத்தாலி, துருக்கி, கிரேக்கம் போன்று வேறு பல ஐரோப்பிய நாடுகளுடன், ஆசியாவில் இந்தோனேசியா, வியாட்நாம், கொரியா, தாய்லாந்து, மியன்மார் (பர்மா), ஈரான் போன்ற நாடுகள் தமிழிற்கு பல படிகள் பின்னனியில் நிற்பதை நாம் காணக் கூடியதாகவுள்ளது.

இதே இடத்தில் சிறீலங்காவின் சிங்கள மொழி, உலகில் 68வது இடத்தில் உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. உலகில் பல பாகங்களிலிருந்து வேற்று மொழி பேசும் புத்திஜீவிகள், கல்விமான்கள், அறிவாளிகள், ஆய்வாளர்கள் பலர் தமிழ் மொழியின் சரித்திரம், பண்புகள் போன்றவற்தை உள்ளடக்கி நுற்றுக்கணக்கான ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டுள்ளனர்.

தமிழ் சொற்கள் பல, ஆங்கில மொழியில் பாவனையில் உள்ளன என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டிய அவசியமில்லையென நம்புகிறேன். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் திருவள்ளுவரினால் எழுதப்பட்ட திருக்குறள், ஐரோப்பிய மொழிகள் உட்பட பல வேற்று மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்பது பெருமையான விடயமாகும்.

இந்த வரிசையில் கிறீஸ்தவ சமயத்தின் ‘பைபிள்’ இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மொழிகளில், எழுத்து உருவம் கொண்ட சகல மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ள அதேவேளை, இஸ்லாமியரின் ‘குறான்’ வேற்று மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்வது என்பது ஒரு சர்ச்சைக்குரிய விடயமாக இருந்து வருகிறது.

குரான் வேற்று மொழியில் மொழி பெயர்க்கப்படும் பொழுது, அராபிய மொழிச் சொற்களுக்கு சரியான சொற்பதங்கள் வேற்று மொழிகளில் தேர்ந்தெடுப்பது கடினமென்றும், அதுமட்டுமல்லாது குரான் தனது புனிதத் தன்மையை இழந்து விடும் என்ற ஐயம் சிலரிடையே நிலவுவது காரணிகளாக அமைகிறதாம்.

இருந்த பொழுதும் 114 ஆசிய ஆபிரிக்க மொழிகளில், குரானின் சில பகுதிகளும், நாற்பத்து ஏழு மொழிகளில் குரானின் முழு அளவிலான மொழி பெயர்ப்பும் தற்பொழுது கணப்படுகிறது. சமயம் சார்ந்த மொழி பெயர்ப்புகளில், இந்துக்களின் ‘பகவத் கீதை’ பைபிளுக்கும் குரானுக்கும் அடுத்த படியாக பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதாக வட இந்தியர் கூறுகின்றனர். இதேவேளை ஊடகங்களில் வேற்று மொழியென பார்க்கும் பொழுது, பிரித்தானியாவின் பி.பி.சி. வானொலி, தமிழ் உட்பட உலகின் முப்பத்திரண்டு மொழிகளில் செய்திகளை தினமும் ஓலிபரப்புகின்றது.

தமிழ் மொழியும், வரட்டுக் கௌரவமும்….

வேடிக்கை என்னவெனில், தமிழ் மொழியை பாவனையில் கொண்டுள்ள நாடுகள் பல வறுமைக் கோட்டின் கீழ் உள்ளதாலும், நீண்ட காலமாக மேற்கு நாடுகளின் உட்பிரவேசத்திற்கு இம் மொழி இடம் கொடுக்காத காரணத்தினாலும், மிக அண்மைக்காலத்தில் மேற்கு நாடுகளுக்கு புலம் பெயர்ந்த சிலரும், இலங்கை தீவில் வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் வாழும் நடுத்தர, முதலாளித்துவ வர்க்கத்தை சார்ந்த பலரும், தமக்கு தமிழ் தெரியாது என்பதையும், தாம் தமிழை விட வேறு ஒரு மேற்கு நாட்டு மொழியில் தான் தாம் பாண்டித்தியம் கொண்டதாக கூறுவதை தற்போதைய அல்லது தற்காலிக நாகரீகத்தில், ஒரு வரட்டுக் கௌரவமாக கொண்டுள்ளனர்.

இந்தியாவில் தமிழ் மக்கள் தமிழ் நாட்டை தமக்குரிய மாநிலமாக கொண்டிருந்தாலும், அங்கு தமிழ் மொழி மிக மோசமான முறையில் அழிந்து சிதைந்து போவதை நாம் அவ்விடத்து தொலைக்காட்சி, வானொலி, சஞ்சிகைகள் மூலம் காணக் கூடியதாகவுள்ளது. தமிழ் நாட்டின் விசேடம் என்ன வென்றால், ஆங்கிலச் சொற்களை, தமிழ் சொற்களாக எண்ணி, பாட்டி முதல் பாலன் வரை பாவிக்கிறார்கள்.

இவ் உண்மையை நடுத்தர, முதலாளித்துவ வார்க்கத்தினர் நன்றாக அறிந்திருத்த போதிலும், முன்பு கூறியது போல் தற்போதைய அல்லது தற்காலிக நாகரீகம் என்ற வறட்டுக் கௌரவத்தின் அடிப்படையில், அவை நாளாந்த பாவனையில் உள்ளன. ஆய்வுகளின் அடிப்படையில் வெளியான உண்மை இரண்டாகவுள்ளது. முதலாவதாக இவ்வர்க்கத்தினர், தமிழ் மொழியின் சரித்திரத்தையோ அல்லது அதன் பண்புகளை முற்றிலும் அறியாதவர்களாக உள்ளனர்.

இரண்டாவதாக, இவர்கள் தமிழ் மொழியை அலட்சியம் செய்துள்ள அதேவேளை, மேற்கு நாட்டு மொழிகளையும் அரைகுறையாகவே அறிந்தவர்களாக காணப்படுகின்றனர்.அண்மைக் காலங்களில், விசேடமாக புலம் பெயர் வாழ்வில் தமிழ் மொழிக்கு ஏற்பட்டுள்ள மிக ஆபத்து என்னவெனில், தமிழ் மொழியில் அர்த்தமற்ற புதிய சொல் உருவாக்கம்.

இவை உண்மையான தமிழ் சொற்களின் அடிப்படையில் உருவாக்கப்படாமல், தாம் வசிக்கும் மேற்கு நாட்டு மொழியை ஒழுங்காகவோ அல்லது அரைகுறையாகவோ பேச முடியாத காரணத்தினால், வெளிநாட்டில் தமிழ் மொழியை தன்னும் ஒரு வித்தியாசமான முறையில், தற்போதைய அல்லது தற்காலிக நாகரீகம் என்ற அடிப்படையில் உரையாட முனைப்படுவோரினால் உருவாக்கப்பட்டவை.

ஊதாரணமாக, “இறங்கவில்லையோ” என்பது “வெளியில் போகவில்லையோ” என்பதையும், ‘மணியாக’ இருக்கிறது, அல்லது ‘பேயாக’ இருக்கிறது என்பது ஒன்றில் ருசியாக இருக்கிறது அல்லது நன்றாக இருக்கிறது என்பதையும், ஒரு கர்ப்பிணிப் பெண்ணை குறிப்பிடும் பொழுது, ‘சுகமில்லாமல்’ உள்ளா என்றும், ‘செப்பன்’ என்ற சொற்பிரயோகம், மேற்கு நாட்டு சொற் பிரயோகத்துடன் கலந்து, தாம் வேலை செய்யும் இடத்தில் உள்ள மேற்பார்வையாளரை குறிப்பிடுவது போன்று பல சொற்கள் உருவாகிவருகின்றன.இவை உண்மையில் ஆங்கில மொழியில் பாவிக்கப்படும் ‘சிலாங் – slang’ போன்றோ, அல்லது பிரெஞ்சு மொழியில் பேசப்படும் ‘ஆர்கோ’ போன்றவை அல்ல.

தமிங்கிலிஷ்

இவை மட்டுமல்லாது, எமது புதிய தலைமுறையினரும், சில பழைய தலைமுறையினரும் தொலைபேசிகளில் செய்திகளை அனுப்பும் பொழுது, தமிழை ஆங்கிலத்தில் கலந்து எழுதும் பழக்கமும் உருவாகியுள்ளது. இதை என்ன மொழியில் எழுதுகிறீர்கள் ஒன்றும் விளங்க விலையென்று வினாவினால், இது உங்களுக்கு தெரியாதா?

இது தான் ‘தமிங்கிலிஷ்’ என்கிறார்கள். எமது தாய் மொழி இப்பொழுது உள்ள கஷ்டத்திற்குள், இதிலும் ஓரு புதிய பிரிவு ‘தமிங்கிலிஷ்’ என உருவாகினால், தமிழின் எதிர்காலம் இன்னும் விபரிதமான முடிவுகளை தான் சந்திக்க நேரிடும்.

ஐக்கிய நாடுகள் சபையின் ஆறு மொழிகள்

ஐக்கிய நாடுகள் சபை உத்தியோகபூர்வமாக 1945ம் ஆண்டு ஓக்டோபர் மாதம் 24ம் திகதி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து,

இதனுடைய பாவனை மொழிகளாக, ஆங்கிலம், சீனா, பிரெஞ்சு, அரேபியா, ஸ்பானியா, ரஷ்யா ஆகிய ஆறு மொழிகளில் ஐ.நா. பாதுகாப்பு சபை, பொதுச் சபை கூட்டங்கள், மாநாடுகள், அத்துடன் ஐ.நா. வுடன் இணைந்த மற்றைய நிறுவனங்களின் வேலைத்திட்டங்கள் போன்றவை நடைபெறுகின்றன. இவை உலகின் மொழிகளில், கூடுதலாக மக்கள் பேசும் மொழிகள் என்ற அடிப்படையிலேயே தெரிவாகியுள்ளன.

ஆனால் இம்மொழிகள், தாய் மொழியாக கொண்டவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தெரிவாகவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. உதாரணத்திற்கு, ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்டவர்கள் என்ற அடிப்படையில் கணிப்பிடும் பொழுது, உலகில் ஏறக்குறைய அறு நுற்று இருபது (620) கோடி மக்கள் மட்டுமே ஆங்கிலத்தை தமது தாய் மொழியாக கொண்டுள்ளனர்.

ஆனால் இம் மொழியை உலகில் பாவிப்பவர்கள் என்ற வரிசையில் நாம் பார்க்கும் பொழுது, ஏறக்குறைய பல கோடி மக்கள் உலகில் ஆங்கிலத்தில் உரையாடுகின்றனர். இது போன்றே மற்றைய ஐந்து மொழிகளும் தெரிவாகியுள்ளன. இதில் ஒரு முக்கிய விடயத்தை நாம் கவனிக்க வேண்டும். உலகில் கூடுதலானா மக்கள் உரையாடும் மொழியென நாம் பார்க்கும் பொழுது, ஆங்கிலம், சீன மொழிகளை அடுத்து மூன்றாவது இடத்தை இந்தியாவின் ‘இந்தி’ மொழியும், அதனுடன் கூடி பல அரேபிய சொற்கள் உட்புகுத்தப்பட்டு பாகிஸ்தானில் பேசப்படும் ‘உருது’ மொழி உலகில் மூன்றாவது இடத்தை வகிக்கிறது.

ஆனால், இம் மொழி மூன்றாவது இடத்திலிருந்த போதிலும் ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ மொழிகளில் ஒன்றாக இது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. காரணங்கள் பல, ஒன்று இம்மொழிகளுக்குள் வேறுபட்ட உரையாடல்கள் அடங்கிய பல உப மொழிப் பிரிவுகள் உள்ளதாகவும், புள்ளி விபரங்களின் அடிப்படையில் மட்டுமல்லாது, மொழியின் சரித்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக விளக்கங்கள் கூறப்படுகின்றனா.

மொழியின் முக்கியத்துவம்

ஒரு மொழியின் சரித்திரத்தையும் முக்கியத்துவத்தையும் அதற்குரிய மக்கள் அறியாதவரை, அம் மொழியினுடைய அரசியல் அந்தஸ்தையோ அல்லது அதற்குரிய புராதன நிலங்களையோ அடைவதில் பல இடையூறுகள் ஏற்படும் என்பதை, பல சர்வதேச ரீதியான அண்மைக்கால உதாரணங்கள் எமக்கு காட்டியுள்ளன. ஒரு மொழியின் முக்கியத்துவத்தை அறிவதற்கு பொது அறிவு தேவை, பொது அறிவை பெற்றுக் கொள்வதற்கு நல்ல சிந்தனை தேவை, நல்ல சிந்தனையை பெற்றுக் கொள்வதற்கு சுயநலம், போட்டி பொறாமைகள் அற்ற அர்ப்பணிப்புக்களுடனனா ஒற்றுமையான சமுதாயம் தேவை.

இவற்றை தான் அண்மைக்கால சரித்திரங்கள் எமக்கு கொடுந்துள்ளன. இதற்கு நல்ல உதாரணமாக யூதர்களின் ‘கிபுறோ’ மொழி அமைகிறது. ஆகையால் ஓர் ஆங்கில உவமானத்தில் கூறியது போன்று, தமிழ் மக்களிடையே ஒற்றுமை ‘காலம் கடந்தாலும் பரவாயில்லை, ஒருபொழுதும் கிடையாது என்று இருக்காது’, மொழி விடயத்தில் யாரும் பேரம் பேசாது, தமிழ் சீர் கெட்டு போவதற்கோ அல்லது அழிந்து போவதற்கோ துணை போகாது, தமிழ் மொழியையும் அதன் சரித்திரத்தையும் நிலை நாட்ட, எமது பாட்டன் பூட்டி கூறியது போன்று, ‘தமிழன் என்று சொல்லி, தலை நிமிர்ந்து நிற்க’ உதவ வேண்டும்.தொடர்ந்து எமது மொழியின் முக்கியத்துவத்தை நாம் நிலைநாட்ட வேண்டும்.

இலண்டன் சீட்டு இயந்திரங்களில் தமிழ்

சிறீலங்காவில் ஆட்சிக்கு வந்த அரசுகள் மாறிமாறி, தமிழ்மொழி உத்தியோக மொழியாக உள்ளது என தமது சர்வதேச பிரச்சாரத்திற்கு கூறிய பொழுதிலும், தமிழ் மக்கள் தமது தாயாக பூமியான வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய பிரதேசங்களுக்கு சென்றால் அங்கு சிங்கள மொழி தெரியாது படும் துன்பங்கள் பல. விசேடமாக அரசாங்க இலாகாக்களில் சிங்களம் தெரியாமல் தமிழர் ஒன்றும் செய்ய முடியாத பரிதாப நிலை உள்ளது.

ஆனால் பிரித்தானியாவின் தலைநகரான இலண்டனில் நிலத்திற்கு கீழ் செல்லும் சுரங்க போக்குவரத்தான ‘இலண்டன் சுரங்க புகையிரத தரிப்பு நிலையங்களிலும், போக்குவரத்துச் சீட்டு விற்கும் இயந்திரங்களில், தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதை நாம் பார்க்க கூடியதாகவுள்ளது. இச் சீட்டு இயந்திரங்களில் உள்ள பதின்மூன்று மொழிகளில், தமிழ் மொழியும் ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளது.

சுருக்கமாக கூறுவதனால் இலண்டனில் ஆங்கிலம் தெரியாத ஒரு தமிழர், தனது ‘இலண்டன் சுரங்க புகையிரத’ பிரயாணச் சீட்டை, தனது தாய் மொழியான தமிழை பாவித்து பெற்றுக்கொள்ளக் கூடிய நிலை, இன்று பிரித்தானியாவின் இலண்டனில் உள்ளது. ( http://www.tfl.gov.uk/roadusers/lez/tamil.aspx)

“வாழ்க தமிழ், வளர்க தமிழ்”

நன்றி : ச.வி கிருபாகரன் – (பிரான்ஸ்)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உடையார் உடையார் :)

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி குமாரசாமி,

அங்கன - இது மதுரை பேச்சு தமிழ்

எனக்கு 1995 ல் இருந்து அந்தரங்கமான பிரச்சனை இருக்கு. நான் 11/12 வகுப்புக்கு தூய & பிரயோக கணித வகுப்பு எடுக்கும் போது எமது ஊர் பேச்சு வழக்கப்படி அங்கமுன்ன & இங்கமுன்ன என்ற சொற்களை கொழும்பில் பாவித்துவிட்டேன், அதற்கு அவர்கள் எல்லாம் சிரித்துவிட்டு இதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டார்கள், அதற்கு பின் இந்த சொற்களை கனவிலும் பாவிப்பது இல்லை,

நீங்கள் யாரவது இந்த சொற்கள் பாவிச்சது உண்டா & பாவிக்கிறது சரியா?

  • கருத்துக்கள உறவுகள்

அங்கினை தேடிப்பாருங்கோ.....

இங்கினை தானே... இருந்தது,

என்று இப்போதும் யாழ்ப்பாணத்தில் கதைக்கிறவர்கள் .

வட்டார வழக்குகளில் தமிழ் கதைப்பது தவறு அல்ல.

பிற மொழியை, கலந்து கதைப்பது தான் தவறு உடையார்.

எங்கட ஊரில் மாத்திரம் இப்படி. வேற எங்கையும் இருக்கா ?

அவட்டை - ‍ அவன்

இவட்டை -இவன்

"அவட்டைக்குச் சரியான பயம்." :)

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் பேசப்படும் மொழிகளில் தமிழ் மொழி 15வது இடத்தில்!

thanksgiving045.gif

தமிழ் மொழியும், வரட்டுக் கௌரவமும்….

வேடிக்கை என்னவெனில், தமிழ் மொழியை பாவனையில் கொண்டுள்ள நாடுகள் பல வறுமைக் கோட்டின் கீழ் உள்ளதாலும், நீண்ட காலமாக மேற்கு நாடுகளின் உட்பிரவேசத்திற்கு இம் மொழி இடம் கொடுக்காத காரணத்தினாலும், மிக அண்மைக்காலத்தில் மேற்கு நாடுகளுக்கு புலம் பெயர்ந்த சிலரும், இலங்கை தீவில் வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் வாழும் நடுத்தர, முதலாளித்துவ வர்க்கத்தை சார்ந்த பலரும், தமக்கு தமிழ் தெரியாது என்பதையும், தாம் தமிழை விட வேறு ஒரு மேற்கு நாட்டு மொழியில் தான் தாம் பாண்டித்தியம் கொண்டதாக கூறுவதை தற்போதைய அல்லது தற்காலிக நாகரீகத்தில், ஒரு வரட்டுக் கௌரவமாக கொண்டுள்ளனர்.

இந்தியாவில் தமிழ் மக்கள் தமிழ் நாட்டை தமக்குரிய மாநிலமாக கொண்டிருந்தாலும், அங்கு தமிழ் மொழி மிக மோசமான முறையில் அழிந்து சிதைந்து போவதை நாம் அவ்விடத்து தொலைக்காட்சி, வானொலி, சஞ்சிகைகள் மூலம் காணக் கூடியதாகவுள்ளது. தமிழ் நாட்டின் விசேடம் என்ன வென்றால், ஆங்கிலச் சொற்களை, தமிழ் சொற்களாக எண்ணி, பாட்டி முதல் பாலன் வரை பாவிக்கிறார்கள்.

இவ் உண்மையை நடுத்தர, முதலாளித்துவ வார்க்கத்தினர் நன்றாக அறிந்திருத்த போதிலும், முன்பு கூறியது போல் தற்போதைய அல்லது தற்காலிக நாகரீகம் என்ற வறட்டுக் கௌரவத்தின் அடிப்படையில், அவை நாளாந்த பாவனையில் உள்ளன. ஆய்வுகளின் அடிப்படையில் வெளியான உண்மை இரண்டாகவுள்ளது. முதலாவதாக இவ்வர்க்கத்தினர், தமிழ் மொழியின் சரித்திரத்தையோ அல்லது அதன் பண்புகளை முற்றிலும் அறியாதவர்களாக உள்ளனர்.

இரண்டாவதாக, இவர்கள் தமிழ் மொழியை அலட்சியம் செய்துள்ள அதேவேளை, மேற்கு நாட்டு மொழிகளையும் அரைகுறையாகவே அறிந்தவர்களாக காணப்படுகின்றனர்.அண்மைக் காலங்களில், விசேடமாக புலம் பெயர் வாழ்வில் தமிழ் மொழிக்கு ஏற்பட்டுள்ள மிக ஆபத்து என்னவெனில், தமிழ் மொழியில் அர்த்தமற்ற புதிய சொல் உருவாக்கம்.

இவை உண்மையான தமிழ் சொற்களின் அடிப்படையில் உருவாக்கப்படாமல், தாம் வசிக்கும் மேற்கு நாட்டு மொழியை ஒழுங்காகவோ அல்லது அரைகுறையாகவோ பேச முடியாத காரணத்தினால், வெளிநாட்டில் தமிழ் மொழியை தன்னும் ஒரு வித்தியாசமான முறையில், தற்போதைய அல்லது தற்காலிக நாகரீகம் என்ற அடிப்படையில் உரையாட முனைப்படுவோரினால் உருவாக்கப்பட்டவை.

.....

மொழியின் முக்கியத்துவம்

ஒரு மொழியின் சரித்திரத்தையும் முக்கியத்துவத்தையும் அதற்குரிய மக்கள் அறியாதவரை, அம் மொழியினுடைய அரசியல் அந்தஸ்தையோ அல்லது அதற்குரிய புராதன நிலங்களையோ அடைவதில் பல இடையூறுகள் ஏற்படும் என்பதை, பல சர்வதேச ரீதியான அண்மைக்கால உதாரணங்கள் எமக்கு காட்டியுள்ளன. ஒரு மொழியின் முக்கியத்துவத்தை அறிவதற்கு பொது அறிவு தேவை, பொது அறிவை பெற்றுக் கொள்வதற்கு நல்ல சிந்தனை தேவை, நல்ல சிந்தனையை பெற்றுக் கொள்வதற்கு சுயநலம், போட்டி பொறாமைகள் அற்ற அர்ப்பணிப்புக்களுடனனா ஒற்றுமையான சமுதாயம் தேவை.

.......

“வாழ்க தமிழ், வளர்க தமிழ்”

நன்றி : ச.வி கிருபாகரன் – (பிரான்ஸ்)

பயனுள்ள கட்டுரை, பல யதார்த்தங்களை சொல்லியுள்ளது...

தமிழ்நாட்டு தமிழில் பல கலப்படங்கள் இன்றும் உள்ளன... உதாரணத்திற்கு எனது பாவனை பெயரிலேயே 'ஜ' தவறுதலாக பாவிக்கின்றேன். எங்கள் ஏட்டுக் கல்வியிலிருந்தே இவை சொல்லப்பட்டு வந்துள்ளன(வடமொழி எழுத்துக்கள் கலந்தே). இப்பொழுதுள்ள இலக்கணக் கல்விமுறை நானறியேன். ஆங்கில கலப்பும் இடைக்கிடையே சரளமாக பாவிக்கிறோம்.. நானே சில இடங்களில் சுத்தத் தமிழை பயன்படுத்தியபோது கிண்டலுக்கு ஆளாகியுள்ளேன்.

"மழை பொழிகிறது ..! மழை பொழியுது..!" என்றல்ல "மழ பேயுது..!" என்று கூறும் பாவனை தமிழே அங்கு மேலோங்கியுள்ளது..இதுபோன்றே ஆங்கில சொற்கள் கலப்பும். இங்கே சுத்தத் தமிழில் சிலருடன் பேசிப்பருங்கள்... "கீழ்ப்பாக்கத்திலிருந்து வருகிறீர்களா?" என நோக்குவர்.

அறிந்தவரையில் இவ்விடயத்தில்(தமிழ் பாவனையில்) ஈழம் உயர்ந்ததே..

யார் கண்டா..? அங்கேயும் சில நாட்களில் "றேக் இற் ஈஸி போலிஸி" இளைய சமுதாயத்தை தாக்கலாம்.

அதையும் தான் யாழில் சிலநேரம் நான் பார்க்கிறேனே! :lol:

.

Edited by ராஜவன்னியன்

  • 4 weeks later...

சொல்லுறேன் என்று கோவிக்கக் கூடாது 'ஐ' க்கும் 'ஜ' க்கும் வேறு, வேறு உச்சரிப்பு என்பது யாவரும் அறிந்திருப்பீர்கள்... தயவு செய்து எழுதும் போது அதனையும் உங்கள் மனதில் ஞாபகப் படுத்திக் கொள்ளுங்கள்.

உதாரணத்திற்கு: 'ஐயா' என்பதற்குப் பதிலாக 'ஜயா', 'ஐயோ' என்பதற்குப் பதில் 'ஜயோ' என்றும் பல பதிவுகளில் காணக் கூடியதாக இருக்கிறது, கவனத்தில் கொள்வீர்களா?

-நன்றி :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.