Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக முதல்வருக்கு இந்திய மத்திய அரசு விடுத்துள்ள சவால் - வேல்ஸ் இல் இருந்து அருஷ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Sep 1, 2011 / பகுதி: முக்கியச் செய்தி /

தமிழக முதல்வருக்கு இந்திய மத்திய அரசு விடுத்துள்ள சவால் - வேல்ஸ் இல் இருந்து அருஷ்

இந்தியாவின் முன்னாள் பிரதமரும், இந்திய அமைதிப்படை என்ற போர்வையில் இந்திய இராணுவத்தை ஈழத்தமிழ் மக்கள் மீது ஏவிவிட்டு பல ஆயிரம் தமிழர்களை படுகொலை செய்து, யாழ் வைத்தியசாலையினுள் புகுந்து அப்பட்டமான இன அழிப்பை மேற்கொண்டு, ஈழத்தமிழ் மக்களை பகிரங்கமாக படுகொலை செய்தாலும் இந்த உலகம் ஏன் என கேட்காது என்பதை சிறீலங்கா இனவாதிகளுக்கு உணர்த்தியவருமான ராஜீவ் காந்தியின் மரணம் தொடர்பில் இந்திய காவல்துறையினரால் பலவந்தமாக வாக்குமூலம் பெறப்பட்ட மூன்று அப்பாவித் தமிழர்களை படுகொலை செய்வதற்கு இந்திய மத்திய அரசு நாள் குறித்துள்ளது.

இந்தியாவின் இந்த ஜனநாயக விரோத செயற்பாட்டுக்கு எதிராக உலகின் மிக முக்கிய தலைவர்களும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் தமது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். உலகின் மிக முக்கிய மனித உரிமை அமைப்புக்களும் தமது எதிர்ப்புக்களை தெரிவித்துள்ளதுடன், அதற்கு தேவையான ஆதரவுகளையும் சேகரித்து வருகின்றன.

75,000 இற்கு மேற்பட்ட தமிழ் மக்களை ஒரு சில மாதங்களில் படுகொலை செய்து, 300,000 மக்களை ஏதிலிகளாக்கி, பல ஆயிரம் இளைஞர், யுவதிகளை இனம்தெரியாத முகாம்களில் அடைத்து ஒரு இனப்படுகொலையின் ஊடாக சிறீலங்கா அரசு போரை நிறைவு செய்துள்ள நிலையில், சிறீலங்கா அரசு மீதான போர்க் குற்றங்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பதற்கோ அல்லது அது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையை ஆதரிப்பதற்கோ முன்வராத இந்திய மத்திய அரசு ஈழத்தமிழ் மக்கள் மீது மற்றுமொரு பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது.

இது அப்பட்டமான பயங்கரவாதம் என்பதை ஏன் இங்கு வலியுறுத்துகிறோம் எனில், ராஜீவ்காந்தியின் மரணத்திற்கு காரணமானவராக இந்திய அரசினால் சுட்டிக்காட்டப்பட்ட தானு எனப்படும் தற்கொலைதாரி அந்த இடத்திலேயே இறந்துவிட்டார்.

அதற்கான திட்டங்களை இந்தியாவில் வகுத்ததாக இந்திய அரசினால் குற்றம் சுமத்தப்பட்டு தேடப்பட்ட சிவராசன், சுபா போன்றவர்கள் உட்பட ஒரு டசினுக்கு மேற்பட்டவர்கள் இந்தியாவிலேயே சயனைட் உட்கொண்டு இறந்துவிட்டனர். அது மட்டுமல்லாது, சிறீலங்கா அரச படையினருடனான சமரில் காயமடைந்து தமிழகத்தில் சிகிச்சை பெற்றுவந்த பல காயம்பட்ட விடுதலைப் புலிகளையும் இந்திய மத்திய அரசின் கூலிபடையினர் இந்தியாவில் வைத்தே சாகடித்துவிட்டனர்.

ராஜீவ் காந்தியின் மரணத்துடன் தொடர்பற்ற பல அப்பாவிகளை இந்திய படையினர் தமது நடவடிக்கைகள் மூலம் படுகொலை செய்துள்ளனர். எனினும் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், மற்றும் புலனாய்வுத்துறைத் தலைவர் பொட்டு அம்மான் மீதும் இந்திய அரசு தனது குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து சுமத்தியே வந்தது. ஆனால் அவர்களும் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய அரசே அண்மையில் அறிவித்திருந்தது. அது மட்டுமல்லாது, விடுதலைப் புலிகளின் முதன்நிலைத் தளபதிகளில் ஒருவரான கேணல் கிட்டு வந்த கப்பலையும், அனைத்துலக விதிகளை மீறி சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து முற்றுகையிட்ட இந்திய மத்திய அரசு தனது படுகொலைகளை நிறைவேற்றியிருந்தது.

இவ்வளவு பேரின் மரணத்தின் பின்னரும் வட இந்தியர்களின் மகிழ்ச்சிக்காகவும், தமிழின விரோதிகளையும், சிங்கள பேரினவாதிகளையும் மகிழ்ச்சிப்படுத்தவும் இந்திய மத்திய அரசு தொடர் தமிழின படுகொலைகளை அரங்கேற்றி வருகின்றது. ஆயுதங்களை கைவிடுகிறோம், எமக்கான தீர்வைத் தாருங்கள், எங்களுக்கு அமைதியை தாருங்கள், படுகொலை செய்யப்பட்ட எமது மக்களுக்கான நீதியை தாருங்கள் என ஈழத்தமிழ் இனம் இறைஞ்சி நிற்கும் நிலையிலும் இந்திய மத்திய அரசு அவர்களுக்கு தொடர் மரணத்தையும், மரணச் செய்திகளையுமே கொடுக்கவே விரும்புகின்றது.

1986களில் தமிழகத்தில் நேரிடையாக படுகொலையை மேற்கொண்ட சிறீலங்கா அரசின் பிரதம துணை இராணுவக்குழுவான ஈ.பி.டி.பி என்ற ஆயுதக் கும்பலின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு செங்கம்பள வரவேற்பளித்து, இந்திய உள்த்துறை அமைச்சரே மதுபானத்தையும் எடுத்துத்தரும் நிலையில், கொலையில் நேரிடையாக தொடர்பற்ற மூன்று அப்பாவிகளைத் து£க்கிலிடும் இந்தியாவின் செயற்பாட்டை பயங்கரவாதம் என்ற சொல்லைத் தவிர வேறு எந்த வார்த்தையாலும் விபரிக்க முடியாது.

அதாவது, எதிர்வரும் மாதம் 9 ஆம் நாள் து£க்கிலிடப்போவதாக இந்திய மத்திய அரசினால் அறிவிக்கப்பட்ட மூன்று தமிழர்களும் ராஜீவ் காந்தியின் மரணத்துடன் நேரிடையான தொடர்புகள் அற்றவர்கள் என்பது, மேலே குறிப்பிடப்பட்ட மரணங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது தெளிவானது. எனினும் இந்த அப்பாவிகளை து£க்கிலிடுவதன் மூலம் இந்திய மத்திய அரசு சாதிக்க முனைவது என்ன?

‘ஈழத்தில் சிறீலங்கா அரசு மேற்கொண்ட படுகொலைகள் தொடர்பான போர்க்குற்றங்கள் தொடர்பில் தமிழக சட்டசபையில் மேற்கொள்ளப்பட்ட திர்மானத்திற்கு எதிரான பழிவாங்கலை மேற்கொள்ள இந்தியா முனைகின்றது.

‘தமிழக மக்களிடம் எழுந்துள்ள தமிழின உணர்வுகளை சிதைத்துவிட முனைகின்றது.

‘தமிழகமும், ஈழத்தமிழர்களும் இந்திய மத்திய அரசின் ஆட்சியாளர்களினதும், அவர்களின் செல்லப்பிள்ளையான சிங்கள அரசினதும் அடிமைகள் என்பதை மீண்டும் அழுத்தமாக கூற இந்தியா முற்படுகின்றது.

‘தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் ஒரு கோமாளிகள் என சிறீலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்த கருத்தையும், தமிழகத்தின் போராட்டத்தை தான் மதிப்பதில்லை என 2007களில் சிறீலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்த கருத்தையும் உறுதிப்படுத்த முனைகின்றது இந்திய மத்திய அரசு.

‘து£க்குத்தண்டனையின் நிறைவேற்றம் மூலம் தமிழக முதல்வர் செயற்திறனற்றவர் என உறுதிப்படுத்தினால், அவரால் சட்டசபையில் கொடுவரப்பட்ட சிறீலங்காவின் போர்க்குற்றம் தொடர்பான தீர்மானமும் ஒரு காகிதத் தீர்மானம் என்பதை சிறீலங்காவுக்கு மறைமுகமாக உறுதிப்படுத்தி அதன் ஆதரவுகளை பெற்றுக்கொள்ள முனைந்து நிற்கின்றது இந்திய மத்திய அரசு.

ஆனால் இந்திய மத்திய அரசின் இந்த ஜனநாயக விரேத, தமிழினத்திற்கு எதிரான வஞ்சக நடவடிக்கையை முறியடிக்க வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் உண்டு. அரசியல் இலாபங்களுக்காக இந்திய அரசினால் மேற்கொள்ளப்படும் ஜனநாயக விரோத நடவடிக்கையை நிறுத்தி இந்தியாவை ஒரு ஜனநாயக நாடாக மாற்றவேண்டிய கடமையும் ஒவ்வொரு இந்தியனுக்கும் உண்டு.

இந்தியாவின் ஊழல் என்ற பெரும் பூதத்தை ஒழிப்பதற்கு அன்னா ஹஸாரே மேற்கொண்டுவரும் போராட்டத்தைப் போல இந்தியாவின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளையும், எல்லை கடந்த இனவாதத்தையும் எதிர்க்க வேண்டிய கடமை இந்தியக் குடிமகனுக்கு உண்டு. து£க்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களை விடுதலை செய்யுங்கள் என கேட்கவில்லை, அந்த அப்பாவிகளின் தண்டனையை குறைக்குமாறே பலரும் மன்றாடி நிற்கின்றனர்.

தமிழக மக்களின் கோரிக்கைகளை இந்திய மத்திய அரசு தனது பயங்கரவாதம் மூலம் அடக்குமாக இருந்தால், அதன் பின்னர் தமிழகத்தின் உணர்வாளர்களும், தமிழினமும் தமது போராட்டத்தை நகர்த்த வேண்டிய திசை வேறுபட்டது.

அதனைத்தான் தமிழகத்தின் காஞ்சிபுரத்தில் தீயில் தன்னை உருக்கிக்கொண்ட செங்கொடியின் மரணம் எடுத்துக்காட்டி நிற்கின்றது. ஒரு மரணத்தை தடுப்பதற்கு இன்னொரு மரணத்தை நாம் அனுமதிக்க முடியாது. ஆனால் அந்த ஒரு நிலையை ஏற்படுத்துவதே ஜனநாயக மூகமூடியை அணித்துள்ள இந்திய மத்திய அரசின் பயங்கரவாதம்தான்.

இந்திய மத்திய அரசு ஒன்றை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும், தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி வந்ததால் தான் அங்கு தமிழின உணர்வும், எழுச்சிகளும் உச்சம் பெறவில்லை, மாறாக அவை உச்சம் பெற்றதனால் தான் ஜெயலலிதாவின் ஆட்சி வந்தது.

ஆனால் ஜெயலலிதாவின் ஆட்சிக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் தமிழகத்தின் எழுச்சிகளை அடக்கி, சிறீலங்கா அரசை போர்க்குற்றங்களில் இருந்து விடுவிக்கலாம் என இந்திய மத்திய அரசு எண்ணுமாக இருந்தால், சிறீலங்கா அரசை விட அதிக விலையை செலுத்த வேண்டிய நிலைக்கு இந்திய அரசு தள்ளப்படும் என்பதே யதார்த்தமானது.

நன்றி: ஈழமுரசு ( 30.08.2011 )

http://www.pathivu.com/news/18186/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கறுப்பி இணைப்பிற்கு

Sep 1, 2011 / பகுதி: முக்கியச் செய்தி /

தமிழக முதல்வருக்கு இந்திய மத்திய அரசு விடுத்துள்ள சவால் - வேல்ஸ் இல் இருந்து அருஷ்

தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி வந்ததால் தான் அங்கு தமிழின உணர்வும், எழுச்சிகளும் உச்சம் பெறவில்லை, மாறாக அவை உச்சம் பெற்றதனால் தான் ஜெயலலிதாவின் ஆட்சி வந்தது.

ஆனால் ஜெயலலிதாவின் ஆட்சிக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் தமிழகத்தின் எழுச்சிகளை அடக்கி, சிறீலங்கா அரசை போர்க்குற்றங்களில் இருந்து விடுவிக்கலாம் என இந்திய மத்திய அரசு எண்ணுமாக இருந்தால், சிறீலங்கா அரசை விட அதிக விலையை செலுத்த வேண்டிய நிலைக்கு இந்திய அரசு தள்ளப்படும் என்பதே யதார்த்தமானது.

நன்றி: ஈழமுரசு ( 30.08.2011 )

http://www.pathivu.c...ticle_full.aspx

ஆரம்பிச்சுட்டாங்யா ஆரம்பிச்சுட்டாங்கயா.................

இலங்கையும் இந்தியாவும் எவ்வளவு விலையானாலும் கொடுப்பார்கள். இதுக்கு தள்ளபப்ட்டு என்ன தள்ளப்படாட்டி என்ன? நாங்கள்தான் யாக்கிரதையாக இருக்கவேண்டும்.

அடுத்ததாக ஜெயலலிதாவின் ஆட்சியில் தமிழர் எழுச்சிக்கு தடையான இறுக்கம் இல்லை. கருனா நிதியின் ஆட்சி என்ரால் இப்போ கூட்டங்களுக்கும் உண்ணாவிரதத்திற்கும் எவ்வளவு தடை வந்திருக்கும்.

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததற்கு தமிழர் எழுச்சியும் ஒரு காரணமாக அமையலாமே தவிர அதுதான் காரணம் அல்ல.

இன்று அரபு உலகத்தில் தொடங்கி நடக்கும் எழுச்சி போராட்டங்கள் மாதிரி ஆசிய நாடுகளில் அப்படியே வராது. நிலைமைகள் வேறானவை.

ஆனால், மக்கள் பொதுவாக விழிப்படைந்துள்ளனர், தாம் போராடினால் மட்டுமே உரிமைகளை வென்றெடுக்கலாம் என்ற எண்ணமும் அவற்றை பெறலாம் என்ற நம்பிக்கையும் உள்ளது. இவ்வாறான உணர்வுகளை மதிக்காத அரசுகள் என்றும் மக்களின் எழுச்சிக்கு அடிபணியலாம்.

இந்தியாவின் முன்னாள் பிரதமரும், இந்திய அமைதிப்படை என்ற போர்வையில் இந்திய இராணுவத்தை ஈழத்தமிழ் மக்கள் மீது ஏவிவிட்டு பல ஆயிரம் தமிழர்களை படுகொலை செய்து, யாழ் வைத்தியசாலையினுள் புகுந்து அப்பட்டமான இன அழிப்பை மேற்கொண்டு, ஈழத்தமிழ் மக்களை பகிரங்கமாக படுகொலை செய்தாலும் இந்த உலகம் ஏன் என கேட்காது என்பதை சிறீலங்கா இனவாதிகளுக்கு உணர்த்தியவருமான ராஜீவ் காந்தியின் மரணம் தொடர்பில் இந்திய காவல்துறையினரால் பலவந்தமாக வாக்குமூலம் பெறப்பட்ட மூன்று அப்பாவித் தமிழர்களை படுகொலை செய்வதற்கு இந்திய மத்திய அரசு நாள் குறித்துள்ளது.

இந்தியாவின் இந்த ஜனநாயக விரோத செயற்பாட்டுக்கு எதிராக உலகின் மிக முக்கிய தலைவர்களும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் தமது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். உலகின் மிக முக்கிய மனித உரிமை அமைப்புக்களும் தமது எதிர்ப்புக்களை தெரிவித்துள்ளதுடன், அதற்கு தேவையான ஆதரவுகளையும் சேகரித்து வருகின்றன.

75,000 இற்கு மேற்பட்ட தமிழ் மக்களை ஒரு சில மாதங்களில் படுகொலை செய்து, 300,000 மக்களை ஏதிலிகளாக்கி, பல ஆயிரம் இளைஞர், யுவதிகளை இனம்தெரியாத முகாம்களில் அடைத்து ஒரு இனப்படுகொலையின் ஊடாக சிறீலங்கா அரசு போரை நிறைவு செய்துள்ள நிலையில், சிறீலங்கா அரசு மீதான போர்க் குற்றங்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பதற்கோ அல்லது அது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையை ஆதரிப்பதற்கோ முன்வராத இந்திய மத்திய அரசு ஈழத்தமிழ் மக்கள் மீது மற்றுமொரு பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது.

இது அப்பட்டமான பயங்கரவாதம் என்பதை ஏன் இங்கு வலியுறுத்துகிறோம் எனில், ராஜீவ்காந்தியின் மரணத்திற்கு காரணமானவராக இந்திய அரசினால் சுட்டிக்காட்டப்பட்ட தானு எனப்படும் தற்கொலைதாரி அந்த இடத்திலேயே இறந்துவிட்டார்.

அதற்கான திட்டங்களை இந்தியாவில் வகுத்ததாக இந்திய அரசினால் குற்றம் சுமத்தப்பட்டு தேடப்பட்ட சிவராசன், சுபா போன்றவர்கள் உட்பட ஒரு டசினுக்கு மேற்பட்டவர்கள் இந்தியாவிலேயே சயனைட் உட்கொண்டு இறந்துவிட்டனர். அது மட்டுமல்லாது, சிறீலங்கா அரச படையினருடனான சமரில் காயமடைந்து தமிழகத்தில் சிகிச்சை பெற்றுவந்த பல காயம்பட்ட விடுதலைப் புலிகளையும் இந்திய மத்திய அரசின் கூலிபடையினர் இந்தியாவில் வைத்தே சாகடித்துவிட்டனர்.

ராஜீவ் காந்தியின் மரணத்துடன் தொடர்பற்ற பல அப்பாவிகளை இந்திய படையினர் தமது நடவடிக்கைகள் மூலம் படுகொலை செய்துள்ளனர்.

1986களில் தமிழகத்தில் நேரிடையாக படுகொலையை மேற்கொண்ட சிறீலங்கா அரசின் பிரதம துணை இராணுவக்குழுவான ஈ.பி.டி.பி என்ற ஆயுதக் கும்பலின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு செங்கம்பள வரவேற்பளித்து, இந்திய உள்த்துறை அமைச்சரே மதுபானத்தையும் எடுத்துத்தரும் நிலையில், கொலையில் நேரிடையாக தொடர்பற்ற மூன்று அப்பாவிகளைத் து£க்கிலிடும் இந்தியாவின் செயற்பாட்டை பயங்கரவாதம் என்ற சொல்லைத் தவிர வேறு எந்த வார்த்தையாலும் விபரிக்க முடியாது.

:)

கறுப்பி, on 01 September 2011 - 06:25 AM, said: Sep 1, 2011 / பகுதி: முக்கியச் செய்தி /

தமிழக முதல்வருக்கு இந்திய மத்திய அரசு விடுத்துள்ள சவால் - வேல்ஸ் இல் இருந்து அருஷ்

தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி வந்ததால் தான் அங்கு தமிழின உணர்வும், எழுச்சிகளும் உச்சம் பெறவில்லை, மாறாக அவை உச்சம் பெற்றதனால் தான் ஜெயலலிதாவின் ஆட்சி வந்தது.

நன்றி: ஈழமுரசு ( 30.08.2011 )

http://www.pathivu.c...ticle_full.aspx

.... எல்லாம் இழந்து கட்டக்கூட கோவணத்துக்கு வழி தெரியாமல் தவிக்கையில் ... ஏதோ அனுதாபத்தில், எமக்காக இரங்கி, ... நால்வர் குரல் கொடுப்பதையும் கெடுத்தே விடுவார்கள் போலுள்ளது?????? .... பூறிஸ் விடும் அருள்ஸை காவ ஓர் ஈழமுரசு, இன்னொரு பதிவு!!!! .... முடியல ...

Sep 1, 2011 / பகுதி: முக்கியச் செய்தி /

தமிழக முதல்வருக்கு இந்திய மத்திய அரசு விடுத்துள்ள சவால் - வேல்ஸ் இல் இருந்து அருஷ்

இந்திய மத்திய அரசு ஒன்றை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும், தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி வந்ததால் தான் அங்கு தமிழின உணர்வும், எழுச்சிகளும் உச்சம் பெறவில்லை, மாறாக அவை உச்சம் பெற்றதனால் தான் ஜெயலலிதாவின் ஆட்சி வந்தது.

காங்கிரசின் வீழ்ச்சி தெற்கில் மட்டும் அல்ல. வடக்கிலும் வர இருக்கு. அன்ன காசருக்கு காங்கிரஸ் இப்போ கொஞ்சம் பணம் கொடுத்து தஜா பண்ணி இருக்கிறார்கள். பணம் முடிய அவர் திரும்பி வந்து ஊழல் குற்றசாட்டில் காங்கிரஸை வடக்கில் விழுத்துவார்.

http://www.pathivu.c...ticle_full.aspx

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரின் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்று கோரி, தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றிய தீர்மானம், இப்போது தேசிய அளவில் ஒரு சர்ச்சையை உருவாக்கியுள்ளது. காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலும், இதே போன்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

பஞ்சாப் - கடந்த 1993-ம் ஆண்டு டெல்லியில், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிட்டாவைக் கொல்ல முயன்ற வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தேவிந்தர் பால்சிங் புல்லரின் கருணை மனுவை மறுபரிசீலனை செய்யக் கோரி, குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளார் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல்.

ஜம்மு காஷ்மீர் - முதலமைச்சர் உமர் அப்துல்லா, நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அஃப்சல் குருவுக்கு ஆதரவாக தமிழக சட்டப்பேரவையைப் போல காஷ்மீர் சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றினால், இப்போது இருப்பதைப் போல பா ஜ கவினர் அமைதியாக இருப்பார்களா? என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

http://www.bbc.co.uk/tamil/india/2011/09/110901_deathrow_omarabdullah.shtml

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.