Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவோம்! தென் கொரியா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தத்திற்கு பின்பு இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் தொடர்பில் மிகவும் நெருங்கிய ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.

நேற்று தென் கொரிய தலைநகரம் சியோல் இல் இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இற்கும் தென்கொரிய வெளிநாட்டு அமைச்சர் சுங் ஹுவானுக்கும் இடையில் நிகழ்ந்த கலந்துரையாடலின் போதே தென் கொரிய வெளிநாட்டமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

விசேடமாக வடக்கிலும் கிழக்கிலும் மேற்கொள்ளப்படும் வலுசக்தி மற்றும் நீர்பாசன துறை அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வெளிநாட்டமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கொரிய நாட்டு முதலீட்டாளருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தென் கொரிய வெளிநாட்டமைச்சர் இலங்கை மேற்கொள்ளும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு மேலும் நன்கொடைகளை வழங்குவோம் என தெரிவித்துள்ளார்.

அந்நாட்டு பிரதமர் ஹிவாங் சிக் உடனும் இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் ஜி.எல்.பீரிசுக்குமிடையில் கலந்துரையாடல் ஒன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

http://www.eeladhesa...ndex.php?option

Edited by தமிழ் அரசு

  • கருத்துக்கள உறவுகள்

Mudhala kodi ah maathungappa..... South Korea kodiku bathila north koreada kodi ah podukidu karumam...,

தமிழரசு கோடியை மாத்துங்கள்,

தென் கொரியா போன்றநாடுகள் எப்போதும் சிறிலங்காவுக்கு ஆதரவுதான்.

பீரிஸ் அங்கு சென்றது வரும் ஐ.நா. தொடரில் மனித உரிமைகள் விடயத்தில் ஆதரவு கேட்க. அதேவேளை இப்பொழுது தென்கொரியாவில் கணிசமான சிங்களவர்களும் வேலை செய்கிறார்கள். அதைப்பற்றியும் கதைத்து இருப்பார்கள்.

மற்றும்படி 'கட்டியெழுப்ப' சீனாவே காணும் :o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Mudhala kodi ah maathungappa..... South Korea kodiku bathila north koreada kodi ah podukidu karumam...,

திருத்தம் செய்துவிட்டேன் நன்றி

தமிழரசு கோடியை மாத்துங்கள்,

தென் கொரியா போன்றநாடுகள் எப்போதும் சிறிலங்காவுக்கு ஆதரவுதான்.

மாற்றம் செய்துவிட்டேன் நன்றி

சிங்கள பௌத்த காட்டுமிராண்டிகளை கட்டியெழுப்ப பௌத்த தென்கொரியர்கள் தயார்.

பௌத்தர்களே காட்டுமிராண்டிகள் தான். அதனால் தான் முன்னர் யப்பானும், தற்போது சீனா, கொரியா போன்ற கும்பலும் இனப்படுகொலையாளர்களுக்கு உதவுகிறார்கள்.

எதிரிகளுக்கு உதவுபவர்களை இப்படியே பார்த்துக் கொண்டிருந்தால் தமிழர்களுக்குரிய நட்புகளை எப்படிச் சேர்க்கப் போகிறீர்கள்?

எதிரிகளுக்கு உதவுபவர்களை இப்படியே பார்த்துக் கொண்டிருந்தால் தமிழர்களுக்குரிய நட்புகளை எப்படிச் சேர்க்கப் போகிறீர்கள்?

மிக நல்ல கேள்வி. மிக அவசியமான கேள்வி. இறைவன் அவர்களே!

இதை எதிரிகளுக்கு உதவிக்கொண்டிருக்கும் காட்டுமிராண்டி ஜனநாயகவாதிகளிடம் மட்டும் நம்பிக்கை கொண்டிருப்பவர்களிடம், கூட்டமைப்பின் சம்பந்தன் போன்றவர்களிடம் கேட்கவேண்டும்.

அதே போல் எதிரிகளுக்கு உதவுபவர்கள், (1) அவர்கள் ஒரு போர்க்குற்றவாளிகளுக்கே உதவுகிறார்கள், (2) அவர்கள் ஒரு இனப்படுகொலைக் கும்பலுக்கே உதவுகிறார்கள், (3) அவர்கள் ஜனநாயகவேடம் போட்டு பயங்கரவாத நடவடிக்கைகளில் நீண்டகாலமாக ஈடுபட்டுவரும் ஒரு அரச பயங்கரவாத கும்பலுக்கே உதவுகிறார்கள், (4) பௌத்தம் பேசி உங்களை மயக்கி உங்கள் ஆதரவுடன் அப்பாவி மக்களை படுகொலை செய்யும் ஒரு மிலேச்ச பயங்கரவாதக் கும்பலுக்கே உதவுகிறார்கள் என்ற உண்மையை (உண்மை தானே) உரைக்கச் செய்வதன் மூலம் அவர்கள் எதிரிகளுக்கு உதவுவதை கட்டுப்படுத்த முடியும், தடுக்க முடியும் என்பது ஒரு வழி (இது ஒருவழி தான், ஒரேயொரு வழியல்ல. வேறு பல வழிகளும் உண்டு).

உதாரணமாக முன்பு கண்மூடித்தனமாக உதவிய யப்பான் அரசு தற்போது சிங்கள அரசுக்கு உதவ பின்னிப்பதுவும் இதனால் தான்.

தமிழினப் படுகொலைகளில் சிங்கள அரச பயங்கரவாதிகளுக்கு தொடர்ந்து உதவிவந்த (ஏன் நீங்கள் நம்பும்) ஜனநாயகக் காட்டுமிராண்டிகளும் தற்போது வேறு வழியில்லாமல் அடக்கி வாசிக்க முயல்வது வரலாற்றுப்பழி வந்துவிடும், தமிழ் மக்கள் மீது தாம் செய்த அயோக்கியத்தனத்தை தமிழர் முன்னர் போல் ஒருபோதும் மறக்கப் போவதில்லை, தம்மை கண்மூடித்தனமாக ஆதரிப்பவர்களின் செல்வாக்கு வீழ்ந்து வருகிறது, தாம் தமிழரைக் கொன்றொழிக்க உதவினாலும் தம்மை தூக்கிப்பிடிக்கும் (ஈனத்) தமிழரின் குரல்கள் எடுபடுவது தற்போது குறைவு என்ற ஒரே காரணம் மட்டுமே! உயர்ந்த பாரதப் பண்பாடுபற்றி பேசும் - கதையளக்கும் - பா. ஜ. க. வும் தமிழர் மீதான அக்கறையால் அல்ல, வரலாற்றில் தமக்கு (பாரதத்துக்கு) அவப்பெயர் ஏற்பட்டுவிடும் என்றே கவலைப்படுகிறது. (வரலாற்றில் ஏற்கனவே அவப்பெயர் பதிந்துவிட்டது என்பது வேறு விடயம்.அதாவது 20,000 க்கு மேற்பட்ட ஆயுதமேந்திய ஜனநாயகக் காட்டுமிராண்டிகள் 2009 இல் மட்டும் ஈழமண்ணில் நேரடியாக தமிழனப் படுகொலையில், தமிழின அழிப்பில் ஈடுபட்டார்கள். உங்களுக்குத் தான் வரலாறு என்றால் என்னவென்று நல்லாய் தெரியுமே!). இவற்றை நாம் நன்கு அறிந்துள்ளோம், ஆதாரங்களுடன் அறிந்துள்ளோம், நேரடியாகவும் அறிந்துள்ளோம்.

அதனால் தற்போது பெரும்பாலும் எனது வழி இந்த வழியில் தான். மற்றவர்கள் இதை விளங்கிக்கொண்டு தத்தமது வழிகளில் எம்முள் முரண்படாமல், ஒருவரது அர்த்தமுள்ள முயற்சியை கொச்சைப்படுத்தாமல், ஒற்றுமையாக சென்றால் தமிழினம் பலம் பெறும். உதாரணமாக அகூதா அவர்கள் மிக மிக அர்த்தமுள்ள பல நல்ல செயல்களை தனது வழியில் செய்து வருகிறார். அவர் எப்போதும் தமிழின விரோதிகளுக்கு, தமிழின அழிப்பில் ஈடுபட்டவர்களுக்கு தேவையற்ற முக்கியத்துவம் கொடுப்பதில்லை, யதார்த்தம் என்ற போர்வையில் கண்மூடித்தனமாக ஆதரிப்பதும் இல்லை. அவரது நகர்வுகளில் உள்ள ராஜதந்திரம் வலிமையானது.

எனவே இறைவன்! உங்கள் கேள்வி அர்த்தமுள்ளது, அவசியமானது என்பதை உணராமல் நாம் இல்லை! இதை உணருக்கள். தொடர்ந்தும் உங்களுடன் மன விருப்பமின்றி சில விவாதங்களில் ஈடுபட்டதால் சிறிது விபரமாக, வெளிப்படையாக எழுதலாம் என்று நினைத்தேன்.

Edited by ஆராவமுதன்

நல்லது, அப்படி வெளிபடையாகவேயிருப்பதானால் நானும் வெளிப்படையாகவே சில கேள்விகளை முன்வைக்கிறேன். இங்கு களத்தில் நன்றாகக் கருத்தெழுதுபவர்கள் இருக்கிறார்கள். சிந்திக்கக்கூடியவர்கள் இருக்கிறார்கள். அவர்களும் இவற்றில் கலந்து கொள்ளலாம்.

1. இந்தியா ஈழத்தமிழர்களை எதிரியாகப் பார்க்கின்றதா? அப்படியானால் அது எந்தத் தளத்தில் வைத்தப் பார்க்கிறது.?

2. இந்திய இலங்கைக்கிடையிலான உள் முரண்பாடுகளை நாம் எப்படி உள்வாங்கிக் கொள்கின்றோம்? அதை இதுகாலவரையில் எவ்வாறு பயன் படுத்தியுள்ளோம்.?

3. இந்தியா தமிழருக்கு எதிராகச் செயற்படுகிறதா? அல்லது இலங்கையை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள நினைக்கிறதா?

இக் கேள்விகள் இப்போதைக்குப் போதும். பங்குபற்றுபவர்களின் வேகத்தையும் விமர்சனங்களையும் பொறுத்து பின்னர் பார்ப்போம்.

நல்லது, அப்படி வெளிபடையாகவேயிருப்பதானால் நானும் வெளிப்படையாகவே சில கேள்விகளை முன்வைக்கிறேன். இங்கு களத்தில் நன்றாகக் கருத்தெழுதுபவர்கள் இருக்கிறார்கள். சிந்திக்கக்கூடியவர்கள் இருக்கிறார்கள். அவர்களும் இவற்றில் கலந்து கொள்ளலாம்.

1. இந்தியா ஈழத்தமிழர்களை எதிரியாகப் பார்க்கின்றதா? அப்படியானால் அது எந்தத் தளத்தில் வைத்தப் பார்க்கிறது.?

2. இந்திய இலங்கைக்கிடையிலான உள் முரண்பாடுகளை நாம் எப்படி உள்வாங்கிக் கொள்கின்றோம்? அதை இதுகாலவரையில் எவ்வாறு பயன் படுத்தியுள்ளோம்.?

3. இந்தியா தமிழருக்கு எதிராகச் செயற்படுகிறதா? அல்லது இலங்கையை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள நினைக்கிறதா?

இக் கேள்விகள் இப்போதைக்குப் போதும். பங்குபற்றுபவர்களின் வேகத்தையும் விமர்சனங்களையும் பொறுத்து பின்னர் பார்ப்போம்.

வெறுமனே கேள்விகளை கேட்பதற்குப் பெயர் வெளிப்படை அல்ல.

முதலில் உங்கள் கருத்துக்களை (அப்படி ஏதாவது இருந்தால்) முன்வையுங்கள். அதற்குப் பெயர்தான் வெளிப்படை!

உங்கள் பத்தி வெறும் உணர்வுகளை அடக்கியது. தற்போதைய யதார்த்தம் அதில் இல்லை.

எதற்காக இந்தியா தமிழர்களை எதிரியாகக் கருதவேண்டும் என்று கேட்டிருந்தேன். உங்களைப்போன்றவர்களிடம் அதற்கான பதில் இருக்காது என்பது எனக்குத் தெரியும்.

இந்தியா தமிழர்களின் எதிரியல்ல என்பதுதான் எனது வெளிப்படையான கருத்து.

திரும்பத் திரும்ப ஒரே விடயத்தைப்போட்டுக் குழப்பிக் கொள்கிறீர்கள். இந்தியாமட்டும் தமிழர்களின் அழிவிற்குக் காரணமல்ல. இந்த அழிவுகளை உலகநாடுகள் எல்லாமே பார்த்துக் கொண்டுதானிருந்தன.

இப்போது அவை கையிலெடுத்திருக்கும் போர்க் குற்ற நடவடிக்கைகள் கூட தமது நலன்சார்ந்த தேவைகளுக்காகத்தான் பயன்படுத்தப் போகின்றன. இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல.

தமிழ்நாட்டு உணவுகள் மட்டும் தமிழரைப் பாதுகாக்கும் என்ற முடிவு தவறான கருத்தோட்டம். ஒருமித்த இந்தியா எடுக்கும் முடிவுதான் தமிழருக்குப் பயனைக் கொடுக்கும். இந்திய எதிர்ப்புவாதம் இதற்குத் தடையாகத்தான் எப்போதும் இருக்கும். அப்படியான இந்திய எதிர்ப்புவாதம் தமிழர்களிடம் இருக்க வேண்டும் என்பதைத்தான் இந்தியாவும் விரும்பும். தமிழ்நாட்டுத் தமிழரின் உணர்வுகள் இந்தியாவில் மாற்றத்தை ஏற்படுத்திவிடாது.

சர்வதேச நாடுகள் இன்றும் இலங்கைக்கு உதவிக் கொண்டுதானிருக்கின்றன. போர்க்குற்றவாளியான நாடொன்றிற்கு ஏன் இன்னமும் அவர்கள் உதவவேண்டும். எல்லாவற்றிற்கும் பிராந்திய அரசியல் ஆதாயம்தான் காரணம். நாம் எதிர்பார்ப்பதுபோன்று இலங்கைப் போர்க்குற்றவாளிகளை விசாரணை செய்வதற்கு இந்தியா அனுமதிக்காது என்பது உண்மை. அப்படி இந்தியா கைவிடுமானால் இந்தியாவின் பிராந்திய நலன்கள் இலங்கையில் பாதிக்கப்படும் என்பதும் உண்மை.

அப்படியானால் மாற்றுவழி என்ன? இந்தியாவுடன் நாங்கள் ஒன்றுபடும் போதுதான் தென்னிலங்கையின் இந்திய எதிர்ப்பு சக்திகளின் போக்கில் மாற்றம் ஏற்படுத்தலாம். ஒரு பிராந்திய அரசின் நட்புத்தான் தமிழருக்கு நலனை ஏற்படுத்துமே தவிர வேறெந்த உறவும் பயன்தராது. எந்த இலங்கை இந்திய வரலாறும் முழு இலங்கையையும் மையமாக வைத்து நகர்ந்துள்ளதே தவிர தமிழருக்கு எதிரானதாகவும் சிங்களவருக்குச் சார்பானதாகவும் நடக்கவில்லை.

உங்கள் பத்தி வெறும் உணர்வுகளை அடக்கியது. தற்போதைய யதார்த்தம் அதில் இல்லை.

அதுவென்ன வெறும் உணர்வுகள்? உணர்வற்ற ஜடங்கள் மாதிரி நான் இருப்பதில்லை. மேலாக எனது பத்தியில் குறிப்பிடப்பட்ட ஒவ்வொரு விடயமும் பெரும்பாலான தமிழர் அறிந்துள்ள விடயங்கள் தான். யதார்த்தம் (அல்லது மாற்றுக்கருத்து என்ற போர்வையில்) ஒற்றைவரியில் அவற்றை புறக்கணிக்க முயலுபவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை சிந்திக்கத் தெரியும் எவரும் அறிந்துகொள்வார்கள்.

எதற்காக இந்தியா தமிழர்களை எதிரியாகக் கருதவேண்டும் என்று கேட்டிருந்தேன். உங்களைப்போன்றவர்களிடம் அதற்கான பதில் இருக்காது என்பது எனக்குத் தெரியும்.

உங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணம் தான் முதலாவது பிரச்சினையே!

இந்தியா தமிழர்களின் எதிரியல்ல என்பதுதான் எனது வெளிப்படையான கருத்து.

இதற்கு என்ன ஆதாரம் வைத்துள்ளீர்கள்?

அவர்கள் (தமிழர், பெரும்பாலான கன்னடர் - மராட்டியர் - வங்காளிகள் - தெலுங்கர் தவிர்ந்த ஹிந்தி வெறியர்களான வட இந்தியர், பெரும்பாலான பச்சோந்தி மலையாளிகள்) தமிழின விரோதிகளே.

மேலும்,

இருபது வருடங்களுக்கு மேலாக ஜனநாயக வேடம் போட்டு, தமிழினப் படுகொலைகளை நிகழ்த்தி

* 260,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக்,

* 170,000 இற்கு மேற்பட்ட தமிழர் ஊனமுற / கடுங்காயமடையக்,

* 150,000 இற்கு மேற்பட்ட தமிழர் வீடுகள் தரை மட்டமாகக்,

* 1,500,000 இற்கு மேற்பட்ட தமிழர் புலம் பெயரக்,

* 800,000 இற்கு மேற்பட்ட தமிழர் இடம்பெயரக்,

* 90 பில்லியன் அமெரிக்க டாலர் இற்கு மேற்பட்ட மதிப்புள்ள தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்படக்

* 146,000 இற்கு மேற்பட்ட தமிழர் காணாமல் போவதற்குக்,

காரணமாக இருந்தவர்கள் சிங்கள, வட இந்திய, மலையாள பயங்கரவாதிகள் தான். இதை நேரடியாக பாதிக்கப்பட்ட ஒவ்வொரு சிறுபிள்ளையும் அறியும்.

எனவே இந்தியாவை (தமிழர், பெரும்பாலான கன்னடர் - மராட்டியர் - வங்காளிகள் - தெலுங்கர் தவிர்ந்த) தமிழர் நண்பனாக பார்க்க கடந்த 20 வருடங்களுக்கு மேலான அனுபவங்கள் இடம் கொடுக்காது.

இவற்றை எல்லாம் மறைந்து இனபடுகொலையாலர்களுக்கு தொடர்ந்தும் துதிபாட்ட முயலுபவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை சிந்திக்கத் தெரியும் எவரும் அறிந்துகொள்வார்கள்.

திரும்பத் திரும்ப ஒரே விடயத்தைப்போட்டுக் குழப்பிக் கொள்கிறீர்கள். இந்தியாமட்டும் தமிழர்களின் அழிவிற்குக் காரணமல்ல.

இந்தியாமட்டும் தமிழர்களின் அழிவிற்குக் காரணமல்ல என்பதை முழுமையாக ஒத்துக்கொள்கிறேன். அதாவது முதலாவது குற்றவாளிகளான சிங்களப் பயங்கரவாதிகளுக்கு அடுத்ததாக இருப்பவர்கள் இவர்கள் தான். பெருமளவு நாசகார ஆயுதங்களுடன், 20,000 க்கு மேற்பட்ட இனபடுகொலையாளிகளையும் இலவசமாக வழங்கியவர்கள் இவர்கள் மட்டுமே. அதன் பின்னரே ரஷ்யா, ஈரான், பாகிஸ்தான், சீனா போன்றவர்களின் பங்களிப்பை கூற முடியும். இவர்கள் அனைவரும் எதையும் இலவசமாக கொடுக்கவில்லை என்பதுவும், புலிகளை தடை செய்யவில்லை என்பதுவும் குறிப்பிடத் தக்கது. இதில் ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகளின் பங்களிப்புக்கு உதவியவர்களும் இந்தியக் காட்டுமிராண்டிகளே.

இந்த அழிவுகளை உலகநாடுகள் எல்லாமே பார்த்துக் கொண்டுதானிருந்தன.

இந்த விடயத்தில் மேலை நாடுகளையும் இந்திய இனப்படுகொலையாளர்களையும் கொஞ்சமும் ஒப்பிட முடியாது. மேலைநாடுகள் ராஜதந்த்ரமுறையில் கடுமையான அழுத்தங்களைப் பிரயோகித்து போரை நிறுத்த முயற்சித்தன. காட்டுமிராண்டி ஜனநாயகவாதிகளுடன் வெளிப்படையாக கருத்துபரிமாற்றம் செய்து நோர்வே முயற்சி செய்தது. இதைச் சாதகமாக பயன்படுத்திய காட்டுமிராண்டி ஜனநாயகவாதிகள் சிங்களப் பயங்கரவாதிகளை உரிய முறையில் அறிவுறுத்தி இனப்படுகொலைகளை விரைவுபடுத்தியது. இனப்படுகொலைகளை மறைத்து உலக நாடுகளை திசை திருப்புவதில், ஏமாற்றுவதில் காட்டுமிராண்டி ஜனநாயகவாதிகளின் பங்களிப்பே முக்கியமானது.

இப்போது அவை கையிலெடுத்திருக்கும் போர்க் குற்ற நடவடிக்கைகள் கூட தமது நலன்சார்ந்த தேவைகளுக்காகத்தான் பயன்படுத்தப் போகின்றன. இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல.

மிழர் தமக்கு நிகழும் அநியாயங்களை தாமே தான் வெளிக்கொண்டு வரவேண்டும். தமிழர் தமது நியாங்களை, உரிமைகளை தாமே கேட்டுத்தான் பெறவேண்டும். இவற்றைச் செய்யவைப்பது, வழிநடத்துவது தமிழர் பிரதிநிதிகளின் தலையாய கடமை. ஆனால் தமிழர் பிரதிநிதிகளின் தலையில் அனைத்தையும் கட்டிவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதுவும் கூடாது. ஒவ்வொருவருக்கும் கடமைகள் உண்டு. எனினும் இவற்றைச் சாதிப்பதில் தமிழர் பிரதிநிதிகளின் பங்களிப்பே, தலைமைத்துவமே மிக அவசியம்.

அதனால் மக்களைவிட மிக மோசமான உணர்வற்ற ஜடங்களாக சம்பந்தன், சுமந்திரன், ஆனந்தசங்கரி, சித்தார்த்தன், சுரேஷ், போன்றவர்கள் மற்றும் பெரும்பாலான நாடுகடந்த அரச பிரதிநிதிகள் இருக்கும் துர்ப்பாக்கிய நிலை மாறவேண்டும். யாராவது பெற்றுக்கொடுப்பார்கள் என்று கனவு கண்டுகொண்டிருப்பது தவறு. கடந்தகாலத்திலும் நாம் விட்ட தவறுகளில் இதுவும் ஒன்று. தொடர்ந்து இவற்றைச் செய்து வருவோமானால், கண்களை மூடி துதிபாடுவோமானால், பிற நாடுகள் தமது நலனிலேயே அக்கறை செலுத்துவார்கள். இதில் என்ன புதுமை? எமது நலனில் அவர்கள் அக்கறை செலுத்த வேண்டுமெனின் நாம் தான் உரிய முறையில் (ஒருவருக்கு துதி பாடியில்ல, சிங்கள இனப்படுகொலையாளர்களைப் பார்த்துக்கூட புத்திவரவில்லை - அவர்கள் ஒருவருக்கு தொடர்ந்து துதி பாடுவதில்லை) தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்.

இவற்றை எல்லாம் மறைந்து இனபடுகொலையாலர்களுக்கு தொடர்ந்தும் துதிபாட்ட முயலுபவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை சிந்திக்கத் தெரியும் எவரும் அறிந்துகொள்வார்கள்.

தமிழ்நாட்டு உணவுகள் மட்டும் தமிழரைப் பாதுகாக்கும் என்ற முடிவு தவறான கருத்தோட்டம். ஒருமித்த இந்தியா எடுக்கும் முடிவுதான் தமிழருக்குப் பயனைக் கொடுக்கும். இந்திய எதிர்ப்புவாதம் இதற்குத் தடையாகத்தான் எப்போதும் இருக்கும். அப்படியான இந்திய எதிர்ப்புவாதம் தமிழர்களிடம் இருக்க வேண்டும் என்பதைத்தான் இந்தியாவும் விரும்பும்.

தமிழ்நாட்டுத் தமிழரின் உணர்வுகள் இந்தியாவில் மாற்றத்தை ஏற்படுத்திவிடாது.

இது தவறு. முன்னர் தமிழ்நாட்டுத் தமிழர்களின் உணர்வுகள் தான் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. இடைக்காலத்தில் தமிழின விரோதிகளால், அவர்களின் ஒருசில ஈழத்தமிழ் கைக்கூலிகளின் உதவியுடன் ஒரு மாயை உருவாக்கப்பட்டது. தமிழகத்தில் அந்த மாயை நீண்டகாலம் நிலைக்க சம்பந்தன், சுமந்திரன், ஆனந்தசங்கரி, சித்தார்த்தன், டக்லஸ் போன்றவர்களும் அவர்களின் கைக்கூலிகளுமே உதவினர். அந்த மாயை தற்போது தகர்ந்து வருகிறது.

சர்வதேச நாடுகள் இன்றும் இலங்கைக்கு உதவிக் கொண்டுதானிருக்கின்றன. போர்க்குற்றவாளியான நாடொன்றிற்கு ஏன் இன்னமும் அவர்கள் உதவவேண்டும்.

இதற்கும் முக்கிய காரணம் சிங்கள அரச பயங்கரவாதிகளின் ஒருமித்த முயற்சியும், தமிழர் பிரதிநிதிகளின் முயற்சியின்மையும். மீண்டும் புலிகள் ஜனநாயகம் மீது நம்பிக்கையற்றவர்கள் என்று கூறித்திரிந்த உணர்வற்ற ஜடங்களாக சம்பந்தன், சுமந்திரன், ஆனந்தசங்கரி, சித்தார்த்தன், சுரேஷ், டக்லஸ் போன்றவர்களே சிங்கள அரச பயங்கரவாதிகளின் பிரச்சாரங்களுக்கு வலுச் சேர்த்தவர்கள்.

எல்லாவற்றிற்கும் பிராந்திய அரசியல் ஆதாயம்தான் காரணம். நாம் எதிர்பார்ப்பதுபோன்று இலங்கைப் போர்க்குற்றவாளிகளை விசாரணை செய்வதற்கு இந்தியா அனுமதிக்காது என்பது உண்மை. அப்படி இந்தியா கைவிடுமானால் இந்தியாவின் பிராந்திய நலன்கள் இலங்கையில் பாதிக்கப்படும் என்பதும் உண்மை.

நாம் நமக்காக தைரியமாக பேசப்பழக வேண்டும். நாம் எமக்கு வேண்டிய உரிமைகளை தெளிவாக பேசப்பழக வேண்டும், கேட்க வேண்டும்.

அதைவிட்டு மற்றவன் என்ன செய்வான், என்ன செய்யமாட்டான், தருவானோ, தரமாட்டானோ, அவனுக்கு என்ன பிடிக்கும் என்று வலிந்து கதையளப்பது எமது சாபக்கேடு. சம்பந்தன், டக்லஸ் போன்றவர்களும் தமிழருக்கு என்ன தேவை என்பதை சிந்திக்காமல், சிங்களவன் என்ன தருவான் என்று சிந்திப்பதிலேயே காலத்தை ஓட்டுகின்றனர்.

கைகூலிகளே தமது சமூக நலனைப் புறக்கணித்து பிறர் நலனைப் பேசிக் கொண்டிருப்பர்கள்.

அப்படியானால் மாற்றுவழி என்ன? இந்தியாவுடன் நாங்கள் ஒன்றுபடும் போதுதான் தென்னிலங்கையின் இந்திய எதிர்ப்பு சக்திகளின் போக்கில் மாற்றம் ஏற்படுத்தலாம். ஒரு பிராந்திய அரசின் நட்புத்தான் தமிழருக்கு நலனை ஏற்படுத்துமே தவிர வேறெந்த உறவும் பயன்தராது. எந்த இலங்கை இந்திய வரலாறும் முழு இலங்கையையும் மையமாக வைத்து நகர்ந்துள்ளதே தவிர தமிழருக்கு எதிரானதாகவும் சிங்களவருக்குச் சார்பானதாகவும் நடக்கவில்லை.

கடந்த காலங்களில் இந்தியாவை நம்பாதவர்கள் போல் இருக்கிறது கதை. முழுமையாக நம்பிக் கெட்டது போதும். பட்டறிவு இல்லை என்றால் என்ன செய்வது?

சரணடையும் மனநிலையுடைய கோழைகளால் உரிமைகளைப் பெறமுடியாது. அடிமையாக மட்டுமே இருக்க முடியும். இந்த மனநிலை பிரதிநிகளிடம் வரும் போது அது சமூகத்தைப் பாதிக்கிறது. இது ஒரு காலத்தில் சாதனை புரிந்து, பின்னர் சரணடையும் புத்தியைப் பெற்ற கருணாவுக்கும் பொருந்தும். என்னதான் திறமைகள் இருந்தாலும், இருக்கவேண்டிய இடத்தில், செய்ய வேண்டியவற்றைசெய்தால் மட்டுமே சாதனைகள் செய்ய முடியும். உரிமையுடன் தலை நிமிர்ந்து வாழமுடியும்.

நான் இவற்றை எனது பரந்துபட்ட அனுபவங்களின், நேரடி அனுபவங்களின் அடிப்படையில் மனச்சாட்சியுடன் எழுதியுள்ளேன். பதில் எழுதுபவர்களிடமும் அதையே எதிர்பார்க்கிறேன். விதண்டாவாதம், ஒருவரிக் கருத்துக்கள் வேண்டாம்.

இதையும் வாசியுங்கள்!

http://www.yarl.com/...ndpost&p=687172

இந்தியாவின் கொள்கைக்கு சீனாவின் அச்சுறுத்தல் அல்ல தமிழர் விரோதமே காரணம்

சிறிலங்காவிற்கு உதவா விட்டால் சீனா முழுமையாக சிறிலங்காவினை ஆக்கிரமித்துவிடும் என்றும் அதனாலேயே இந்தியா சிறிலங்காவை காப்பாற்றுகின்றது என்றும் இந்திய அரசாங்கம் தமிழர்களையும் ஏன் உலகையும் ஏமாற்றப்பார்க்கின்றது.

இது எவ்வளவு பொய்யான, கீழ்த்தரமான ஓர் கொள்கை அல்லது புனையப்பட்ட, சித்தரிக்கப்பட்ட பொய் என்பது தமிழர்களுக்கு புரியும். அந்தளவு தமிழ் நாட்டுத்தமிழர்களும், உலகத்தமிழர்களும் முட்டாள்கள் அல்லர்.

உண்மை என்னவென்றால் அதாவது சிறிலங்காவிற்கு இந்தியா முண்டு கொடுப்பதற்கு காரணம் தமிழர்களைப்பொறுத்தவரை இந்தியாவினதும் சிறிலங்காவினதும் கொள்கை ஒன்றே. இதனை சில தமிழர்கள் மறுக்கலாம் ஆனால் அதுதான் உண்மை.

அதாவது சிறிலங்காவின் நோக்கம் தமிழர்களை இல்லாது ஒழிக்கவேண்டும். இந்தியாவின் நோக்கமும் தமிழர்களை ஒதுக்கவேண்டும். தமிழர்கள் வாழும் தமிழ் நாட்டிலும், தமிழீழத்திலும் அவர்களுக்கு ஒரு சுதந்திரமான நாட்டை உருவாக்கினால் அது இந்தியாவின் அல்லது வடக்கத்தையர்க்கு ஆபத்து என்பதே.

இந்தியா தனது தமிழர் எதிர்ப்பை வெறித்தனமாக காட்ட முடியாது காரணம் அது ஓர் ஜனனாயக நாடாகவும் அல்லது அபப்டி செய்தால் தமிழ் நாட்டின் எழுச்சியினை தாங்க முடியாது என்பதுமே ஆகும். ஆகவேதான் சிங்களத்தின் மூலம் தனது காரியங்களை செய்ய முயற்சி செய்கின்றது.

தமிழர்கள் அழியவேண்டும் என முதலாவதாக நினைப்பதே இந்தியாதான்.

வடக்கு கிழக்கில் சிங்களவர்களை குடியேற்றி அதனை முழுமையாக சிங்கள பூமியாக மாற்றுவதனால் அது தமிழ் நாட்டிற்கு எப்பவுமே அச்சுறுத்தலாக இருக்கும் என்பதனையே இந்தியா விரும்புகின்றது. மாறாக அதனால் சீன ஆதிக்கம் இருக்கும் என்பதனை இந்தியா பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. சிங்கள குடியேற்றம், சிங்கள ஆதிக்கத்தினை இந்தியா ஒருபோதும் எதிர்க்கவும் மாட்டாது மாறாக அதனை நியாயப்படுத்தியே வரும்.

சீனாவின் ஆதிக்கம் வெளிப்படையானது ஆனால் தமிழர் தேசியவாதம் என்பது ஒரு நிலக்கீழ் பூதம் எனவும் அந்த ஆபத்தினை எதிர்காலத்தில் சமாளிப்பது கடினம் எனவும் இந்தியா கருதுகின்றது.

ஆனால் இவற்றை எல்லாம் கூறி தமிழகத்தை அல்லது தமிழர்களை வடக்கத்தையர் குளப்ப விரும்பவில்லை. எனவேதான் சீன ஆதிக்கம் என்ற துரும்பை கையில் எடுத்துள்ளது.

மூலம் 1

மூலம் 2

Edited by ஆராவமுதன்

இதையும் வாசியுங்கள்!

http://www.yarl.com/...ndpost&p=687172

இதுதான் உண்மை. வட இந்திய அதிகாரம் ஒட்டு மொத்த தமிழருக்கே எதிரானது. அது தமிழகம் ஈழம் என்று பார்ப்பதில்லை.

இராவணன், இராமர் காலம் இதுதான் உண்மை.

தமிழர் எதை யாரிடம் கேட்டுப் பெறுவது. இந்தியா தமிழருக்கு ஞாயம் பெற்றுத் தரும் என்று சொல்வதற்கில்லை. இந்தியா அதனைச் செய்யாது. ஆனால் இந்தியாவை மீறித் தமிழர்கள் எதனையும் பெற்றுவிட முடியாது.

முழு இலங்கையையும் தனது ஆதிக்கத்தினுள் வைத்திருப்பதற்குத்தான் இந்தியா விரும்புமே தவிர தமிழருக்கோ சிங்களவருக்கோ சார்பு எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டிற்கு அங்கு இடமில்லை.

சர்வதேச ஈடுபாட்டுக்குள் இலங்கை இனப்பிரச்சனை கொண்டுவரப்பட்டபோது சர்வதேசத்தால் எதனைச் சாதிக்க முடிந்தது.? இறுதியில் அவர்களும் இந்தியாவை நோக்கியே ஓடினார்கள். அதிலும் இந்தியாவின் நிலைப்பாட்டிற்குள்தான் சர்வதேசமும் சென்றது.

இத்தனை அழிவுகளுக்கும் இந்தியாவும் காரணமாக இருந்தாலும் இதற்கு முன்னர் நடைபெற இருந்த அழிவுகளைத் தடுத்து நிறுத்தியதும் இந்தியாதான். ( விடுதலைப்புலிகளின் காலம்)

நன்றாகச் சொன்னீர்கள் "நமக்காக நாம் பேசவேண்டும்" இன்று தாயகத்திலுள்ள எல்லாத் தமிழரும் சரணடைந்தவர்கள்தான். யாரும் சுதந்திரமாக எதைப்பற்றியும் வெளிப்படையாகப் பேச முடியாத நிலைதான். அப்படிப் பேச வேண்டுமானால் யாருடைய துணையாவது வேண்டும். அப்படிப்பட்ட ஒரு துணை இந்தியா ஒன்றுதான். அது தவிர்க்கப்பட்டதால்தான் தமிழரின் அழிவை இந்தியா ஒருவகையில் வேடிக்கை பார்த்தது என்றே சொல்லலாம். அதனால் இந்தியப் பிராந்தியத்தை மீறிப்போகும் எந்தத் தீர்விற்கும் தமிழர் சார்பாகவோ சிங்களவர் சார்பாகவோ இந்தியா ஒருபோதும் இணங்காது.

"சீனாவின் ஆதிக்கத்தை அலட்டிக் கொள்ளவில்லை" என்ற கூற்று எவ்வளவிற்குச் சரியானது? இலங்கையில் சீன ஆதிக்கம் நிலைபெறுவது இந்தியாவால் அலட்டிக்கொள்ளப்படுகிறதா? சிந்திக்கத்தெரிந்தவர்களைத்தான் கேட்கிறேன்.

இந்திய வட மாநிலங்களில் உள்ள பிரிவினைகள் இந்தியாவிற்கு அச்சுறுத்தல் இல்லாததுபோல் இந்த மூலம் எழுதப்பட்டிருக்கிறது. தமிழர்களுக்கு எந்தவிதத்தில் இந்தியா எதிரியல்ல? ஈழத்தமிழர் என்போர் ஓர் சிறிய சமூகம். அந்தச் சமூகத்தை எதிரியாகக் கருதுவதால் என்ன நன்மை இந்தியாவிற்குக் கிடைக்கப்போகிறது? என்பதை முழுமையாகப் பார்த்தால் முழு இலங்கையையும் தனது வலையமைப்பிற்குள் வைத்துக் கொள்வதற்கு எடுத்துக் கொள்ளும் முனைப்பே தவிர எதிரியாகக் கருதியல்ல.

சிங்களவரையும் இந்தியா நண்பனாகப் பார்க்காது. சிங்களவர்தான் இந்தியாவால் எதிரியாகக் கருதப்படக் கூடியவர்கள். நிலையும் அதுதான். இலங்கையில் ஆதிக்கம் செலுத்தும் இனம்தான் முடிவுகளை எடுக்கும் வலிமையுள்ளது. அதனால்தான் இந்தியா சிங்களவர் பக்கம் சார்ந்து நிற்கிறது. முடிவுகளை எடுக்க முடியாத நிலையிலிருக்கும் தமிழர்களை எதிரியாகக் கருதுவதில் என்ன பயன்?

இந்தியா என்றால் என்ன அது வடமாநில மக்களின் கூட்டு.தெற்குக்கு சம்பந்தம் இல்லை.

வரலாறே திராவிடருக்கு எதிரான போர் தான் நடந்தது இப்பவும் அதுதான் நடக்கிறது.

இராமன் கதை, விஜயன் இலங்கை வருகை எல்லாம் இப்படிதான். ஆக மொத்த தமிழன எதிர்ப்பின் ஒரு அடையாளம் தான் இந்தியா . வேறு ஒன்றும் இல்லை.

இந்தியா குழம்பும் வரை நமக்கு விடிவு இல்லை. குறைந்த்தது காஸ்மீராவது போர் வலுக்கனும்.பிரியனும். அப்போதான் எல்லாம் சரியாய் வரும்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் எதை யாரிடம் கேட்டுப் பெறுவது. இந்தியா தமிழருக்கு ஞாயம் பெற்றுத் தரும் என்று சொல்வதற்கில்லை. இந்தியா அதனைச் செய்யாது. ஆனால் இந்தியாவை மீறித் தமிழர்கள் எதனையும் பெற்றுவிட முடியாது.

இந்தியாவை மீறிச் செய்யமுடியாது என்று எவ்வாறு அவ்வளவு உறுதியாகச் சொல்கிறீர்கள்? :unsure: ரஷ்யாவை மீறி கொசொவோ பிரியத்தானே செய்தது.. ரஷ்யாவிடம் வீட்டோ அதிகாரமே இருக்கு.. இந்தியனிடம் அதுவும் இல்லை.. :unsure:

எனக்குத்தெரிந்து இதிலுள்ள பொறிமுறை இதுதான். இந்தியாவுக்கு பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பதவி மிக முக்கியம்.. அதற்கு மனித உரிமை விவகாரங்களில் நேர்மையான செயற்பாட்டை மேற்குலகம் எதிர்பார்க்கும்.

இத்தகைய ஒரு சூழலில், இலங்கை விவகாரம் இந்தியாவுக்கு மிகுந்த தர்மசங்கடத்தைக் கொடுக்கிறது. இவ்வளவு நாளும் "நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்" என்று கூறி மேற்குலகை ஒதுக்கினார்கள். ஆனால் இப்போது நிலைமைகள் கைமீறிச் சென்றுவிட்டன. மேற்குலக நாடுகளே விரும்பினாலும் இலங்கை விவகாரத்தைப் புறந்தள்ள முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுவிட்டது. :huh:

இவ்வகையில் பார்த்தால், தமிழரின் சாணக்கியமே இப்போது நிலைபெற்றுள்ளதாக எடுத்துக்கொள்ள வேண்டும்..! :rolleyes:

இசைக்கலைஞன் கூறியது போல் இதுவும் மிகவும் வலிமையான ஒரு பொறிமுறை. இதையும் நாம் சாதகமாக பயன்படுத்த வேண்டும்.

உங்கள் நேரடியான கருத்துக்களுக்கு நன்றி இறைவன் அவர்களே. இத்திரியில் உள்ள எனது 3 பதிவுகளை திரும்பவும் நிதானமாக வாசித்தால் பெரும்பாலான உங்கள் கேள்விகளுக்கு / கருத்துக்களுக்கு ஏற்கனவே நான் விடையளித்திருப்பது விளங்கும். நானும் தாயகத்தில் இருப்பவன் தான் இறைவன். இந்த வருடம் மட்டுமே எனது தற்போதைய வேலை காரணமாக 30 % ஆன நாட்கள் சில வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டியிருந்தது.

இத்தனை அழிவுகளுக்கும் இந்தியாவும் காரணமாக இருந்தாலும் இதற்கு முன்னர் நடைபெற இருந்த அழிவுகளைத் தடுத்து நிறுத்தியதும் இந்தியாதான்.

உண்மைதான். ஒருதடவை மட்டும் செய்தார்கள். இதற்குக் காரணம் இந்தியாவல்ல - தமிழ் நாட்டுத் தமிழர் தான் காரணம். அதனால் தான் சிறிது சுதாகரித்து பின்னர் நேரடியாக "அமைதிப்படை" என்ற பயங்கரவாதக் கும்பல் மூலம் சூடு சொரனையற்ற கருணாநிதியே வெறுப்படையும் அளவுக்கு தமிழின அழிப்பை தாமே மேற்கொண்டனர்.

பின்னர் தமிழ் நாட்டுத் தமிழர் பல்வேறு மாயைகளால், திட்டமிட்ட சதிகளில் சிக்கியது துரதிஸ்டம். நிறையக்காலம் பயங்கரவாதி ராஜீவை அவர்களே படுகொலைசெய்து ஒரு மாயையை உருவாகினார்கள். தற்போது சீனா என்கிற மாயையை உருவாக்க முயலுகிறார்கள்.

உங்களைப் போன்றவர்களும் இந்த மாயையில் சிக்கி அந்தச் சதிகார்களின் தமிழினப் படுகொலைக்கு சிறிதும் துணைபோகக் கூட்டாது.

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச சமன்பாடுகளில் இந்தியாவும் ஈழத் தமிழரும்

புலம்பெயர் தமிழர்களைப் பொறுத்தவரையில் இந்தியா பற்றிய சரியான புரிதலும், இந்தியாவை எப்படி நாம் கையாளவேண்டும் என்ற தெளிவும் எங்களுக்கு இல்லை என்றுதான் கூறவேண்டும். கடந்த சில வருடங்களாக இந்தியாவைக் கையாளும் விடயத்தில் நாம் தோல்வி அடைந்தவர்களாகவே இருந்துவருகின்றோம்.

இந்தியாவைச் சரியாகக் கையாளாததன் காரணமாக எமக்கு ஏற்பட்ட இழப்புக்களும் கொஞ்சநஞ்சமல்ல. இந்தியாவைச் சரியானமுறையில் கையாளாமல் எமது தேசிய விடுதலைப் போராட்டத்தை மேலும் முன்னகர்த்துவதிலும் பாரிய சங்கடங்கள் எமக்கு உள்ளன. எனவே அடுத்துவரும் காலங்களில் இந்தியாவை ஈழத் தமிழர்கள் என்படிக் கையாளவேண்டும் என்று ஆராய்வது அவசியம் என்று நினைக்கின்றேன்.

இந்தியாவின் துரோகங்கள்:

ஈழத் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தின் பாதையில் இந்தியா எமக்குச் செய்த துரோகங்கள் என்பது கொஞ்ச நஞ்சமல்ல. ஈழத் தமிழர்களின் வரலாற்றில் என்றைக்குமே அழிந்துவிடாத வடுக்களை இந்தியா எமக்கு ஏற்படுத்தியுள்ளது. இன்னும் தெளிவாகக் கூறுவதானால், எமது இனத்தின் தேசிய விடுதலைப் போராட்டத்தை தோற்கடித்ததே இந்தியா என்றுதான் நாம் கூறவேண்டி இருக்கின்றது. எமது இனத்தின் மீதான அழித்தொழிப்பை உற்சாகப்படுத்தி, அந்த அழித்தொழிப்பிற்கு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுத்தது, அந்த அழித்தொழிப்பின் பங்குதாரராகச் செயற்பட்டது இந்தியாவே என்பதில் சந்தேகம் இல்லை. இன்றைக்கும் கூட இந்தியா எமக்கெதிரான தனது கோர முகத்தைச் சற்றும் தணிக்காத நிலையில்தான் எம்மீது வெளிப்படுத்திக்கொண்டிருக்கின்றன. வன்னிக் களமுனைகளில் இருந்து தப்பி இந்தியாவில் தஞ்சடைந்துள்ள போராளிகளை இரகசியமாகக் கடத்திச் செல்லும் கைங்காரியத்தை இந்தியா செய்துகொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. முள்ளிவாய்க்காலில் போர்க்குற்றம் புரியப்பட்டதான சாட்சிகளைக் கலைக்கும் நோக்குடனேயே இந்தக் காரியத்தை இந்தியா செய்துகொண்டிருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகின்றது.

உண்மையிலே இந்தியா எமக்கெதிராகப் புரிந்துள்ள அநியாயங்களுக்காக இந்தியா மீது ஈழத்தமிழர் நிரந்தரப் பகை கொள்ளும் அளவிற்கு எம்மீது கொடுமைகள் புரியப்பட்டுள்ளன. நமது இனத்தை உறவாடி அழித்த இந்தியாவை எப்படியாவது பழி தீர்க்கவேண்டும் எண்ணத்தை ஒவ்வொரு ஈழத் தமிழனுக்கும் ஏற்படுத்தும் அளவிற்கு இந்தியா எமக்குத் துரோகம் இழைத்துள்ளது.

இருந்த போதிலும் சர்வதேசச் சமன்பாடுகள் பற்றியும் அந்த சர்வதேசச் சமன்பாடுகளில் இந்தியா வகிக்கும் பங்கு பற்றியும் நீண்ட ஆய்வுகளைச் செய்கின்ற பொழுது, இந்தியா என்கின்ற தேசத்தை சிறிது காலத்திற்காவது ஈழத்தமிழ் இனம் கையாண்டுதான் ஆகவேண்டி இருக்கின்றது என்கின்ற உண்மையை புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றது.

இந்தியா எமக்குச் செய்த கொடுமைகள் என்று ஒரு நீண்ட பட்டியல் இருந்தாலும், இந்தக் கொடுமைகள் அனைத்தையும் இராஜதந்திரம் என்கின்ற பெயரில் மனதுக்குள் பூட்டிவைத்துக்கொண்டு, இந்தியாவைக் கையாளவேண்டிய ஒரு நிலையில் நாம் இன்று இருந்துகொண்டிருக்கின்றோம். எமது ஈழவிடுதலைப் போராட்டத்தை நாம் அடுத்த கட்டத்திற்கு முன்நகர்த்த வேண்டுமானால், நாம் இந்தியாவைக் கையாளுவதில் வெற்றி காணவேண்டிய அவசியம் எம் முன் இருக்கின்றது.

இந்தியாவை எப்படி நம் கையாளுவது?

இந்தியாவைக் கையாளுவதில் ஈழத் தமிழர் எப்படி வெற்றி கொள்வது?

சிங்களத்திடம் கற்றுக்கொள்ளவேண்டும்

இந்தியாவை எப்படிக் கையாளுவது என்று நாம் சிங்களவர்களிடம்தான் கற்றுக்கொள்ளவேண்டும்.

காலாகாலமாகவே இந்திய விரோத நிலைப்பாட்டை தொடர்சியாக எடுத்து வரும் சிங்கள தேசம், இந்தியாவைக் கையாளுவதில் தொடர்ந்து வெற்றிபெற்றுவருவது யாருமே அறிந்த விடயம்.

இந்திய பாகிஸ்தான் யுத்தம் இடம்பெற்ற காலங்களில் பாக்கிஸ்தான் யுத்த விமானங்களுக்கு இலங்கையில் தரித்து எரிபொருள் நிரப்பிச் செல்ல அனுமதித்தது முதல், பனிப்போர் காலத்தில் அமெரிக்கவுக்கு வொயிஸ் ஒப் அமெரிக்கா (Voice of America) என்ற பெயரில் இலங்கையில் தளம் கொடுத்தது, இஸ்ரேல் நலன்காக்கும் பிரிவை கொழும்பில் நிலைநிறுத்தி வைத்தது, தற்பொழுது சீனாவுடனும், பாகிஸ்தானுடனும் சம்பந்தம் பேசிவருவது- என்று, இந்தியா விரும்பாத அத்தனை காரியங்களையும் வரலாற்றில் சிங்கள தேசம் செய்துவந்தது. தற்பொழுதும் செய்துகொண்டு இருக்கின்றது. இந்தியாவிற்கு விரோதமான இத்தனை காரியங்களையும் செய்துகொண்டும் சிங்கள தேசத்தால் இந்தியாவுடன் நல்லுறவைப் பேண முடிகின்றது.

இதனைத்தான் இராஜதந்திரம் என்பது.

எதிரியிடம் உள்ள பலவீனத்தை எமக்குச் சாதகமாக மாற்றிக்கொண்டு பயணிப்பது எப்படி என்பதை சிங்கள தேசத்திடம் இருந்துதான் நாம் கற்றுக்கொள்ளவேண்டும்.

இந்தியாவுக்கு எதிரான விரோதப் பாதையில் பயணித்துக்கொண்டிருந்த சிங்கள தேசத்தால் இந்தியாவுடன் 1954 இல் செய்துகொள்ளப்பட்ட நேரு கொத்தலாவ ஒப்பந்தம், 1964 இல் மேற்கொள்ளப்பட்ட சாஸ்திரி சிறிமா ஒப்பந்தம், 1974 இல் செய்துகொள்ளப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தம், 1987 இல் செய்துகொள்ளப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தம் என்று அனைத்து ஒப்பந்தங்களிலுமே சிங்கள தேசம் தனது நலனைப் பேணிக்கொள்வதில் வெற்றிகண்டதை எம்மால் காணக்கூடியதாக இருக்கின்றது. இதனைத்தான் இந்தியாவைக் கையாளுவதில் சிறிலங்கா தேசம் பெற்ற, பெற்றுவருகின்ற இராஜதந்திர வெற்றிகள் என்று கூறுவது.

உண்மையிலேயே இந்தியாவை எப்படிக் கையாளுவது என்பதை நாம் சிங்கள தேசத்திடம் இருந்தாவது கற்றுக்கொள்வவேண்டும்.

புலம்பெயர் தமிழரின் பலம்

சரி இனி விடயத்திற்கு வருவோம்.

இந்தியாவை எப்படி நாம் கையாளுவது?

ஒருதரப்பை நாம் கையாள விளையும் பொழுது, எம்முடைய பலம் என்ன பலவீனம் என்ன என்றும், நாம் கையாள முனைகின்ற தரப்பினது பலம் பலவீனம் என்று சரியாகக் கணிப்பிட்டுக்கொண்டுதான் அந்தக் காரியத்தில் நாம் ஈடுபடுவேண்டும். அப்பொழுதுதான் அதில் நாம் வெற்றிபெற முடியும்.

ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் இன்று எமது மிகப் பெரிய பலம் புலம்பெயர் தமிழர்களின் இருப்பு என்பதுதான்.

மேற்குலகில் சாதாரண அகதிகளாக, விரும்பத்தகாத ஒரு கூட்டமாக இருந்த காலம் மாறி, இன்று நாம் வாழும் நாடுகளில் ஆட்சியைத் தீர்மானிக்கின்ற, அல்லது அந்த ஆட்சியில் செல்வாக்குச் செலுத்துகின்றவர்களாக வளர்ச்சி அடைந்திருக்கின்றோம். ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில் இன்று நாம் மேற்குலகின் தவிர்க்க முடியாத ஒரு அங்கம். எனவே மேற்குலகில் நாம் பெற்றுள்ள இந்த ஸ்தானத்தைப் பயன்படுத்திக்கொண்டு எந்த அளவிற்கு இந்த மேற்குலகை எமது தேவைகளை நாம் சந்திப்பதற்குப் பயன்படுத்திக் கொள்கின்றோமோ அந்த அளவிற்கு எம்மால் எமது வெற்றியை இலகுவாக்கிக்கொள்ளமுடியும்.

அதாவது ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் இன்று அவர்கள் கைகளில் இருக்கின்ற மிகப் பெரிய ஆயுதம் – அமெரிக்கா தலைமையிலான மேற்குலகு.

அதுவும், புதிதாக உருவாகியுள்ள அமெரிக்க- சீனப் பனிப்போரில் சிங்கள தேசம் முற்று முழுதாகவே சீனாவின் கரங்களுக்குள் விழுந்து, மேற்குலகின் அதிருப்தியை வெகுவாகச் சம்பாதித்துள்ள இன்றைய காலகட்டத்தில் மேற்குலகை சரியாக நாம் பயன்படுத்தத் தவறுவோமேயானால், எம்மை விட முட்டாள்கள் யாருமே இருக்க முடியாது. (குளோபள் டமில் போரம், கனடிய தமிழ் காங்கிரஸ், பிரிட்டிஷ் டமில் போரம் போன்ற சில ஈழத் தமிழ் அமைப்புக்கள் மேற்குலகை சாதகமான முறையில் கையாள ஆரம்பித்துள்ளதை இந்தச் சந்தர்பத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்)

இந்தியாவும் மேற்குலகும்

சரி இனி முக்கியமான ஒரு விடயத்திற்கு வருவோம்.

நாம் எமக்குச் சாதகமாகக் கையாள விரும்புகின்ற இந்த மேற்குலகம், ஈழத் தமிழர்களின் கைகளில் இன்று இருக்கின்ற மிக முக்கியமான ஆயுதமான மேற்குலகம் – இந்தியாவுடன் எப்படியான உறவைக் கொண்டிருக்கின்றது?

இந்தியாவை மேற்குலகம் எப்படிப் பார்க்கின்றது?

இந்தக் கேள்விகளுக்கு நாம் பதிலைத் தேடுவதானால், சர்வதேச சமன்பாடுகளில் இந்தியாவின் வகிபாகம் பற்றிய ஒரு தெளிவான புரிதலை நாம்; பெற்றுக்கொண்டாகவேண்டி இருக்கின்றது.

’ஈழத் தமிழினம் இந்தியாவை கையாளவேண்டிய அவசியம் இல்லை. ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் இந்தியா ஒரு மிக மோசமான எதிரி. மேற்குலகை மாத்திரம் நாம் நட்பாக்கிக்கொண்டு எமது காரியத்தை நாம் வெற்றிகரமாகச் சாதித்துவிடமுடியும்’ என்று எம்மில் சிலர் கருத்துத் தெரிவித்து வருகின்றார்கள்.

அவர்கள் தெரிவிக்கும் கூற்றுக்களில்; நிறைய நியாயப்பாடுகள்; இருக்கத்தான் செய்கின்றன.

அதேவேளை, அந்த நியாயப்பாடுகளைக் கடந்து நடைமுறை உண்மைகள் என்கின்ற விடயமும் இருக்கின்றதை புரிந்துகொண்டு செயப்படவேண்டிய காலச்சூழலுக்குள் நாம் இன்று நின்று கொண்டிருக்கின்றோம்.

ஆசிய பசுபிக் பிரந்தியத்தைப் பொறுத்தவரையில் நாம் இன்று நம்பியிருக்கின்ற மேற்குலகம் இந்தியாவையே நம்பிக்கொண்டிருக்கின்றது என்கின்ற யதார்த்தத்தை மறந்துவிட்டுதான் நாம் நகர்வெடுக்க முனைகின்றோம்.

எம்மைப் பொறுத்தவரையில் இது இராஜதந்திரத்தின் காலம். எமது பலம், நம்பிக்கைகள் எல்லாம் சிதறடிக்கப்பட்டுவிட்ட நிலையில் இராஜதந்திர நகர்வுகளின் ஊடாகவே எமது உரிமைகளை வென்றெடுக்கவேண்டிய காலத்தின் சூழலுக்குள் ஈழத் தமிழினம் இன்று நின்று கொண்டிருக்கின்றது.

நாம் இன்று மேற்குலகை நம்பிக்கொண்டிருக்க, மேற்குலகு இந்தியாவை நம்பிக்கொண்டிருக்கின்றது.

இது என்ன புதுக்கதை என்று சிலர் கேட்கலாம். ஆனால் அதுதான் உண்மை.

மேற்குலகிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுநிலை, இந்த உறவுநிலையை மீறி மேற்குலகம் ஈழத் தமிழர் பிரச்சனையில் எவ்வாறு தலையிடும் சாத்தியம் இருக்கின்றது என்பன பற்றித்தான் இந்தக் கட்டுரையில் விரிவாக நாம் ஆராய இருக்கின்றோம்.

இந்தியாவை எதிர்த்த அமெரிக்கா

இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியை எடுத்து நோக்கினால், இந்தியா மீது அமெரிக்கா மிக மோசமான விரோதம் பாராட்டிய நாடாகவே இருந்து வந்தது. சுதந்திரம் அடைந்த இந்தியா ரஷ்யாவின் செல்லப்பிள்ளையாகிவிட, அமெரிக்க ரஷ்ய பனிப்போரின் ஆரம்ப நாட்களில் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகினால் மிகவும் வெறுக்கப்பட ஒரு தேசமாகவே இந்தியா இருந்து வந்தது.

இன்னும் குறிப்பாகக் கூறுவதானால், அமெரிக்கா இந்தியாவிற்கு எதிராக நேரடியாகவே களத்தில் குதித்திருந்தது.

1947 இல் இந்தியா சுதந்திரமடைந்ததைத் தொடர்ந்து சமாதானத்திற்கான நோபள் பரிசு இந்தியத் தலைவர் மஹாத்மா காந்திக்குத்தான் வழங்கப்படுவதாக இருந்தது. ஆனால் அமெரிக்கா வழங்கிய அழுத்தத்தைத் தொடர்ந்து அது இந்தியாவின் கையை விட்டு நழுவிப் போனது.

1948 இல் காஷ்மீர் விவகாரம் ஐ.நா சபைக்கு வந்த போது, அமெரிக்கா பாக்கிஸ்தானுக்கே ஆதரவாகச் செயற்பட்டது.

பின்னர், 1965ம் ஆண்டு மற்றும் 1971ம் ஆண்டுகளில் இடம்பெற்ற இந்திய-பாக்கிஸ்தான் யுத்தங்களின் போதும், அமெரிக்கா பாக்கிஸ்தானுக்குச் சார்பாகவே நிலை எடுத்தது. அமெரிக்க ஆயுதங்களே பாக்கிஸ்தானினால் இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டன. ஐ.நா சபையிலும் இந்தியாவிற்கு எதிராக அமெரிக்கா வெழுத்து வாங்கியது.

1971 இல் பங்காளதேஷை பாக்கிஸ்தானிடம் இருந்து மீட்கும் நடவடிக்கைளில் இந்தியா இறங்கிய போது, பாக்கிஸ்தானுக்குச் சார்பாக அமெரிக்கா தனது ஏழாவது கப்பற்படையை (Seventh Fleet) வங்காள விரிகுடாவிற்கு அனுப்பிவைத்தது. இது அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே இருந்த விரிசலை மேலும் அதிகமாக்கியிருந்தது.

ஆனால் இராஜதந்திர நோக்கம் கருதி 70களின் நடுப்பகுதியில் இருந்து இந்தியா விடயத்தில் அமெரிக்கா அதிகம் பகைகொள்ளத ஒரு நிலை எடுக்கத் தலைப்பட்டது.

புதிய கொள்கை

அமெரிக்காவின் ஒரு முக்கிய கொள்கை வகுப்பாளரான ஹென்றி கீலிங்கர் என்பவர் இந்தியா தொடர்பாக அமெரிக்காவின் புதிய கொள்கையை வகுத்திருந்தார். இந்தியா தொடர்பாக அமெரிக்காவால் கடைப்பிடிக்கப்பட்டு வரும் அந்த கொள்கையை ஆராய்ச்சியாளர்கள் ~Benign Neglect Policy| என்று குறிப்பிடுகின்றார்கள். அதாவது, இந்தியாவுடன் நேரடியாக கோபதாபம் கொள்ளாமல் சிரித்துப் பேசி உதாசீனம் செய்துகொள்ளுதல் என்பதாகும். 1971 இற்குப் பின்னர் அமெரிக்கா இந்தியாவிற்கு எதிராக எந்தவொரு நேரடி எதிர் நகர்வுகளிலும் இறங்கவில்லை என்பது நோக்கத்தக்கது. அந்த காலம் முதல் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் பொதுவானதொரு முரண்பாட்டுத் தோற்றப்பாடும், அதேவேளை குறிப்பிட்ட அளவு ஐக்கியமும் நிலவ ஆரம்பித்தது. இந்த நிலையை ஆராய்ச்சியாளர்கள் ~Unity and Struggle of Opposites|என்று குறிப்பிடுகின்றார்கள்.

பிரதான காரணம்

அமெரிக்காவைப் பொறுத்தவரையில் தனது இராணுவ மற்றும் பொருளாதார நோக்கங்களின் அடிப்படையில்தான் எந்த ஒரு நாட்டுடனும் நட்பையோ அல்லது பகையையோ ஏற்படுத்திக்கொள்ளும் நடைமுறையை அது கடைப்பிடித்து வருகின்றது. ஆசியாப் பிராந்தியத்தில்; இந்தியாவை அமெரிக்கா நட்பாக்கிக்கொள்வதற்கு, ஆசியாவில் உள்ள இரண்டு நாடுகளே பிரதான காரணம்.

ஒன்று சீனா. மற்றயது பாகிஸ்தான்.

சீனா:

இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னய காலகட்டத்தில், சீனா பெற்றுவருகின்ற வளர்ச்சி அமெரிக்காவை வியப்படைய வைத்துள்ளது. இராணுவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சீனா நிச்சயம் தனக்கு ஒரு சவாலான நாடாக திகழும் என்று அமெரிக்கா நம்புகின்றது. அமெரிக்காவிடம் உள்ள அளவு இல்லாவிட்டாலும், அமெரிக்காவுடன் பொருதும் அளவிற்கு அணு ஆயுதங்களை தன்னிடம் வைத்திருக்கும் ஒரு வல்லரசு நாடு சீனா. முக்கியமாக அமெரிக்காவை வெறுக்கின்ற லத்தின் அமெரிக்க நாடுகளுடன் பொருளாதார மற்றும் அயுத தொடர்புகளை வைத்துள்ள ஒரு நாடு என்கின்ற வகையிலும், சீனாவை அமெரிக்கா தனது விரோதியாகப் பார்க்கின்றது. அமெரிக்காவின் தற்போதைய பிரதான எதிரிகளான ஈரான், வடகொரியா, லிபியா போன்ற நாடுகளுக்கு சீனா ஆயுத உதவிகளை பகிரங்கமாகவே செய்து வருகின்றது. குறிப்பாக இன்று சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் வடகொரியாவுடன் இராணுவ உடன்பாடுகளைச் செய்துகொண்டு, அந்நாட்டிற்கு ‘பாரிய அழிவுகளை ஏற்படுத்தககூடிய ஆயுதங்களை ’((Weapons of Mass Destruction -WMD) சீனா சப்ளை செய்து வருவதாக அமெரிக்கா சீனாமீது குற்றம் சுமத்துகின்றது. ஈரானின் அணுஆயுத உற்பத்திக்கு சீனாவே அனைத்து உதவிகளையும் செய்துவருவதாக அமெரிக்கா நம்புகின்றது. அமெரிக்காவையும், மேற்குலகையும் அச்சுறுத்திவரும் இஸ்லாமியத் தீவிரவாதத்திற்கு சீனாவே பெரும் உதவி புரிந்துவருவதாக அமெரிக்க இராணுவ ஆய்வாளர்கள் குற்றம்சுமத்தி வருகின்றார்கள்.

பொருளாதார ரீதியாகவும், சீனாவின் வளர்ச்சி அமெரிக்காவை கிலி கொள்ள வைத்திருக்கின்றது. அமெரிக்காவிற்கே கடன் கொடுக்கும் அளவிற்கு சீனாவின் பொருளாதாரம் வளரச்சி அடைந்திருக்கிறது. சர்வதேச பொலிஸ்காரனாக தான் வலம் வருவதற்கு, உலகில் தடையாக உள்ள நாடுகளுள், சீனாவும் ஒன்று என்பது அமெரிக்காவிற்குத் தெரியும். அமெரிக்கா தனது வாயினால் உச்சரிக்கவே வெறுக்கும் ‘கொம்யுனிச’ ஆட்சியை தனதாகக் கொண்ட ஒரு நாடு சீனா. அத்தோடு அமெரிக்காவைப்போன்று ஊர் விடயங்களிலெல்லாம் தனது மூக்கை நுழைத்து அடிவாங்கி, இழப்புகளைச் சந்திக்கும் வழக்கத்தை சீனா கொண்டிருப்பதேயில்லை. தான் உண்டு, தனது வேலை உண்டு என்று மட்டும் இருக்கும் ஒரு நாடு சீனா. ஆனால், நீண்ட கால பொருளாதார நோக்கோடு சீனா கவனமாகக் காய் நகர்த்திக்கொண்டிருக்கின்றது. தனக்கு ஒரு காலத்தில் வில்லனாக வரக்கூடிய நாடு என்றவகையில் அமெரிக்கா, சீனாவை தனது முக்கிய எதிரியாகவே நினைக்கின்றது.

பாகிஸ்தான்

அடுத்ததாக, அமெரிக்கா ஆசியப் பிராந்தியத்தில் சந்தேகத்துடன் நோக்கும் மற்றொரு நாடு: பாகிஸ்தான். பனிப்போர் காலத்தில் அமெரிக்காவின் உற்ற தோழனாக இருந்த நாடு பாகிஸ்தான். ஆனால் தற்பொழுது அமெரிக்காவிற்கு பாகிஸ்தான் மீது நம்பிக்கை இல்லை. காரணம் பாகிஸ்தான் ஒரு இஸ்லாமிய நாடு. அதுவும் உலகிலேயே அணுஆயுதங்களைத் தனதாகக்கொண்டுள்ள ஒரே இஸ்லாமிய நாடு பாகிஸ்தான்தான்.

பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் அமெரிக்கா தற்பொழுது ஆரம்பித்துள்ள ‘சிலுவைப் போர்’, பாகிஸ்தானில் பாரிய கண்டனத்திற்கு உள்ளாகி வருகின்றது. பாகிஸ்தானில் உள்ள மதத் தலைவர்கள் அமெரிக்காவிற்கு எதிராக குரலெழுப்ப ஆரம்பித்துள்ளார்கள். அண்மையில் அமெரிக்கா இராஜங்கத் திணைக்களமான ‘US Department of State’ வெளியிட்டுள்ள ‘Patterns of Global Terrorism’ என்ற அறிக்கையில், பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமிய மதத் தலைவர்கள், மத அமைப்புக்கள், ஆயுதக் குழுக்கள்– என்பன, அமெரிக்கப் பிரஜைகள் மீது வெறுப்புணர்வுடன் செயற்பட்டு வருவதாகவும், எதிர்காலத்தில் இவர்கள் அமெரிக்கப் பிரஜைகளுக்கு எதிரான தாக்குதல்களை மேற்கொள்ளக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்ததாக, ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகளுக்கு எதிராக போராடிவரும் தலிபான்களுக்கு பாகிஸ்தான் இராணுவம் தொடர்ந்தும் மறைமுக ஆதரவை வழங்கிவருவதாக அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது. அல்கைதா தீவிரவாதிகள் தொடர்ந்தும் பாகிஸ்தானில் தங்கியிருந்து தனக்கெதிராகச் செயற்பட்டு வருவதாக அமெரிக்கா திடமாக நம்புகின்றது. ஒரு காலத்தில் பாகிஸ்தானின் ஆட்சி இஸ்லாமிய கடும்போக்காளர் ஒருவரது கரங்களுக்கு செல்லும் பட்சத்தில், பாகிஸ்தானிடமுள்ள அணுவாயுதங்கள் அல்கைதா போன்ற இஸ்லாமிய தீவிரவாதிகள் கைகளுக்கோ, அல்லது ஈரான், சிரியா போன்ற இஸ்லாமிய நாடுகளின் கைகளுக்கோ சென்றுவிடச் சந்தர்ப்பம் உள்ளதாக அமெரிக்கா நினைக்கின்றது. இவை அனைத்தையும் விட முக்கியமாக, பாகிஸ்தானுக்கு அணு ஆயுதத் தொழில்நுட்பத்தை வழங்கிய நாடு சீனா. அமெரிக்காவிற்கு அடுத்ததாக, பாகிஸ்தானுக்கு அதிக அளவு ஆயுத உதவிகளை வழங்கிவரும் நாடும் சீனாதான். இஸ்லாமிய நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொள்ள ஆரம்பித்துள்ள ‘சிலுவைப் போர்’ காரணமாக ஒரு காலத்தில் அமெரிக்காவிடம் இருந்து பாகிஸ்தான் அன்னியப்பட்டு, சீனாவுடன் சேர்ந்து அமெரிக்காவிற்கு எதிராகக் கிளம்பச் சந்தர்ப்பம் உள்ளது என்று அமெரிக்கா அச்சம் கொள்கின்றது.

எனவே ஆசியாவில் அமெரிக்காவிற்கு ஒரு நல்ல தோழன் தேவைப்பட்டது. அமெரிக்கா தேர்ந்தெடுத்த அந்தத் தோழன் இந்தியா.

எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில், சீனாவினதும், பாகிஸ்தானினதும் பரம வைரியான இந்தியாவை அமெரிக்கா தனது நண்பனாக்கிக் கொண்டது.

அமெரிக்கா இந்தியாவை தனது தோழனாகச் சேர்த்துக்கொண்டதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன.

strategic triangle

இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்கின்ற ரீதியிலும், இந்தியா மேற்குலகைப் போலவே இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராகப் போராடிவருகின்ற ஒரு நாடு என்கின்ற காரணத்தினாலும், இந்தியாவின் நிர்வாக மொழி அனேகமாக ஆங்கிலமாகவே இருந்து வருவதனாலும், இந்தியாவின் உயர் மட்டங்களில் மலிந்து காணப்படும் உழலை தமக்குச் சாதகமாக்கிக்கொள்ளும் நோக்கத்துடனும், ஆசியாவில் இந்தியாவை தமது பிரதான நட்புசக்தியாக்கிக்கொள்ள அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் தீர்மானித்தது.

இவற்றை விட, பனிப் போரில் சோவியத் ஒன்றியத்தின் கரங்கள் பலவீனமடைய ஆரம்பித்ததைத் தொடர்ந்து, சீனா, இந்தியா, ரஷ்யாவை ஒன்றினைத்து ஒரு strategic triangle என்கின்ற கூட்டைச் செய்வதற்கும் முயற்சிகள் நடைபெற்றன. இந்தக் கூட்டு மாத்திரம் உருவாகியிருந்தால், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் மேற்குலகினால் எந்த நகர்வினையும் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுவிடும்.

எனவே இந்தியாவை தமது நண்பனாக்கி, வேறுபிரித்து இந்த முக்கோணக் கூட்டனைத் தடுக்கும் நோக்கத்துடனும், அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் காய்களை நகர்த்தியிருந்தது.

அத்தோடு, அமெரிக்காவின் வளர்ச்சியில் இந்தியர்களின் இருப்பு என்பது தவிர்க்கமுடியாத ஒன்றாக மாறி வருகின்றதையும் இந்த இடத்தில் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும்.

தற்பொழுது அமெரிக்காவிலுள்ள தகவல் தொழில்நுட்ப (Information Technology) வல்லுனர்களில் அல்லது தகவல் தொழில்நுட்ப தொழிலாளர்களில் 46 வீதமானவர்கள் இந்தியர்கள். அமெரிக்காவிலுள்ள வைத்தியர்களில் 35 வீதமானவர்களும் இந்தியர்களே. கடந்த சில வருடங்களாக அமெரிக்கா வருடமொன்றிற்கு சுமார் இரண்டு இலட்சத்து ஐம்பதினாயிரம் ‘கிறீன் கார்டுகளை’ (Green Cards) இந்தியர்களுக்காக வழங்கிவருகின்றது. இந்தியா என்பதைத் தவிர்த்து, அல்லது இந்தியாவை எதிர்த்து மேற்குலகின் நகர்வுகள் இல்லை என்கின்ற நிலை தற்பொழுது உருவாகியுள்ளது.

மேற்குலகின் இந்தியாவுடனான கூட்டு

ஆக மொத்தத்தில் மேற்குலகைப் பொறத்தவரையில் அவர்கள் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் இந்தியா என்கின்ற குதிரை மீதுதான் எதிர்வரும் காலங்களில் பயணம் மேற்கொள்ள இருக்கின்றார்கள்.

அதற்காக இந்தியாவுடன் இன்று மேற்குலகு ஏராளமான பொருளாதார, இராணுவ ஒப்பந்தங்களைச் செய்துகொண்டுள்ளது. அணுசக்தி ஒப்பந்தம் என்கின்ற பெயரில் சீனாவிற்கு நிகரான ஒரு நல்ல அணுஆயுத வல்லரசாக இந்தியாவை வளர்க்கும் காரியத்தையும் அமெரிக்கா நேரடியாகச் செய்து வருகின்றது.

அமெரிக்க இராணுவமும் இந்தியப் படைகளும் இணைந்து 2002ம் ஆண்டு மே மாதம் 5ம் திகதி முதல் தொடர் இராணுவப் பயிற்சிகள்;, இராணுவ ஒத்திகைகள் என்று மேற்கொண்டு வருகின்றார்கள்:‘Balance Iroquois’, Exercise Malabar என்ற பெயர்களின் ஆரம்பமான இந்த இராணுவ ஒத்திகைகள் இன்றும் கட்டம் கட்டமாகத் தொடர்ந்த வண்ணம்தான் இருக்கின்றன.

மேற்குலகின் கூட்டான நேட்டோ (NATO) அமைப்பில் இந்தியாவையும் இணைப்பது பற்றி மேற்குலக நாடுகள் மட்டத்தில் தற்பொழுது ஆராயப்பட்டுக்கொண்டிருக்கின்றது. ஐ.நா. சபையில் இந்தியாவிற்கு வீட்டோ அதிகாரித்தை எப்படிப் பெற்றுக்கொடுப்பது எனபது பற்றி பரிசீலிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

மேற்குலகம் ஆசியாவிற்கான தனது பிரதிநிதியாக தற்பொழுது வரிந்துகட்டியுள்ள இந்தியாவைத் தவிர்த்துவிட்டு, அல்லது எதிர்த்துக்கொண்டு மேற்குலகம் ஈழத்தமிழர் பிரச்சனையில் தலையிடும் என்று நாம் எதிர்பார்போமேயானால், எங்களை விட முட்டாள் சமூகம் வேறு யாருமே இருக்கமுடியாது.

இன்று இருக்கின்ற உலக அரசியலின் அடிப்படையில் இந்தியா என்கின்ற வாசல் வழி இல்லாமல் மேற்குலகம் ஈழப் பிரச்சனையில் தலையிடுவதற்கான சாத்தியம் மிக மிகக் குறைவு என்றுதான் கூறவேண்டும்.

ஆசியாவிற்கான மேற்குலகின் வாசல்:

மேற்குலகம் ஈழத் தமிழர் பிரச்சனையில் ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்டு எங்களுக்கு எதையாவது பெற்றுக் கொடுக்கவேண்டும் என்று நாம் நினைப்போமேயானால், ஆசியாவிற்கான மேற்குலகின் வாசலாக இன்று இருக்கின்ற இந்தியாவை நாம் சரியான முறையில் கையாள வேண்டும். எமக்குச் சாதகமாக மேற்குலகம் இலங்கையில் நுழைவதற்கு இந்தியா என்கின்ற வாசலை எம்மில் யாராவது திறந்து வைத்திருக்கவேண்டும். அந்தக் காரியத்தை ஈழத் தமிழ் இனத்தின் ஒரு பிரிவு செய்துதான் ஆகவேண்டும்.

ஈழத் தமிழினத்தின் ஒரு பகுதி மேற்குலகுடன் இராஜதந்திரம் பேச, எம்மில் மற்றொரு பகுதியினர் தனிநாடுவேண்டிப் போராட, மற்றொரு பகுதியினர் சிங்கள தேசத்தை பொருளாதார ரீதியாக முற்றுகையிட, ஒரு பகுதியினர் இந்தியா என்கின்ற வாசல் கதவை மேற்குலகிற்காகத் திறந்துவைக்கும் காரியத்தைச் செய்வதை ஒரு சிறந்த இராஜதந்திரமாகவே நான் கருதுகின்றேன்.

இந்தியாவிற்கு நாம் எமது இடக்கையைக் கொடுத்தபடிதான் மேற்குலகிற்கு நாம் எமது வலக்கையைக் கொடுக்க முடியும். இன்றைய சர்வதேச இராஜதந்திர சமன்பாடுகளில் ஈழத் தமிழரின் நிலை வேறு வழியில்லாமல் இதுவாகத்தான் இருக்கின்றது.

அதற்காக இந்தியாவிடம் நாம் முற்று முழுதாகச் சென்று சரணடையவேண்டும் என்று நான் கூறவில்லை.

தற்பொழுது எமது போராட்டத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியில் இருந்து நாங்கள் சுதாகரித்துக் கொள்ளும்வரை, மேற்குலம் எமக்கு ஒரு நீதியைப் பெற்றுத்தர விளையும் காலம் நிறைவு பெறும்வரை, இந்தியாவைப் பகைக்காத ஒரு நகர்வை நாம் மேற்கொள்வது ஒரு நல்ல இராஜதந்திரம் என்றே நான் நினைக்கின்றேன்.

Niraj David

nirajdavid@bluewin.ch

"இந்தியாவை மேற்குலகம் எப்படிப் பார்க்கின்றது?

இந்தக் கேள்விகளுக்கு நாம் பதிலைத் தேடுவதானால்இ சர்வதேச சமன்பாடுகளில் இந்தியாவின் வகிபாகம் பற்றிய ஒரு தெளிவான புரிதலை நாம்; பெற்றுக்கொண்டாகவேண்டி இருக்கின்றது.

’ஈழத் தமிழினம் இந்தியாவை கையாளவேண்டிய அவசியம் இல்லை. ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் இந்தியா ஒரு மிக மோசமான எதிரி. மேற்குலகை மாத்திரம் நாம் நட்பாக்கிக்கொண்டு எமது காரியத்தை நாம் வெற்றிகரமாகச் சாதித்துவிடமுடியும்’ என்று எம்மில் சிலர் கருத்துத் தெரிவித்து வருகின்றார்கள்.

அவர்கள் தெரிவிக்கும் கூற்றுக்களில்; நிறைய நியாயப்பாடுகள்; இருக்கத்தான் செய்கின்றன.

அதேவேளைஇ அந்த நியாயப்பாடுகளைக் கடந்து நடைமுறை உண்மைகள் என்கின்ற விடயமும் இருக்கின்றதை புரிந்துகொண்டு செயப்படவேண்டிய காலச்சூழலுக்குள் நாம் இன்று நின்று கொண்டிருக்கின்றோம்.

ஆசிய பசுபிக் பிரந்தியத்தைப் பொறுத்தவரையில் நாம் இன்று நம்பியிருக்கின்ற மேற்குலகம் இந்தியாவையே நம்பிக்கொண்டிருக்கின்றது என்கின்ற யதார்த்தத்தை மறந்துவிட்டுதான் நாம் நகர்வெடுக்க முனைகின்றோம்."

சரியான தருணத்தில் இணைக்கப்பட்ட இணைப்பு நன்றி நுணா.

இந்தியாவை மீறிச் செய்யமுடியாது என்று எவ்வாறு அவ்வளவு உறுதியாகச் சொல்கிறீர்கள்? :unsure:  ரஷ்யாவை மீறி கொசொவோ பிரியத்தானே செய்தது.. ரஷ்யாவிடம் வீட்டோ அதிகாரமே இருக்கு.. இந்தியனிடம் அதுவும் இல்லை.. :unsure:

எனக்குத்தெரிந்து இதிலுள்ள பொறிமுறை இதுதான். இந்தியாவுக்கு பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பதவி மிக முக்கியம்.. அதற்கு மனித உரிமை விவகாரங்களில் நேர்மையான செயற்பாட்டை மேற்குலகம் எதிர்பார்க்கும்.

இத்தகைய ஒரு சூழலில், இலங்கை விவகாரம் இந்தியாவுக்கு மிகுந்த தர்மசங்கடத்தைக் கொடுக்கிறது. இவ்வளவு நாளும் "நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்" என்று கூறி மேற்குலகை ஒதுக்கினார்கள். ஆனால் இப்போது நிலைமைகள் கைமீறிச் சென்றுவிட்டன. மேற்குலக நாடுகளே விரும்பினாலும் இலங்கை விவகாரத்தைப் புறந்தள்ள முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுவிட்டது. :huh:

இவ்வகையில் பார்த்தால், தமிழரின் சாணக்கியமே இப்போது நிலைபெற்றுள்ளதாக எடுத்துக்கொள்ள வேண்டும்..! :rolleyes:

கொசொவோவிற்கு இருந்த நண்பர்கள் ஈழத்தமிழர்களுக்கு இருக்கிறார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா என்றால் என்ன அது வடமாநில மக்களின் கூட்டு.தெற்குக்கு சம்பந்தம் இல்லை.

வரலாறே திராவிடருக்கு எதிரான போர் தான் நடந்தது இப்பவும் அதுதான் நடக்கிறது.

இராமன் கதை, விஜயன் இலங்கை வருகை எல்லாம் இப்படிதான். ஆக மொத்த தமிழன எதிர்ப்பின் ஒரு அடையாளம் தான் இந்தியா . வேறு ஒன்றும் இல்லை.

இந்தியா குழம்பும் வரை நமக்கு விடிவு இல்லை. குறைந்த்தது காஸ்மீராவது போர் வலுக்கனும்.பிரியனும். அப்போதான் எல்லாம் சரியாய் வரும்

இதுதான் 'நிதர்சனம்'

  • கருத்துக்கள உறவுகள்

கொசொவோவிற்கு இருந்த நண்பர்கள் ஈழத்தமிழர்களுக்கு இருக்கிறார்களா?

மேலோட்டமாகப் பார்த்தால் சிறு நாடுகளுக்கும் நண்பர்கள் இருப்பதுபோல்தான் தெரியும். ஆனால் கொசொவோ, தென்சூடான், கிழக்கு திமோர் போன்ற இன்றைய நாடுகளுக்கு பெரும் பின்புலங்கள் இருந்ததாக இல்லை. இருந்திருந்தால் அவ்வளவு இழப்புகளின் பின் அவர்கள் சுதந்திரத்தை எட்டியிருக்க வேண்டியதில்லை. :unsure:

1987 இற்கு முன்னர் ஈழத்தமிழன் இந்தியாவுக்கு இனியில்லை என்ற நண்பன். தீர்வு கிடைத்ததா? :(

பலம் மிக்க நாடுகளின் பகைமைப்போட்டிகள் வெளிப்படையாக நேரெதிரே தோன்றும்போது சில வாய்ப்புக்கள் இளைத்த சிறுபான்மை இனங்களுக்கு வந்து சேர்கின்றன. அவற்றை எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதிலேயே வெற்றி, தோல்விகள் தங்கியுள்ளன. :unsure:

ந்ண்பர்கள் மட்டுமே போதுமாகவிருந்தால் உலகெங்கும் பரவியிருந்த யூத இனம் என்ன்றோ தனக்கென இஸ்ரேலை உருவாக்கியிருக்கும். ஆனால் அவர்களுக்கு ஒரு ஹிட்லரும், உலகப்போரும் அதன்மூலம் அழிவுகளும் தேவைப்பட்டன, இஸ்ரேலை உருவாக்குவதற்கு. :rolleyes:

கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலமாக பிரித்தானியரை எதிர்த்த இந்தியாவுக்கும் ஒரு உலகப்போர் தேவைப்பட்டது, சுதந்திரத்தை அடைவதற்கு.. :rolleyes:

அதுபோல, ஒரு முள்ளிவாய்க்கால் அழிவின்பின் எமக்குக் கிடைத்திருப்பது ஒரு சந்தர்ப்பம். அதை இந்தியாவின் காலில் கொண்டுபோய் விழுத்தினால் எமக்கு ஏதாவது கிடைக்குமா அல்லது இந்தியாவை மீறி சர்வதேச அளவில் வைத்துக்கொண்டால் ஏதாவது கிடைக்குமா என்பதே நாம் சிந்திக்க வேண்டியது. :rolleyes:

மேலோட்டமாகப் பார்த்தால் சிறு நாடுகளுக்கும் நண்பர்கள் இருப்பதுபோல்தான் தெரியும். ஆனால் கொசொவோ, தென்சூடான், கிழக்கு திமோர் போன்ற இன்றைய நாடுகளுக்கு பெரும் பின்புலங்கள் இருந்ததாக இல்லை. இருந்திருந்தால் அவ்வளவு இழப்புகளின் பின் அவர்கள் சுதந்திரத்தை எட்டியிருக்க வேண்டியதில்லை. :unsure:

1987 இற்கு முன்னர் ஈழத்தமிழன் இந்தியாவுக்கு இனியில்லை என்ற நண்பன். தீர்வு கிடைத்ததா? :(

பலம் மிக்க நாடுகளின் பகைமைப்போட்டிகள் வெளிப்படையாக நேரெதிரே தோன்றும்போது சில வாய்ப்புக்கள் இளைத்த சிறுபான்மை இனங்களுக்கு வந்து சேர்கின்றன. அவற்றை எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதிலேயே வெற்றி, தோல்விகள் தங்கியுள்ளன. :unsure:

ந்ண்பர்கள் மட்டுமே போதுமாகவிருந்தால் உலகெங்கும் பரவியிருந்த யூத இனம் என்ன்றோ தனக்கென இஸ்ரேலை உருவாக்கியிருக்கும். ஆனால் அவர்களுக்கு ஒரு ஹிட்லரும், உலகப்போரும் அதன்மூலம் அழிவுகளும் தேவைப்பட்டன, இஸ்ரேலை உருவாக்குவதற்கு. :rolleyes:

கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலமாக பிரித்தானியரை எதிர்த்த இந்தியாவுக்கும் ஒரு உலகப்போர் தேவைப்பட்டது, சுதந்திரத்தை அடைவதற்கு.. :rolleyes:

அதுபோல, ஒரு முள்ளிவாய்க்கால் அழிவின்பின் எமக்குக் கிடைத்திருப்பது ஒரு சந்தர்ப்பம். அதை இந்தியாவின் காலில் கொண்டுபோய் விழுத்தினால் எமக்கு ஏதாவது கிடைக்குமா அல்லது இந்தியாவை மீறி சர்வதேச அளவில் வைத்துக்கொண்டால் ஏதாவது கிடைக்குமா என்பதே நாம் சிந்திக்க வேண்டியது. :rolleyes:

இது நியாயமான கருத்து. என்னுடைய நிலைப்பாடு என்னவென்றால் இந்திய எதிர்ப்பு வாதம் எந்தப்பயனையும் தராது என்பதுதான். இந்த எதிர்ப்பு வாதத்தை முன்னிறுத்திச் செயற்பட்டால் எந்தவிதப் பயனும் கிடைக்கப்போவதில்லை.மாறாக நண்பர்களாக ஏற்றுக் கொள்வதற்கும் ஒரு பிராந்திய வல்லரசு என்ற அர்த்தத்திற்கும் இடங்கொடுக்குமாப்போல் தமிழரின் நகர்வுகள் இருக்க வேண்டும்.தென்சூடான் கொசோவோ கிழக்குத் திமோர் போன்றவற்றிற்கு இறுதிக்காலங்களில் இருந்தது போன்ற ஆதரவு அதன் சுதந்திரத்திற்கு வழிவகுத்தது. அதேநேரம் அவைகள் பிரிக்கப்படுவதற்கு இரு பகுதி ஒத்துழைப்புகளும் இருந்தது. ஆனால் நாம் அப்படியா? எந்த விடயத்தையும் இந்தியாவின் காலடியில் வீழ்த்த வேண்டும் என்று சொல்லவில்லை. மேற்கத்தய நாடுகளும் இந்திய பிராந்திய மேலாதிக்கத்தை மீறப் போவதில்லை. இதனால் என்ன நடக்கும்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.