Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லிபிய அதிபர் கடாபி கொல்லப்பட்டார்

Featured Replies

  • தொடங்கியவர்

ஈராக்கை தாக்கும் பொழுது அரபிய நாடுகள் எல்லாம் ஒற்றுமையாய் நின்றிருந்தால் இந்த நிலை வந்திருக்காது.

பிரச்சனையானவர்களை கூட்டத்திலிருந்து தனிமைப்படுத்தி, ஒவ்வொருத்தரா அழிக்கிறார்கள். அடுத்து சிரியாவோ ஈரானோ தெரியாது.

சர்வாதிகளை அழித்து மதத் தீவிரவாதிகளின் கைகளுக்கு ஆட்சி மாறுகிறது.

பெரிய பகிடி என்னவென்றால்,

அரபுலகில் சண்டித்தனம் `காட்டித் திரியும்சின்ன நாட்டாண்மை பிரித்தானியாவில் முஸ்லிம் குழந்தைகள் பிறக்கும் வீதம் வெள்ளைக் குழந்தைகள் பிறக்கும் வீதத்தை விட எட்டு மடங்கு அதிகம் உள்ளதாக புள்ளி விபரங்கள் சொல்கிறது.

Edited by தப்பிலி

  • Replies 60
  • Views 5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பெரிய பகிடி என்னவென்றால்,

அரபுலகில் சண்டித்தனம் `காட்டித் திரியும்சின்ன நாட்டாண்மை பிரித்தானியாவில்

முஸ்லிம் குழந்தைகள் பிறக்கும் வீதம் வெள்ளைக் குழந்தைகள் பிறக்கும் வீதத்தை விட மடங்கு அதிகம் உள்ளதாக புள்ளி விபரங்கள் சொல்கிறது.

இது உலகமெல்லாம் இதே நிலைதானே...

இஸ்லாம் ஒரு நாள் உலகை ஆளும்.

லிபிய இடைக்கால அரசின் மீதான மேற்குலக சந்தேகம்

லிபியா சுதந்திரமடைந்து விட்டதாக அதன் புதிய ஆட்சியாளர்கள் அறிவித்து ஒரு தினந்தான் ஆகியிருக்கும் நிலையில், அங்கு இரண்டு விடயங்கள் மேற்குலகை அவர்கள் மீது சந்தேகத்துடன் திரும்பிப் பார்க்கச் செய்திருக்கின்றன.

முதலாவது விடயம் மோதல்களின் இறுதிக்கட்டத்தில் இடைக்கால நிர்வாகப் படையினர், அதாவது கடாபி எதிர்ப்புப் படையினர் நடந்து கொண்ட விதம் குறித்ததாகும்.

கடாபியின் வசம் இறுதியாக எஞ்சியிருந்த சேர்த் நகரில் இடைக்கால நிர்வாக படைகளின் வசம் இருந்த ஒரு விடுதியில் கடாபி ஆதரவாளர்கள் 53 பேர் ஒட்டுமொத்தமாக கொலை செய்யப்பட்டதாக மனித உரிமைகள் அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் குற்றஞ்சாட்டியுள்ளது.

கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் அந்த விடுதியின் தோட்டத்தில் ஒட்டுமொத்தமாகக் கிடந்ததாகவும், அவர்களில் சிலரது கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டதாகவும், பல இடங்களிலும் துப்பாக்கிக் குண்டுகள் காணப்பபட்டதாகவும் அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

அந்த விடுதியின் சுவர்களின் கடாபி எதிர்ப்புப் படையினரின் பல பிரிவுகளின் பெயர்கள் எழுதப்பட்டிருந்தன.

அவர்கள் அந்த விடுதியை ஒரு சிறையாகப் பயன்படுத்தியதாக உள்ளூர் மக்கள் கூறியிருக்கிறார்கள்.

அங்கு கொல்லப்பட்டவர்கள் அனைவரும் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களில் ஒருவர் அங்கு இருந்த கடாபி ஆட்சியின் அதிகாரி என்றும், இன்னுமொருவர் இராணுவ அதிகாரி என்றும் உள்ளூர் மக்கள் கூறியிருக்கிறார்கள்.

ஆகவே அவர்கள் கைது செய்யப்பட்டு ஒட்டுமொத்தமாகக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று கூறியுள்ள ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு, அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளது.

இந்தப் படுகொலை நடவடிக்கையைப் பார்க்கும் போது இடைக்கால நிர்வாக கவுன்ஸிலின் படையினர் தாம் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்ற மன நிலையில் செயற்பட்டிருப்பது போல் தென்படுவதாக அது குற்றஞ்சாட்டியுள்ளது.

அடுத்த விடயம் சுதந்திரப் பிரகடனத்தில் இடம்பெற்ற குறிப்புகள் சம்பந்தப்பட்டது. அவை ஒருவகை கடும்போக்கு இஸ்லாமிய சாயலில் இருந்ததாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.தமது நாட்டுச் சட்டங்களின் முக்கிய மூலமாக இஸ்லாம்தான் இருக்கும் என்பதை புதிய ஆட்சியாளர்கள் ஏற்கனவே அறிவித்துவிட்டார்கள்.

ஆனால், லிபியாவின் எதிர்காலம் குறித்த பிரகடனம் மேற்குலகைச் சேர்ந்த பலரது கண்களை சந்தேகத்துடன் விரியச் செய்துள்ளது.

சில வகைக் கடன்களுக்கான வட்டிகளை ரத்துச் செய்தல், ஒன்றுக்கும் அதிகமான மனைவிகளை கொண்டிருப்பதற்கான தடையை அகற்றுதல் போன்றவை மேற்குலகைச் சேர்ந்தவர்களை சந்தேகமடையச் செய்துள்ளன.இடைக்கால நிர்வாக கவுன்ஸிலின் பேச்சாளர் இவற்றை நிராகரித்திருக்கிறார்.

ஒரு பெரிய முஸ்லிம் நாடு இப்படியான விடயங்களைத்தானே பின்பற்றும் என்று இதற்கு ஆதரவாக வாதிடப்படலாம்.அத்துடன் இஸ்லாமிய சட்டங்களைப் பின்பற்றும் நாடுகளில்கூட பல்வேறு பாங்கிலான ஆட்சிகளுக்கு வாய்ப்பிருக்கிறது என்பதும் உண்மை.

அதுமாத்திரமன்றி, இடைக்கால நிர்வாக கவுன்ஸிலில் அங்கம் வகிக்கும், இஸ்லாமியவாதிகள் மற்றும் மதசார்பற்றவர்களுக்கு இடையிலான முரண்பாடுகளுக்கு மத்தியில்தான் இந்த சுதந்திரப் பிரகடனம் கூட வந்திருக்கிறது.

ஒரு இக்கட்டான, இலகுவில் நொருக்கிப் போய்விடக் கூடிய தருணத்தில் ஒற்றுமையை நிலைநாட்டுவதற்கான முயற்சியாகவும் இது பார்க்கப்படலாம்.

இந்த நிலையில் தற்போதைக்கு இவற்றை சந்தேகக் கண் கொண்டு பார்க்கத் தேவையில்லை என்று மேற்குலகம் நினைக்கலாம்.ஆனால், இந்தப் பிரேரணைகள் எல்லாம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படப் போகின்றன என்பதையும் அது அரபு உலகின் புது வசந்தத்தை பிரதிபலிக்குமா என்பதையும் மேற்குலகு மிகவும் உன்னிப்பாக அவதானிக்கும்.

http://www.bbc.co.uk...byadought.shtml

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சிப்படையின் நோக்கங்களைக் கண்டு உதவிய நேட்டோ நாடுகளுக்கு இப்ப கலக்கமாம்..! :rolleyes:

இஸ்லாமியச் சட்டம், பலதார திருமணத்துக்கு எதிரான கட்டுப்பாடு நீக்கம் என அடிப்படை இஸ்லாம் கோட்பாடுகளுக்குச் செல்கிறார்கள்..! :unsure:

ஒசாமா பின்லேடனை ஊட்டி ஊட்டி ஒரு காலத்தில் வளர்த்தது அமெரிக்காவேதான்.

பட்டும் தெளியவில்லை போல்தான் தெரிகிறது .

லிபிய பாலைவனப் பிரதேசத்தின் இரகசியமான இடமொன்றில் கேணல் கடாபியின் சடலம் அடக்கம்!

லிபிய தேசிய இடைக்கால சபையின் படைத்தரப்பினரால் சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கேணல் கடாபியின் சடலம் அந்நாட்டின் பாலைவனப் பிரதேசம் ஒன்றில் இரகசியமாக அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

இவருடன் அவரின் மகனான Muatassimனதும், முன்னாள் படைத்துறை அமைச்சர் Abu Bakr Younisனதும் சடலமும் லிபிய பாலைவனப் பிரதேசம் ஒன்றில் இரகசியமாக அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகசர்வதேச செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அயினும். இவர்களின் சடலங்கள் லிபிய பாலைவனப் பிரதேசத்தின் எந்தவிடத்தில் அடக்கம் செய்யப்பட்டது என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை என இச்செய்தி நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்நிகழ்வின் போது கேணல் கடாபியின் ஒருசில உறவினர்களும், சில அதிகாரிகளும் கலந்து கொண்டதாகவும், இஸ்லாமிய முறைப்படி இவர்கள் சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தேசிய இடைக்கால சபையின் அதிகாரிகளை மேற்கோள் காட்டி இந்நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடாபி மற்றும் அவரின் மகனின் உடல்கள் திங்கட்கிழமை வரை மிஸ்ராட்டா நகரில் இருக்கும் ஒரு குளிரூட்டப்பட்ட இறைச்சிக் கூடத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.

இதனிடையில் கேணல் கடாபியின் கட்டுப்பாட்டின் கீழ் இறுதியாக எஞ்சியிருந்த சேர்ட்டே நகரில் தேசிய இடைக்கால சபை படைத்தரப்பினரின் கட்டுப்பாட்டின் கீழிருந்த ஒரு விடுதியில் கடாபி ஆதரவாளர்கள் 53 பேர் கொலை செய்யப்பட்டதாக மனிதவுரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது.

இவ்வாறு கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் அவ்விடுதியின் தோட்டத்தில் காணப்பட்டதாகவும், அவர்களில் சிலரின் கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டதாகவும் மனிதவுரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்விடுதியின் சுவர்களின் கேணல் கடாபிக்கு எதிரான படைத்தரப்பினரின் பல பிரிவுகளின் பெயர்கள் எழுதப்பட்டிருந்ததுடன், இவ்விடுதியை தேசிய இடைக்கால சபையின் படைத்தரப்பினர் ஒரு சிறையாகப் பயன்படுத்தியதாகவும் தெரிய வந்துள்ளது.

தேசிய இடைக்கால சபையின் படைத்தரப்பினாரால் இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் அனைவரும் லிபியாவைச் சேர்ந்தவர்கள் என்றும், இவர்களில் ஒருவர் கடாபியின் ஆட்சிக் காலத்தின் முக்கிய அதிகாரி எனவும், மற்றுமொருவர் படையதிகாரி எனவும் உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

இந்நிலையில், இத்தகைய படுகொலைகளைச் செய்தவர்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மனிதவுரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதேவேளை, லிபியா சுதந்திரம் அடைந்துவிட்டதாக தேசிய இடைக்கால சபை வெளியிட்டுள்ள சுதந்திப் பிரகடனத்தில் தீவிர இஸ்லாமிய சாயல் தென்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

http://ponguthamil.c...43-916bb330ea03

Edited by akootha

  • தொடங்கியவர்

இது உலகமெல்லாம் இதே நிலைதானே...

இஸ்லாம் ஒரு நாள் உலகை ஆளும்.

அவர்களின் பெருக்கம் போகிற போக்கில் அதுதான் நடக்கும். ஏன் ஒபாமா கூட முஸ்லிம் கலப்புத்தான். இன்று அவர் வெறும் முத்திரை குத்துபவராக இருந்தாலும், எதிர்காலத்தில் பெரும்பான்மையாகவுள்ள இனத்திடம் இருந்து வரும் தலைவனின் செயற்பாடு வேறுவிதமாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

04.jpg 30.10.11 ஹாட் டாபிக் <p><u>லிபியாவின் 42 ஆண்டுகால சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்திருக்கிறது. அதிபர் மம்மர் கடாஃபி கொல்லப்பட்டிருக்கிறார். லிபிய மக்களை ஒரு சர்வாதிகாரியிடம் இருந்து காப்பாற்றுவதில் அமெரிக்காவிற்கு என்ன அக்கறை இருக்க முடியும்? என்ற கேள்வியில் இருந்து கடாஃபி கொலையை அணுகுவதுதான் நியாயமாக இருக்க முடியும்.

லிபியாவின் உள்நாட்டுப் புரட்சி கடந்த பிப்ரவரி மாதம்தான் தொடங்கியது. ஆப்கானிஸ்தான், எகிப்து புரட்சிகளைப் போல் லிபியாவில் எழுந்த புரட்சி பெருமளவில் மக்கள் வரவேற்பைப் பெறவில்லை. ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகள் லிபியாவில் பெரும் உள்நாட்டுப் புரட்சி நடப்பதாக தங்கள் ஊடகங்கள் மூலம் உலக நாடுகளை நம்ப வைத்தன. லிபியாவில் குவிந்திருந்த பெட்ரோலும், தங்கம், யுரேனியம் போன்ற உலோகங்களும்தான் அதற்குக் காரணம். அதைக் கொள்ளையடிக்க வேண்டுமானால் ஈராக்கில் செய்தது போல, அமெரிக்கா லிபியாவுக்குள் நுழைந்தாக வேண்டும்.

இந்த திட்டமிடப்பட்ட பின்னணியில்தான் நேட்டோ படைகள் லிபிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக லிபியாவுக்குள் நுழைந்தன. உலகின் பார்வையில் கடாஃபிக்கு எதிரான அமெரிக்காவின் போர் பிப்ரவரியில் ஆரம்பமானதாகத் தெரிந்தாலும், இருபது ஆண்டுகளுக்கு முன்னரே, அந்த வேலைகளை அமெரிக்கா செய்யத் தொடங்கிவி ட்டது என்பதே உண்மை.

எல்லா அரபு நாடுகளையும் போல் லிபியாவிலும் மன்னராட்சி நடந்து கொண்டிருந்த நேரம். மன்னராட்சியின் மீது மக்கள் கொண்டிருந்த வெறுப்பை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார் ராணுவத்தில் மிகச் சாதாரணமான வேலையில் இருந்த மம்மர் கடாஃபி. லிபியாவின் பெரும்பான்மை பழங்குடி இனமான கடாஃபி இனத்தைச் சேர்ந்தவர் மம்மர் கடாஃபி என்பதும் அவருக்கு அதிபர் பதவி கிடைக்கக் காரணமாக இருந்தது.

42 ஆண்டுகளுக்கு முன்னால் திடீரென ஒருநாள் லிபியாவின் அதிபரானார் மம்மர் கடாஃபி. ஒன்றரை மில்லியன் மக்கள் தொகையை மட்டுமே கொண்டிருந்த லிபியா அப்போது மதவாதிகளின் கையில் இருந்தது. மம்மர் ஆட்சிக்கு வந்ததும் லிபியாவில் பெருமளவு மாற்றங்கள் நிகழ்ந்தன. நாட்டின் எண்ணெய் வளங்களை உடனடியாக தேசியமயமாக்கினார். மார்க்சிய சிந்தனைகள் கலந்த புதுமையான இஸ்லாமியத்தை கடைப்பிடிக்க மக்களை வலியுறுத்தினார்.

எந்த அரபு நாடுகளிலும் இல்லாத அளவுக்கு லிபியாவில் பெண்களுக்கு அதிக சுதந்திரம் வழங்கப்பட்டது. பெண்களுக்கு சொத்துரிமையும், கல்வி உரிமையும் வழங்கிய முதல் அரபு நாடு லிபியாவாகத்தான் இருக்க முடியும். இன்று லிபியாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உயர் பதவிகளில் பெருமளவில் பெண்கள் இருப்பதற்கு கடாஃபி ஒரு முக்கியக் காரணம்.

இதை லிபியாவின் மதவாதிகள் எதிர்த்தார்கள். பிரிட்டிஷாரால் முடிசூட்டப்பட்ட இரிடிஸ் மன்னர் கானூஸ் சமூகத்தைச் சேர்ந்தவர். இந்த சமூகத்தினர் கிழக்கு லிபியாவில் அதிகளவில் வசிக்கிறார்கள். இந்த சமூகத்தில் பெரும்பகுதியினர் ஆப்கனின் அல்கொய்தா அமைப்புடன் இணைந்து வேலை செய்து வந்தார்கள். இவர்கள் தாலிபான்களைப் போல லிபியாவின் பெண்களையும் வீட்டுக்குள் பூட்டி வைக்க விரும்பினார்கள். ஆனால் கடாஃபி அவர்களை பொருட்படுத்தவேயில்லை. தன்னுடைய கொள்கைகளுக்கு, ‘‘தாராளவாத இஸ்லாமிய மார்க்கம்’’ என்றும் பெயரிட்டார் கடாஃபி.

உலகின் மூன்றரை மடங்கு எண்ணெய் மற்றும் எரிவாயு வளத்தை கையில் வைத்திருக்கும் லிபிய அதிபர் இப்படி சுதந்திர சிந்தனையோடு இருப்பது அமெரிக்காவின் க ண்களை உறுத்தியது. எண்ணெய் வளங்களை தேசியமயப்படுத்தினால் என்ன செய்ய முடியும் எனக் காத்திருந்த அமெரிக்கா, இந்த பழைமைவாதிகளை ஊக்குவித்து ஆங் காங்கே கிளர்ச்சிகளை நடத்தத் தூண்டியது.

உச்சகட்டமாக, 1986-ம் ஆண்டு லிபியத் தலைநகர் திரிபோலியில் அத்துமீறி நுழைந்த அமெரிக்க விமானம் கடாஃபியின் மாளிகையை04a.jpgக் குறிவைத்து அவரைக் கொலை செய்ய முயற்சித்தது. ஆனால், அந்த தாக்குதலில் இருந்து தப்பித்தார் கடாஃபி. உலகின் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியாக இருந்த கடாஃபியை வீழ்த்துவதற்கு என் னென்ன செய்ய வேண்டுமோ அத்தனை வேலைகளையும் அமெரிக்கா செய்தது. அமெரிக்க உளவுத் துறையான சி.ஐ.ஏ. ‘‘ஜனநாயகத்திற்கான தேசிய அறக்கட்டளை’’ என்ற அமைப்பை லிபியாவில் உருவாக்கி கடாஃபிக்கு எதிராக கிளர்ச்சிகளைத் தூண்டியது.

தன் நாட்டு கிளர்ச்சியாளர்கள் மீது கடாஃபி அரசு நடத்திய தாக்குதலைக் காரணம் காட்டி, 1993-ம் ஆண்டு லிபியா மீது பொருளாதாரத் தடை விதித்தது ஐ.நா. தொடர்ந்து பத்து ஆண்டுகள் நீடித்த இந்த பொருளாதாரத் தடையால், ஆப்பிரிக்காவின் ஒரு மூலையில் இருந்த லிபியா மிக மோசமாக பாதிக்கப்பட்டது. அமெரிக்காவின் சூழ்ச்சியை அறியாத லிபிய மக்களில் பலரும் கடாஃபியின் அரசை விமர்சிக்க நேர்ந்தது. ஆனால் அந்த நேரத்திலும் லத்தீன் அமெரிக்க நாடுகள் கடாஃபியை ஆதரித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

2001 செப்டம்பர் 11 அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு உலகம் முழுவதும் தீவிரவாதம் குறித்த பார்வையில் மாறுபாடு ஏற்பட்டது. அமெரிக்கா அறிவித்த ‘தீவிரவாதத்திற்கு எதிரான போர்’ நடவடிக்கையில் ஆஃப்கானிஸ்தான், ஈராக் நாடுகளுக்கு அடுத்தபடியாக லிபியாவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, கடாஃபிக்கு அமெரிக்க ஆதரவு நிலை எடுப்பதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை.

அல்கொய்தா அமைப்பைப் பற்றிய தங்கள் நாட்டின் உளவுத் தகவல்களையும், அணு ஆயுதச் சந்தை பற்றிய தகவல்களையும் கூட அமெரிக்க உளவுத்துறையிடம் ஒப்படைத்தார் கடாஃபி. இப்படி ஒருவழியாக கடாஃபியை தங்களிடம் சரணடையை வைக்கும் தங்கள் திட்டத்தில் வெற்றி பெற்றது அமெரிக்கா. வீழ்த்துதலின் அடுத்த கட் டமாக லிபியா மீதிருந்த பொருளாதாரத் தடை நீக்கப்பட்டது.

தடை நீங்கியதும், தன்னுடைய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான கொள்கைகளை கைவிடுவதைத் தவிர கடாஃபிக்கு வேறு வழி இருக்கவில்லை. உலக முதலாளிகளுக்கு வழிவிடும் வகையில், தங்கள் நாட்டின் சந்தைகளைத் திறந்து விட்டார். இத்தாலி, நெதர்லாந்து போன்ற நாடுகள் லிபியாவின் எண்ணெய் வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தன. லிபியாவின் எண்ணைய் வர்த்தகத்தில் சீனாவும் முக்கியப் பங்கு வகிக்க ஆரம்பித்தது. இந்த வேலைகளுக்காக சீனாவின் 35 ஆயிரம் தொழிலாளர்கள் லிபியாவில் குடியேறினர்.

ஆப்பிரிக்க, ஆசியப் பிரதேசங்களைக் கட்டுப்படுத்தி, உலகின் எண்ணெய் வளங்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க நினைக்கும் அமெரிக்காவிற்கு லிபியாவில் சீனா மூக்கை நுழைப்பதும் எரிச்சலை ஏற்படுத்தியது. இந்த எண்ணெய் அரசியலின் பின்னணியில்தான் நடந்து முடிந்துள்ளது லிபியப் போரும், கடாஃபி கொலையும்.

எகிப்து, ஏமன் போன்ற அரபு நாடுகளில் நடந்த உள்நாட்டுப் புரட்சியைக் காரணம் காட்டி, சி.ஐ.ஏ. லிபிய கிளர்ச்சியாளர்களை உசுப்பேற்றி விட்டது. விளைவாக, கடந்த பிப்ரவரி மாதம் லிபிய அதிபர் மம்மர் கடாஃபிக்கு எதிராக உள்நாட்டில் போராட்டங்கள் வெடித்தன.

லிபியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல, கடாஃபி பல முயற்சிகள் எடுத்திருந்தாலும், கடந்த பத்தாண்டுகளில் போதுமான அளவுக்கு மக்களின் எதிர்ப்பையும் அவர் சம்பாதித்திருந்தார். அரசு நிறுவனங்களில் கடாஃபியின் குடும்ப ஆதிக்கமும், குடும்ப உறுப்பினர்கள் சேர்த்த சொத்துக்களின் மதிப்பும் லிபிய மக்களிடம் எரிச்சலை ஏற்படுத்தின. ஒரே ஆள் எவ்வளவு நாள்தான் தங்களை ஆட்சி செய்வது என அவர்கள் யோசிக்க ஆரம்பிக்க, பெரும்பான்மை மக்கள் கிளர்ச்சியாளர்களுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

ஆனால், எகிப்தில் நடந்ததைப்போல், சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கி பெருமளவில் போராடிய காட்சிகள் எல்லாம் லிபியாவில் நடக்கவில்லை. ஆனால், அப்படி நடப்பதாக ஊடகங்கள் ஊதிக் காண்பித்தன. கடாஃபிக்கு எதிராகப் போராடிய ‘லிபிய தேசிய மீட்பு முன்னணி’யை பின்னால் இருந்து இயக்கியது அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ. தான்.

கடாஃபி ஆட்சிக்கு வரும்போது ஒன்றரை மில்லியனாக இருந்த லிபிய மக்கள்தொகை இப்போது ஆறரை மில்லியனாக அதிகரித்து விட்டது. மற்ற ஆப்பிரிக்க நாடுகளை ஒப்பிடும்போது லிபியாவில் தனிநபர் வருமானம் அதிகம். எந்த ஆப்பிரிக்க நாடுகளையும் விட அதிகமாக, ஒன்றரை மில்லியன் வெளிநாட்டினர் லிபியாவில் வசிக்கின் றனர். எகிப்துப் புரட்சி நடந்தபோது, லிபியாவில் வசிக்கும் எகிப்தியர்கள், ‘‘லிபியாவில் புரட்சி ஏற்பட வாய்ப்பே இல்லை’’ என்று நம்பிக்கையோடு தெரிவித்திருந்தார்கள்.

பிப்ரவரி மாதம், லிபிய கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக நேட்டோ படைகள் லிபியாவிற்குள் நுழைந்தன. அமெரிக்க கப்பல்கள், எஃப் - 16 விமானங்கள், ஏவுகணைகள் என லிபியா மீது பெரும்போரை நடத்தியது அமெரிக்கா. தலைநகர் திரிபோலியில் உள்ள கடாஃபி மாளிகையைக் குறிவைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. கிள ர்ச்சியாளர்களுக்கு எதிராக கடாஃபியின் படைகள் நடத்திய தாக்குதல்களில் பலியானவர்களை விட, நேட்டோ படைகளின் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகம் என்கிறது லிபிய பத்திரிகை ஒன்று. ஒசாமா பின்லேடனை தேடப்படும் குற்றவாளியாக முதலில் அறிவித்தது லிபியா கடாஃபிதான் என்கிற அரிய செய்தியையும் அந்தப் பத்திரிகை தன் மக்களுக்கு நினைவுபடுத்தியுள்ளது.

புரட்சிப் படைகள் திரிபோலியைக் கைப்பற்றியதும், கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி தலைமறைவானார் கடாஃபி. இதையடுத்து, அமெரிக்க ஆதரவுடன் மகமூத் ஜிப்ரீல் லிபியாவின் தற்காலிக முதல்வராகப் பதவியேற்றார். தொடர்ந்து, தேடுதல் வேட்டை என்கிற பெயரில் பல்லாயிரம் மக்கள் கொல்லப்பட்ட பின்னர், கடாஃபி கொல்லப்பட் டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சொந்த ஊர் சிர்ட்டேயில் பதுங்கு குழியில் மறைந்திருந்த கடாஃபி, கிளர்ச்சியாளர்கள் மற்றும் நேட்டோ படையால் சுட்டுக் கொல்லப்பட்டதாக, லிபிய தற்காலிக அதிபர் மகமூத் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். எண்ணெய் வளத்தை கொள்ளையடிக்க தனக்கு இடையூறாக இருந்த லிபிய நாட்டு அதிபரை கொலை செய்து தனது சர்வாதிகாரத்தை மீண்டும் நிலைநிறுத்தி இருக்கிறது அமெரிக்கா.

கடாஃபியின் மறைவை லிபிய மக்களும் கொண்டாடி வருகின்றனர். 42 ஆண்டுகாலம் ஒரே அதிபரின் சர்வாதிகார ஆட்சியின் கீழ் இருந்த சலிப்பில் எழும் கொண் டாட்டம் அது. ஆனால் லிபிய போராட்டத்தின் உண்மை முகத்தையும், அமெரிக்காவின் சுரண்டல் முகத்தையும் லிபிய மக்கள் இனிதான் சந்திக்க வேண்டியிருக்கும்.

எங்கோ ஒரு மூலையில் ஆப்பிரிக்க நாட்டில் நடக்கும் விஷயம்தானே என லிபியப் போரை நாம் அலட்சியப்படுத்தி விட முடியாது. ஏனெனில், ஒவ்வொரு முறை பெ ட்ரோலுக்காக அமெரிக்கா போர் தொடுக்கும் போதும், உலக அளவில் பெட்ரோலியப் பொருட்களின் விலை யோசிக்க முடியாத அளவிற்கு எகிறுகிறது. அமெரிக்காவின் எண்ணெய் வெறிக்கு, நாம் ஒவ்வொருவரும் தெரியாமலேயே பலியாகிக் கொண்டிருக்கிறோம்.!

ப்ரியா தம்பி

-குமுதம் ரிப்போட்டர்

Edited by கந்தப்பு

எங்கோ ஒரு மூலையில் ஆப்பிரிக்க நாட்டில் நடக்கும் விஷயம்தானே என லிபியப் போரை நாம் அலட்சியப்படுத்தி விட முடியாது. ஏனெனில், ஒவ்வொரு முறை பெ ட்ரோலுக்காக அமெரிக்கா போர் தொடுக்கும் போதும், உலக அளவில் பெட்ரோலியப் பொருட்களின் விலை யோசிக்க முடியாத அளவிற்கு எகிறுகிறது. அமெரிக்காவின் எண்ணெய் வெறிக்கு, நாம் ஒவ்வொருவரும் தெரியாமலேயே பலியாகிக் கொண்டிருக்கிறோம்.!

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையை மாற்றக்கூடிய சக்தி சவூதி அரேபியாவுக்கு உண்டு. அதன் முடிக்குரிய இளவரசர் கொல்லப்பட்டதே இன்று மேற்குலகில் 'பயப்படும்' விடயமாக உள்ளது. யார் அடுத்த மன்னர்?

பல நூறு பேர் மன்னனாக வரும் சந்தர்ப்பம் உள்ளது. இது உள்நாட்டு சண்டைக்கு வழிகோலுமா? அப்படியானால் இன்று 93 டாலராக உள்ள மசகு எண்ணெய் 200 டாலர் ஆகுமா?

மன்னர் ஆட்சியை தாமே ஆதரித்து வரும் மேற்குலகம் அதற்கே இன்று பயப்பட ஆரம்பித்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

லிபிய தேசிய இடைக்கால சபையின் படைத்தரப்பினரால் சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கேணல் கடாபியின் சடலம் அந்நாட்டின் பாலைவனப் பிரதேசம் ஒன்றில் இரகசியமாக அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

இவருடன் அவரின் மகனான Muatassimனதும், முன்னாள் படைத்துறை அமைச்சர் Abu Bakr Younisனதும் சடலமும் லிபிய பாலைவனப் பிரதேசம் ஒன்றில் இரகசியமாக அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகசர்வதேச செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ஜனநாயகம், மனித உரிமைகள் பற்றி பேசுபவர்கள் ஏன் இறந்த ஒருவரின் உடலை ஒளித்து புதைக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

கடாபியைக் கொன்றவர்கள் மேற்குலகுக்கு எதிரான சித்தாந்தங்களைக் கொண்டவர்கள்தான்.. இப்போது எகிறுகிறார்கள்.. மேற்குலகம் தனது வழக்கமான பாணியில் இவர்களையும் வழிக்குக் கொண்டுவருவார்கள்.. அப்போது இவர்களும் மக்கள்முன் துரோகிகளாகி நிற்பர்.. :rolleyes:

பின்பு மீண்டும் கிளர்ச்சி, புரட்சி.. கொலைகள்..! :unsure:

  • தொடங்கியவர்

கடாபியைக் கொன்றவர்கள் மேற்குலகுக்கு எதிரான சித்தாந்தங்களைக் கொண்டவர்கள்தான்.. இப்போது எகிறுகிறார்கள்.. மேற்குலகம் தனது வழக்கமான பாணியில் இவர்களையும் வழிக்குக் கொண்டுவருவார்கள்.. அப்போது இவர்களும் மக்கள்முன் துரோகிகளாகி நிற்பர்.. :rolleyes:

பின்பு மீண்டும் கிளர்ச்சி, புரட்சி.. கொலைகள்..! :unsure:

நிறைய அரேபியர்களுடன் பழகியதில் தெரிந்து கொண்டது, அவர்களுக்குள் அடிபாடுகள் இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு மேற்குலகத்தினரைப் பிடிக்காது. முக்கியமாக அமெரிக்காவும் பிரித்தானியாவும் அவர்களுக்கு நிரந்தர எதிரிகள். காரணம் பாலஸ்தீனியப் பிரச்சனையும் எண்ணைக் கொள்ளையும் போதாததிற்கு ஈராக் படையெடுப்பு. அரேபிய அரசுகள் ஏதும் மேற்குலகச் சார்பாக இருந்தாலும் குடிமக்களின் நிலை அதற்கு எதிரானது.

மேற்குலகம் தலையணையை மாற்றுவதால் தலையிடி நிற்கப் போவதில்லை. கடாபி நல்லவர் கேட்டவர் என்பதற்கு அப்பால், மேற்குலகம் சட்டிக்குள் இருந்து அடுப்புக்குள் வீழ்ந்துள்ளார்கள் என்றே நினைக்கிறேன். இதே போல்தான் பாக்கிஸ்தானிய அரசு மேற்குலகிற்கு ஆதரவாக இருந்தாலும் பாக்கிஸ்தானிய மக்களுக்கு அமெரிக்காவைப் பிடிக்காது.

Edited by தப்பிலி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.