Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகச் சந்தியில்…

Featured Replies

உலகச் சந்தியில்…

விமானம் யேர்மனியை நோக்கிப் பறந்து கொண்டிருந்தது. எனது மனைவி தலையை என்மேல் சாய்த்தபடி நித்திரையாகி இருந்தாள். எனக்குமட்டும் நித்திரை வரவில்லை. விமானம் எமது நாட்டை விட்டு வெகுதூரம் விலகி, வேகமாக வரவர, என் நினைவு மட்டும், எதிர் திசையில் அதைவிட வேகமாகத் தாயகத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

நான் நித்திரைப் பாயில் எதை எதையோ யோசித்தபடியே கிடப்பன். "அம்மா, வெய்யில் குண்டியில படும்வரைக்கும் படுத்துக்கிட, என்ன பொறுப்பிருக்கு… பகல் பகலா ஊர் சுற்றுறது… இரவிரவாக காவாலியள் கடப்புளியள் மாதிரி சந்தியில நிண்டு வம்பளக்கிறது,,," என்று பேசியபடி என்னைக் கடந்து சென்றுவிடுவார்.

சிறிது நேரம் செல்ல… "டே... தேத்தண்ணி வைக்கவா…."

"ஓமணையம்மா வை…" என்றபடி எழும்பி அரைகுறையாகப் பல்லுத் தேய்து, முகம்கழுவி, மிச்சத் தண்ணியைத் தலையில் பூசி, தலை சீவி, தலையில முன்னுக்கொரு கொம்பு வச்சுக்கொண்டு, தேத்தண்ணியைக் குடிச்சுட்டு, சேட்டுக்கொலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு என்ரை தொழிலுக்குச் சென்றுவிடுவேன்.

"போகுது சந்திக்கு செம்மலி…." அம்மாவின் அர்ச்சனை அப்போதும் தொடரும். அது என் காதில் விழுந்த மாதிரி இல்லை. ஆனால் மூளையில் எங்கோ பதியப்பட்டிருந்தது, அவை இப்போது தெளிவாகக் கேட்கின்றன.

ஒருநாள், "இது வேலை வெட்டிக்கும் போறதுமில்லை… நாலு காசு தேடுவம் எண்டுமில்லை… எப்ப திருந்தப்போகுதோ கடவுளே…" என்ற என் தாயார், "அன்னப்பிள்ளை மச்சாள் சொன்னமாதிரிக் கால்கட்டுப் போட்டால்தான் சரி…" என்று கூறியபடி சென்றவர், எனக்குத் திருமணம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்.

வேலை வெட்டியில்லாமல் கட்டாக்காலி மாடுமாதிரித் திரிகிற எனக்குத் திருமணமா! யாரு பெண் குடுக்கப்போறாங்க என்ற எண்ணத்தில் நானும் திருமணத்துக்கு சரி சொல்லிவிட்டேன்.

திடீரெனத் திருமணம்பேசி, முற்றாக்கி, திருமணத் தேதியும் குறிச்சாச்சு… நான் ஊமையாகிவிட்டேன். அம்மாவின் மிரட்டலுக்குப் பயந்து, அவர் பின்னால் சென்று கொண்டிருந்தேன். ஆட்டைக் கட்டிக் கொறகொற எண்டு இழுத்துக்கொண்டு போறமாதிரி ஒரு பிரமை. பெண்வீட்டுக்குப் போனபோது, அங்கே ஒரே தடபுடல்…

திருமணம் முடிஞ்சுது. குட்டிபோட்ட பூனைமாதிரி நான். குட்டிபோட்ட பூனைக்கு யார் என்ன சாப்பாடு போட்டார்களோ தெரியாது. எனக்கு, நல்லெண்ணை விட்டு முட்டைப் பொரியல், வெங்காயப் பொரியல், முட்டைக்கோப்பி, நாட்டுக்கோழிக் கறி, புழுங்கல் அரிசிச்சோறு, இதை நினைச்சு வாயூற, வீணி ஓட, அது மனைவியின் முகத்தில விழ, அவ சொத்தையைத் துடைச்சுக்n;காண்டு, "என்னப்பா என்னும் யேர்மனி வரவில்லையா?" என்று கேட்டபடி மீண்டும் தூங்கிவிட்டா.

"மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்…" மனைவியின் முந்தானை முடிச்சில் நான்… நாட்கள் மாதங்களாகின. சில மாதங்கள் கழிய என் மாமனார் இரண்டு பாஸ்போட்டுடனும், ரிக்கற்றுடனும் வந்தார்.

விசயம் புரியவில்லை…

"உங்களுக்குத்தான்… நீங்க யேர்மனிக்குப்போக எல்லா ஒழுங்கும் செய்தாச்சு…" திகதியைச் சொன்னார்.

கோயில் மாடு தலையாட்டின மாதிரி தலையை ஆட்டீனேன். விமானத்தில் இருந்த நான், அந்த நினைவாக, நிசமாகவே தலையாட்டி விட்டேன். தலை மனைவியின் தலையில் அடிபட, மனைவி மீண்டும் கண்திறந்தார். அப்போது விமானம் யேர்மனியில் நின்றது.

புதிய இடம், புரியாத மொழி, குளிர், பனி. வாழ்க்கை மாதிரி கால நிலை இருந்தது. சில மாதங்கள் செல்ல எங்களுக்குக் குழந்தை கிடைத்தது. அதை எப்படி வளர்த்தெடுப்பது அதுபற்றி இரண்டு பேரும் யோசித்தோம். மனைவி "உங்களை மாதிரி வளர்க்க மாட்டன்" என்றாள்.

என்னை மாதிரி என்றால்… யோசித்தேன். பழைய ஞாபகங்கள் மீண்டும் வந்தன.

…………………..

"என்னப்பா… பெரிசா யோசிக்கிறீங்க… நான் பகிடிக்குச் சொன்னனான்." என்று மனைவி சமாளித்தா

குழந்தை வளர்ந்தது. பாடசாலையில் சேர்த்தோம். படித்துக்கொண்டிருந்தது. பாடசாலையில் ஏற்படும் நெருக்கடிகளுக்கு மகன்தான் மொழிபெயர்ப்பாளராகவும் இருந்தார். இப்படியே காலம் போக, வகுப்புகளும்மாற, பின்னர் பாடசாலையும் மாற, தனக்கொரு கொம்பியூட்டர் வேணுமென்றான். பொடியாச்சே… கேட்கிறதை வேண்டிக் கொடுத்தோம். அவன் சாட்டில் நானும் கணனி கற்றுக்கொண்டதுடன் அவன் ஆதரவுடன் அடிக்கடி திரைப்படம் பார்ப்பதும் வழக்கமாகிவிட்டது. இதைச் சாட்டாக வைத்து என் மனைவியும் அவனது உதவியை நாடி, சின்னத்திரை நாடகம் பார்ப்பதுடன், தனக்குத் தெரிந்தவர்களுக்கு நாடகத்தைப் பற்றி விமர்சனம் செய்வதும் தொடர்ந்தது.

ஒருநாள் நானும் மனைவியும் திருமண வீடு ஒன்றுக்கு சென்று வந்த போது மகன் வீட்டில் இல்லை.

கொம்பியூட்டர் மேசையில் சொக்கிளேற் கடதாசி, கோப்பி குடித்த கப், சாப்பாட்டுக் கோப்பை, யூஸ்போத்தல், பரப்பியபடியே கிடந்தன. பள்ளிக்கூடம் வீடு, கொம்பியூட்டர் என்றிருந்தவன் எங்கே போனான்? ஏக்கமாக இருந்;தது. நண்பன் என்று கூட எவரும் அவனுக்கில்லை. அப்படியிருக்கும்போது…

தொலைபேசி ஒன்று வந்தது. நான் முந்தி நீ முந்தி என்றமாதிரி நானும் மனைவியும் ரெலிபோனை எடுக்க ஒடினோம். அது துண்டிக்கப்பட்டு விட்டது.

என்ன செய்வது? யாரிடம் கேட்பது. எதுவும் புரியவில்லை. ஏக்கத்துடன் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்திருந்தோம். மனைவின் கண்ணில் நீர் கசிந்தது.

ஏக்கமும் பயமும் அதிகரித்துக்கொண்டே வந்தது.

மீண்டும் ஒரு தொலைபேசி. நண்பர் ஒருவர் எடுத்து சுகம் விசாரித்தார். ஷஷஎன்ன குரல் ஒரு மாதிரி இருக்கு|| என்றார்.

விக்கி விக்கி விசயத்தைச் சொன்னேன்.

"ஒரு பொம்பிளைப்பிள்ளையோடை றெயில்வே ஸ்ரேசனில் கதைச்சுக் கொண்டு நின்டமாதி இருந்துது." என்றார்.

எனக்கு தூக்குவாரிப் போட்டுது. "டொச்சுப்பிள்ளையா தமிழ்ப் பிள்ளையா?"

"தமிழ்ப் பிள்ளைபோல இருக்கு…" என்றவர் தொலபேசியைத் துண்டித்துக் கொண்டார்.

"இவனென்ன பொம்பிளைப்பிள்ளையளோட நிண்டு கதைக்கிற அளவுக்கு வந்திட்டானா?" எனது மனைவி புலம்பினார்.

வீட்டுக் கதவு தட்டப்பட்டது. வேறு நண்பர் ஒருவரும் அவரது மனைவியும் வந்தார்கள்.

"வந்தவர் என்ன பொடியனைக் காணயில்லையாம்… இப்ப பொம்பிளைப் பிள்ளைகளே வீட்டை விட்டுப் போகுதுகள். நீங்கள் பொடியன் போனதுக்கு கத்திக் குழறிக் கூத்தடிக்கிறீங்க… இங்க என்னண்டா, எல்லாரும், பொடியள், பொட்டையள் வீட்டுக்குள்ள இருக்குதுகள்தானே என்;று கவனமில்லாமல் இருக்கப், பிள்ளையள் வீட:டுக்குள்ளேயே இருந்து கொண்டு, இணையத்தளங்கள், மின்னஞ்சல், "பேஸ்புக்" என்று உலாவி, உலகப் பந்தின் உச்சியில ஒன்றுகூடி, கூட்டம் வைக்குதுகள். சில தாய் தகப்பன்மார், என்ரை மகன் ஒரே கொம்பியூட்டரில்தான் இருக்கிறான்… என்று கவலைபோல் பெருமைபேசிவினம்… சிலர், என்ரை பிள்ளையளுக்கு ஆளுக்கொரு கொம்பியூட்டர் வேண்டிக் கொடுத்திருக்கிறமென்று பெருமைபேசுவினம்… கடசியில..."

"என்ரை மகன் அப்படிப்பட்ட ஆள் இல்லையே…"

"உன்ரைமகன் என்ன செய்யிறான் என்று ஒவ்வொரு நாளும் பார்க்கிற நீங்களே…?

உங்களுக்குத் தெரியாது… உன்ரை மகனும் அப்படித்தான்… இங்கிலாந்து, அவுஸ்ரேலியா கனடா, இலங்கை இந்தியா எண்டு எல்லாரோடையும் அரட்டை அடிக்கிறது. எந்த நாட்டுப் பெட்டையோடை போனானோ தெரியாது பேசமால் இருங்க… வருவான் தானே…||

நான் மௌனமானேன். ஆனால் உள்மனது ஷஷஅங்க சந்தியில நின்றால் சொந்தம் பந்தம் எல்லாருக்கும் தெரியும். ஆனால் இங்க … வீட:டுக்குள்ளே இருந்து கொண்டே.. தாய் தகப்பனுக்குத் தெரியாமல் உலகம் சுத்துதுகள். காலம் கெட்டுப்போச்சு… இதுக்கு என்ன செய்யிறது|| எனச் சிந்pதித்தது.

"என்ன மொனமாகிவிட்டாய்… நான் சொல்லுறன் எண்டு குறை நினைக்காதை… கழுதைக்கு முன் சோளன் பொத்த்pயைக் கட்டி பிரயாணம் செய்தவன் மாதிரித்தான் நம்மடை ஆக்கள்… காசு சம்பாரிக்கிற எண்ணத்திலேயே ஒடுறது… பிள்ளையளைக் கவனிக்கிறதில்லை… முடிவில காசும் கிடைச்சபாடில்லை… பிள்ளையளோடையும் இருந்த பாடில்லை… அங்கயெண்டால் சந்தியில நிண்டாலும் புத்திசொல்ல மாமன், மச்சான,; பெரியப்பன், சித்தப்பன் என்று எத்தனை ஆட்கள்… இங்க கேட்பாரில்லைத் தம்பி... பிள்ளையள் உலகச் சந்தியல நிற்குதுகள். நீங்கதான் கவனிக்க வேணும்." என்றவர் தன் மனைவியுடன் திரும்பிச் சென்றார்.

மகன் எங்கே?... யாரோடு போனான் என்ற ஏக்கமும், பயமும், சோகம் என்னையும் மனைவியையும் ஆட்கொண்டது.

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் நடப்பதை சந்திக்கு கொண்டுவந்தமைக்கு நன்றி

< திருமணம் முடிஞ்சுது. குட்டிபோட்ட பூனைமாதிரி நான். குட்டிபோட்ட பூனைக்கு யார் என்ன சாப்பாடு போட்டார்களோ தெரியாது >

< "என்ன மொனமாகிவிட்டாய்… நான் சொல்லுறன் எண்டு குறை நினைக்காதை… கழுதைக்கு முன் சோளன் பொத்த்pயைக் கட்டி பிரயாணம் செய்தவன் மாதிரித்தான் நம்மடை ஆக்கள்… காசு சம்பாரிக்கிற எண்ணத்திலேயே ஒடுறது… பிள்ளையளைக் கவனிக்கிறதில்லை… முடிவில காசும் கிடைச்சபாடில்லை… பிள்ளையளோடையும் இருந்த பாடில்லை… அங்கயெண்டால் சந்தியில நிண்டாலும் புத்திசொல்ல மாமன், மச்சான,; பெரியப்பன், சித்தப்பன் என்று எத்தனை ஆட்கள்… இங்க கேட்பாரில்லைத் தம்பி... பிள்ளையள் உலகச் சந்தியல நிற்குதுகள். நீங்கதான் கவனிக்க வேணும்." என்றவர் தன் மனைவியுடன் திரும்பிச் சென்றார்.>

ஐரோப்பிய இரட்டைமுக வாழ்வின் முரண் தன்மையையும் , ஒரு தாயினுடைய கண்டிப்பான அரவணைப்பையும் , துல்லியமாகப் படம் போட்டுக்காட்டிய செம்பகனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் :):) :) 1

யதார்த்தத்தினை யதார்த்தமாக சொன்னவிதம் அருமை செண்பகன்.

நன்றி.... பாராட்டுக்கள்! :)2

  • கருத்துக்கள உறவுகள்

செண்பகன் அருமை

கதையைக்கொண்டு போய் முடித்த இடம் அதிலும்அருமை

ஒரு நிஐத்தை கொஞ்சம் வாழைப்பழத்தில் ஊசி ஏத்துவதுபோல் நகைச்சுவை கலந்து தந்துள்ளீர்கள்.

நாமும் இதற்குள்தான் வாழ்கின்றோம்.

என்ன உங்களுக்கும் எனக்கும் அம்மாவிடம் பேச்சு வாங்கிக்கொண்டு வெளியில் போய் சிலவற்றை பெறவேண்டியிருந்தது. அதனால் அது பலரது கண்காணிப்புக்குள் இருந்தது. ஆனால் இன்றைய சந்ததி வீட்டுக்குள்ளேயே தனது அறைக்குள்ளேயே எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்திவிட்டு வீட்டுக்குள்ளேயே எல்லாவற்றையும் செய்து முடிக்கிறது. (தாய் தகப்பனுக்கு நல்லவனாக நடப்பது உட்பட) இந்த சந்ததிக்கு கிடைத்திருக்கும் இந்த விஞ்ஞான மற்றும் தொழில் நுட்ப மாற்றங்களுக்குள் அவர்கள் மாண்டுவிடாமல் அவர்களைக்காப்பாற்றுவதும் அடுத்த சந்ததிக்கான பாதையைச்செப்பனிடுவதும் இன்றைய தேவையாக உள்ளது. அதை அவர்களின் புரிதலுடன் செய்து முடிக்கவேண்டியது எல்லோரது கடமையாகும்.

அந்தவகையிலேயே தங்களது இந்த கருவையும் நான் பார்க்கின்றேன்.

பிள்ளைகளை நல்லவர்களாக வல்லவர்களாக வளர்ப்பது என்பது புலத்திலும் சரி தாயகத்திலும் சரி சவாலாக உள்ளது. ஆனால், தாயகத்தில் கிடைக்கும் பரந்த்துபட்ட உதவியும் ஆதரவும் புலத்தில் இல்லை என்பதை அழகாக கூறியுள்ளார் செம்பகம்.

புலத்தில், எமது சமூகம் சார்ந்த பண்புகளை இயன்றளவுக்கு தக்கவைப்பதும் பிள்ளைகளின் நலன்களை முன்வைத்து வாழ எண்ணுவதும் பயன் தரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.