Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூன்று பெண்களுக்கு நோபள் சமாதான விருது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

noble_win_CI.jpg

மூன்று பெண்கள் இம்முறை நோபள் சமாதான விருதினை பகிர்ந்து கொள்கின்றனர்.

லைபீரியாவைச் சேர்ந்த இரண்டு பெண்களும், யேமனைச் சேர்ந்த ஒரு பெண்ணும் இம்முறை நோபள் சமாதான விருதினை பெற்றுக் கொள்கின்றனர்.

லைபீரிய ஜனாதிபதி இலன் ஜோன்சன் செர்லீப், லைபீரியாவின் லெய்மா குபோவீ மற்றும் யேமனின் தவாகுல் கார்மான் ஆகியோருக்கு இம்முறை நோபள் சாமாதான விருதினை பகிர்ந்து கொள்கின்றனர்.

பெண்கள் உரிமை, வன்முறைகளற்ற போராட்டத்தின் மூலம் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தல் ஆகியவற்றுக்காக குறித்த பெண்கள் ஆற்றிய அளப்பரிய சேவையை கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது.

செர்லீப் லைபீரியாவின் ஜனாதிபதியாகவும், குபோவீ சமாதான செயற்பாட்டாளராகவும் கடமையாற்றி வரும் அதேவேளை, கார்மான் ஜனநாயக அமைப்பை வழிநடத்தி வருகின்றார்.

அபிவிருத்தி உள்ளிட்ட சகல துறைகளிலும் இந்த சமூகத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு சம சந்தர்ப்பம் ஏற்படுத்தப்படும் வரையில் இந்த உலகத்தில் ஜனநாயகத்தையும், நிலையான சமாதானத்தையும் ஏற்படுத்த முடியாது என நோபள் சமாதான விருது வழங்கும் குழுவின் தலைவர் தொர்போஜ்ரோன் ஜாக்லாண்ட் தெரிவித்துள்ளார்.

உலகின் பல நாடுகளிலும் தொடர்ச்சியாக பெண்களின் மீது அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதாகவும், இந்த விருது இவ்வாறான அடக்குமுறைகளை கட்டுப்படுத்த வழிகோலும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயகம் மற்றும் நிலையான சமாதானத்தில் மகளிருக்கான உரிமைகளை பறைசாற்ற இந்த விருது வழங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

மேமனிய ஜனாதிபதி அலி அப்துல்லாஹ் செல்லாஹ் பதவி விலக வேண்டுமென கோரி வரும் கிளர்ச்சிகளில் கார்மானும் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

யேமனில் பெண்கள் உரிமை தொடர்பில் போராட்டங்ளை நடத்திய முக்கியமான நபர்களில் ஒருவராக கார்மான் கருதப்படுகின்றார்.

மிகவும் நெருக்கடிhயன நிலைமைகளில் கார்மான் போராட்டங்களை நடத்தி வருவதாகவும், சமாதான விருது பெறும் முதல் அரேபிய பெண் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஊடக சுதந்திரம் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுத்த காரணத்திற்காக கார்மன் பல தடவைகள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்த விருத ஒட்டு மொத்த லைபீரிய மக்களுக்கும் கிடைக்கப் பெற்ற விருது என லைபீரிய ஜனாதிபதி செர்லீப் தெரிவித்துள்ளார்.

72 வயதான செர்லீப் கடந்த 2005ம் ஆண்டு ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

நீதிக்காக பல ஆண்டுகளாக நடத்திய போராட்டத்திற்கு கிடைக்கப் பெற்ற விருது என அவர் தெரிவித்துள்ளார்.

செர்லீப்பை இரும்புப் பெண் என அழைக்கின்றனர்.

அடுத்த வாரம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் செர்லீப் மீண்டும் போட்டியிடுகின்றார்.

இதேவேளை, குபோவீ லைபீரிய சிவில் யுத்தம் தொடர்பாக ஆக்கபூர்வமான விமர்சனங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த விருது தொடர்பான அறிவிப்பு தம்மை மௌனமாக்கியுள்ளதாக குபோவீ தெரிவித்துள்ளார்.

விருது அறிவிக்கப்பட்டமை பெரு மகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

உலகப் பெண் உரிமைகளுக்கு கிடைக்கப் பெற்ற வெற்றியாக இந்த விருதினை தாம் நோக்குவதாகத் தெரிவித்துள்ளார்.

நோபள் சமாதான விருதிற்காக இம்முறை 241 பேரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.globaltam...IN/article.aspx

Edited by தமிழ் அரசு

  • கருத்துக்கள உறவுகள்

ஹ்ம்ம்... நெடுக்ஸூக்கு வேலை வந்திட்டுது.kane.gif

மூவருக்கும் பாராட்டுகள் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
:)

வாழ்த்துக்கள்!

அது சரி, நோபல் பரிசு அல்லது நோபள் பரிசு எது சரியானது?

மேமனிய ஜனாதிபதி அலி அப்துல்லாஹ் செல்லாஹ்?

அல்லது யேமனிய ஜனாதிபதி? :unsure::blink:

செய்திகளை இணைக்கும் போது கொஞ்சம் கவனம் எடுக்கலாமே? :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மூன்று பிசாசுகளுக்கு நோபல்பரிசு!கேவலம் கெட்ட உலகமிது.....அறிவில்லாத உலகமிது...பெண்கள் எப்படிப்பட்டவர்கள் என்று தெரியாமல் நோபல்பரிசு கொடுக்கிறார்கள்....

மூன்று பிசாசுகளுக்கு நோபல்பரிசு!கேவலம் கெட்ட உலகமிது.....அறிவில்லாத உலகமிது...பெண்கள் எப்படிப்பட்டவர்கள் என்று தெரியாமல் நோபல்பரிசு கொடுக்கிறார்கள்....

உங்கடை ஆதங்கம் எங்களுக்கு புரிகிறது.

பெண்களுக்கு கிடைத்த நோபல் பரிசு இசைப்பிரியா கொலைக்கு ஓர் எச்சரிக்கை

பெண்கள் தொடர்பான கடும் போக்கை எடுத்துவரும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும், ஆசிய ஆபிரிக்க நாடுகளுக்கும் இது தெளிவான எச்சரிக்கையாகவும் உள்ளது. சென்ற வாரமும் கார் ஓடிய குற்றத்திற்காக பெண் ஒருவருக்கு சவுதி அரசு பத்து கசையடிகள் போட்டது தெரிந்ததே. சமீபகாலமாக நடபெறும் வடக்கு ஆபிரிக்க ஜனநாயகத்திற்கான போராட்டங்களில் பெண்கள் பெரும் பாதிப்பை சந்தித்தனர்.

கடாபியின் படைகள் தமது சொந்த நாட்டு பெண்களையே பெரும் பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்தியது. பெண்களின் பிரசவ பரிசோதனை அறையில் கமேராவை பூட்டி படுக்கை அறையில் இருந்து கடாபி அவதானித்த அவலச் செய்தியும் வெளியானது.

சிறீலங்கா இனவாதப் படைகள் இசைப்பிரியா போன்ற பெண்கள் மீது நடாத்திய பாலியல் நடவடிக்கைகள் மனித குலத்தையே நாம் மனிதர்கள் தானா என்று சிந்திக்கத் தூண்டின. இப்படியான பெண்களுக்கு எதிரான நாசகார போக்குகளுக்கு நோபல் குழுவினர் தெளிவான பதில் ஒன்றை வழங்கியிருக்கிறார்கள். பெண்களுக்கு எதிரான அனைத்து ஒடுக்குமுறைகளும் தூள் பொறியாக உடைக்கப்பட வேண்டும் என்ற தெளிவு உலக சமுதாயத்தில் மெல்லென ஏற்பட்டு வருகிறது.

http://www.alaikal.com/news/?p=84441

  • கருத்துக்கள உறவுகள்

மூவருக்கும் பாராட்டுகள் வாழ்த்துக்கள்.

அது சரி, நோபல் பரிசு அல்லது நோபள் பரிசு எது சரியானது?

அதை Nobel தான் வந்து சொல்ல வேண்டும். :D

  • கருத்துக்கள உறவுகள்

மூவருக்கும் எனது வாழ்த்துகள்

அது சரி எனக்கு எப்போ விருது :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Published By பெரியார்தளம் On Friday, October 14th 2011. Under பெரியார் முழக்கம்

லைபீரிய முன்னாள் ஜனாதிபதி எல்லன் ஜான் சன் சர்லீஃப், லைபீரிய சமாதான ஆர்வலர் லீமா போவி மற்றும் ஏமன் நாட்டைச் சேர்ந்த போராளி தவாக்கல் கர்மான் ஆகிய 3 பெண்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வெள்ளியன்று அறிவிக்கப்பட்டது.

nobel-prize-three-women-300x196.jpgபெண்களின் பாதுகாப்பு மற்றும் பெண்களின் உரிமைக்காகப் போராடிய இம் மூன்று பெண்மணிகளின் அமைதிப் போராட்டம் மற்றும் சமாதானத்தைப் பேணுவதற்காக ஆற்றிய செய்லகளுக்காகவும் இம்மூவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகளுக்காகப் போராடிய பத்திரிகையாளரும், 3 குழந்தைகளுக்குத் தாயுமான 32 வயது கர்மான், ஏமன் அதிபர் அலி அப்துல்லா சலே தலைமையிலான அரசை எதிர்த்து நடைபெற்றுவரும் போராட்டத்திற்கு தலைமையேற்ற பெண் என்பது குறிப்பிடத்தக்கது

நோபல் பரிசை வென்றதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்தப் பரிசை ஏமனின் எழுச்சி இளைஞர்களுக்கும் ஏமன் மக்களுக்கும் சமர்ப்பிக்கிறேன் என்று பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கர்மான் தெரிவித்தார். அரபு உலகில் எழுச்சி பரவ கர்மானின் செயல்பாடுகளே காரணம் என்று நோபல் பரிசுக் கமிட்டியின் தலைவரான தோர்போர்ன் ஜக்லேண்ட் தெரிவித்தார்.

ஆப்பிரிக்காவின், லைபீரியாவைச் சேர்ந்த எல்லன் ஜான்சன் சர்லீஃப் (72), ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் பயின்ற அறிஞராவார். ஆப்பிரிக்க வரலாற்றில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் அதிபராவார். சர்லீஃப் ஒரு சமூக சீர்திருத்தவாதியாவார். அவர் பதவியேற்றது முதல் அமைதியை ஏற்படுத்துவதற்காகப் போராடி வருகிறார். மக்களின் சமூக, பொருளா தாரத் தரத்தை உயர்த்துவதற்காகவும் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் போராடி வருகிறார்.

லைபீரியாவைச் சேர்ந்த லீமா போவி, இனரீதியாகவும் மத ரீதியாகவும் மக்களைப் பிரித்த தீவிரவாதத் தலைவர்களுக்கெதிராக, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் பெண்களை ஒருங்கிணைத்துப் போரிட்டவராவார். தேர்தலில் பெண்கள் பங்கேற்பதை உறுதி செய்த தீர மிக்க போராளியாவார்.

(பெண்ணுரிமை பற்றிய பெரியார் கட்டுரை 2 ஆம் பக்கத்தில்)

பேரறிஞர்கள் வீட்டுப் பெண்களின் நிலையும் இது தானே!

பெண்கள் உரிமைக்கும், மதவேறுபாடு களுக்கும் எதிராக உழைத்த 3 பெண்களுக்கு நோபல் பரிசு கிடைத்துள்ள நிலையில் தந்தை பெரியாரின் ஆழமான பெண்ணுரிமை சிந்தனையை வெளியிடுகிறோம்.

பெண்கள் மனித சமுதாயத்தில் சரி பகுதி எண்ணிக்கை கொண்டவர்கள். இரண்டொரு உறுப்பில் மாற்றம் அல்லாமல், மற்றபடி பெண்கள் மனித சமுதாயத்தில் ஆண்களுக்கு முழு ஒப்பும் உவமையும் கொண்டவர்கள் ஆவார்கள் என்பேன். நாமும் அவர்களைச் சிசு குழந்தைப் பருவ முதல் ஓடி விளையாடும் பருவம் வரையில் கொஞ்சி, முத்தங்கள் கொடுத்து, பலவிதத்தும் பேத உணர்ச்சியே அற்று, ஒன்றுபோலவே கருதி நடத்துகிறோம், பழகுகிறோம். அப்படிப்பட்ட மனித ஜீவன்கள் அறியும் பக்குவமும் அடைந்த வுடன், அவர்களைப் பற்றி இயற்கைக்கு மாறான கவலை கொண்டு, மனித சமுதாயத் தில் வேறாக்கி, கடைசியாக ஒரு பொம்மை யாக்கி, பயனற்ற ஜீவனாக மாத்திரமல்லாமல், அதைப் பெற்றோருக்கு ஒரு தொல்லையான ‘பண்டமாக’ ஆக்கிக் கொண்டு, அவர்களது வாழ்வில் அவர்களை அவர்களுக்கும் மற்றும் உள்ளவர்களுக்கும் கவலைப்படத்தக்க ஒரு ‘சாதனமாய்ச்’ செய்து கொண்டு, அவர்களைக் காப்பாற்றவும், திருப்திப்படுத்தவும் அலங் காரப்படுத்தி திருப்தியும், பெருமையும் அடையச் செய்ய வேண்டியதுமான ஓர் அஃ றிணைப் பொருளாகவே ஆக்கி வருகிறோம்.

பெண்களால் வீட்டிற்கு, சமுதாயத்திற்குப் பலன் என்ன? எங்கு கெட்டப் பேர் வந்து விடு கிறதோ என்பது தானே? இன்று பெண்கள் வேலை என்ன? ஓர் ஆணுக்கு ஒரு பெண்ணாய் அமைப்பது. அது எதற்கு? ஆணின் நலத்துக்குப் பயன்படுவதற்கும், ஆணின் திருப்திக்கும், ஆணின் பெருமைக் கும், பெண் ஒரு உபகருவி என்பதல்லாமல் வேறு என்ன? ஓர் ஆணுக்கு ஒரு சமையல் காரி; ஓர் ஆணின் வீட்டிற்கு ஒரு வீட்டுக்காரி; ஓர் ஆணின் குடும்பப் பெருக்குக்கு ஒரு பிள்ளை விளை விக்கும் பண்ணை; ஓர் ஆணின் கண் அழகிற் கும், மனப் புளகாங்கிதத்திற்கும் ஓர் அழகிய அலங்கரிக்கப்பட்ட பொம்மை என்பதல்லா மல், பெண்கள் பெரிதும் எதற்குப் பயன் படுகிறார்கள்; பயன்படுத்தப்படுகிறார்கள்?

இது என்ன நியாயம்? மனித சமுதாயம் தவிர மற்றபடி மிருகம், பட்சி, பூச்சி, ஜந்து முதலியவைகளில் வேறு எந்த ஜீவனாவது, ‘ஆண்களுக்காகவே இருக்கிறோம் நாம்’ என்ற கருத்துடன், நடத்தையுடன் இருக் கிறதா?

இந்த இழிநிலை பெண்களுக்கு அவமான மாய்த் தோன்றவில்லை என்பதற்காகவே, ஆண்கள் பெண்களை இவ்வளவு அட்டூழிய மாக நடத்தலாமா என்று கேட்கிறேன். ஓர் ஆண் ஒரு பெண்ணைத் தனது சொத்து என்று எண்ணுகிறானே – எதனால்? துணியாலும் நகையாலும் தானே! கம்பி இல்லாத தந்தியும், ரேடியோவும், அணுகுண்டும் கண்டுபிடிக்கப் பட்ட இந்தக் காலத்திலும் பெண்கள் அலங்காரப் பொம்மைகளாக இருப்பதா?

நம் ‘பெண்கள் உலகம்’ பெரிதும் மாற்ற மடைய வேண்டும். நம் பெண்களைப் போல், பூமிக்குப் பாரமானவர்கள் – மனிதனுக்குத் தொல்லையானவர்கள் – நல்ல நாகரிகமான வேறு நாடுகளில் கிடையாது. இங்கு படித்த பெண், படியாத பெண் எல்லோரும் பொம் மைகளாகவே இருக்கிறார்கள். பெற்றோர் களும், கணவன்மார்களும் அவரவர்களது பெண்களை அழகிய பொம்மைத் தன்மையை உடையவர்களாக ஆக்கி அதைக் கொண்டே திருப்தி அடைகிறார்கள்; பெருமையடை கிறார்கள். பெண்களைத் திருப்தி செய்ய அவர்களை நல்ல பெண்களாக ஆக்க, விலையுயர்ந்த நகையும், துணியும் கொடுத்து, அழகிய சிங்காரப் பதுமையாக்கி விட்டால் போதும் என்று நினைக்கிறார்கள்.

பெண்கள் பெருமை, வருணனை ஆகி யவைகளில் பெண்கள் அங்கம், அவயவங்கள், சாயல் ஆகியவைகளைப் பற்றி 50 வரி இருந்தால், அவர்களது அறிவு, அவர்களால் ஏற்படும் பயன், சக்தி திறமைப் பற்றி ஒரு 5 வரிகூட இருக்காது. பெண்களின் உருவை அலங்கரிப் பது, அழகை மெச்சுவது, சாய லைப் புகழ்வது ஆகியவைகள் பெண்கள் சமுதாயத்திற்கு அவமானம், இழிவு, அடிமைத் தனம் என்பதை ஆயிரத்தில் ஓர் பெண்ணாவது உணர்ந்திருக்கிறாள் என்று சொல்ல முடியுமா? பெண்களுக்குத் தகப்பன் சொத்தில் உரிமை கிடையாதது ஏன் என்று எந்தப் பெண் ணாவது காரணம் கேட்டாளா? “பெண்களை அனுபவிக்கிறவன் – அவர்களிடம் வேலை வாங்கிப் பயன் அடைகிறவன் காப்பாற்ற மாட்டானா!” என்பதுதான். அதற்கேற்ற நகை அணி ஆகியவையாகும்.

“பெண்களுக்கு, மக்கள் கவனத்தை ஈர்க்கும்படியான நகை, துணிமணி, ஆபரணம் ஏன்?” என்று எந்தப் பெண்ணாவது பெற் றோராவது, ‘கட்டினவ’ராவது சிந்திக்கிறார் களா? பெண்கள் அஃறிணைப் பொருள் என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்? தன்னை அலங்கரித்துக் கொண்டு மற்ற மக்கள் கவனத்தைத் தம்மீது திருப்புவது இழிவு என்றும், அநாகரிகம் என்றும் யாருக்கும் தோன்றாததற்குக் காரணம், அவர்கள் போகப் பொருள் என்ற கருத்தே யாகும். இது பரிதாபமாகவே இருக்கிறது.

நல்ல கற்புடைப் பெண்களுக்கு உதாரணம், “மற்றொருவர் உள்ளம் புகாள்” என்பது திராவிட மரபு நூற்களின் கூற்று. அதாவது, ஒரு பெண் இயற்கையில் கற்புடையவளாயிருந்தால் தன் கணவன் தவிர மற்றவர்கள் நினைவுக்குக்கூட ஆளாக மாட் டாள் – “பிறர் நெஞ்சு புகாள்” என்பதாகும். நாம் நம் பெண்ணை மற்றவர்கள் எப்படிப் பட்டவர்களாயினும், 150 தடவை திரும்பித் திரும்பிப் பார்க்கும்படி, அவர்கள் கவனத்தை நம்மீது திரும்பும்படி அலங்கரிக்கிறோம். அலங்கரிக்க அனுமதிக்கிறோம். அதில் நம் பணம், உழைப்பு, நம் வாழ்க்கைப் பயன் முதலியவைகளைச் செலவழிக்கிறோம். இது ஏன், எதற்காக என்று சிந்திக்காததால் – அதைத் தவிர வேறு காரியத்திற்கு நம் பெண்கள் பயன்படாமல் போய்விட்டார்கள்.

நான் பாமர மக்களை மாத்திரம் சொல்ல வில்லை. நம் அறிஞர், செல்வர், தனக்கென வாழாப் பிறர்க்குரியாளரானவர்கள் என்று சொல்லப்படும் பெரியோர்களின் யோக்கி யதைகளையும், அவர்கள் பெண்கள் உலகத் துக்கு ஆற்றும் தொண்டுகளைப் பற்றியுமே சொல்லுகிறேன்.

திராவிடப் பேரறிஞர்களின் மனைவிகள், தங்கை, தமக்கைகள், பெண்கள் எங்கே, எப்படிப் பிறந்தார்கள்? எப்படி வளர்ந் தார்கள்? எப்படித் தகுதி ஆக்கினார்கள்? எப்படி இருக்கிறார்கள்? ஷராப்புக் கடைகள், ஜவுளிக் கடைகள் ஆகியவற்றில் விளம்பரத் திற்கு வைத்திருக்கும் அழகிய பொம்மைகள், உருவங்கள் போலல்லாமல் – நாட்டுக்கு, மனித சமுதாயத்திற்கு, பெண்கள் உலகத்திற்கு இவர்கள் என்ன மாதிரியில் தொண்டாற்ற அல்லது தாங்களாவது ஒரு புகழே, கீர்த்தியோ பெறத்தக்கபடி வைத்தார்களா? இவர்களே இப்படி இருந்தால் – மற்ற பாமர மக்கள், தங்கப் பெட்டியின் உள்ளே வெல்வெட் மெத்தைப் போட்டுப் பூட்டித்தானே வைப்பார்கள்!

(திருப்பத்தூரில் 15.9.1946 இல் ஆற்றிய சொற்பொழிவின் ஒரு பகுதி)

- ‘குடிஅரசு’ 21.9.1996

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.