Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையிலிருந்து கல்விகற்க லண்டன் வரும் மாணவர்களின் அவல நிலை : சசீதரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எந்த வெளிநாடு என்றில்லை எப்படியும் நாட்டைவிட்டு விட்டு வெளியேறும் மனோநிலையிலேயே எம்மவர்கள் உள்ளார்கள் .அவர்களில் எவ்வித தப்புமில்லை நாட்டு நிலைமை அப்பிடி .

எந்த நாட்டிற்கும் வந்தபுதிதில் கஸ்டப்படவேண்டித்தான் இருக்கும் (அதற்காக பாலியல் பிரச்சனை எல்லாம் தாங்கமுடியாது ) பின்னர் இரண்டு ,மூன்று வருடங்களின் பின் அவர்கள் நிலைமை முற்றுமாக மாறிவிடும் .

நீஸ்டனில் இருந்து விக்டோரியாவிற்கு சயிக்கிளில் போனது நினைவு வருகின்றது .

எம்மை விட நீண்ட காலமாக விடுதலை வேண்டிப் போராடும் பலஸ்தீனியர்கள்.. மேற்கு நாடுகளுக்கு ஓடிவந்திருக்கும் தொகையோடு ஒப்பிடும் போது எம்மவர்கள்.. குறுகிய காலத்தில் ஓடி வந்த தொகை மிக அதிகம். இதில் முக்கிய காரணம்.. எம்மவர்கள் போரால் பாதிக்கப்பட்டதை விட.. போரை சாட்டு வைத்து வளர்ந்த நாடுகளில் உள்ள வாய்ப்புக்களைப் பயன்படுத்தி அங்கு செற்றிலாகி விடுவது தான். தமிழர்களிடம் போருக்கு முன்னரே.. இந்த அவா மிகுந்து கிடந்தது..! போர் அவர்களின் அவாவிற்கு தீனிபோட்டதே அன்றி.. தமிழர்கள்.. உண்மையில்.. போரால் பாதிக்கப்பட்டு தான் ஓடினார்கள் என்பது முற்றிலும் உண்மை அல்ல. போரால் பாதிக்கப்பட்ட அநேக மக்கள்.. தற்போதும்.. தாய் நிலத்தில் தான் வாழ்கின்றனர். அல்லது இந்தியாவில் வாழ்கின்றனர். காரணம்.. அவர்களிடம் போதிய பொருண்மிய வசதி இருக்கவில்லை மேற்கு நாடுகள் வரை வந்து சேர.

குறிப்பாக.. உயர்.. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த தமிழர்களே அதிகம் வெளிநாடுகளை நோக்கி படையெடுத்தனர். போராட்டத்தில் இவர்களின் பங்கு வறிய.. மக்களின் பங்கோடு ஒப்பிடும் போது குறைவு என்பதும் சுட்டிக்காட்டத் தக்கது..!

இன்று.. இவற்றை எல்லாம் மறைக்க.. ஊருக்கு உதவினம்.. புடுங்கினம் என்று கொஞ்சம் பேர் தங்களைத் தாங்களே சமாளிப்பதும்.. ஏமாற்றுவதுமாக இருக்க.. இன்னும் கொஞ்சப் பேர்.. அதுவும் இன்றி.. தாங்களும் தங்கட பாடுமாக உள்ளனர்.

இன்றைய போர்க்குற்ற விசாரணைக்கான அழுத்தங்கள் ஆகட்டும்.. முன்னைய போராட்டங்களாகட்டும்.. ஒரு குறிப்பிட்ட இன உணர்வாளர்களே அதிலும் மாணவர்களே அதிகம் அவற்றை முன்னெடுக்கின்றனர். தாயகத்தில் இருந்து வந்துள்ள மாணவர்கள் கூட பிற மாணவர்களோடு இந்த விடயத்தில் நல்ல ஒத்துழைப்பை நல்கி வருகின்றனர். ஆனால் இந்த அளவுக்குக் கூட.. போரை சாட்டு வைத்து வந்து குடியேறியோர் உதவுவதில்லை. எல்லாம்.. வெறும் வார்த்தை அளவில் தான்.. அதுவும் ஊரை ஏமாற்ற..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிகழ்காலப் புரிதல் இன்றிய பந்திகள்.. பன்னாடைகளை விடக் கேவலம்..! பன்னாடை ஆகக்குறைந்தது கள்ளில் வீழ்ந்து செத்து மிதக்கும் வண்டுகள்.. தேனீக்களை.. வடிக்கவாவது உதவும்.. இது எதுக்கும் உதவாது..! :lol::icon_idea:

நிகழ்கால புரிதல்?????

அதுதான் போனவருசம் காசுகட்டி படிக்கவெண்டு வந்த பொடியன்......சிற்ரிசன் எடுக்க அவதிப்படுறானாம்.படிச்ச நீங்கள் உதவி செய்யுங்கோ :(

எம்மை விட நீண்ட காலமாக விடுதலை வேண்டிப் போராடும் பலஸ்தீனியர்கள்.. மேற்கு நாடுகளுக்கு ஓடிவந்திருக்கும் தொகையோடு ஒப்பிடும் போது எம்மவர்கள்.. குறுகிய காலத்தில் ஓடி வந்த தொகை மிக அதிகம். இதில் முக்கிய காரணம்.. எம்மவர்கள் போரால் பாதிக்கப்பட்டதை விட.. போரை சாட்டு வைத்து வளர்ந்த நாடுகளில் உள்ள வாய்ப்புக்களைப் பயன்படுத்தி அங்கு செற்றிலாகி விடுவது தான். தமிழர்களிடம் போருக்கு முன்னரே.. இந்த அவா மிகுந்து கிடந்தது..! போர் அவர்களின் அவாவிற்கு தீனிபோட்டதே அன்றி.. தமிழர்கள்.. உண்மையில்.. போரால் பாதிக்கப்பட்டு தான் ஓடினார்கள் என்பது முற்றிலும் உண்மை அல்ல. போரால் பாதிக்கப்பட்ட அநேக மக்கள்.. தற்போதும்.. தாய் நிலத்தில் தான் வாழ்கின்றனர். அல்லது இந்தியாவில் வாழ்கின்றனர். காரணம்.. அவர்களிடம் போதிய பொருண்மிய வசதி இருக்கவில்லை மேற்கு நாடுகள் வரை வந்து சேர.

குறிப்பாக.. உயர்.. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த தமிழர்களே அதிகம் வெளிநாடுகளை நோக்கி படையெடுத்தனர். போராட்டத்தில் இவர்களின் பங்கு வறிய.. மக்களின் பங்கோடு ஒப்பிடும் போது குறைவு என்பதும் சுட்டிக்காட்டத் தக்கது..!

இன்று.. இவற்றை எல்லாம் மறைக்க.. ஊருக்கு உதவினம்.. புடுங்கினம் என்று கொஞ்சம் பேர் தங்களைத் தாங்களே சமாளிப்பதும்.. ஏமாற்றுவதுமாக இருக்க.. இன்னும் கொஞ்சப் பேர்.. அதுவும் இன்றி.. தாங்களும் தங்கட பாடுமாக உள்ளனர்.

இன்றைய போர்க்குற்ற விசாரணைக்கான அழுத்தங்கள் ஆகட்டும்.. முன்னைய போராட்டங்களாகட்டும்.. ஒரு குறிப்பிட்ட இன உணர்வாளர்களே அதிலும் மாணவர்களே அதிகம் அவற்றை முன்னெடுக்கின்றனர். தாயகத்தில் இருந்து வந்துள்ள மாணவர்கள் கூட பிற மாணவர்களோடு இந்த விடயத்தில் நல்ல ஒத்துழைப்பை நல்கி வருகின்றனர். ஆனால் இந்த அளவுக்குக் கூட.. போரை சாட்டு வைத்து வந்து குடியேறியோர் உதவுவதில்லை. எல்லாம்.. வெறும் வார்த்தை அளவில் தான்.. அதுவும் ஊரை ஏமாற்ற..!

அதாவது ஈழத்தமிழன் வேறு நாடுகளில் அகதி அந்தஸ்து கோருவதற்கு தகுதியற்றவன்.

  • கருத்துக்கள உறவுகள்

நிகழ்கால புரிதல்?????

அதுதான் போனவருசம் காசுகட்டி படிக்கவெண்டு வந்த பொடியன்......சிற்ரிசன் எடுக்க அவதிப்படுறானாம்.படிச்ச நீங்கள் உதவி செய்யுங்கோ :(

படிக்க என்று வந்து படிக்க சிரமப்படுபவர்களுக்கு என்றால் உதவலாம். படிக்க என்று வந்து சிற்றிசன் எடுக்க விரும்பிறவைக்கு சொல்லக் கூடிய ஒரே புத்திமதி.. அகதிகள் என்று வந்து உள்ள தமிழர்களைப் பின்பற்றுவது தான். போரை.. அகதிகள் என்ற சொல்லைப் பயன்படுத்தி சிற்றிசன் சிப் எடுக்க படிப்பு.. பட்டம்.. தேவையில்லை. நல்லா பொய் சொல்லவும்.. ஊரைக் காட்டிக் கொடுக்கவும்.. ஏமாற்றவும் தெரிந்திருந்தால் போதும்..! அது எங்கட ஆக்களில் அநேகருக்கு கை வந்த கலை. அதை நாங்கள் சொல்லிக் கொடுக்க முடியாது. காரணம்.. முன் அனுபவம் இல்லை. :lol::icon_idea:

நிகழ்கால புரிதல்?????

அதுதான் போனவருசம் காசுகட்டி படிக்கவெண்டு வந்த பொடியன்......சிற்ரிசன் எடுக்க அவதிப்படுறானாம்.படிச்ச நீங்கள் உதவி செய்யுங்கோ :(

அதாவது ஈழத்தமிழன் வேறு நாடுகளில் அகதி அந்தஸ்து கோருவதற்கு தகுதியற்றவன்.

ஈழத்தமிழன் என்ற ஒரே காரணத்தைக் காட்டி தமிழர்கள் அகதி அந்தஸ்துக் கோர தகுதி உடையவர்களா என்பது கேள்விக்குரிய ஒன்று. காரணம்.. ஈழத்தமிழர்களிலும்.. பலர்... போரால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் கிடையாது. போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்டவர்கள் கிடையாது. ஆனால் அகதி அந்தஸ்தை மட்டும் பெற்றுக் கொள்கின்றனர். இதுதான் யதார்த்த உண்மை. :lol::icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரிஎல்லாம் கிடக்கட்டும்...உங்கடை படிப்பை வைச்சு ஊரிலை என்ன செய்யிற பிளான்?

ஈழத்தமிழன் என்ற ஒரே காரணத்தைக் காட்டி தமிழர்கள் அகதி அந்தஸ்துக் கோர தகுதி உடையவர்களா என்பது கேள்விக்குரிய ஒன்று. காரணம்.. ஈழத்தமிழர்களிலும்.. பலர்... போரால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் கிடையாது. போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்டவர்கள் கிடையாது. ஆனால் அகதி அந்தஸ்தை மட்டும் பெற்றுக் கொள்கின்றனர். இதுதான் யதார்த்த உண்மை.

உங்களுக்கும் டக்களஸ் தேவானந்தாவுக்கும் வித்தியாசமில்லை என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அது சரிஎல்லாம் கிடக்கட்டும்...உங்கடை படிப்பை வைச்சு ஊரிலை என்ன செய்யிற பிளான்?

தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம் சொல்லித் தந்த வழியில் செல்ல ஆசை. நிறைய திட்டங்கள் இருந்தன. அவற்றிற்கான வாய்ப்பை உருவாக்கிக் கொள்ள முனைவேன். குறிப்பாக விவசாயத்துறையில் நவீன மரபணு தொழில்நுட்ப முறை மூலமான.. பாரம்பரிய பயிர்களுக்கு பாதிப்பை உண்டு பண்ணாத வகையில்.. ஊட்டச் சத்துள்ள நிறை உணவுகள் எல்லோருக்கும் கிடைக்க வகை செய்தல்..!

நிச்சயமாக சிங்களவர்கள் மட்டும் பயன்பெறும் வண்ணம்.. பெற்ற அறிவை பயன்படுத்தமாட்டேன். ஆகவே சந்தர்ப்பதற்கு ஏற்ற வகையில் சூழ்நிலைக்கு ஏற்பத்தான் செயற்பட முடியும். :):icon_idea:

அது சரிஎல்லாம் கிடக்கட்டும்...உங்கடை படிப்பை வைச்சு ஊரிலை என்ன செய்யிற பிளான்?

உங்களுக்கும் டக்களஸ் தேவானந்தாவுக்கும் வித்தியாசமில்லை என நினைக்கின்றேன்.

டக்கிளஸ்.. உள்ளூரில் நின்று காட்டிக் கொடுத்துப் பிழைக்கிறான். பல தமிழர்கள் வெளிநாட்டிற்கு வந்து காட்டிக் கொடுத்து அகதி என்ற முத்திரையுடன்.. சிற்றிசன் சிப் எடுக்கின்றனர். இதில் நான் எதனையும் என் அறிவுக்கு எட்ட செய்யவில்லை..! :):icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம் சொல்லித் தந்த வழியில் செல்ல ஆசை. நிறைய திட்டங்கள் இருந்தன. அவற்றிற்கான வாய்ப்பை உருவாக்கிக் கொள்ள முனைவேன். குறிப்பாக விவசாயத்துறையில் நவீன மரபணு தொழில்நுட்ப முறை மூலமான.. பாரம்பரிய பயிர்களுக்கு பாதிப்பை உண்டு பண்ணாத வகையில்.. ஊட்டச் சத்துள்ள நிறை உணவுகள் எல்லோருக்கும் கிடைக்க வகை செய்தல்..!

நிச்சயமாக சிங்களவர்கள் மட்டும் பயன்பெறும் வண்ணம்.. பெற்ற அறிவை பயன்படுத்தமாட்டேன். ஆகவே சந்தர்ப்பதற்கு ஏற்ற வகையில் சூழ்நிலைக்கு ஏற்பத்தான் செயற்பட முடியும். :)

சந்தர்ப்பம் சூழ்நிலை எண்டு கூட்டிகழிச்சு பார்த்தால் சிங்களவனுக்கும் நல்லது செய்வம் எண்டுறியள்....செஞ்சோற்று கடனாக்கும் :D

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அண்ணாவின் பல கருத்துக்களுடன் உடன்படுகிறேன். எனது ஏராளமான நண்பர்களும் பிரித்தானியாவில் இருக்கிறார்கள். இடைக்கிடை ஸ்கைப்பில் கதைக்கும் போது கஷ்டங்களை சொல்லுவார்கள் ஆனால் அவர்களில் சிலர் வார இறுதி நாட்களில் பாட்டி தண்ணி எண்டு பிசியாகத்தான் இருக்கிறார்கள். பிரித்தானிய அரசு கட்டுப் பாடுகளை விதிப்பதற்கு அங்குள்ள மாணவர்கள் சிலரும் (எம்மவர்கள் மட்டுமல்ல) காரணம் தான். இதுகளுடன் ஒப்பிடும் போது அவுசுக்கு மாணவர்களாக வந்து படித்து வேலையும் செய்து பட்டம் பெறுவது இலகு. குறிப்பாக கேள்வி அதிகம் உள்ள துறைகளான கணக்கியல், தகவல் தொழில் நுட்பம் படித்தவர்களுக்கு வதிவிட விசாவிற்கு விண்ணப்பிப்பது இலகு. ஆனால் தமிழ் மாணவர்கள் வருவதற்கான சட்டங்கள் கொஞ்சம் இறுக்கம். குறிப்பாக வடக்கு கிழக்கில் பிறந்தவர்கள் மாணவர்களாக வருவது குதிரை கொம்பாகி இருக்கிறது. காரணம் அப்படி மாணவர்களாக வந்த பலர் வந்து இறங்கி அடுத்த நிமிஷம் அசைலம் அடித்தது தான். இங்கு எனக்கு இரு யாழ் இந்து பெடியங்களை தெரியும், இருவரும் இலங்கை உயர்தரத்தில் கணித துறையில் மூண்டு பாடங்களிலும் அதிவிசேட சித்தி பெற்ற ஆக்கள். இலங்கை பல்கலை அனுமதியையும் எடுத்துக்கொண்டு பிறகு இங்கும் பொறியியல் படிக்க விண்ணப்பித்து வந்தார்கள். வந்து சில மாதங்களிலேயே அசைலம். இவளத்துகும் அவர்கள் இருவரும் போரினால் நேரடியாக பாதிக்கப் படாதவர்களே. இவர்களால் ஊரிலே இரண்டுபேர் பொறியியல் படிக்கும் வாய்ப்பையும் இழப்பதோடு அவுசுக்கு மாணவர் விசாவில் வரும் வாய்ப்பை பல தமிழ் மாணவர்கள் இழக்கவும் காரணமாகிறார்கள். எனது தம்பி கூட இங்கு வருவதற்கு மாணவர் விசாவிற்கு விண்ணப்பித்து அது நிராகரிக்கப்பட்டு பின்னர் இலங்கையிலுள்ள அவுஸ் தூதரக மட்டத்தில் சில உயர் அதிகாரிகளை தெரிந்த காரணத்தினால், அவர்களின் சிபாரிசு மூலம் மூண்டு நாட்களில் விசா கிடைத்து வந்தான்.

மாணவர் விசாவில் வெளிக்கிட விரும்புபவர்கள் பிரித்தானியாவை மறப்பது நல்லது. அப்பிடி பிரித்தானியா போனாலும் உடனேயே யாராவது சிட்டிசன் உள்ள பெட்டையாய் பாத்து காட்டுவது தான் தப்பிக்க ஒரே வழி. பிரித்தானியாவில் இருந்த எனது நண்பன் ஒருத்தனும் பொறுத்து பொறுத்து பாத்தான், முடியவில்லை கனடா சிட்டிசன் பெட்டை ஒண்டை கட்டி கனேடிய வதிவிட உரிமை கிடைத்து ஆள் எஸ்கேப்.

மாணவர் விசாவில் வெளிக்கிட விரும்புபவர்கள் பிரித்தானியாவை மறப்பது நல்லது. அப்பிடி பிரித்தானியா போனாலும் உடனேயே யாராவது சிட்டிசன் உள்ள பெட்டையாய் பாத்து காட்டுவது தான் தப்பிக்க ஒரே வழி.

என்னய்யா இது. இப்படி ஒரு சிஸ்டம் இங்கு இருப்பதாக யாரும் சொல்லவே இல்லையே. :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

சந்தர்ப்பம் சூழ்நிலை எண்டு கூட்டிகழிச்சு பார்த்தால் சிங்களவனுக்கும் நல்லது செய்வம் எண்டுறியள்....செஞ்சோற்று கடனாக்கும் :D

உண்மையில் பலருக்கு செஞ்சோற்றுக் கடன் கழிக்க.. வேண்டிய கடமை உண்டு. காரணம்... சிங்களவனில் இருந்தவங்க தான்.. பல்கலைக்கழகக் கல்வி ஊட்டினவங்க. ஆனால் அதேவேளை அந்தப் பல்கலைக்கழக கல்வியைப் பெற.. பெற்ற பாஸினை நீட்டித்து தந்து.. அதற்கு காரணமாகி நின்ற.. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அதைவிட பெரும் செஞ்சோற்றுக்கடன் கழிக்க வேண்டி இருக்குது.அதற்கும் மேலாக அரிவரி சொல்லித் தந்த.. தாய் மண்ணிற்கு செஞ்சோற்றுக்கடன் கழிக்க வேண்டி இருக்குது.

இன்றைய சூழ்நிலையில்.. தாயகத்தில் எங்கட தாய் மண்ணிற்கு செய்யும் பணிகள்.. சிங்களவனையும் போய் சேரும். காரணம்.. அது சிங்கள ஆக்கிரமிப்பில் உள்ளது. அதுமட்டுமன்றி.. தாயக விளை பொருட்கள் எப்படியும் சிங்களவனைப் போய் சேரும். அது தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலத்திலும்.. கப்பலில் போயின தான். அது எமது பொருண்மியம் சார்ந்தது.

வெளிநாட்டில் இருந்து கொண்டு 100% சிங்கள எதிர்ப்பை காட்டுவதாக நடிக்கலாம்.. ஆனால் தாயகத்தில் அது சாத்தியமில்லை. இதுதான் அங்குள்ள யதார்த்தம். சிங்கள மக்கள் வலுக்கட்டாயமாக எமது எல்லையை எட்டாதவரை எமது எல்லைக்குள் வராதவரை அவர்கள் எதிரிகள் கிடையாது. ஆனால் அதற்காக பேரினவாதச் சிங்களத் தலைமைகளும்.. அரசியலும்.. அதன் இராணுவ இயந்திரமும்.. மன்னிக்கக் கூடிய சிங்களம் அல்ல..!

மாணவர் விசாவில் வெளிக்கிட விரும்புபவர்கள் பிரித்தானியாவை மறப்பது நல்லது. அப்பிடி பிரித்தானியா போனாலும் உடனேயே யாராவது சிட்டிசன் உள்ள பெட்டையாய் பாத்து காட்டுவது தான் தப்பிக்க ஒரே வழி. பிரித்தானியாவில் இருந்த எனது நண்பன் ஒருத்தனும் பொறுத்து பொறுத்து பாத்தான், முடியவில்லை கனடா சிட்டிசன் பெட்டை ஒண்டை கட்டி கனேடிய வதிவிட உரிமை கிடைத்து ஆள் எஸ்கேப்.

முதலில் உங்களின் நீண்ட அனுபவப் பகிர்விற்கு நன்றி.

இது சொல்வதற்கு.. எழுதுவதற்கு இலகு. ஒரு சில அதிஸ்டசாலிகள் அப்படி செய்து கொள்கிறார்கள். ஆனால் பல தமிழ் மாணவிகள் கூட இன்று பாதிக்கப்பட்டு நிர்க்கதியாக நிற்பதை நான் கண்டிருக்கிறேன்.அவர்களுக்கு உதவ யாரும் இல்லை. அவர்களில் பெரும்பாலானோர்.. எப்படியாவது ஊர் போக வழிகாட்டுங்கள் என்றுதான் புலம்புகிறார்கள். :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமியண்ணா மற்றும் நெடுக்குத்தம்பி இருவருக்கும் தாய் மண்ணின் சார்பில் ஒரு வேண்டுகோள்.

நமக்குள் உதைபட்டு அந்த பொன்னான நேரங்களை வீணாக்காது மண்ணுக்கான பணிகளைச்செய்வோம்.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

என்னய்யா இது. இப்படி ஒரு சிஸ்டம் இங்கு இருப்பதாக யாரும் சொல்லவே இல்லையே. :unsure:

தப்பு தப்பாவே யோசிக்கிறீங்க பாஸ். நான் கட்டினதுக்கு பிறகு நடக்கிறத சொன்னனாக்கும் :rolleyes:

முதலில் உங்களின் நீண்ட அனுபவப் பகிர்விற்கு நன்றி.

இது சொல்வதற்கு.. எழுதுவதற்கு இலகு. ஒரு சில அதிஸ்டசாலிகள் அப்படி செய்து கொள்கிறார்கள். ஆனால் பல தமிழ் மாணவிகள் கூட இன்று பாதிக்கப்பட்டு நிர்க்கதியாக நிற்பதை நான் கண்டிருக்கிறேன்.அவர்களுக்கு உதவ யாரும் இல்லை. அவர்களில் பெரும்பாலானோர்.. எப்படியாவது ஊர் போக வழிகாட்டுங்கள் என்றுதான் புலம்புகிறார்கள். :):icon_idea:

நீங்கள் சொல்லுவது சரிதான் அத்துடன் இது பற்றிய பிரித்தானிய குடிவரவு சட்ட விபரங்கள் எனக்கு தெரியாது. கடந்த இரு வருடங்களில் எனக்கு தெரிந்த, இங்கிருக்கும் இரு அண்ணாமார் பிரித்தானியாவில் படித்துக் கொண்டிருந்த தமிழ் பெண்களை தான் திருமணம் செய்தார்கள். ஒருவர் ஏற்கனவே வந்துவிட்டா மற்றவர் அண்மையில் தான் திருமணம் செய்தபடியால் விசாவிற்காக விண்ணப்பித்திருக்கிறார்கள். இப்படி சிலராவது செய்வது நல்லது.

இன்னொரு விடயம் ஊருக்கு விடுமுறையில் போகும் பிரித்தானிய வாழ் எங்கள் மாணவர்கள் அளவுக்கு மீறி காட்டும் படமும் ஊரில் இருக்கும் மற்றைய மாணவர்களையும் காணியை பூமியை வித்தாவது வெளிநாடு எண்டு வெளிக்கிடும் ஆசையை தூண்டுகிறது. அண்மையில் நடந்த வல்லிபுரக்கோயில் திருவிழாவிற்காக பிரித்தானியாவில் இருந்து டிக்கெட் போட்டு சிலர் போய் இறங்கியிருந்தாங்கள். திருவிழாப் படங்களுடன், கடற்கரை பாட்டி அது இது எண்டு ஊருப்பட்ட படங்களை முகப் புத்தகத்திலயும் இணைத்திருந்தார்கள். அங்கிருப்பவர்களுக்கு இந்த "எடுவை"களை பார்த்த உடன் தாமும் வெளிக்கிட வேணும் எண்ட எண்ணம் வருவது இயல்பே. மற்றயது ஊரிலிருக்கும் உறவுகளுக்கு உண்மை நிலையை கூறுவதில்லை. எனது ஒரே தெருவில் வசிக்கும் என்னோட ஒண்டாப் படித்த நண்பனும் பிரித்தானியாவில் மேற்படிப்புக்காக போயிருக்கிறான். நான் கடந்த வருடம் ஊர் போன போது அவன் வீட்டையும் போயிருந்தேன். அவனின் அம்மாவும் எதோ கதையில் அப்பாவியாக "தம்பியும் கெதியில சிட்டிசன் கிடைக்கும் எண்டு சொன்னவன்" எண்டு சொன்னா. அவன் என்னுடன் தொடர்பில் இருப்பதால் அவனின் உண்மை நிலை எனக்கு தெரியும், பாவம் அந்த தாய் கவலைப் படக் கூடாது எண்டு உண்மைகளை மறைத்து வச்சிருக்கிறான் :(.

Edited by Thumpalayan

இன்னொரு விடயம் ஊருக்கு விடுமுறையில் போகும் பிரித்தானிய வாழ் எங்கள் மாணவர்கள் அளவுக்கு மீறி காட்டும் படமும் ஊரில் இருக்கும் மற்றைய மாணவர்களையும் காணியை பூமியை வித்தாவது வெளிநாடு எண்டு வெளிக்கிடும் ஆசையை தூண்டுகிறது.

அகதி, மாணவறேன்று இல்லாமல் பொதுவாக இங்க வெள்ளையின்டதை கைரேகை தேயும் மட்டும் கழுவோ கழுவேன்று கழுவிப் போட்டு, அதை மறைக்க கிரடிட் கார்ட்டில கடனெடுத்து ஊருக்கு போய் படம் காட்டுபவர்களால்தான் பெரிய பிரச்சனை. உண்மையச் சொன்னாலும் சனம் நம்புதில்லை.

Edited by தப்பிலி

நூறு வீதம் உண்மை :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.