Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீமானை நாடு கடத்திய அமெரிக்காவின் செயல் நியாயமானதா..??!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆதரவளிப்பவர் என்ற ஒரே காரணத்திற்காக.. எல்லா பயண அனுமதிப் பத்திரங்களோடும் அமெரிக்காவிற்குள் நுழைய முற்பட்ட.. நாம் தமிழர் கட்சி என்ற ஜனநாயக அமைப்பின் தலைவர் சீமான்.. அமெரிக்க அதிகாரிகளால் நியோர்க் விமான நிலையத்தில் வைத்து மீண்டும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டமையானது எந்த வகையில் நியாயமானது.

இது அமெரிக்காவின் தமிழர் விரோத போக்கையா இனங்காட்டுகிறது. சீமான் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சார்ந்தவர் அல்ல. தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பை கொள்கை ரீதியாக ஆதரவளிப்பது எப்படி பயங்கரவாதமாகும். இந்த அடாவடித்தனமான செயலை அமெரிக்கா செய்யக் காரணம் என்ன..???!

அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த கூட்டமைப்பினரை சந்திப்பதில் இருந்து கிலாரி விலகிக் கொண்டார். மேலும்.. ஒரு போர்க்குற்றத்தைச் சுமத்தும் போர் வடுக்களைக் கண்ட இனத்தின் ஜனநாயகப் பிரதிநிதிகளை சந்திப்பதில் இருந்தும்.. பாக்கி மூன் தடுக்கப்பட்டார். இப்படி அமெரிக்காவின் தமிழர் விரோத செயற்பாடுகள் விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்ட பின்னும் தொடர்வது ஏன்..??!

அமெரிக்கா.. சமாதான காலத்தில்.. இணைத்தலைமை நாடுகளின் அமைப்பு என்ற பெயரில் விடுதலைப்புலிகள் மீதான பேச்சுக்களின் போது அவர்கள் மீது செலுத்தி வந்த அழுத்தத்தை.. இன்று சிறீலங்கா மீது செலுத்த மறுப்பதன் பின்னணி என்ன..???!

இது குறித்த ஆராய்வுகளை.. மதிப்பீடுகளை.. தமிழ் மக்கள் மேற்கொள்வதும்.. அமெரிக்காவின் இந்த நகர்வுகள் குறித்த தங்கள் ஆதங்கத்தை அமெரிக்கா அறியச் செய்வதும் அவசியமாகின்றது.

-------------------------

செய்தி:

விடுதலைப்புலி போலவே என்னை நடத்தினர் : அமெரிக்காவில் இருந்து திரும்பிய சீமான் பேட்டி

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அமெரிக்காவில் நடைபெற்ற உலகத்தமிழர் பேரமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்றிருந்தார். நேற்று காலையில் நியூயார்க் விமான நிலையத்தில் அமெரிக்க அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தினர்.

நீங்கள் விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளர் எனவே உங்களை அமெரிக்காவுக்குள் செல்ல அனுமதிக்க முடியாது என்று விமான நிலைய அதிகாரிகள் கூறியதால் சீமான் அதிர்ச்சி அடைந்தார்.

அமெரிக்க பயணத்துக்காக இந்திய அரசாங்கத்திடம் இருந்து முறைப்படியான பயண அனுமதி சீட்டுக்கள் அனைத்தும் நான் வாங்கி உள்ளேன். பின்னர் ஏன் அனுமதி மறுக்கிறீர்கள் என்று சீமான் கேட்டுள்ளார்.

இதற்கு உரிய பதில் அளிக்காத அதிகாரிகள் அவரை அங்கிருந்து திருப்பி அனுப்புவதிலேயே குறியாய் இருந்துள்ளனர். அதன்படி சீமான் அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டார்.

நேற்று நள்ளிரவு 1 மணிக்கு சீமான் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவரை ஏராளமான நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் வரவேற்றனர்.

சீமானை வரவேற்க திரண்ட நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினார்கள்.

அப்போது சீமான் செய்தியாளர்களிடம், ’’விசா உள்ளிட்ட உரிய பயண சீட்டுகளுடன் அமெரிக்காவுக்கு சென்ற என்னை அங்குள்ள விமான நிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

அப்போது விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் என்பதாலேயே எனக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசின் தூண்டுதலே காரணம்.

அமெரிக்க விமான நிலையத்தில் அதிகாரிகள் கேட்ட கேள்விகள் என்னை அதிர்ச்சி அடையச் செய்தது. விடுதலைப்புலி போலவே அவர்கள் என்னை நடத்தினர்.

உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் இம்மானுவேல் அடிகளார் சென்னை விமான நிலையத்தில் இறங்குவதற்கு இங்குள்ள அதிகாரிகள் அனுமதி மறுத்ததுபோல, அமெரிக்காவில் எனக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இது தமிழர் விரோத செயலாகும்’’ என்று கூறினார்.

http://www.nakkheera...ws.aspx?N=64652

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் நுழைய எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது தமிழர் விரோத செயல்-சீமான்

280211VNeasthamUK4357.jpg

அமெரிக்காவுக்குள் நுழைய எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது தமிழர் விரோத செயலாகும். மத்திய அரசின் தலையீட்டால்தான் என்னை அமெரிக்க அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். என்னை விடுதலைப் புலி போலவே அவர்கள் நடத்தினர் என்று கூறியுள்ளார் நாம் தமிழர் தலைவர் சீமான்.

நியூயார்க்கில் நடைபெறும் உலகத் தமிழர் பேரமைப்பின் மாநாட்டில் பங்கேற்க சீமான் அங்கு சென்றார். ஆனால் அவரை விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்திய அதிகாரிகள் உள்ளே நுழைய விடாமல் திருப்பி அனுப்பி விட்டனர்.

நீங்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதரவாளர், விடுதலைப் புலிகளுக்காகவே நீங்கள் கட்சி ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் உங்களது விசாவும் முடிந்து விட்டது. எனவே உள்ளே அனுமதிக்க முடியாது என்று அதிகாரிகள் சீமானிடம் கூறினராம். இதனால் அதிர்ச்சி அடைந்த சீமான், அனைத்து அனுமதிகளையும் முறையாகப் பெற்றும் ஏன் என்னை அனுமதிக்க மறுக்கிறீர்கள் என்று கேட்டதற்கு உரிய காரணத்தை அமெரிக்க அதிகாரிகள் கூறவில்லை. மாறாக திருப்பி அனுப்புவதிலேயே குறியாக இருந்துள்ளனர். இதையடுத்து சீமான் சென்னை திரும்பினார்.

நேற்று நள்ளிரவு சென்னை திரும்பிய சீமானை நூற்றுக்கணக்கான தொண்டர்கள், கட்சிகள் கொடிகளுடன் திரண்டு வந்து வரவேற்றனர். பின்னர் சீ்மான் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

விசா உள்ளிட்ட உரிய பயண சீட்டுகளுடன் அமெரிக்காவுக்கு சென்ற என்னை அங்குள்ள விமான நிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அப்போது விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் என்பதாலேயே எனக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசின் தூண்டுதலே காரணம்.

அமெரிக்க விமான நிலையத்தில் அதிகாரிகள் கேட்ட கேள்விகள் என்னை அதிர்ச்சி அடையச் செய்தது. விடுதலைப்புலி போலவே அவர்கள் என்னை நடத்தினர்.

உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் இம்மானுவேல் அடிகளார் சென்னை விமான நிலையத்தில் இறங்குவதற்கு இங்குள்ள அதிகாரிகள் அனுமதி மறுத்ததுபோல, அமெரிக்காவில் எனக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இது தமிழர் விரோத செயலாகும் என்றார்.

மத்திய அரசுக்கு இதில் பொறுப்புண்டு என்று குற்றம் சாட்டிய சீமான் மத்திய அரசின் வெளியுறவது்துறையையும் கண்டித்தார்.

http://mykathiravan.com/ta-news/?p=18521

அப்போது விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் என்பதாலேயே எனக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசின் தூண்டுதலே காரணம்.

இமானுவேல் அடிகளார், சீமான் இவர்கள் பின்னால் உள்ள அனுமதித்தடைகளுக்கு இந்திய மத்திய அரசே காரணம். சிங்களத்தை மீறிய அமேரிக்கா (கூட்டமைப்பு சந்திப்பு) இலகுவாக இந்தியாவை மீறாது.

அந்தவகையில் கூட்டமைப்பின் சந்திப்பு மத்தியின் ஆதரவு இல்லாமலேயே நடந்துள்ளது போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

அந்தவகையில் கூட்டமைப்பின் சந்திப்பு மத்தியின் ஆதரவு இல்லாமலேயே நடந்துள்ளது போலுள்ளது.

கூட்டமைப்பின் சந்திப்பு இந்தியாவின் ஆதரவு இல்லாமல் நடந்திருக்காது..

தொடர்புபட்ட தமிழ்நெற் செய்தி http://www.tamilnet.com/art.html?catid=79&artid=34594

தமிழர்களின் அரசியல் பிரச்சினைகளில் கடும்போக்கான நிலைப்பாடுள்ளவர்களை இந்தியாவும், மேற்கு நாடுகளும் அங்கீகரிக்கப் போவதில்லை என்பதைத்தான் சீமானை அமெரிக்கா உள்ளே நுழையவிடாமல் தடுத்த செய்தி சொல்கின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா பிரிவினைவாதத்தை ஈழத்தமிழர்கள் மத்தியில் தூண்டிவிட்டு தன் நலன் காத்துக் கொண்டதை மீண்டும் உறுதி செய்துள்ளது.

சர்வதேச சமூகம் எனச் சொல்லும் அமெரிக்க மைய நாடுகள் எவையுமே எமது கடந்த 60 ஆண்டு கால அரசியல் கோரிக்கையை நியாயம் என்று ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்கு முன்னர் என்ன ஏற்றுக் கொண்டனரா என்றால்.. டொனமூர்.. சோல்பரி என்று பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்களும் தமிழர்களைப் புறக்கணிக்கக் கூடிய அளவுக்கு புறக்கணிக்கவே முனைந்துள்ளனர்.

இவர்களின் இந்த நிலைப்பாடுகளுக்காக.. எமது வரலாற்றை நாம் மாற்றி எழுத முடியாது. நாம் அவர்களின் நிலைப்பாடுகளுக்குச் சார்ப்பாக எமது வரலாற்றை எமது அடிப்படை அரசியல் உரிமைகளை மாற்றுவோமாக இருந்தால்.. அது கடந்த 35 ஆண்டுகால ஆயுதப் போரட்டத்திற்கும்.. அதற்கு முந்தைய அகிம்சை வழிப் போராட்டத்திற்கும் அர்த்தமற்ற ஒரு தன்மையை வழங்குவதோடு.. எமது போராட்டம் பயங்கரவாதம் என்பதாகிவிடும்.

கூட்டமைப்பு ஒன்றை புதிதாகக் கண்டுபிடிப்பதை விட்டு.. விடுதலைப்புலிகள் ஒஸ்லோ பிரகடனம்.. மற்றும் இடைக்கால நிர்வாக சபை என்று முன்மொழிந்த வரைவுகளில் இருந்தும்.. சர்வதேச மத்தியஸ்துடன் அமைந்திருந்த.. உடன்படிக்கைகளில் இருந்தும்.. தமிழ் மக்களின் சுயநிர்ணயக்கோட்பாட்டு அடிப்படையில் தான் நகர்வுகளைச் செய்தாக வேண்டும்.

அமெரிக்காவும்.. இந்தியாவும்.. ரஷ்சியாவும்.. சீனாவும்.. பாகிஸ்தானும்.. பிரித்தானியாவும் விரும்புவதற்கு ஏற்ப தீர்வைப் பெறவல்ல.. நாம் போராடினோம். எமது உரிமைகளுக்கான போராட்டமே இரண்டு வழிமுறைகளிலும் கடந்த 60 ஆண்டுகாலம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேற்குலக சக்திகள்.. தங்களின் தேவைப்பாட்டோடு.. எங்களைக் கொண்டு செல்ல வகுக்கும் திட்டங்களோடு.. நாம் பயணித்துக் கொண்டிருக்க முடியாது. தேவை ஏற்பட்டால்.. மேற்குலகத்தை விட்டு.. சீனா.. ரஷ்சியா.. அதிகம் பெற்றுத் தரும் என்றால் அங்கும் நான் எம் முயற்சிகளை மேற்கொண்டு பார்க்கலாம். நாம் வெறுமனவே மேற்குலகை.. இந்தியாவை நம்பி நகர்வுகளைச் செய்ய வேண்டியதில்லை. சிங்களமே.. அப்படிச் செய்வதில்லை. மேற்குலகை அச்சுறுத்த சீனா.. ரஷ்சியாவை கையகப்படுத்தும் சிறீலங்கா.. சீனாவை.. அடக்க.. இந்தியாவை கையாள்கிறது. இந்தியாவை அடக்க பாகிஸ்தானைக் கையாள்கிறது.

இப்படியான இன்னொரு முனை எம்மிடத்தில் இருந்தும் முனைப்புப் பெற்றால் அன்றி நாம் எமது விருப்பத் தீர்வை அணுகவே முடியாது போகும்.

மேலும்.. நாம் அடிப்படைக் கோரிக்கைகளைக் கைவிடுவோம் ஆக இருந்தால்.. எமக்கு கிடைக்கக் கூடிய தீர்வு என்பது.. மிகவும் சொர்ப்பமாகவே இருக்கும்.

எந்த ஒரு பலசாலியும்.. பலவீனமானவன் கேட்கிறதை அப்படியே கொடுக்கமாட்டான். பலத்தைக் காட்டி குறைக்கக் கூடிய அளவுக்கு குறைச்சு.. தனது நீண்ட கால நலனைப் பேணக் கூடிய வகையில் ஏதாவது ஒன்றை பலவீனமானவன் தலையில் கட்டிவிடுவான். இதுதான் வரலாறு. இதனை தேசிய தலைவர் நன்குணர்ந்து தான் செயற்பட்டார். இருந்தாலும்.. அவரால்.. தனித்து பலசாலிகளை சமாளிக்க முடியவில்லை.. என்பது வெளிப்படை உண்மை. அது இயலக் கூடிய ஒன்றும் அல்ல.

சம்பந்தனின் அணுகுமுறை.. ஒன்றும் இல்லாமல் இருப்பதை விட.. பெறக் கூடியவற்றை பெற்று.. அதில் இருந்து மேல போக முடியும் என்றால் போவோம் என்பது போல இருந்தாலும்.. நாம் எமது அடிப்படை அரசியல் அபிலாசைகளை விட்டுக் கொடுப்பது என்பது.. பெறக் கூடியதன் கனதியை இன்னும் இன்னும் குறைக்கும்..! இதனை எதிர்பார்த்துத்தான் மேற்குலகமும்.. இதர சர்வதேச சக்திகளும் தமிழர்களின் பெரும் பேரம்பேசு வலுவாக இருந்த.. புலிகளை.. அழிக்க.. ஒத்துழைப்பு நல்கின.

இன்றைய நிலையில்.. தமிழர்கள் மிகப் பலவீனமான ஒரு நிலையில் நிற்கிறார்கள். போர்க்குற்ற விசாரணை என்பதைக் கூட கெஞ்சி.. மற்றவர்களின் நலனை திருப்தி செய்வதன் மூலமே முன்னெடுக்க முடியும் என்ற மிக மோசமான நிலை எமக்கு.

இந்த நிலையில்.. சம்பந்தனின் நிலைப்பாடு சரியானது போன்று தோன்றலாம். ஆனால்.. இது ஆதிக்க சக்திகள் கையாளும் தந்திரங்களில் மிகவும் பழைமையானது. தங்களை விஞ்சி இந்த உலகில் எவரும் எதையும் பெற முடியாது என்ற ஆதிக்க வெறித்தனத்தின் வெளிப்பாடே.. மேற்குலகினதும்.. இந்தியாவினதும்.. நிலைப்பாடு.

இதில் இருந்து மீள்வது எப்படி..???!

ஒன்று: சம்பந்தன் சொல்வது போன்று.. அமெரிக்காவின் இந்தியாவின் சொல்லைக் கேட்டு.. அவர்களின் நலனைத் திருப்தி செய்து கொண்டு அதன் மூலம் பெறப்படும் சிறீலங்கா மீதான அழுத்ததை பாவித்து எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு விட்டுக் கொடுத்து ஒரு குறைந்த பட்ச தீர்வைப் பெற்றுக் கொள்வது.

இரண்டு: சம்பந்தனின் வழியில் தீர்வைப் பெற்றுக் கொண்டு பின் அதலிருந்தும் முன்னேக்கிப் போக வழி இருக்கா என்று ஆராய்ந்து தொடர்வது.

மூன்று: மேற்குலகம் சாராத சக்திகளோடு இணைந்து கொண்டு சிறீலங்காவிற்குப் போட்டியாக பேரம் பேசி.. அதன் மூலம்.. பெறக் கூடிய தீர்வுகள். (இதற்கான சரியான இராஜதந்திரம் தமிழர்களிடம் இல்லை.)

நான்கு: மூன்றாம் தரப்புக்கள் மூலம்.. மனித உரிமை அமைப்புக்கள் மூலம்.. போர்க்குற்ற விசாரணை என்பதை பலமாக்கி.. அதன் மூலம்.. மேற்குலக நாடுகளை.. சிறீலங்கா மீது நடவடிக்கை எடுக்கத் தூண்டுதல். அதன் வாயிலாக தமிழர்கள் தமது அபிலாசைகளை ஈட்டிக் கொள்ளுதல்.

ஐந்து: போர்க்குற்றம்.. மேற்குலக அழுத்தம்.. சிறீலங்கா மீதான இந்திய நெருக்கமும்.. நெருக்கடியும்.. இப்படி எல்லாவற்றையும் வைத்துக் கொண்டு.. நேரடியாக சிங்களத்தோடும்.. பேசி.. ஒரு இணக்க அடிப்படையில்.. பெறக் கூடிய அதி கூடிய தீர்வை பெற்றுக் கொள்ளுதல். (ஐக்கிய இலங்கை.. மாகாண சபை போய்.. மாவட்ட ஆட்சி என்று பெற்றாலும்.. அது தமிழர்களுக்கு இன்றைய நிலையில் வெற்றி என்றே காட்டப்படும்.)

ஆறு: தமிழர்கள்.. எதிர்பார்த்த தீர்வுகளை.. சர்வதேசமும்.. பிறரும்.. சிறீலங்காவும் தராத நிலையில்.. உலகத்தமிழினம்.. ஒன்றுகூடி.. ஒரு பொதுத் தீர்மானத்தை நிறைவேற்றி.. அதை சர்வதேச சமூகம் நிறைவேற்றக் கோருதல். அப்படி இல்லாத சமயத்தில்.. தமிழர்கள் தங்கள் தலைவிதியை தாமே தீர்மானிக்கும் வகையில் பல்வேறு வடிவிலான போராட்டங்களை நடத்துவார்கள் என்ற எச்சரிக்கையும் வழங்கி அதனூடு.. அனுமதியையும் பெற்று.. இதற்கு ஆதரவு நல்கும் சர்வதேசச் சக்திகளோடு ஒன்றிணைந்து.. விடுதலை நோக்கிய போராட்டங்களை ஆரம்பிப்பது. (இதற்கான சாத்தியப்பாடு இன்று மிகக் குறைவாகவே உள்ளது.)

ஏழு: மீண்டும் தமிழகம்.. தாயகம் சார்ந்து.. ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்து.. அதன் வழி ஆதிக்க சக்திகளினதும்.. ஆக்கிரமிப்பு சக்திகளினதும்.. நலன்கள் பாதிக்கச் செய்யப்பட்டு.. அதன் வழி பெறப்படும்.. அனுகூலங்களை தீர்வை நோக்கிப் பயன்படுத்தல். (இது மீண்டும் உயிர் விலை கொடுப்பதை கோரும் என்பதால்.. எனி இந்த வழிமுறையை அதிகம் தாயக மக்களால் விரும்பமாட்டார்கள்.

எட்டு: இவற்றை எல்லாம் விட்டிவிட்டு.. தற்போதுள்ள வடிவிலேயே.. சிங்களத்தோடு இணக்க அரசியல் செய்து தப்பிப் பிழைத்துக் கொள்வதும்.. அழிவுகளில் இருந்து.. புலம்பெயர் மக்களின் பங்களிப்போடு.. பொருளாதார மீட்சி பெறுவதும். சுருங்கச் சொன்னால்.. டக்கிளஸ்.. கருணா.. சங்கரி.. பாதையில் சம்பந்தனும் போவது.

இதில் எது.. சாத்தியமோ... அதனை உலகத் தமிழர்களின் ஒற்றுமையும்.. எதிர்கால திட்டமிடல்களும்.. இராஜதந்திர நகர்வுகளும்.. நிபுணத்துவ ஆலோசனைகளும்.. பகிர்வுகளுமே தீர்மானிக்கும்.

விடுதலைப்புலிகள் என்ற அமைப்பின் இருப்பை அது இருந்தவரை உணராமல் விமர்சித்தவர்கள்.. இன்றும் அதனை விமர்சித்துக் கொண்டே இருக்கின்றனர். ஆனால்.. விடுதலைப்புலிகள் அமைப்பு எந்த ஒரு சர்வதேச.. பிராந்திய சூழலில்.. எமது போராட்டத்தை எவ்வளவு சிரமங்கள் மத்தியில் முன்னெடுத்து நாம் நெஞ்சு நிமிர்த்த உயிர் விட்டிருக்கிறார்கள்.. என்பதை இன்றைய நிகழ்கால.. கெஞ்சல்களும்.. வழிதல்களும்.. எமக்கு பாடமாக கற்றுத் தருவதைக் கூட.. அவர்கள் உணர்வதாக இல்லை.

Edited by nedukkalapoovan

இமானுவேல் அடிகளார், சீமான் இவர்கள் பின்னால் உள்ள அனுமதித்தடைகளுக்கு இந்திய மத்திய அரசே காரணம். சிங்களத்தை மீறிய அமேரிக்கா (கூட்டமைப்பு சந்திப்பு) இலகுவாக இந்தியாவை மீறாது.

அந்தவகையில் கூட்டமைப்பின் சந்திப்பு மத்தியின் ஆதரவு இல்லாமலேயே நடந்துள்ளது போலுள்ளது.

அமேரிக்கா ஒரே ஒரு தனிப்பெரும் வல்லரசு. எனவே இந்தியாவிடம் எல்லாம் கேட்டோ இல்லை சொல்லியோ செய்யும் அவசியம்அதற்கு இல்லை, அப்படியும் செய்யாது. அப்படி செய்தால் அது பலவீனமானதாக பார்க்கப்படும்.

ஆனால் எமது விடயத்தில் அது இந்தியாவை கலந்தாலோசித்து பல விடயங்களை செய்தாலும் எல்லா விடயத்திலும் அது இந்தியாவின் கருத்தை ஏற்கும் என கூறமுடியாது.

சீமான் இந்திய பிரசை. அவர் விடயத்தில் இந்தியாவின் கருத்தை அமேரிக்கா கேட்டிருக்கலாம். ஆனால் கூட்டமைப்பினர் இந்தியர்கள் அல்லர், அமெரிக்கா அவர்கள் விடயத்தில் இந்தியாவை கேட்க வேண்டிய அவசியம் இல்லை.

Edited by akootha

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

US, India deploy ‘entry-refusal’ weapon against Tamil solidarity

[TamilNet, Saturday, 05 November 2011, 23:19 GMT]

Tamil Nadu film director and leader of the Naam Thamizhar Movement that upholds the cause of Eezham Tamils, Mr. Seeman, was refused of landing permission in the USA when he went to participate in a Tamil conference organized by three US-based diaspora associations of both Tamil Nadu and Eezham Tamils. Mr. Seeman was given with a valid visa to visit the USA but was refused entry at the New York airport on Saturday. Last month, the President of the Global Tamil Forum (GTF), the diaspora-based umbrella organisation of Eezham Tamils, Rev. Fr. S J. Emmanuel, was refused entry at Chennai airport when he travelled from Europe, despite having valid multiple entry visa to India. Whether the USA and India, long known for the misuse of visa by the Establishments, cooperate or compete in capturing Tamil polity for their agendas is the emerging question.

Naam_Tamilar_Seeman_95797_200.jpg

Naam Thamizhar Seeman

The US Tamil conference “Thamizhar Changkamam 2011” (the Tamil confluence) on Saturday was organized by three US-based diaspora associations, World Tamil Organization, US Tamil Political Action Council (USTPAC) and Ilangkai Thamil Sangam (Sangam) at Crown Plaza in New Jersey.

The conference was scheduled to discuss, improving lives of Tamils, war crimes investigations and coordination of activities.

According to the programme of the conference, Mr. Seeman was to deliver the keynote address besides speeches by the visiting TNA parliamentarians.

Mr. Seeman was refused entry at the New York airport on Saturday early hours.

Fr_S_J_Emmanuel_1_95800_200.jpg

Rev. Fr. S.J. Emmanuel

When asked for reasons, Mr. Seeman was told that his connections with the LTTE would be a security threat to the USA, said a press statement from Naam Thamizhar, asking why then the US embassy in India had given him the visa.

The press statement said that Mr. Seeman was invited by the World Tamil Organization and accused that the deportation was at the behest of elements working against the Tamil nation.

While selectively deport war-torn Tamils engaged in socio-political organisation, both the USA and India on the other hand competitively build their own ‘networks’ and NGO blocs among Eezham Tamils.

Meanwhile, internationally accused war criminals of Sri Lanka travel freely to both the countries.

Writing in Guardian on 30 September 2011, about States abusing visa to counter righteous struggles of peoples, Arundhati Roy said: “Our lungs are gradually being depleted of oxygen. Perhaps it's time use whatever breath remains in our bodies to say: Open the bloody gates."

In September this year, veteran US journalist and author, David Barsamian, founder and director of Alternative Radio, and a person having cultural contacts with India for well over 45 years, was refused landing permission in New Delhi. His entry was refused for reasons not revealed to him.

In last November, a US Professor of Anthropology, Richard Shapiro, who has his family in India, was stopped from entering India and he was not even replied to his queries when he could again return to India.

Arundhati Roy says Kashmir question was the reason for the refusal of entry to both the US visitors.

ITAJ_Arundahti_Roy_meet_01_fr_93713_200.jpg

Arundhati Roy

The complaint against David Barasamian according to "official sources" is that he had reported on events in Jammu and Kashmir during his last visit to India and that these reports were "not based on facts," Arundhati cited Indian officials.

“Who decides which "facts" are correct and which are not? Would Barsamian have been deported if the conversations he recorded had been in praise of the impressive turnouts in Kashmir's elections, instead of about daily life in the densest military occupation in the world (an estimated 600,000 actively deployed armed personnel for a population of 10 million people),” asks Arundhati. [The intensity of SL military occupation of the country of Eezham Tamils is worse than that of Kashmir cited by Arundhati]

The deportation of Prof Shapiro “was probably a way of punishing his partner, Angana Chatterji, who is a co-convenor of the international peoples' tribunal on human rights and justice which first chronicled the existence of unmarked mass graves in Kashmir, Arundhati said.

More than 60 prominent intellectuals, academics, journalists and writers, including Prof. Noam Chomsky, who condemned the deportations in September 2011 said that “We are dismayed that this power to send people back from the airport is slowly becoming a weapon, used to discipline and silence people who draw any kind of attention to uncomfortable truths about India.”

“We demand that the right to travel and the right to free exchange of ideas between scholars, journalists, artists, and human rights defenders be respected and protected, and that government agents not authorize the denial of entry and eviction of visitors to India, or monitor their movement. Free exchange of ideas is one of the most basic human rights and values in free democratic societies. Freedom of travel is one of the most important avenues for furthering such exchange among peoples. Recognizing this, the International Covenant on Civil and Political Rights, which India has ratified, protects freedom of expression, right to travel and scientific exchange,” said the September statement of Indian academics and journalists.

Whatever said to India is also applicable to the USA, perhaps in a more underlined way, because of the latter’s international involvements.

But, what one wonders is that how many in the USA, and how many among the ‘All India’ Indians will voice against what their Establishments are doing to Eezham Tamils in intimidating and hijacking their efforts to come out from genocide and annihilation of their nation.

http://www.tamilnet.com/art.html?catid=79&artid=34591

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாகூட தேவையில்லை. ஒரு தனிநபர் அமெரிக்க அதிகாரிகளுக்கு விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான ஒருவர் நாட்டுக்குள் நுழையப் போகிறார் என்று விபரங்களுடன் தகவல் கொடுத்தாலே போதும். வந்தவர் திருப்பி அனுப்பப் படுவார். காரணம் அங்கே உள்ள தடைதான். :rolleyes:

பாப் ரே இலங்கைக்குச் சென்றபோது அவர் திருப்பி அனுப்பப்பட்டார். அவர் புலிக்கு சம்பந்தமில்லாதவர். காரணம் இங்கே இருந்து இராங்கனி என்கிற சிங்களப் பெண் இலங்கை அரசாங்கத்துக்கு காட்டமாக எழுதிய கடிதமே. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அமேரிக்கா ஒரே ஒரு தனிப்பெரும் வல்லரசு. எனவே இந்தியாவிடம் எல்லாம் கேட்டோ இல்லை சொல்லியோ செய்யும் அவசியம்அதற்கு இல்லை, அப்படியும் செய்யாது. அப்படி செய்தால் அது பலவீனமானதாக பார்க்கப்படும்.

ஆனால் எமது விடயத்தில் அது இந்தியாவை கலத்தலோசித்து பல விடயங்களை செய்தாலும் எல்லா விடயத்திலும் அது இந்தியாவின் கருத்தை ஏற்கும் என கூறமுடியாது.

சீமான் இந்திய பிரசை. அவர் விடயத்தில் இந்தியாவின் கருத்தை அமேரிக்கா கேட்டிருக்கலாம். ஆனால் கூட்டமைப்பினர் இந்தியர்கள் அல்லர், அமெரிக்கா அவர்கள் விடயத்தில் இந்தியாவை கேட்க வேண்டிய அவசியம் இல்லை.

உங்கள் வாதம் சரியாகப் பட்டாலும், நடைமுறை யதார்த்தம் வேறாக அல்லவா இருந்தது/இருக்கின்றது. உங்கள் வாதப்படி பார்த்தால் அமெரிக்காவின் கப்பல் முள்ளிவாய்க்காலுக்குப் போயிருக்கும் அல்லவா!

இலங்கைப் பிரச்சினை விடயத்தில் இந்தியாவை மீறி அல்லது இந்தியாவுக்குத் தெரியாமல் மேற்கு நாடுகள் ஒன்றும் செய்வதில்லை என்பது, எரிக் சொல்ஹைம் ஒவ்வொரு முறையும் இலங்கைக்கு விஜயம் செய்தபோது இந்தியாவுக்கும் தவறாமல் சென்றிருந்தார் என்பதில் இருந்து புரியவில்லையா..

தற்போது கூட்டமைப்பு இந்தியாவினதும் மேற்கு நாடுகளினதும் சொல்படிதான் தமிழர்களுக்கு ஒரு தீர்வைப் பெற வேலை செய்கின்றது. சிங்கள அரசாங்கமும், தீவிர தமிழ்த் தேசியவாதிகளும் கூட்டமைப்புக்கு இந்தியாவிலும் அமெரிக்காவிலும் கிடைத்த முக்கியத்தை வெவ்வேறான காரணங்களுக்காக விரும்பவில்லை என்பதும் செய்திகளிலும் அலசல்களிலும் தெளிவாகத் தெரிகின்றது!

மேற்கு நாடுகளின் தற்போதைய அரசியல் நிலைப்பாட்டை சீமானுக்கு அமெரிக்கா உள்நுழைய அனுமதி மறுத்ததில் இருந்தும், இம்மானுவேல் அடிகளாருக்கு இந்தியா உள்நுழைய அனுமதி மறுத்ததில் இருந்தும் புரிந்துகொள்ளவேண்டும்.

அரசியல் அழுத்தங்களை சிங்கள அரசு மீது மட்டும் பிரயோகித்து தமிழர்களுக்குத் தீர்வைப் பெறமுடியாது. தீவிர தமிழ்த் தேசியவாதிகள் மீதும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டால்தான் நிரந்தரமான தீர்வை தமிழர்களுக்குப் பெற்றுக்கொடுக்கலாம் என்பது மேற்கு நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் புரிந்தே இருக்கின்றது.

சி.கு. முதலாளித்துவத்தை விரும்பாத, சமதர்ம தமிழ்த் தேசியத்தின்பால் பற்றுள்ள, தனித் தமிழீழத்தை என்றுமே கொள்கையாகக் கொண்டுள்ள நம் போன்றவர்களுக்கு த.தே.கூ. இன் கைப்பொம்மை அரசியல் பிடிக்காது. :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சி.கு. முதலாளித்துவத்தை விரும்பாத, சமதர்ம தமிழ்த் தேசியத்தின்பால் பற்றுள்ள, தனித் தமிழீழத்தை என்றுமே கொள்கையாகக் கொண்டுள்ள நம் போன்றவர்களுக்கு த.தே.கூ. இன் கைப்பொம்மை அரசியல் பிடிக்காது. :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் அழுத்தங்களை சிங்கள அரசு மீது மட்டும் பிரயோகித்து தமிழர்களுக்குத் தீர்வைப் பெறமுடியாது. தீவிர தமிழ்த் தேசியவாதிகள் மீதும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டால்தான் நிரந்தரமான தீர்வை தமிழர்களுக்குப் பெற்றுக்கொடுக்கலாம் என்பது மேற்கு நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் புரிந்தே இருக்கின்றது.

சி.கு. முதலாளித்துவத்தை விரும்பாத, சமதர்ம தமிழ்த் தேசியத்தின்பால் பற்றுள்ள, தனித் தமிழீழத்தை என்றுமே கொள்கையாகக் கொண்டுள்ள நம் போன்றவர்களுக்கு த.தே.கூ. இன் கைப்பொம்மை அரசியல் பிடிக்காது. :icon_mrgreen:

சிங்களத் தேசியம்.. தமிழர்களுக்கு ஒரு நியாயமான தீர்வைத் தருவதைத் தடுக்குதே. கடும் சிங்களத் தேசியவாதியான விமல் வீரவன்சவை.. அமெரிக்கா.. இரு கரம் கூப்பி வரவேற்கிறதே.. கிருபண்ணா. இதற்கு என்ன சொல்லுறீங்க.

மேலும்.. கடும் போக்கு தமிழ் தேசியவாதிகள் மட்டுமன்றி.. சிங்களத் தேசிய ஆதரவாளர்களான.. டக்கிளசும் தானே அமெரிக்காவிற்குச் செல்ல தற்போதைய அரசு அனுமதி அளிக்கவில்லை. அவர் சந்திரிக்கா காலத்தில் அமெரிக்கா சென்று வந்தவர்.

அடிப்படையில் அமெரிக்கா.. தமிழர்களை.. அது தமிழ் தேசியம் சார்ந்தவர்களாக இருக்கலாம்.. கடும் போக்காளர்களாக இருக்கலாம்.. சிங்கள தேசியம் சார்ந்த தமிழர்களாக இருக்கலாம்.. தனது தேவைக்கு ஏற்ப தடுக்கும். இப்போ.. சம்பந்தன் கூட pro-LTTE அரசியல் கட்சியான கூட்டமைப்பைச் சேர்ந்தவர் என்று தானே சி என் என் சொல்லுது. அப்ப எப்படி சம்பந்தன் மட்டும் அனுமதிக்கப்பட்டார்.

ஆக அமெரிக்காவின் செயற்பாடுகளில் ஒரு வித தெளிவின்மை இருக்கிறது. அல்லது அமெரிக்கா யாரையோ திருப்திப்படுத்த சில நடவடிக்கைகளை எடுக்கிறது. இலங்கையில் கூட அழிக்கப்பட்டுவிட்ட.. அமெரிக்காவில் இல்லாத புலிகள் அமைப்பை ஆதரிப்பதால் மட்டும்.. சீமான் எப்படி அமெரிக்காவிற்கு ஆபத்தாவார். அது போகட்டும்.. புலிகள் அமெரிக்கா மீது எத்தனை தாக்குதலை நடத்தினவை.. அதனால எத்தனை அமெரிக்கப் பிரஜைகள் செத்தவ.. எந்த வகையில் புலிகளும்.. சீமானும் அமெரிக்காவிற்கு.. ஆபத்து.. ???!

இது பற்றியும் அமெரிக்கா விளக்கத் தானே வேணும். சும்மா இப்படியே சொல்லிச் சொல்லி.. எத்தனை காலத்துக்கு ஜனநாயகத்தின் பெயரால்.. உலகை ஏமாத்திறது..?????!

Edited by nedukkalapoovan

ஒரு வெற்றியின் தருவாயில் நின்ற ஆயுதப்போராடத்தை என்ன விலை கொடுத்து என்றாலும் அழிக்க அமெரிக்கா, இந்தியா முழுமையான் ஆதரவை வழங்கின. எனவே கப்பல் வரும் என யாதார்த்தம் தெரிந்த அனைவருமே நம்பவில்லை, எதிர்பார்க்கவும் இல்லை.

புரியவில்லையா..? ஆயுதப்போராட்டம் எனபது முடிந்து இரண்டு வருடங்களுக்கு மேலாகிவிட்டது. அத்துடன் நோர்வேயின் பணியும் முடிந்துவிட்டது. உலக அரசியலும் மாறிவிட்டது. அரசியலில் மாற்றங்கள் நிகழும் என்பதை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை இருக்கவேண்டும்.

சீமானுக்கு அமெரிக்கா உள்நுழைய அனுமதி மறுத்ததையும் இம்மானுவேல் அடிகளாருக்கு இந்தியா உள்நுழைய அனுமதி மறுத்ததையும் இந்தியா செய்தது.

கூட்டமைப்புக்கு மேற்குலக நாடுகளுக்கு அனுமதிகளை வழங்கியமை - அமெரிக்கா செய்தது. ஏன் என்று ஆராய்வது நன்மைகள் புரியவைக்கும்.

சி.கு. முதலாளித்துவத்தை விரும்பாத, சமதர்ம தமிழ்த் தேசியத்தின்பால் பற்றுள்ள, தனித் தமிழீழத்தை என்றுமே கொள்கையாகக் கொண்டுள்ள நம் போன்றவர்களுக்கு த.தே.கூ. இன் கைப்பொம்மை அரசியல் பிடிக்காது. :icon_mrgreen:

பொதுவாக இலக்கியவாதிகள் தான் "முதலாளித்துவத்தை விரும்பாத, சமதர்ம தமிழ்த் தேசியத்தின்பால் பற்றுள்ள" விடயங்களை கதைப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சீமானிடம் அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும்.

வீசா என்ற உள்நுளைவு அனுமதியை வழங்கிய பிறகு நாட்டிற்குள் வரும் பயணியைத் திருப்பி அனுப்பும் காட்டுமிராண்டிச் செயலை அமெரிக்கா செய்திருக்கிறது. வீசா நடைமுறை இதன் மூலம் அர்த்தமற்றதாகி உள்ளது. வீசா வழங்கமுன் அமெரிக்கத் தூதரகங்கள் மிகவும் இறுக்கமான விசாரணைகளை நடத்துகின்றன.

சென்னைத் தூதரகம் வீசா விண்ணப்பதாரிகளைப் பல சுற்று விசாரணைக்கு உட்படுத்துகிறது. அமெரிக்காவில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரமைப்பு மாநாட்டில் பங்கு பற்ற நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் வீசா அனுமதி கோரினார். அவரைப் பற்றிய இரகசியக் கோப்பு ஏற்கனவே இந்தத் தூதரகத்தில் இருக்கிறது.

சீமான் நன்கு அறியப்பட்ட தமிழுணர்வாளர். அவர் தன்னுடைய கருத்துக்களை மறைத்ததில்லை. மிகவும் வெளிப்படையான அரசியல் வாழ்க்கை நடத்தும் அவரை ஒரு திறந்த புத்தகமாகக் கருதலாம். சீமானுக்கு பயண அனுமதி வழங்கப்பட்ட போது சென்னை அமெரிக்கத் தூதரகத்திற்கு அவரைப் பற்றி நன்கு தெரியும்.

முறையான அனுமதியைப் பெற்ற சீமான் நீயூ யோர்க் சென்ற போது அவரை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தித் திருப்பி அனுப்பிவிட்டனர். அவர் விடுதலைப் புலிகளுக்கு நெருக்கமானவர், அவர் மூலம் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று இதற்குக் காரணம் கூறப்பட்டது.

சீமான் திருப்பி அனுப்பப் பட்டதற்குப் பின்னால் பாரிய அரசியல் சதி இருக்கிறது. கடந்த சட்டசபைத் தேர்தல்களில் சீமானின் பிரசாரம் காங்கிரஸ்கார்களின் தோல்விக்கு அடி கோலியது. மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் இயங்கும் இந்திய உள்துறை அமைச்சு தமிழுணர்வாளர்களுக்கு எதிராகச் செயற்படுகிறது.

இதற்கு குடும்ப முன்னேற்றக் கழகம் என்று அழைக்கப்படும் திமுகவும் துணை போகிறது. தேசியத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளுக்கு மலேசிய இந்தியத் தூதரகம் சென்னைக்குச் செல்வதற்கு வீசா வழங்கியது. அவர் சென்னை விமான நிலையத்தில் விமானத்தை விட்டு இறங்காமல் தடுக்கப்பட்டதோடு மலேசியவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

இந்தக் கீழ்தரமான இழிசெயலுக்குச் சிதம்பரமும் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியும் பொறுப்பாகின்றனர். கருணாநிதியின் படுதோல்விக்கு இதுகும் முக்கியகாரணம். இதே பாணியில் வீசா வழங்கிவிட்டு விமானத்தை விட்டு இறங்காமல் தடுக்கும் நடைமுறையை சென்னை விமான நிலைய அதிகாரிகள் உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் இம்மானுவல் அடிகளுக்கும் பிரயோகித்தனர்.

அவர் திருப்பி அனுப்பப்பட்டதற்கு இந்திய மத்திய அரசின் உள்துறை அமைச்சு பொறுப்பேற்கிறது. நியூயோர்க் விமான நிலையத்தில் இருந்து சீமான் திருப்பி அனுப்பப்பட்டதற்கு அரசியல் பழிவாங்கல் தான் காரணம். காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சியான திமுகாவும் சீமானை மட்டந்தட்ட அவருடைய நியூயோர்க் பயணத்தைப் பயன்படுத்தின.

சென்னை அமெரிக்கத் தூதரகம் அனுமதி வழங்கிய போதிலும் அதைத் தடுக்கும் சட்டத்திற்குப் புறம்பான மறைமுக அதிகாரம் இந்திய உள் துறை அமைச்சிற்கு உண்டு. இந்த அமைச்சகம் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதருக்குக் கொடுத்த இரகசிய அறிவிக்கை சீமானைத் தடுக்கும்படி கூறியது. இந்தியத் தூதர் அமெரிக்க அதிகாரிகளைத் தொடர்பு கொண்டார்.

படுவேகமாகச் செயற்பட்ட நியூ யோர்க் விமான நிலைய அதிகாரிகள் இந்தியத் தூதரின் வேண்டுதலை நிறைவேற்றினார்கள். காங்கிரஸ்கார்களுக்கும் திமுகவினருக்கும் ஒரு அற்ப சந்தோஷம் கிடைத்தது. ஆனால் அமெரிக்காவின் மானம் கப்பலேறியது தான் மிகவும் பாரதூரமான விடயம்.

பாதுகாப்பு என்ற பெயரால் அமெரிக்க விமான நிலைய அதிகாரிகள் செய்யும் கெடுபிடிகளால் பயணிகள் வருகை குறைந்துள்ளது. பெருமளவு அந்நியச் செலாவணியை ஈட்டிக் கொடுத்த வெளிநாட்டு மாணவர் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்துள்ளது. தனக்குத் தானே குழி பறிக்கும் நிலையில் அமெரிக்கா இருக்கிறது.

சீமான் விவகாரம் சில அடிப்படைக் கேள்விகளைத் கேட்கத் தூண்டுகிறது. உலகத் தமிழர்கள் அமைப்பு ரீதியாக ஒன்றிணைவதை இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டு சதி மூலம் தடுக்கின்றனவா? மேலும் அமெரிக்காவின் அரசியல் சாசனம் வலியுறுத்தும் ஒன்றுகூடும் மற்றும் பேச்சு சுதந்திரம் இப்போது நடைமுறையில் இல்லையா?

அமெரிக்கத் தூதரகங்கள் வழங்கும் வீசாக்கள் பெறுமதியானவையா? அவற்றை நம்பி விமானம் ஏறலாமா என்ற கேள்வியும் எழுகிறது. தமிழுணர்வாளர் சீமானை அவமதிக்க நினைத்தவர்கள் உண்மையில் தம்மைத் தாமே தரம் தாழ்த்தியுள்ளனர்.

சீமானுக்கு நடந்ததை ஒட்டு மொத்தத் தமிழினத்திற்கும் நடந்ததாகக் கொள்ளலாம். இதனால் அவசியம் அமெரிக்க அரசு அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

-

eelampress

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.