Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதாவுடன் கை கோர்க்கும் வைகோ: இலங்கை பிரச்சனையில் இந்திய

Featured Replies

வர்ணன்.

நான் நினைக்கின்றேன். சுத்துமாத்துதனத்தையும், தமிழருக்கு இவ்வளவு ஏமாற்றத்தையும் கொடுத்த இலங்கை அரசியல்வாதிகளைக் கருத்தில் கொண்டு தான் மீரா அப்படிச் சொல்லியிருக்ககூடும்.

எதுக்கும் அவரே தெளிவுபடுத்தட்டும்

தூயவன் -

அவர் எதையும் வந்து தெளிவு படுத்திட்டு போகட்டும்-

ஆனால் அவர் வார்த்தைகளுக்கு முழு அர்த்தம்

"நன்றி கெட்ட தனம்"!! 8)

  • Replies 98
  • Views 18.2k
  • Created
  • Last Reply

தாய் தமிழன் எப்படியாவது அராஜக ஆட்சியில் சிக்கித் தவிக்கட்டும், அதற்கு வைகோவும் துணை போகட்டும், அவர் ஈழத்தமிழருக்கு ஆதரவு தந்தால் போதும் என்ற உங்களின் எண்ண ஓட்டம்.... அடடா.... என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.....

அதரவு-தந்தால் போதும் என்றல்ல.....

அதரவு- தந்ததை மட்டும் நன்றியோடு நினைக்கிறோம்! 8)

அது நிற்க- "செல்லாகாசு" என்று நீங்க நினைக்கும் வை.கோ-

எப்பிடி ஒரு அராஜக ஆட்சியை எதிர்க்கும் திறன் கொள்வார்?

அடடடா... உங்க எண்ண ஓட்டம்...

எங்களூக்கும் மெய்சிலிர்க்க வைக்கிறதுதான்!

வாய்க்கு வந்த படியெல்லாம் ஓடுகிறதே!

செல்லாகாசு ஆன அவரை பற்றி உங்களூக்கு என்ன அக்கறை?

அவரை விட்டு விடுங்கள்! 8)

அடடா.... என்ன ஒரு அக்கறை உமக்கு....

உமக்கு ஆதரவு தந்தால் சந்தன கடத்தல் காரனை கூட காந்தி என்பீர் போல் இருக்கிறதே?

நல்லா இருக்கு நீங்கள் ஆதரவு பெறும் முறை.....

ஈழத் தமிழ்மக்களுக்கு ஆதரவு தரும் வை.கோ , இராமதாஸ் போன்றவர்களுக்கு அவர்களின் கட்சி ரீதியாக தனிப்பட்ட செல்வாக்கு என்பது கிடையாது. அவர்களால் தி.மு.க அல்லது அ.தி.மு.க போன்ற செல்வாக்கான கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடும் போது மட்டுமே சில ஆசனங்களை கைப்பற்ற முடிந்திருக்கின்றது. ஆனால் தனித்துப் போட்டியிட்ட போது டெபாசிட்டை கூட மீட்க முடியாத நிலையே இன்றும் தொடர்கின்றது. வை.கோ தி.மு.க கூட்டணியிலிருப்பதால் தான் இவ்வளவு சுதந்திரமாக அவரால் செயற் பட முடிகின்றது. ஆனால் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்தால் வாய்மூடி மௌனியாகவே இருக்க வேண்டும். மீறினால் கஞ்சா வழக்குகள் போட்டாவது ஜெயலலிதா உள்ளே தள்ளிவிடுவார்.

ஜெயலலிதா உங்களுக்கு ஆதரவளித்தால் கூட, அவரது பின்னணி என்ன என்று தெரியாமால் எல்லோரும் இங்கே மகிழ்ச்சி அடைவார்கள் போல் தெரிகிறது... ஏற்கனவே சிலர் இப்போதே ஜெ. மீது மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறார்கள்.... என்ன கொடுமையப்பா இது?

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா உங்களுக்கு ஆதரவளித்தால் கூட, அவரது பின்னணி என்ன என்று தெரியாமால் எல்லோரும் இங்கே மகிழ்ச்சி அடைவார்கள் போல் தெரிகிறது... ஏற்கனவே சிலர் இப்போதே ஜெ. மீது மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறார்கள்.... என்ன கொடுமையப்பா இது?

ஆமா ஆமா நீர் உளறுவது சா சொல்வது அத்தனையும் உண்மை,, ஜெயாக்காமீது சிலர் அல்ல தமிழ் மக்கள் அனைவரும் 100%அன்பு வைத்திருக்கிறார்கள், அதனால்த்தான் இன்று ஈழத்திலே மகிழ்ச்சியான வாழ்க்கை நடத்துகின்றார்கள்.. :idea:

  • கருத்துக்கள உறவுகள்

இது நன்றி கெட்டத்தனமில்லை உண்மை... நீங்கள் எப்படி எடுத்துக் கொண்டாலும் எனது கருத்து.......

வைகோ ஈழத்தழிழர்களுக்கு ஆதராவாகக் செயற்பட்டாலும் அவர் இந்திய அரசியலுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அவர் அங்கு ஒரு பலமான நிலையிலிருந்தாலே அவர் எங்களுக்காக குரல் கொடுக்க முடியும்.

அவர் முதற் கண் ஒரு தமிழ்நாட்டு அரசியல்வாதி. அது மாத்திரமல்ல அவர் ஒரு இந்திய அரசியல்வாதியும் தான்.

அவர் தமிழ்நாட்டை தளமாக கொண்டு இயங்குபவர் என்றரீதியில் அந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்துபவர

வைகோ மட்டும் அல்ல முதல்வர் ஜெயலலிதா ஈழத்தமிழருக்கு ஆதரவு அளிக்க முன்வந்தாலும் வேண்டாம் எண்று சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது. ஒரு கட்சி சார்பாக இந்த இனப்பிரச்சினையை அணுகி சுயலாபம் காணுபவர்களிற்க்கு மகிழ்ச்சியாக இருகாதவிடயம் இது. வைகோ தன் கட்சிக்காகவும் தமிழக மக்களுக்காக எண்று எதுவாக காரணம் காட்டினாலும் பறவாய் இல்லை அவர் விரும்பியதை செய்யும் உரிமை அவருக்கு இருக்கிறது. அவரைச் சார்ந்தவர்களின் நலனில் அக்கறை எடுக்க வேண்டியது அக்கட்சியின் தலைவரின் கடமை. அவர் செய்வது ஜனனாயகமும் கூட. ஜெயலலிதாவின் கூட்டணியில் வைகோ முன்னர் இருந்தவரும் கூட. ஆதலால் எது சரியானது எண்று அவருக்கு நன்குதெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழ்மக்களுக்கு ஆதரவு தரும் வை.கோ , இராமதாஸ் போன்றவர்களுக்கு அவர்களின் கட்சி ரீதியாக தனிப்பட்ட செல்வாக்கு என்பது கிடையாது. அவர்களால் தி.மு.க அல்லது அ.தி.மு.க போன்ற செல்வாக்கான கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடும் போது மட்டுமே சில ஆசனங்களை கைப்பற்ற முடிந்திருக்கின்றது. ஆனால் தனித்துப் போட்டியிட்ட போது டெபாசிட்டை கூட மீட்க முடியாத நிலையே இன்றும் தொடர்கின்றது. வை.கோ தி.மு.க கூட்டணியிலிருப்பதால் தான் இவ்வளவு சுதந்திரமாக அவரால் செயற் பட முடிகின்றது. ஆனால் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்தால் வாய்மூடி மௌனியாகவே இருக்க வேண்டும். மீறினால் கஞ்சா வழக்குகள் போட்டாவது ஜெயலலிதா உள்ளே தள்ளிவிடுவார்.

ஜரோப்பாவில் இருந்து அறிக்கை விடும் உமக்கே உப்படித் தெரிக்கின்றது என்றால் இவ்வளவு காலமும் துரோகத்தன அரசியலைக் கண்ட வைகோவிற்கு தெரியாமலா போய் விடும் என்று நினைக்கின்றீர்கள்? ஆகவே அவருக்கு என்ன முடிவு எடுக்கவேண்டும் என்று அவருக்குத் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

தாய் தமிழன் எப்படியாவது அராஜக ஆட்சியில் சிக்கித் தவிக்கட்டும், அதற்கு வைகோவும் துணை போகட்டும், அவர் ஈழத்தமிழருக்கு ஆதரவு தந்தால் போதும் என்ற உங்களின் எண்ண ஓட்டம்.... அடடா.... என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.....

இங்கே பாருங்கள். வைகோ செல்லாக்காசு என்று சொன்னவரே நீர் தான். பிறகு அவர் எங்கு போனால் தான் என்ன? நீர் ஏன் வருத்தப்படுகின்றீர்.

மேலும் நாங்கள் ஒன்றும் சுயநலமாக யோசிக்கவில்லை. நாம் சொல்வது என்னவென்றால், வைகோ மற்றவர்களைப் போல ஈழத்தமிழர் பிரச்சனையை தேவைக்காக பாவி;க்;காத சிறந்த தலைவர் என்பதையே!!

இங்கே பாருங்கள். வைகோ செல்லாக்காசு என்று சொன்னவரே நீர் தான். பிறகு அவர் எங்கு போனால் தான் என்ன? நீர் ஏன் வருத்தப்படுகின்றீர்.

மேலும் நாங்கள் ஒன்றும் சுயநலமாக யோசிக்கவில்லை. நாம் சொல்வது என்னவென்றால், வைகோ மற்றவர்களைப் போல ஈழத்தமிழர் பிரச்சனையை தேவைக்காக பாவி;க்;காத சிறந்த தலைவர் என்பதையே!!

விடுங்க தூயவன் - இதுகளுக்கு எல்லாம் ..மன்னிக்கவும்- இவர்களுக்கு எல்லாம் நாங்க பதில் சொல்ல போய் ... என்ன ஆகபோகுது?

தூங்கிறவனை எழுப்பலாம்.. தூங்கிறமாதிரி....???????

8)

  • கருத்துக்கள உறவுகள்

கும்பலோடு கோவிந்தா போடுவதை விட்டு, முதலில் என்ன எழுதியிருக்கின்றோம் என்ற படித்ததுப் பார்த்து எழுதினால் நாம் ஏன் பதில் போடப் போகின்றோம்?

கருத்து சுதந்திரம் யாழ்ல இருக்கு...

அதுக்காக எது வேணும் எண்டாலும் பேசலாம் எண்டு நினைக்காதீங்க.

எங்களுக்கும் உணர்வுகள் இருக்கு- அதை உங்க பொழுது போக்கிற்காக பாவிக்காதீங்க.

உங்களுக்கு ஏதும் எழுதினால் போதும் எண்டு ஒரு ஆர்வம் இருக்கலாம்.

எங்கட நோக்கம் அது அல்ல.

மாவீரர் குடும்பத்தில இருந்து- கண்ணில கண்ட தமிழன் எல்லாரயும் கொன்றுபோட்டு போற சிங்களவனில உள்ள கோவம்!

உதவி ஒண்ணும் உங்களிட்ட இருந்து வேணாம்- உபத்திரவம் செய்யாமல் இருங்க! 8)

இங்கு சிலர் பலரை தாங்கு தாங்கு என்று தாங்குவதை பார்க்கும்போது சிரிப்பு தான் வருகிறது....

கும்பலோடு கோவிந்தா போடும் பழக்கம் எனக்கில்லை.... அதை சொன்னவர் தன் தகுதி என்ன என்று முதலில் சிந்திக்கட்டும்...

  • கருத்துக்கள உறவுகள்

நீர் மட்டும் என்னவாம்? யாழ்களத்தில் வந்த அன்றே வாழ்த்து எல்லாம் அறிந்தவர் போல வாழ்த்துச் சொன்னவர் தானே. :wink:

திமுக கூட்டணியில் தான் நீடிக்கிறோம்: வைகோ

ஜனவரி 25, 2006

மதுரை:

திமுக கூட்டணியில் தான் இந்த நிமிடம் வரை நீடிக்கிறோம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தினசரி செய்திகள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக பாமக மற்றும் மதிமுகவினால் திமுகவுக்கு நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மதிமுகவுக்கு 50 இடங்களுக்குக் குறையாமல் ஒதுக்க வேண்டும், இல்லாவிட்டால் வேறு அணிக்கு மாறத் தயங்க மாட்டோம் என்று அந்தக் கட்சியின் ¬முக்கியப் பிரமுகர்கள் பகிரங்கமாக பேசத் தொடங்கியுள்ளனர். இதனால் மதிமுக அணி மாறுமோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து சமீபத்தில் திமுக தலைவர் கருணாநிதி பேசுகையில், வைகோ கூட்டணியை விட்டுப் போக மாட்டார் என்று நம்புகிறேன். இப்போது வரை திமு¬க கூட்டணியில் தான் மதிமுக நீடிக்கிறது என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் மதுரை அருகே திருமங்கலத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட வைகோ, செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக கூட்டணியில் தான் மதிமுக இந்த நிமிடம் வரை நீடிக்கிறது.

அணியிலிருந்து விலக மாட்டோம். கூட்டணி நீடிக்கும். திருமங்கலம் எனக்கு மறக்க ¬முடியாத ஊர். பொடா சட்டத்தில் களம் காண காரணமாக அமைந்த பொதுக்கூட்ட மேடை இந்த ஊரில் தான் போடப்பட்டது. அதனால் திருமங்கலத்தை நான் மறக்க மாட்டேன்.

இந்த நிகழ்ச்சியில் பொடா சட்டத்தில் களம் கண்டவர்கள், வென்றவர்கள் வந்துள்ளனர், சந்தோஷமாக இருக்கிறது. இலங்கையில், தமிழ்ப் பெண்களின் கற்பை சூறையாடி வருகிறது சிங்கள ராணுவம்.

அங்கு தமிழர்களுக்குப் பாதுகாப்பு இல்லை, அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. இதைத் தடுத்து நிறுத்த இந்திய அரசு ¬முயல வேண்டும் என்றார் வைகோ.

இன்று மாலை சென்னையில் மதிமுக பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் வைகோவின் பேச்சு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணி குறித்து அவர் விலாவாரியாக பேசுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில் திருமங்கலத்தில் நடந்த நிகழ்ச்சியில், திமுக கூட்டணியில் நீடிப்போம் என்று வைகோ கூறியுள்ளது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது

நன்றி:தட்ஸ்தமிழ்

  • தொடங்கியவர்

ykj.gif

மகனை முதல்வராக்க மீண்டும் வைகோவை பலிகடாவாக்குகிறார் கருணாநிதி!

தமிழக அரசியல் மாற்றங்கள் தொடர்பாக யாழ். இணையதளம் செய்திகளை வெளியிட்டு வருகிறது.

வைகோவின் அணி மாற்றம் குறித்த செய்தியும் அதனது எதிர்வினைகளும் அறிந்தோம்.

உண்மையில் தமிழக அரசியலில் நடப்பது என்ன? கருணாநிதியிடமிருந்து வைகோ விலகுகிறாரா? வைகோவை கருணாநிதி விலக்குகிறாரா?

எனில்

வைகோவை கருணாநிதி அரவணைத்து அழிக்கிறார் என்பதுதான் உண்மை. இது யூகம் அல்ல. வைகோ கட்சி தொடங்கிய 12 ஆண்டுகாலத்தில் அவர் சந்தித்த தேர்தல்களின் வரலாறு.

சரி கடந்த காலங்களை விடுவோம்.

இப்போது..

முன் எப்போதையும் விட தி.மு.க. அணியில் பல கட்சிகள் இருப்பதால் தி.மு.க. இந்த முறை குறைந்தது 130 தொகுதிகளில்தான் போட்டியிட முடியும். 130 தொகுதிகளில் போட்டியிட்டு அந்தக் கட்சி வென்றால் முழுப் பெரும்பான்மை உள்ள கட்சியாக ஆட்சி அமைக்க முடியாது.

மாறாக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை நம்பித்தான் நிற்க வேண்டும்.

தன் மகன் ஸ்டாலினை முதல்வராக்கிப் பார்க்க விரும்புகிற கருணாநிதி, அந்த முதல்வர் நாற்காலி எந்தக் கூட்டணிக் கட்சியாலும் பிடுங்கிக் கொள்ளப்பட முடியாததாக இருக்க வேண்டும் என்று கருதுகிறார்.

அதனால் ஆகக் குறைந்தது 150-160 தொகுதிகளில் போட்டியிட்டு 130-140 தொகுதிகளில் வெல்வதன் மூலமே சாத்தியம் என்கிறது கருணாநிதியின் மூளை.

அப்படியால் இந்த 16 அல்லது 20 இடங்களை யாரை அகற்றி தாமே போட்டியிட முடியும்?

இந்திய அரசாங்கத்தில் உள்ளதால் காங்கிரசை அகற்றிவிட முடியாது.

வடமாவட்ட வாக்கு வங்கிக்காக பாட்டாளி மக்கள் கட்சியை காலி செய்து விட முடியாது.

ஆதலால்

ஆம்

நீங்கள் எண்ணுவது சரிதான்.

வழக்கம் போல் வைகோவை பலிகடாவாக்கிவிடலாம்.

வைகோ போனால் 10 தொகுதிகள்தானே நமக்கு தோல்வி கிடைக்கும். பிரச்சனை இல்லை என்பதாலேயே கடைசி நிமிடம் வரை அரவணைத்து காலி செய்துவிடுவது என்பதுதான் கருணாநிதியின் கணக்காக இருக்க முடியும். இருக்கிறது.

இதை உணர்ந்து கொண்டமையால்தான் என்னவோ இந்த முறை வைகோவின் கட்சியினரே "மீண்டும் பலிகடாவாகிவிடக் கூடாது" என்று தோள்தட்டி தொடைதட்டி கிளம்பிவிட்டனர்.

இன்று தமிழகத்தின் எதிர்கால அரசியல் பார்வை முழுவதும் வைகோ மீதுதான்.

வைகோ வாயைத் திறக்கப் போகிறார் என்றால் ஊடகத்தாரின் காதுகள் திறந்து கொண்டிருக்கின்றன. கருணாநிதியின் கண்கள் கூர்மைப் பார்வை பார்க்கின்றன. அண்ணா தி.மு.க.வும் இதர கட்சிகளும் என்ன சொல்லப் போகிறார் வைகோ என்பதில் அவதானமாகப் பார்க்கின்றன.

தமிழகத்திலிருந்து கிடைத்துள்ள தகவல்கள்களின் படி

வைகோவை ஆதரிக்க ஜெயலலிதா தயாராகிவிட்டதாகவும் வைகோவுக்கு விடுத்த சமிக்ஞைகளில் ஒன்றாகவே மகிந்த ராஜபக்சவையும் சந்திக்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

வைகோ வெறும் 16 தொகுதிக்குத்தான் இலாயக்கானவர் என்று கருணாநிதி முத்திரை குத்தி மூலையில் வைக்கும் அதே நேரத்தில் நான் 50 அல்லது 60 தொகுதிகள் தருகிறேன் என்று நேசக்கரம் நீட்ட ஜெயலலிதாவும் தயாராகிவிட்டார்.

ஜெயலலிதாவின் இந்த நேசக்கரத்தை வைகோவால் நம்ப முடியாமல் இருக்கிறார் என்பதே உண்மை.

ஆனால் தங்களது தலைவரை சிறையிலடைத்தது ஜெயலலிதாவாகவே இருந்தாலும் கருணாநிதியிடம் சிக்கி கரைந்து கசங்கிப் போவதைக் காட்டிலும் நேர்மையான எதிரியாக இருந்த ஜெயலலிதாவோடு திறந்த மனதோடு கை குலுக்குவதை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தினர் ஏதோ "விடுதலை" பெற்ற உணர்ச்சியாக உள்ளனர் என்பதே தமிழக நிதர்சனம் என்கிறது தகவல்கள்.

தமிழக அரசியலில் வைகோ 60 தொகுதிகளிலோ 50 தொகுதிகளிலோ போட்டியிடுவது என்பது ஈழத் தமிழர்களின் 60 பிரதிநிதிகள் போட்டியிடுகிறார்கள் என்பதாகவே அர்த்தம்.

தி.மு.கவைப் போல் கட்சித் தலைவர் சொல்லுகிற கருத்தைக் கூட எப்போதாவதுதான் கட்சிப் பிரதிநிதிகள் சொல்லுவார்கள்.

ஆனால் வைகோ தொண்டனுக்கும் தொண்டன். வைகோவின் ஒவ்வொரு தொண்டனும் வைகோதான். ம.தி.மு.க.வின் ஒருக்கிற ஒவ்வொரு தொண்டனும் ஈழத் தமிழர்களுக்காய் சர்வபரி தியாகத்துக்கும் தயாராக உள்ளவர்கள்.

நமக்காய் சிறையேகிய வைகோவுக்காக ஊர் முழுக்கப் போய் அதை நியாயப்படுத்திப் பேசியவர் அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத். வீதி வீதியாக எங்கள் ஈழத் தமிழர்களுக்காக நாங்கள் குரல் கொடுக்காமல் யார் கொடுப்பார்கள் என்று வைகோவின் குரலாய் வலம் வந்தவர்கள் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்.

ஆகவே தமிழகத்தின் அரசியலில் வைகோ வளர வேண்டும். அது தமிழினத்தின் நன்மைக்கானது என்பதை யாழ். தளத்திலே விவாதிப்போர் உணர வேண்டும்.

தமிழர் நலம் கருதாதோர் விமர்சிக்கட்டும். அவர்களுக்கு நேற்றைய வரலாறும் தெரியாது. இன்றைய நிகழ்வுகளும் தெரியாது. நாளைய வரலாற்றுச் சூழலும் தெரியாது.

சங்கர்

நண்றிகள் மோகன் அண்ணா..!

வைகோ எங்களின் உள்ளத்தில் உயர்ந்து நிற்கும் மனிதர் ஈழத்தவருக்காக எண்று சொல்வதைவிட ஈழத்தவரை ஆதரித்ததால் தன் உயர்ச்சியை எதிர்காலத்தை இளந்த ஒரு தலைவர். படித்த ஒரு ஜதார்த்தவாதி...... ஈழத்தவர் கஸ்ரங்களை அமரர் MGR ருக்கு அடுத்ததாக புரிந்து வைத்திருக்கும் தலைவர்களில் ஒருவர்.... அவரை ஆதரிக்கவேண்டியது ஈழத்தவர் தார்மீகக்கடமை.

வெறும் வாய்ப்பேச்சு மட்டும் இண்றி செயல்வீரமும் கொண்டவர் என்பதை தனது நடைப்பயணதின் மூலம் உணர்த்தியவர். அவரின் வெற்றி அல்லது அவரின் கூட்டணியின் வெற்றியானது, இந்திய அரசியலால்... கொலைகாற இலங்கை அரசுக்கு இந்திய ஆதரவைத் தடுத்து நிறுத்தும் என்பது மட்டும் திண்ணம்...!

வைக்கோ தன் கொள்கைக்காக தன் சுகங்களை உதறிய தலைவன். ஈழத்தமிழரின் போராட்டம் தெளிவான அறிவுள்ளவர். தான் வரிந்த கொள்கைக்காக அன்றும் இன்றும் போராடும் தலைவன். எந்த இடத்தில் கூட்டுச்சேர்ந்தாலும் தன் கொள்கையை கைவிடமாட்டார் என திடமாக நம்புகிறோம். அப்படி கைவிடக்கூடியவர் என்றால் பல சந்தர்ப்பங்கள் ஏற்கனவே வந்து போயுள்ளன. ஆதலால் அவ்வாறே தொடர்ந்தும் இருப்பார்.

தமிழக அரசியலில் வைகோ 60 தொகுதிகளிலோ 50 தொகுதிகளிலோ போட்டியிடுவது என்பது ஈழத் தமிழர்களின் 60 பிரதிநிதிகள் போட்டியிடுகிறார்கள் என்பதாகவே அர்த்தம்.

:lol::lol::lol::lol::lol::D

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் வைகோ தொண்டனுக்கும் தொண்டன். வைகோவின் ஒவ்வொரு தொண்டனும் வைகோதான். ம.தி.மு.க.வின் ஒருக்கிற ஒவ்வொரு தொண்டனும் ஈழத் தமிழர்களுக்காய் சர்வபரி தியாகத்துக்கும் தயாராக உள்ளவர்கள்.

 

நமக்காய் சிறையேகிய வைகோவுக்காக ஊர் முழுக்கப் போய் அதை நியாயப்படுத்திப் பேசியவர் அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத். வீதி வீதியாக எங்கள் ஈழத் தமிழர்களுக்காக நாங்கள் குரல் கொடுக்காமல் யார் கொடுப்பார்கள் என்று வைகோவின் குரலாய் வலம் வந்தவர்கள் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்.

 

ஆகவே தமிழகத்தின் அரசியலில் வைகோ வளர வேண்டும். அது தமிழினத்தின் நன்மைக்கானது என்பதை யாழ். தளத்திலே விவாதிப்போர் உணர வேண்டும்.

 

தமிழர் நலம் கருதாதோர் விமர்சிக்கட்டும். அவர்களுக்கு நேற்றைய வரலாறும் தெரியாது. இன்றைய நிகழ்வுகளும் தெரியாது. நாளைய வரலாற்றுச் சூழலும் தெரியாது.

 

சங்கர்

நிச்சயமாக நண்பரே!

இங்கே அவரை அவமதிக்கும் கருத்துக்களை பிரயோகிப்பது என்பது அவரின் மனதை வைதைக்கும் கருத்துக்களாகவே கொள்ளப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்காவுக்கான இந்திய உதவி: ஜெயலலிதா கடும் எதிர்ப்பு!!

[புதன்கிழமை, 1 பெப்ரவரி 2006, 17:29 ஈழம்] [ம.சேரமான்]

சிறிலங்கா அரசாங்கத்துக்கு மருத்துவர்களும், செவிலியர்களும் தேவையெனில் நாம் அனுப்பலாம். அதற்கு மேல் உதவ வேண்டும் எனில் அது குறித்து நாம் யோசிக்க வேண்டும் என்று தமிழக முதலவர் ஜெ. ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

சென்னை ஊடகவியலாளர்களிடம் இன்று புதன்கிழமை ஜெயலலிதா அளித்த நேர்காணல்:

தமிழகத்துக்கு இலங்கை அகதிகள் வருவது எமக்கு 1983 ஆம் ஆண்டு நிலைமையை நினைவுபடுத்துகிறது. அப்போது பெருந்தொகையானோர் அகதிகளாக வந்தனர்.

நாளாந்தம் மேலும் மேலும் அகதிகள் வந்து கொண்டிருக்கிறார்கள்.

அகதிகள் வருகை மூலம் அங்கே அவர்கள் வாழ்வதற்கு ஏதுவான சூழ்நிலை இல்லை என்று தெரிகிறது. இது ஆரோக்கியமானது அல்ல என்றார்.

இலங்கை இனப்பிரச்சனைக்கு இந்தியா உதவ வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பிலான கேள்விக்கு ஜெயலலிதா அளித்த பதில்:

ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் மற்றொரு நாடு தலையிட முடியாது. சிறிலங்கா அரசாங்கம் என்ன கோரிக்கைகளை முன்வைக்கிறது என்பதைப் பொறுத்தே உதவிகள் அமைய வேண்டும். மருத்துவர்கள், செவிலியர்கள் அவர்களுக்குத் தேவையெனில் நாம் அனுப்பலாம். அதற்குமேலான உதவிகள் எனில், அது குறித்து நாம் மேலதிகமாக யோசிக்க வேண்டும் என்றார் ஜெயலலிதா.

ஈழத் தமிழர் பிரச்சனையில் கடும் போக்கை கடைபிடிப்பவர் ஜெயலலிதா என்று இந்து போன்ற ஆங்கில ஊடகங்கள் அவரைச் சுட்டிக்காட்டி ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்து நசுக்கி நச்சுக்கருத்துகளை பரப்பி வரும் நிலையில் ஈழத் தமிழர்களின் யதார்த்த நிலைமையை புரிந்து ஜெயலலிதா தெரிவித்துள்ள கருத்துகள் இந்திய அரசியலில் முக்கியமானவையாக கருதப்படுகிறது என்று சென்னை ஊடகவியலாலர் ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.http://

www.eelampage.com/?cn=23895

நீர் மட்டும் என்னவாம்? யாழ்களத்தில் வந்த அன்றே வாழ்த்து எல்லாம் அறிந்தவர் போல வாழ்த்துச் சொன்னவர் தானே. :wink:

:P :P :P :P :P :P :P :P :P

ஓய் டூயவன் ளொள்ளா நம்மட டம்பீ லுக்கு பறுவம் அன்று இப்படித்தான் கதைப்பார்

:P :P :P :P :P :P :P :P :P :P :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.