Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மர்ம மனிதன்

Featured Replies

வாழைச்சேனையில் அகப்பட்ட மர்ம மனிதன்

வாழைச்சேனை பிரந்துருச்சேனை கிராமத்தில் நேற்று இரவு நடமாடிய மர்ம மனிதன்என்ற சந்தேகத்தில் ஒருவரை இன்று மாலை பொதுமக்கள் வாழைச்சேனை புகையிரத நிலையத்தில் வைத்து அடையாளம் காட்டியதனை அடுத்து அங்கு பதற்றநிலை உருவாகியது.

நேற்று வெள்ளிக்கிழமை இரவு வாழைச்சேனை பிரந்துருச்சேனையில் மர்ம மனிதனின் நடமாட்டம் இருந்ததாக செய்தி பரவியதைத் தொடர்ந்து பெரும் பதற்றநிலை ஏற்பட்டது. இதன்போது அங்கு நடமாடிய மர்ம மனிதர்கள் எனக் கருதப்பட்ட இனந்தெரியாத நபர்களை பொதுமக்கள் பிடிக்க முற்பட்ட போது தப்பிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் இன்று மாலை 6.00 மணியளவில் வாழைச்சேனை புகையிரத நிலையத்தில் வைத்து நேற்று இரவு நடமாடிய மர்ம மனிதன் என பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரை பொதுமக்கள் - இராணுவத்திற்கு அடையாளம் காட்டியுள்ளனர். இராணுவத்தினர் அவரை அனுப்ப முற்பட்டபோது மக்கள் ஆத்திரமடைந்ததுடன் பெருந்திரளான மக்கள் அவ்விடத்தில் கூடி புகையிரதத்தை மறித்துள்ளனர்

நீர்கொழும்பைச் சேர்ந்தவரென தன்னை அடையாளப்படுத்திய குறித்த சந்தேகநபர் - தான் கொழும்பு செல்லவுள்ளதாக தெரிவித்தார். இருப்பினும் அவர் வெலிக்கந்தைக்குச் செல்வதற்கு பயணச் சீட்டு எடுத்ததை அடுத்து மேலும் குழப்பமடைந்த பொதுமக்கள் - சித்தாண்டி இராணுவ படை பிரிவிற்கு அறிவித்ததை அடுத்து அவர்களில் அறிவுறுத்தலுக்கு அமைய வாழைச்சேனை பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று பொதுமக்களிடமிருந்து குறித்த சந்தேகநபரை பாதுகாக்கவும் மேலதிக விசாரணை மேற்கொள்ளவென கூறி வாழைச்சேனைப் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இச்சம்பவத்தையடுத்து வாழைச்சேனை பிரதேசத்தில் சிறு பதற்றநிலை காணப்பட்டது.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-14-24/26228-2011-08-12-15-02-31.html

பொத்துவிலில் ஊரடங்கு அமுல்

பொத்துவில் பிரதேசத்தில் பொலிஸார் ஊரடங்குச் சட்டத்தை பிறப்பித்துள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை 6 மணிவரை இந்த ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொத்துவிலில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலியாகியமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-15-09/26232-2011-08-12-15-36-19.html

பொத்துவில், திருக்கோவில் பகுதிகளில் பதற்றநிலை : துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி

அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில், திருக்கோவில் பகுதிகளில் மர்ம மனிதர்கள் விவகாரம் காரணமாக பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. பொலிஸ் நிலையங்களைச் சுற்றி திரண்ட பொதுமக்களை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகத்தையும் மேற்கொண்டனர். இச்சம்பவங்களில் குறைந்தபட்சம் ஒருவர் பலியானதுடன் மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்.

விநாயகபுரத்தில் மர்மமனிதர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் இன்று பிற்பகல் இருவரை பொதுமக்கள் வளைத்துப்பிடித்தனர். இச்சந்தேக நபர்களை திருக்கோவில் பொலிஸார், திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அந்நபர்களை தம்மிடம் ஒப்படைக்கக்கோரி பொலிஸ் நிலையத்தை பொதுமக்கள் சூழ்ந்தனர்.

அம்மக்களை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டதுடன் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொண்டனர். இதனால் இருவர் காயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதேவேளை, பொத்துவில் பொலிஸ் நிலையத்தை சூழ்ந்திருந்த பொதுமக்களை கலைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலியானதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளனர்.

நேற்று இரவு மர்மநபர்கள் என்ற சந்தேகத்தில் பொதுமக்களினால் பிடிக்கப்பட்ட மூவரை பார்வையிடச் சென்ற பொதுமக்கள் நால்வரை படையினர் தாக்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொத்துவில் நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வேளையிலேயே மேற்படி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இத்துப்பாக்கிச் சூட்டின் காரணமாக அலியார் முஹம்மது மஹ்ஜுன் என்பவரே பலியானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-15-09/26219-2011-08-12-12-32-57.html

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த 25 - 30 ஆண்டுகளாக வடக்குக் கிழக்கில் இப்படியான மர்ம மனிதர்கள்.. கிறீஸ் ஆசாமிகள் உலவியதில்லை. காரணம்.. சிங்கள அரச ஏவலாளிகளாக இவர்கள் மக்கள் மத்தியில் பீதி நிலையை தோற்றுவித்து சிங்கள அரசிற்கும் அதன் அருவருடிகளுக்கும் பிழைப்பு நடத்த வழி செய்கிறார்கள்... என்ற காரணத்தால் இப்படியானவர்களின் செயற்பாடுகளை விடுதலைப்புலிகள் முற்றாக தடை செய்திருந்தனர். இப்படியான சமூக விரோத இன விரோதச் சிங்களவர்கள் தமிழர் தாயகத்துக்குள் ஊடுருவல் செய்வது தடுக்கப்பட்டிருந்தது.

இப்போது மர்ம மனிதர்களை.. கிறீஸ் மனிதர்களைக் காட்டி நாட்டை ஒரு பீதி நிலைக்குள் வைத்திருந்து மக்களின் அரசு மீதான அதிருப்தியை திசை திருப்பி அரச ஆதரவை தக்க வைக்கவும் தமது தேவைகளை நிறை வேற்றவும் சிங்கள அரசும் சிங்கள இராணுவமும் அதன் காவல்துறையும் முயன்று கொண்டிருக்கின்றன.

ஒரு பக்கம் மர்மக் கொலைகள். சமூக விரோத கருத்தரித்தல்கள். போதைப் பழக்கம்... என்று எல்லா சமூக விரோதச் செயற்பாடுகளையும் இனச் சீரழிவு நோக்கி சிங்களப் படைகளைக் கொண்டு தமிழர் தாயகம் எங்கும் கட்டவிழ்த்துவிட்டுள்ள சிங்களம்.. இப்போ மர்ம மனிதர்கள்.. கிறீஸ் மனிதர்கள் என்று பய பீதியையும் மக்கள் மத்தியில் விதைக்க முனைந்துள்ளது.

இந்த அரசு சார்ப்பு சமூக விரோதச் செயல்களை மக்களாக வீதியில் இறங்கி தட்டிக் கேட்பதன் மூலமே தடுக்க முடியும். அந்த வகையில் மட்டக்களப்பு தமிழீழ மக்களின் துணிச்சல் பாராட்டத்தக்கது. எனி மர்ம மனிதர்களை கிறீஸ் மனிதர்களை பிடித்தால்.. ரகசியமாக வைத்து காலை கையை முறித்துப் போட்டு.. சிங்களத்திடம் கையளிப்பதே சிறந்தது. அப்போதுதான் அவர்களை மீண்டும் மீண்டும் சிங்களம் எம்மை நோக்கி அனுப்புவதை நிறுத்தும்.

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

சட்டத்தை பொதுமக்கள் கையிலெடுத்தால் கடும் நடவடிக்கை: கோட்டாபய

பொதுமக்கள், சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டால், பொலிஸ் நிலையங்களைத் தாக்கினால் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று எச்சரித்துள்ளார்.

அண்மைய நாட்களில் கிறீஸ் பூதங்கள் என்று கூறப்படுபவர்கள் தொடர்பாக அப்பாவிகளும் பொலிஸாரும் பொதுமக்களால் தாக்கப்படும் சம்பங்களை நாம் கண்டுள்ளோம். இத்தகைய நடவடிக்கையை மக்கள் எதிர்காலத்தில் மேற்கொண்டால் அவர்களுக்கு எதிராக நாம்

கடும் நடவடிக்கை மேற்கொள்வோம் என பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ கூறினார்.

முதல்தொகுதி பொலிஸ் அவசர மருத்துவ தொழில்நுட்பவியலாளர் களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

பொலிஸார் செயற்படாமையின் காரணமாகவே ஹப்புத்தளையில் இரு அப்பாவிகள் கிறீஸ் பூதங்கள் என்ற சந்தேகத்தின்பேரில் ஆத்திரமடைந்த கிராமவாசிகளால் கொல்லப்பட்டனர் எனவும் அவர் கூறினார்.

பொலிஸார் யுத்தத்தின்போது பெரும் சேவையான்றினர். ஆனால் இப்போது யுத்தத்தின் பின்னரான சூழ்நிலைக்கு ஏற்பவும் மக்கள் சார்பானதாகவும் மாறவேண்டும் எனவும் பாதுகாப்புச் செயலர் மேலும் கூறினார்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/26238-2011-08-12-16-46-49.html

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள மொழி பேசும் கிறிஸ் பூதங்கள்

சனிக்கிழமை , ஆகஸ்ட் 13, 2011

Marmamanitharkal.jpgஇன்று மலையகத்தில் இரண்டு கிறிஸ் பூதங்கள் பிடிபட்டன பொதுமக்கள் அவைகளை தாக்கும் போது சிங்களத்தில் ஓலமிட்டன.சிறிலங்காவில் இப்போ சிறுபான்மை இன மக்களை கலக்கி வருவது கிறிஸ் பூதங்கள் எனும் மாயாவிகள்.ஆரம்பத்தில் மலையகத்தில் தோட்டப்பகுதிகளில் தமிழ் பெண்களை இலக்கு வைத்த கிறிஸ் பூதங்கள் இப்போ கிழக்கு மாகாணம் திருக்கோவில், பொத்துவில் போன்ற தமிழ் , முஸ்லிம் மக்களையும் இலக்கு வைக்கின்றது.

ஆனால் இந்த கிறிஸ் பூதம் தொடர்பில் பொலிசார் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. பொதுமக்கள் சில சந்தேகப்பேர்வழிகளை பிடித்துக்கொடுத்தாலும் அவர்களை இராணுவம் மற்றும் பொலிசார் விடுவித்து வருகின்றனர்.

இதனால் சிறுபான்மை மக்களுக்கு பீதியும் சந்தேகமும் ஏற்படவே தாமே கிறிஸ் பூதங்கள் மீது நடவடிக்கை எடுக்க துணிந்தனர். நடவடிக்கை ஒன்றின் போது பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்ட கிறிஸ் பூதங்கள் அடித்த அடியில் சிங்களத்தில் அழுது, கெஞ்சி மண்டாடியுள்ளது.

.

சம்பவம் பற்றி தெரியவருவதாவது;

தொட்டுலாகல தோட்டத்தில் நேற்றுக்காலை பெண்கள் தேயிலைத் தோட்டங்களில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த போது மரத்திலிருந்து இரண்டு மர்ம மனிதர்கள் பெண்களுக்கு அருகில் பாய்ந்துள்ளனர். இதனையடுத்து பெண்கள் பதறியடித்து கூக்குரல் எழுப்பியுள்ளனர். இதனால், அப்பகுதியில் ஒன்று கூடிய தோட்ட மக்கள் இருவரையும் மடக்கிப் பிடித்து நையப்புடைத்துள்ளனர். இதனால் படுகாயமடைந்த இருவரும் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர். இருந்த போதிலும் அவர்கள் இருவரும் உயிரிழந்தனர்.

மர்ம மனிதர்கள் இருவரும் தோட்டத்திற்குள் புகுந்து பெண்களை தாக்குவதற்கு முற்பட்டபோதே அவர்களைப் பிடித்து தாக்குதல் நடத்தியதாக தோட்ட மக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

தோட்டத்திற்குள் 6 மர்ம மனிதர்கள் புகுந்ததாகவும் தாக்குதலை அடுத்து ஏனையவர்கள் தப்பிச் சென்று விட்டதாகவும் தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். ஆனாலும் தேவையொன்றின் நிமித்தம் தோட்ட வழியாக சென்ற கிராமவாசிகளே தாக்குதலுக்கு இலக்காகியிருப்பதாகவும் தாக்குதல் மேற்கொண்டவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தோட்ட மக்களின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த இருவரது சடலங்களையும் வைத்தியசாலையிலிருந்து எடுத்துச் செல்ல வந்தவர்கள் மீதும் மக்கள் குழுவொன்று கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு அதிரடிப்படையினரும் பொலிஸாரும் விரைந்து வந்து நிலைமையை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.

தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் சிங்களவர்கள் என்பது தெரிய வந்தது. இதனால் அப்புத்தளைப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகின்றது. அப்புத்தளை, சேர்வூட், பிட்ரத்மலை, தம்பேத்தனை, உட்பட 10க்கும் மேற்பட்ட தோட்டங்களில் பெரும் பதற்றம் நிலவிவருவதுடன் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

அடுத்து திருக்கோவிலில்

திருக்கோவில் பகுதியில் மூன்று மர்ம மனிதர்களை பொதுமக்கள் பிடித்து பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் பொலிசார் அவர்களை விடுவித்துள்ளனர் அவர்கள்ளும் சிங்களவர்களே இதனால் அவர்களை பொலிசார் விடுவித்துள்ளனர். இதனை அடுத்து மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்லது.

பொலிஸ் நிலையங்களைச் சுற்றி திரண்ட பொதுமக்களை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகத்தையும் மேற்கொண்டதுடன் ஆகாயத்தை நோக்கி பல முறை துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன் போது தமிழ் மக்கள் காயமடைந்ததுடன் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் தகவல். தற்போது ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தபப்ட்டுள்ளது.

இவ்வாறு பொத்துவில் பகுதியில் நடந்த சம்பவம் ஒன்றில்

பொத்துவில் 06ஆம் வட்டாரம் கே.பி.எம்.வீதியை சேர்ந்த ஜூனைதீன் ஆஸிக் (22வயது) என்ற பெண்னே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் கணவர் மத்திய கிழக்கு நாடொன்றில் தொழில்செய்துவரும் நிலையில் தனது தாய் தந்தையருடன் குறித்த பெண் வாழ்ந்துவருகின்றார்.

இது தொடர்பில் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் கருத்து தெரிவிக்கையில்,

நேற்று இரவு 8.30 மணியளவில் நான் வெளியில் தண்ணீர் எடுப்பதற்காக சென்றபோது என்னை யாரோ ஒருவர் திடிரென வீட்டில் மேல் பகுதியில் இருந்து தூக்கினர்.

அங்கு பார்த்தபோது உடம்பு எல்லாம் கறுப்பு நிறத்தையுடைய ஒருவன் என்னை பிடித்திருந்தான். நான் கத்த முனைந்தபோது எனது வாய்க்குள் விரலையோட்டினான். அப்போது அந்த விரலில் ஏதோ திரவம் தடவப்பட்டதை உணர்ந்தேன்.

அப்போது அவனது கையில் கூரான ஆயுதம் இருந்தது, நான் பல தடைவ முயற்சி செய்து கத்திய போது அயலவர்கள் வரவே என்னை அவன் கீழே தள்ளிவிட்டு ஓடிவிட்டான் என தெரிவித்தார்.

மர்ம மனிதர்கள் தங்கிய இடத்தில் பொலிசாரின் சீருடைகள் தொப்பிகள்.

பொத்துவில் பாக்கியவத்தை பகுதியில் நேற்று மர்மமனிதர்களின் நடமாட்டத்தால் பொதுமக்களுக்கும் பொலிசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

பாக்கியவத்தை பகுதியில் உள்ள சில வீடுகளை நேற்று இரவு 11 மணியளவில் மர்மனிதர்கள் தட்டியுள்ளனர். இதனையடுத்து பிரதேச மக்கள் இரண்டு மர்ம மனிதர்களையும் துரத்தி சென்ற போது இடைநடுவே இருந்து மேலும் இரண்டு மர்ம மனிதர்கள் இவர்களுடன் இணைந்து ஓடியுள்ளனர்.

இதனையடுத்து நான்கு மர்ம மனிதர்களும் குறித்த பிரதேசத்தில் இருந்த பாழடைந்த வீடொன்றினுள் புகுந்துள்ளனர். எனினும் மர்ம மனிதர்கள் வசம் துப்பாக்கி காணப்பட்டதால் பிரதேச மக்கள் அவர்களை நெருங்க வில்லை. இதனையடுத்து அங்கு ஒளிந்திருந்த மர்மமனிதர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். பின்னர் குறித்த பாழடைந்த வீட்டினுள் சென்ற பிரதேசமக்கள் அங்கு பொலிஸாரின் சீருடைகள், தொப்பிகள், காலணிகள், அடையாள அட்டையின் பிரதிகள், மற்றும் பாஸ்போர்ட் பிரதிகள், ஆடைகள், தேர்தல் இடாப்பு கோப்பு, கத்தி முதலான பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.

சம்பவத்தையடுத்து அரை மணிநேரத்தின் பின் குறித்த இடத்திற்கு வந்த பொலிஸாருக்கும் பிரதேச மக்களுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டு பின் அது கைகலப்பாக மாறியுள்ளது. இதனால் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதோடு பொலிஸ் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஈழநாதம்.

http://www.eelanatham.net/story/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இதுகளை... உள்ளே... நுழைய விட்ட, ஒட்டுக் குழுக்கள் மூக்குத் தோண்டிக் கொண்டிருகுதா? :huh:

  • கருத்துக்கள உறவுகள்

இதுகளை... உள்ளே... நுழைய விட்ட, ஒட்டுக் குழுக்கள் மூக்குத் தோண்டிக் கொண்டிருகுதா? :huh:

எல்லாம் கோத்தாட செட்டப். ஒட்டுக்குழுக்களுக்கு கோத்தாவின்ர பெயரைக் கேட்டாவே மூத்தா போகும். அப்புறம்.. என்னத்த புடுங்கிறது. :lol::D

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

சட்டத்தை பொதுமக்கள் கையிலெடுத்தால் கடும் நடவடிக்கை: கோட்டாபய

பொதுமக்கள், சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டால், பொலிஸ் நிலையங்களைத் தாக்கினால் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று எச்சரித்துள்ளார்.

சம்மாந்துறை பொலிஸார் மீது பொதுமக்கள் தாக்குதல்; பொறுப்பதிகாரி உட்பட நால்வர் காயம்

சந்தேகநபர்கள் சிலரை கைதுசெய்யச் சென்ற சம்மாந்துறை பொலிஸார் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியதில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட பொலிஸார் நால்வர் காயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

இத்தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் மூவர் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்மாந்தறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தஹனக, நேற்று மாலை சிகிச்சை பெற்று திரும்பியதாக சம்மாந்துறை பொலிஸார் - தமிழ்மிரருக்கு தெரிவித்தனர்.

இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது..., சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதிய வளத்தாப்பிட்டி பிரதேசத்தில் நடமாடிய மர்ம மனிதர்கள் என சந்தேகிக்கப்படும் மூவர் மீது தாக்குதல் நடத்திய நபர்களை பொலிஸார் கைது செய்யச் சென்றபோதே அவர்கள்மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பின்னர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட விசேட அதிரடி படையினர் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பொலிஸாரையும் மர்ம மனிதர்கள் என்று கூறப்பட்ட நபர்களையும் காப்பாற்றினர்.

இத்தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

http://tamilmirror.l...2-16-34-22.html

  • கருத்துக்கள உறவுகள்

பொதுமக்கள் விழிப்பாக இருந்து இருட்டடி கொடுத்து அனுப்புவதன் மூலமே தமது பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்.பொலிசும் அரசும் சேர்ந்து மக்களை மிரட்ட முற்படும் போது மக்கள் சட்டத்தை கையில் எடுப்பதில் தவறேதும் இருப்பதாக தெரியவில்லை.

உயிரை துச்சமாக மதித்து போராடிய மலையக,பொத்துவில் மக்களுக்கு பாராட்டுக்கள்.

post-3418-0-02419000-1313206141_thumb.jp
  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவுக்கு, டாக்குத்தர் பட்டம் குடுத்த சீனா,

சோனியாவுக்கு, நேர்ஸ் பட்டம் குடுத்தா... குறைஞ்சா போயிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவுக்கு, டாக்குத்தர் பட்டம் குடுத்த சீனா,

சோனியாவுக்கு, நேர்ஸ் பட்டம் குடுத்தா... குறைஞ்சா போயிடும்.

:lol: :lol: :lol:

  • தொடங்கியவர்

கிழக்கு மாகாணத்தில் பொலிஸாரின் விடுமுறைகள் ரத்து

கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றும் பொலிஸாரின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் இன்று சனிக்கிழமை அறிவித்துள்ளது.

தற்போது கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காகவே கிழக்கு மாகாண பொலிஸாரின் விடுமுறைகள் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

குறித்த அறிவித்தல் கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் பல இடங்களில் மர்ம மனிதனின் நடமாட்டத்தினையடுத்து பதற்ற நிலை ஏற்றப்பட்டது. இதனால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களான மருதமுனை முதல் பொத்துவில் வரையான பிரதான வீதியோரங்களில் அதிகமான இராணுவத்தினர் இன்று சனிக்கிழமை கடமையில் ஈடுபட்டுள்ளமையை காணக்கூடியதாகவிருந்தது.

மர்ம மனிதன் விவகாரம் தொடர்பில் பொதுமக்களுக்கும் - பொலிஸாருக்குமிடையில் அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் கடந்த சில தினங்களில் மோதல்கள் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

http://tamilmirror.l...3-11-02-04.html

பொலிஸார் அரசியல் கருவியாக பயன்படுத்தப்படுகின்றனர் : விஜித ஹேரத்

நாட்டின் பல பகுதிகளிலும் 'கிறீஸ் பூதங்கள் தொடர்பாக நிலவுகின்ற பதற்ற நிலைக்கு பாதுகாப்பு அமைச்சுடன் அரசாங்கம் முழுமையாக பொறுப்பேற்க வேண்டும் என ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கூறினார்.

இது தொடர்பாக அவர் தமிழ் மிரரின் சகோதர ஆங்கில இணையத்தளமான டெய்லி மிரரிடம் பேசுகையில், கிறீஸ் பூதங்கள் பல இடங்களிலும் காணப்படுகின்றன. ஒரு மாதகாலமாக மஹியங்கனை, கண்டி, கந்தளாய், ஹட்டன் மற்றும் கிழக்குப் பகுதி உட்பட நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் இது தொடர்பாக செய்திகள் வந்தன. அமைதியையும் அப்பகுதிகளில் வசிக்கும் மக்களின் ஸ்திரத்தன்மையையும் நேரடியாக பாதிக்கும் இந்த தொல்லையை நிறுத்த பொலிஸாரால் இன்னும் முடியவில்லை என அவர் கூறினார்.

http://tamilmirror.l...3-09-14-14.html

Edited by akootha

  • தொடங்கியவர்

தனக்கு அபகீர்த்தி ஏற்படுத்துவதற்காகவா கிறீஸ் மனிதன் விவகாரம் என ஜனாதிபதி சந்தேகம்: அமைச்சர் ஹக்கீம்

தனக்கு அபகீர்த்தி ஏற்படுத்துவதற்காகவே இந்த கிறீஸ் மனிதன் எனும் பிரச்சினை ஏற்படுத்தப்பட்டுள்ளதோ என தனக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினாரென்று நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பொத்துவில் பிரதேசத்தில் நேற்று இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான அலியார் முகம்மது மஹ்ஜுனின் ஜனாஸா நல்லடக்கத்தில் இன்று சனிக்கிழமை கலந்து கொண்ட பின்னர், பொத்துவில் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் இடம்பெற்ற பொதுமக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் ஹக்கீம் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அமைச்சர் ஹக்கீம் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது, ஜனாதிபதி இன்று அதிகாலை தனது சீன விஜயத்தை முடித்து விட்டுத் திரும்பும் போது அவரை நான் கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்று சந்தித்து - பொத்துவில் விடயம் சம்பந்தமாகக் கதைத்தேன். அந்த வகையில் அவருடைய செய்தியையும் உங்களுக்குச் சொல்லவுள்ளேன்.

நேற்றைய சம்பவத்தின் போது துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த சகோதரர் தொடர்பில் ஜனாதிபதி ஆழ்ந்த கவலையைத் தெரிவித்தார். அதேவேளை, நடந்த சம்பவம் குறித்து ஒரு நியாயமான - நேர்மையான விசாரணையை நடத்துவதற்குத் தான் பணிப்புரை விடுப்பார் எனவும் கூறினார்.

கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளில், குறிப்பாக கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் எனும் பிரச்சினை தோன்றியுள்ளது. நேற்று ஜனாதிபதியைச் சந்தித்து விட்டு அதிகாலை 2.45 மணியளவில் கொழும்பு பஞ்சிகாவத்தை வழியாக வரும்போது, அவ்விடத்திலும் கிறீஸ் மனிதன் பிரச்சினையால் மக்கள் திரண்டிருந்தார்கள். அந்த வழியால் ஜனாதிபதி வந்திருந்தால் அதைக் கண்டிருப்பார்.

ஜனாதிபதி கூட, வேண்டுமென்றே தனக்கு அபகீர்த்தி ஏற்படுத்துவதற்காகவே இந்த கிறீஸ் மனிதன் எனும் பிரச்சினை ஏற்படுத்தப்பட்டுள்ளதோ என தனக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார்.

ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீடிப்பதற்காக - இளம் பெண்களின் மார்பிலிருந்து ரத்தம் தேவைப்படுகிறதாம், அதற்கான முயற்சிகள்தான் நடைபெறுகிறதாம் என்று இல்லாத பொல்லாத பல கட்டுக்கதைகள் உருவாக்கி விடப்பட்டுள்ளன என ஜனாதிபதியே மிகவும் கவலைப்பட்டு என்னிடம் கூறினார்.

பொத்துவில் பிரச்சினையில் இராணுவத்தை அழைத்தமைதான் பிழையான விடயம் என்று ஜனாதிபதியிடம் நான் கூறினேன். அத்தோடு, பொத்துவிலிலுள்ள இராணுவத்தை எடுத்து விட்டு, தற்போது அங்கு அதிரடிப் படையினரை பாதுகாப்புக்கு அமர்த்துவோம். அப்போது தான் மக்கள் ஆசுவாசப்படுவார்கள் என்று ஜனாதிபதியிடம் கூறியிருக்கிறேன். இது தொடர்பில் பாதுகாப்புச் செயலாளருடன் - தான் பேசுவதாக ஜனாதிபதியும் கூறியுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் பலியான மஹ்ஜுனின் மரணம் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணைகள் நடத்தப்படும் என்று அரசாங்கத்தால் உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது பொத்துவிலில் இடம்பெற்ற சகோதரர் மஹ்ஜுனின் மரணம் தொடர்பில் ஜனாதிபதி மிகவும் கவலையும் துக்கமும் அடைவதாகவும், இந்த மரணம் தொடர்பிலான இழப்புக்குரிய நஷ்ட ஈடுகள் மற்றும் உதவிகள் அனைத்தினையும் அரசாங்கம் வழங்கும் என்கிற செய்தியையும் தெரிவிக்குமாறு ஜனாதிபதி என்னிடம் கூறினார்.

இராணுவத்தினர் வீட்டுக்கு வீடு சென்று பொதுமக்களைத் தாக்கியமையினால் தான், மக்கள் ஆத்திரமடைந்து பொத்துவிலில் இராணுவத்தினரை எதிர்த்தனர் என்பதையும் நாம் ஜனாதிபதியிடம் கூறியிருக்கிறோன்.

இராணுவத்தினருக்கு கலகம் அடக்கும் விடயத்தில் அனுபவம் கிடையாது. கலகம் நடந்த ஓர் இடத்தில் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்குத்தான் இராணுவம் பொருத்தமானவர்கள். கலகம் அடக்குவதற்கு இராணுவத்தைக் கொண்டு வந்து விட்டால் - அவர்கள் காட்டு மிராண்டி மாதிரி நடந்து கொள்வார்கள். அதுதான் பொத்துவிலில் நடந்திருக்கிறது.

நேற்று பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுடனும் பொலிஸ் மா அதிபரிடமும் நான் விரிவாகப் பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபட்டேன்.அம்பாறை மாவட்டத்தில் குறிப்பாக பொத்துவில், சம்மாந்துறை மற்றும் இறக்காமம் ஆகிய மூன்று இடங்களில் சட்டமும் ஒழுங்கும் சிறிதளவு கட்டு மீறிய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

பேரினவாதம் தொடர்பில் நமக்குள்ள பயத்தினையும் கோபங்களையும் இந்த சம்பவங்களினூடாக நாம் வெளிக்காட்டுகின்றோமோ தெரியவில்லை.

பொலிஸ் மா அதிபர் நேற்றுக் கூட, என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கிறீஸ் மனிதன் என்று யாருமே இல்லை. இது வெறும் வதந்தி. தயவு செய்து இதை மக்களிடம் விளங்கப்படுத்துங்கள் என்று என்னிடம் மன்றாட்டமாகக் கேட்டுக் கொண்டார் என்றார் அமைச்சர் ரவூப் ஹக்கீம்.

http://tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-15-09/26280-2011-08-13-15-56-10.html

தனக்கு அபகீர்த்தி ஏற்படுத்துவதற்காகவா கிறீஸ் மனிதன் விவகாரம் என ஜனாதிபதி சந்தேகம்: அமைச்சர் ஹக்கீம்

ஜனாதிபதி கூட, வேண்டுமென்றே தனக்கு அபகீர்த்தி ஏற்படுத்துவதற்காகவே இந்த கிறீஸ் மனிதன் எனும் பிரச்சினை ஏற்படுத்தப்பட்டுள்ளதோ என தனக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார்.

ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீடிப்பதற்காக - இளம் பெண்களின் மார்பிலிருந்து ரத்தம் தேவைப்படுகிறதாம், அதற்கான முயற்சிகள்தான் நடைபெறுகிறதாம் என்று இல்லாத பொல்லாத பல கட்டுக்கதைகள் உருவாக்கி விடப்பட்டுள்ளன என ஜனாதிபதியே மிகவும் கவலைப்பட்டு என்னிடம் கூறினார்.

http://tamilmirror.l...3-15-56-10.html

இதை சொன்னவர் இன்னொரு முஸ்லீம் மந்திரி. எல்லோரும் கவனமாக இருக்க வேண்டும். இவங்கள் ஆட்களை தடுமாற்றி போட்டு சொன்னதை விட குருரமாகத்தான் செய்து முடிப்பவர்கள்.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

கிறீஸ் பூசிக்கொண்டு திரியும் அவசியம் இராணுவத்தினருக்கு இல்லை: மாகாண தளபதி

கிறீஸ் மனிதன் என்று யாருமே இல்லை. கிறீஸை பூசிக்கொண்டு திரிய வேண்டிய எந்த அவசியமும் இராணுவத்தினருக்கு இல்லை. இதற்கு இராணுவத்தினருக்கு நேரமும் இல்லை. இராணுவத்தினர் மீது சேறு பூச முற்பட வேண்டாம் என இராணுவத்தின் கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி பொனிபஸ் பெரேரா கூறினார்.

சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு குழப்பங்கள் விளைவிப்போருக்கு எதிராக கடும் நடவடிக்கையெடுக்கப்படும் என தெரிவித்துள்ள அவர், கிறீஸ் மனிதன் என்பதெல்லாம் வங்கிக் கொள்ளையர்களும் கொள்ளையர்களும்,மரம் கடத்துவோரும் கிளப்பிவிட்டுள்ள புரளி எனவும் தெரிவித்தார்.

கிறீஸ் மனிதன் சர்ச்சை தொடர்பாக ஆராயும் உயர் மட்ட கூட்டமொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு டேர்பா மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் உரையாற்றிய மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா,

சட்டத்தை மீறி தமிழீழ விடுதலைப் புலிகள் மின் கம்பத்தில் வைத்து மனிதர்களை கொலை செய்தது போல் நாங்கள் செய்ய முடியாது. ஒருவர் தவறு இழைத்தால் சட்டத்தின் முன் அவரை நிறுத்தி நீதி மன்றம் வழங்கும் தண்டனை ஒழுங்குமுறையை பின் பற்ற வேண்டியது அவசியமாகும்.

ஒரு மனிதனை பிடித்துக்கட்டி அவருக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் யாருக்குமில்லை. சட்டத்தை யாரும் கையிலெடுத்து வீணான குழப்பத்தை ஏற்படுத்த முனைவது ஜனநாயகத்தை மீறும் செயலாகும்.

கிறீஸ் மனிதன் எனும் விவகாரம் நுவரேலியா, ஹப்புத்தள மற்றும் கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் பேசப்படுகின்றது. இது மனோ நிலையில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கு வாழைச்சேனையில் கிறீஸ் மனிதன் எனும் பிரச்சினை ஏற்பட்டது.

மீண்டும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பிருந்த நிலையை 10 நிமிடங்களில் கொண்டு வரமுடியும். கடந்த கால நிகழ்வுகளை சற்று சிந்தனை செய்து பாருங்கள்.

முன்னர் புனானையில் இருந்து இங்கு வருவதற்கு எனக்கு இரண்டு மணித்தியாலம் எடுக்கும். ஆனால் தற்போது வெலிக்கந்தையில் இருந்து இங்கு வருவதற்கு எனக்கு 40 நிமிடமே எடுகின்றது. எனவே தற்போது உங்களுக்கு அந்த காலத்துக்கு செல்ல விருப்பமா?

இது தொடர்பில் பாதுகாப்பு செயலாளருடன் நீண்டநேரம் கலந்துரையாடியுள்ளேன்.

கிழக்கு மாகாணத்திலே ஏதாவது இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால் கிழக்கு மாகாணத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வீதித்தடைகளை ஏற்படுத்துவேன். மட்டக்களப்பில் இருந்து களுவாஞ்சிகுடிக்கு செல்வதற்கு சுமார் ஒரு மணித்தியாலத்துக்கு மேல் நேரம் எடுக்கும். உங்கள் வாழ்நாளில் அதிக காலத்தை ரோட்டில் கழிக்கவேண்டிவரும்.

சுற்றிவளைப்பு, சோதனை நடவடிக்கைகள், வீதித்தடைகள் ஏற்படுவது உங்களுக்கு விருப்பமா? வீட்டுக்குவந்து படையினர் தேடுதல்களை மேற்கொள்வது உங்களுக்கு விருப்பமா? அது விருப்பமானால் ரோட்டில் போட்டு டயர்களை எரியுங்கள் பரவாயில்லை. இவற்றுக்கெல்லாம் சரியான ஊசிமருந்து எங்களிடம் உள்ளது.

இதேவேளை இக்கூட்டத்தில் கிழக்கில் ஏற்பட்டுள்ள கிறீஸ் மனிதன் தொடர்பில் கிராமங்கள் தோறும் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமையை தணிக்க விழிப்புக்குழுக்களை அமைப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தற்போது தோன்றியுள்ள நிலைமையினை கட்டுப்படுத்த இரவுவேளைகளில் படையினரை சோதனை நடவடிக்கையில் ஈடுபடுத்துவது என்றும் அவர்களுடன் விழிப்புக்குழுக்களை சேர்ந்தவர்களையும் ஈடுபடுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

http://tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-14-24/26324-2011-08-14-16-28-46.html

  • கருத்துக்கள உறவுகள்
http://youtu.be/dMGDIFrFmp4

  • கருத்துக்கள உறவுகள்

ஜேம்ஸ்பாண்டு படத்தை விட விறுவிறுப்பா இருக்கப்பா ? மர்ம மனிதனின் மாயா ஜாலங்கள் செகண்டு பார்ட்டுக்கு ஸ்கிரிபிட் எழுதலாம் போல கிடக்கு..

  • தொடங்கியவர்

மனிதனைப்படைத்தது இறைவன். மர்ம மனிதனைப்படைத்தது மகிந்த கூட்டம்!

இலங்கையில் ஒரு ஊசியும் நகராது மகிந்தவுக்கு தெரியாமல். எனவே, ஏன் இவர்கள் இதை செய்யவேண்டும் என்ற கேள்வி

எழுகின்றது.

இதனால் மகிந்த கூட்டம் சொல்ல விரும்பும், முக்கியமாக கிழக்கு மாகாண மக்களுக்கும் சர்வதேசத்திற்கும், செய்தி என்ன?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.