Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் மக்களை ஏமாற்றும் பேச்சுவார்த்தை நாடகத்தின் நடிகர்கள்

Featured Replies

தமிழ் மக்களை ஏமாற்றும் பேச்சுவார்த்தை நாடகத்தின் நடிகர்கள்

அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பேச்சுவார்த்தை நடத்துவது இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கெனப் பலரும் நினைத்துக் கொள்கின்றனர். ஆனால் அது நிஜமன்று. இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரை சர்வதேச அழுத்தத்திற்கு உடனடியாக ஒத்தணம் கொடுக்கவேண்டும். இல்லையேல் நிலைமை மோசமாகி விடும். இதன் காரணமாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது போல நடிக்க வேண்டும். அந்த நடிப்பிற்கு அரங்கும் நடிபங்காளர்களும் தேவை. அதே நேரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரே ஒரு இயங்கு தளம் பேச்சுவார்த்தை நடத்துவதாகும்.

இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் விட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இருப்பு அடியோடு உடைப்பட்டு போகும். எனவே பேச்சுவார்த்தை மூலம் எந்த நன்மையும் இடம் பெறப் போவதில்லையென்ற உண்மை தெரிந்திருந்தும், பேச்சுவார்த்தை என்ற நாடகத்தில் அரசுடன் சேர்ந்து நடிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடன்பட்டுள்ளது. ஆக, அரசு-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய இருதரப்பும் உலகையும் தமிழ் மக்களையும் ஏமாற்றுகின்றன.

எனினும் இதை நாம் சொன்னால் அது தமிழ்த் தேசியக் கூட்டமை ப்புக்கு எதிர் என்று பிரசாரம் செய்யப்படும். என்ன செய்வது! தமிழ் மக்கள் அரசியல் ரீதியாக விழிப்படையாத வரை ஏமாற்று நாடகங்கள் அரங்கேறவே செய்யும். நல்லூர்ப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட காணிகளை பதிவு செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போது - காணிப்பதிவுக்கு எதிராக விநாயகமூர்த்தி எம்.பி. பாராளு மன்றத்தில் பிரேரணை கொண்டு வந்த போது அதனை வழி மொழிவதற்கு ஆளில்லாமல் அந்தப் பிரேரணை செத்துப் போன பின், உண்ணாவிரத நடிப்பு இருக்கிறதே அது தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை ஒரு மூலைக்குள் தள்ளிவிட்ட நடிப்பு எனலாம். உண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காணிப்பதிவுக்கு எதிராக செயற்படுவதாக இருந்தால், நல்லூரில் காணிப்பதிவு இடம் பெறுவதற்கு முன்னதாக உண்ணாவிரதத்தை மேற்கொண்டிரு ப்பதுடன் அன்புக்கினிய தமிழ் மக்களே! காணிப்பதிவை ஒட்டு மொத்தமாக எதிர்ப்போம். நீங்கள் எவரும் காணிப் பதிவை மேற்கொள்ளாதீர்கள் என்று குரல் கொடுத்திருந்தால் பதிவு நடந்திருக்காதல்லவா?

என்ன செய்வது! பங்குனி மாதத்தில் நெல்லு விதைத்து கடுமையாக பாடு பட்டேன் என்று கூறுவது எவ்வளவு அறியாமையோ அது போலத் தான் காலம் கடந்த முயற்சிகளும் - உண்ணாவிரதப் போராட்டங்களும்.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=24458

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சு வார்த்தை மூலம், தீர்´வு கிடைக்கும்.. என்று, நம்புவன் தமிழன்.

நல்லூர்ப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட காணிகளை பதிவு செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போது - காணிப்பதிவுக்கு எதிராக விநாயகமூர்த்தி எம்.பி. பாராளு மன்றத்தில் பிரேரணை கொண்டு வந்த போது அதனை வழி மொழிவதற்கு ஆளில்லாமல் அந்தப் பிரேரணை செத்துப் போன பின், உண்ணாவிரத நடிப்பு இருக்கிறதே அது தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை ஒரு மூலைக்குள் தள்ளிவிட்ட நடிப்பு எனலாம்.

இதில் ஏன் கோட்டை விட்டவர்கள் என்பது தெரியாது. விநாயகமூர்த்தி எம்.பி இதை ஏன் ஆயத்தம் செய்யாமல் போனவர் என்பதும் தெரியாது.

இந்த கட்டுரையில் சொல்லபட்ட காணி விவகாரம் சம்பந்தமாக TNAன் நடவடிக்கை மந்தமானது என்பது முற்றிலும் சரியே. காணி சம்பந்தமாக பலர் (நான் உட்பட) TNAன் பிரதிநிதிகளுக்கு எட்டுதுகூறி அதன் பாரிய எதிகால விளைவுகள் பற்றியும் கதைதிருந்தோம். ஆனால் அரசை பகைத்துக்கொண்டால் ஒன்றும் கிடைக்க மாட்டாது. எனவே விசயத்தை அடக்கி வாசிக்க TNAல் உள்ள சிலர் தலைபட்டனர்.

அதே சமயம், நடந்து முடிந்த தேர்தலில் ஒன்றுபட்ட ஆனந்தசங்கரி அவர்களும் மற்றும் புளொட் போன்ற அமைப்புகளும் காணி விவகாரத்தை கையில் எட்டுத்தபோது தான் TNAல் உள்ளோர் நகரத்தொடகினார்கள். இங்கே மிக முக்கியமான் விடயம் என்னவென்றால் TNAல் உள்ளோர் சம்பூர் விடயமாகவும் அசமந்த போக்கை கடைப்பிடிபதாக சம்பூர் மக்கள் சார்பில் அண்மையில் கட்டுரை எழுதிய சிவலிங்கம் தெரிவிந்திருந்தார். இதே போலவே வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயம் விடயத்திலும் தேர்தல்லுகு பின் அசமந்த போக்கு காணப்படுவதாக செய்திகள் வருகின்றன. சம்பூரும் KKS HSZ விடயமும் இந்தியாவுடன் சம்பந்தபடதினால் TNA நழுவல் போக்கை கடைபிடிகின்றது.

Principled Approach ஒன்றை இந்த விடயங்களில் எடுத்து மக்களின் கஷ்டங்களை நிவர்திசெயக்குடிய திறமை TNAடம் இன்னும் வரவில்லை. மாறாக "Grand Solution" ஊடக எல்லா பிரச்சனைகளும் தீரும் என்கின்ற சிந்தனை வரலாற்றிகும் யதாதத்துக்கும் புறம்பானது . இது பின்னாளில் எமது மக்களில் ஒரு பகுதியினர் மிகுந்த பாதிப்புகளுடன் வாழவேண்டிய துர்பாக்கிய நிலைமையை ஏற்படுத்திவிடும்.

சிலருக்கு Land Rights சிறிய விடயமாகக தெரிகின்றது. ஆனால் பாலஸ்தீனம் போன்ற இடங்களை நடக்கின்ற நில சுரண்டல் இன்று மத்தியகிழக்கில் தீர்க்கவே முடியாத ஒரு விவகாரமாக இஸ்ரேல்-பாலத்தீன பிரச்சனையை மாற்றி உள்ளது. சிறு சிறு ஆக்கிரமிப்புகளாக தொடங்கி இன்று பாலஸ்தீனம் பெருமளவு நிலங்களை இழந்து, வளம் குன்றி பிறர் கொடுக்கும் பணந்தில் அரசு நடத்த வேண்டி வந்துள்ளது. நாங்கள் இவற்றை கவனத்தில் கொண்டு, நியாயமான கருத்துகளை உள்வாங்கி பிரச்சனிகளை தீர்க்கப் பழகவேண்டும்.

கூட்டமைப்பு ஆயுத போராட்டம் நடத்தவில்லை .

ஆனால் என்ன செய்ய வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும் .வாய்வீச்சு அரசியல் இப்போ அவர்கள் செய்வதில்லை .இந்தியா ,அமெரிக்கா போன்ற நாடுகளுடன் தொடர்ந்தும் அவர்கள் தொடர்பில் இருப்பதும், முடிந்தவரை வெளிநாட்டு தூதுவர்களை அவர்கள் சந்திப்பதும் ஒரு தீர்வை அவர்கள் எட்டுவதற்கான ஒரு முயற்சியே. அதே நேரம் அரசுடன் பேசுவது தீர்வு ஒன்று நீங்கள் தருவீர்கள் ஆனால் அதற்கும் நாம் சம்மதம் என்பதற்காகவே.

முழு உலகும் எமது பிரச்சனையை உணர்ந்திருக்கும் இந்நேரம் சரியான ஒரு தீர்வை எட்டுவதே உண்மையான ராஜந்திரம்.இதைதான் கூட்டமைப்பு செய்கின்றது என நான் முழுமையாக நம்புகின்றேன் .

எழுதகூடாத இந்த பந்தி உங்களுக்காக .

மாவீரர்களின் அர்ப்பணிப்பிற்காகவும், நாம் ஒரே தீர்வை எட்டுமட்டும் போராடுவோம் என்ற புலம் பெயர்ந்தவர்களின் ஆசைக்காகவும் உலக புவியியல் ,அரசியல் நிலைபாடுகளை தாண்டி எமது அபிலாசகைளை நிறைவேற்ற முடியாது .

  • தொடங்கியவர்

உங்கள் கருத்துடன் நான் சம்மதிக்கிறேன்.

இங்கே அமெரிக்கா மற்றும் இந்தியா, சீனா/சிங்களம் ஆகியனவற்றுக்கு எதிராக கூட்டமைப்பை பாவிக்க எண்ணும்பொழுது அந்த சந்தர்ப்பத்தை எவ்வளவுக்கு தமிழர்கள் நலன்களை முன்வைத்து உரிமைகளை பெறும் என்பதே கூட்டமைப்பின் இடத்தை வரலாற்றில் பெற்றுத்தரும்.

முழு உலகும் எமது பிரச்சனையை உணர்ந்திருக்கும் இந்நேரம் சரியான ஒரு தீர்வை எட்டுவதே உண்மையான ராஜந்திரம்.இதைதான் கூட்டமைப்பு செய்கின்றது என நான் முழுமையாக நம்புகின்றேன்

கூட்டமைப்பை தமிழர்களின் பிரதிநிதிகளாக உலகம் பார்க்கிறது. இந்தியா பிள்ளையானை பேச்சுக்கழைத்து, பிளெக் ஆனந்த சங்கரிக்கு சமாதனப் பரிசு கொடுத்த காலம் இப்போ இல்லை, கூட்டமைப்பு தன் கடமையை சரிவர செய்யும் என்று நம்புவோமாக.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐஞ்சு இலட்சம் பேரை துவக்குடன் வைத்திருக்கும் இனவெறியருடன் வெறும் வேட்டியில் போய் உரிமை வெல்ல போகிறார்கள் என்று அவர்கள் கூறினால் நம்ப வேண்டுமா?

கூட்டமைப்பு ஆயுத போராட்டம் நடத்தவில்லை .

ஆனால் கூட்டமைப்பில் ஆயுத போராட்டம் நடத்தியவர்கள் இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு ஆயுத போராட்டம் நடத்தவில்லை .

ஆனால் என்ன செய்ய வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும் .வாய்வீச்சு அரசியல் இப்போ அவர்கள் செய்வதில்லை .இந்தியா ,அமெரிக்கா போன்ற நாடுகளுடன் தொடர்ந்தும் அவர்கள் தொடர்பில் இருப்பதும், முடிந்தவரை வெளிநாட்டு தூதுவர்களை அவர்கள் சந்திப்பதும் ஒரு தீர்வை அவர்கள் எட்டுவதற்கான ஒரு முயற்சியே. அதே நேரம் அரசுடன் பேசுவது தீர்வு ஒன்று நீங்கள் தருவீர்கள் ஆனால் அதற்கும் நாம் சம்மதம் என்பதற்காகவே.

முழு உலகும் எமது பிரச்சனையை உணர்ந்திருக்கும் இந்நேரம் சரியான ஒரு தீர்வை எட்டுவதே உண்மையான ராஜந்திரம்.இதைதான் கூட்டமைப்பு செய்கின்றது என நான் முழுமையாக நம்புகின்றேன் .

எழுதகூடாத இந்த பந்தி உங்களுக்காக .

மாவீரர்களின் அர்ப்பணிப்பிற்காகவும், நாம் ஒரே தீர்வை எட்டுமட்டும் போராடுவோம் என்ற புலம் பெயர்ந்தவர்களின் ஆசைக்காகவும் உலக புவியியல் ,அரசியல் நிலைபாடுகளை தாண்டி எமது அபிலாசகைளை நிறைவேற்ற முடியாது .

ஆம். எடுத்தேன் கவுழ்த்தேன் என்றில்லாமல் சமயோசிதமாக செயற்படவேண்டிய காலமிது.கூட்டமைப்பு அதனை சரிவர செய்யுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

என்ன ஒரு கவலை என்றால் ஒருவரின் கருத்துக்கு மற்றவர்கள் பதில் கருத்து எழுதுவதாகவே இந்த திரி நீள்கின்றது அதைத்தவிர்த்து தலைப்பு பற்றி எழுதலாம்.

* பேச்சு முலம் தீர்வு கிட்டும் என நம்பிக்கை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு ஆயுத போராட்டம் நடத்தவில்லை .

ஆனால் என்ன செய்ய வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும் .வாய்வீச்சு அரசியல் இப்போ அவர்கள் செய்வதில்லை .இந்தியா ,அமெரிக்கா போன்ற நாடுகளுடன் தொடர்ந்தும் அவர்கள் தொடர்பில் இருப்பதும், முடிந்தவரை வெளிநாட்டு தூதுவர்களை அவர்கள் சந்திப்பதும் ஒரு தீர்வை அவர்கள் எட்டுவதற்கான ஒரு முயற்சியே. அதே நேரம் அரசுடன் பேசுவது தீர்வு ஒன்று நீங்கள் தருவீர்கள் ஆனால் அதற்கும் நாம் சம்மதம் என்பதற்காகவே.

முழு உலகும் எமது பிரச்சனையை உணர்ந்திருக்கும் இந்நேரம் சரியான ஒரு தீர்வை எட்டுவதே உண்மையான ராஜந்திரம்.இதைதான் கூட்டமைப்பு செய்கின்றது என நான் முழுமையாக நம்புகின்றேன் .

எழுதகூடாத இந்த பந்தி உங்களுக்காக .

மாவீரர்களின் அர்ப்பணிப்பிற்காகவும், நாம் ஒரே தீர்வை எட்டுமட்டும் போராடுவோம் என்ற புலம் பெயர்ந்தவர்களின் ஆசைக்காகவும் உலக புவியியல் ,அரசியல் நிலைபாடுகளை தாண்டி எமது அபிலாசகைளை நிறைவேற்ற முடியாது .

சுருக்கமாக ஈழம் இந்த பூமியில்தான் உருவாக முடியும் என்று கண்டுபிடித்து எழுதியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

சுருக்கமாக ஈழம் இந்த பூமியில்தான் உருவாக முடியும் என்று கண்டுபிடித்து எழுதியுள்ளார்.

:lol: :lol: :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.