Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆதாம் கடித்த மிச்சம் -ஸ்டீவ் ஜாப்ஸ்

Featured Replies

நான் கனவுகள் காண்பவன் என நீங்கள் கூறலாம். ஆனால் நான் ஒருவன் மட்டுமே கனவுகள் காண்பவனல்ல.”

மிகவும் புகழ் பெற்ற அமெரிக்க இசைக் கலைஞர் ஜான் லெனான் எழுதிய இந்த வரிகள் அவருக்கு மிகவும் பிடித்தமானது. ஜான் கண்ட கனவுகள் பலவற்றை, ஏன் அனைத்தையும் நனவாக்கிக் காட்டியவர். அவர் நனவாக்கிக் காட்டிய முயற்சியின் பலன்கள் நமக்கு நன்றாக தெரிந்தவை. பலரும் அன்றாடம் பயன்படுத்துபவை. ஆனால் அவற்றைப் பற்றித் தெரிந்த அளவு நமக்கு அவரைப் பற்றித் தெரியாது. அவரது வாழ்க்கை, கனவிலும் கற்பனை செய்ய முடியாத திருப்பங்களையும் விசித்திரங்களையும் கொண்டது.

நம் வீட்டில் கணிப்பொறி இருப்பதற்குக் காரணமானவர் பில் கேட்ஸ் என்று முடிவுக்கு வர வேண்டாம். பில் கேட்ஸ் நடை பழகிக் கொண்டிருந்த காலத்தில் அவர் ஒலிம்பிக்ஸ் ஒட்டத்தில் தங்கப் பதக்கம் வாங்குமளவு முன்னேறியிருந்தார். பில் கேட்ஸ் அவ்வளவு பணம் சம்பாதிக்க அவரும் ஒரு காரணம். ஏன், அவர் தான் காரணம் என்றும் சொல்லலாம்.. மென்பொருள் எழுதுபவரா என்று கேட்க வேண்டாம். சம்பிரதாயத்திற்குக் கூட மென்பொருள் மொழிகளில் ஒரு வரி அவர் எழுதியதில்லை. மென்பொருளின் மகத்துவத்தை மிகவும் லேட்டாகவே புரிந்துக் கொண்டவர்!

கணினியை வீட்டிற்குள் கொண்டு வந்த அவரால், வீட்டுக்குள் வரும் உலகமான இணையத்தில் இணைய முடியவில்லை. ஆனால் இணையம் சிருஷ்டிக்கப்பட்டதே அவரின் சிருஷ்டியில்தான்.

கணினித் துறையின் முதல் அடியை எடுத்து வைத்த அவர், தமது முதல் கனவான கணினியைக் கடந்து மூவிஸ், மியூசிக், மொபைல் என மூன்று உலகங்களின் தலையெழுத்தை மாற்றி எழுதி விட்டார்.

தற்காலத் தலைமுறை குழந்தைகள் கண்டுகளிக்க கார்ட்டூன் படங்களைத் தயாரித்தார், சிலபலர் ஆஸ்கர் விருது வாங்கக் காரணமானார். உலகில் மொத்தமாக இருக்கும் பாடல்களை நம் பாக்கெட்டிற்குக் கொண்டு வந்தார். இசை இப்படித்தான் விற்கப்படும் என்ற வியாபார விதிகளை உடைத்தெறிந்தார். அமெரிக்க செல்போன் துறையைத் திகைக்க வைத்தார்.

போதும், ஸ்டீவ் ஜாப்ஸ் நம் உலகியல் வாழ்வை மேலும் உன்னதமாக்கியவர்!

சென்ற நூற்றாண்டில் உலகை மாற்றிய பெரும்பாலான கண்டுபிடிப்புகள் பிறந்தது அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில்தான். ஸ்டீவ் ஜாப்ஸ் பிறந்ததும் அங்கே தான்.

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் ஒரு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த ஜோயன் கரொல் சியபல்-க்கும் (Joanne Carole Schieble) சிரிய நாட்டை சேர்ந்த அப்துல் பட்டா ஜான் ஜன்டாலிக்கும் (Abdulfattah John Jandali) காதல். காதல் கருவாகியது.

அமெரிக்காவிலும் அக்காலத்தில் மணமாகாமல் குழந்தை பெற்றுக் கொள்வதைக் கேவலமாகத்தான் பார்ப்பார்கள். நாட்டை விட்டுப் போகமுடியாது. ஆனால் இடம் மாறலாமே? நம் ஊரில் குழந்தை பெற்றுக் கொள்வதை விட, ஏதாவது கண் காணாத ஊரில் பெற்றுக் கொள்வோம் என்று அவர்கள் முடிவு செய்த இடம் சான் பிரான்சிஸ்கோ!

கல்லூரிப் பட்டம் வாங்கினால்தான் கல்யாணம் என்று அவர்கள் இருவருக்குமிடையே உறுதிமொழி இருந்திருக்க வேண்டும். அல்லது கல்யாணமே வேண்டாம் என்று. ஆனால் குழந்தை உண்டாகிவிட்டது. ‘கலைப்பு’க் கலை உண்டு என்றாலும் அந்நாளில் அதுவும் ஆபத்தானது. எனவே, பிப்ரவரி 24, 1955-ல் பிறந்த அந்த ஆண் குழந்தையைத் தத்து கொடுப்பது என முடிவு செய்தனர்.

தத்தெடுக்கத் தயாராக இருந்த லாயர் ஒருவர், ஆஸ்தி இல்லாமல் இருந்திருப்பார் போல. பெண் பிள்ளைதான் வேண்டும் என ஆசையை மாற்றிக் கொள்ள, தத்தெடுக்க பதிவு செய்திருந்தவர்களில் அடுத்த இருந்த பவுல் ஜாப்ஸ் பவுலா ஜாப்ஸ் தம்பதிக்கு குழந்தை கைமாறியதன் விளைவு, அந்த குழந்தைக்கு ஸ்டீவ் ஜாப்ஸ் என்ற நாமகரணம் ஆனது.

அமெரிக்காவின் இண்டியானா மாநில விவசாயி ஒருவருக்கு மகனாகப் பிறந்தவர், பவுல் ஜாப்ஸ். பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு கடற்படையில் சேர்ந்து, இரண்டாம் உலகப் போரில் சண்டை எல்லாம் போட்டு சான்பிரான்சிஸ்கோவிற்கு வந்து ஒய்வெடுத்துக் கொண்டு இருந்தார்.

ஒய்வாக ஒதுங்கிய இடத்தில் பவுலா என்ற பெண்ணைக் காதலித்து மணந்தார். மணந்த பின்பு பிறந்த ஊர்ப் பக்கம் போனாலும், கலிபோர்னியா காந்தமாய் கூப்பிட்டது. அது கலிபோர்னியாவின் மகிமை. மீண்டும் சான்பிரான்சிஸ்கோவிற்கே வந்து சேர்ந்தார். பவுலா, பவுல் ஜாப்ஸ் தம்பதிக்கு எல்லாம் நலமாய் இருந்தும் ஏனோ அவர்களின் கெட்ட நேரம் குழந்தை பிறக்கவில்லை. இதை சாக்காக வைத்து கொடுமைப்படுத்தும் மாமியார், இரண்டாம் திருமணம் என்று எதுவும் இல்லாத காரணத்தினால், தத்து எடுக்கலாம் என்று அவர்கள் முடிவு செய்தபின் குழந்தை கிடைத்தும் கொஞ்ச முடியாத ஒரு சூழ்நிலை.

அம்மா கல்லூரிப் படிப்பை தாண்டவில்லை. அப்பா பள்ளிக்கூடத்தையே தாண்டவில்லை. இவர்களை நம்பி எல்லாம் எப்படிக் குழந்தையை தத்துக் கொடுப்பது என ஸ்டீவ் ஜாப்ஸை பெற்ற அம்மா பிடிவாதம் பிடிக்க, நாங்கள் படிக்கவில்லையென்றாலும் இவனைக் கல்லூரிப் படிப்பு வரை படிக்க வைப்போம் என்று பலவாறாக ஜாப்ஸ் தம்பதியினர் உறுதிமொழி தந்தபின்தான் தடங்கல் நீங்கி தத்து நிறைவேறியது. ஸ்டீவ் ஜாப்ஸிற்குப் பின்னரும் ஒரு பெண் குழந்தையை இவர்கள் தத்தெடுத்தனர்.

வாழ்வில் மிகப் பெரிதாக சாதித்தவர்களில் பெரும்பான்மையானவர்களுக்குப் பள்ளிப் படிப்பு பாகற்காயாகத்தான் இருந்திருக்கிறது. இவன் தேறாதவன் என்ற வாத்தியார்களின் வாக்கைப் பொய்யாக்கியவர்கள். இந்த விதிக்கு ஸ்டீவ் ஜாப்ஸும் விலக்கல்ல.

பள்ளிப் படிப்பு போரடிக்கிறதென வகுப்பில் பாம்புகள் விடுவது பட்டாசுகள் வெடிப்பது எனப் போக்கிரியாய் திரிந்துகொண்டிருந்தவரை வழிக்குக் கொண்டு வந்தவர். Imogene “Teddy” Hill என்ற அவரின் நான்காம் வகுப்பு வாத்தியாரம்மா. நன்றாகப் படித்தால் காசு, மிட்டாய், விளையாட்டுப் பொருள் எல்லாம் தருவதாகக் கூறி அவரின் கவனத்தை படிப்பின்பால் திருப்பினார். வாத்தியாரம்மாவின் வாக்குறுதிகளை எல்லாம் கேட்டு இந்த அம்மாவிற்கு கிறுக்காயிருக்குமோ என்று கூட சந்தேகப்பட்டதாகவும், அவர் மட்டுமில்லையென்றால் ஜெயிலுக்குப் போகுமளவு மோசமானவனாக மாறியிருப்பேன் என்றும் பிற்கால பேட்டியில் சொல்லி அந்தக் கல்விக் கடனை தீர்த்துக் கொண்டார் ஸ்டீவ் ஜாப்ஸ். வாக்குறுதியின் விளைவாக வீறுகொண்டு, விடாமல் படித்ததன் விளைவு, ஸ்டீவ்விற்கு டபுள் பிரமோஷன்.

ஆனால் மேல்வகுப்புகள் செல்லச் செல்ல, பள்ளி மீண்டும் பாகற்காயானது. பிறவிக் குணமான பிடிவாதம் எட்டிப் பார்த்தது. ஏன் எதற்கு எப்படி என்றெல்லாம் காரணமில்லை. பள்ளி பிடிக்கவில்லை. மாற்றினால்தான் ஆயிற்று என்று பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தார். ஸ்டீவ் ஜாப்ஸின் பிற்காலப் பிடிவாதங்கள் போலவே இந்தப் பிடிவாதமும் பிரமாதமான பிள்ளையாரானது. சுபமான வாழ்விற்குப் பிள்ளையார் சுழியும் போட்டது.

புதுப் பள்ளிக்காக அவர்கள் குடியேறியிருந்த இடம் சுற்றி எலக்ட்ரானிக்ஸ் என்ஜினியர்கள். புதுப் பள்ளியும் எலக்ட்ரானிக்ஸ் கற்பிப்பதற்கு மிகவும் பெயர் பெற்றது. ஸ்டீவ் வளர்ந்தோரோ இல்லையோ அவரது எலக்ட்ரானிக்ஸ் அறிவு வளர்ந்தது.

ஸ்டீவ்வின் பிள்ளைப் பிராய நடவடிக்கைகளுக்கும் பிற்கால நடவடிக்கைகளுக்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை. ஒன்றை அடைய வேண்டும் என்றால் அடைய வேண்டும். எப்படி என்பது முக்கியமல்ல.

ஒரு முறை பள்ளியில் அவர் செய்து கொண்டிருந்த புராஜக்ட்டிற்குச் சில பொருட்கள் தேவையாய் இருந்தது. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அவரது வாத்தியாருக்கும் ஒரு வழியும் புலப்படவில்லை. பார்த்தார் ஸ்டீவ் ஜாப்ஸ். பார்ட்ஸ் தயாரிக்கும் நிறுவனத்திற்கு போனைப் போட்டார், அதுவும் கலெகட் கால். [இவர் பேசுவதற்கு அவர்கள் பணம் கட்டுவார்கள்]

தான் ஒரு கருவி செய்துகொண்டிருப்பதாகவும் அதற்குப் பல கம்பெனிப் பொருட்களைப் பரிசோதித்துக் கொண்டிருப்பதாகவும், இந்த நிறுவனத்தின் பொருட்கள் பொருத்தமாய் இருக்குமா என யோசிப்பதாகவும். சாம்பிள் கிடைக்குமா எனவும் சரடு விட, செலவில்லாமல் பொருட்கள் வந்து சேர்ந்தன. உங்கள் காருக்கு டயர் தேவைப்பட்டால் டயர் கம்பெனிக்கு போனைப் போட்டு நான் புதுக் கார் தயாரிக்கிறேன், உங்கள் டயர் சரிவருமா என ட்ரை செய்து பார்க்க டயர் வேண்டும் எனச் சொல்லி டயரை ஆட்டை போட்டது போலத்தான் இது.

என் மொபைல் போனிற்கு சிம் வேண்டுமென்று யாராவது பார்தி மிட்டலுக்கு போன் செய்து கேப்பார்களா? ஸ்டீவ் ஜாப்ஸ் கேப்பார். மற்றோரு புராஜக்ட், வேறு சில பார்ட்ஸ் தேவைப்பட்டன. டைரக்டரியைப் புரட்டினார். நிறுவனத் தலைவர் நம்பரைப் பார்த்தார். போனைச் சுழற்றினார். எனக்கு இது எல்லாம் தேவை அனுப்பி வைக்க இயலுமா?

அப்படி ஸ்டீவ் போன் போட்டது பில் ஹெவ்லெட்டிற்கு. HP கம்பெனியின் ஒரு நிறுவனர். இன்றைய சிலிக்கன் வேலிக்கு அடித்தளம் இட்ட முன்னோடி.

போன் போட்ட ஸ்டீவ்வுக்கு கிடைத்தது, புராஜக்ட்டிற்குத் தேவையான பார்ட்ஸ் மட்டுமல்ல, ஹெச்பியில் பார்ட் டைம் வேலையும்கூட. அந்த முதல் வேலையில் ஸ்டீவ் என்ன கற்றுக்கொண்டோரோ இல்லையோ, ஒரு 15 வயது சிறுவன் கற்றுக் கொள்ள வேண்டிய அனைத்தையும் கற்றுக் கொண்டார்.

ஒரு மனிதனின் வாழ்வில் நடப்பது எல்லாம் நன்மைக்காகவே இருக்குமா? முட்டாள்தனமான முடிவுகள் போல இன்று தோன்றுபவை எல்லாம் நாளை கழித்து மேதாவித்தனமானதாக மாறிவிடுமா? அங்கொன்றும் இங்கொன்றுமாய் கிறுக்கும் கோடுகள் எல்லாம் ஒன்றிணைக்கப்பட்ட அழகான கோலமாய் மாறுமா? மாறும் என்பதற்கு ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கை ஒரு வரலாற்றுச் சான்று. அநாதையாய் பிறந்த ஸ்டீவ் ஜாப்ஸ் அதிர்ஷ்டத்தின் ஆசிர்வதிக்கப்பட்ட பிள்ளை!

அப்படி முட்டாள்தனமாக அவர் எடுத்த முடிவு – கல்லூரி படிப்பை விட்டுவிடுவது என்பது.

- தொடரும்

http://www.tamilpaper.net/

இதனால் நிறுவனத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஜாப்ஸ் 1985 ல் ஆப்பிலில் இருந்து விலகி நெக்ஸ்ட் கம்ப்யூட்டர் என்னும் தனி நிறுவனத்தை துவக்கினார்.அந்த‌ நிறுவனம் பெரிதாக வெற்றி பெறவில்லை.

அடுத்த பதினோறு ஆண்டுகள் ஜாப்ஸை உலகம் மறந்தே விட்டது. இடைப்பட்ட காலத்தில் வின்டோஸ் சக்கை போடு போட தனது ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை பிற நிறுவங்கள் பயன்படுத்த அனுமதிக்காத ஆப்பிள் திண்டாடி தடுமாறியது.

ஸ்டீவ் அப்பிளில் இருந்து விலகி இரண்டு திட்டங்களில் இறங்கினார்.

1 - உலகின் மிக முன்னேற்றமான கணணியை உருவாக்குகிறேன் என்று NeXT என்ற நிறுவனத்தை உருவாக்கினார். அப்போது அது வெற்றிபெறவில்லை. ஆனால் தற்போது பாவிக்கப்படும் அப்பிள் கணணி மற்றும் ஐபோன், ஐபாட் போன்ற எல்லாவற்றையும் இயக்கும் மென்பொருளின் அடித்தளம் இதுதான்.

2 - அவரிடம் எஞ்சியிருந்த பணத்தில் 3D படங்களை உருவாக்கும் சிறிய நிறுவனம் ஒன்றை வாங்கிக் கொண்டார். இதுவே PIXAR என்ற பெயரில் பல ஹொலிவூட் வெற்றித் திரைப்படங்களை உருவாக்கிய நிறுவனமாக மாறியது.

இணைப்பிற்கு நன்றி வீணா.

  • தொடங்கியவர்

பில் கேட்ஸை அறிந்த அளவுக்கு ஸ்டீவ் ஜாப்ஸை உலகம் அறிந்ததில்லை. பில் கேட்ஸ் என்றவுடன் மைக்ரோசாப்ட் சாம்ராஜ்யமும், அவரது உல‌க மகா கோடீஸ்வரர் பட்டமும் நினைவுக்கு வரும். ஆனால், கம்ப்யூட்டர் உலகை பொறுத்தவரை ஜாப்ஸ் கோடீஸ்வர கேட்சை விட செல்வாக்கும் மதிப்பும் மிக்கவர். தொழில்நுட்பத்தில், அதிலும் குறிப்பாக வடிவமைப்பில் ஆர்வம் கொண்டவர்களுக்கு அவர் தான் ஆதர்ச நாயகன்!

stevejobs(1).jpg

ஆப்பிளின் இணை நிறுவனர் என்று குறிப்பிடப்படும் ஜாப்ஸின் தொழில்நுட்ப புரிதலும் வ‌டிவமைப்பில் அவருக்கு இருந்த ஆற்றலும் அசாத்தியமானவை. மேக்கின்டாஷில் துவங்கி, ஐபாட், ஐபோன், ஐபேட் என அவர் பெயர் சொல்லும் தயாரிப்புகள் அநேகம். ஒவொன்றுமே கம்ப்யூட்டர் உலகில் தொழில்நுட்ப மைல்கல்லாக விளங்குபவை. அந்தத் துறைகளையே மாற்றியமைத்தவை.

ஜாப்சின் தொலைநோக்கு தன்மை ஆப்பிள் நிறுவனத்துக்கு மட்டும் அல்ல; தொழில்நுட்ப உலகுக்கே வழிகாட்டின என்றுதான் சொல்ல வேண்டும்.

தொலைநோக்கு என்ற மந்திரச்சொல்!

ஜாப்ஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியும் என்றாலும், அவரது மரணம் தொழில்நுட்ப உலகையே உலுக்கிவிட்டது. அமெரிக்க அதிபர் ஒபாமாவில் துவங்கி, போட்டியாளரான பில்கேட்ஸ் வரை அனைவரும் ஜாப்ஸ் மறைவை பேரிழப்பு என்று வர்ணித்துள்ளனர். டிவிட்டர் உலகிலும் அவரது மறைவு பேரதிர்வை உண்டாகியது. நொடிக்கு 10,000 குறும்பதிவுகள் என டிவிட்டர் ஜாப்சை நினைத்து கதறியது.

பிரபல வால் ஸ்டிரீட் ஜர்னல் நாளிதழ், 'தொழில்நுட்பத்தோடு மக்கள் தொடர்பு கொள்ளும் விதத்தை மாற்றி அமைத்தவர்,' என புகழாரம் சூட்டியது.

"ஜாப்ஸ் போன்ற தொலைநோக்கு மிக்க ஒருவரால் தான் ஆப்பிள் போன்ற நிறுவனத்தை உருவாக்க முடியும்," என ஆப்பிள் நிறுவனம் கம்பீரமாக இரங்கல் தெரிவித்தது.

"ஜாப்ஸை போல உலகின் மீது தாக்கம் செலுத்தக் கூடிய மனிதரை அரிதாகவே பார்க்க முடியும். அவரது பாதிப்பு பல தலைமுறைகளுக்கு நீடித்து நிற்கும்," என்று பில் கேட்ஸ் தெரிவித்திருந்தார்.

எல்லா இரங்கல் குறிப்புகளிலும் 'தொலைநோக்கு' என்ற வார்த்தையை தவறாமல் பார்க்க முடிந்தது. 'படைப்பாற்றல் மிக்கவர்' என்ற பாராட்டும் இருந்தது.

'தொழில்நுட்ப வடிவமைப்பையும் கலையையும் ஒன்றிணைத்த மேதை,' என்று வால் ஸ்டிரீட் ஜர்னல் எழுதியது.

உண்மை தான். ஆப்பிளின் தயாரிப்புகள் எல்லாமே செம ஸ்டைலானவை. கூடவே பயன்பாட்டு தன்மை மிக்கவை. இவை இரண்டும் தான் ஆப்பிளை உலகின் மதிப்பு மிக்க நிறுவனமாக உயர்த்தியது.

தவப்புதல்வனான தத்துப்பிள்ளை!

இன்று பங்குதாரர்களும் வாடிக்கையாள‌ர்களும் கொண்டாடும் ஆப்பிள் நிறுவனத்தை ஸ்டீவ் ஜாப்ஸ் உருவாக்கிய கதை மிகவும் சுவாரஸ்யமானது. இன்று தொழில்நுடப் மேதை என்று உலகமே கொண்டாடும் ஜாப்ஸ் கல்லூரி படிப்பை பாதியில் கைவிட்டவர் என்பது தான் ஆச்சர்யம்.

தொழில்நுட்ப உலகின் தவப்புதல்வன் என்று புகழப்படும் ஜாப்ஸ், உண்மையில் தத்துப்பிள்ளையாக பிற‌ந்தவர். ஸ்டீவ் பால் ஜாப்ஸ் என்பது அவரது இயற்பெயர். 1955 பிப்ரவரி 24-ல் கல்லூரி மாணவ தம்பதிக்கு பிறந்த ஜாப்ஸ், கிலாரா மற்றும் பால் ஜாப்ஸுக்கு தத்து கொடுக்கப்பட்டார்.

சிறுவனாக இருக்கும் போதே அப்பாவுடன் ஜாப்ஸ் வீட்டு கேரேஜில் மின்னணு பொருட்களுடன் விளையாடிக்கொண்டிருப்பார். ஜாப்ஸுக்கும் தொழில்நுட்பத்துக்குமான உறவு இப்படி தான் ஆரம்பமானது. அவரை படிப்பில் சுட்டி என்று சொல்ல முடியாவிட்டாலும் சரியான வால் பையனாக தான் இருந்தார். குறும்பு செய்வதில் கெட்டிக்காரராக இருந்த அவரை படிக்க வைக்க ஆசிரியையே லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்தது என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

'என் வழி தனி வழி'!

எப்போதுமே தனிமை விரும்பியாக இருந்த அவரிடம் அப்போதே 'என் வழி தனி வழி' எனும் மனப்போக்கு இருந்தது. மற்ற மாணவர்களிடம் இருந்து எதையுமே வித்தியாசமாக செய்யும் பழக்கம் ஜாப்ஸிடம் இருந்ததாக அவரது பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறியிருக்கிறார்.

மற்ற மாணவர்கள் எல்லாம் ஒய்வு நேரத்தை மைதானங்களில் செல்விடுவார்கள் என்றால், உயர் நிலை பள்ளியில் படித்து கொண்டிருந்தபோதே ஜாப்ஸ், எச் பி நிறுவனத்தில் உரைகளை கேட்டு ரசித்து கொண்டிருந்தார். இங்கு தான் அவருக்கு ஆப்பிளின் மற்றொரு நிறுவனரான ஸ்டீவ் வாஸ்னியாக்கை சந்திக்கும் வாய்ப்பு உண்டானது.

தொழில்நுட்ப ஆர்வம் இருவரையும் சிறந்த நண்பர்களாக்கியது. கம்ப்யூட்டர் விஷயத்தில் வாஸ்னியாக் கில்லாடியாக இருந்தார். இருவருக்கும் பரஸ்பர‌ம் நட்பும் மதிப்பும் உண்டானது.

1972-ல் ஜாப்ஸ் பள்ளியை முடித்துவிட்டு கல்லூரியில் சேர்ந்தார். ஆனால் ஒரு செமஸ்டருக்கு பிறகு படிப்பில் அவர் மனம் செல்லவில்லை. தத்துவ ஈடுபாடும் எதிர் கலாச்சார ஆர்வம் அவரை அலைக்கழித்தன. அடுத்த ஆண்டே படிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு வீடியோ கேம் முன்னோடி நிறுவனமான அட்டாரியில் வேலைக்கு சேர்ந்துவிட்டார்.

'ஆப்பிள்' உருவான கதை...

அட்டாரியிலும் அவருக்கு ஈடுபாடு இல்லாமல் போகவே ஆன்மிக தேடலோடு இந்தியாவுக்கு வந்து சுறித்திரிந்தார். கிளர்ச்சியை தரக்கூடிய போதை வஸ்துவை பயன்படுத்துவது என்றெல்லாம் தடம் மாறி அலைந்த ஜாப்ஸ் 1976-ல் அமெரிக்க திரும்பினார். அப்போது அவருக்கு 21 வயது. நண்பர் வவஸ்னியோக் கம்ப்யூட்டர் கிளப் ஒன்றை நடத்தி கொண்டிருந்தார். ஜாப்ஸ் அதில் தன்னை இணைத்து கொண்டார்.

அந்த காலத்தில் எல்லாம் கம்ப்யூட்டர் என்றால் மைன்பிரேம் கம்ப்யூட்டர் தான். ஒரு பெரிய் வீட்டின் அளவுக்கு இருந்த மைன்பிரேம் கம்ப்யூட்டர்களை எல்லோரும் பயன்ப‌டுத்திவிட‌ முடியாது. கொஞ்சம் தொழில்நுட்ப அறிவு இருந்தால் தான் அதன் பக்கமே போக முடியும்.

வாஸ்னியோக் இதில் கில்லாடியாக இருந்தார். ஆனால் ஜாப்ஸுக்கு கம்ப்யூட்டர் உருவாக்கத்தைவிட தன்னை மார்க்கெட் செய்வதில் தான் ஆர்வம் இருந்தது. எல்லோரும் பயன்ப‌டுத்தக்கூடிய ஒரு எளிமையான கம்ப்யூட்டரை உருவாக்கி விற்பனை செய்ய வேண்டும் என்று நண்பர் வாஸ்னியோக்கிடம் அவ‌ர் வலியுறுத்தினார்.

வாஸ்யோக் அதற்கு ஒப்புக்கொள்ளவே நண்பர்கள் ஒன்று சேர்ந்து புதிய நிறுவனத்தை உருவாக்கினார். ஜாப்ஸ், 'பீட்டில்ஸ் இசைகுழு'வின் பரம ரசிகர் என்பதால் பீட்டில் பாடல் ஒன்றின் பெயரான ஆப்பிள் என்பதையே நிறுவனத்துக்கு பெயராக வைத்து விட்டார்.

இருவரும் கையில் இருந்த பணத்தை முதலீடாக போட்டு நிறுவன‌த்தை துவக்கி கம்ப்யூட்டர் வடிவமைப்பில் ஈடுபட்டனர். ஜாப்ஸின் வீட்டு கேரேஜ் தான் அவர்களது அலுவலகம், ஆய்வுகூடம். அதுவே தான் நிறுவனம்.

முதல் இன்னிங்ஸ் வீழ்ச்சி..

முதலில் ஆப்பிள் 1 கம்ப்யூட்டரை அறிமுகம் செய்தனர். 666 டாலருக்கு சந்தைக்கு வந்த இந்த கம்ப்யூட்டர் அப்போது ஏற்படுத்தியிருக்க கூடிய மகிழ்ச்சியை இப்போது நினைத்து பார்ப்பது கொஞ்சம் கடினம் தான். காரணம்.. ஆப்பிள் கம்ப்யூட்டர் எளிதானதாக, சிறியதாக, மலிவானதாக இருந்தது. சாமான்யர்கள் கிட்ட கூட செல்ல முடியாத மைன்பிரேம் கம்ப்யூட்டரோடு ஒப்பிட்டால் ஆப்பிள் கம்ப்யூட்டரை புரட்சிகர‌மானது என்றே சொல்லலாம்.

ஒரு விதத்தில் பர்சன்ல் கம்ப்யூட்டர்களின் துவக்கமாகவும் இது அமைந்தது. கம்ப்யூட்டரை ஜனநாயகமயமாக்கும் செயலாகவும் அமைந்தது.

மூன்று ஆண்டுகள் கழித்து ஆப்பிள் 2 கம்ப்யூட்டரை அறிமுகம் செய்தனர். ஆப்பிளின் வடிவமைப்பு எளிமையாக பயன்பாட்டுத் தன்மை மிக்கதாக இருந்ததால் விற்ப‌னையும் அதிகரித்தது. நிறுவனமும் காலூன்றியது. பங்குந்தையிலும் பட்டியலிடப்பட்டு பெரிய‌ நிறுவ‌னமான‌து.

இதே கால கட்டத்தில் தான் பிசி சந்தையில் ஐபிஎம் போன்ற நிறுவனங்கள் கோலோச்ச துவங்கின. போட்டியை சமாளிக்க ஆப்பிளுக்கு பெப்சி சீஇஓ ஒருவரை ஜாப்ஸ் அழைத்து வந்தார்.

ஆனால், இதனிடையே மைக்ரோசாப்டின் எழுச்சியும் இன்டெலுடனான் அதன் கூட்டணியும் பெரும் வெற்றி பெறவே ஆப்பிள் திண்டாடியது. 1984-ம் ஆண்டும் ஜாப்ஸ் புகழ்பெற்ற மேக்கின்டாஷ் கம்ப்யூட்டரை அறிமுகம் செய்தார். இதற்கு அவர் பயன்படுத்திய உத்தி இன்றளவும் பெரிதாக பேசப்படுகிற‌து.

கம்ப்யூட்டர் என்றால் மேக் தான் என்று சொல்லக்கூடிய வகையில் மேக் அபிமானிகள் உருவானாலும் ச‌ந்தையில் ஆப்பிளுக்கு சரிவே உண்டானது. இதனைடையே ஆப்பிள், மவுசை முதலில் பயன்படுத்திய முன்னோடி கம்ப்யூட்டரான லிசா உட்பட புதிய மாதிரிகளை அறிமுகம் செய்தாலும் விற்பனையில் முந்த முடியவில்லை.

இதனால் நிறுவனத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஜாப்ஸ் 1985 ல் ஆப்பிலில் இருந்து விலகி நெக்ஸ்ட் கம்ப்யூட்டர் என்னும் தனி நிறுவனத்தை துவக்கினார்.அந்த‌ நிறுவனம் பெரிதாக வெற்றி பெறவில்லை.

அடுத்த பதினோறு ஆண்டுகள் ஜாப்ஸை உலகம் மறந்தே விட்டது. இடைப்பட்ட காலத்தில் வின்டோஸ் சக்கை போடு போட தனது ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை பிற நிறுவங்கள் பயன்படுத்த அனுமதிக்காத ஆப்பிள் திண்டாடி தடுமாறியது.

ஆப்பிள் விற்பனை சரிந்து அதன் பங்குகளும் வீழ்ச்சி அடைந்த நிலையில் நஷ்டத்தில் தள்ளாடும் நிறுவன‌த்தை தூக்கி நிறுத்தும் கடைசி முயற்சியாக மீண்டும் ஸ்டீவ் ஜாப்ஸிடமே ஆப்பிள் தஞ்சமடைந்தது.

ஆனால் ஜாப்ஸால் கூட ஆப்பிளை காப்பாற்ற முடியாது; ஆப்பிளின் காலம் முடிந்து விட்டது என்றே பலரும் நம்பினர்.

இரண்டாவது இன்னிங்ஸ்சின் எழுச்சி..

ஒரு பக்கம் நஷ்டம் இன்னொரு பக்கம் வேறு திசையில் சென்றுவிட்ட கம்ப்யூட்டர் உலக‌ம் என்ற‌ சூழ்நிலையில் தான் ஜாப்ஸின் இரண்டாவது இன்னிங்கஸ் ஆரம்பமானது.

ஆப்பிளின் அடிப்படை பலமான நேர்த்தியான வடிவமைப்பு, எளிமையான பயன்பாட்டுத்தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்திய ஜாப்ஸ் அசத்தலான ஐமேக் கம்ப்யூட்டர்களை அறிமுகம் செய்து திரும்பி பார்க்க வைத்தார்.

எல்லோரும் கம்ப்யூட்டர்களிலேயே கவனம் செலுத்தி கொண்டிருந்த காலத்தில் யாருமே எதிர்பாராத வகையில் எம்பி3 வடிவில் பாடல்களை கேட்க உத‌வும் சாதனமான ஐபாடை (iPod) அறிமுகம் செய்தார். அவ்வளவு தான் அமெரிக்காவும் அகில உலகமும் ஐபாடு மூலம் ஆப்பிள் வ‌சமானது.

எல்லோரும் காதுகளில் ஐபாடை மாட்டி கொண்டு திரிந்தனர். வாக்மேனுக்கு பிறகு இசை உலகில் பெரும் புரட்சியை ஐபாடு உண்டாக்கியது. இத்த‌னைக்கும் ஐபாட் முதல் எம்பி3 பிளேயர் அல்ல. அப்போது சந்தையில் பல பிளேயர்கள் இருந்தன. ஆனால் ஐபாடின் எளிமையும் நேரத்தியும் எம்பி3 பிளேயர் என்றால் ஐபாட் என்று சொல்ல வைத்தன.

மற்ற எந்த பிளேயரை விடவும் ஐபாடை கையாள்வது எளிதாக இருந்த்து. விருப்பமான பாடலை தேட பட்டன் பட்டனாக தட்டி கொன்டிருக்காமால் கைவிரல இப்படியும் அப்படியுமாக நகர்த்துவதன் மூலமே பாட்லக்ளை தேர்வு செய்யும் லாவகத்தை ஐபாட் தந்தது.

இந்த எளிமையான வடிவமைப்பு மற்றும் பயன்பாடு தான் ஜாப்சின் தனித்தன்மையாக அமைந்த‌து.

இன்டெர்நெட்டில் பாட‌ல்களை டவுன்ட்லோடு செய்வது பெரும் பிரச்னையாக உருவான நிலையில் ஜாப்ஸ் பாடல்களை காப்புரிமை சிக்கல் இல்லாமல் வாங்குவதற்கான ஐடியூன்ஸ் இணைய இசை கடையை துவக்கி அடுத்த அஸ்திரத்தை பிர‌யோகித்து இசைத்துறையை கைப்பற்றினார்.

ஜீனியஸ் ஜாப்ஸ்!

எல்லோரும் ஐபாட் பற்றி பேசிகொண்டிருந்த போது, செல்போன்கள் செல்லும் திசையை புரிந்து கொண்டு ஐபோனை அறிமுகம் செய்தார். டச் ஸ்கிரின் வசதியோடு வந்த அதன் எளிமையும் கம்ப்யூட்டரின் செயல்திறனும் ஐபோனை (iPhone) சூப்பர் ஹிட்டாக்கியது.

பிளாக்பெரி போன்றவை சாதிக்க முடியாததை ஐபோன் சாதித்து. ஸ்மார்ட் போன்களுக்கான சந்தையை உருவாக்கியது. ஐபோன்களுக்கான புதிய செயலிகள் அதனை புதிய உயரத்துக்கு கொண்டு சென்றன.

அடுத்ததாக ஐபேடை (iPad) அறிமுகம் செய்து மைக்ரோசாப்டே மண்ணை கவ்விய டேப்லெட் கம்ப்யூட்டர் சத்தியில் ஆப்பிள் வெற்றிக்கொடி நாட்டியது.

ஐபோனும் ஐபேடும் கம்ப்யூட்டருடன் நாம் தொடர்பு கொள்ளும் விதத்தையே மாற்றி அமைத்துள்ளன. தகவல் தொடர்பிலும் புதிய பாதை வகுத்துள்ள‌‌ன. இதற்காக தான் ஜாப்ஸ் ஜீனியஸ் என்று கொண்டாடப்படுகிறார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் சில மாதங்களுக்கு முன் ஆப்பிள் தலைவர் பதவியில் இருந்து விலகிய ஸ்டீவ் ஜாப்ஸ், மீளா துயிலில் ஆழ்ந்துவிட்டார். ஆனால், அவர் உண்டாக்கிய கம்ப்யூட்டர் புரட்சி என்றென்றும் நிலைத்து நிற்கும்.

தொழில்நுட்ப உலகம் இன்று துயரத்துடன் உச்சரிக்கும் ஒரே வார்த்தை... iSad

VIKADAN .COM

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி வீணா

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வீணா இணைப்பிற்கு, திறமையான மனிதரை இழந்துவிட்டோம்

  • தொடங்கியவர்

07-steve-jobs-apple-store300.jpg

பாலோ ஆல்டோ: புற்றுநோய் தன்னைத் தாக்கியது கடந்த 2004-ம் ஆண்டே ஸ்டீவ் ஜாப்ஸுக்குத் தெரிந்துவிட்டது. அதைத் தொடர்ந்து சில முறை சிகிச்சை மேற்கொண்டார். கல்லீரல் மாற்று அறுவையும் செய்து கொண்டார்.

ஆனாலும் கடந்த பிப்ரவரியிலேயே அவருக்குத் தனது இறுதி நாட்கள் தெரிந்துவிட்டன. தனது நாட்கள் எண்ணப்படுவது தெரிந்ததும், மிக நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் விஷயத்தைச் சொல்லிவிட்டார்.

அந்த நண்பர்கள் மூலம் இன்னும் பலருக்கும் தகவல் பரவ, அடுத்து வந்த நாட்களில் தினசரி நண்பர்கள் அவரது பாலோ ஆல்டோ இல்லத்துக்கு வருகை தர ஆரம்பித்துவிட்டார்கள்.

குறிப்பாக அவர் தனது ராஜினாமாவை அறிவித்த நாளிலிருந்து ஏராளமான நண்பர்கள் வர ஆரம்பித்துவிட்டனராம். ஸ்டீவுடன் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்துவிட்டு, அவருக்கு பிரியா விடை கொடுத்துச் சென்றவண்ணம் இருந்தனராம் இந்த நண்பர்கள்.

தான் வாழும் காலத்திலேயே எல்லாருக்கும் நல்ல முறையில் குட்பை சொன்ன திருப்தி ஸ்டீவுக்கு. வருகிற நண்பர்களை வரவேற்று, நன்றி சொல்லி அனுப்பக் கூட முடியாத அளவுக்கு களைத்துப் போனாராம் ஸ்டீவ் ஜாப்ஸின் மனைவி லூரென்.

இறுதி நாள் நெருங்க நெருங்க, தன் வீட்டில் நடமாடக்கூட முடியாத அளவுக்கு மெலிந்து பலவீனமாகிவிட்டாராம் ஸ்டீவ் ஜாப்ஸ்.

ஆனாலும் யார் யாருக்கெல்லாம் தன் இறுதிப் பயணம் குறித்த சொல்லி விடைபெற வேண்டும் என்பதை மனதுக்குள் ஒரு லிஸ்ட் போட்டுக் கொண்டாராம். தனது நெருங்கிய நண்பரும் உடல்நல ஆலோசகருமான டீன் ஆர்னிஷை ஒரு நாள் இரவு உணவுக்கு அழைத்து விருந்து கொடுத்தாராம். தனது மற்றொரு நண்பரும் வென்சர் கேபிடலிஸ்டுமான ஜான் டோர், ஆப்பிள் போர்டு உறுப்பினர் பில் கேம்ப்பெல், டிஸ்னி நிறுவன தலைமை நிர்வாக ராபர்ட் ஏ ஐகர் என ஒவ்வொரு நாளும் ஒருவரை அழைத்து தன் மனதிலிருப்பதைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஆப்பிள் ஐஃபோனின் லேட்டஸ்ட் பதிப்பான 4 எஸ் மாடலை வடிவமைத்தவர்கள், நிர்வாகிகளையும் அழைத்து அதை எப்படி அறிமுகப்படுத்த வேண்டும் என கடைசியாக அறிவுரைகள் தந்துள்ளார்.

ஆனாலும் தனது பெரும்பாலான நேரத்தை தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் செலழித்துள்ளார். தனது வாழ்க்கை வரலாற்றை எழுத வால்டர் ஜஸாக்ஸன் என்பவரையும் பணித்திருக்கிறார்.

இன்று ஸ்டீவ் ஜாப்ஸின் மனைவி மற்றும் குழந்தைகள் 6.5 பில்லியன் டாலர் சொத்துக்கு சொந்தக்காரர். கூடவே உலகின் மிகப்பெரிய முன்னோடி மனிதரான ஒருவரின் சாம்ராஜ்யத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் அவருக்கு வந்திருக்கிறது.

அவரது இறுதி நாட்கள் குறித்து டாக்டர் ஆர்னிஷ் கூறுகையில், "ஸ்டீவ் ஒரு நிமிடத்தைக் கூட வீணடித்ததில்லை. காரணம் ஏற்கெனவே அவரது வாழ்நாளின் முடிவு தெரிந்து விட்டதால், தனக்கு வேண்டாத ஒரு விஷயத்திலும் மனதைச் செலுத்தியதில்லை. கடைசி நாள் வரை, தன் வாழ்க்கை தனது கட்டுப்பாட்டில் இருக்கும்படியும், தான் செய்ய விரும்பியதைச் செய்து முடிக்கும் வகையிலும் தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்," என்கிறார்.

ஸ்டீவ் ஜாப்ஸ் கேன்சரில் பாதிக்கப்பட்டு, விடுமுறையில் இருந்தபோது, அவருக்கு பல விருதுகள் மற்றும் பாராட்டு விழாக்களுக்கு ஏற்பாடு செய்து அழைத்துள்ளனர். ஆனால் அவை எதையும் ஏற்க மறுத்துவிட்டாராம் ஸ்டீவ்.

நண்பர்கள் தொடர்ந்து அவரைப் பார்த்து வந்தாலும், இறுதி வாரங்களில் ஸ்டீவ் ஜாப்ஸின் வீடு முழுக்க செக்யூரிட்டிகள் மயமாக இருந்ததாம். கேட் பூட்டப்பட்டு, எப்போதும் இரு கறுப்பு நிற சொகுசு வாகனங்கள் தயாராக இருந்தன. வேறு யாராலும் அவரைப் பார்க்க முடியவில்லை.

ஆனால் வியாழனன்று கேட் திறக்கப்பட்டு வாகனங்கள் அகற்றப்பட்டன. அந்த இடம் முழுக்க மலர்கள், ஒரு வாய் கடிக்கப்பட்ட ஆப்பிள்கள், மலர் வளையங்கள் என நிரம்ப ஆரம்பித்துவிட்டன!

"ஸ்டீவ் ஜாப்ஸ் தன்னை ஒரு பெரிய சாதனையாளராக, கண்டுபிடிப்பாளராக கருதி நடந்து கொண்டதே இல்லை. ஒரு சாதாரண மனிதனை விட பல மடங்கு இயல்பாக அனைவரிடமும் நடந்து கொண்டார். அன்பு காட்டினார். அவர்களின் தேவைக்கேற்ற கண்டுபிடிப்புகள் அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதுதான் இந்தத் துறையில் யாருக்கும் கிடைக்காத புகழ், பெருமை, மக்களின் அன்பை அவருக்கு சம்பாதித்துக் கொடுத்துள்ளது", என்கிறார் டாக்டர் ஆர்னிஷ்.

thats tamil .com

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்பிளின் தந்தைக்காக உலகெங்கிலும் அஞ்சலி ( படங்கள் இணைப்பு )

article-2045903-0E43687E00000578-868_964x641-140x140.jpg

அப்பிள் நிறுவுனர் Steve Jobs இன் இறுதிவணக்கத்திற்காக உலகெங்கிலும் உள்ள அப்பிள் நிறுவன தலைமையகத்தின் முன்னே அஞ்சலி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இவர் ஒரு நாட்டின் தலைவரோ ஒரு ஹொலிவூட் நட்சத்திர நடிகரோ அல்லர். ஆனால் உலகையே மீள உருவமைத்தஅப்பிள் நிறுவனத்தின் தலைவரே Steve Jobs. இவரின் மறைவு அன்பினாலும் மரியாதையினாலும் கலாச்சார ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இவரைக் கதாநாயகனைப் போலத் தாம் நினைத்த ஒரு மனிதனை நினைவுடுத்தவே அப்பிளின் ரசிகர்கள் ஒன்று கூடியுள்ளனர். ரோக்கியோவில் அப்பிள் கடைகளிலுள்ள iPad மற்றும் iPhones கள் மெழுகுதிரி வடிவங்களில் காணப்படுகின்றன.

அதுபோல அப்பிளின் கலிபோர்ணியா தலைமையகத்தில் இன்றும் மலர்வணக்கங்கள் இடம்பெற்றுவருகின்றன. சீனாவிலும் ஜொப்சின் படத்திற்கு அருகே ஒரு மலர்க்கொத்து வைக்கப்பட்டுள்ளது.

இத்தாலியிலும் ஜொப்சை நினைவுகூரும் முகமாக ஒரு அப்பிள் வடிவ பீற்சா வைக்கப்பட்டுள்ளது. தலைமையகத்திலும் கொடிகள் அரைக்கம்பத்தில் விடப்பட்டுள்ளன.

அதுபோல மலேசிய வாடிக்கையாளர்களும் தமது இரங்கல்களை ஒரு துண்டில் எழுதி ஒரு விளம்பரப் பலகையில் ஒட்டியுள்ளனர். இதுபோல ஏராளமான வணக்கங்கள் உலகெங்கிலும் இடம்பெற்றுவருவதைக் காணக்கூடியதாயுள்ளது.

article-2045903-0E40E72700000578-593_964x652.jpg

article-2045903-0E43133300000578-840_964x658.jpg

article-2045903-0E43115900000578-543_964x653.jpg

article-2045903-0E42356100000578-534_964x643.jpg

article-2045903-0E42038500000578-116_964x665.jpg

article-2045903-0E43929D00000578-18_964x617.jpg

article-2045903-0E43687E00000578-868_964x641.jpg

article-2045903-0E42406A00000578-248_964x643.jpg

article-2045903-0E4383BE00000578-286_964x675.jpg

article-2045903-0E436F9F00000578-890_964x642.jpg

article-2045903-0E42A25100000578-636_964x690.jpg

article-2045903-0E41CA0400000578-764_964x643.jpg

http://www.vanakkamnet.com/steve-jobs-has-died/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.