Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐஸ்வர்யா ராயின் பிரசவமும் செய்தி ஊடகங்களின் கவலையும்

Featured Replies

11.11.11 என்ற நாளின் சிறப்புப் பற்றி விஞ்ஞான ரீதியாக என்னவெல்லாம் பேசலாம், கதை தயாரிக்கலாம் என்றெல்லாம் டிவி சேனல்கள் இதுவரையில் யோசிக்கவில்லை.. அன்றைய தினத்தில் அவதரிக்கப் போகும் அல்லது கட்டாயமாக வெளிக்கொணரப்பட இருக்கும் ஜூனியர் ஐஸ்வர்யாராய் அல்லது ஜூனியர் அபிஷேக்பச்சன் பற்றித்தான் அவர்களுக்குக் கவலை..!

தடுக்கி விழுந்த செய்தி வந்தாலே சுடு செய்தியாகப் போட்டு இந்தியாவையே பயமுறுத்தும் செய்தி ஸ்தாபனங்கள், இந்த நல்ல நாளை மட்டும் விட்டுவிடுவார்களா என்ன..? குண்டி கழுவ தண்ணீர் இல்லாமல் அலையும் இந்தியனை பற்றிக் கவலைப்படாத சமூகத்தில் இதுவெல்லாம் சகஜம்தானே..!

aishwarya-rai-pregnant.jpg

மும்பை செவன்ஹில்ஸ் மருத்துவமனையின் 5-வது மாடியில் நாளை நடக்கவிருக்கும் ஆபரேஷனுக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார் ஐஸ்வர்யாராய். பிரசவிக்கும் தருணத்திற்காக வட இந்திய அலைவரிசைகள் ஆவலுடன் காத்திருக்கின்றன.. இதைவிட ஒரு இந்தியனுக்கு முக்கியமாகத் தெரிவிக்கப்பட வேண்டிய செய்தி வேறு எதுவுமில்லை என்ற அவர்களது கூர்மையான அவதானிப்பை ஒப்புக்காக இந்திய ஊடக உலகம் கண்டித்துள்ளது.

BROADCAST EDITOR’S ASSOCIATION என்னும் தொலைக்காட்சி எடிட்டர்கள் அமைப்பு நாளைய தினம், அதாவது ஐஸ்வர்யாராய் பிரசவிக்கும் தினத்தன்று தொலைக்காட்சி அலைவரிசைகள் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது என்றெல்லாம் வழிகாட்டி முறைகளை வெளியிட்டிருப்பதுதான் ஊடக உலகத்தின் தற்போதைய கேவலமான நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.

1. ஐஸ்வர்யாராயின் பிரசவம் பற்றிய செய்தியை முன் கூட்டியே ஒரு செய்தியாக வெளியிடக் கூடாது..

2. குழந்தை பிறந்த செய்தியை சுடு செய்தியாகப் போடக் கூடாது.

3. குறுஞ் செய்தியாக எப்போதும் திரையில் இருப்பது போன்றும் செய்யக் கூடாது.

4. குழந்தை பிறந்த தேதி, நேரம் இவற்றை வைத்து ஜோதிடர்களை வைத்து கதை செய்யக் கூடாது..

5. மருத்துமனையின் முன்பாகவும், பச்சன்களின் வீட்டின் முன்பாகவும் நேரடி ஒளிப்பரப்பு செய்ய உதவும் ஓபி வேன்களை கொண்டு வந்து நிறுத்தக் கூடாது..

6. மருத்துவமனையில் இருந்து நேரடி ஒளிரப்பு செய்யக் கூடாது..

7. குழந்தையின் புகைப்படம் கிடைத்தால்கூட அவருடைய குடும்பத்தினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்வரையில் அதனை வெளியிடக் கூடாது..

- இப்படி சில விதிமுறைகளை தங்களது சங்கத்தில் இணைந்துள்ள அனைத்து ஊடகத் தரப்பினருக்கும் நேற்று அனுப்பி வைத்துள்ளனர்..!

இந்த அமைப்பின் துணைத் தலைவர் அர்னாப் கோஸ்வாமி.. "டைம்ஸ் நௌ" திருத்துனர் இவர் “இதுவொரு சாதாரண நிகழ்வுதான்.. நாட்டில் இதைவிட பெரிய விஷயமெல்லாம் இருக்கிறது..” என்று திருவாய் மலர்ந்துள்ளார். இதே "டைம்ஸ் நௌ" தான் சில நாட்களுக்கு முன்பாக ஐஸ்வர்யா ஷாருக்கான் கொடுத்த பார்ட்டியில் கலந்து கொள்ள வந்தபோது, தனது அலைவரிசையில் சுடு செய்தி போட்டு அசத்தியவர்..!

டெல்லிவாலா ஊடகங்கள் ஒவ்வொரு கட்சியிலும் ஒவ்வொரு ஆட்களைப் பிடித்து வைத்துக் கொண்டு தங்களை வளர்த்துக் கொண்டே வருகின்றன. சினிமாக்களிலும் ஆளுக்கொரு கான்களை தங்களது கைப்பிடிக்குள் வைத்திருக்கின்றன. இவர்களின் முக்கிய நோக்கம் வெட்டி வேலை பார்க்கும் இந்தியர்களின் கவனத்தை முழுமையாக தங்களது பக்கம் ஈர்ப்பதுதான்..!

இந்த லட்சணத்தில் இந்த பிரசவ செய்தியை யார் முதலில் சுடு செய்தியாக போடப் போவது என்றுதான் பலத்த போட்டியிருக்கும். யார் முதலில் சொன்னாலும், பச்சன்கள் இதனால் கோபித்துக் கொள்ளப் போவதில்லை..! அவர்களுக்கும் இந்த ஊடகங்கள் அவசியம் தேவை.. கொஞ்சம் வருத்தப்படுவதாக்க் காட்டிக் கொண்டாலும் ஐஸ்வர்யாவுக்கு, ஊடகங்கள் கண் பார்வையில் படவில்லையெனில் தூக்கம் வராது.

இருவருமே தங்களுக்குள் கொஞ்சம் சமரசம் செய்து கொண்டு ஒருவர் மீது ஒருவர் வருத்தப்படுவது போலவும் நடித்துக் காண்பிக்கிறார்கள். இந்த நடிப்பு எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கவும் நாளை நமக்கு ஒரு சந்தர்பம் கிடைத்திருக்கிறது..!

வேலை, வெட்டியில்லாத இந்தியர்களே.. பொறுமையாக இன்று நள்ளிரவு முதல் விழித்திருங்கள்.. அடுத்த 24 மணி நேரத்திற்குள் இந்தியாவின் தங்கமகளோ அல்லது தங்கமகனோ பிறந்துவிடுவார்கள். அதன் பின் உங்கள் நிலைமை எங்கயோ போய்விடும்..!

http://truetamilans.blogspot.com/2011/11/blog-post_10.html

அப்ப இந்தியா வல்லரசு ஆகிவிடுமோ??

ஒரு பெண் பிரசவம் செய்வதை நேரடியாக ஒளிபரப்பும் அளவுக்கு அந்த நாடு முன்னேறி இருக்கு தானே?

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இந்தியா வல்லரசு ஆகிவிடுமோ??

இந்தியா என்னும் தவளையை ஊழல் என்னும் மலைப்பாம்பு விழுங்குகின்றது இந்த நிலை தொடருமானால் இந்தியா ஒரு போதும் வல்லரசாகாது

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் மட்டும் அநாதைக் குழந்தைகள் பல ஆயிரம் நாள் தோறும் பிறக்கின்றன. பல ஆயிரம் குழந்தைகளை கருவிலேயே அழிக்கின்றனர். பல ஆயிரம் குழந்தைகள் ஒருவேளை உணவிற்கே வழி இன்றி நோய் கண்டு இறக்கின்றன. இப்படியான ஒரு நாடு... இந்தக் குழந்தை மீது மட்டும் பட்சாதாபம் காட்டுவது என்பது.. மனித இனம் சகிக்க முடியாத ஒன்றாகவே இருக்கும்..!

ஐஸ்வரியா ராய்... சாதாரண மனிதப் பெண். அவருக்கு அழகுராணிப் பட்டம் கொடுத்ததும் சக மனிதனே. இப்போ.. தலையில் தூக்கி வைச்சு ஆடுவதும் அவர்களே. இந்த குழந்தை விடயத்தில் ஐஸ்வரியா ராய் சாதாரண மனிதப் பெண்ணாகவே நடத்தப்பட வேண்டும். நடிகை.. முன்னாள் உலக அழகி என்பது அவர் தாயாக அமைந்த காரணிகள் அல்ல..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஐஸ் கருத்தரிப்பும் செயற்க்கை முறையில் & பிறப்பும் செயற்கை?

  • கருத்துக்கள உறவுகள்

11.11.11 அன்று குழந்தை பெற ஐஸ்வர்யா ராய் விரும்பினார்.

நேரம் கடந்து கொண்டிருக்கு.... இன்னும் வயித்துக்குத்து ஆரம்பிக்கவில்லையா....

  • கருத்துக்கள உறவுகள்

11.11.11 அன்று குழந்தை பெற ஐஸ்வர்யா ராய் விரும்பினார்.

நேரம் கடந்து கொண்டிருக்கு.... இன்னும் வயித்துக்குத்து ஆரம்பிக்கவில்லையா....

:lol: :lol: :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

11.11.11 அன்று குழந்தை பெற ஐஸ்வர்யா ராய் விரும்பினார்.

நேரம் கடந்து கொண்டிருக்கு.... இன்னும் வயித்துக்குத்து ஆரம்பிக்கவில்லையா....

:lol: :lol: :lol:

  • தொடங்கியவர்

11.11.11 அன்று குழந்தை பெற ஐஸ்வர்யா ராய் விரும்பினார்.

நேரம் கடந்து கொண்டிருக்கு.... இன்னும் வயித்துக்குத்து ஆரம்பிக்கவில்லையா....

இன்னும் 4 மணித்தியாலங்கள் இருக்கின்றது 11 / 11 விடை பெறுவதற்கு . ஆண்டவன் எழுத்தை யாராலும் மாற்ற முடியாது :unsure: :unsure: :rolleyes: :rolleyes: .

Edited by komagan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.