Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூத்த ஊடகவியலாளர் தம்பு விவேகாராசா காலமானார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மூத்த ஊடகவியலாளர் தம்பு விவேகாராசா காலமானார்! (படம்)

Published on September 18, 2011-5:40 am

வவுனியா ஊடகவியலாளர் தம்பு விவேகராசா சனிக்கிழமை நள்ளிரவு அளவில் காலமானார். தினகரன் பத்திரிகையில் நீண்டகாலமாக வவுனியா பிரதேச நிருபராக இவர் பணியாற்றி வந்தார். இவருக்கு வயது 55.

இரத்த அழுத்த நோய் காரணமாக திடீரென சுகவீனமடைந்து, கடந்த ஒரு வார காலமாக வவுனியா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் இவர் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தார்.

ஏஎவ்பி, சண்டே டைம்ஸ், தமிழ் மிரர், தினக்குரல் உள்ளிட்ட பலஊடகங்களுக்கும் இவர் இறக்கும் வரையில் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by கறுப்பி

ரி.விவேகானந்தராசா என்ற பெயரில் நீண்டகாலமாக பல செய்திகளை தந்த இந்த ஊடகவியாலளரின் ஆத்மா சாந்தியடையட்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆத்மா சாந்தியடைய பிராத்தனைகள்.

  • கருத்துக்கள உறவுகள்

எனது ஆழ்ந்த இரங்கல்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஊடகவியலாளர் தம்பு விவேகராசா அவர்களின் ஆத்மசாந்திக்கு பிரார்த்திக்கின்றேன்.

ஊடகவியலாளர் தம்பு விவேகராசாஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மூத்த ஊடகவியலாளர் ரீ.விவேகராசாவின் மரணம் ஊடகத்துறைக்கு பெரும் பேரிழப்பு: த.தே.கூ வன்னி எம்.பிகள்.

[Monday, 2011-09-19 09:24:13]

வவுனியா மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளரும்,வன்னி ஊடகவியலாளர் சங்கத்தின் செயலாளருமான ரீ.விவேகராசாவின் மரணம் ஊடகத்துறைக்கு பெரும் பேரிழப்பு என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கலான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளனர்.

அமரர் தம்பு விவேகராசாவின் மரணம் தொடர்பில் அவர்கள் இருவரும் கூட்டாக இணைந்து அணுப்பிவைத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அனுதாபச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டள்ளதாவது,,,

தம்பு விவேகராசா கடந்த 30 வருடங்களுக்கு மேல் ஊடகத்துறையில் இணைந்து செயற்பட்டு வருகின்றார்.

தன்னை முழு நேரமும் ஊடகத்துறைக்காக அர்ப்பனித்துக்கொண்ட அவர் யுத்தத்தின் போது வன்னி மக்கள் முகம் கொடுத்த அவலங்களை வெளிக்கொண்டு வருவதிலும் ஆவர்வமாகவும் துனிச்சலோடும் செயற்பட்டு வந்தார்.

யுத்த காலத்தில் எவ்வித அச்சமும் இன்றி பக்கச்சார்பின்றி துனிவுடன் செய்திகளை வெளியிட்டு வந்தார். அரசியல் கட்சிகளுடன் எவ்வித பாகுபாடுகளும் இன்றி சமமான முறையில் பலகி செயற்பட்டு வந்தவர் அமரர்.ரீ.விவேகராசா.

அவருடைய செய்தியினால் பல தீர்வுகளும் வன்னி மாவட்டத்தில் கிடைக்கப்பெற்றுள்ளமையினை நினைத்து நாம் பெறுமைப்படுகின்ற போதும் இன்று அவர் எம்மை விட்டு பிரிந்து சென்றுள்ளமை வன்னி ஊடகவியலாளர்களுக்கும் தமிழ் பேசுகின்ற மக்களுக்கும் பெறும் பேரிழப்பாகும்.

தம்பு விவேகராசா 30 வருடங்களுக்கு மேலாக ஊடகத்துறையில் செயற்பட்டு வந்ததோடு அவரினால் கிடைக்கப்பெற்றுள்ள வெகுமதிகள் அதிகமாகவே காணப்படுகின்றது.

எனவே தம்பு விவேகராசாவின் மரணத்தினால் துயருரும் அவருடைய அன்பு மனைவிக்கும்,உரவினர்களுக்கும் குறிப்பாக வன்னி மாவட்டத்தின் சக ஊடகவியலாளர்களுக்கும் எமது ஆழ்ந்த ஆதாபத்தினை தெரிவித்துக்கொள்ளுவதோடு அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கலான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எஸ்.வினோ நோகராதலிங்கம் ஆகியோர் இணைந்து கூட்டாக அனுப்பிவைத்துள்ள அனுதாபச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.seithy.co...&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

அமரர் தம்பு விவேகானந்தராஜாவின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றேன்!

Edited by புங்கையூரன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.