Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நியூயோர்க்கில் இருந்து திருப்பி சீமான் திருப்பி அனுப்பப்பட்டார்

Featured Replies

உலகத் தமிழர் பேரமைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள சீமானுக்கு அனுமதி மறுப்பு

அமெரிக்காவில் நடைபெறும் உலகத் தமிழர் பேரமைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள சீமானுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. அவரை விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்து அனுப்பிவிட்டனர்.

இது குறித்து நாம் தமிழர் கட்சி வெளியிட்ட அறிக்கை:

உலகத் தமிழர் பேரமைப்பு உள்ளிட்ட பல்வேறு தமிழர் அமைப்புகள் அமெரிக்காவில் தங்கள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுமாறு சீமானுக்கு அழைப்பு விடுத்திருந்தன. அதற்கான முறையான பயண அனுமதியும் அந்நாட்டு அரசிடமிருந்து பெற்று சீமானின் பயண ஏற்பாடுகளை உறுதி செய்தனர்.

இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு சீமான் புறப்பட்டுச் சென்றார். இன்று அதிகாலை சீமான் நியூயார்க் சென்று சேர்ந்தபோது, அவரை நாட்டிற்குள் அனுமதிக்க முடியாது என்று கூறி விமான நிலையத்திலேயே தடுத்து வைத்துள்ளனர்.

இதற்கான காரணம் கேட்டதற்கு, சீமான் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு நெருக்கமானவர் என்றும், அவரை அனுமதித்தால் அது அமெரிக்க நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஆகலாம் என்ற அச்சம் காரணமாக அனுமதி மறுக்கப்படுவதாக கூறியுள்ளனர்.

சீமானுக்கு பயண அனுமதி வழங்கப்பட்டபோது இந்த உண்மைகள் அவர்களுக்கு தெரியாமல் போனது ஏன்? இதிலிருந்து தமிழினத்தின் நலனுக்கு எதிரான சக்திகள் அளித்த தகவல்கள் பேரிலேயே சீமானுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்பது தெரிகிறது.

இது அமெரிக்காவில் நடை முறையில் உள்ள மனித உரிமை, கருத்துச் சுதந்திர சட்ட உரிமைகளுக்கு முரணான நடவடிக்கையாகும். இந்நடவடிக்கையை நாம் தமிழர் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக உண்மையாகப் போராடிவரும் அனைத்து தமிழர் தலைவர்களும் இப்படிப்பட்ட சட்ட அராஜகங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவராக உள்ள அருட்தந்தை இம்மானுவேல் அடிகளாரை இதேபோல்தான் சென்னை விமான நிலையத்தில் இந்திய குடியேற்ற துறை விமானத்தில் வைத்து இறங்கவிடாமல் திருப்பி அனுப்பியது. அதுதான் இன்றைக்கு சீமானுக்கும் நடந்துள்ளது.

தமிழீன விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரித்து, சிங்கள பவுத்த இனவாத ஆட்சியின் அரச பயங்கரவாதத்திற்கு துணை நின்று, தமிழினப் படுகொலைக்கு உதவிய அரசுகள், இன்று தமிழீழ மக்களின் உரிமைப் போராட்டத்தை அரசியல் தளத்திலும் முடக்க இப்படிப்பட்ட வன்செயல்களில் ஈடுபடுகின்றன.

இன்றைக்கு சீமானுக்கு இழைக்கப்பட்ட அநீதி தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். இப்படிப்பட்ட நடவடிக்கைகளால் தமிழினத்தின் அரசியல் போராட்டம் ஒருபோதும் முடங்கிவிடாது. தமிழீழ விடுதலைக்காகப் போராடி தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த பல்லாயிரக்கணக்கான மாவீரர்களின் ஆத்ம பலத்தை சிந்தையில் ஏந்தி விடுதலைப் போராட்டம் வென்றே தீரும் என அதில் கூறப்பட்டுள்ளது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/69708/language/ta-IN/article.aspx

'விசா' என்பது இருந்தும் நாட்டுக்குள் விடாமல் திருப்பி அனுப்பியமைக்கு பின்னால் டெல்லியே இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கான காரணம் கேட்டதற்கு, சீமான் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு நெருக்கமானவர் என்றும், அவரை அனுமதித்தால் அது அமெரிக்க நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஆகலாம் என்ற அச்சம் காரணமாக அனுமதி மறுக்கப்படுவதாக கூறியுள்ளனர்.

பலபேரை கொன்ற மகிந்தவுக்கு அமெரிக்க அரசு உள்ளே செல்ல அனுமதி வழங்கி உள்ளது.சீமானுக்கு அனுமதி இல்லை.

'விசா' என்பது இருந்தும் நாட்டுக்குள் விடாமல் திருப்பி அனுப்பியமைக்கு பின்னால் டெல்லியே இருக்கும்.

சவேந்திரா பெரிதாக மார்தட்டினாலும் இது இந்திய பாணி அலுவல்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ தா தே வந்து போனபோது ..............

ஐயோ அமெரிக்க விட்ட கூத்தமைப்பு பொய் அதை சொல்லோனும் இதை வலியுறுதவேனும் என்று பந்தி பந்திய எழுதிச்சினம். கூத்தமைப்பு வந்து சொல்லி தெரிய அமெரிக்காவிற்கு என்ன இருக்கிறது? முள்ளிவைக்காலில் நின்றவனுக்கு கூட தனுக்கு அருகில் நடந்த்ததே தெரியும் மற்றவை வெறும் ஊகம். ஆனால் அனைத்தையும் நேரடி ஒளிபரப்பில் சற்றலைட் மூலம் பார்த்து கொண்டிருந்தது யார்?

இந்தியாவின் திரைகதை நாடகத்தின் ஒரு பகுதி தா தே வந்தது..

மறு பகுதி சீமான் திருப்பி அனுப்ப பட்டது.

ஒருவேளை மன்னாரில் உன்மைய்லேயே பெட்ரோல் வந்து.......... அதை ஸ்ரீலங்கா அமெரிக்க கம்பனி ஒன்றிடம் கொடுத்தால் மன்னார் கரையோரத்தில் இருக்கும் தமிழரை அழிக்க இவர்களே இரசாயணம் கொடுப்பார்.

அவன் அவன் ............ எங்க காசு அடிப்பது என்று சிந்திக்க நேரம் இல்லது திரியிறான். இதில இந்தியாவை அரவனைசுதான் எங்களுக்கு விடிவு ..........

அமெரிக்க வந்துதான் எங்களுக்கு சுதந்திரம்...............

எண்டு கிடந்து நாசமாக போகவேண்டியதுதான்.

உண்மையில் கடவுள் இருந்தால் அதுதான் நீதியான முடிவு. புலியின் வரி கொடுமையால் நொந்து நூலாகி போன தமிழர்களே இப்போ பெரும்பான்மை. சர்வதேச அரசியல் படித்து பட்டம் எடுத்து முடித்தவுடன் விட்ட பிழை ஆராய்ச்சியில் இறங்கி தமிழருக்கு சுதந்திரம் தேடுவோர் ஒரு ௩௦ வீதம். கூட்டி கழிச்சு பார்த்தால் ஒரு ௫ வீத தமிழன் வாழ்கிறான். இவனுக்கு நன்மை கொடுத்து அயோக்கியரை வாழவிட்டால்? கடவுளிடமும் நீதி இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நியோர்க்கில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டார் சீமான் இப்படித்தான் இருக்கும் என நம்புகின்றேன்.

நீங்கள் போட்ட தலைப்பு இவ்வாறு உள்ளது திருத்துங்கள் நிழலி

நியூயோர்க்கில் இருந்து திருப்பி சீமான் திருப்பி அனுப்பப்பட்டார்.

'விசா' என்பது இருந்தும் நாட்டுக்குள் விடாமல் திருப்பி அனுப்பியமைக்கு பின்னால் டெல்லியே இருக்கும்.

குறிப்பாக தனது உள்நாட்டில், தமிழகத்தில், இது 'பிரச்சனைகளை உருவாக்கும்' என டெல்லி அறிவித்திருக்கும். அதை வாசிங்கடனும் ஏற்றிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த வருடம் சீமான் ரொரன்ரோவில் வைத்து சிங்களவர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டு நாடு கடத்தப்பட்டார். இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு கணணி மூலம் இணைக்கப்பட்டுள்ள தகவல் களஞ்சியத்தில் இந்த தகவல் இல்லாதிருந்திருக்க கூடும். ஆகவே அவர்கள் அங்குள்ள தகவல்களின் அடிப்படையில் சீமானுக்கு விசா கொடுத்திருப்பார்கள். விமான நிலையங்களிலும் எல்லை காவலிலும் உள்ள கணணிகளிற்கு இணைக்கப்பட்டுள்ள தகவல் களஞ்சியங்களில் வேறுவிதமான தகவல்களும் கிடைப்பதாக தெரிகிறது. குறிப்பாக அமெரிக்க எல்லைக்காவல் கணணிகளில் கனேடிய குடிவரவு குடியகல்வு மற்றும் குற்றச்சாட்டு தகவல்கள் கிடைப்பதாக தெரிகிறது. சீமான் இவ்வாறு ரொரன்ரோவில் வைத்து நாடுகடத்தப்பட்ட தகவல் நியுயோர்க் விமானநிலையத்தில் கிடைத்திருக்க வேண்டும். இந்த நாடுகடத்தலுக்கு இவர் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருப்பதாக அல்லது சார்பாக செயற்படுதாக காரணம் காட்டப்பட்டதாக நினைவிருக்கிறது.

சீமான் அவர்கள் தனது இடத்திலிருந்தே செய்மதி ஊடாக அதே நேரத்திற்கு அமெரிக்க நிகழ்வில் பேசவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.