Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் தீர்வு விடயத்தில் அரசாங்கத்தை வலியுறுத்துவதாக கூட்டமைப்பிடம் அக்காஷி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

japan.jpg

உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அக்காஷிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 7 பேர் அடங்கிய குழுவிற்கும் இடையில் இன்று (29) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இன்று முற்பகல் 11.30 தொடக்கம் 12.30 மணிவரை மதியபோசனத்துடன் கூடிய சந்திப்பாக இது அமைந்ததென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில், ´இன்றைய அரசியல் சூழ்நிலை, யுத்தம் முடிந்தும் இதுவரை தீர்வு முன்வைக்கப்படாமை, தமிழ் மக்களுக்கு தீர்வை முன்வைப்பதில் அரசாங்கம் அக்கரையின்றி செயற்படுகிறன்றமை, வடக்கு, கிழக்கு சிங்களமயமாக்கப்படுதல், இராணுவமயமாக்கப்படுதல், அரசின் செயற்பாடுகள் அனைத்தும் புரிந்துணர்வுக்கு எதிராகக் காணப்படுகின்றமை´ உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து முறையிடப்பட்டதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்துக்களை செவிமெடுத்த யசூசி அக்காஷி, யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் தீர்வு ஒன்றை முன்வைப்பதற்கு அரசாங்கத்திற்கு சரியான சந்தர்ப்பம் வந்துள்ளதெனத் தெரிவித்ததாகவும் அதனை அரசாங்கம் கைவிடக் கூடாது என்ற நிலைப்பாட்டில் தாம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அரசியல் தீர்வு விடயத்தில் விரைந்து செயற்பட வேண்டியமை குறித்து தான் சந்திக்கவுள்ள அரச அமைச்சர்கள் உள்ளிட்ட உயர்மட்டப் பிரதிநிதிகளுக்கு வலியுறுத்தவுள்ளதாகவும் யசூசி அக்காஷி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் உறுதியளித்துள்ளார்.

மேலும் சுமுகமான அரசியல் தீர்வு ஒன்று முன்வைக்கப்பட வேண்டும் என்ற விடயத்தில் தாம் தெளிவாக இருப்பதாகவும் அக்காஷி கூறியுள்ளார். இந்த சந்திப்பு மிகவும் திருப்திகரமானதாக அமைந்ததென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இன்றை சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில், பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா, ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சுமந்திரன், பொன்.செல்வராசா, அப்பாத்துரை விநாயகமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

http://www.saritham.com/?p=42350

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீன ஆதிக்கம் யப்பானை உறுத்தும் என்று நினைத்தால்.... அவர்களும் ஈரானிய கொங்கிரஸ் ஈனா வாய்கள் போல் நடந்துகொள்கிறார்கள்.

தமிழ் ஈழ அப்பத்தில் எனக்கும் ஒரு பீஸ் கிடைத்தால் போதும் என்று நினைக்கிறாரோ?

japan.jpg

உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அக்காஷிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 7 பேர் அடங்கிய குழுவிற்கும் இடையில் இன்று (29) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இன்று முற்பகல் 11.30 தொடக்கம் 12.30 மணிவரை மதியபோசனத்துடன் கூடிய சந்திப்பாக இது அமைந்ததென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில், ´இன்றைய அரசியல் சூழ்நிலை, யுத்தம் முடிந்தும் இதுவரை தீர்வு முன்வைக்கப்படாமை, தமிழ் மக்களுக்கு தீர்வை முன்வைப்பதில் அரசாங்கம் அக்கரையின்றி செயற்படுகிறன்றமை, வடக்கு, கிழக்கு சிங்களமயமாக்கப்படுதல், இராணுவமயமாக்கப்படுதல், அரசின் செயற்பாடுகள் அனைத்தும் புரிந்துணர்வுக்கு எதிராகக் காணப்படுகின்றமை´ உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து முறையிடப்பட்டதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

மேலும் அரசியல் தீர்வு விடயத்தில் விரைந்து செயற்பட வேண்டியமை குறித்து தான் சந்திக்கவுள்ள அரச அமைச்சர்கள் உள்ளிட்ட உயர்மட்டப் பிரதிநிதிகளுக்கு வலியுறுத்தவுள்ளதாகவும் யசூசி அக்காஷி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் உறுதியளித்துள்ளார்.

மேலும் சுமுகமான அரசியல் தீர்வு ஒன்று முன்வைக்கப்பட வேண்டும் என்ற விடயத்தில் தாம் தெளிவாக இருப்பதாகவும் அக்காஷி கூறியுள்ளார். இந்த சந்திப்பு மிகவும் திருப்திகரமானதாக அமைந்ததென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இன்றை சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில், பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா, ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சுமந்திரன், பொன்.செல்வராசா, அப்பாத்துரை விநாயகமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

http://www.saritham.com/?p=42350

உங்களின் வாக்குறுதியை கேட்டு கேட்டு நொந்து போனம் போதும் விட்டு விடுங்கள்

கில்டன் கொட்டேல் மதியபோசன மெனு என்ன என்று சொன்னால் நல்லாயிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

வேறென்ன சூசி தான்

சிறிலங்காவின் அமைதி முயற்சிகள் தொடர்பாக நோர்வே வெளியிட்ட மீளாய்வு அறிக்கையை முற்றிலுமாக வாசிக்கவில்லை.

இணைத்தலைமை நாடுகளில் ஒன்றாக செயற்பட்ட ஜப்பான், அமைதி முயற்சிகளின் வகித்த பங்கு தொடர்பாக இந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள விமர்சனத்தை ஏற்க முடியாது.“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

எல்லோரையும் நம்பவைத்து ஏமாற்றிவிடும் சொலெயெயையும்-நோர்வேயையுமே நம்பவைத்து ஏமாற்றியவர் அக்காசி. நம்பி போய் சிங்களவனிடம் ஒப்பந்தம் செய்யும் தமிழர் அக்காசியின் யூடோ வெட்டுகளுக்கு எம்மாத்திரம்? அக்காசியை எப்படியோ நம்பித்தான் தீருவார்கள்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைக்காக ஜப்பான் காத்திருக்கிறது.

அறிக்கை அரசாங்கத்தை மட்டும் தான் காப்பாற்றுமா அல்லது தன்னையும் காப்பாற்றுமா என்று எண்ணி காத்துகொண்டிருக்கிறார்.

அக்காசி ஐயா! சுனாமி கனதூரம் போகவில்லை. தேவைபட்டால் திரும்பி வரும். கவனம்!

Edited by மல்லையூரான்

இன்று நடப்பதை அன்றே சொன்ன யோகி

இணைத்தலைமையின் நகர்வை புரிந்துகொண்டிருந்த புலிகள்!

http://www.youtube.com/watch?v=uxYuDRLpOhE

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி அகூதா.

Testimony of Elaine Pearson before the House of Commons of Canada regarding Human Rights in Sri Lanka

November 01, பாராளுமன்றத்தில், ஒரு குழுவின் முன்னால், அவர்கள் அழைப்பின் பேரில்,மனித உரிமைகள் காப்பகத்தின் எலாயின் பியர்சன். 'இலங்கையில் இன்றைய மனித உரிமைகள் நிலைமை' என்ற பெயரில் தனது கருத்துக்களை முன்வைத்தார்.

Recommendations

Canada’s Prime Minister recently in Perth has said he intends to boycott the 2013 Commonwealth Heads of Government Meeting held in Colombo, Sri Lanka unless Sri Lanka’s government shows progress on human rights and accountability issues. Human Rights Watch supports this move, and together with other groups, has suggested various benchmarks to be met before Sri Lanka can host the CHOGM.

It has long been evident that justice and accountability in Sri Lanka cannot rely on the government, but depends on strong and concerted action by the international community. What’s needed is an international accountability mechanism as recommended by the secretary-general’s panel of experts to investigate alleged war crimes during the last months of the war. The Canadian government has supported this recommendation. Canada should show leadership on this issue by mobilizing other countries to make this a reality ahead of the next Human Rights Council session. We would welcome Canada’s leadership in establishing an international accountability mechanism. Given Sri Lanka’s dismissive approach, there needs to be international oversight of any domestic accountability efforts. The victims of Sri Lanka’s war crimes have waited long enough, and deserve nothing less.

http://www.hrw.org/n...ights-sri-lanka

மனித உரிமை விடயங்களில் இலங்கை முன்னேற்றம் காண வேண்டும்: அகாசி

இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் விடயத்தில் அதிக முக்கியத்துவம் காட்ட வேண்டிய உள்ளது. அத்துடன் இலங்கையில் மனித உரிமை விடயங்களில் இலங்கையில் முன்னேற்றமும் ஏற்பட வேண்டும் என இலங்கை வந்துள்ள ஐப்பானிய முன்னாள் சமாதான தூதுவர் யசூசி அகாஷி தெரிவித்தார்.

அத்துடன், பொறுப்பு கூறல் தொடர்பில் உள்நாட்டு செயன்முறை தேவை. எனினும் அது சர்வதேச நியமங்களுக்கு ஏற்றதாக இருத்தல் வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இலங்கைக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பவுள்ள நிலையில் யசூசி அகாஷி, இன்று புதன்கிழமை கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தளத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றி அவர்,

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையானது தேவை கருதி மக்கள் மத்தியில் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என ஜப்பானிய அரசு எதிர்பார்க்கின்றது. அத்துடன் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முன்மொழிவுகளை இலங்கை அரசு அமுல்படுத்தும் எனவும் ஜப்பான் அரசு நம்புகின்றது.

அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் ஓர் முடிவு ஏற்படும் என ஜப்பான் நம்புகின்றது. இதன் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பதற்காக நியமிக்கப்படவுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்துகொள்ளும் என எதிர்பார்க்கின்றோம்.

வடக்கில் மேற்கொள்ளப்படும் இராணுவ மயமாக்கம், இதனால் மேற்கொள்ளப்படும் காணி அபகரிப்பு தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை தன்னை சந்தித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் அகாஷி குறிப்பிடும் போது, வாய்ப்பாடு ரீதியான தீர்வுகள் ஏற்புடையனவல்ல. வேற்று நாடுகளிலிருந்து இரவலாக பெறப்பட்ட மாதிரிகளை திணிக்களலாகாது என்றார்.

அவசர கால சட்டமூலம் நீக்கப்பட்டமை மற்றும் மனித உரிமைகளை பாதுகாப்பாற்கும் மேம்படுத்துவதற்குமான தேசிய செயத்திட்டத்தையும் அகாசி பாராட்டினார்.

ஜப்பான் அரசு மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட தெற்கு அதிவேக நெடுஞ்சாலை திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக இலங்கை வந்த யசூசி அகாஷி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்களான ஜீ.எல்.பீரிஸ், பசில் ராஜபக்ஷ, ரவூப் ஹக்கீம், பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்கஷ ஆகியோருடன் பேச்சு நடத்தினார்.

இதற்கு மேலதிகமாக ஐக்கிய தேசிய கட்சி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் சிவில் சமூகம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் இவர் பேச்சு நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

http://tamilmirror.lk/2010-07-14-09-13-23/31773-2011-11-30-14-15-54.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.