Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சரித்திரமாகிவிட்ட கௌசல்யன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரித்திரமாகிவிட்ட கௌசல்யன்

எஸ்.கே

பெப்ரவரி 7ம் திகதி தமிழர் தாயகத்தின் சோக நாள். தமிழீழ விடுதலை வரலாற்றில் விடுதலைக்காக நின்ற லெப்.கேணல் கௌசல்யன்இ மாமனிதர் சந்திரநேரு மற்றும் மூன்று மாவீரர்களையும் சிங்களப் படையினருடன் சேர்ந்தியங்கும் தேசவிரோதக் கும்பல் கோழைத்தனமாகக் கொன்று இரத்த வெறி தீர்த்த அந்த துயரச் சம்பவம் நடந்து ஓராண்டாகிறது. இன்னும் தாயக மக்களிடையே கௌசல்யன் என்ற அந்த வீரமறவனின் அர்ப்பணிப்பு மிக்க சேவையும்இ தியாகமும் மாறாது மனக் கண் முன்னே நிற்கின்றது.

லெப்.கேணல் கௌசல்யன் கொக்கட்டிச்சோலை பண்டாரியாவெளியை பிறப்பிடமாகக் கொண்டவர். தமது பாடசாலைப் பருவம்இ அது சிங்கள வெறி இராணுவம் தமிழர் தாயகத்தில் தமிழின அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமை இந்த கௌசல்யன் மனதை சுட்டெரித்தது. தேசியத் தலைவனின் விடுதலைப் போராட்டம் அவனை ஈர்த்தது. பள்ளிப்படிப்புக்கு முழுக்குப் போட்ட இவன் விடுதலைப் போராட்டத்தில் இணைகிறான்.

மனோ மாஸ்டரின் தலைமையில் அவரது இராணுவப் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்ற கௌசல்யன் எதிரிக்கு எதிராக தமது வீரத்தினை உறுதிப்படுத்தினான். பரந்த அறிவும்இ துடுதுடுப்பும்இ அர்ப்பணிப்பும்இ விடுதலை மீதான தாகமும் கௌசல்யனை மிகச் சிறந்த போராளியாக மெருகூட்டியது.

காலவோட்டத்தில் மட்டு அம்பாறை மாவட்டத்தின் நிதித்துறைப் பொறுப்பாளராக சிறந்த முறையில் பணியாற்றிய இவர்இ பின்னர் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தின் அரசியல்த்துறைப் பொறுப்பாளராக பொறுப்பினை ஏற்கிறார். போர்ச் சூழலில் தமிழ் முஸ்லிம் சமூகங்களிடையே இருந்த கசப்புணர்வினை மாற்றி முஸ்லிம் சகோதர்களுடன் நட்புறவைஇ இன ஐக்கியத்தை வளர்பதற்காக கௌசல்யன் அரும்பாடுபட்டார்.

காலவோட்டத்தில் தமிழ் பேசும் உறவுகளிடையேயும் கௌசல்யன் காத்திரமான நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கினார். இது மாத்திரமின்றி மட்டு அம்பாறை மாவட்டம் போரினால் பாதிப்புற்று பொருளாதார வலுவுற்றுள்ள நிலையில் மாவட்டத்தை முன்னேற்றமடையச் செய்ய வேண்டும் அபிவிருத்தி அடையச் செய்ய வேண்டுமென்பதில் கௌசல்யனின் சிந்தனைகள்இ செயற்றிட்டங்கள் விசேடமானவை.

ஒட்டுமொத்தத்தில் அன்புஇ பண்புஇ பாசம்இ அடக்கம்இ அறிவுஇ வீரம்இ விவேகம்இ விடுதலை உணர்வு என அத்தனை சிறப்புக்களுக்கும் சொந்தக்காரனாக வலம் வந்த கௌசல்யன் அவர்கள் கடந்த 2004ம் ஆண்டு தமிழீழ விடுதலை வரலாற்றில் நம்பிக்கைத் துரோகம் மட்டுமல்லஇ தேசத்துரோகமிழைக்க முனைந்த கருணாவின் சதித்திட்டங்களை நன்கு உணர்ந்து கொண்டார். கருணா குறுகிய பிரதேசவாதத்தினூடாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை களங்கப்படுத்த முனையக் கூடாது என்பதற்காகக் கருணாவின் சதித்திட்டங்களிலிருந்து விடுபட்டு வன்னி செல்கிறனர்.

தேசியத் தலைவரிடம் கருணாவின் துரோகத்தனங்களை தெரியப்படுத்தினர். கருணாவின் பிரதேச வாதம் மற்றும் சதித் திட்டங்களை எல்லாம் முறியடித்ததுடன் மட்டுமன்றி மட்டக்களப்பு மக்களுக்கு உண்மை நிலைகளை புரிய வைத்து தெளிவுபடுத்தியிருந்தார்.

கருணாவின் துரோகத்தனம் முடிவுக்கு வந்த பிற்பாடு தமது அரசியல் பணிகளை மீளவும் முன்னெடுத்த கௌசல்யன் தமிழ் பேசும் சமூக ஒற்றுமைக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு பல சந்திப்புக்களை முஸ்லிம் சகோதர்களுடன் ஏற்படுத்தி ஐக்கியத்தை வலுவூட்டுவதற்காக அரும்பாடுபட்டார்.

திடீரென எற்பட்ட சுனாமிப் பேரனர்த்தம் தமிழ் மனித இழப்புஇ பாதிப்பு அவலங்கள் எல்லாம் கௌசல்யனை மிகவும் வாட்டியது. துயர் துடைப்புப் பணிகளில் அதிக அக்கறையோடு செயற்பட்டார். இறுதியாக 2005ம் ஆண்டு பெப்ரவரி கிளிநொச்சி சென்றிருந்த கௌசல்யன் தேசியத் தலைவருடன் கலந்துரையாடிவிட்டு மட்டக்களப்பு நோக்கி வந்து கொண்டிருந்த போதுதான் அத்துயரச் சம்பவம் இடம்பெற்றது.

மார்ச் 7ம் திகதி கிளிநொச்சியிலிருந்து மாமனிதர் சந்திரநேரு மற்றும் அரசியல்துறைப் போராளிகளுடன் தனியார் வேன் ஒன்றில் வந்து கொண்டிருந்த போது வெலிக்கந்தைப் பகுதியில் வைத்து சிறிலங்கா ஒட்டுபடைகளால் வழிமறிக்கப்பட்டு துப்பாக்கிப் பிரயோகம் செய்தபோது லெப். கேணல் கௌசல்யன் வீரச்சாவடைந்தார். இவருடன் மேஜர் புகழவன் (சிவலிங்கம் சுரேஷ் தன்னாமுனை)இ மேஜர் செந்தமிழன் (தம்பிராசா கந்தசாமிஇ சின்னவத்தை)இ 2ம் லெப்.விதிமாறன் (சிவபாதம் மதன்இ செட்டிபாளையம்)இ மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு மற்றும் வாகன சாரதி எஸ்.விவேகானந்தமூர்த்தி ஆகியோரின் உயிர்கள் பறிக்கப்பட்டன.

சிறிலங்கா படையினரின் முழுமையான கட்டுப்பாட்டுப் பகுதியில் வைத்து போர் நிறுத்த உடன்படிக்கை அமுலிலிருந்த காலத்தில் ஈவிரக்கமற்ற முறையில் துரோகிகள் இந்தப் படுகொலையை நடத்தியிருந்தனர். கௌசல்யனை வீரமரணம் கேட்டு தமிழர் தாயகம் மட்டுமல்லஇ சர்வதேசமே கலங்கிப்போனது. ஐ.நாவின் செயலாளர் நாயகம் கொபி அனானே இந்தப் படுகொலையை கண்டித்து அறிக்கை விட்டார். முஸ்லிம் சகோதர்களும் வாய்விட்டு அழுதனர்.

போர் நிறுத்தம்இ சமாதானம் என கூறி நயவஞ்சகத்தனமாக சிங்கள அரசு இந்தப் படுகொலையைச் செய்தது. கௌசல்யன் மற்றும் போராளிகளின் இறுதி வணக்க நிகழ்வில் தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வன்இ முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமார் உட்பட துறைசார் பொறுப்பாளர்கள்இ தளபதிகள்இ போராளிகள் வருகை தந்து கதறி அழுதனர். அந்தக் காட்சி இன்றும் உள்ளத்தை உருக்குகின்றது.

ஆனால் இன்னும் கொலையாளிகளின் கொடூரங்கள் இன்றும் அந்த வெலிக்கந்தைப் பகுதியில் தொடர்கதையாகும் வகையில் தான் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பணியாளர்கள் ஐவர் மிருகத்தனமாக ஆயுததாரிகளால் கடத்தப்பட்டுள்ளனர். மற்றும் ஐவருடன் வாகனத்தையும் காணவில்லை என்பது இங்கு சுட்டிக் காட்டப்பட வேண்டியது.

இதேவேளை வெலிக்கந்தையில் லெப்.கேணல் கௌசல்யன் மற்றும் போராளிகள் மீதான தாக்குதலில் படுகாயமடைந்த அம்பாறை மாவட்ட தமிழ்க் கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அ.சந்திரநேரு பெப்ரவரி 8ம் நாள் மரணமடைந்தார்.

இவரது மரணம் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்குப் பேரிழப்பாக இருந்தது. 06.40.1944 ல் பிறந்த இவர் தந்தை அறப்போர் அரியநாயகத்தை போன்று தமிழினத்தின் உரிமைக்காக பாடுபட்டு உழைத்தார்.

இவரின் தீவிர செயற்பாடுகளை பொறுக்க முடியாத சிறிலங்கா படைத்தரப்பு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 1983ம் ஆண்டு கைது செய்தது. 86ம் ஆண்டு வரை மூன்று வருடங்கள் பூசா சித்திரைவதை முகாமில் இருந்து விடுதலையான இவர் தமிழ்த் தேசியத்திற்காக அர்பணிப்புக்களுடன் சேவையைத் தொடர்ந்தார்.

இதன் பலாபலன் கடந்த 2001ம் ஆண்டு சிறிலங்காவின் 12வது பொதுத் தேர்தலில் இவரை வேட்பாளராக நிறுத்துவதற்கு மக்கள் விரும்பினர். மக்களின் விருப்புக்கமைய தலைமை வேட்பாளராக இவர் 4ம் இலக்கத்தில் போட்டியிட்டு 27000 வாக்குகளை பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். மாவட்டத்தில் இவர் ஐந்தாவது நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். தமது குறுகிய நாடாளுமன்றப் பதவிக் காலத்தில் மக்களுக்குச் சிறந்த முறையில் சேவையாற்றினார்.

எனினும் 13வது நாடாளுமன்றத் தேர்தலில் இவரது வெற்றி துரதிஷ்டவசமாகக் கிடைக்காது போனாலும் மாவட்டத்தில் மக்களின் குறை நிறைகளை இனங் கண்டு அவற்றிற்குத் தீர்வு காண்பதில் அதிக அக்கறை காட்டினார்.

சுனாமிப் பேரழிவின் பின்னர் அதிக உயிரிழப்புக்களை சந்தித்த அம்பாறை மாவட்ட மக்களின் துயர்துடைப்புக்காக அயராது பாடுபட்டார். அது மாத்திரமின்றி அவர் தமிழ்த் தேசியத்தின் மீதும் தேசியத் தலைமை மீதும் கொண்டிருந்த பற்றுறுதி மிகப் பெரியது. துரோகக் கும்பலால் இவர் சுட்டுக் கொல்லப்பட்டது யர்களின் மத்தியில் தேசியத் தலைவர் அவர்கள் சந்திரநேரு அவர்களுக்கு உயர் தேசிய விருதான மாமனிதர் விருது வழங்கி உயர் நிலைப்படுத்தியிருந்தார்.

இவர் தேசியத்திற்காக செய்த சேவையினை மாமனிதர் விருது வெளிப்படுத்துகின்றது என்றே கூறவேண்டும்.

ஆண்டு ஒன்றாகிறது. வெலிக்கந்தை படுகொலையின் துயரநினைவுகள் இன்னும் தாயக மக்களின் நெஞ்சை சுட்டெரிக்கிறது. அந்த சுட்டெரிப்பு தேச விடுதலையை விரைவாக வென்றெடுக்க வழிகோலும். எதை இலட்சியமாகக் கொண்டு தேசியத் தலைவரின் வழி நடத்தலில் இறுதிவரை நின்று வழிகாட்டிய கௌசல்யனின் போரியல் வாழ்வு தாயக உறவுகளுக்கு சரித்திரமாகி விட்டது. அவனது கடந்த கால வரலாறுகளை கண்ணுற்று எம்மை பலப்படுத்துவோம்.

தகவல் மூலம்- ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காலநதியின் கௌசல்யனே!

த.ஆவர்த்தனா

கொண்ட இலட்சியம் குன்றிடாத

கொள்கை வீரனே அண்ணா கௌசல்யன்

எண்பத்தொன்பதில் எதிரியை அழிக்க - உன்

கால்கள் விரைந்தன பாசறை நோக்கி

மீன்பாடும் தேன் நாட்டில் மட்டுமல்ல - நின்பணி

களணிகள் நிறை வன்னி மண்ணிலே

தமிழிழ விடுதலைப் போராட்ட வரலாற்றில்

தாய் சமராம் ஜெயசிக்குறுவிலும்

தடம் பதித்தாய் விடுதலை வெல்ல

சிறந்த வீரனென செயலிலே காட்டி

அரசியல் பணியிலும் முன்னின்று உமைத்தவன் நீ

சாதி மத பேதமின்றி

கல்வி உலகில் கருத்தறித்தவன்

உணவு பரிமாறுவதிலிருந்து

உணர்வுகளை புரிந்து கொள்ளவும்

கௌசல்யனே உனக்கு நிகர் நீதானடா

அமைதியான உன் புன் சிரிப்புக்குள்

ஆழமான அர்த்தம் புதைந்திருக்கும்

மண்ணில் நீ மடிந்த போது

பல நூறு புதிய கரம் பிறப்பெடுக்க

விடியும் எம் தேசம் விரைவில்

காத்திருக்கும் நின் கல்லறையில்

கண்ணீர் கொண்டு நாம் அஞ்சலிக்கவில்லை

கனவினை நனவாக்க விரைந்திடுவோம் களம் நோக்கி

பறக்கும் புலிக்கொடி கோண மலையில் - நின்

கனவும் நனவாகும் அன் நாளில்.

த.ஆவர்த்தனா

வவுனியா.

தகவல் மூலம்- ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மூங்கிலாற்றில் லெப். கேணல் கௌசல்யன் உள்ளிட்ட மாவீரர்களின் முதலாண்டு நினைவு கூரல்

கடந்த வருடம் படுகொலை செய்யப்பட்ட லெப். கேணல் கௌசல்யன் உள்ளிட்ட மாவீரர்கள் மற்றும் மாமனிதர் சந்திரநேரு ஆகியோரது முதலாமாண்டு நினைவு கூரல் மூங்கிலாற்றில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சிறிலங்கா இராணுவமும் அதனுடன் சேர்ந்தியங்கும் குழுவும் கடந்த வருடம் (07.02.05) மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் கௌசல்யன், மேஜர் புகழன், மேஜர் செந்தோழன், இரண்டாம் லெப். விதிமாறன், மாமனிதர் சந்திரநேரு ஆகியோரின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் மூங்கிலாற்றில் அமைந்துள்ள மட்டு-அம்பாறை மாவீரர் நினைவு மண்டபத்தில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.

மட்டு. அம்பாறை தொடர்பகப் பொறுப்பாளர் இராசு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரினை சீடோ நிறுவன உதவி இணைப்பாளர் அகிலன் ஏற்றிவைத்தார்.

தமிழீழத் தேசியக் கொடியினை அம்பாறை மாவட்ட நிர்வாகப் பொறுப்பாளர் காண்டீபன் ஏற்றினார்.

மாவீரர்களின் திருவுருவுப் படங்களுக்கு சுடரேற்றி மலர்மாலை அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

லெப். கேணல் கௌசல்யனின் திருவுருவப்படத்திற்கு ஜெயந்தன் படையணியின் நிர்வாகப் பொறுப்பாளர் நளன்,

மேஜர் புகழனின் திருவுருவப்படத்திற்கு ஜெயந்தன் படையணிப் போராளி மேனன்,

ஜர் செந்தமிழனின் திருவுருவப்படத்திற்கு மதிவாளன் மாஸ்ரர்,

2 ஆம் லெப் விதிமாறன் திருவுருவப்படத்திற்கு ஜெயந்தன் படையணிப் போராளி பிரியதர்சன்,

மாமனிதர் சந்திரநேரு திருவுருவப்படத்திற்கு சீடோர் நிறுவனப் பணிப்பாளர் தில்லைநாயகி

ஆகியோர் சுடர்ஏற்றி மலர் மாலை அணிவித்தனர்.

அதன் பின்னர் அகவணக்க நிகழ்வும் மலர் வணக்க நிகழ்வும் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மட்டு. அம்பாறை தொடர்பகப் பொறுப்பாளர் இராசு நினைவுரையை ஆற்றினார்.

இந்நிகழ்வில் பெருமளவான போராளிகளும் மக்களும் கலந்து கொண்டனர்.

தகவல் மூலம்- புதினம்.கொம்

கெளசல்யன் இறந்து 5,6 நாட்களின் பின்பு நான் கண்டி செல்வ வினாயகர் கோவிலுக்கு சென்றிருந்தேன். இந்திய வம்சவளித்தமிழர் ஒருவரினைக்கோவில் சந்தித்தேன். அவர் கெளசல்யன் இறந்ததினால் கவலைப்படுவதாகவும் தாங்கள்(மலையகத்தமிழர்கள்) பயமில்லாமல் இருப்பதற்கு தமிழீழ விடுதலிப்புலிகள் பலமாக இருப்பது தான் காரணம் என்றார்.

கெளசல்யன் பற்றி தகவல்களுக்கும் ஏனைய தகவல்களுக்கும் நன்றிகள் மேகநாதன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர் தாயகம் எங்கும் இன்று லெப் கேணல் கௌசல்யன் நினைவு நிகழ்வு

லெப்.கேணல் கௌசல்யன், மாமனிதர் சந்திரநேரு மற்றும் மூன்று போராளிகள் வீரச்சாவடைந்ததன் ஓராண்டு நினைவு நிகழ்வு இன்று தமிழர் தாயகம் எங்கும் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்படவுள்ளது. கடந்த வருடம் பெப்ரவரி 07ம் நாள் கிளிநொச்சியில் தேசியத் தலைவரைச் சந்தித்து விட்டு மட்டு. மாவட்டம் திரும்பிக் கொண்டிருந்த மட்டு. அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் லெப்.கேணல் கௌசல்யன், மேஜர் புகழன், மேஜர். செந்தமிழன், 2ம்லெப். விதிமாறன், மா மனிதர் சந்திரநேரு, வாகனச்சாரதி விவேகானந்தமூர்த்தி ஆகியோர் வெலிக்கந்தைப் பகுதியில் வைத்து துரோ கிகளின் தாக்குதலில் உயிரிழந்தனர்.

இதன் ஓராண்டு நினைவு நிகழ்வு இன்று தாயகமெங்கும் உணர்வெழுச்சியுடன் நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதான நிகழ்வு இன்று அம்பிளாந்துறை கௌசல்யன் கல்லூரியில் பி.ப 4.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இவைதவிர மகிழவெட்டுவானிலும், நிகழ்வுகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தகவல் மூலம் - ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கௌசல்யனின் இலட்சிய கனவுகள் நனவாகும்

ஆண்டு ஒன்றுக்கு முன் ஒரு தடவை நினைத்துப் பார்ப்போம். தமிழர் தாயகம் பதறித் துடித்தது. அதுதான் மட்டு அம்பாறை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராகவிருந்த லெப்.கேணல் கௌசல்யன் மற்றும் மூன்று போராளிகள் படுகொலை செய்யப்பட்ட துயரச் செய்தி அது.

தேசியத் தலைவனிடம் சென்று தமது சேவைக்காக மீண்டும் திரும்பிக் கொண்டிருந்த போது வெலிக்கந்தைப் பகுதியில் வைத்துச் சிங்களக் கூலிப் படையும், அந்தக் கூலிப் படைக்கு ஏவல் செய்யும் துரோகிகளும் கோழைத்தனமாக நடத்திய தாக்குதல் அது.

பல களம் கண்ட வீரர்கள். பல களம் காணத் துடித்த வீரர்கள். போர் நிறுத்த உடன்படிக்கையும், அதன் விதி முறைகளையும் செம்மையாகக் கடைப்பிடித்து வந்ததுடன் போர் நிறுத்தக் காலத்தில் எதிரி இப்படித் தாக்குவான் என்று அறிந்திராத நிலை, கொடியவர்களின் துப்பாக்கிகள் கோழைத்தனமாகக் கௌசல்யன் உட்பட மற்றும் மூன்று போராளிகளின் உயிர்களையும் பறித்தெடுத்து விட்டது. இந்த நயவஞ்சகத் தாக்குதலில் படுகாயமடைந்த அம்பாறை மாவட்ட முன்னாள் தமிழ்க் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு படுகாயமடைந்தார். இவர் மறுநாள் உயிரிழந்தார். இது அம்பாறை மாவட்ட தமிழ் மக்களிடையே இன்னும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மட்டு. அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராகவிருந்த லெப். கேணல் கௌசல்யன் தமிழ் பேசும் சமூகங்கங்களிடையே ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்காக அயராது பாடுபட்டவர்.

போர்க் காலச் சூழலில் இரு சமூகங்களிடையிலே இருந்து வந்த கசப்புணர்வு, சந்தேகப் பார்வை என்பவற்றைக்களைந் தெறிந்து முஸ்லிம் உறவுகளுடனும் நட்புறவு பூண்டு அவர்கள் எதிர் நோக்கிய நீண்ட காலப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்த கருணா தேசத் துரோகம் செய்து தமிழ்த் தேசியத்துக்கு எதிராக மாறிய போது அந்தத் துரோகியின் பிடியிலிருந்து விடுபட்டு வன்னி சென்ற போராளிகளில் ஒருவனாகத் தேசியத் தலைவன் மீதான தமது பற்றையும், தேசியத் தலைவனின் கீழ் அணிதிரண்டு விடுதலையை வென்றெடுக்க வேண்டுமென்ற அவசியத்தை வலியுறுத்தினார்.

கருணாவும், கருணாவின் சகாக்களும் கிழக்கில் பிரதேசவாதத்தைத் தூண்டி வட பகுதி வர்த்தகர்களை மிரட்டி, வெளியேற்றி, ஒரு குழப்பகரமான சூழலை உருவாக்கிய போது அதனை முறியடித்து மக்களை தெளிவுபடுத்தியதுடன், தேசியத் தலைவன் மீது தென்தமிழீழ மக்கள் கொண்டிருக்கும் அந்தப் பற்றினை வெளிப்படுத்தினார்.

சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட போது துயர் துடைப்புப் பணிகளில் இரவு பகல் பாராது சேவைகளைச் செய்து வந்த கௌசல்யன் அந்த மக்களின் பிரச்சினைகளைக் கண்டு கேட்டறிந்து தீர்வு காண்பதற்கான முயற்சிகளிலும் அயராது பாடுபட்டார்.

மட்டு. அம்பாறை மாவட்டத்தின் கல்வி நிலை மிகப் மோசமாகப் பின்னடைந்திருந்தது. குறிப்பாக விடுதலைப்புலிகளின் நிர்வாகப் பகுதியிலுள்ள வறிய கிராமங்களின் கல்வி நிலையை உயர்த்துவதற்கான பல்வேறு வேலைத் திட்டங்களைத் துறைசார்ந்தோரிடம் பகிர்ந்து அதனை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.

ஒட்டு மொத்தத்தில் மட்டு. அம்பாறை மாவட்டத்தில் லெப்.கேணல் கௌசல்யன் அவர்கள் போராளியாக பொது மக்களின் சேவகனாக நின்று தமது சேவையைத் தேசியத்துக்கும், தாயக மக்களுக்கும் அற்பணிப்பு டன் செய்துள்ளார் என்றால் அது மிகையாகாது.

இவ்வாறான ஒரு சிறந்த வீரனை, மக்கள் சேவகனை, விடுதலையை நேசித்த தேசியத் தலைவனின் கீழ் நின்ற பொறுப்பாளனை, தமிழர் தாயகம் இழந்து ஓராண்டாகின்றது. லெப்.கேணல் கௌசல்யனுடன் அரசியல்துறைப் போராளிகளான மேஜர் செந்தமிழன், மேஜர் புகழவன், 2ம் லெப்.விதிமாறன் மற்றும் வாகன சாரதியான விவேகானந்தமூர்த்தி மற்றும் மாமனிதர் அ. சந்திரநேரு ஆகியோரும் இந்தத் துரோகிகளின் தாக்குதலில் உயிரிழந்தனர். இவர்களுக்கும் அனுதாபங்கள் உரித்தாகட்டும். ஆண்டு ஒன்று ஓடி மறைந்தாலும் அந்தத் துயரம் இன்னும் தமிழினத்தின் நெஞ்சில் மாறாத ரணமாகவுள்ளது.

இன்னும் துரோகிகளின் கொடூரத்தனத்துக்கு முற்றுப்பள்ளி வைத்து இதயசுத்தியுடன் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான எந்த நடவடிக்கைகளும் சிறிலங்கா அரசு ஏற்படுத்த முனையவில்லை.

எனவே எந்த இலட்சியக் கனவுகளை லெப்.கேணல் கௌசல்யன் கண்டாரோ, அதனைத் தலைவனின் வழியில் நின்று சக போராளிகள் சரித்திரம் படைப்பார்கள் அதற்கான காலம் நாள் வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கின்றது.

நன்றி- ஈழநாதம் மட்டக்களப்பு பதிப்பு-

ஆசிரியர் தலையங்கம்(07/02/06)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்க அரசாங்கம் மீது கேணல் பானு கடும் சாடல்

தமிழ் மக்களின் நாளாந்த வாழ்க்கையில் இயல்பு நிலையை உருவாக்குவதில் சிறிலங்கா அரசாங்கம் அக்கறையற்று இருப்பதாக விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட தளபதி கேணல் பானு சாடியுள்ளார்.

லெப். கேணல் கௌசல்யன், மாமனிதர் சந்திர நேரு உள்ளிட்டோரின் முதலாண்டு நினைவு கூரல் நிகழ்வு நேற்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

இந்நிகழ்வையொட்டி படுவான்கரை அம்பிளாந்துறையில் கௌசல்யன் கல்வி நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் கேணல் பானு பேசியதாவது:

துணை இராணுவக் குழுக்களினது ஆயுதங்களைக் களைந்து வெளியேற்றுதல், மக்களின் நாளாந்த வாழ்க்கையில் இயல்பு நிலையைத் தோற்றுவித்தல் ஆகியவை அமைதிப் பேச்சுக்கள் தொடர்ந்து நடைபெறுவதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால் சிறிலங்கா அரசாங்கம் இதைச் செயற்படுத்த மறுக்கிறது.

தமிழ்த் தேசிய இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணுவதில் சிறிலங்கா அரசாங்கம் அக்கறையின்றி உள்ளது.

சுயநலன்களுக்காக தேசிய ஐக்கியத்தை சிதைக்க முயன்ற துரோகிகளின் அனைத்துத் தாக்குதல்களையும் எமது போராளிகள் முறியடித்துள்ளனர். ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்ற நிலையில் தங்களது சொந்த மக்களுக்கு எதிராக அவர்கள் திரும்பியுள்ளனர்.

மக்களின் விடுதலைக்காக தொடக்க காலத்தில் பணியாற்றிய கௌசல்யன், ஆயுத இயக்கத்திலும் கடுமையாகவும் சிறப்பாகவும் செயற்பட்டார். தமிழர் நெஞ்சங்களில் என்றென்றும் அவர் வாழ்ந்து கொண்டிருப்பார் என்றார் கேணல் பானு.

மேலும் சிறிலங்கா அரசாங்கம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து கௌசல்யன் மேற்கொண்ட அபிவிருத்தித் திட்டப் பணிகளையும் கேணல் பானுந் நினைவு கூர்ந்தார்.

இந்நிகழ்வில் பங்கேற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்த மூர்த்தி பேசியதாவது:

அமைதி முயற்சிகளில் அக்கறை இருப்பதாகக் காட்டுகிற சிறிலங்கா அரசாங்கம், தேச விடுதலைக்கு எதிரான சக்திகளுடன் இணைந்து தேச விடுதலைப் போராட்டத்தை அழிக்க முயற்சிக்கிறது. இந்திய-சிறிலங்கா ஒப்பந்தம் தொடங்கி ரணில் விக்கிரமசிங்க கால ஒப்பந்தம் வரை தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையைக் குலைக்கும் வகையில் வலைப் பின்னல்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் அந்த வலைப்பின்னல்களை செயலிழந்து போகச் செய்யும் ஆற்றல் கொண்டவராக எமது தலைவர் உள்ளார்.

தமிழர் இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண சிறிலங்கா அரசாங்கம் எதுவித முன் நகர்வுகளை மேற்கொள்ளாத நிலையில் அனைத்துத் தமிழ் மக்களும் தலைவரின் கரத்தை வலுப்படுத்த ஒன்றிணைய வேண்டும் என்றார் அவர்

தகவல் மூலம்- புதினம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்பிளாந்துறையில் கௌசல்யன் கல்வி நிலையத்தில் ஓராண்டு நினைவு நாளில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்தில் உள்ள அம்பிளாந்துறையில் கௌசல்யன் கல்வி நிலையத்தில் ஓராண்டு நினைவு நாளில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்று.

கடந்த ஆண்டு மடஅம்பாறை அரசியல் துறைப்பொறுப்பாளராக இருந்த லெப்.கேணல் கௌசல்யன் மற்றும் மேஜர் புகழன் மேஜர் செந்தமிழன் 2ம் லெப்.விதிமாறன் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் சந்திரநேரு வாகன சாரதி விவேகானந்தமூர்த்தி ஆகியோர் வெலிக்கந்தை பகுதியில் வைத்து துரோகிகளால் படுகொலை செய்யப்பட்டனர்.

பொதுசுடர் தளபதி பிரபா தேசிய கொடியினை கட்டளை தளபதி கேணல் பானு ஏற்றினார்கள். இவர்களின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்ததுடன் தளபதிகளால் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இரங்கல் உரையும் இடம்பெற்றது. அத்துடன் பாடசாலை மாணவர்களின் கவிதைகள் மற்றும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது.மாவட்ட கட்டளைத்தளபதி கேணல் பானு உட்பட பல தளபதிகள் பொறுப்பாளர்கள் போராளிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டார்கள்.

தகவல் மூலம்- பதிவு.கொம்

புகைப்படங்களுக்கும் செய்திக்கும்

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமது தேசிய ஒருமைப்பாட்டை சிதைக்க ஒருவர் முற்பட்ட போது பொங்கி எழுந்தவர் கௌசல்யன்: மட்டு.மாவட்ட கட்டளைத் தளபதி கேணல் பானு

எமது தேசிய ஒருமைப்பாட்டை இங்கு ஒருவர் சிதைக்க முற்பட்டபோது அதனை பொறுக்க முடியாது பொங்கி எழுந்தவர் கௌசல்யன். தமிழீழ விடுதலைப் போரில் இணைந்து மக்களுக்கும், மண்ணிற்கும் பாரிய பணிகளை செய்து தமிழீழ வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவன் கௌசல்யன்

இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட கட்டளைத் தளபதி கேணல் பானு தெரிவித்தார். அம்பிளாந்துறையில் நடைபெற்ற லெப். கேணல் கௌசல்யன் ஒராண்டு நிறைவு தின நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போது இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து உரை நிகழ்த்துகையில்:-

எமது இனம் பல வழிகளில் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு பல வழிகளில் பேசி எமது பிரச்சினைகள் தீர்கப்படாத போது ஆயுத போராட்டத்தினை ஆரம்பித்த போது இதில் இணைந்து உறுதியுடன் நின்று இம் மண்ணுக்கு போராடினான்.

எமது மண் மீட்புப் போரில் 17900க்கு மேற்பட்ட மாவீரர்களை இழந்து நிற்கின்றோம் எமது மண் விடுதலை பெறவேண்டும் எமது எதிர்கால சந்ததியினர் சுவிட்சமாக வாழ வேண்டும் என்பதாகாகவே இந்த 17900 மேற்பட்ட மாவீர்களையும் பொது மக்களையும் இழந்து இருக்கின்றோம்.

கௌசல்லியனைப் பொறுத்த மட்டில் தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டும் என அர்வம் கொண்டவர். அதன் மூலமே போராளிகளை யும் மக்களையும் வளர்த்துக் கொள்ள முடியும் என எதிர் பார்த்து நம்பிக்கை கொண்டு இருந்தார்.

நான் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் மூலம் சிறிலங்கா அரசு எமக்கு எதுவிதமான தீர்வனையும் வழங்க முன்வரவில்லை. இவ்வாறான நிலையில் இன்று யுத்தநிறுத்தம் அமுல் செய்து 4 வருடங்கள் ஆகின்ற நிலையில் கூட எதுவித தீர்வும் இன்றிய நிலையில் நாம் உள்ளோம்.

இதைவிட எமது நிலைப்பாட்டை சர்வதேச சமூகத்திற்கு சொல்ல புதிய அரசிற்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கி இருக்கின்றார் எமது தலைவர். எனவே எமது தலைவரது காலத்தில் அனைவரும் ஒரு அணியாக நின்று எமது உரிமையை வென்றெடுக்க அனைவரது கரங்களும் ஒன்றுபட வேண்டும் என கட்டளைத் தளபதி பானு குறிப்பிட்டார்.

தகவல் மூலம் - ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு

http://www.battieezhanatham.com/2005/modul...rticle&sid=5518

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்பிளாந்துறை கௌசல்யன் கல்லூரியில் லெப்.கேணல் கௌசல்யனின் ஓராண்டு நிகழ்வு

லெப்.கேணல் கௌசல்யன், மாமனிதர் சந்திரநேரு மற்றும் மூன்று மாவீரர்களின் ஓராம் ஆண்டு நினைவு நேற்று முன்தினம் மட்டக்களப்பு மாவட்டமெங்கும் உணர்வெழுச்சியுடன் அனுஸ்டிக்கப்பட்டது.

இதன் பிரதான நிகழ்வு நேற்றுமுன்தினம் மாலை அம்பிளாந்துறை கௌசல்யன் கல்லூரியில் மாவட்ட மாணவர் அமைப்புப் பொறுப்பாளர் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது.

இதன் ஆரம்ப நிகழ்வாக கௌசல்யன் கல்லூரியின் பெயர்ப்பலகை அமைந்துள்ள இடத்திலிருந்து அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலய மாணவகளின் பாண்ட் வாத்திய இசையுடன் மாவீரர்களின் பெற்றோர்கள், தளபதிகள், பொறுப்பாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் போராளிகள் என அனைவரும் நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.

இதன் முதலாவது நிகழ்வாக பொதுச்சுடரினை தளபதி பிரபா, தேசியக் கொடியினை மட்டக்களப்பு மாவட்டக் கட்டளைத் தளபதி கேணல் பானு ஆகியோர் ஏற்றி வைத்தனர்.

லெப்.கேணல் கௌசல்யன் அவர்களின் திருவுருவப் படத்திற்கான ஈகச்சுடரினை அவரது மனைவி விஜயமலர் ஏற்றி வைத்தார். அதனையடுத்து ஏனைய மாவீரர்களின் திருவுருவப் படத்திற்கு அவர்களது பெற்றோர்கள், சகோதரர்கள் ஏற்றி வைத்தனர்.

தொடர்ந்து லெப்.கேணல் கௌசல்யன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலையினை அவரது தாயாரான நாகம்மா ஏற்றி வைத்தார். அதனையடுத்து மாமனிதர் சந்திரநேரு அவர்களின் திருவுருவப்படத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி. க.தங்கேஸ்வரி அணிவித்தார். அதனையடுத்து மாவீரர்களின் திருவுருவப்படத்திற்கு மட்.மாவட்டத் தளபதி நாகேஸ், மாவட்டப் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளர் கீர்த்தி மாவட்ட நிதித்துறைப் பொறுப்பாளர் அகச்சுடர் ஆகியோர் அணிவித்தனர்.

பின்னர் கட்டளைத் தளபதி கெணல் பானு, மாவட்ட அரசியல்து றைப் பொறுப்பாளர் தயாமோகன், மற்றும் போராளிகள், பெற்றோர்கள் மலர் வணக்கம் செலுத்தினர்.

தொடர்ந்து கலை நிகழ்வுகள் அதிதிகள் உரை இடம்பெற்றது. அரசியல்துறைப் பொறுப்பாளர் சீராளன், மாவட்ட மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்நிலவு மாவட்ட கலைபண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் தமிழார்வன், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொது மக்கள், போராளிகள் என நூற்றிற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தகவல் மூலம் - ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு

புகைப்படங்களுக்கும் செய்திக்கும்

http://www.battieezhanatham.com/2005/modul...rticle&sid=5519

  • 11 months later...

Lt.col_kowsalyan.jpg

இன்று லெப். கேணல் கெளசல்யன், மாமனிதர் சந்திரநேரு உள்ளிட்டோரின் இரண்டாவது நினைவு தினம்.

களத்தில் இன்னொரு பதிவு

http://www.yarl.com/forum3/index.php?showtopic=9403

முற்றம் பகுதியில் ஒரு கவிதை

http://www.yarl.com/articles/node/749

சிங்களக் குண்டர்களின் சூழ்ச்சியினால் கொல்லப்பட்ட மாவீரன் கெளசல்யனுக்கும், அவருடன் மாவீரர்களான மற்றைய போராளிகளிற்கும், மாமனிதர் சந்திர நேருவிற்கும் எனது இதயபூர்வமான கண்ணீர் அஞ்சலிகள்!

memorial%20arrangement.jpg

ஓரு நாட்டின் அமைச்சருக்கு ஒப்பான பதவியிலிருந்த தமிழீழ மக்களின் தொண்டன் கெளசல்யனை தந்திரமாகக் கொன்று சமாதான ஒப்பந்தத்தை சாக்கடையில் தூக்கி எறிந்தது சிறீ லங்கா சிங்கள இனவெறி அரசுதான் என்பதை இச்சமயத்தில் நாம் மறந்து விடக்கூடாது! மாவீரன் கெளசல்யனின் கொலைகுப் பின்பே சிறீ லங்காவில் பிரச்சினை திரும்பவும் தலைதூக்கியது என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது. சிங்கள இனவெறி அரசு உண்மையான சமாதானத்தில் எவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளது என்பதற்கு மாவீரன் கெளசல்யனின் கொலை ஒரு சிறந்த உதாரணம்!

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரைச் சந்தித்து விட்டு திரும்பும் வழியில் சிங்கள அரசின் கட்டுப்பாட்டில் வைத்து, எதிரிகளால் நயவஞ்சகமாகச் சாகடிக்கப்பட்ட லெப்.கேணல் கௌசல்யனதும், அவர்கள் கூடச் சென்றவர்களினதும் தாயகக் கனவு விரைவில் ஈரேறும்.

மறைந்த தியாகிகளுக்கு நினைவஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

மண்ணுக்காக மரணித்த மாவீரர்களுக்கு நினைவஞ்சலிகள்

எம் மண்ணின் வீரப்புதல்வர்களுக்கு என் நினைவஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

சமாதான காலத்தில் தமிழன் கண்ட சரித்திரப் படைப்புக்கள் இவைதான். :rolleyes:

வீரமும் திறமையும் மிக்க போராளிகளை வேட்டையாட அனுமதித்ததைவிட சரித்திரம் என்ன படைக்கப்பட்டது..??!

தமிழீழக் கனவோடு வீழ்ந்த அனைவருக்கும் வீர நினைவஞ்சலிகள். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

எம் மண்ணின் வீரப்புதல்வர்களுக்கு என் நினைவஞ்சலிகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாவீரர்களுக்கு என் நினைவஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

லெப்டினன் கேணல் கெளசல்யன், மாமனிதர் சந்திர நேரு மற்றும் இவர்களுடன் மாவீரரான மற்றைய போராளிகளுக்கும் எனது கண்ணீர் அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கௌசல்யன் அண்ணாவிற்க்கு எனது வீரவணக்கம்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.