Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிமல்ராஜன் கொல்லப்பட்டு இன்றோடு 11 வருடங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நிமல்ராஜன் கொல்லப்பட்டு இன்றோடு 10 வருடங்கள் பூர்த்தியாகிவிட்டன. 2000ஆம் ஆண்டு ஒக்ரோபர் 19ஆம் திகதி இரவு தனது வீட்டில் இருந்து வேலை செய்து கொண்டிருந்த நேரம் அவர் கொல்லப்பட்டார்.

நிமல்ராஜனின் கொலை தொடர்பாக பல்வேறு அமைப்புக்கள் ஈபிடிபி மீது குற்றம் சாட்டியிருந்தன. ஆனால் இற்றைவரை நிமல்ராஜனின் கொiலைச்சூத்திரதாரிகள் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்படவுமில்லை. தண்டிக்கப்படவுமில்லை.

நிமல்ராஜனில் ஆரம்பித்த ஊடகவியலாளர் மீதான படுகொலை முயற்சிகள் இற்றைவரை தொடர்ந்து கொண்டு தானிருக்கின்றன.

ஊடகவியலாளர் நடேசன், சிவராம், சம்பத் லக்மல், றேலங்கி என்று கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத்துறையோடு சேர்ந்தவர்கள் என்று ஒரு நீண்ட பட்டியலுண்டு.

அதேபோல் மௌபிம மற்றுமு; சண்டே ஸ்ரான்டர்ட், நமது ஈழநாடு என்று பத்திரிகை நிறுவனங்கள் கூட இக்காலப்பகுதிக்குள் மூடப்பட்டுள்ளன.

இதுவரை கொல்லப்பட்ட அல்லது அச்சுறுத்தபட்ட ஊடகவியலாளர்கள் எவரும் யாரால் கொல்லப்பட்டார்கள் என்பதையோ யாரால் அச்சுறுத்தப்பட்டார்கள் என்பதையோ காவற்துறையினர் கண்டுபிடித்ததாகவில்லை.

இந்த வருடம் கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் திசநாயகம் மற்றும் ஜசிகரன் அவருடைய துணைவியார் ஆகியோர் மீதான வழக்கும் முடிந்தளவுக்கு அரச தரப்புக்களால் இழுத்தடிப்பச் செய்யப்பட்டு வருகிறது.

ஆம் சட்டத்தின் ஆட்சி பாஸிஸமாகிறது:

அவசரக்கால சட்டத்தின் கீழ் மார்ச் 7 அன்று கைது செய்யப்பட்டு தடுத்து வகைகப்பட்ட ஊடகவியலாளர் ஜெ. எஸ். திஸ்ஸநாயகம், அரசுக்கு அவதூறு செய்யும் வகையிலும் இன வன்முறைகளை தூண்டுவிக்கும் அல்லது தீவீரப்படுத்தும் வகையிலும் சஞ்சிகைகளை வெளியீடு செய்து கட்டுரைகளை பிசுரித்தமைக்காக பயங்காரவாத தடைச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டார்.

தனது நியாயமான கடமைகளை மேற்கொண்டமைக்காக ஊடகவியலாளர் ஒருவர் பயங்கரவாத தடைச் சட்டத்தின்; கீழ் குற்றஞ்சாட்டப்படுகின்றமை இதுவே முதற் தடவையாகும். அதாவது இக்கொடூரமான இரட்டைச் சட்டங்களான அவசரக்கால சட்டம் மற்றும் பயங்காரவாத தடைச் சட்டங்களின் கீழ் சிக்கி தவிக்கும் முதல் ஊடகவியலாளர் திஸ்ஸநாயகமாவார். கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை மேலும் கட்டுப்படுத்த அரசு தற்பொழுது பயங்கரவாத தடைச்சட்டத்தை உபயோகிப்பது கவலைக்குரிய விடயமாகவுள்ளது என்று ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தும் பல்வேறு அமைப்புக்கள் கவலை வெளியிட்டுள்ளன.

ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்தினால் 2006ல் வெளியிடப்பட்ட நோத் ஈஸ்டன் ஹேரல்ட் (Northeastern Herald) என்ற சஞ்சிகையில் அவரால் பிரசுரக்கப்பட்ட இரு கட்டுரைகள் இன வன்முறைகளை தூண்டுவதாகவும, இது பயங்காரவாத தடைச் சட்டத்தின் கீழ ஓர் குற்றமாக கருதப்படுவதாகவும் மேலும் இச்சஞ்சிகையை வெளியிட அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்து நிதியுதவிகளை பெற்று பயங்கரவாத செயலில் ஈடுப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார் என அவ்வமைப்புக்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.

இன, பால் வேறுப்பாடுகளுக்கு அப்பால் தன்னுடைய கருத்தினை வெளிப்படுத்தும் உரிமை ஓவ்வொரு பிரஜைக்கும் உள்ளதோடு அவ்வாறு வெளிப்படுத்தும் வேறுப்பட்ட கருத்துக்களே ஜனநாயகத்தின் அடிக்கல்லாகும். அரசின் இந்நடவடிக்கை இலங்கை யாப்பின் உறுப்புரை 13 (1) னை புறக்கணிக்கும் ஓர் செயலாகவுள்ளது. இலங்கையில் அவசரக்கால சட்டம் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டங்கள்; சர்வதேச மனித உரிமைகள் சட்ட ஒழுங்குமுறைகளுக்கு ஒவ்வாத அடிப்படையில் உள்ளூர் மற்றும் உலகலாவிய ரீதியில் மனித உரிமை பாதுகாவலர்களாலும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனங்களினாலும் பலத்த கண்டனத்துக்குள்ளாகியுள்ளது.

அவசரக்கால சட்டத்தின் கீழ் அவசியப்படும் சில ஏற்பாடுகளான தகுந்த சமயத்தில் நியாயமான தடுத்து வைத்தல் கட்டளையை சமர்ப்பித்தல் மற்றும் நீதிமன்றத்தில் உடனடியாக ஆஜர் செய்தல் போன்ற அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமலேயே ஊடகவியலாளர்களான திஸ்ஸநாயகம், ஜெசீகரன் மற்றும் வளர்மதி அவர்களின் கைதும் தடுத்து வைத்தலும் இடம்பெற்றுள்ளன.

தேவைப்படும் பொழுது இவர்களது குடும்ப அங்கத்தவர்களுக்கும்; சட்டதரணிகளுக்கும் இவர்களை சந்திப்பதற்கு அனுமதியளிப்படவில்லை. திஸ்ஸநாயகத்தின் சட்டதரணிகள் அவரை சந்தித்த இரு தருணத்திலும் ஓர் காவற்துறை அதிகாரி அங்கு பிரசன்னமாகியிருந்தார்.

2005ல் இலங்கை பற்றி தனது இறுதி முடிவுகளை சமாப்பித்த ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் சித்திரவதைக்கெதிரான செயற்குழு இவ்வாறான துஷ்பிரயோகங்களிலிருந்து பாதுகாப்பதற்கு சட்டதரணிகளை இரகசியமாக சந்திக்க அனுமதியளிக்கப்படுவது ஓர் அடிப்படை ஏற்பாடாகும். அத்துடன் தடுத்து வைக்கப்ட்ட மூவருக்கும் மருத்துவ சிகிச்சை வழங்கபடாத காரணத்தினால் அவாகளது உடல்நிலை குன்றி வருகின்றது. மேலும் இம்மூவரில் ஒருவர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டார் எனக் கூறப்படுகின்றது. ஜசீகரன் தன்னுடைய காயங்கள் பற்றிய விபரங்களை சட்ட வைத்திய அதிகாரியிடம் கூறியதன் காரணமாக பயங்கரவாத விசாரணை பிரிவின் அதிகாரிகள் தன்னை சித்திரவதைக்கு உட்படுத்தியதாக ஜூன் 23 அன்று நீதிமன்றத்தில் வெளிப்படையாகக் கூறினார். இதன்காரணமாக அவர் பின்னர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்ப�

�்டதோடு மேலும் சித்திரவதைக்காளானார்.

இலங்கையில் சட்டத்தின் ஆட்சி வலுவிழந்து செல்வதை இத்தகைய சம்பவங்கள் தெளிவாகக் காட்டுகின்றன.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் இலங்கையின்; புத்திஜீவிகள் மற்றும் கல்வியாளர்கள் ஒப்பமிட்டு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இலங்கை அரசு எவ்வாறு ஒரு பாஸிஸ ஆட்சியை நோக்கிச் செல்கிறது என விளக்கியிருந்தனர்.

ஹிட்லருடைய ஆட்சியை ஒரு ஜனநாயக சோசலிச ஆட்சி என்று ஏற்றுஉவந்தது போல இந்தப் பாஸிஸஆட்சியையும் ஏற்று உவக்கும் ஒரு போக்கு தம்மை ;ஜனநாயகவாதிகள் என்று சொல்பவர்களாலேயே தம்மை ‘தேசம்’ தொடர்பாகக் கவலை கொள்பவர்கள் என்று பிரகடனப்படுத்துபவர்களாலேயே மேற்கொள்ளப்பட்டு வருவது தான் விசனம் மிக்கது.

ஆனால் தென்னிலங்கையில் இந்தப் பாஸிஸப் போக்கிற்கெதிராக இந்த சட்டத்தின் ஆட்சிச் சீர்குலைவுக்கெதிராகக் குரல் கொடுப்பவர்கள் இல்லாமலில்லை.

அண்மையில் அவ்வாறு குரல் கொடுத்த சட்டத்தரணியான வெலியமுன வீட்டின் மீது கூட இந்தப் பாஸிஸத்த்தின் கரங்கள் நீண்டிருக்கின்றன.

இது பற்றி சுதந்திர ஊடக இயக்கத்தின் பேச்சாளரும் சுயாதீன ஊடகவியலாளருமான சுனந்த தேசப் பிரிய குறிப்பிடுகையில்

போலிக் கடவுச் சீட்டின் மூலம் நாட்டிலிருந்து வெளியேறியவர் நாடாளுமன்ற உறுப்பினராகி இருக்கிறார்.

நீர் கொழும்பில் காவற்துறை சித்திரவதைக்கு உட்பட்டதனாலேயே காவற்துறைக்கு எதிராக அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கொன்றை தாக்கல் செய்த நிஷான் பெர்னாண்டோ காவற்துறையினராலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.

செப்டெம்பர் 29ஆம் திகதி இளைஞரொருவர் ஹெந்தலை கடற்கரையில் வைத்து கடற்படையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். சண்டையொன்றின் போதே சுடப்பட்டார் என இராணுவம் தெரிவித்திருந்தது. ஆனால், கண்ணால் கண்ட சாட்சிகள் நெஞ்சை குறிபார்த்து சுட்டதாகவே தெரிவிக்கின்றனர்.

அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்து, சுட்டுக் கொலை செய்யப்பட்ட ஒருவரின் வழக்குக்காக ஆஜரான சட்டத்தரணிகள் மீது குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும் நிலைமை இதற்கு முன்னர் இலங்கையில் காணப்படவில்லை.

இவ்வாறு எப்படி சட்டத்தின் ஆட்சி சிர்குலைக்ப்பட்டு பாஸிஸமாகிறது என்று விளக்குகிறார்

அவர் இறுதியாகச் சொல்கிறார் இன்று இலங்கையை சட்டத்தின் ஆட்சியை அழிப்பவர்களின் தேசமாகவே வர்ணிக்க வேண்டியுள்ளது. அன்று மகிந்த ராஜபக்ஷ வீதியில் இறங்கி போராடிய போராளி. இன்று அவர் ஜனாதிபதி.

ஆம் சட்டத்தின் ஆட்சி பாஸிஸமாகிறது.

(19.10.2008 ல் எழுதப்பட்ட செய்தி ஆய்வு)

AHRC-FST-081-2010.jpg

http://meenakam.com/...cal/2011/10/19/

Edited by தமிழ் அரசு

9f56ebea4f704523d7f6ae532faa10cc.jpg

nfq9.jpg

நிமலராஜன் கொன்ற கொலையாளி நெப்போலியன்

இன்றும் கொலையாளி லண்டனில் உலாவுகிறான் ... சில வருடங்களுக்கு முன், இறுதியாக குத்தியன் லண்டன் வந்தபோது சேர்ந்து திரிந்தும் இருக்கிறான் ... குத்தி அன்ட் கும்பல், சேர்ந்து லண்டனில் திரிந்த புகைப்படங்களையும் அவர்களது இணையத்தில் விட்டிருந்தது ... எம்மால் சட்டரீதியாக கொலையாளியை குற்றவாளிக் கூண்டில் ஏற்ற, ஒன்றும் இன்றுவரை செய்ய முயற்சிக்கவுமில்லை!!!! ...

... அங்கு நிமலராஜனின் தொடங்கிய ஊடகவியலாளர் மீதான சிங்களத்துடன் சேர்ந்தியங்கும் ஒட்டுக்கும்பல்களின் குறி இற்றைவரை தொடர்கிறது ....

  • கருத்துக்கள உறவுகள்

நாமிருக்கும் வரை, உன் நினைவும் எம்மோடு வாழ்ந்திருக்கும்!' நினைவு அஞ்சலிகள்,நிமலராஜன்!

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு அஞ்சலிகள் நிமலராஜன்!!!

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு அஞ்சலிகள்,!

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு அஞ்சலிகள்,

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.