Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவத்தை வெளியேற்றுங்கள்: யாழ் மக்கள் கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் பகுதிகளிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுங்கள். இவர்களால் எங்களுக்கு தொடர் பிரச்சினையாகவுள்ளது. இவர்களை வெளியேற்றுவதற்கு துரிதமான நடவடிக்கை எடுங்கள் என பாதிக்கப்பட்ட மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் மன்றாட்டமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மர்ம மனிதர்களின் அச்சுறுத்தல்கள் மற்றும் இராணுவத்தினரின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் நேரில் சந்தித்தபோதே அவர்கள் இதனை தெரிவித்தனர்.

மேலும் அம்மக்கள் பாராளுமன்ற உறுப்பினரிடம் தெரிவிக்கையில் பகல் இரவு நேரங்களில் இராணுவத்தினர் எமது பகுதிக்குள் வருவதும் அவர்கள் வந்து சிறிது நேரத்தில் மர்ம மனிதர்கள் வருவதும் நாம் மர்ம மனிதர்களைப் பிடிப்பதற்காகச் செல்லும்போது இராணுவத்தினர் அங்கு வந்து தாக்குதல் நடத்தி விட்டு வீதிகளில் நிற்க வேண்டாமெனவும் மர்ம மனிதர்களைக் கண்டால் எம்மிடம் ஒப்படைக்குமாறும் தெரிவித்து அச்சுறுத்தி விட்டும் செல்வதுடன் அடிக்கடி எமது பகுதிகளுக்குள் வந்து செல்கின்றார்கள்.

இராணுவத்தினர் தமக்குப் பாதுகாப்புக்கு ஆயுதங்களை வைத்துக் கொண்டு எம்மை அவற்றைக் காட்டி அச்சுறுத்தி வருகின்றனர். நாம் யுத்தம், இயற்கை அனர்த்தம் போன்றவற்றால் தப்பிப் பிழைத்து வாழ்ந்து வருகின்ற இவ்வேளையில் தற்போது உருவெடுத்திருக்கும் மர்ம மனிதரின் நடமாட்டத்தால் எமது வீடுகளில் நிம்மதியாக வாழமுடியாதுள்ளது.

எமக்கு நிம்மதியாக வாழ்வதற்கு ஏற்ற ஒரு சூழலை உருவாக்கித் தரவேண்டும். எமக்கு இராணுவத்தினர் தேவையில்லை.

இவர்களாலேயே இத்தகைய பிரச்சினைகள் உருவாகிவருகிறது. மர்ம மனிதன் பெண்களை இலக்கு வைத்து தாக்குதல்களை மேற்கொள்கின்றான். இவர்களை துரத்திச் செல்லும் ஆண்களை இராணுவமும் பொலிஸாரும் இணைந்து இலக்கு வைத்துத் தாக்கி வருகிறார்கள். அப்படியானால் பெண்களுக்கு பாதுகாப்பு தருவது யார்?. இத்தகைய தாக்குதல் சம்பவங்களை நாம் எவ்வாறு யாரிடம் முறையிடுவது? மக்கள் பிரதிநிதிகளாகிய உங்களிடமே நாம் முறையிட முடியும். எனவே, எமக்கு நிம்மதியாக வாழுவதற்கு ஏற்ற சூழலை உருவாக்கித் தரவேண்டுமென வேண்டுகோள் விடுக்கின்றோம்.

இதேவேளை, இராணுவம் மற்றும் பொலிஸாரின் தாக்குதலினால் காயமடைந்தவர்களை யாழ். போதனா வைத்தியசாலைக்குச் சென்று பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் பார்வையிட்டபோது தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டவர்கள் தெரிவிக்கையில் இராணுவத்தினர் வீதியில் வைத்துத் தாக்கிவிட்டு பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் வைத்து எனது மர்ம ஸ்தானத்தில் மிளகாய்த் தூளைக் கொட்டியும் பெற்றோலை ஊற்றியும் அடித்து உதைத்தனர். வாயாலும் மூக்காலும் இரத்தம் வடிந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டேன் என அழுத நிலையில் ஒருவர் தெரிவித்தார்.

மற்றொரு நபர் தனக்கு நடந்த நிலைமை தொடர்பாக தெரிவிக்கையில் நான் வீட்டிற்குள் உறக்கத்திலிருந்தபோது தட்டி எழுப்பிய இராணுவம் முகத்தை மூடி நிலத்தில் படுக்கவைத்து என்னைத் தாக்கி நான் இறந்து விட்டதாகக் கருதி தூக்கி எறிந்து விட்டுச் சென்றது. தற்போது நான் எழுந்து நிற்கவோ நடக்கவோ முடியாத நிலையில் இங்கு கிடக்கிறேன் என்றார்.

http://www.tamilthai.com/?p=25812

Edited by தமிழ் அரசு

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் போராட்டம் மூலம் இராணுவத்தை வெளியேற்ற மிகச்சரியான தருணம். கூட்டமைப்பு இதனை தலைமை தாங்கி நடாத்த வேண்டும்.ஜனநாயகம் பேசும் உலக நாடுகளுக்கு தொடர்ந்து இராணுவத்தின் அட்டூளியங்களை அறிவித்த வண்ணம் இருக்க வேண்டும். சிறார்களை புலிகள் இணைத்து விட்டார்கள் என்று வாய் கிழிய கத்திய விண்ணர்கள் வாய் மூடி மௌனியாக இருப்பதன் மர்மம் என்ன??

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அரசு நன்றி இணைப்பிற்கு, நுணா சொன்ன மாதிரி இது ஒரு நல்ல சந்தர்ப்பம் கூட்டமைப்புக்கு, சாரியாக மக்கள் எழுச்சியை இப்ப பயன் படுத்தலாம்

சர்வதேச நாடுகளின் அழுத்தங்கள் மூலமே சிங்களத்தை அதன் இராணுவத்தை அகற்றலாம். அதற்கு கூட்டமைப்பு, நாம் என எல்லோரும் எம்மாலான நடவடிக்கைகளை ( பரப்புரை, தம் தம் நாடு அமைப்புக்களுடன் வேலை செய்தல், தனிப்பட்ட இல்லை குழுக்களாக அரசியல் சந்திப்புக்களை மேற்கொள்ளுதல்..) மேற்கொள்ளவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு மர்மமனிதன் விடயத்தில் அறிக்கை விட்டபடியேதான் உள்ளது சம்பந்தர் என்ன செய்கின்றாரோ தெரியல கடைசியா சம்பந்தர் வீட்ட மர்மமனிதன் வந்தாப்பிறகுதான் ஏதும் செய்வார் போல..............

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.