Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள, ஆங்கில ஊடக ஆசிரியர்களுக்கு மகிந்த நேரடி மிரட்டல்

இலங்கையில் அடுத்து என்ன நடக்கும் 30 members have voted

  1. 1.

    • இறுதியுத்தம் தெடங்குமா
      17
    • சமதானம் மலருமா
      3
    • இரண்டும் கெட்டநிலை தெடருமா
      10

Please sign in or register to vote in this poll.

Featured Replies

சிங்கள, ஆங்கில ஊடக ஆசிரியர்களுக்கு மகிந்த நேரடி மிரட்டல்

சிங்கள, ஆங்கில ஊடகங்களில் செய்திகளை 'அடக்கிப் போடுங்கள்' என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நேரடி மிரட்டல் விடுத்துள்ளார்.

சிங்கள, ஆங்கில ஊடகங்களின் ஆசிரியர்களுடனான சந்திப்பின் போது சில ஊடக ஆசிரியர்களை வெளிப்படையாகக் குறிப்பிட்டு, "நீங்கள் எல்லாம் செய்திகளை அடக்கிப் போடுங்கள்" என்று எச்சரித்துள்ளார்.

மேலும் நோர்வேயில் தனக்கு பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் இல்லை என்றும் தாம் நோர்வேக்கு சென்று பேச்சுக்களை நடத்த வேண்டும் என்பதற்காகவே தற்போதைய தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன என்றும் இதை சிங்கள ஊடக ஆசிரியர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் மகிந்த கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளுடன் தாம் பேச்சு நடத்த முன்வருவது, சர்வதேசத்தின் அழுத்தத்தினால்தான் என்றும் இந்தக் கூட்டத்தில் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

புதினம்

  • தொடங்கியவர்

நோர்வேயில் பேச்சில்லை ஜனாதிபதி திட்டவட்டம் புலிகளின் மிரட்டலுக்கு அடிபணிந்து எதையும் செய்யவே மாட்டாராம்

விடுதலைப் புலிகளுடனான உத்தேச சமாதான பேச்சுகளின் முதலாவது சுற்றை விடுதலைப் புலிகள் கேட்டுக்கொண்டபடி நோர்வேயில் நடத்தமுடியாது. எக்காரணம் கொண்டும் ஒஸ்லோவில் பேச்சுக்களை நடத்த இணங்கமாட்டேன். அப்படி ஒஸ்லோ வில் நடத்த நாம் இணங்கினால் அது புலிகளின் தாக்குதல்களுக்கு அஞ்சி நாம் அடி பணிந்ததாகவே அமைந்துவிடும். புலிகளின் மிரட்டல்களுக்குப் பயந்து எந்த நடவடிக் கையையும் நான் எடுக்க மாட்டேன்.'' இவ்வாறு திட்டவட்டமாக உறுதியாக கூறி யிருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

ஆங்கிலஇ சிங்கள செய்திப் பத்திரிகைகளின் ஆசிரியர்களை நேற்றுக்காலை அழைத்து அவர்களுக்குக் காலைப் போசன உணவளித்து அவர்களுடன் உரையாடிய சமயமே அவர் இவ்வாறு தெரிவித்தார் என அறியவந்தது.

இந்தச் சந்திப்புக்கு கொழும்பு தமிழ்ப் பத்திரிகைகளின் ஆசிரியர்கள் அழைக்கப்பட வில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

அமைதி முயற்சிகளை முன்னெடுப்பது தொடர்பாக ஒரு முக்கியமான திருப்புமுனை யில் நாடு இருப்பதால் பொறுப்புணர்வோடு செய்திகளை வெளியிடுமாறு பத்திரிகை ஆசிரியர்களை இச்சந்திப்பில் உரிமையோடு கேட்டுக்கொண்டார் ஜனாதிபதி.

""தாக்குதல்களை நடத்திஇ அழிவுகளை ஏற்படுத்திஇ அதன் மூலம் அரசுத் தலைமையை அடிபணிய வைக்கலாம் எனப் புலிகள் எண்ணுகின்றனர். அவர்களின் அச்சுறுத்தலுக்கு எக்காரணம் கொண்டும் நாம் விட்டுக் கொடுத்துக் கீழிறங்க மாட்டோம். எனவேஇ புலிகளின் தாக்குதல் செய்திகளுக்கு அள வுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுத்து நிலைமையைக் குழப்பாதீர்கள்'' என்று இச் சந்திப்பின்போது பத்திரிகை ஆசிரியர்களை ஜனாதிபதி கோரினார் எனத் தெரியவருகிறது.

""புலிகள் அரசுப் படையினர் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்திவரும் சூழ்நிலையில்இ அவர்களின் கோரிக்கையை ஏற்று நோர்வேயில் பேசுவதற்கு இணங்கினால்இ அதுஇ புலிகளின் அச்சுறுத்தலுக்கு நாம் பயந்து அடி பணிந்ததாகிவிடும். ஆகவேஇ நாம் எக்காரணம் கொண்டும் முதல் சுற்றுப் பேச்சை நோர் வேயில் நடத்தவேண்டும் என்ற புலிகளின் கோரிக்கைக்கு இணங்கவே மாட்டோம்.''

இவ்வாறு அங்கு உறுதியாகத் தெரிவித் திருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

தமிழர் பிரதேசத்தில் படையினரால் தமிழ் மக்கள் கொடுமைப்படுத்தப்படுகின்றனர

நான் சமாதானம் மலரும் எண்டதுக்கு குத்திப்போட்டன். :roll:

Latest தமிழ் படம் தியேட்டரில் பாக்க மலிவான விலையில் சாராயம் பெற்றுக் கொள்ள மீண்டும் சமாதானம் மலரும்.

http://www.tamillinks.net/archive/2006/new..._17012006_a.htm

http://www.tamillinks.net/archive/2006/new..._20012006_a.htm

http://www.tamillinks.net/archive/2006/new..._18012006_a.htm

http://www.tamillinks.net/archive/2006/new...im_15012006.htm

இதுகனை வாசிச்சாபிறகும் கொலைவெறியிலை உப்புடி வாக்களிக்குறியளே?

தமிழ் மக்கள் எல்லோருடைய ஆசையும் ஓன்றே தமிழ் ஈழம் மலர வேண்டும் என்பதே ஆனால் அது நடப்பதும் நடக்காததும் யாருக்குத் தெரியும்? :roll: :roll: :?:

இராஜபக்சவின் தான் தோண்றித்தனமான... அரசியல் அறிவற்ற செயல்கள் அவரின் செயல்களுக்கு அவராலேயே விளக்கம் சொல்லமுடியாத நிலைக்குப் போய்க் கொண்டு இருக்கிறது நிலை.... ஒரு காலமும் நடவாதது போல் இங்கிலாந்தின் itv திருமலையில் நடந்த மாணவர் படுகொலையை செய்திகளின் நடுவில் போட்டுக்காட்டியதுடன் அதில் இறந்தமாணவன் ஒருவரின் தந்தை காட்டமாக இலங்கை அரசை சாடியதையும் இராணுவ அடாவடியச் சொன்னதையும் தணிகை செய்யாது வளங்கினார்கள்.... அதோடு பெண்புலிகள் கடற்புலிகள் பற்றிய செய்திப்படத்தையும் போடும் அளவுக்கு இண்றய அரசாங்கம் தாங்கள் யார் என்பதை சொல்கிறார்கள்...

விடயம் அப்படி இருக்க, இறுதிப் போருக்கு தமிழர் போனால் எதிர்ப்பு எங்கிருந்து வரும்.... அத்தோடு இண்றய அரச தலைவரின் புலிகளுக்கு பயம் அற்றவர்கள் நாங்கள் எண்டு பேசும் வீராப்பு நல்ல இராச தந்திரமாகுமா என்ன...??? மத்தியஸ்தத்துக்கு வருபவர்களிக்கு மனவுளைச்சலைத்தான் உண்டு பண்ணலாம்.....

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பிரிவில் கருத்துகளை வைத்தவர்களில் 63மூ இறுதிப் போர் தொடங்கும் என்று வாக்களித்துள்ளனர். அவர்கள் எதனை அடிப்படையாகக் கொண்டு வாக்களித்தார்கள்...?

நான் சமாதானம் மலரும் எண்டதுக்கு குத்திப்போட்டன். :roll:

Latest தமிழ் படம் தியேட்டரில் பாக்க மலிவான விலையில் சாராயம் பெற்றுக் கொள்ள மீண்டும் சமாதானம் மலரும்.

http://www.tamillinks.net/archive/2006/new..._17012006_a.htm

http://www.tamillinks.net/archive/2006/new..._20012006_a.htm

http://www.tamillinks.net/archive/2006/new..._18012006_a.htm

http://www.tamillinks.net/archive/2006/new...im_15012006.htm

இதுகனை வாசிச்சாபிறகும் கொலைவெறியிலை உப்புடி வாக்களிக்குறியளே?

ஓய் குறுக்கு ளொள்ளா அடியும் விளங்கேல்லை நுனியும் விளங்கேல்லை

ஏன் சொல்லும் பாப்பம் நமக்கு ஆங்கிலம் தெரியாதே

:P :P :P :P :P :P :P :P :P :P :P

ஓய் நான் குத்தினது 3 வதுக்கு ஏன் சொல்லும் பாப்பம் இங்கையே ஆளுக்கு ஒண்டு சொல்லுறீங்கள் அது தான் ஓய்

ஆளைவிடுமோய்

:evil: :evil: :roll: :roll:

வெளிநாட்டிலை இருந்த கொண்டு இப்பிடி கருத்துக்கணிப்பு நடத்திறதிலை என்ன பிரயோசனம் அட்லீஸ் போர் சூழலில் வாழ்ந்தால் தன்னும் இதைப்பற்றி கதைக்கலாம் சாதாரண பொதுமக்கள் கருத்து கணிப்புத்தான் இதுக்கு முக்கியம் அண்மையில் இரு இனமக்களும் சண்டையில்லாத ஒரு தீர்வைத்தான் விரும்புவதாக ஒரு பத்திரிகை போட்டிருந்தது ஆனபடியாலை இதைப்பற்றி வெளிநாட்டில் குடும்பமாக இருப்பவர்கள் முதலாவதுக்குத்தான் குத்திப்போட்டு கம் எண்டு இருப்பார்கள் அதில் நானும் ஒருவன்...........

சின்னப்பு என்ன நீங்கள் இப்படி வேஜார் பண்றியள்.

சரி பாலகுமார் அண்ணா தமிழிலை சொல்லி இருக்குறார் அவை ஆங்கிலத்திலை அவிச்ச சுத்துமாத்தை எல்லாம் எப்படி எதிர்கொள்ளப் போறம் எண்டு.

தற்காலிகமாக மாத்திக் குத்தத்தான் வேணும் :mrgreen:

http://www.yarl.com/eelam/article_1068.shtml

  • தொடங்கியவர்

வெளிநாட்டிலை இருந்த கொண்டு இப்பிடி கருத்துக்கணிப்பு நடத்திறதிலை என்ன பிரயோசனம் ...........

வடக்குக் கிழக்கு மாகாணங்களில் உள்ளோர் பேரை ஆரம்பிக்கும் படி தலைவரிடம் வேண்டிக் கெள்கிறார்கள் அதோ போல் புலத்தில் வாழம் தமிழர்களின் மனத்தில் என்ன இருக்கின்றது என்று அறியத்தான் இதை இணைத்தேன்

முகத்தார் எழுதியது:

வெளிநாட்டிலை இருந்த கொண்டு இப்பிடி கருத்துக்கணிப்பு நடத்திறதிலை என்ன பிரயோசனம் அட்லீஸ் போர் சூழலில் வாழ்ந்தால் தன்னும் இதைப்பற்றி கதைக்கலாம் சாதாரண பொதுமக்கள் கருத்து கணிப்புத்தான் இதுக்கு முக்கியம் அண்மையில் இரு இனமக்களும் சண்டையில்லாத ஒரு தீர்வைத்தான் விரும்புவதாக ஒரு பத்திரிகை போட்டிருந்தது ஆனபடியாலை இதைப்பற்றி வெளிநாட்டில் குடும்பமாக இருப்பவர்கள் முதலாவதுக்குத்தான் குத்திப்போட்டு கம் எண்டு இருப்பார்கள் அதில் நானும் ஒருவன்...........

முகத்தார் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. தாயகத்திலிருக்கும் சாதாரண தமிழ் மக்களோ அல்லது சாதாரண சிங்கள மக்களோ போரை விரும்பவில்லை. சமாதானமும் நியாயமான தீர்வும் ஏற்படுவதையே விரும்புகின்றார்கள். இதையே யாழ் ஆயரும் பலமுறை வலியுறுத்திக் கூறியுள்ளார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கள, ஆங்கில ஊடக ஆசிரியர்களுக்கு மகிந்த நேரடி மிரட்டல்

இதுக்கு பதில் இன்று மீண்டும் கிடைத்துவிட்டது :cry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு நடைபெற்ற கருத்துக்கணிப்பின் பெறுபேறு இன்றைய சூழ்நிலையில் எதனை சுட்டிக் காட்டுகிறது?

விடுதலைப்புலிகள் தொடர்பாக பொய்ச்செய்தி வெளியிட்டமையினால் 'தினமின" ஆசிரியரின் பதவி பறிப்பு

றுசவைவநn டில நுடடயடயn வுhரசளனயலஇ 26 துயரெயசல 2006

மன்னாரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசத்தினுள் கிளைமோர் தாக்குதல் நடைபெற்றதாக பொய்யான செய்தியை வெளியிட்டமையினால் 'தினமின" என்ற பிரபல சிங்கள நாளேட்டின் ஆசிரியரின் பதவி பறிபோயுள்ளது.

மன்னாரில் விடுதலைப்புலிகளின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசத்தில் நடைபெற்ற கிளைமோர் தாக்குதலில் அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு. சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் கொல்லப்பட்டார் என்று முதற்பக்கத்தில் லேக்கவுஸின் சிங்களப்பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

உண்மைக்குப் புறம்பான செய்தியை வெளியிட்டமைக்காக 'லேக்கவுஸ்" தலைவர், ஆசிரியர் குழு மற்றும் இயக்குனரையும், சிறீலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஸன யாப்பா, அழைத்து கடுமையாக கண்டித்துள்ளதுடன், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

ஏனெனின் இவ்வாறு பொய்ச் செய்திகளைப்போட்டு சந்தோசப்பட்டுக் கொண்டால் ஏற்கனவே பொய்ச் செய்திகளால் நிறைந்து போயுள்ள சிங்கள ஊடகச்செய்திகள் மீது வருங்ககாலங்களில் துளியளவு கூட நம்பிக்கை எவருக்கும் வராது என்பதனால் இதையடுத்து தினமின ஆசிரியரை லேக்கவுஸ் நிர்வாகம் விளக்கம் கேட்டதினையடுத்து அப்பத்திரிகையின் ஆசிரியர் ரஞ்சன் அமரரட்ண தமது பதவியிலிருந்து விலகியுள்ளார்.

இவர் தனது பதவி விலகல் கடிதத்தினை ஆசியரியர் குழு இயக்குனரிற்கு அனுப்பிவைத்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் அனுஸா பெல்பற்றிடம் இது குறித்த ஆலோசித்த பின்னரே அவர் இந்த பதவி விலகல் கடிதத்தினைச் அனுப்பியுள்ளார்.

தகவல்: சங்கதி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.