Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹாய் மதன்!

Featured Replies

ஆனந்தவிகடனில் வர்ற ஹாய் மதன் பகுதி எனக்கு ரொம்ப பிடிக்கும்!

வாசகர் கேள்விகளுக்கு அவர் தரும் பதில்........ சும்மா அதிர வைக்கும்!

தொடர்ந்து இணைக்கபோறேனாம் இங்கே!

கு.தேசிங்கு .சேலம்.

உங்களை பொறுத்தமட்டில் யார் ஆச்சரியமான மனிதர்?

ஒவ்வொரு மனிதரும் ஆச்சரியமானவர்தான்! உங்களையே எடுத்துக்கொள்ளுங்கள் - ஒரு பெற்றோர்- அதாவது இரண்டுபேர்! அந்த இரண்டு பேருக்கும் அம்மா அப்பா உண்டு, அப்பிடியே போய்க்கொண்டு இருங்கள் .. ஒரு தலைமுறை 25 வருடங்கள் என்று வைத்துக்கொண்டால்கூட , 500 ஆண்டுகளுக்கு முன்புவரை உங்களை உருவாக்க இயங்கியவர்கள் மொத்தம் எத்தனைபேர் தெரியுமா? - 1 லட்சத்து 48 ஆயிரத்து 576 பேர் எங்கிறது ஒரு புள்ளி விபரம்!

இதவரிசைல ஏதவது ஒரு ஜோடி மிஸ் ஆகி இருந்தாகூட நாங்க உங்களை மிஸ் பண்ணி இருப்போம்!

சீனாவில்ஊழல் செய்தவருக்கு மரணதண்டைன என்று ஒரு செய்தி படித்தேன். அப்படி ஒரு நிலைய இந்தியாவில்

கொண்டுவர முடியுமா?

நம் நாட்டில் ஊழலைச் செய்பவர்கள் யார்? அப்படி ஒரு சட்டத்தை கொண்டுவரக்கூடிய அதிகாரம் படைத்தவர்கள்தான்!!

ஆகவே......

கொண்டுவர முடியாது! அவர்கைளத் தற்கொலை செய்துகொள்ளச் சொல்கிறீர்களா?!

ஜி.மகாலிங்கம், காவல்காரப்பாளையம்.

உலகில் மனிதர்கள் மட்டுமே இருந்தால் போதாதா? எதற்காக விலங்குகள், பறைவகள் மற்ற உயிrனங்கைள எல்லாம்

இறைவன் படைத்தான்?

தப்புதான். எல்லாவற்றையும் படைத்த பிறகு, மனித இனத்தைப் படைத்ததை சொல்கிறேன். பூமியின் வரலாற்றில், மனித

இனத்தின் பங்கு 0.0001 மட்டுமே!. பெரும்பான்மையான மற்ற உயிரினங்கள், பல கோடி வருஷங்களாக இங்கேஇருந்து

வருகின்றன. 'நேற்றைக்கு வந்த’ மனிதன் மட்டுமே 90 சதவிகித (மற்ற) உயிரினங்களை இதுவரை அழித்துவிட்டான்.!

தொடர்வேனாம்..............

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு அறிவிலி. மதனின்... கேள்வி பதிலும், கேலிச்சித்திரமும் எனக்கும் பிடிக்கும்.

தொடர்ந்து இணையுங்கள்.....

madhan.jpg

நமது அரசியல் தலைவர்கள் ஏன் இன்னும் சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கவில்லை?

வெறும் 30 கோடி ரூபாய்கூட அவர்களிடம் இல்லையா, என்ன?

ஒவ்வொரு தலைவரும் ஒரு டஜன் ஹெலிகாப்டர்களை வாங்க முடியும். ஆனால், தெருவில் இருபுறமும் உள்ள சாமான்ய மக்களைப் பார்த்து வணங்க முடியாது, கை அசைக்க முடியாது, ஹெலிகாப்டரை நிறுத்தி குழந்தை களுக்குப் பெயர் சூட்ட முடியாது. பாதி வழியில் டீக்கடையில் நிறுத்தி ஏழை களோடு டீ அருந்த முடியாது.இதை எல்லாம் செய்ய வேண்டும் என்பதற்காக நம் தலைவர்கள் மேற்கொண்டு இருக்கும் தியாகம்தான் ஹெலிகாப்டர் வாங்காமல் இருப்பது என்பது கூட உங்களுக்குப் புரியவில் லையா?

  • தொடங்கியவர்

சிறி நீங்க இணைச்ச பதிவும் சூப்பரோ சூப்பர்!

  • கருத்துக்கள உறவுகள்

அறிவிலி நல்ல முயற்ச்சி, நானும் அவரின் சிறகு, கன காலம் வாசிக்க கொடுத்து வைக்கலை, சிம்பிளா நல்ல அர்த்தத்துடன் ரசிக்க கூடிய மாதிரி இருக்கும் அவரின் பதில்கள், வாழ்துக்கள் தொடர்ந்து இணையுங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆள் ஒரு மார்க்கமானவர்...

தமிழ், தமிழ் தேசியம் மற்றும் சமதர்மம் போன்றவற்றை தூற்றுவதைக் கடமையாகச் செய்பவர்.

சாதாரணமாக, எல்லோருக்கும் கிடைக்கிற வாய்ப்புகூட எனக்குக் கிடைப்பது இல்லை. நான் துரதிருஷ்டசாலிதானே?

வாய்ப்பு என்கிற ஒரு கதவு மூடிக்கொள்ளும்போது, வேறு பல கதவுகள் திறக்கின்றன என்பது நமக்குத் தெரிந்த பழைய பொன்மொழிதான்! பலர் என்ன செய்கிறார்கள் என்றால், மூடிய கதவுக்கு அருகே, அதையே பார்த்துக்கொண்டு அழுதுகொண்டு இருக்கிறார்கள். கொஞ்சம் திரும்பிப் பார்த்தால்தானே மற்ற கதவுகள் திறப்பது தெரியும்!

கணவன் – மனைவி இடையே நடைபெறும் பிரச்னையில் நியாயத்தை விட்டுவிட்டு,

பெண்கள் தங்கள் தாய் வீட்டுக்கே பரிந்து பேசுகிறார்களே? நியாயம் என்னாவது

பெற்று வளர்த்தவர்களையும் அத்தனை பேரையும் விட்டுவிட்டு, யாரோ ஓர் அந்நிய

னுடன் வந்து சேர்ந்துகொண்டவள்தான் மனைவி. ஆழ் மனதில் அந்தக் குற்ற உணர்வு

இருக்குமா, இருக்காதா? மற்றபடி ஆஃப்டர் ஆல் கணவன் – மனைவிபிரச்னை தானே?

ஏதோ காஷ்மீர் பிரச்னை மாதிரி டென்ஷன் ஆக வேண்டியது இல்லை!

சிலருக்கு மட்டும்… எதைச் சொன்னாலும் எப்படி பதிலுக்கு ‘ஜோக்’ அடிக்க வருகிறது? இந்தத் திறமை எப்படி?

நீங்கள் ஒன்றைச் சொன்னவுடன் அதைப் பல கோணங்களில் – மின்னல் வேகத்தில் – அலசி, நகைச்சுவையுடன் பதில் சொல்வது ஒரு தனித் திறமை. அதற்காக, அவர்கள் மற்ற எல்லா விஷயங்களிலும் கெட்டிக்காரர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. உடனடியாக வித்தியாசமாகச் சிந்தித்துச் செயல்படும் இந்தத் திறமைக்கு Flipnosis என்று பெயர் (இந்தத் தலைப்பில் ஒரு புத்தகம் உண்டு!). இதற்கு சற்றுக் கோணலாக சிந்திக்கும் Lateral thinking தேவை. இது இருந்தால் எப்பேர்ப்பட்ட இறுக்கமான நிலைமையையும் சரி பண்ணிவிடலாம். ஓர் உதாரணம்: விமானம் டேக் ஆஃப் ஆகப்போகிறது. உள்ளே புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரர் முகமது அலி (சற்று சிடுசிடுஎன்று) அமர்ந்திருக்கிறார். விமானப் பணிப்பெண் அவர் அருகில் வந்து, ‘சீட் பெல்ட்டைப் போட்டுக்கொள்ளுங்கள் ப்ளீஸ்!’ என்றாள். உடனே முகமது அலி, ‘எனக்கு எதற்கு சீட் பெல்ட்? நான் ஒரு சூப்பர் மேன்!’ என்கிறார் வெடுக்கென்று. பணிப் பெண் புன்னகையுடன், ‘சார்… சூப்பர்மேனுக்கு விமானமே தேவைப் பட்டது இல்லை…’ என்று சொல்ல… முகமது அலிக்குச் சிரிப்பு வந்துவிட்டது. இதுதான் ஃப்ளிப்நாஸிஸ்!

போராளிகளுக்கு Sense of Humour இருக்கவே இருக்காது’ என்கிறான் நண்பன். நிஜமா சார்?

சென்ஸ் ஆஃப் ஹ்யூமர் இயற்கையானது. போராளிகள் ரத்தமயமான வாழ்க்கையில் நடுவே இயங்குவதால், சில சமயம் அந்த உணர்வு அமுங்கியிருக்கும். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு ஜோக்ஸ் ரொம்பப் பிடிக்கும். ஒரு முறை விகடனுக்காக நான் அவரைச் சந்தித்தபோது, ‘உங்கள் கார்ட்டூன்களைப் பார்த்து அப்படியே வரைவேன்… என் பொழுதுபோக்கு அது!’ என்றார். வரைந்து காட்டுங்கள் என்றேன். வரைந்தார்… சற்று கூச்சத்துடன்!

தெனாலிராமன், பீர்பால், முல்லா நஸ்ருதீன் – நகைச்சுவை உணர்வில் நம்பர் ஒன் யார்?

முல்லா! தெனாலியும் பீர்பாலும் பெரும் அரசர்களின் கீழ் பணிபுரிந்தார்கள். முல்லா ஒரு நாடோடி. புகழ்பெற்ற சூஃபி தத்துவ ஞானி. இன்றைக்கும் துருக்கியில் ஆண்டு தோறும் நிகழும் ‘முல்லா விழா’வில் ஜோக் போட்டிகள் நடைபெறுகின்றன. துருக்கியைத் தவிர… க்ரீஸ், ரஷ்யா, சில அரபு, மத்திய ஆசிய நாடுகள் ‘எங்கள் நாட்டில்தான் முல்லா பிறந்தார்’ என்று சொந்தம் கொண்டாடு கின்றன.முல்லா பற்றிய எனக்குப் பிடித்த ஜோக் -

‘ஒரு முறை அரண்மனையில் மன்னர் வைத்த விருந்துக்கு, முல்லா கிழிந்த, அழுக்கான ஆடை அணிந்து செல்ல, வாசலில் சேவகர்கள் அவரை உள்ளே விட மறுத்தார்கள். சற்று தொலைவில் நின்று இருந்த அமைச்சரும் தளபதியும் ‘அந்த ஆளை வெளியே அனுப்பு!’ என்று குரல் கொடுத்தனர். முல்லா வீட்டுக்குத் திரும்பி, பிரமாதமான ஜரிகை உடை ஒன்றைக் கடன் வாங்கி அணிந்துகொண்டு, மறுபடியும் அரண்மனைக்குப் போனார். எல்லோரும் வழிவிட்டனர். மன்னரும் அவரை விருந்தில் அமரச் சொன்னார். பதார்த்தங்கள் பரிமாறப் பட்டன. முல்லா ஒவ்வொன்றையும் எடுத்து ஜரிகை உடை மீது தேய்த்துக்கொள்ள ஆரம்பித்தார். மன்னர் திகைப்புடன், ‘என்ன இது… லூஸா நீங்க?’ என்று கேட்டதற்கு முல்லா, ‘அரசே! விருந்தைச் சாப்பிட எனக்குத் தகுதி கிடையாது. அரண்மனைக்குள் அழைத்துக்கொண்டு வந்ததே இந்த ஜரிகை உடைதான். நியாயமாக அதுதான் விருந்து சாப்பிட வேண்டும்!’ என்றார்!

இறைபக்தி இல்லாத இசை மேதைகள் இருக்கின்றார்களா?

இறைவனைப் பார்க்க முடியுமா? ஆனால் கேட்க முடியும்… அதுதான் இசை. எல்லா

நாகரிகங்களிலும் நாடுகளிலும், அத்தனைவிதமான இசை வடிவங்களும் இறைவனுடன்

இரண்டறக் கலந்தே இருக்கின்றன. நம் நாட்டைப்பற்றிச் சொல்லத் தேவையில்லை.

மேலை நாட்டுப் புராணப்படியும் ஜீயஸ் (தேவேந்திரன்) பெற்றெடுத்த ஒரு

தேவதைதான் (மூசெ) மனிதனுக்கு இசை தந்தது. (‘மூசெ’ லிருந்துதான் மூசிச்)

சுருக்கமாக, இசைக் கலைஞர்களுக்கு இசை என்பதே இறைவன்தான். குறிப்பாக எந்த

மதத்தின் கடவுள், அவர் பெயர் என்ன என்றெல்லாம் அபத்தமாக நாம் கேட்க

வேண்டாம்!

  • தொடங்கியவர்

தேவேசனாபதி, வேலூர்.

'இலங்கைத் தமிழன்’ என்று கூறாமல் 'இலங்கை இந்தியன்’ என்று கூறியிருந்தால், ஒருவேளை

இலங்கையில் ஏதாவது விடிவு ஏற்பட்டு இருக்குமோ?

இலங்கைத் தமிழனுக்கு இந்தியக் குடியுரிமை கிடையாது. இந்தியாவும் இலங்கையும் வெவ்வேறு நாடுகள்.

'இலங்கை இந்தியன்’ என்று எப்படிச் சொல்லிக்ெகாள்ள முடியும்? ஆகேவதான், இனத்தைக் குறிப்பிடுகிறோம்.

அதாவது, இலங்கைத் தமிழன் இந்தியத் தமிழனின் தம்பி. நம்மால் சொரணை இல்லாமல் கைவிடப்பட்ட தம்பி!

வி.கிருஷ்ணசாமி, தஞ்சாவூர்.

அனுபவம் என்றால் என்ன? அத அளவு எடுக்க முடியுமா?

முடியாது! மூளையில் உள்ள கோடானு கோடி 'செல்’கள் உள்வாங்கித் தக்கைவத்துக்கொண்டு, பிற்பாடு

வெளிப்படுத்தும் Data-தான் அனுபவம்! மற்றபடி (பெருமூச்சோடு சொல்ல வேண்டும்என்றால்) அனுபவம் என்பது

நீங்கள் முடி எல்லாம் இழந்த பிறகு, வாழ்க்கைஉங்களுக்குத் தரும் சீப்பு!

அ.உமர், கைடயநல்லூர்.

சில்லைறக்கு 'Change’ என்ற ஆங்கில வார்த்தை எப்படிப் பொருந்துகிறது?

லத்தீனில் Cambire என்றால், 'பண்ட மாற்றம்’ என்று அர்த்தம். ஒரு காலத்தில், இத்தாலியில் வங்கிகளுக்கு

வெளியே CAMBIO என்ற பெயர்ப் பலைகயுடன் சில்லைற மாற்றும் கடைகள் இருந்தன. அது பைழய பிரெஞ்சு

மொழியில் changier என்று மாறியது. பிறகு, ஆங்கிலத்தில் Change! எல்லா வார்த்தைகளுமே ஆச்சர்யமாக மாற்றம்

(Change!) ஆனைவதான்!

  • கருத்துக்கள உறவுகள்

இத அறிவிலி அண்ணா இங்க இனைக்க சுண்டல் ஒசி ல வந்து வாசிக்குமாம்.................

  • கருத்துக்கள உறவுகள்

இத அறிவிலி அண்ணா இங்க இனைக்க சுண்டல் ஒசி ல வந்து வாசிக்குமாம்.................

SUNDHAL ஓசில இருந்தா உப்பிடிதான் திங் பண்ணுவியளோ, ஓசியா எல்லாத்தையும் play பண்ணமுடியா, நான் வீணை சொன்னான்,

  • தொடங்கியவர்

வாசுதேவன், மும்பை

ராகுல் காந்திக்கு 41 வயது ஆகிவிட்டதே . எப்போது பிரதம மந்திரி

ஆவார்?

ராகுல் காந்தி பிரம்மாஸ்திரம்! தற்போதைய பிரதமருக்கு முழுக்க

கெட்ட பெயர் ஏற்பட்ட பிறகு,........

தா.கதிரவன், திருவெண்காடு.

கடவுள் முன் அனைவரும் சமம் எனில், சிறப்புத் தரிசனக் கட்டணம் எதற்கு?

இந்தக் கடவுள் மனிதர்களால் கன்ட்ரோல் பண்ணப்படுவதால்!

வி.எஸ்.தேவேசனாபதி, வேலூர்.

மரணம் என்ற ஒன்று இல்லாது இருக்குமானால் என்ன ஆகும்?

ஒரு குறிப்பிட்ட வயது வந்தவுடன் சம்பந்தப் பட்டவருக்கு ஊசி போட்டுக் கொன்றுவிடுவது சட்ட

பூர்வமாக்கப்படும்!

கிட்டு, தூத்துக்குடி.

மர்ம நாவல் தோன்றியதன் மர்மம் என்ன?

சீனர்களின் கண்டுபிடிப்புகளுக்கு அளேவ இல்லை! அங்கே ஸுங் பரம்பரை ஆட்சி செய்த போதே

(கி.பி.960 துவக்கம்) கிரைம் நாவல் வந்துவிட்டது. ஆனால், டிடெக்டிவ் ஸ்டோரி கி.பி. 1700-ல்தான்

வந்தது. அதுவும் சீனாவில்தான்! நாவலின் பெயர் வூ ஸே டியன் ஸ¨ தா சீ ஆரன். ஒரு நீதிபதி தனிப்பட்ட

முறையில், இரவுகளில் அலைந்து, மூன்று குற்றவாளிகைளக் கண்டு பிடிக்கிறார்! அந்த நாவல்

ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது 'The Celebrated Cases of Judge Dee’ என்று! நான் சின்னப்

பையனாக இருந்தேபாது, 'மேதாவி’ எழுதிய மர்மக் கதைகளை படித்து பிரமித்தது உண்டு!

எந்த நாடு முதலில் காகித நாணயம் (Currency) வெளியிட்டது. இதற்கு Currency என்று எப்படிப் பெயர் வந்தது?

கி.பி. 650-ல் சீனாவில், மன்னர் யூங்ஹ்யூதான் முதன்முதலில் பேப்பர் கரன்ஸியை வெளியிட்டார். அதற்குப் பல நூற்றாண்டு

களுக்கு முன்பே 'செக்’ வந்துவிட்டது. அதாவது, பிராமிஸரி நோட்!

கி.மு. 640-ல் விடியா என்கிற (இன்றைய துருக்கி) நாட்டில்தான் முதல் வட்டமான நாணயத்தை அரசு வெ ளியிட்டது.

கிட்டு, தூத்துக்குடி.

மர்ம நாவல் தோன்றியதன் மர்மம் என்ன?

சீனர்களின் கண்டுபிடிப்புகளுக்கு அளேவ இல்லை! அங்கே ஸுங் பரம்பரை ஆட்சி செய்த போதே

(கி.பி.960 துவக்கம்) கிரைம் நாவல் வந்துவிட்டது. ஆனால், டிடெக்டிவ் ஸ்டோரி கி.பி. 1700-ல்தான்

வந்தது. அதுவும் சீனாவில்தான்! நாவலின் பெயர் வூ ஸே டியன் ஸ¨ தா சீ ஆரன். ஒரு நீதிபதி தனிப்பட்ட

முறையில், இரவுகளில் அலைந்து, மூன்று குற்றவாளிகைளக் கண்டு பிடிக்கிறார்! அந்த நாவல்

ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது 'The Celebrated Cases of Judge Dee’ என்று! நான் சின்னப்

பையனாக இருந்தேபாது, 'மேதாவி’ எழுதிய மர்மக் கதைகளை படித்து பிரமித்தது உண்டு!

எந்த நாடு முதலில் காகித நாணயம் (Currency) வெளியிட்டது. இதற்கு Currency என்று எப்படிப் பெயர் வந்தது?

கி.பி. 650-ல் சீனாவில், மன்னர் யூங்ஹ்யூதான் முதன்முதலில் பேப்பர் கரன்ஸியை வெளியிட்டார். அதற்குப் பல நூற்றாண்டு

களுக்கு முன்பே 'செக்’ வந்துவிட்டது. அதாவது, பிராமிஸரி நோட்!

கி.மு. 640-ல் விடியா என்கிற (இன்றைய துருக்கி) நாட்டில்தான் முதல் வட்டமான நாணயத்தை அரசு வெ ளியிட்டது.

எஸ்.சுகுமார் விசாகப்பட்டினம்.

முதன்முதலாக மொபைல் போனில் பேசியவர் யார்

என்று உங்களால் சொல்ல முடியுமா?

இந்தத் தகவல்கள் எல்லாம் புத்தகங்களிலேய

இருக்கின்றன! மோட்டோராலா

நிறுவனம் பெல்

லேபாரட்டரஸ் இரண்டும் மொபைல் போன்

தயாரிப்பில் ஈடுபட்டு இருந்தன. முதலில் மொபைல்

போனை உருவாக்கியது மோட்டொராலா !. உடேன

1973, ஏப்ரல் 3-ம் தேதியன்று, அதன் அதிபர் மார்ட்டின்

கூப்பர் அந்த முதல் மொபைல் போனில் இருந்து

ஒருவருக்கு (Land line-க்கு) போன் பண்ணி தகவைலச்

சொன்னார். அவர் போன் போட்டது பெல் நிறுவன அதிபர் ஜோயல் ஈங்கலுக்கு!

8591844.jpg இவருதான் மார்டினாம்!

Edited by அறிவிலி

  • கருத்துக்கள உறவுகள்

மார்ட்டின் மோட்டரோல் பண்ணியவுடன் ஈங்கிலுக்கு பெல் அடித்திருக்குமே அறிவிலி!

  • கருத்துக்கள உறவுகள்

மார்ட்டின் மோட்டரோல் பண்ணியவுடன் ஈங்கிலுக்கு பெல் அடித்திருக்குமே அறிவிலி!

:lol::D

  • தொடங்கியவர்

மார்ட்டின் மோட்டரோல் பண்ணியவுடன் ஈங்கிலுக்கு பெல் அடித்திருக்குமே அறிவிலி!

சரியா தெரியல , அடிச்சிருந்தாலும் , ஊரெல்லாம் கேக்குறதுக்கு , அது என்ன காண்டாமணியா? <_<

  • கருத்துக்கள உறவுகள்

ananthavikadannews_73714846373.jpg

* சர்வாதிகாரிகளிலே நல்லவர் யார் ? – த.சத்தியநாராயணன், அயன்புரம்.

உலகெங்கும் மன்னராட்சி நடந்த காலத்தில் எல்லா மன்னர்களுமே சர்வாதிகாரிகள்தான். அவர்களில் அசோகர் போலவும் நல்ல சர்வாதிகாரிகளும் உண்டு. அப்படிப்பட்ட மன்னர்களைத்தான் வள்ளுவர், “”முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறை என்று வைக்கப் படும்” என்று குறிப்பிட்டார். அதாவது, அப்படிப்பட்டவர்கள் இறைவனுக்கு இணையானவர்கள். ஆனால், வரலாற்றில் அந்த வகையான “”சர்வாதிகாரிகள்” மைனாரிட்டியினர்தான். வீட்டில் உள்ள சர்வாதிகார மனைவிகள்கூட அநேகமாக நல்லவர்களே !

-

* மருமகளுக்கு மாமியார் பிரச்னையாவதுபோல், மருமகனுக்கு மாமனார் பிரச்னை ஆவதில்லையே ஏன் ? - அ.யாழினி பர்வதம், சென்னை – 78.

அவர்கள் சம்பந்தப்பட்ட “”திரைக்கதை” சுவையாக இருப்பதில்லை என்பதால் ! மாமியார்-மருமகள் சண்டை தீதீஞூ மல்யுத்தப் போட்டி மாதிரி ரணகளமாக இருக்கும். கேலரியில் அமர்ந்து ரசிக்கலாம். மாமனார்-மருமகன் புரிவது மௌன யுத்தம். பேச்சுவார்த்தையே இல்லாத குழி மட்டும் பறிக்கும் சைலண்ட் மூவி மாதிரி !

-

* பகுத்தறிவைக் கொண்டு மனிதன் முதலில் தெரிந்து கொண்ட விஷயம் எது ? – மா.சுந்தரமூர்த்தி, செய்யாறு.

அவனும் அவளும் உடலுறவுக் கொண்டதால்தான் அவளுக்குக் குழந்தை பிறந்தது !

-

* ஆன்மீக நிலை அதிகம் படைத்த பாரதத்தில், குறிப்பாகத் தமிழகத்தில்,அன்று 63 நாயன்மார்கள் தோன்றினார்கள். பக்தி மார்க்கத்தைப் பரப்பினார்கள். முடிவில் இறைவன் திருவடி அடைந்து சொர்க்கம் சேர்ந்தனர். பெரியபுராணக்கூற்று இது. இன்றைய காலகட்டத்தில் ஒரு நாயன்மாரும் நம் கண் முன் தோன்றவில்லையே, ஏன் ? – ஆ.கிருஷ்ணன், சென்னை-91.

அது ஒரு காலகட்டம். அப்போது அவர்கள் தேவைப்பட்டார்கள். சுதந்திரப் போராட்டத்தின் போது மாபெரும் தலைவர்கள் நம்மை வழிநடத்தினார்கள். இப்போது அப்படிப்பட்ட தலைவர்கள் இருக்கிறார்களா ?! நாயன்மார்கள் தோன்றி மறைந்து சில நூற்றாண்டுகள்தான் ஆகின்றன. “”அதற்குப் பிறகு இவ்வளவு காலமாகி விட்டதே !” என்று நம் வாழ்நாளைக் கணக்குப் போடாதீர்கள். நமக்கு முன்னும் பின்னும் பல கோடி வருஷங்கள் உண்டு. பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு 63 என்ன 630 “”நாயன்மார்கள்” கூடத் தோன்றலாம் – காலத்தின் கட்டாயம் ஏற்பட்டால் !

* உலகத்தில் உள்ள எல்லாருமே சைவ உணவை உட்கொண்டால் வியாதி இல்லாமல் இருக்க முடியுமா ? – ஆ.அமல்ராஜ், பாபநாசம்.

இருக்க முடியலாம் ! ஆனால், பீச்சு மணலெங்கும் மீன்களும், தெருக்களிலும், வீட்டுக்குள்ளும் ஆடு, மாடு,கோழிகளுமாக இருக்க, தரையில் கால்வைக்கக் கூட இடம் இல்லாமல் பீரோ மீது அமர்ந்துதான் சைவ உணவைச் சாப்பிட வேண்டியிருக்கும் !

* சரியாகச் சொல்லுங்கள், நாணயத்துக்கு மொத்தம் எத்தனைப் பக்கங்கள் ? – வி.ஜெயலட்சுமி,பொழிச்சலூர்.

நா-நயம் என்கிற ஒரே பக்கம்தான் ! என்ன, நீங்கள் எதிர்பார்த்த பதில்தானே ?!!

* உணர்வுகள், உணர்ச்சிகள் இரண்டு வார்த்தைகளின் அர்த்தமும் ஒன்றா ? – ஜி.மாரியப்பன், சின்னமனூர்.

உங்களுக்குக் காமம் என்கிற உணர்ச்சி ஏற்படுகிறது. அதை நீங்கள் உணர்கிறீர்கள். அதான் வித்தியாசம் !

* ஆபத்து நேரத்தில் “”அம்மா !” என்று அழைக்கும் நாம், நிம்மதிப் பெருமூச்சு விடும்போது “”அப்பா” என்று சொல்வது, ஏன் ? – எஸ்.ராஜேந்திரன், கபிஸ்தலம்.

பயப்படும்போது பெண்மையாகவும், பயம் விலகிய பிறகு ஆண்மையாகவும் உணர்வதால் அப்படி ! ( உங்களுக்காகச் சற்று வித்தியாசமாக யோசித்தேனாக்கும் !)

* கோயில்களில் பூஜை முடிந்ததும் பக்தர்களுக்குப் பொங்கல், சுண்டல் போன்றவற்றைப் பிரசாதமாகக் கொடுக்கும் வழக்கம் எதனால் ஏற்பட்டது ? – ச.ந.தர்மலிங்கம், சத்தியமங்கலம்.

சாமி தரிசனம் செய்யும்போது மனசெல்லாம் பொங்கல்,சுண்டல்

:rolleyes:

மீதே இல்லாமல் இருக்கத்தான் !

Edited by உடையார்

  • கருத்துக்கள உறவுகள்

ஹிஹிஹி

  • தொடங்கியவர்

ஹாய் கேட்டிங்க உடையாரண்ணா, ஹாய் சொல்லிட்டேன்! :)

  • கருத்துக்கள உறவுகள்

பார்த்ததில் மகிழ்ச்சி, இல்லை சுகமில்லையோ என்று யோசித்துவிட்டேன், சரி கன காலம் மதனின் நல்ல பதில்களை காணவில்லை, பதியுங்கள்

மா.அண்ணாமலை, சென்னை-1.

Surrender என்ற ஆங்கிலச் சொல்லுக்கு சரண் என்று தமிழில் வருகிறதே! சரண் என்ற சொல் தமிழிலிருந்து ஆங்கிலத்தில் போனதா? இல்லை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு வந்ததா?

இது போல ஒற்றுமையுள்ள பல ஆச்சர்ய வார்த்தைகள் உண்டு! பண்டைய பிரெஞ்சு மொழியிலிருந்து வந்தது. Surrender. Sur-என்றால் 'முடிந்துவிட்டது'. renderஎன்றால் 'கொடுத்துவிடு' அதாவது வாளை! இந்தப் பிரெஞ்சு வார்த்தை லத்தீனிலிருந்து வந்தது. லத்தீனுக்கும் சம்ஸ் கிருதத்துக்கும் நிறைய தொடர்புகள் உண்டு. அப்படியே அது தமிழுக்கும் வந்திருக்கக்கூடும்.

எஸ்.ராஜகோபாலன், சென்னை-7.

உயில் என்பது தமிழ்ச் சொல்லா?

உயில் தமிழ் வார்த்தையாகிவிட்டது என்றாலும், அதன் வேர் பண்டைய சம்ஸ்கிருதம். சம்ஸ்கிருதத்திலிருந்துதான் சிறிது மாறி ஆங்கிலத்தில் 'வில்' (Will) என்று ஆனது. அடிப்படை அர்த்தம் - மகிழ்விக்க. ஆனால், பல உயில்களால் வெட்டுக் குத்து ஏற்படுவதும் உண்டு!

எஸ்.கோபாலன், நங்கநல்லூர்.

அரிசிக்கு ஏன் அரிசி என்று பெயர் வந்தது?

பல சர்வதேச மொழிகளில் அரிசிக்கு ஒரே மாதிரி ஒலிக்கும் பெயர்தான். பிரெஞ்சு மொழியில் ரைஸ் (Riz), இத்தாலியில் ரைஸோ, ஜெர்மனியில் ரெய்ஸ், ரஷ்யாவில் ரைஸ் (Ris). ஆங்கிலத்தில் Rice. தமிழிலும் அதே ஒலியோடு அரிசி! எல்லாவற்றுக்கும் மூலம் சம்ஸ்கிருதம். அதில் - ரையி!

Edited by உடையார்

  • தொடங்கியவர்

உடையாரண்னா இதுபோல மதனின் ,, சூப்பர் கேள்வி- பதில்களை இணையுங்க,,!

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வி: மறைக்க வேண்டியது எது? மறுக்க வேண்டியது எது? மறக்க வேண்டியது எது?

பதில்: செய்த ஊழல்களை மறைக்க வேண்டும். எதிர்க் கட்சி எது சொன்னாலும் மறுக்க வேண்டும். மக்களுக்கு கொடுக்கும் வாக்குறுதிகளை மறக்க வேண்டும்.

நன்றி: ஹாய் மதன், ஆனந்த விகடன்

  • கருத்துக்கள உறவுகள்

gita.jpg

* கர்ணன் செய்த தர்மங்கள் அனைத்தையும் கண்ணன்

யாசகமாகப் பெற்றபோது, அவன் உயிரைப் பறிக்கத்

தர்மம் தடையாக இருந்தது என்கிறார்களே…

அப்படியெனில், தர்மத்தை எல்லாம் தர்மமாக வழங்கிய

போது கர்ணனது உயிர் காப்பாற்றப்பட்டுத் தானே இருக்க

வேண்டும் ?

- பா. அசோக், திருவில்லிபுத்தூர்.

—————————————————————————–

அதனால்தான் “”இப்போது நீ செய்யும் தர்மம், இனி

நீ செய்யப் போகும் தர்மம் எல்லாவற்றையும் தர்மமாகத்

தந்து விடு” என்று கிருஷ்ணர் கேட்கிறார். அப்படி

இருப்பினும், நீங்கள் சொல்வதுபோல இடறத்தான்

செய்கிறது. செய்யும் அல்லது செய்யப்போகும் தர்மத்தையே

தானமாகக் கொடுத்தாலும், அதுவும் தர்மம்தானே ?!

தர்மதேவதை எப்படி கர்ணனைக் காப்பாற்றாமல் போக

முடியும் ?

கண்ணன், கடவுள் மகாவிஷ்ணுவின் அவதாரம்.

தர்மதேவதையைப் பார்த்து, “”சரி, போதும்…. நீ போகலாம் !”

என்று கிருஷ்ணரே சொல்லிவிட்டால், தர்மதேவதை “”கப்சிப்”

என்று வெளியேறி இருப்பார்தான். அதோடு, கர்ணன் கதை

முடிஞ்சது.

ஆகவேதான், பிராயச்சித்தமாகத் தன்னுடைய விஸ்வரூபத்தைக்

கர்ணனிடம் காட்டியிருக்க வேண்டும் !

=======================================================

* விதி என்பது நிஜமாகவே இருக்கிறதா ?

சுகலட்சுமி ஈஸ்வர். சென்னை – 14.

——————————————————-

நிறைய உதாரணங்கள் காட்ட முடியும். ஆனால், முடியும். ஆனால்,

நிரூபிக்க முடியாது.

சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு, அஸிரியா ஒரு பெரும்

சாம்ராஜ்யமாகத் திகழ்ந்தது. (அதில் ஒரு சிறு பகுதிதான் இப்போது

சிரியா !). வல்லமை பொருந்திய மன்னர்கள் ஆட்சிபுரிந்த

அஸிரியாவைக் கண்டு மற்ற நாடுகள் நடுங்கின. அதன் தலைவர் நினேவா.

அதன் கோட்டைச் சுவர் புகழ் பெற்றது. 60 அடி தடிமன், 100 அடி உயரம் !

எந்தப் படையினாலும் அதை மீறி உள்ளே நுழைய முடிந்தது இல்லை.

கி.மு.612-ல் ஸார்டானபாலஸ் என்கிற அரசர் அஸிரியாவை ஆண்டபோது,

பாபிலோனியா உள்பட பல நாடுகள் கூட்டணி அமைத்து அஸிரியா மீது

போர் தொடுத்தன. இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து நினேவாவை

முற்றுகையிட்டும், கோட்டைச் சுவரை உடைக்க முடியவில்லை.

எதிரிப் படை நம்பிக்கை இழந்த சமயம்… அருகில் ஓடிய டைக்ரிஸ் நதியில்

பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரையை உடைத்துக்கொண்டு தண்ணீர்

சுனாமியைப் போன்ற சக்தியுடன் கோட்டைச் சுவரில் மோத, சுவரின் ஒரு

பகுதி உடைந்தது. திகைப்போடும், மகிழ்ச்சியோடும் எதிரிப்படை அந்த

வழியாக உள்ளே நுழைந்தது. இரண்டு வருடக் காத்திருத்தல் ஏற்படுத்திய

கடுப்பு, ஆவேசம் ! அந்தத் தலைநகர் தீ வைத்துக் கொளுத்தப்பட்டுத்

தரைமட்டமாக்கப்பட்டது.

நினேவா வீழ்ந்தது கண்டு, அஸிரிய மன்னர் தீயில் குதித்துத் தற்கொலை

செய்து கொண்டார். இதை என்னவென்று சொல்வீர்கள் ? விதியா…

நதியின் சதியா ?!

நன்றி;ஆனந்தவிகடன்

Edited by உடையார்

  • 6 months later...
  • கருத்துக்கள உறவுகள்

போலீஸாரால் கைது செய்யப்படுவதை அரசியல்வாதிகள் விரும்புவது ஏன் ?

அரசியல்வாதி என்றால் ( மக்களுக்காக ! ). ஒருமுறையாவது ஜெயிலுக்குப் போயிருக்க வேண்டும் என்கிற அபத்தமான தகுதி இங்கு உண்டு. ( சுதந்திரப் போராட்டம் என்பது வேறு !). ஆகவேதான் ஏதாவது போராட்டத்தை ஆரம்பித்து, சில நாட்கள் ( மட்டுமே !) ஜெயிலில் இருந்து விட்டு வருவார்கள். சில அரசியல்வாதிகள் வேறு குற்றங்களுக்காக ( எப்போதாவது ) கைது செய்யப்படுவதும் உண்டு. அப்போதும் வேனில் ஏறும் போது, "" அடக்குமுறை வீழ்க !'' என்று கூவி, தெருவில் கூடியிருக்கும் மக்களைத் திசை திருப்புவார்கள் !

கறுப்பு விதவைச் சிலந்தியிடமிருந்து அவற்றின் கணவர்கள் தப்பித்தது உண்டா?

அநேகமாகக் கிடையாது. கறுப்பு நிறம் கொண்ட பெண் சிலந்தி உடலுறுப்பு கொள்ளும்போதே ஆணைச் சாப்பிட்டுவிட்டு விதவையாகவும் ஆகிவிடுவதால்தான் அதற்கு விதவைச் சிலந்தி என்று பெயர்!

ஆங்கில அரசு ஆண்களுக்கு "சர்' பட்டம் வழங்கியதே. இதுபோல பெண்களுக்கு ஏதாவது...?

ஆகா! "மர்ம நாவலின் மகாராணி' என்று அழைக்கப்பட்ட அகதாகிறிஸ்டி கூட அந்தப் பட்டத்தை (பிரிட்டிஷ் மகாராணியிடம் இருந்து!) 1971-ல் வாங்கினார்.

அவ்வளவு உறுதியான ஓட்டுக்கள் இருக்கும் ஆமைகள் எவ்வாறு செக்ஸ் வைத்துக்கொள்ளும்? ரொம்பவும் மெதுவாக, நிதானமாக அவைகளின் செக்ஸ் வாழ்க்கை இருக்குமோ?

அதான் நீங்களே கரெக்டா சொல்லிட்டீங்களே! ஆமைகள் சாதாரணமாகவே 100 வயதுக்கு மேல் வாழும் என்பதால் நீண்ட கால செக்ஸ் வாழ்க்கை! ஆமைகளுக்கு ரெண்டு மூக்குகள் உண்டு. ஒன்று முகத்தில். மற்றது, மலத்துவாரத்தில். இரண்டு பக்கங்களும் ஆமை மூச்சுவிடும்!

விவாகரத்து விஷயத்தில் (பாதிக்கப்பட்ட, ஆணோ, பெண்ணோ) வக்கீல் இல்லாமல் வழக்கை நடத்த முடியுமா?

ரொம்ப அவசியம் ஏற்பட்டால் ஒழிய விவாகரத்து வழக்கில் வக்கீல் ஆஜர் ஆகாமல் கணவன் - மனைவி மட்டுமே வந்தால் போதும் என்று அண்மையில் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர், தீர்ப்பில் கூறியிருக்கிறார். ஒரு காரணம் - இடப்பற்றாக்குறை, ஜன நெரிசல்!

விவாகரத்து வழக்குகள் ரொம்ப அதிகமாகிவிட்டதால் புதிதாக கோர்ட்டுகள் கட்டப்பட இருக்கின்றன. புரிதல் இல்லாமல் ஏனோதானோ என்று "கட்டி வைப்பதால்' ஏராளமான தம்பதிகளுக்கு ஓரிரு வருஷத்திலேயே மணவாழ்க்கை கசந்து விடுகிறது. "காதல்' திருமணங்களிலும் இப்படி ஆவதுதான் ஆச்சர்யம்!

ஒரு மாறுதலுக்காக சியர் லீடர்ஸ் நம்மூர் பரதம், குச்சுபிடி, கதகளி, மணிப்புரி ஆடினால் எப்படி இருக்கும்?

"கிரிக்கெட்'டே இந்தியாவுக்கு வந்து சேர்ந்த வெள்ளைக்கார விளையாட்டு. இதை எல்லாம் எப்படி அனுமதிப்பார்கள்? தவிர, பவுண்டரி அருகே பரதம், குச்சிப்புடி, எல்லாம் ஆடினால் (வெறுமனே கலர் கலராக கதகளி உடையோடு அவர்கள் நின்றாலே) கவனம் சிதறுகிறது என்று ஆட்ட வீரர்கள் ஆட்சேபிப்பார்கள். சியர் லீடர்ஸுக்கு டிரஸ் அவசியம் இல்லை!

நடிகைகளின் அழகு எதில் இருக்கிறது?

கேமரா லென்ஸில் அல்லது கேமரா கலைஞனின் திறமையில்! ரசிகர்களின் கண்ணோட்டம் வேறு மாதிரியாக இருக்கும். நீங்கள் அழகைப் பார்ப்பது எதில்?!

சேர,சோழ,பாண்டிய மன்னர்கள் காலத்தில் தமிழ்மொழி எப்படிப் பேசப்பட்டது ? மன்னர்கள் எப்படித் தமிழ் பேசினார்கள் ? எல்லோரும் சாதாரணமாகப் படிக்க முடியுமா ?

இதில் என்ன சந்தேகம்?! எல்லோரும் தமிழில்தான் பேசினார்கள். கரிகால் சோழன் காலத்தில் மேலும் தூய தமிழில் உரையாடி இருக்க வேண்டும். போகப்போக, வடமொழியின் ஊடுருவல் நிகழ்ந்து தமிழில் கலப்படம் ஏற்பட்டது. பிற்காலச் சோழர்கள் தமிழுக்குள் ஊடுருவிவிட்ட சமஸ்க்ருத்தையும் வார்த்தைகள் கலந்த தமிழில் பேசினார்கள் ! ( அட்சரம், ஆகாசம், ஹாஸ்யம் போன்ற சமஸ்க்கருத் தமிழ் வார்த்தைகள் 60 ஆண்டுகளுக்கு முன்பு வரைகூடப் பயன்படுத்தப்பட்டன.) எத்தனை தமிழ்ப்பாடல்கள் பண்டைய தமிழ் மன்னர்களைப் போற்றிப் பாடப்பட்டன. சோழர்களின் ஆட்சியில் நடந்த பெருமையான நிகழ்ச்சிகளை விளக்கிச் சொல்லும் ""மெய்க்கீர்த்திகள்'' இனிய தமிழ் அகற்பால்வில்' பொறிக்கப்பட்டதாக தமிழ் வரலாற்று மேதை கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி குறிப்பிடுகிறார். ஆனால், அகம்-புறம் பாடல்களை இப்போது படிக்கும்போது சாமான்யர்களாகிய நமக்கு அர்த்தம் புரிய சிரமமாகவே இருக்கிறது. கரிகால் சோழனைப் போற்றி ஒரு புலவர் பாடுகிறார்...

குறும்பறை பயற்றுஞ்

செல்குடி நிறுத்த பெரும்பெயர்க் கரிகால்

வெல்போர்ச் சோழன் - ( அகம் )

( அதாவது, மலைகள்மீது ஆடுகளை மேய்க்கும் குறும்பர் குடும்பங்களை கரிகால் சோழன் ஆதரவோடு காப்பாற்றியது பற்றிய பாடல் இது !'' கரிகால் சோழன் இதன் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு தலையாட்டினாரா என்று நினைக்க ஆச்சர்யமாக இருக்கிறது!

மனைவியே பல பேருக்கு எதிரி போல் வாய்த்து விடுவதற்கு முக்கியக் காரம் என்ன ?

சம்பிரதாய அணுகுமுறைப்படி மனைவியைத் தேர்ந்தெடுப்பது என்பது - தானாகவே நிகழ்கிற, எதிர்பாராத விதியை அல்லது அதிர்ஷ்டத்தைப் பொறுத்த ஒரு விஷயம். ஒரு பெரிய பானையில் வைரங்கள், முத்துக்கள், தேள், பாம்பு எல்லாம் போடப்பட்டு இருப்பதாக வைத்துக்கொள்வோம். ஒரு கரண்டியை உள்ளே விட்டு எதையாவது எடுக்க வேண்டும் என்றால், கரண்டியில் வருவது வைரமாகவும் இருக்கலாம், பாம்பாகவும் இருக்கலாம் இல்லையா ?!! ரேண்டம் சாய்ஸ் ! ஆகவேதான், நீங்கள் சொல்வது போல சிலர் அமைந்து விடுகிறார்கள். இது கணவனைத் தேர்வு செய்வதிலும் நிகழலாம். ""தேமே'' என்று சாதுவாகத் தோற்றம் அளிக்கும் மணமகன் ஒரு கொடூரமான ""சாடிஸ்ட்'' என்பது பிற்பாடு தெரிய வருவதும் நிறையவே நடக்கிறது. இல்லையா?!!

இலங்கையை முழுமையாக இதற்கு முன்னர் எந்தத் தமிழ் மன்னராவது அரசாண்டது உண்டா ?

ஆகா ! ராஜராஜசோழனின் புகழ்பெற்ற கப்பற்படை ஈழத்தைச் சுலபமாகவே வென்றது. சிங்கள மன்னன் ( ஐந்தாம் ) மகிந்தன் தப்பி ஓடி காட்டுக்குள் ஒளிந்து கொண்டான். ஈழத்தின் பல கிராமங்களை ( கிபி.1014-ல்) ராஜராஜசோழன் தஞ்சை பெரிய கோயிலுக்குத் தானமாகக் கொடுத்தார். ஈழத்துக்கு ""மும்மூடிச் சோழ மண்டலம்'' என்று புதிய பெயர் வைக்கப்பட்டது. அனுராதபுரம் அருகில் உள்ள பொலன்னுறுவை என்னும் ஊர் சோழர்களின் தலைநகரம் ஆனது. அங்கே பெரிய சிவாலயம் ஒன்றைக் கட்டினார் ராஜராஜன் (இன்றும் அது உள்ளது ) இருப்பினும், இலங்கையின் தென் கிழக்கில் இருந்த ரோகண நாட்டை மட்டும் ராஜராஜனால் கைப்பற்ற முடியவில்லை.

கிபி.1017-ல் ராஜராஜனின் மகனான ராஜேந்திரன் ஈழ நாட்டை( ரோகணம் உட்பட) முழுவதுமாகக் கைப்பற்றினார். சிங்களர்களின் "" மகாவம்சம்'' கூட இதை ஒப்புக் கொள்கிறது. கூடவே, ""சோழர்களின் படை மிகவும் கொடூரமாக நடந்துகொண்டு எல்லாச் செல்வங்களையும் கொள்ளை அடித்ததாகவும் ""மகாவம்சம்'' குற்றம் சாட்டுகிறது. ( இது எல்லாம் சரி, தமிழ்நாட்டின் பல பகுதிகளை வென்ற சிங்கள மன்னர்கர்களும் உண்டு! )

பண்டைய ராஜாக்கள் போரில் ஈடுபடும்போது தொடர்ந்து போரிட்டுக்கொண்டே இருப்பார்களா அல்லது உணவு இடைவேளைக்கு எல்லாம் ப்ரேக் எடுத்துக் கொள்வார்களா ?

.

காலை 5 மணியில் இருந்து இரவு 9 மணி வரை மன்னர்கள் போரிட்டு இருக்க வாய்ப்பு இல்லை. காலைச் சிற்றுண்டியை முடித்துக் கொண்டு களத்தில் குதித்து, மாலையில் இருட்டுவதற்குள் அன்றைய போரை முடித்துக் கொண்டு, இரவு கூடாரங்களில் அமர்ந்து நன்றாகச் சாப்பிடுவார்கள் என்றே நான் நினைக்கிறேன். போரின் போது குதிரையில் தண்ணீர்ப் பானைகள் கூடவே சென்று இருக்கும். ( கிரிக்கெட் மேட்ச் மாதிரிதான் !) ஆனால், மங்கோலிய மன்னன் செங்கிஸ்கான் மட்டும் குதிரைகளை தண்ணீர் குடிக்கக்கூட நிறுத்தக் கூடாது என்று தன் வீரர்களுக்கு ஆணையிட்டு இருந்தான். தாகம் எடுத்தால் குதிரையை ஓட்டிக்கொண்டு இருக்கும்போதே அதன் கழுத்தில் லேசாகக் குறுவாளால் கீறி, சுரக்கும் ரத்தத்தை உறிஞ்சி வாயை ஈரப்படுத்திக்கொள்ள வேண்டியதுதான் !

இந்திய அரசியல் ஏன் கூவம் நதி போல் ஆகி விட்டது ?

அரசியல் கூவம் ஒரு காலத்தில் தெளிவாக, நன்றாகத்தான் இருந்தது. பிறகு மெள்ள அசுத்தமான, கழிவுப் பொருட்களான அரசியல்வாதிகள் அதில் கலந்ததால் இப்படி ஒரு கேள்வியை நீங்கள் கேட்கும்படி ஆகிவிட்டது !

சென்னையைச் சுற்றி உள்ள (தாம்பரம், பூந்தமல்லி, வேளச்சேரி ) வளர்ச்சி ஆரோக்கியமான வளர்ச்சியா, இல்லை அழிவுக்கான வளர்ச்சியா ?

தவிர்க்க முடியாத வளர்ச்சி, மொகலாயர்கள் ஆண்ட போது நியூடெல்லி கிடையாது. பிற்பாடு கட்டப்பட்டது. அதேபோல ( இடப்பற்றாக்குறை காரணமாக) எதிர்காலத்தில் இரண்டு மூன்று சென்னைகள் உருவாகும். ஆனால், தொடர்ந்து கொசு கடிக்கும்!

அளவுக்கு அதிகமாக மழை பெய்தால், ஊர் எல்லாம் வெள்ளக்காடாகக் காட்சி தருகிறது என்று சொல்கிறார்களே... நாட்டில் மழை பெய்தால் காட்டை ஏன் இழக்க வேண்டும்?

காடு என்பதற்கு அடிப்படையான அர்த்தமே அளவுக்கு அதிகமான (மிகுதி,) என்பதுதான். உதாரணமாக, இறந்தவர்களின் ஏராளமான உடல்கள் புதைக்கப்பட்டு இருக்கும் இடத்தைக்கூட இடுகாடு என்கிறோம்.

காகம் தன் பெயரின் முதல் எழுத்தைச் சொல்லி கா... கா எனக் கத்துகிறது. கிளியும் அவ்விதமே கி.. கி என்றும், கோழி கோ... கோ என்றும், குயில் கு... கு... என்றும் மாடு மா... என்றும் குரல் கொடுக்கிறதே, அது எப்படி?

காகா, கிகி. கோகோ, குகு, மா... மா என்று அதுகள் எழுப்புகிற சத்தத்தை வைத்துத்தானுங்க மனிதன் அப்படிப் பெயர்களையே சூட்டியிருக்க வேண்டும்!

அகழ்வாராய்ச்சிகளில் தங்கம், வைரம் போன்றவை கிடைக்காமல், மண்பாண்டங்கள் மட்டுமே அதிகம் கிடைப்பதேன்?

பண்டைய நாகரிங்களில் மனிதர்கள் மிக அதிகமாகப் பயன்படுத்தியது, மண்பாண்டங்களைத்தான். தங்கம், வைரம், எல்லாம் குறைவாகத்தான் இருக்கும். ஆகவேதான், எல்லா அகழ்வாராய்ச்சிகளிலும் மண்பாண்டங்கள் அதிகமாகக் கிடைக்கின்றன. அதுவே 1922ம் ஆண்டு எகிப்திய பாரோ மன்னன் ட்யூடான்கெமனின் கல்லறையை ஹொவார்டு கார்ட்டர் என்கிற அகழ்வாராய்ச்சியாளரின் தலைமையில் ஒரு குழு தோண்டி எடுத்தபோது, தங்கத்தால் இழைக்கப்பட்ட பெட்டியில் ட்யூடான்கெமனின் உடலும், கூடவே மலையளவு தங்க, வைடூரிய முத்து, பவளக் குவியலும் கிடைத்தது. சுத்தத் தங்கத்தால் தயாரிக்கப்பட்ட மன்னரின் உடற்கவசம் (2.500 பவுண்டு எடை) கின்னஸ் புத்தகத்தில் தங்கத்தினால் ஆன ஒரே மிகப் பெரிய பொருளாகச் சேர்க்கப்பட்டு இருக்கிறது. ஸோ எங்கு (அதிர்ஷ்டவசமாக) தோண்டுகிறீர்கள் என்பதில் தான் விஷயம் இருக்கிறது.

காதலித்த பெண்ணுக்குத் திருமணம் ஆன பின்பும் அவரோடு நட்பைத் தொடரலாமா?

யாருடன் திருமணம் என்பதைப் பொறுத்தது, உங்களுடன் என்றால், தாராளமாக நட்பைத் தொடரலாம். (நட்பைக் கொச்சைப்படுத்துகிறீர்களே? என்று இளம் வாசகர் பாய வேண்டாம். ஏதோ... கொஞ்சம் பிராக்டிகளாகச் சொன்னேனாக்கும்!)

நன்றி - சிவா - www.eegarai.net

  • கருத்துக்கள உறவுகள்

போலீஸாரால் கைது செய்யப்படுவதை அரசியல்வாதிகள் விரும்புவது ஏன் ?

அரசியல்வாதி என்றால் ( மக்களுக்காக ! ). ஒருமுறையாவது ஜெயிலுக்குப் போயிருக்க வேண்டும் என்கிற அபத்தமான தகுதி இங்கு உண்டு. ( சுதந்திரப் போராட்டம் என்பது வேறு !). ஆகவேதான் ஏதாவது போராட்டத்தை ஆரம்பித்து, சில நாட்கள் ( மட்டுமே !) ஜெயிலில் இருந்து விட்டு வருவார்கள். சில அரசியல்வாதிகள் வேறு குற்றங்களுக்காக ( எப்போதாவது ) கைது செய்யப்படுவதும் உண்டு. அப்போதும் வேனில் ஏறும் போது, "" அடக்குமுறை வீழ்க !'' என்று கூவி, தெருவில் கூடியிருக்கும் மக்களைத் திசை திருப்புவார்கள் !

:D :D :icon_idea:

மதன்சாரோட கேள்வி பதில்ன்னா எனக்கு உயிருங்க . இதை ஆரம்பிச்ச அறிவிலி அண்ணாக்கு ரெம்பநன்றீங்க .

  • கருத்துக்கள உறவுகள்

அறிவு, உடையார் இணைப்புக்கு நன்றி.ரசித்து வாசித்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

புத்திசாலிப் பெண்கள் காதல் வலையில் விழுவார்களா, மாட்டார்களா?

நிச்சயம் விழுவார்கள். காதல் என்பது உணர்வு சம்பந்தப்பட்டது. பகுத்தறிவு இங்கே வேலை செய்வது இல்லை. அதாவது, நடப்பதை (பகுத்தறிவு மூளை!) வெறுமனே வேடிக்கைதான் பார்க்கும்! காதல் வயப்படும் ஆணும் பெண்ணும் வெவ்வேறு வேதியப் பொருட்களே. அவை ஈர்க்கப்படும்போது நிகழும் வேதிய மாற்றங்களை எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாது. அப்போது உருவாகும் (பெனைவிதிலேமைன்) என்கிற மாலிக்யூல்கள் மூளைக்குள் ஏற்படுத்துகிற சிலிர்ப்பையம் பரவசத்தையும் வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது. இந்த நிலை ஏற்பட்டுவிட்டால் புத்திசாலித்தனம் எல்லாம் காற்றில் பறந்துவிடும்.

எந்த வயதில் பெண்ணின் அழகு ஆண்களைப் பெரிதும் பாதிக்கிறது?

யாருடைய வயதைச் சொல்கிறீர்கள்? குறுகிய காலத்தில் கொந்தளிக்கும் அழகு பெண்ணினுடையது! இறக்கும்வரை பெண்ணின் அழகால் பாதிக்கப்படுகிற மனம் ஆணுடையது.

முதல்முறையாக ஒரு பெண்ணை ஆடை இன்றி வரைந்த ஓவியார் யார்? அவர் வரைந்த ஓவியம் இப்போது இருக்கிறதா?

இருக்கிறது. ஆனால் அந்த ஒவியருக்குப் பெயர் இருந்திருக்க வாய்ப்பு இல்லை. 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பழைய காலத்தில் டெய்ல்களுடன் வரையப்பட்ட பிறந்த மேனிப் பெண்ணின் ஓவியத்தை பிரான்ஸ் நாட்டில் (அப்போது கூட கலை என்றால் பிரான்ஸ்தானா?!) ஒரு குகையில் கண்டெடுத்தார்கள். 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு செதுக்கப்பட்ட வீனஸ் என்று அழைக்கப்படும் நிர்வாணப் பெண்களின் சிலைகளம் நிறையத் தோண்டி எடுக்கப்பட்டு இருக்கின்றன. பிற்காலத்தில் 16ம் நூற்றாண்டில், மறு மலர்ச்சி யுகத்தில் ஜார்ஜோனே, டிஷான் போன்ற இத்தாலிய ஓவியர்கள் அழகுப் பெண்களை வரைவதில் புகுந்து விளையாடினார்கள்.

நமீதா, நயன்தாரா, பாவனா, ரீமாசென் என தமிழ் தெரியாத நடிகைகள் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறப்பது செம கடுப்பா இருக்கே சார்?!

இப்போது கவர்ச்சியைப் பார்த்துதான் நடிகைகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். குரலைப் பார்த்து அல்ல. உங்களுக்குக் கடுப்பாக இருக்கிறது என்பதற்காக இவர்கள் எல்லோரும் தமிழில் பேசி நடிக்க ஆரம்பித்தால், உங்கள் கடுப்பு பல மடங்கு அதிகமாகிவிடும். விடுங்க!

கில்கெமெஷ் காப்பியம் முதல் (உங்கள் கி.மு. - கி.பி. புத்தகத்தில் படித்தேன்! இன்றைய எல்.கே.ஜி. ஸ்டூடன்கூட “மூணு சான்ஸ்தான் குடுப்பேன் என்கிறார்களே? அது என்ன மூணு சான்ஸ் கணக்கு?

மனிதன் நியாயமானவன் என்பதால் மூணு சான்ஸ் தருகிறான்! ஒண்ணைத் தொடர்ந்து ரெண்டு உடனே வந்துவிடுகிறது. ஆகவே சுதாரித்துக்கொள்ளவும், தயார்படுத்திக் கொள்ளவும். முடிவு எடுக்கவும் ரெண்டு பயன்படுகிறது. மூணு என்பது முடிவானது.

நான் சின்ன வயசில் என் நண்பனுக்கு எதற்கோ மூணு சான்ஸ் கொடுத்தேன். ரெண்டு சொன்ன பிறகும் அவன் மசிவதாகத் தெரியவில்லை. பரிதாபமாக 21, 22, 23 என்று சொல்ல ஆரம்பித்தேன். ஊஹும்!

ஓரினச் சேர்க்கை என்பது தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடா?

அப்படிச் சொல்ல முடியாது. கலாசார, சம்பிரதாய வேலிகளைத் தாண்டி நிற்பதால் அவர்களுக்குச் சுதந்திர .ணர்வு அதிகமாகக்கூட இருக்க வாய்ப்பு உண்டு. ஆண்-பெண்- திருமணம் என்கிற குறுகிய எல்லைகளைக் கடந்த வெளி மனிதனாக இருப்பதால், நாங்கள் ஸ்பெஷல் என்றுகூட அவர்கள் கருதுகிறார்கள். கலைஞர்களாக இருக்கும்பட்சத்தில் அவர்களுடைய கற்பனைகள் அதிகமாக வெளிப்படுகின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள். ப்ளேட்டோ, டாவின்சி, மைக்கேல் ஏஞ்சலோ என்று ஆரம்பித்து ஆஸ்கர் ஒயில்ட் , டென்னசி வில்லியம்ஸ் வரை ஏராளமானவர்கள் ஹோமோ செக்ஸுவல்ஸ்தான். அவர்களைப் பொறுத்தமட்டில் நாம் எல்லோரும்தான் வெறும் சராசரி மனிதர்கள்!

ராக்கெட்டைச் செலுத்தும்போது ஏன் 5,4,3,2,1 என்று சொல்கிறார்கள் ? ஏன் 1,2,3,4,5 என்று சொல்லக்கூடாதா ?

முதலாவதில் ""ஜீரோ'' என்று இலக்கு உண்டு. 1,2,3 என்று முடிவே இல்லாமல் வாழ்நாள் முழுவதும் எண்ணிக் கொண்டே போகலாம். யார் இந்த முறையைக் கண்டுபிடித்தார்கள் என்றால், அது ஆச்சர்யம் !! விஞ்ஞானக் கதைகளின் பிதாமகரான ஆர்தர் ஸி.க்ளார்க். அவர் எழுதிய ஒரு கதையில், ராக்கெட் கிளம்புவதற்கு முன்பு 5,4,3,2,1,0 என்று எண்ணுவதாக, புத்திசாலித்தனமாகக் கற்பனை பண்ணி எழுதியிருந்தார். அதுவரை ஒரு விஞ்ஞானிக்கும் தோன்றாத ஐடியா!! அவ்வளவுதான், அப்படியே அதைப் பின்பற்ற ஆரம்பித்தார்கள் !

நன்றி - சிவா - www.eegarai.net

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.