Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கோண்டாவில் மர்ம மனிதன் மக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டார்! வாய்பேச மறுக்கும் அவரை கட்டிவைத்துள்ளனர் மக்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[Wednesday, 2011-08-31 22:06:36]

marmam_190811_150.jpg

யாழ். கோண்டாவில் தில்லையம்பதி கிராமத்தில் மர்மனிதனை அப்பகுதி மக்கள் மடக்கிப் பிடித்துக் கட்டியிருக்கின்றனர். இந்தச் சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

தில்லையம்பதி சனசமூக நிலையத்தினை அண்டிய பகுதியில் உள்ள மிதிவண்டி திருத்தும் கடையில் தனது மிதிவண்டியை காற்று ஒட்டுவதற்காக விட்ட குறித்த நபர் அதன் அருகான பகுதி ஊடாகச் சென்று அங்குள்ள வீடு ஒன்றினுள் புகுந்திருக்கின்றார்.

குறித்த நபரை மடக்கிப்பிடித்த மக்கள் சனசமூக நிலையத்தில் கட்டிவைத்திருக்கின்றனர். சம்பவத்தினை அடுத்து இராணுவத்தினர் உடனடியாகப் பிரசன்னமாகியிருப்பதாகவும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர் வாய் திறந்து எந்த வார்த்தையும் பேசமறுப்பதாகவும், அவரை இராணுவம் அழைத்துச் செல்ல முற்பட்டிருப்பதாகவும் பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.seithy.com/breifNews.php?newsID=49169&category=TamilNews&language=tamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோண்டாவில் தில்லையம்பதி கிராமத்தில் தமிழ் மக்களிடம் மாட்டிய சிங்கள இளைஞன் (Photo in )

DSC01722-150x150.jpgகோண்டாவில் தில்லையம்பதி கிராமத்தில் வீட்டு ஜன்னல் கதவினால் வீட்டின் உட்புறத்தை பார்த்துக் கொண்டிருந்த சிங்கள இளைஞர் ஒருவனை கிராம மக்கள் மடக்கிப் பிடித்து நையப்புடைத்துள்ளனர்.இன்று மாலை 5.30 மணியளவில் நடைபெற்ற மேற்படிச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.

குறித்த இளைஞர் மேற்படி தில்லையம்பதி ஆலயத்திற்க்கு அருகிலுள்ள வீடொன்றின் ஜன்னல் கதவின் வழியே வீட்டை அவதானித்துக் கொண்டிருந்துள்ளார்.

இதனை அவதானித்த கிராமமக்கள் இதனை இரகசியமாக தொடர்ந்து அவதானித்ததோடு மக்களைக் கூட்டி உடனடியாக தப்பித்து ஓட முடியாத படி மடக்கிப் பிடித்துள்ளனர்.

பிடிபட்டவர் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர் என பின்னர் மக்கள் அறிந்துள்ளனர்.

உடனடியாக அங்கு கூடிய இளைஞர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட பின்னர் மரத்தில் கட்டி வைத்துள்ளனர். அதனை அறிந்து கொண்ட இராணுவத்தினர் உடனடியாக அழையா விருந்தாளிகளாக அங்கு வந்துள்ளனர்.

இதனையடுத்து கிராமத்திலுள்ள சனசமுக நிலைத்தினுள் குறித்த இளைஞனை வைத்துப் பூட்டிய சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியில் விட மறுத்துள்ளனர். எனினும் அவனை வெளியில் விடுமாறு இராணுவத்தினர் அச்சுறுத்தியுள்ளனர்.

இதற்கு உடன்படாத மக்கள் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து அங்கு வந்த கோப்பாய் பொலிஸார் குறித்த இளைஞனை மக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் கைது செய்து கொண்டு சென்றுள்ளனர்.

கைது செய்யப்பட்ட போது குறித்த இடத்திற்க்கு வந்த இராணுவ அதிகாரியொருவர் குறித்த இளைஞனை சனசமுக நிலையத்திற்குள் வைத்து கடுமையாகத் தாக்கியுள்ளார்.

இதன்போதும் கூட குறித்த இளைஞர் எதுவும் பேசவில்லை, எனினும் பின்னர் சிங்கள மொழியில் இராணுவத்தினருடன் ஏதோ உரையாடினான்.

இதேபோல் அங்கு வந்த படையினர் சிலர் கையில் பொல்லுகளுடன் வந்து மக்களை தாக்க முற்பட்டுள்ளனர்.

குறித் இளைஞன் சேட்,ஜீன்ஸ், காலில் செருப்பு அணிந்திருந்துள்ளான்.

இதேவேளை குறித்த பிரதேசத்தில் கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து மர்மமனிதன் நடமாட்டத்தால் அச்சமடைந்த சூழலில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

DSC01720.jpg

DSC01722.jpg

http://www.tamilthai.com/?p=25581

Edited by தமிழ் அரசு

  • கருத்துக்கள உறவுகள்

டக்ளசின் பின் பக்கத்தால் வாறதையும்... முன்பக்கத்தால் வாறதையும் கலந்து குடிக்க வைத்தால்....

வடக்கில் எந்த மர்ம நாயும்... வாலாட்ட முடியாது.liqueur_smiley.gif

கோண்டாவிலா கொக்கா?

கோண்டாவிலில் பகல் வேளை மாட்டிக் கொண்ட மர்ம மனிதன்

கோண்டாவில் வடக்கு தில்லையம்பதி சிவகாமி அம்மன் ஆலயப் பகுதியில உள்ள வீடொன்றில் பிற்பகல் வேளையில் சந்தேகத்துக்கிடமான முறையில் பதுங்கியிருந்த இரு மர்மமனிதர்களை வீட்டிலிருந்தவர்கள் கண்டதைத் தொடர்ந்து தப்பி ஓடிய நிலையில், அவர்களில் ஒருவர் அந்தப் பகுதி இளைஞர்களினால் மடக்கிப்பிடிக்கப்பட்டதும், மற்றவர் தப்பி ஓடிவிட்டனர்.

இன்று பிற்பகல் 4.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றது. இசம்பவம் நடைபெற்ற இடத்திற்கு உடனடியாக இராணுவத்தினர் விரைந்து வந்து மர்ம நபரைக் கொண்டு செல்ல எடுக்கப்பட்ட முயற்சி அந்தப் பகுதயில் கூடிய பொது மக்களினால் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனையடுத்து கோண்டாவில் பகுதி பெரும் பதட்டமான நிலையில் காணப்பட்டது.

IMG_4043.jpg

சந்தேகத்துக்கிடமான முறையில் பதுங்கியிருந்தவர்களில் மாட்டிக்கொண்ட இளைஞரை அப் பகுதி இளைஞர்கள் வாசிகசாலையினும் அடைத;துப் பூட்டி விட்டனர். நேரம் செல்லச் செல்ல அதனைப்பார்வையிட வந்த பொது மக்களுக்கும் இராணுவத்தினருக்கம் இடையே வாக்கு வாதங்கள் ஏற்படத்தொடங்கியது. இந் நிலையில் அந்தப் பகுதிக்கு அழைக்கப்படட மேலதிக இராணுவத்தினர் துப்பாக்கிகள் பொல்லுகளுடன் வந்து பொது தாக்கத் தொடங்கினர். அங்கு நின்ற மேஜர் தர அதிகாரி ஒருவரின் தலையீட்டினால் படையினர் கட்டுப்படுத்தப்பட்டதுடன் வன் முறைகள் மேலும் தொடரா வண்ணம் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

கோப்பாய் பொலிஸ் நிலைய சப் இன்ஸ்பெக்கரர் வந்துதபோதிலும் கைகூடாத நிலையில் ஊரெழுவில் நிலை கொண்டுள்ள 511 வது படையணியின் கட்டளை அதிகாரி சம்பவ இடத்துக்கு வந்து பொது மக்கள் முன்னிலையில் பொலிசாரிடம் ஒப்படைத்தார்.

குறிப்பிட்ட மர்ம நபர் மிகவும் இளையவராகக் காணப்பட்டார். பொதுமக்கள் இவரைக் கடுமையாகத் தாக்கிய போதும் அவர் வாய் திறக்கவேயில்லை. பொலிசார், இராணுவத்தினர் ஏதாவது கேட்டால் மட்டும் பதிலளித்துக் கொண்டிருந்தார். அங்கு கூடிய மக்களில் பலரும் அவரைப் படமெடுக்க முயன்ற போது முகத்தைக் காட்டிக்கொள்ளாமல் திரும்பி விட்டார்.

பொலிசாரும் , இராணுவத்தினரும் கூட இவரைபடம் எடுக்க அனுமதிக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கதாகும். சம்பவத்தின் போது பொல்லுகளுடன் மக்களை படையினர் துரத்திய வேளையில் ஏற்றபட்ட பதற்றத்தினால் பல மோட்டார் சைக்கிள்களும், சைக்கிள்களும் சிதறிப் போயிருக்கின்றன.

http://onlineuthayan...904528401355197

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

கோண்டாவிலா கொக்கா?

கொக்குவிலானிட்டை அம்பிட்டாலும் தப்பலாம்...

கோண்டாவிலானிட்டை அம்பிட்டால்..... அந்திரட்டிக்கு, எலும்பும் கிடைக்காது.locked.gif

  • கருத்துக்கள உறவுகள்

கோண்டாவிலா கொக்கா?

கோண்டாவிலில நீங்களும் அடிவாங்கினீங்களா....?arjun :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கோண்டாவிலில நீங்களும் அடிவாங்கினீங்களா....?arjun :lol:

ஊர் ஊராக வாங்கியும் இன்னும் தெளிவில்லை. :lol::icon_mrgreen::lol::icon_mrgreen:

கோண்டாவிலில நீங்களும் அடிவாங்கினீங்களா....?arjun :lol:

கொக்கா? என்று கேட்க கொக்குவில் பற்றி எழுதுகின்றார்கள்.இவர்களுடன் நான்வேறு மல்லுக்கட்டிக்கொண்டு,

70-80 அங்கு எங்கள் ராச்சியம் தான் சாந்தியக்கா,யாரும் தெரிந்தவர்கள் இருந்தால் கேட்டுப்பார்க்கவும். சந்தியில் நாங்கள் நின்றால் பஸ்காரனே கானுக்கால விட்டு வெட்டிப்போவான்.(ராகவன்,குமணனை கேட்டால் தெரியும்)அதே கோஸ்டி ஜெர்மனியில் டோட்முண்டில் 80-85 இருந்தது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.