Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

9/11 பத்தாவது நினைவு தினம் - உங்கள் பகிர்வுகள்

Featured Replies

பத்தாவது நினைவு தினம் - உங்கள் பகிர்வுகள்

எவ்வாறு இந்த நிகழ்வு உலகத்தை தமிழர் சுயநிர்ணய உரிமைப்போராட்டத்தை பாதித்துள்ளது என உங்கள் எண்ணங்களை பகிருங்கள். நன்றி.

------------------------------------------------------------------------------------

11 / 09 / 2001 அன்று அமேரிக்கா மீதுபின்லாடனால் தலமைவகிக்கப்பட்ட அல்கைடா ஒரு பயங்கரவாத தாக்குதலை நடாத்தியது. இதில் கிட்டத்தட்ட 3000 பேர் கொல்லப்பட்டனர்.

அதன் விளைவுகள் உலக ஒழுங்கையே மாற்றிவிட்டன, அதில் எமது தாயக விடுதலைப்போராட்டமும் சிக்கியது.

கடந்த பத்துவருடகாலத்தில் மேற்குலகம் ஈராக் மற்றும் அப்கானிஸ்தான் மீது யுத்தங்களை தொடுத்து பல இலட்சம் மக்களை கொன்று தனது 'பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை' முன்னெடுத்தது. இதில் மேற்குலகம் பின்லாடனை கொன்றதுடன் பெரிய பயங்கரவாத தாக்குதல்களையும் தவிர்த்துள்ளது. ஆனால், உலகளாவிய ரீதியில் உண்மையான பயங்கரவாதம் குறைந்ததாக இல்லை அது வேறு நாடுகளுக்கு சென்றுள்ளது.

எவ்வளவுதான் ஈழத்தமிழர்கள் தமது ஆயுதப்போராட்டம் உண்மையான அரச பயங்கரவாதத்திற்கு எதிரானது என குரல்கொடுத்த பொழுதும், சர்வதேசம் அதை காதில் போட்டுக்கொள்ளவில்லை. இறுதியில் சிங்களம் சர்வதேச உதவியுடன் ஆயுதப்போராட்டததையும் நசுக்கி ஒரு பாரிய இன அழிப்பையும் அரங்கேற்றியது.

அதே சர்வதேசம் போர்குற்றங்களை 'நல்லிணக்கம்' என்ற பெயரில் மறைத்துவிட சிங்களத்திற்கு சந்தர்ப்பம் வழங்கியது. ஆனால் சிங்களமோ அதை சர்வதேச பலவீனமாக கருதி இனவழிப்பை தொடர்ந்தும் செய்கிறது.

அரபு நாடுகளில் ஏற்பட்ட மக்கள் எழுச்சி, சரிந்து வரும் உலக, குறிப்பாக மேற்குலக, பொருளாதாரம் என்பன ஒரு புதிய அரசியல் கோணத்தை சர்வதேச அரங்கில் வரைந்துள்ளன.

தாயக மக்கள் இன்று போராடினால் தான் வாழ்வு என்ற நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவியாக தமிழக உறவுகளும் புலம்பெயர் தமிழர்களும் உள்ளார்கள். மாறிவரும் சர்வதேச நிலைப்பாட்டை எமதாக்கி ஒரு ஐ.நா. கண்காணிப்புடன் மக்கள் வாக்கெடுப்பை நடாத்தி தென் சூடான் போன்று பிரிவதே வருங்கால சந்ததியை வாழவைக்கும்.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஆரய்வு புதிய உலக ஒழுங்கை பற்றி, ஆமாம் அகூதா 9/11 ற்குபின்தான் எமது போராட்டம் பின்னடைவை சந்திந்தது, என்ன செய்ய அவன் எங்கள் போராட்டதை விடுதலை போராட்டமா பார்க்கவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

இரட்டைக் கோபுரத் தாக்குதல் நிலையில் இருந்து, உலகம் அமைதியை நோக்கி ஒரு அடி கூட முன்னெடுத்து வைக்கவில்லை. இன்னும் கூறப் போனால், பின்னோக்கித் தான் சென்றிருக்கின்றது. எமது போராட்டத்திற்குப் பயங்கரவாத முத்திரை குத்துவதற்கு, இந்த இரட்டைக் கோபுரத் தாக்குதல் பயன்படுத்தப் பட்டது என்பது தான் உண்மை. வட்டி கட்டக் கூட வக்கில்லாத நிலைக்கு, வல்லரசு அமெரிக்காவும்,சிங்களமும் வந்தது தான் மிச்சம்! எமது போராட்டம் சீரழிக்கப் பட்டதற்கு உண்மையான காரணம், நாம் தமிழர்கள் என்பதும், வக்கிரமான தனிமனிதப் பழிவாங்கும் உணர்வுகளுமே. அகண்ட பாரதம் முழுவதும் வாழ்ந்த எமது இனம், அங்குலம், அங்குலமாகத் தெற்கு நோக்கித் துரத்தப் பட்டு, இனி ஓட இடமில்லை என்ற நிலைக்குக் கொண்டு வரப் பட்டுள்ளது. போராடுவதைத் தவிர எமது இனத்திற்கு, இனி எந்த வழியும் விட்டு வைக்கப் படவில்லை. முதல் வழி முற்று முழுதாக மூடப் பட்டு விட்ட நிலையில், அகூதா கூறுவது போல, கிழக்குத் தீமோர், கொசோவோ, தென் சூடான், பாலஸ்தீனம் போன்றவற்றின் வழியே, எமக்கு விடப் பட்டுள்ளது. 'போர்க்குற்றம்' மட்டுமே, எம்முன் இப்போதுள்ள ஆயுதம். இதைக் கையில் எடுப்பதை, இந்தியா உட்பட்ட போர்க்குற்றவாளிகள் விரும்ப மாட்டா. இதையும் தாண்டிப் போனால் மட்டுமே, எமக்கு விடுதலை. இதற்கு முதலில் தேவை எம்மினத்தவரிடையே பூரண ஒற்றுமையும், ஒருங்கிணைக்கப் பட்ட செயற்பாடும்.எமது பிரிவினைகள், எதிரிகளை மட்டுமே பலப் படுத்தும்!!!

  • தொடங்கியவர்

புங்கையூரான்,

நீங்கள் கூறியது உண்மையே. வழமையாக யுத்தங்கள் பொருளாதாரத்தை நிமிர்த்த உதவும். ஆனால் இந்த 'பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்' மேற்குகலத்தை வங்குரோத்து நிலைக்கு தள்ளிவிட்டது.

ஒரு காரணம் உலகின் பல நாடுகள் இந்த யுத்தத்தில் இணையவில்லை. பெரிய யுத்தங்களும் ஏற்படவில்லை, அதனால் அவர்களின் மேற்குலக ஆயுதங்களை வேண்டவும் இல்லை. இதனால் அந்த வருவாயும் இல்லை.

அதேவேளை பாதுகாப்பு என்ற பெயரில் பல பில்லியன்களை இந்த நாடுகள் செலவழிக்கின்றன.

எல்லைகளை பாதுகாப்பது, விமான நிலையங்களை பாதுகாப்பது என இந்த பாதுகாப்புத்துறை வரவுசெலவு திட்டத்தில் பாரிய பகுதியை விழுங்குகின்றது.

அதேவேளை அண்மையில் நோர்வேயில் நடந்தபோன்று நியோநாசி கூட்டமும் முளைவிட்டு வளர ஆரம்பித்துள்ளது. இதுவும் மேற்குலக அரசியலுக்கு சவாலாக உள்ளது.

Edited by akootha

  • தொடங்கியவர்

இந்த பத்தாண்டுகளில் எம்மவர் பலர் மிகவும் கடுமையான பாதிப்புக்குள்ளகியுள்ளனர்.

குறிப்பாக அமெரிக்காவில் அவர்களின் உளவுத்துறை செய்த சதியால், ஏவுகணைகளை வாருங்கள் தருகிறோம் என ஆசைகாட்டி மோசம்செய்யப்பட்டவர்களை குறிப்பிடலாம். அவர்களில் பலரும் இன்னும் சிறையில் வாடுகிறார்கள். இதனால் அவர்களின் பெற்றோர், பாரியார்கள், பிள்ளைகள் எனப்பலரும் ஆழமாக உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்து பலரும் வேலைவாய்ப்புக்கள் மறுக்கப்பட்டுள்ளனர். சில அரச வேலைகள், பாதுகாப்பு அமைச்சின் துறை சம்பந்தப்பட்ட வேலைகளில் எங்கே பிறந்தீர்? எந்தெந்த நாட்டுக்கு கடைசி பத்துவருடத்தில் சென்றீர்? என கேட்டு வேலைகள் மறுக்கப்பட்டவர்கள் உள்ளனர்.

மேலும் பலர் கனடாவில் இருந்து அமேரிக்கா செல்லும் பொழுது பல துன்பங்களை எல்லையைக்கடக்கும் பொழுது சந்திக்கின்றனர். சிலநேரம் திருப்பியும் அனுப்பிவைக்கப்படுகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

இரட்டைக் கோபுரத் தாக்குதல் நிலையில் இருந்து, உலகம் அமைதியை நோக்கி ஒரு அடி கூட முன்னெடுத்து வைக்கவில்லை. இன்னும் கூறப் போனால், பின்னோக்கித் தான் சென்றிருக்கின்றது. எமது போராட்டத்திற்குப் பயங்கரவாத முத்திரை குத்துவதற்கு, இந்த இரட்டைக் கோபுரத் தாக்குதல் பயன்படுத்தப் பட்டது என்பது தான் உண்மை. வட்டி கட்டக் கூட வக்கில்லாத நிலைக்கு, வல்லரசு அமெரிக்காவும்,சிங்களமும் வந்தது தான் மிச்சம்! எமது போராட்டம் சீரழிக்கப் பட்டதற்கு உண்மையான காரணம், நாம் தமிழர்கள் என்பதும், வக்கிரமான தனிமனிதப் பழிவாங்கும் உணர்வுகளுமே. அகண்ட பாரதம் முழுவதும் வாழ்ந்த எமது இனம், அங்குலம், அங்குலமாகத் தெற்கு நோக்கித் துரத்தப் பட்டு, இனி ஓட இடமில்லை என்ற நிலைக்குக் கொண்டு வரப் பட்டுள்ளது. போராடுவதைத் தவிர எமது இனத்திற்கு, இனி எந்த வழியும் விட்டு வைக்கப் படவில்லை. முதல் வழி முற்று முழுதாக மூடப் பட்டு விட்ட நிலையில், அகூதா கூறுவது போல, கிழக்குத் தீமோர், கொசோவோ, தென் சூடான், பாலஸ்தீனம் போன்றவற்றின் வழியே, எமக்கு விடப் பட்டுள்ளது. 'போர்க்குற்றம்' மட்டுமே, எம்முன் இப்போதுள்ள ஆயுதம். இதைக் கையில் எடுப்பதை, இந்தியா உட்பட்ட போர்க்குற்றவாளிகள் விரும்ப மாட்டா. இதையும் தாண்டிப் போனால் மட்டுமே, எமக்கு விடுதலை. இதற்கு முதலில் தேவை எம்மினத்தவரிடையே பூரண ஒற்றுமையும், ஒருங்கிணைக்கப் பட்ட செயற்பாடும்.எமது பிரிவினைகள், எதிரிகளை மட்டுமே பலப் படுத்தும்!!!

நல்ல கருத்து புங்கையூரான்.smile.gif

  • தொடங்கியவர்

பொதுவாக அமெரிக்கா 'நம்பிக்கையை' / 'கல்வியை' / 'தொழில்நுட்பத்தை' ஏற்றுமதி செய்யும் நாடு.

அமெரிக்காவின் புஸ் இளையவர் சனாதிபதியாக இருந்து உலகம் முழுவதுமாக 'பயம்' என்பதையே ஏற்றுமதி செய்தார்.

'நீங்கள் எங்களுடனா இல்லையா?' என்பது அந்தப்பயத்தின் செய்தியாக இருந்தது.

அவரைச்சுற்றி இருந்த அவரின் உதவியாளர்கள், முக்கியமாக உப சானதிபதி டிக் செய்னி, புஸ்ஸை விட பலமானவராக இருந்தார். இவர் ஆட்சிக்காலத்தில் உலகத்தை இரண்டாகப்பிரித்தார்.

புஸ்சுக்கு ஆதரவாக பிரித்தானியாவின் ரோனி பிளேயர் முக்கியமாக இருந்தார். அதைவிட வேறு தலைவர்களும் இந்த சந்தர்ப்பத்தை பாவித்து அமெரிக்காவுக்கு ஆதரவாக தம்மை காட்டிக்கொண்டனர். புஸ் செய்வதை பிழை என சொல்ல ஒருவருக்கும் துணிவு இருக்கவில்லை.

இந்த மேற்குலக மனோநிலையை சீன அரசு நன்றாக பயன்படுத்தி இன்று உலகின் இரண்டாவது பொருளாதார பலம் கொண்ட நாடாக வளர்ந்துள்ளது.

இந்த மேற்குலக பொருளாதார வீழ்ச்சியும் சீனாவின் எழுச்சியும் அடுத்த கட்ட உலக ஒழுங்கை நிர்ணயிக்கும்.

பதிலே இல்லாத நூற்றுக்கணக்கான கேள்விகள் உள்ளன. அதற்கான பதிலை அமெரிக்க அரசு இதுவரை வழங்கவில்லை.

இது ஒரு உள்வீட்டு சதி என்பதை நான் ஆழமாக நம்புகின்றேன்! ஒரு பேர்ருக்கான காரணத்தை தேடியதால் வந்த அழிவு இது.

http://www.youtube.com/watch?v=7E3oIbO0AWE

Edited by கருத்து கந்தசாமி

  • தொடங்கியவர்

செப் 11 ஏன் முக்கியம் பெறுகிறது புதிய ஆய்வு

2001 ம் ஆண்டு செப் 11 இன்றுள்ள தலை முறையினரின் வாழ்வில் மறக்க முடியாத பதிவாகவே இருக்கும் என்று ஓகூஸ் பல்கலைக்கழக உளவியல் பிரிவு பேராசிரியை டோற்றா பேர்ள்சன் கருத்துரைத்துள்ளார். இந்த நிகழ்வு சட்டென ஏற்பட்ட அதிர்ச்சியாகும், இதைக் கேள்விப்பட்டதும் மனித மூளை ஒரு வகைத் திராவகத்தை வெளியிடும். அதன் தாக்கம் வாழ்நாள் பூராவும் மறக்க முடியாத பதிவாக இருக்கும் என்றும் கூறினார்.

இது குறித்து பலரிடம் நடாத்திய ஆய்வுகளின் பின்னர் இத்தகவர் வெளியாகியுள்ளது. வரலாற்று ரீதியாக இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மனித மூளைகளில் ஏற்பட்ட பாரிய அதிர்வாக இந்த நிகழ்வு இருப்பதால் இந்தத் தலைமுறை புவியில் வாழும்வரை இந்த அதிர்வலைகள் மனிதரிடமிருந்து அழிந்துவிட முடியாது என்றும் குறிப்பிட்டார். இன்று செப் 11 நினைவுகள் அமெரிக்காவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இறந்தவர்களின் பெயர்கள் வரிசைக்கிரமாக வாசிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அதேவேளை செப் 11 தாக்குதல் பயங்கரவாதத்திற்கு எதிரான போராக வெடித்து, பல நீதியான விடயங்களையும் கருவறுத்துள்ளது. உதாரணமாக இலங்கையில் நடாத்தப்பட்ட போலியான ஒட்டுண்டுண்ணி பயங்கரவாதப் போர் உலகத்தின் நாகரிகத்திற்கு ஒரு சாபக்கேடாகிவிட்டது. ஈழத் தமிழ் மக்களின் மனதில் இதே செப் 11 போன்ற வடுவை அதுவும் ஏற்படுத்தியுள்ளது. 2009 மே 17 – 18 வரலாற்றில் அழிக்க முடியாத நினைவாக அவர்கள் மனங்களில் படிந்துள்ளது. இப்போதுள்ள தமிழ் தலைமுறை உலகில் உள்ளவரை இந்த நினைவுகளை மழுங்கடிக்க முடியாது என்பதற்கும் ஓகூஸ் பல்கலைக்கழக ஆய்வை ஓர் உதாரணமாகக் கூறலாம்.

http://www.alaikal.com/news/?p=81869

  • தொடங்கியவர்

செப்டம்பர் 11க்கு பின்னைய உலகும் ஊடகவியலாளர்களும்

செப்டம்பர் 11 தாக்குதல்களின் பின்னர் உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாதத்தை ஒடுக்குதல் என்ற சித்தாந்தத்தின் வளர்ச்சி, பல்வேறு நாடுகளில் பிரிவினை வாத அமைப்புகள், தீவிரவாத இயக்கங்கள் மற்றும் விடுதலை இயக்கங்கள் பலவும் தடை செய்யப்படவும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்கள் வலுப்பெறவும் காரணமாகியுள்ளது.

கடந்த பத்தாண்டு காலத்தில் இவ்வாறான பயங்கரவாத தடுப்புச் சட்டங்கள் மற்றும் அவற்றால் ஏற்பட்ட கெடுபிடிகளால் உலகளாவிய ரீதியில் ஊடகவியலாளர்கள் கடுமையான நெருக்கடிகளையும் சிரமங்களையும் எதிர்கொண்டுவருகின்றனர்.

இதனால் உலகளாவிய ரீதியில் பல்வேறு நாடுகளிலும் தேசிய பாதுகாப்பு கொள்கைகளால் முடங்கிப் போன ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் மௌனித்திருக்காது பணியை முன்னெடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது.

ஐஎஃப்ஜே என்ற சர்வதேச ஊடகவியலாளர்கள் சம்மேளனமும் அதன் ஐரோப்பிய குழுவான ஈஎஃப்ஜே என்ற ஐராப்பிய ஊடகவியலாளர்கள் சம்மேளனமும் ஏற்பாடு செய்திருந்த, ‘பயங்கரவாத ஒடுக்குமுறைச் சட்டங்களுக்கு எதிரான’ மாநாட்டில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 11 தாக்குதலின் பின்னர் உருவான ‘பயங்கரவாதத்தின் மீதான போர்’ என்ற சித்தாந்தமும் அதனையொட்டி உருவாக்கப்பட்டச் சட்டங்களும் பல நாடுகளில் ஊடகத்துறையின் மீதே கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக இந்த மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஐனநாயகத்தின் பாதுகாவலாக இருக்க வேண்டிய ஊடகத்துறை, மிக முன்னேறிய நாடுகளில் கூட அதன் பணியைச் செய்யவிடாது முடக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகவியலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஜிம் போமெல்லா சுட்டிக்காட்டினார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்கள், ஊடகவியலார்களை கண்காணிப்புக்குள் வைத்திருக்கும் அதிகாரத்தை சட்டத்தை அமுலாக்கும் அரசாங்க அமைப்புகளுக்கு அளித்திருப்பதாகவும் இந்த மாநாட்டின் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

செப்டம்பர் 11க்குப் பின்னரான ஊடக சூழலில், பயங்கரவாதம் தொடர்பான செய்திகளை சுதந்திரமாக வெளிப்படுத்த முடியாதளவுக்கு ஊடகவியலாளர்களின் செயற்பாடுகள் சுருக்கப்பட்டுள்ளதாக 131 நாடுகளைச் சேர்ந்த சுமார் ஆறு லட்சத்துக்கும் அதிகமான ஊடகவியலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐஎஃப்ஜே கூறுகிறது.

அரசாங்கத்தின் கொள்கைகள் தொடர்பான செய்திகளை வெளியிடும்போது தாம் இலக்குவைக்கப்படலாம் என்ற அச்சத்தால் அவ்வாறான செய்திகளை வெளியிடுவதை ஊடகவியலாளர்கள் தவிர்க்கவே விரும்புவதாக ஈஎஃப்ஜேவின் தலைவர் இங்கு தெரிவித்தார்.

இலங்கை ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம்

இலங்கையில் ஊடகவியலாளர் எஸ்.ஜே. திஸ்ஸநாயகம், பயங்கரவாதத் தடைச்சட்ட விதிகளின் கீழ் கைது செய்யப்பட்டு 20 ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனையும் அவருக்கு அளிக்கப்பட்டது.

மனித உரிமை அமைப்புகளின் பலத்த போராட்டங்களை அடுத்து, ஜனாதிபதி மன்னிப்பு ஊடாக அவர் விடுதலை செய்யப்பட்டார். அதன்பின்னர் அவர் நாட்டிலிருந்து வெளியேறினார்.

இலங்கையில் யுத்தம் முடிந்து இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், அங்கு நீண்டகாலமாக அமுலில் இருந்த அவரசரகால சட்டவிதிகள் கடந்த வாரம் நீக்கப்பட்டன.

ஆனாலும் அதற்கு ஒப்பான அதிகாரங்களை அளிக்கக்கூடிய ‘கடுங்கோல்’ பயங்கரவாதத் தடைச்சட்டம் அங்கு அமுலில் தான் இருக்கின்றது என மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.alaikal.com/news/?p=81880

  • தொடங்கியவர்

செப்டம்பர் 11 தாக்குதல்: 10ஆம் ஆண்டு நினைவு சடங்குகள்

2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11 அன்று அமெரிக்காவின் நியூர்க் நகரிலும் பிற இடங்களிலும் விமானங்களைக் கடத்தி வந்து கட்டிடங்கள் மீது மோதி பயங்கரவாதிகள் செய்த தாக்குதல்கள் நடந்து பத்து ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி உலகில் பல இடங்களில் நினைவுச் சடங்குகள் நடந்திருந்தன.

இத்தாக்குதலில் கிட்டத்தட்ட மூவாயிரம் பேர் உயிரிழந்திருந்தனர்.

http://www.bbc.co.uk/tamil/global/2011/09/110911_91110thanniversayglobal.shtml

http://www.youtube.com/watch?v=HZyyhLCMyqM&feature=player_embedded

  • தொடங்கியவர்

பயங்கரவாத எதிர்ப்பு

9.11 பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந்த 10வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஐ.நா தலைமைச் செயலாளர் பான் கீ மூன் 10ம் நாள் உரைநிகழ்த்தினார். பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பலியானோரை நினைவுகூர்ந்து, பயங்கரவாதத்தை உலக மக்கள் கூட்டாக எதிர்க்க வேண்டும் என்று அவர் கோரினார்.

உலகில் பயங்கரவாத எதிர்ப்பு நெடுநோக்குத் திட்டத்தை 2006ம் ஆண்டு, ஐ.நா ஏற்றுக்கொண்டது. பயங்கரவாத எதிர்ப்பு பற்றிய ஐ.நாவின் நெடுநோக்கை பல்வேறு உறுப்பு நாடுகள் உருவாக்குவது இது முதல் முறை. பல்வேறு நாகரிகங்களுக்கிடையில் ஒன்றுக்கொன்று நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வை ஏற்படுத்தும் பாலத்தை உருவாக்கி, தீவிரவாதத்தை கூட்டாக எதிர்க்கும் முயற்சிகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

பயங்கரவாதம் கொண்டு வருகின்ற அறைகூவலால், உலகிற்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன. நீதியைத் தேடி, அமைதியை விரைவுபடுத்துவதில் எல்லா நாடுகளும் பங்கெடுத்து, எதிர்கால தலைமுறையினருக்கு அருமையான, பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

http://tamil.cri.cn/121/2011/09/11/102s110313.htm

  • கருத்துக்கள உறவுகள்

ராணுவரீதியாக அமெரிக்கா மற்றும் அமெரிக்காவின் நேசநாடுகள் படுதோல்வியை தழுவிக்கொண்டு இருக்கிறார்கள் என்றால் மிகையாகாது.செப் 11ல் அமெரிக்க ராணுவ முகாம் தாக்கப்பட்டு 80 இராணுவம் காயப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் சொல்கின்றன.ஆனால் தலபானின் ஊடகங்கள் 100 வரையிலான அமெரிக்க படைகள் இறந்ததாக கூறுகின்றார்கள்.அதிஸ்டவசமாக பின்லாடன் கொல்லப்பட்டதும் பின்னர் பழிவாங்கும் படலமாக அமெரிக்காவின் அதிஉயர் படையணியை சேர்ந்த 35க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டது என்பது அமெரிக்க படைகளுக்கு பேரிழப்பாகும்.மேற்படி ஆப்கான் போரில் மிக அதிகமான படையினரை இழந்ததுடன் பணமும் அதிகமாக செலவிடப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.இதுவும் அமெரிக்க பொருளாதாரம் கீழ் நோக்கி செல்ல மிக முக்கிய காரணமாகும்.

அமெரிக்கா ஐரிஸ் ராணுவத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவிகாமல் புலிகளை மட்டும் பயங்கரவாத இயக்கமாக அறிவித்து தமது இரட்டை முகத்தை காட்டினார்கள்.புலிகள் பயங்கரவாதிகளாக காட்டியவர்கள் இறுதி யுத்தத்தில் இறந்த ஆயிரக்கணக்கான தமிழ் உயிர்களை காப்பாற்றி இருக்கலாம்.கப்பல் வருகிறது என்று சொல்லி ஒபாமா படம் காட்டியது தான் மிச்சம். லிபிய மக்களுக்கே தெரியாதவர்கள் இன்று விடுதலை போராளிகள் என்று நாமம் சூட்டப்பட்டு லிபிய அரசுக்கு எதிராக போரை நடாத்தும் மேற்குலகை என்னவென்பது?.றுவன்டாவில் ஓரிரு மாதங்களில் 2 மில்லியன் மக்களுக்கு மேல் கொல்லப்பட்ட போது மேற்குலகமும் இவர்கள் உறுப்பினர்களாக ஐ.நாவும் வாழாவிருந்து விட்டு இன்று லிபியா மீது குண்டு மழை பொழிகிறார்கள்.

  • தொடங்கியவர்

இன்று உலகம் முகம்கொடுக்கும் பொருளாதார நெருக்கடி கூட இந்த பத்துவருடத்திற்கு முன் நடந்த தாக்குதல் ஒரு பெரிய பங்காளி. சனாதிபதியாக இருந்த புஸ், அமெரிக்காவுக்கு முண்டியடித்து உதவி செய்த உலகம்.

அந்த வகையில் இன்றும் ஒரு பகுதி ஜிகாடியினர் அமெரிக்காவின் பொருளாதாரத்தையே தாக்கவேண்டும் என கூறிவருகின்றனர்.

இன்னும் ஒரு தாக்குதல் நடந்தால் உலகம் மீள முடியாத ஒரு நிலைக்குள் தள்ளப்படும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.