Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமரிக்கண்டம் …உண்மையா?…

Featured Replies

இக்காலக் கட்டத்தில் குமரிக் கண்டம் உண்மை என்று சொன்னாலும் அது வெறும் நம்பிக்கையே. குமரிக்கண்டம் இல்லை என்றால் அதுவும் நம்பிக்கையே.

ஏனெனில் குமரிக்கண்டம் என்ற ஒன்று இருந்ததா இல்லையா என்பதனைப் பற்றிய முழுவீச்சான ஆராய்ச்சிகள் தொடங்கப்படவே இல்லை. சிறிது தொடங்கப்பட்ட ஆராய்ச்சிகளும் பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளன.

இந்நிலையில் குமரிக்கண்டம் என்பது உண்மையா அல்லது வெறும் கற்பனையா என்ற விடயம் தெளிவாக இல்லாது இருக்கின்றது.

இப்பொழுது குமரிக்கண்டம் என்பது உண்மை என்று நம்புவோர்களின் கூற்றையும் குமரிக்கண்டம் பொய் என்று நம்புவோர்களின் கூற்றையும் காண்போம்.

குமரிக்கண்டம் உண்மை என்போர் அது உண்மை என்று அவர்கள் நம்புவதற்கு சில காரணிகளைக் கூறுகின்றனர்…

௧) ஆபிரிக்கா, மடகாசுக்கர் மற்றும் இந்திய ஆகிய நாடுகளில் காணப்படும் மரங்கள், விலங்குகள் மற்றும் தாவரங்கள் ஒன்றுப் போல் இருக்கும் விடயம்.

௨) ஆசுதிரேலிய பழங்குடி மக்கள் மற்றும் ஆபிரிக்க பழங்குடி மக்கள் பேசும் மொழி தமிழினை ஒத்து இருத்தல்.(இதனை நீங்கள் மாத்தளை சோமு எழுதிய ‘வியக்க வைக்கும் அறிவியல்’ என்னும் நூலில் இருந்தும் மா.சோ.விக்டர் எழுதிய மொழி ஆய்வு நூல்களில் இருந்தும் அறிந்துக் கொள்ளலாம்).

௩) சங்க இலக்கிய பாடல்களின் செய்திகள்.

௪) பழந்தமிழர்களின் பழக்க வழக்கங்கள். குறிப்பாக கடலோரத்தில் வாழும் மக்களின் பழக்கவழக்கங்கள்.

௫) தனுசுக்கோடி மற்றும் காவேரிப்பூம்பட்டினம் ஆகிய நகரங்கள் கடலில் மூழ்கிய வரலாறு.

௬) ஆடு மேய்ச்சான் பாறை என்று பெயர் கொண்ட பாறை கடற்கரையில் இருந்து ஆறு கிலோமீட்டர் தள்ளி கடலின் நடுவில் இருக்கும் செய்தி.

ஆனால் குமரிக்கண்டம் என்பது கற்பனையே என்றுக் கூறுவோர் கூறும் காரணங்கள்…

௧) இதை அறிவியல் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

௨) இக் கதைகள் சங்க இலக்கிய செய்திகளில் மட்டுமே இருப்பதினால் இவை வரலாறாக ஏற்றுக்கொள்ள பட மாட்டாது. இவை புராணங்களே.

இப்பொழுது நாம் சில விடயங்களை தெளிவு படுத்திக் கொள்ளலாம்…

அறிவியல் குமரிக்கண்டதினை மறுக்கவும் இல்லை ஆதரிக்கவும் இல்லை… ஏனெனில் அறிவியல் அங்கே இன்னும் சென்று ஆராய்ந்தே பார்க்க வில்லை. ஆராய்ந்து தெளிவு படுத்தாத விடயங்களை அறிவியல் என்று நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே அறிவியலின் உதவி தற்போது குமரிக்கண்டதினைப் பற்றிய விடயத்தில் நமக்கு கிட்டவில்லை.

எனவே இப்பொழுது நாம் மொழி ஆராய்ச்சியாளர்களின் கருத்துக்களை மற்றும் தமிழ் அறிஞர்களின் கூற்றுக்களையும் சற்றுப் பார்ப்போம்.

அவர்களின் கூற்றுப்படி,

மனிதன் தோன்றிய இடம் - குமரிக்கண்டம்.முதல் மனிதன் - தமிழன்.முதல் மொழி - தமிழ். குமரிக்கண்டதினில் தோன்றிய மனிதனே வடக்கே பயணித்து சென்று அங்கே சில நாகரீகங்களை நிறுவி பின் உலகம் முழுவதும் பரவுகின்றான். இதற்கு சான்றாக அவர்கள் பல விடயங்களை தருகின்றார்கள்.

உதாரணமாக “பாகிஸ்தானிலுள்ள கொற்கை (Gorkai. Gorkhai), வஞ்சி (Vanji), தொண்டி(Tondi), மத்ரை (Matrai), உறை (Urai), கூடல் கட் (Kudal Garh) மற்றும் கோளி (Koli); ஆப்கானிஸ்தானிலுள்ள கொற்கை (Korkay. Gorkay). பூம்பகார் (Pumbakar) ஆகிய ஊர்ப் பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தலைநகரங்கள் மற்றும் துறைமுக நகரங்களின் பெயர்களான கொற்கை. வஞ்சி. தொண்டி. மதுரை. உறையூர். கூடல். கோழி. பூம்புகார் ஆகியவற்றை நினைவுபடுத்துகின்றன.”

இந்த ஆராய்ச்சிகளைப் பற்றி மேலும் அறிந்துக் கொள்ள இந்த இணைப்பைப் பாருங்கள்.

இந்த விடயங்களில் இருந்து மனிதன் தெற்கில் இருந்து வடக்கே சென்றுள்ளான் என்று நாம் கருத முடிகின்றது.

“அப்படி எவ்வாறு கூறுகின்றீர்கள்… வடக்கில் இருந்தும் அவன் தெற்கே வந்து பெயரிட்டு இருக்கலாம் அல்லவா?” என்று கூறுகின்றீர்களா.

சரி தான். அதற்கும் வாய்ப்பு இருக்கத் தான் செய்கின்றது. அப்படி இருக்கும் பட்சத்தில் மொழியறிஞர்கள் ஏன் அப்பெயர்கள் தெற்கில் இருந்து வடக்கே சென்றன என்று கூறுகின்றனர் என்பதனை நாம் அறிந்துக் கொள்ள வேண்டி இருக்கின்றது.

அவர்களின் கூற்றுப்படி ஒரு மொழி அது தோன்றிய இடத்திலேயே தான் செம்மையாக இருக்கும். அந்த இடத்தினை விட்டு தொலைவுக் கூட கூட அந்த மொழி திரியும் வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது. இதன் அடிப்படையிலே, வடக்கே செல்ல செல்ல தமிழ் வேறு மொழிகளாக திரிந்து இருப்பதும், தெற்கே செல்ல செல்ல அது செழித்து இருப்பதும், தமிழ் தெற்கிலேயே தோன்றிய மொழி என்பதற்கு நல்ல சான்று என்று அவர்கள் கருதுகின்றனர்.

இரண்டாவது, ஒரு நாகரீத்தில் இருந்து மற்றொரு நாகரீகத்திற்கு பெயர்கள் கொண்டு

செல்லப் பட்டு இருக்கின்றன என்றால் முதலில் தோன்றிய நாகரீகம் காலத்தில் இரண்டாவது நாகரீகத்திற்கு முந்தியதாக இருந்திருக்க வேண்டும். எனவே வடக்கில் இருந்து இந்த பெயர்கள் தெற்கே வந்தன என்றால் வடக்கில் உள்ள நாகரீகம் காலத்தில் தெற்கு நாகரீகங்களுக்கு முன்னோடியாக இருந்திருக்க வேண்டும்.

இப்போதைய அறிவியல் ஆராய்ச்சிகள் உலக நாகரீகங்கள் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னால் சிந்து சமவெளியிலோ, சுமேரியாவிலேயோ அல்லது மேசபோடமியாவிலேயோ தோன்றி இருக்க வேண்டும் என்று கூறுகின்றன. அதற்கு முன்னர் நாகரீகங்கள் இருந்தனவா?… அதற்கு முன்னர் மக்கள் எவ்வாறு இருந்தனர் என்று அந்த ஆராய்ச்சிகள் இன்னும் முழுவீச்சில் ஆராயத் தொடங்கவில்லை. இந்நிலையில் தான் நாம் ஒரு ஆங்கிலேய ஆய்வாளரைப் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டி இருக்கின்றது. அவர் பெயர் கிரகாம் கான்காக் (Graham Hancock). உலகமே சுமேரியாவையும் மேசொபோடமியாவையும் சிந்து சமவெளியையும் ஆராய்ந்துக் கொண்டு இருந்த வேளையில் இவர் இந்தியாவில் தெற்கினை நோக்கி தன் ஆராய்ச்சியினை தொடங்குகின்றார்.

அவரின் ஆராய்ச்சி பிரம்மிப்பூட்டும் பல தகவல்களை வெளி இடுகின்றது. உதாரணமாக சிந்து சமவெளிக்கும் 3000 ஆண்டுகள் பழமையான நாகரீகம் ஒன்று குசராத் மாநிலத்தில் கடலோரத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டு உள்ளது. அந்த நாகரீகதினைத் தொடர்ந்து அவர் மீண்டும் தெற்கே நோக்கி நகர்கின்றார்.

அங்கே குசராத் நாகரீகத்தினை விட 3000 ஆண்டுகள் பழமையான ஒரு மாபெரும் நாகரீகத்தினை அவர் கண்டுப்பிடிக்கின்றார்…. தமிழகத்தினில்!!! அந்த இடம் பூம்புகார் எனப்படும் காவேரிப்பூம்பட்டினம். அவரின் கூற்றுப் படி இந்த நாகரீகம் சுமார் 11000 ஆண்டுகள் பழமையானது என்றும் அந்த நாகரீகம் கடற் கோள்களால் அழிந்தது என்றும் (400 அடி உயர் அலைகளால் என்றும் குறிப்பிடுகின்றார்) கூறுகின்றார். மேலும் அந்த இடங்களை நன்றாக ஆராய்ந்தோம் என்றால் பல உண்மைகள் வெளி வரும் என்றும் ‘அந்த இடத்தினை ஏன் ஆராயாது இது வரை விட்டு வைத்து இருக்கின்றார்கள் என்பது தமக்கு வியப்பளிப்பதாகவும்’ அவர் கூறுகின்றார். இவருடைய இந்தக் கருத்தினை இங்கிலாந்தில் உள்ள துர்கம் பல்கலைக்கழகமும் (Durham university) ஏற்று உள்ளது.

ஆனால் அந்த ஆராய்ச்சிகளை இந்திய அரசு மேற்கொண்டு மேற்கொள்ள எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. மேலும் பூம்புகார் பற்றிய இந்தத் தகவல்கள் மக்களுக்கு முறைப்படி அறிவிக்கப்படவும் இல்லை.

கான்காக்கின் ஆராய்ச்சியினைப் பற்றி அறிய இந்த இணைப்பை பார்க்கவும்…

இவ்வாராய்ச்சிகள் மொழியறிஞர்கள் சொல்லும் கூற்றினை, அதாவது நாகரீகம் தெற்கில் தோன்றி பின்னர் வடக்கே நோக்கி சென்று இருக்கின்றது என்பதனை மெய்ப்பிப்பது போல் இருக்கின்றன. தொடர்ந்து இந்த இடங்களில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் பட்டால் உண்மைகள் வெளிப்படும். ஆனால் இந்திய அரசாங்கம் இந்த ஆராய்ச்சிகளை தானும் மேற்கொள்ளாது மற்றவர்கள் மேற்கொண்டாலும்

அதற்கு தடங்களை ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றது.

தமிழர்கள் பூம்புகார் பற்றிக் கூறும் செய்திகள் உண்மையென்று சில ஆராய்ச்சிகள் கூறும் பொழுது குமரிக்கண்டதினைப் பற்றி மட்டும் அவர்கள் பொய் சொல்லி இருப்பார்களா? ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுமா?உண்மை வெளிப்படுமா?

http://vazhipokkanpayanangal.blogspot.com/2011/11/11.html

"முந்நீர் விழவின் நெடியோன்

நன்னீர்ப் பஃறுளி "

என்றும் (புறம்.9)

"பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்

குமரிக் கோடும் "

என்று இளங்கோவடிகளும் பாடியிருப்பதால், குமரிக்கண்டமும் அதன் தென்கோடியின் மேலைப்பகுதியிலிருந்த குமரிமலைத்தொடரும் அதனின்று பாய்தோடிய பஃறுளியாறும் கட்டுசச் செய்திகளல்ல…. - மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர்-

நல்லதொரு பதிவு கோ! மனமார்ந்த நன்றிகள்!

இப்படியான பதிவுகள் அவசியமானவை!

ஆனாலும், இப்பதிவில்.... "குமரிக்கண்டம்" பற்றிய அறிமுகத்தினை மேலதிகமாகக் கொடுக்க தவறி இருப்பதாகப் படுகின்றது. அதையும் இணைத்திருந்தால் பூரணப்படுத்தப்பட்டிருக்கும்!

நன்றி :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பதிவிற்கு நன்றி கோமகன் :)

  • தொடங்கியவர்

மிக்க நன்றிகள் . செம்பகன் , கவிதை , குசா , உங்கள் கருத்துப்பகிர்வுகளுக்கு . நான் இந்தப் பதிவை இணைத்ததிற்கு முக்கிய காரணம் , நாம் எம்மைப் பற்றித் தேடவேண்டும் என்பதற்காகவே . நாம் யார் ? எமது வரலாறு என்ன ? எமது கடல் ஆதிக்கங்களின் பங்கு எத்தகையது ? போன்ற பின்னணிகள் எமக்குத் தெரியாது இருப்பது எனக்கு வேதனையாக இருந்தது . பொதுவாகப் பொங்குதமிழ் பகுதியில் வருகின்ற பதிவுகள் , பெரும்பாலும் வாசகர்கள் வரவேற்பைப் பெறுவதில்லை . இது எனக்குப் பெரிய குறையாகவே படுகின்றது . எது எப்படியாகிலும் இந்தப் பகுதியை அங்கீகரித்த மோகனுக்கு நான் என்றுமே கடமைப்பட்டவன் :) :) :) .

  • தொடங்கியவர்

குமரிக்கண்டம் எனும் கண்டம் போன்ற பெரும் நிலப்பகுதியானது இன்றுள்ள இந்தியாவின் எல்லையான குமரி முனைக்குத் தெற்கே முற்காலத்தில் அமைந்திருந்தது எனக் கருதுவதற்கு இடம் தரும் வகையில் பண்டைத் தமிழ் இலக்கிய நூற்களில் சில தகவல்கள் உண்டு. தேவநேயப் பாவாணர் முதலானோர் இந்த குமரிக்கண்டத்தில்தான் தமிழர்கள் முதன்முதல் தோன்றினர் என எழுதியுள்ளனர்ஆதி மனிதன் தோன்றியிருக்கக் கூடிய தென் குமரிக்கண்டம் கடல்கோளால் (சுனாமி போன்ற ஆழிப்பேரலைகளால்) அழிவிற்குட்பட்டது என்பது சில தமிழறிஞர்களின், அறிவியல் முறைப்படி நிறுவப்படாத, கருத்து. பண்டைத்தமிழ் இலக்கிய நூல்களில் கிடைக்கப்பெறும் தகவல்களில் சிலவற்றைக் கீழே காணலாம்:

  • சிலப்பதிகாரத்தில் "பஃறுளியாறும்", "பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும்" "கொடுங்கடல் கொண்டது" பற்றிக் கூறுகின்றது.
  • அடியில் தன்னள வரசர்க் குணர்த்தி
    வடிவே லெறிந்த வான்பகை பொறாது
    பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
    குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
    வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
    தென்றிசை யாண்ட தென்னவன் வாழி (சிலப். 11:17-22)

  • பாண்டியனை வாழ்த்தும் பொழுது

"செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த

முந்நீர் விழவின் நெடியோன்

நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே" (புறம் 9)

  • "தொடியோள் பௌவம்" என்னும் சிலப்பதிகாரத் தொடர்க்கு அடியார்க்கு நல்லார் என்னும் உரையாசிரியர் கொடுக்கும் விரிவான விளக்கத்தில் "தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி என்னும் ஆற்றிற்கும் குமரியென்னும் ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவத வாறும், இவற்றின் நீர்மலிவானென மலிந்த ஏழ்தெங்க நாடும், ஏழ்மதுரை நாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்பின்பாலை நாடும், ஏழ்குன்றநாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும் குமரி கொல்லம் முதலிய பன்மலைநாடும், காடும் நதியும் பதியும் தடநீர்க்குமரி வடபெருங்கோட்டின் காறும் கடல் கொண்டொழிதலாற் குமரியாகிய பௌவ மென்றா ரென்றுணர்க."

  • இரண்டாம் சங்கம் இருந்த காலத்தில் கபாடபுரம் என்ற தலைநகரம் முழுகிய பின்னரும் குமரி ஆறு இருந்ததென்பதை தொல்காப்பிய சிறப்புப் பாயிர வரி, "வட வேங்கடந் தென்குமரி" குறிப்பதாகக் கருதுகின்றனர்.

  • தெனாஅ துருகெழு குமரியின் தெற்கும்"
    "குமரியம் பெருங்துறை யயிரை மாந்தி" (புறம் 6:67)

  • "மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்
    மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)
    என்னும் குறிப்பு, பழம் பாண்டிய நாட்டை கடல்கொண்டதை குறிக்கின்றது என்பர்.

  • இறையனார் அகப்பொருள் உரையில் விரிவாக ஆண்ட அரசர்களின் வரிசை, தமிழ் அவையில் இருந்த புலவர்களின் வரிசை முதலியன குறிக்கப்பெற்றுள்ளன. இது போல செய்திகள் தமிழ் இலக்கியத்தில் வேறு எங்கும் இல்லை.

இத்தென்குமரிக்கண்டத்தின் தலைநகராக தென்மதுரை விளங்கியதாகவும் மேலும் தென்மதுரையில் தலைச்சங்கம் இருந்ததென்பதும், அதனை அடுத்து மேலும் இரண்டு சங்கங்கள் இருந்தனவென்பதும் நூற்களின் தகவல்களாகும். மேலும் முதற் கடற்கோளால் குமரிக்கண்டம் என்று கூறப்படும் நிலப்பகுதி அழிவுற்றது என நூற்தகவல்கள் குறிக்கின்றன. இவ்வாறு மொத்தம் நான்கு கடல்கோள்கள் நிகழ்ந்ததாகக் கருதுகின்றனர். கிடைக்கப்பெற்ற நூற்தகவல்களின் மூலம் உறுதியாகக் கூறமுடியாத அளவிற்குக் குமரிக்கண்டம் வெறும் கற்பனைக் கண்டமென்பது பலருடைய கருத்து. இக்குறிப்புகளில் உள்ள உண்மை இன்னும் அறிவியல் முறைப்படி நிறுவப்படவோ, மறுக்கப்படவோ இல்லை. இறையனார் அகப்பொருள் உரையில் கூறியுள்ளது உண்மையாக இருப்பின் தமிழர்களின் இலக்கிய காலம் சுமார் கி.மு 10,500 ஆண்டுகள் வரை செல்லும். இதற்கு வலுவான பிற உறுதிகோள்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

கடலியல் ஆதாரம்:

1960 ஆம் ஆண்டு இந்து மாக்கடலில் கடற்தள ஆராய்ச்சியாளர் செய்த ஆராய்ச்சியில் தமிழகத்தின் கன்னியாகுமரிக்குத் தெற்கே இரண்டு கண்டங்கள் இருந்திருப்பதைக் கண்டுபிடித்துள்ளதாகச் சொல்கிறார்கள். முதலாக கப்பலில் சென்று ஒலிச்சமிக்ஜை அனுப்பி உளவு செய்ததில் [ultra-Sonic Probing] தென்பகுதிக் கடலடியில் நீண்ட மலைத்தொடர் ஒன்று இருப்பதைக் கண்டார்கள். 1960-1970 ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட இந்து மாக்கடல் கடற்தள வரைபடங்களில், குமரிக் கண்டத்தின் பூர்வீக அமைப்பு நிலை காணப்படுகிறது. அரபிக் கடலுக்குத் தெற்கில், லட்சத் தீவுகள் நீட்சியில் மால்டிவ் தீவின் வடக்குப் பகுதியுடன் பிணைந்து, தெற்கில் சாகோஸ் ஆர்கிபிலாகோ [Chagos, Archipelago] வரை சுமார் 2000 மைல் தூரம் வரைக் குமரிக் கண்டம் இருந்திருப்பதாகத் தெரிகிறது. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த [கி.மு.8000] பனி யுகத்தின் போது [During the Ice Age] இந்து மாக்கடலில் கடல்நீர் மட்டம் குன்றிக் குமரிக் கண்டம் முழுவதும் புறத்தே தெரியும்படி மேலாக உயர்ந்திருந்தது.

குருதி ஆதாரம்:

அமேரிக்காவை வரலாற்றுக் காலத்திற்கு முன்னே தென்னிந்தியர் கண்டுபிடித்து விட்டனர் என்பது அண்மைக் காலத்திய ஆராய்ச்சியாளர் கொள்கை. இதை நிரூபிக்க சோவியத் அறிவியல் ஆய்வாளர் யூரி இரெசெதோவ் தான் பல்வேறு மானிட இனத்தவரிடையே குருதிச்சோதனையில் இறங்கியதாக குறிப்பிடுகிறார். அதன்படி செவ்விந்தியரும் தென்னிந்தியரும் 20,000 ஆண்டுகளுக்கு முன் ஒன்றாக வசித்ததாக குறிப்பிடுகிறார்.அதனால் இரண்டுக்கும் நடுவில் ஒரு கண்டம் இருக்க வேண்டும்.

அகிலத்திரட்டு அம்மானை

அகிலத்திரட்டு அம்மானை என்னும் அய்யாவழி மதத்தினரின் புத்தகத்தில் குமரி 152 மைல்கள் தெற்காக விரிந்திருந்தது என்றும் அதில் 16008 வீதிகள் இருந்ததென்றும் கூறப்பட்டிருக்கிறது.

இராமாயணத்தில் இடைச்சங்கம்:

  1. இடைச்சங்கத்தின் தலைநகரம் கபாடபுரமிருந்ததற்கான ஆதாரங்கள் ராமாயணத்தில் தென்படுகின்றன வால்மீகி தமிழ் சங்கத்தில் உறுப்பினராயிருந்தாரெனவும், ராமாயணத்தில் சங்கத்தலைநகரம் கபாடபுரமெனவும் இருக்கிறது.
  2. கால ஒற்றுமை - ராமாயணத்தின் காலம் கி.மு.4500-4000 என தெரிகிறது. இடைச்சங்கத்தின் காலம் கி.மு.5300-1600 என தெரிகிறது.

நிலவியல்:

தற்போதுள்ள இயற்பியல் பூகோள வரைபடங்களில் கி.மு.30000 குமரிக்கண்டமிருந்த இடத்தில் பெருமளவு கடலினாழம் 200அடி வரை இருக்கிறது. சில இடங்களில் 2000அடி வரை இருக்கிறது . இப்பகுதிகள் தற்போது குறைவான ஆழம் கொண்டுள்ளதால் இங்கு குமரிக்கண்டம் இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.

பெயரியல் மற்றும் மொழியியல் சான்றுகள்:

  1. சுமேரிய மொழியில் 5000 ஆண்டுகளுக்கு முன்பு உபயோகப்படுத்தப்பட்ட வாக்கியமான கி ரி அ கி பட் டு ரி யா என்ற வாக்கியமே குமரிக்கண்டம் ஆகும். இதன் அக்கால தமிழ் உச்சரிப்பு க ரி ய ர வ ன ட ஆகும். இதன்படி சுமேரிய நாகரிகத்தில் 5000 ஆண்டுகளுக்கு முன்பே குமரிக்கண்டம் என்ற வார்த்தை இருந்ததை அறியலாம்.

  1. முருகனின் இலக்கியப்பெயர் குமரவேல் பாண்டியன் ஆகும். குமரனின் மனைவி குமரியாதலால் இஃது குமரிக்கண்டமென பெயர் பெற்றிருக்கலாம்.

  1. இலெமூரியா = இலை (வம்சம்) + முரி (முரிந்த,அழிந்த)

அஃதாவது முரிந்த வம்சம் வாழ்ந்த இடம். உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் கூரிய லெமூரியா (20 மில்லியன் வருடங்களுக்கு முன் மூழ்கிய கண்டம்) என்பது வேறு. இலக்கிய இலெமூரியா என்பது வேறு. அல்லது 20 மில்லியன் வருடங்கள் முன்பிருந்து கி.மு.30000 வரை தோன்றிய கடல்கோல்களால் உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் கூரிய லெமூரியா இலக்கிய இலெமூரியாவாக (குமரிக்கண்டம்) மாறியிருக்கலாம். எப்படி என்றாலும் இலெமூரியா என்பதின் பெயர் மூலம் தமிழென்பதற்கு மேலுள்ள பெயர்த்திரிபே சான்று.

மயன் பற்றிய குறிப்புகள்:

குமரிக்கண்டத்தில் வசித்ததாக கருதப்படும் மயன் பற்றியும் வைசம்பாயனம் மற்றும் ஐந்திறம் போன்ற நூல்களிலும் காணப்படுகின்றன. அதனால் குமரிநாடும் அதன் எல்லைகளும் சங்கம்-முச்சங்கம் பற்றிய செய்திகளும் உறுதிப் படுத்தப்படுகின்றன. ஐந்திறம் கூறும் குமரிக்கண்டம்

மயன் எழுதியதாக கருதப்படும் ஐந்திறம் என்னும் நூலில் குமரி மாபெரும் நிலமாக இருந்ததென்றும், பெருமலையிலிருந்து பல்துளி ஆறு வருகிறதென்றும் (மேருமலையிலிருந்து பஃறுளி ஆறு), ஏழேழ் நிலமும் ஏழேழ் நாடென அழைக்கப்பட்டதென குறிக்கப்பட்டுளது. வைசம்பாயனம் கூறும் குமரிக்கண்டம்

வைசம்பாயணப் பாடல் ஒன்று குமரிநாட்டைப் பற்றியும், அதன் எல்லைகளையும், அந்த நாட்டில் மேருமலை(பெருமலை) இருந்ததையும் குறிக்கிறது.

கடல் கொண்ட தென்னாடு:

கா. அப்பாத்துரையின் வாதங்கள்

1. மெகஸ்தெனஸ் என்ற கிரேக்க அறிஞர் இலங்கையை தாப்பிரபனே என்பதுடன் அஃது இந்தியாவிலிருந்தொர் ஆற்றினால் பிரிக்கப்பட்டுள்ளதென்கிறார். இதிலிருந்து தாமிரபரணி என்ற பொருநை கடலுள் மூழ்கிய நிலத்தின் வழியாக இலங்கையூடு சென்றிருக்கும் என்றேபடும்.

2. மொழி அடர்த்தி

தமிழகத்தில் தமிழ் மொழியின் தாக்கம் அதிகமாகவும், வட்க்கே செல்ல செல்ல தமிழ் மொழியின் தாக்கம் அப்பகுதி மொழிகளில் குறைந்திருப்பதை கொண்டும் தமிழ் மக்கள் குமரிக்கண்டத்திலிருந்து வடக்கு நோக்கி குடிபெயர்ந்ததை அறியலாம்.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு பதிவு இது. அழிக்கப் பட்ட, அழிக்கப் படும், எமது வரலாறு சம்பந்தமான ஆய்வு என்பதால், பின்வரும் இணைப்பை இணைக்கிறேன், கோமகன்!

imagel10.jpg

கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கவும்!

http://www.santhan.c...&id=9&Itemid=11

Edited by புங்கையூரன்

  • தொடங்கியவர்

நல்ல ஒரு பதிவு இது. அழிக்கப் பட்ட, அழிக்கப் படும், எமது வரலாறு சம்பந்தமான ஆய்வு என்பதால், பின்வரும் இணைப்பை இணைக்கிறேன், கோமகன்!

imagel10.jpg

கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கவும்!

http://www.santhan.c...&id=9&Itemid=11

மிக்க நன்றிகள் புங்கையூரான் உங்கள் இணைப்புக்கு :) :) :) .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.