Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது – ஆஸி பிரதமர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

australian%20prime%20minister%20julie%20gillard.jpg

அவுஸ்திரேலிய மத்திய அரசின் அனுமதியின்றி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக எந்த நாட்டின் எந்த ஒரு நீதிமன்றத்திலும் வழக்கு ஒன்றினைத் தாக்கல் செய்ய முடியாது என அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் இன்று தெரிவித்துள்ளார். ஒரு நாட்டின் தலைவருக்கு எதிரான இவ்வாறான வழக்குகளை சட்டமா அதிபரின் ஆலோசனையின்றி தொடர முடியாது எனவும் அவுஸ்திரேலிய ஏபீசி வானொலிக்கு வழங்கிய பேட்டியில் ஆஸி. பிரதமர் கூறியுள்ளார்.

அத்துடன் இந்த வழக்கு குறித்து சட்டமா அதிபருக்கு இதுவரை அறிவிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை இந்த வழக்கு குறித்த எந்த ஆவணமும் சட்டமா அதிபர் திணைக்களத்துக்குக் கிடைக்கவில்லை என ஆஸி சட்டமா அதிபர் திணைக்களமும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்த வழக்கு தொடர்பில் சட்டமா அதிபர் ரொபட் மிக்லேன்டின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கேதீஸ்வரனின் வழக்கறிஞரான ரொப் ஸ்டறி கூறியுள்ளார்

இலங்கையில் பிறந்த அருணாச்சலம் ஜெகதீஸ்வரன் என்பவர் மஹிந்த ராஜபக்ஷ்விற்கு எதிராக மெல்பேர்ன் நீதிமன்றில் யுத்தக் குற்ற வழக்குத் தாக்கல் செய்துள்ளமை தெரிந்ததே.

http://www.eeladhesa...ndex.php?option

அவுஸ்திரேலிய மத்திய அரசின் அனுமதியின்றி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக எந்த நாட்டின் எந்த ஒரு நீதிமன்றத்திலும் வழக்கு ஒன்றினைத் தாக்கல் செய்ய முடியாது என அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் இன்று தெரிவித்துள்ளார். ஒரு நாட்டின் தலைவருக்கு எதிரான இவ்வாறான வழக்குகளை சட்டமா அதிபரின் ஆலோசனையின்றி தொடர முடியாது எனவும் அவுஸ்திரேலிய ஏபீசி வானொலிக்கு வழங்கிய பேட்டியில் ஆஸி. பிரதமர் கூறியுள்ளார்.

அப்படியாயின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த உதவவேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்படியாயின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த உதவவேண்டும்.

அதனால் தான் மிகவும் விரக்தியாக ஊட்டல்களை இணைக்கின்றேன், முள்ளிவாக்காலுடன் மவுனித்தது ஆயுதம் மட்டுமா ? சர்வதேசமும் மவுனமாகிவிடுமோ என்று ஜோசிக்க வேண்டியுள்ளது !

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவருடைய கட்சிக்கு கொகோண நிறைய காசு இறைச்சவன். அது தான் பாசம் பொங்கி வழிகிறது.

மேலும், மேலும் வழக்கு போட்டு ஸ்ரீ லங்கா இனவெறியரை அவர்களுடைய நாட்டுக்குள்ளேயே முடக்கவேண்டும்.

இங்கு மொழி பெயர்ப்பில் ஏதாவது தவறா?

அதெப்படி அவுஸ்திரேலிய மத்திய அரசின் அனுமதியின்றி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக எந்த நாட்டின் எந்த ஒரு நீதிமன்றத்திலும் வழக்கு ஒன்றினைத் தாக்கல் செய்ய முடியாது என அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் சொல்லமுடியும்?

உலகத்தை ஜூலியாவா ஆளுகிறார்?

அல்லது ஆஸ்த்திரேலியாவில் எங்கும் மத்திய அரசின் அனுமதியின்றி வழக்கு தாக்கல் செய்ய முடியாதா?

எனக்கும் அந்த சந்தேகம் உள்ளது

அதனால் தான் மிகவும் விரக்தியாக ஊட்டல்களை இணைக்கின்றேன், முள்ளிவாக்காலுடன் மவுனித்தது ஆயுதம் மட்டுமா ? சர்வதேசமும் மவுனமாகிவிடுமோ என்று ஜோசிக்க வேண்டியுள்ளது !

நாம் விரக்தியாக இருந்தாலும் அதையும் மீறி செயல்படுவோம். ஒரு மிலோசவிச்சை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்த முடியும் என்றால், மகிந்தவை ஏன் முடியாது? என கேட்டு முயற்சிப்போம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாம் விரக்தியாக இருந்தாலும் அதையும் மீறி செயல்படுவோம். ஒரு மிலோசவிச்சை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்த முடியும் என்றால், மகிந்தவை ஏன் முடியாது? என கேட்டு முயற்சிப்போம்.

நன்றி அகூதா,

அந்த நம்பிக்கையுடன்தான் இன்றுவரைக்கும் முயற்சிக்கின்றோம். :(

இதில் நாம் நின்று யோசிக்க ஒன்றும் இல்லை. இப்படி ஒரு குற்றவியல் வழக்கு இலகுவில் ஒரு நாட்டு தலைவருக்கெதிராய் எந்த நாட்டிலும் தாக்கல் செய்ய சிக்கல்கள் வரும். இதை கடந்து நாம் போயாக வேண்டும்.

1. அதனால்த்தான் நாம் சர்வதேச விசாரணையை தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்.

2. அமெரிக்காவில் செய்தது போன்ற நட்ட ஈடு வழக்குகள் மகிந்தாவுக்கு எதிராக தொடர வேண்டும்.

3. மகிந்தாவின் உதவியாளர்கள் மீது இரு சார்பு வழக்குகளையும் தாக்கல் செய்தல்.

இங்கு மொழி பெயர்ப்பில் ஏதாவது தவறா?

அதெப்படி அவுஸ்திரேலிய மத்திய அரசின் அனுமதியின்றி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக எந்த நாட்டின் எந்த ஒரு நீதிமன்றத்திலும் வழக்கு ஒன்றினைத் தாக்கல் செய்ய முடியாது என அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் சொல்லமுடியும்?

உலகத்தை ஜூலியாவா ஆளுகிறார்?

அல்லது ஆஸ்த்திரேலியாவில் எங்கும் மத்திய அரசின் அனுமதியின்றி வழக்கு தாக்கல் செய்ய முடியாதா?

இல்லை. மொழிபெயர்ப்பில் தவறு உள்ளது. பிரதமர் கூறியது என்னவென்றால் மகிந்த ஒரு நாட்டின் ஜனாதிபதி என்ற அடிப்படையில் அவருக்கு ராஜதந்திர உரிமைகள் இர்ருகின்றன. இந்த உரிமைகள் உலகம் எங்கும் செல்லுபடியககூடியவை. இவை Vienna Convention on Diplomatic Relations என்கின்ற சரத்துகளின் கீழ் வருகின்றது. நாடுகளுகிடையில் ராஜதந்திர உறவுகளை எவ்வாறு செயல் படுத்துவது தொடர்பாக உலக அளவில் பொதுவான நடைமுறைகளை அமுல்படுத்துவதே இந்த சரத்துகளின் நோக்கம். அந்த அளவில் Australia, USA உட்பட எல்லா நாடுகளும் இதை பின்பற்றுகின்றன. இந்த சரத்துகள் ஒரு நாட்டின் தலைவர் கொலைகாரன் இல்லை என்று கூறவரவில்லை என்பதை கவனிக்கவும். அதாவது இந்த சரத்துக்கள் ஒரு தனிப்ப்டவரின் நலனுக்க அன்றி நாடுகளின் உறவுகள் என்ற அடிப்படையில் செயல்பட்டுதபடுகின்றது.

இந்த சரத்துகளுக்கு அப்பால் சென்று ஒருவர் மீது வழக்கு தொடர்வதானால் அந்த நாட்டில் அதற்கான உள்ளக சட்டம் அதற்கு வழி செய்ய வேண்டும். இதற்கு உதாரணமாக Universal Jurisdiction என்ற கோட்பாட்டின் படி சில நாடுகளில் உள்ளக சட்டங்கள் உள்ளன. ஆனால் இவை கூட சர்வதேச அள்ளவில் அமுல் பட்டுதகூடியவை அன்று. அதாவது ஒருவர் பாரிய மனித கொலைகளில் ஈடுபட்டவர் என்றால் அவர் மீது வழக்கு தொடரல்லாம். ஆனால் குற்றம் செய்தவரை கைது செய்ய அந்த நாடுகளால் முடியாது.

உள்ளக சட்டங்களுக்கு அடுத்த உதாரணம், இரண்டாம் உலக போருடன் சம்பந்தமான குற்றவாளிகள் சம்பந்தமானது. இங்கு, Australia உட்டபட பல நாடுகளில், இரண்டாம் உலகப்போரில் குற்றம் செய்தோரை கைது செய்ய சட்டம் இயற்றினார்கள். இந்த சட்டங்கள் குற்றவாளிகள் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்தால் அவர்களை இனம் கண்டு கொள்ள வடிவமைக்கபட்டுள்ளது. WAR CRIMES ACT 1945, என்ற சட்டம் ஆஸ்திரேலியாவில் உள்ளது.

சர்வதேச கடப்பாடுகள் (International Convention and Treaty Obligations) என்ற அடிபடையில் சட்டங்களை பயன்படுத்தலாம். அனால் இங்கும் ஒன்றுகொன்று முரண்பட்ட சர்வதேச நடைமுறைகளாலும் நட்டு நலன் அடிபடையிலும் எங்களுக்கு சவால்கள் காத்திருக்கின்றன.

இவாறான சவால்களை எதிர் கொள்ள உலகளாவிய ரீதியில் உள்ள ஒரு பொறிமுறை தான் ICC என்று சொல்லலாம். அதிலும் பல படிமுறைகள கடந்து தான் நீதி பெறவேண்டி உள்ளது.

தமிழர்களை பொறுத்த வரையில் நாங்கள் இரண்டு பாரிய குறிக்கோள்களுடன் War Crimes விவகாரத்தை அணுக வேண்டும்.

a). எமக்கு நீதி தேடி தருவது

b). நாம் வாழும் நாட்டுகளில் உள்ளக சட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி அவற்றை War Crimes/Crimes Against Humanity/Mass Human Attrocities என்பவற்றிக்கு எதிராக இயகக்கூடியவையாக மாற்றி ஒடுக்கபட்ட மக்களுக்கு ஒரு நிரந்தர விடிவை ஏற்படுத்தல்.

சற்று விளக்கமாக கூறுவதனால் உலக அளவில் போர் குற்றம், இன படுகொலைக்கு ஆளாகிய சமூகங்கள்ளுக்கான ஒரு சர்வதேச நடைமுறையை நாம் கொண்டுவர பாடுபடவேண்டும். அந்த நடைமுறை R2P என்கின்ற கோட்பாட்டிலும் பார்க்க இன படுகொலைக்கு ஆளாகிய சமூகங்கள்ளுக்கான அரசியல், மனிதாபிமான பரிகாரங்களை கவனத்தில் கொள்பவையாக இருக்க நாங்கள் அழுத்தம் கொடுக்கவேண்டும்.

நன்றி

Edited by puthalvan

  • கருத்துக்கள உறவுகள்

Govt must OK Sri Lanka president's case:PM

AAP

A war crimes case filed against the Sri Lankan president in an Australian court cannot proceed without the federal government's consent, Prime Minister Julia Gillard says.

Sri Lankan-born Australian citizen Arunachalam Jegatheeswaran has lodged a war crimes indictment against President Mahinda Rajapaksa in the Melbourne Magistrates Court.

The move comes as Mr Rajapaksa is due to arrive in Perth for the Commonwealth Heads of Government Meeting (CHOGM).

But Ms Gillard on Tuesday made it clear no case could proceed without the government's say-so.

"No such legal action can be taken on an issue like this without the consent of the attorney-general," Ms Gillard told ABC Radio in Perth.

"And the attorney-general hasn't received any request in relation to this matter."

Mr Jegatheeswaran's lawyers say they have written to Attorney-General Robert McClelland to alert him to the case.

Mr McClelland's spokesman says he has not received any request for consent in relation to the matter, but federal police are looking into it.

"The AFP has received a request to investigate the matter, which it is evaluating," the spokesman said.

He also noted that Australia has obligations under international law which extends immunity to visiting heads of state.

Ms Gillard reiterated her government was concerned about the persistent war crimes allegations.

"Australia and like-minded countries have been urging and will continue to urge Sri Lanka to address the serious allegations that have been made of human rights violations," she said.

The indictment was filed under the Australian criminal code and is now set for hearing on November 29.

A series of reports have accused Sri Lanka of committing war crimes during its final 2009 offensive against the Tamil Tiger rebels.

The offensive crushed the Tigers - who have also been accused of atrocities - and brought the decades-old civil war to an end.

Mr Rajapaksa also was cited in a separate brief of evidence prepared by the International Commission of Jurists' Australian branch and handed to the Australian Federal Police earlier this month.

That brief also reportedly levels allegations against Sri Lankan High Commissioner to Australia Thisara Samarasinghe.

Both men strenuously deny the claims.

Australian National University international law expert Donald Rothwell says proponents of the cases face a significant challenge in proving that serious war crimes can overrule diplomatic immunity.

"While there may be sufficient grounds upon which to launch a war crimes prosecution, both High Commissioner Samarasinghe and President Rajapaksa would be able to claim immunity from prosecution which would bar the matter from proceeding in an Australian court," Professor Rothwell said.

Mr Jegatheeswaran's lawyer, Lucien Richter, said he did not believe diplomatic immunity was an issue in this case.

"There is some authority to suggest that where crimes are of a substantial and international nature, such as war crimes or crimes against humanity, then effectively the authority of being head of state doesn't grant him immunity from those things," Mr Richter said."Certainly the ICJ (International Commission of Jurists') in their submission have come to a simple conclusion that immunity would not be a barrier to this prosecution."

http://au.prime7.yahoo.com/n3/news/a/-/national/10863750/govt-must-ok-sri-lanka-presidents-case-pm/

...வழக்கு தொடரப்பட்டதோ இல்லையோ ... ஆனால் அடிமட்ட ஆஸ்திரேலியனுக்கும் செய்தி சென்றிருக்கிறது!! ... இம்முயற்சிகள் தொடரப்பட வேண்டும் ... முயற்சி ஒருநாள் திருவினையாக்கும்!!!

... ஆனால் லண்டனிலோ உதுகளை செய்ய வேண்டிய BTF காரர்கள் .... பணவேட்டைக்காக ... மாவீரர்நாளை ... இம்முறை தொடக்கம் குத்தைக்கு எடுத்திருக்கிறார்களாம் .... கொண்டாடப்போகிறார்களாம்!!!!!!!!!

மல்லாந்து படுத்து வாந்தி எடுப்பது என்பது இதுதானோ

இவாறான சவால்களை எதிர் கொள்ள உலகளாவிய ரீதியில் உள்ள ஒரு பொறிமுறை தான் ICC என்று சொல்லலாம். அதிலும் பல படிமுறைகள கடந்து தான் நீதி பெறவேண்டி உள்ளது.

தமிழர்களை பொறுத்த வரையில் நாங்கள் இரண்டு பாரிய குறிக்கோள்களுடன் War Crimes விவகாரத்தை அணுக வேண்டும்.

a). எமக்கு நீதி தேடி தருவது

b). நாம் வாழும் நாட்டுகளில் உள்ளக சட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி அவற்றை War Crimes/Crimes Against Humanity/Mass Human Attrocities என்பவற்றிக்கு எதிராக இயகக்கூடியவையாக மாற்றி ஒடுக்கபட்ட மக்களுக்கு ஒரு நிரந்தர விடிவை ஏற்படுத்தல்.

சற்று விளக்கமாக கூறுவதனால் உலக அளவில் போர் குற்றம், இன படுகொலைக்கு ஆளாகிய சமூகங்கள்ளுக்கான ஒரு சர்வதேச நடைமுறையை நாம் கொண்டுவர பாடுபடவேண்டும். அந்த நடைமுறை R2P என்கின்ற கோட்பாட்டிலும் பார்க்க இன படுகொலைக்கு ஆளாகிய சமூகங்கள்ளுக்கான அரசியல், மனிதாபிமான பரிகாரங்களை கவனத்தில் கொள்பவையாக இருக்க நாங்கள் அழுத்தம் கொடுக்கவேண்டும்.

நன்றி

கருத்துக்கு நன்றிகள் பல புதல்வன்.

இது நீண்ட பயணம், பார்போம் இந்த பொதுநலவாய மாநாட்டிலும் அடுத்து ஐ.நா. மனித உரிமை தொடரிலும் என்ன நடக்கும் என்று. நாமும் எமது நாடுகளில் அரசியல் / பரப்புரைகளை முன்னெடுப்போம்.

மல்லாந்து படுத்து வாந்தி எடுப்பது என்பது இதுதானோ

... வாந்தியோ? மூத்தாவோ?? காக்காவோ??? அல்ல பிரட்சனை, ... நீங்கள் (BTF) செய்ய வேண்டியதை செய்தீர்களா??? இல்லை ஏதாவது இதுவரை பிரயோசனமாக செய்தீர்களா???? ... ஒன்றும்மில்லை!!!! ... ஆனால் இப்ப மாவீரர்நாளாம் செய்யப்போகிறீர்களாம்!!!! ... உதற்காகவா உந்த BTF தொடங்கப்பட்டது???? ... தொடங்கியவர்களில் பலர் வெளியேறியும்/வெளியேற்றப்பட்டதும் வேறுகதை!!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.