Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனக்கு வந்த பண்டிகைக் கால வாழ்த்தை உங்களோடும் பகிர்ந்து கொள்கின்றேன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் பதிவுசெய்யப்பட்ட உயிரியலாளர்களுக்கு Society of Biology தனது புத்தாண்டு வாழ்த்து மடலை... அனுப்பி வருகிறது. அந்த அமைப்பில் பதிவுசெய்யப்பட்ட உயிரியலாளர் என்ற வகையில் எனக்கும் அது வந்தது.

அதில் எனக்குப் பிடித்த விடயம்.. வாழ்த்து மடலோடு வந்த செய்தி தான்.. புத்தாண்டில் நீங்களும் அந்தச் செய்தியை செயற்படுத்தினால்.. உங்களுக்கும்.. உங்களின் எதிர்கால சந்ததிக்கும்.. இந்தப் பூமிக்கும் நற்பயன் விளையும்.

அனைவருக்கும்.. இனிய நத்தார் மற்றும் புதுவருட வாழ்த்துக்கள்..!

****

  • கருத்துக்கள உறவுகள்

வைறஸ் வராது என்று உத்தரவாதம் அளித்தால் வாழ்த்து மடலைப் பார்க்கலாம்..அல்லது நீங்கள் எழுதி இருப்பதையே பார்த்துட்டு போறதே நன்று.:)lol

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வைறஸ் வராது என்று உத்தரவாதம் அளித்தால் வாழ்த்து மடலைப் பார்க்கலாம்..அல்லது நீங்கள் எழுதி இருப்பதையே பார்த்துட்டு போறதே நன்று.:)lol

கண்டிப்பா வைரஸ் எல்லாம் வராது. ஏன்னா எனக்கு வரல்ல. அப்படி யாருக்கும் வந்தாச் சொல்லுங்க.. Society of Biology (SoB) க்கு அறிவித்துக் கொள்கின்றேன்..! :lol::icon_idea:

நெடுக்கற்ரை பெயர் போடேலை ஆனபடியால் இதை நம்ப மாட்டோம் <_<

நெடுக்கற்ரை பெயர் போடேலை ஆனபடியால் இதை நம்ப மாட்டோம் <_< நீங்கள் எந்த யூனியிலை படிக்கின்றீர்கள்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கற்ரை பெயர் போடேலை ஆனபடியால் இதை நம்ப மாட்டோம் <_<

அதை நம்ப வேண்டாம்.. அதில் உள்ள செய்தியை படித்து செயற்படுத்தினாலே போதும். நீங்கள் நம்பனும் என்பதற்காக எனி நான் என் அங்கத்துவ இலக்கத்தை எல்லாம் பகிரங்கப்படுத்த முடியாது..! ஏன்னா நாங்க நிற்கிற இடம்.. சந்தி..! :lol::D

Edited by nedukkalapoovan

வளர்ந்த நாடுகளில் இப்படி எல்லாம் கேட்பது எல்லாம் (reduce carbon footprints) ஒரு பெருமைக்கு :D

Edited by akootha

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எந்த யூனியிலை படிக்கின்றீர்கள்?

இதுக்கும் வாழ்த்து மடலுக்கும் என்ன சம்பந்தம்..??! நான் பிரித்தானியாவில் ஏதோ ஒரு யுனில பல்லாயிரம் பேர்கள் மத்தியில் ஒருவனாக கூட இருந்து.. படித்தேன்.. படிக்கிறேன். அவ்வளவும் தான். :lol::D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வளர்ந்த நாடுகளில் இப்படி எல்லாம் கேட்பது எல்லாம் (reduce carbon footprints) ஒரு பெருமைக்கு :D

வளர்ந்த நாடுகளில் இது இன்று அதிகம் பேசப்படுவதாக இருந்தாலும்.. தாயகத்தில்.. தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம்.. சூழல் பாதுகாப்பிற்கு என.. மரம் நடுவோம் திட்டத்தை கொண்டு வந்ததை.. மறப்பதற்கில்லை..! எங்கள் பள்ளிக் காலத்தில் அதை செயற்படுத்தியமை நினைவில் நிற்கிறது. நிறைய பனை மரங்களும் நாட்டப்பட்டன..! புதிய இனக்கலப்புச் செய்யப்பட்ட மா.. வாழை.. தென்னை.. முந்திரிகை.. பப்பா மரங்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டன..! ஆனால் சிங்களம் அவற்றை எல்லாம் மல்ரி பரல் எரி குண்டுகளை ஏவி நாசம் செய்துவிட்டதோடு.. இப்போ சிங்களக் குடியேற்றம் நோக்கி காடழிப்பையும்.. இறால் வளர்ப்பு என்ற பெயரில்.. கண்டல் காடுகளையும்.. மணல்.. அள்ளுதல் என்ற பெயரில் தமிழீழ கடற்கரைகளையும்.. சீமெந்து உற்பத்தி என்ற பெயரில்.. இயற்கை வளமான பல கடல் வாழ் உயிரினங்களின் வாழ்விடமான முருகைக்கற் பாறைகளையும் சீரழிக்கின்றது..! இது பற்றிய எம்மவர்களின் விழிப்புணர்வு.. அரசியல் வெற்றிடப் போட்டியில் காலில் கிடந்து மிதிபடுகிறது..! நாம் அரசியல் உறுதி நிலை அடையும் போது.. இவை எல்லாம் எம்மால் கட்டுப்படுத்த முடியாத அளவு அல்லது மீள முடியாத அளவு சீரழிஞ்சு இருக்கவே வாய்ப்பிருக்கிறது. :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே முகநூலில் நிறைய மரஞ்,செடி கொடி தானே வளர்க்கிறீங்கள் பிறகு ஏன் கவலைப்படுறீங்கள்...? :lol:

இதுக்கும் வாழ்த்து மடலுக்கும் என்ன சம்பந்தம்..??! நான் பிரித்தானியாவில் ஏதோ ஒரு யுனில பல்லாயிரம் பேர்கள் மத்தியில் ஒருவனாக கூட இருந்து.. படித்தேன்.. படிக்கிறேன். அவ்வளவும் தான். :lol::D

யூனிக்கும் வாழ்த்துமடலுக்கும் சம்பந்தமில்லை என்று தெரியும். எந்த யூனி என்று அறியக் கேட்டேன். என்னவோ நீங்கள் ஒரு PhD மாணவனாக இருக்கும் என்று நினைத்தேன். அது தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யூனிக்கும் வாழ்த்துமடலுக்கும் சம்பந்தமில்லை என்று தெரியும். எந்த யூனி என்று அறியக் கேட்டேன். என்னவோ நீங்கள் ஒரு PhD மாணவனாக இருக்கும் என்று நினைத்தேன். அது தான்.

ஒன்றை மட்டும் சொல்லலாம்.. கற்றது கை மண் அளவு.. கல்லாதது பிரபஞ்சம் அளவு..! படிக்க படிக்க புதிசு புதிசா வருகுதே தவிர... முடியுறதாக் காணேல்ல..! PhD என்றெல்லாம் படிப்புக்கு எல்லை போட எனக்கு விருப்பமில்ல. வாழும் வரை படிப்பம்..! அதில PhD ஒரு destination மட்டுமே..!

என்னைப் பொறுத்தவரை..

BSc = GCE O/L.

MSc,MBA = GCE A/L.

PhD = Degree.

DSc= Masters.

Prof = PhD.

இப்ப நான் GCE A/L நிற்கிறன்..!

இப்ப திருப்தியா..! :):lol:

ஏன் தம்பி இவ்வளவு விளக்கம்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் தம்பி இவ்வளவு விளக்கம்?

அது எம்மில் உள்ள ஒருசிலரின் வழக்கம்.தற்பெருமை என்பார்கள்.

Edited by குமாரசாமி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அது எம்மில் உள்ள ஒருசிலரின் வழக்கம்.தற்பெருமை என்பார்கள்.

நீங்களும் நிறையவே எமது சமூதாயச் சகதிகளை அப்பிக்கொண்டு திரியுற பேர்வழிகளில் ஒருவர் என்று நினைக்கிறேன். உங்களின் அநேக பதிவுகளில் இதனை அவதானிக்க முடிகிறது.

இன்றைய உலகில் பாடசாலைக் கல்வியைப் போல.. பல்கலைக்கழகக் கல்வியும் எல்லோருக்கும் என்பதே தொனிப்பொருள்..! அது ஒன்றும் தற்பெருமைக்குரிய விடயமல்ல. அது அடிப்படை வாழ்வியலுக்கு தேவையான தகுதிகளில் ஒன்றாகி விட்டது. அதையே தான் நாமும் பெறுகிறோம். இதில் தற்பெருமைக்கு எதுவுமே இல்லை..! உங்களைப் போன்றவர்கள் தான் 21ம் நூற்றாண்டில் உடலாலும்.. 18ம் நூற்றாண்டில்.. மனதாலும் வாழ்ந்து கொண்டு.. சமூகச் சகதிகளை ஆளுக்காள் அப்பிக் கொண்டு திரிகிறீர்கள். இதனை தவிர்ப்பது உங்களிற்கும்.. நீங்கள் சார்ந்த சமூகத்திற்கும் முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கும்.

அது முடியல்லன்னா.. தயவுசெய்து இப்படியான கருத்துக்களை எனது திரியில் பதிவதையாவது நிறுத்தினீர்கள் என்றால் நன்றாக இருக்கும். ஏனெனில்.. என்னைப் பொறுத்தவரை.. இவை விசமங்களே தவிர விமர்சனங்கள் அல்ல. விசமங்களுக்கு நான் ஒருபோதும் என்னால் முடிந்த அளவு இடமளிக்க மாட்டேன். :icon_idea:

தானும் படாது தள்ளியும் படாது பேர்வழிகள்.. எம்மில் அதிகம் உண்டு. அவர்களை இட்டு அவதானமான செயற்பாடுகள் அவசியம்.

வாழ்த்தைப் படிச்சமா பயன்படுத்தினமா என்பவனும் எம்மில் உள்ளான்.. இப்படியான விசமிகளும் எம்மில் உண்டு..! எனவே உறவுகளே.... அதற்கு ஏற்ற வகையில்.. தலைப்போடு.. பேசுங்கள்.. தனிப்பட்ட கேள்விகளை தவிருங்கள். இப்படியான விசமத்தனங்கள் உள்ள இடத்தில் தனிப்பட்ட வினாக்களுக்கு விடை அளிப்பது உசிதமான செயல் அல்ல..! எனி இவைக்காக நாங்கள் நிர்வாணமாக நின்று தான் விடை சொல்லனும்.. அப்ப தான் அவை திருப்திப்படுவினம்.. ஏன்னா அவை அப்படி நிற்கிறீனம் என்பதற்காக..! ஆகவே யாழில் தனிப்பட்ட கேள்விகளை தயவுசெய்து தவிருங்கள். கேட்டாலும் பதில் அளிக்காவிட்டால்.. உங்களைப் புறக்கணிப்பதாக கருதாதீர்கள். :):lol::icon_idea:

Edited by nedukkalapoovan

இந்த திரியில உங்க எவ்வோர்ட் ,,,

ரொம்ப ரொம்ப தப்பு நெடுக்கு !

நேக்கு நன்னாவே நியாபகமிருக்கு......

வெறும் 17 வயசு பையன்...

கான்சர் பத்தி research பண்ணினான் ,, அப்போ ,, ஒட்டு மொத்த மீடியாவே

அவனோட skill பத்தி.. சொன்னதால........

ஓவரா புகழாதீங்கன்னு...

CtV ல கூட குத்தம் புடிச்சீங்களே........ மாப்பு...

பைசாவுக்கு கூடாத தேறாத ... உங்க வாழ்த்தை இங்க கொண்ணாந்து ஒட்டுறீங்களே...

ஏங்க... ஏனிந்த கொலைவெறி?

சும்மா... சோப்பு சீப்பு ... கண்ணாடி வாங்குறோம்னு ... சைனப் பண்ணினா... வாழ்த்து தானாவே வந்துட போகுது...

இதுக்கு போயி ஏன்... ஓவர் பில்ட் அப்பு?? :rolleyes:

என்னில உள்ள கெட்ட பழக்கம், சந்தேகத்தை கேட்டுகிட்டே இருக்கணும் ......

நான் தான் லூசு ஆச்சே... அதால..!

உங்கமேல சந்தேக பட்டு இல்ல..! :)

17 வயசுப் பையன் (ஊர் பாசையில சொன்னா.. A/L படிக்கிற இளந்தாரி..) ஒரு research proposal...பண்ணுறது ஒன்னும் புதுமை கிடையாது. அதில திறமை மட்டும் தான் இருக்குது. அதற்காகத் தான் கெளரவப் பட்டம் வழங்கினாங்க. 17 வயசுக்கு முன்னாடி.. PhD செய்தவங்களும் இருக்காங்கப்பு. நீங்களும்.. உங்க மீடியாக்களும் அதுகளை அறியாதது.. அவங்க தப்பில்ல. ஒரு நல்ல research proposal ஐ வைச்சு ஏதோ எல்லாம் கண்டுபிடிச்சு விட்டதா கதையளந்தது தான் பாருங்க.. அறிவியல் ரீதியா தப்பு..! அதை விசயம் அறிஞ்ச எவனும் சுட்டிக்காட்டுவான். எல்லா நேரத்திலும்.. அறிவிலித் தனமாவே நடிச்சுக் கிட்டு சமுதாயத்தை ஏமாற்றிக்கிட்டு.. இருக்க முடியாது தானே.

உள்ளடக்கத்தை தான் பார்க்கனும்.. வெளில உள்ள கவரைப் பார்த்து மயங்கப்படாது... மாப்பு. வேலை மிணக்கட்டு.. அவங்க.. இதனை ஏன் அனுப்புறாங்கன்னு.. அறிவிலிகளுக்கு புரிய வைக்க அல்ல.. இதனை இங்க போட்டிருக்கம். சாதாரண.. மூளை உள்ளவங்களுக்கே.. புரியும் என்று தான் இங்க போட்டிருக்கோம். (அதாவது இந்த ஈகாட்டை படிச்சதும்.. மனசு வந்து 10 புதிய தாவரங்களை வீட்டில.. அயலில.. நட்டீங்கன்னா.. அதுகள்.. உங்க காருகள்... இன்னும் தொழிற்சாலைகள்.... பண்ணை விலங்குகள்... வளிமண்டத்துக்கு வெளியிடுற காபன் அளவை குறைச்சு.. பூமியை பசுமையா வைச்சிருக்கிறதோட.. பூமி வெப்பமடைதல் வேகத்தை கட்டுப்படுத்தவும் உதவக் கூடும் என்று சொல்லுறாங்க..!)

மேலும்.. இந்த இணைப்பு ஈமெயில் மூலம் அனுப்பப்பட்டதால.. தகவல் காப்புரிமைக்காக.. அது எப்படி வந்திச்சு என்று மட்டும் சொல்லி இருக்கம். அப்புறம்.. நமக்கு பிரச்சனை வரக்கூடாது..பாருங்க. இதெல்லாம்.. உங்களுக்கு ஓவர் பில்டப்பா தெரிஞ்சா.. அதில ஏறி நின்று குதியுங்க...! எவன் கவலைப்பட்டான். ஆனா சில விசயங்களை சொல்லி ஆகனும்.. அப்பதான் ஜனங்கள் உங்க சில பேர் முன்னாடி நசுங்குப்படாம தப்பிக்குங்க..! :lol::D:icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அவரவர் தொழில் அல்லது படிப்பில் ஏன் அவரவர் இருக்கும் இடத்தில் கிடைப்பவைகளை அவை எவருக்காவது பயன்படும் என்கின்ற அவாவிலும் எமக்கு பிடித்துள்ளது என்பதற்காக கூட இங்கு பதிவதுண்டு.

அந்தவகையில்

நெடுக்கு படிக்கும் படிப்பு எமக்கு எல்லோருக்கும் தெரியும். எனவே அவர் தனக்கு கிடைத்ததை இங்கு பதிவதை வரவேற்கலாம் அல்லது பார்க்காமல் பதிலிடாமல் விடலாம். அதைவிடுத்து இப்படியெல்லாம் விமர்சனம் செய்து நேரத்தையும் மனிதர்களையும் வீணாக்குவது நல்லவழி முறையாகத்தெரியவில்லை.

நல்ல செய்தி.

மலிவு விலை வாழ்த்து மடல்களுக்காக, காகிதத்திற்காக பல காடுகள் அழிக்கப்படுகின்றன. அதைத் தவிர்த்து e -card களிலும் சமூகத்திற்குத் தேவையானவற்றை கூறுகிறார்கள்.

மேற்கத்தைய நாடுகள் தங்கள் இயற்கை வளங்களை அழிப்பதில்லை. ஒரு மரத்தை வெட்டுவதென்றாலும் அனுமதி பெறவேண்டும். தங்கள் தேவைகளுக்கு ஏழை நாடுகளில் உள்ள வளங்களைத்தான் பயன்படுத்துவார்கள். சுற்றுப்புறச் சூழலை கவனியாதுவிட்டால் எல்லாம் பாழ்.

காடுகளை அழித்து குடியிருப்புகள் கட்டிய தமிழ்நாடும் நல்லதொரு உதாரணம். இன்றைக்கு நீரிற்காக போராட்டம்.

காட்டை அழித்தவன் நாட்டை அழித்தான் அதனோடு சேர்ந்து தன் வாழ்வையும் அழித்தான்.

பார்க்காமல் பதிலிடாமல் விடலாம். அதைவிடுத்து இப்படியெல்லாம் விமர்சனம் செய்து நேரத்தையும் மனிதர்களையும் வீணாக்குவது நல்லவழி முறையாகத்தெரியவில்லை.

ஊருக்கு உபதேசம்......................

  • கருத்துக்கள உறவுகள்

ஓரமா நிண்ட தேர் ஒன்றை அலையக்கா இழுத்துவந்து ரோட்டுல விட்டிட்டா.. :icon_mrgreen: இப்ப அதுக்கு கல்லெறி நடக்குது..! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்களும் நிறையவே எமது சமூதாயச் சகதிகளை அப்பிக்கொண்டு திரியுற பேர்வழிகளில் ஒருவர் என்று நினைக்கிறேன். உங்களின் அநேக பதிவுகளில் இதனை அவதானிக்க முடிகிறது.

இன்றைய உலகில் பாடசாலைக் கல்வியைப் போல.. பல்கலைக்கழகக் கல்வியும் எல்லோருக்கும் என்பதே தொனிப்பொருள்..! அது ஒன்றும் தற்பெருமைக்குரிய விடயமல்ல. அது அடிப்படை வாழ்வியலுக்கு தேவையான தகுதிகளில் ஒன்றாகி விட்டது. அதையே தான் நாமும் பெறுகிறோம். இதில் தற்பெருமைக்கு எதுவுமே இல்லை..! உங்களைப் போன்றவர்கள் தான் 21ம் நூற்றாண்டில் உடலாலும்.. 18ம் நூற்றாண்டில்.. மனதாலும் வாழ்ந்து கொண்டு.. சமூகச் சகதிகளை ஆளுக்காள் அப்பிக் கொண்டு திரிகிறீர்கள். இதனை தவிர்ப்பது உங்களிற்கும்.. நீங்கள் சார்ந்த சமூகத்திற்கும் முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கும்.

அது முடியல்லன்னா.. தயவுசெய்து இப்படியான கருத்துக்களை எனது திரியில் பதிவதையாவது நிறுத்தினீர்கள் என்றால் நன்றாக இருக்கும். ஏனெனில்.. என்னைப் பொறுத்தவரை.. இவை விசமங்களே தவிர விமர்சனங்கள் அல்ல. விசமங்களுக்கு நான் ஒருபோதும் என்னால் முடிந்த அளவு இடமளிக்க மாட்டேன். :icon_idea:

தானும் படாது தள்ளியும் படாது பேர்வழிகள்.. எம்மில் அதிகம் உண்டு. அவர்களை இட்டு அவதானமான செயற்பாடுகள் அவசியம்.

வாழ்த்தைப் படிச்சமா பயன்படுத்தினமா என்பவனும் எம்மில் உள்ளான்.. இப்படியான விசமிகளும் எம்மில் உண்டு..! எனவே உறவுகளே.... அதற்கு ஏற்ற வகையில்.. தலைப்போடு.. பேசுங்கள்.. தனிப்பட்ட கேள்விகளை தவிருங்கள். இப்படியான விசமத்தனங்கள் உள்ள இடத்தில் தனிப்பட்ட வினாக்களுக்கு விடை அளிப்பது உசிதமான செயல் அல்ல..! எனி இவைக்காக நாங்கள் நிர்வாணமாக நின்று தான் விடை சொல்லனும்.. அப்ப தான் அவை திருப்திப்படுவினம்.. ஏன்னா அவை அப்படி நிற்கிறீனம் என்பதற்காக..! ஆகவே யாழில் தனிப்பட்ட கேள்விகளை தயவுசெய்து தவிருங்கள். கேட்டாலும் பதில் அளிக்காவிட்டால்.. உங்களைப் புறக்கணிப்பதாக கருதாதீர்கள். :):lol::icon_idea:

உங்கள் பக்கம் நியாயம் இருந்தாலும் இப்படி காய்ஞ்சமாடு கம்பிலைவிழுந்தமாதிரி நிறைய எழுதி என்னை வெருட்டப்படாது.Game over :icon_idea:

மேலும்.. இந்த இணைப்பு ஈமெயில் மூலம் அனுப்பப்பட்டதால.. தகவல் காப்புரிமைக்காக.. அது எப்படி வந்திச்சு என்று மட்டும் சொல்லி இருக்கம். அப்புறம்.. நமக்கு பிரச்சனை வரக்கூடாது..பாருங்க. இதெல்லாம்.. உங்களுக்கு ஓவர் பில்டப்பா தெரிஞ்சா.. அதில ஏறி நின்று குதியுங்க...! எவன் கவலைப்பட்டான். ஆனா சில விசயங்களை சொல்லி ஆகனும்.. அப்பதான் ஜனங்கள் உங்க சில பேர் முன்னாடி நசுங்குப்படாம தப்பிக்குங்க.!

என்னாது இது,, சின்ன புள்ளைத்த்னமா பேசிகிட்டு இருக்கிங்க ,,, மாப்பு?

அடாங்கோ... இவரு பெரிய ஒபாமா.. பாதுகாவலர்..../ பாடிகார்ட்..........

ஸோ ........தகவல் .../Data.....................................

காப்புரிமை பேணுறாராம்!

ஒரே ஒரு முக்கிய கேள்வி கேட்கணும்.........

இந்த செய்திய நீங்க , இங்க பகிராம விட்டிருந்தா...

ஜனங்க நசுங்கு படாதா இனிமே? :)

அறிவிலிகளுக்கு.. யாழ் கள விதிகளையே சரியா.. தெரியுதில்ல. இதில ஈமெயிலில் பகரப்பட்ட ஒரு அமைப்பின் உறுப்பினர்களுக்கான.. ஒரு விடயத்தை பொது இடத்துக்கு நகர்த்தும் போது அதற்குரிய விருப்பை வெளியிடுவதும்.. அந்த ஆக்கத்தை (வாழ்த்து அட்டையை) பிரசுரிப்பதற்கான காரணத்தை.. இனங்காட்டிக் கொள்வதும்.. தகவல் பரிமாற்ற மரபு... என்பது தெரிய வாய்ப்பில்ல தான்.

நான் எனது கருத்துக்களில்.. இவற்றைக் கையாள்வது மரபு.. சரியா நைனா. சும்மா நொய் நொய் என்று கொண்டு நிற்கிறதே புழைப்பா போச்சு.

ஜனங்கள தவறான நடவடிக்கைகளால நசுங்கப்படாது பாருங்க.. அதுக்குத்தான் இது. :lol::D:icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி.

மலிவு விலை வாழ்த்து மடல்களுக்காக, காகிதத்திற்காக பல காடுகள் அழிக்கப்படுகின்றன. அதைத் தவிர்த்து e -card களிலும் சமூகத்திற்குத் தேவையானவற்றை கூறுகிறார்கள்.

மேற்கத்தைய நாடுகள் தங்கள் இயற்கை வளங்களை அழிப்பதில்லை. ஒரு மரத்தை வெட்டுவதென்றாலும் அனுமதி பெறவேண்டும். தங்கள் தேவைகளுக்கு ஏழை நாடுகளில் உள்ள வளங்களைத்தான் பயன்படுத்துவார்கள். சுற்றுப்புறச் சூழலை கவனியாதுவிட்டால் எல்லாம் பாழ்.

காடுகளை அழித்து குடியிருப்புகள் கட்டிய தமிழ்நாடும் நல்லதொரு உதாரணம். இன்றைக்கு நீரிற்காக போராட்டம்.

காட்டை அழித்தவன் நாட்டை அழித்தான் அதனோடு சேர்ந்து தன் வாழ்வையும் அழித்தான்.

நன்றி தப்பிலி அண்ணா. :)

அறிவிலி.. சும்மா கிரந்த பாசை பேசிக் கொண்டே திரியாம.. இப்படியான கருத்துக்களையும் பகிரப் பழகனும். அப்ப தான் சொல்ல வரும் விடயத்தை திசை திருப்பாமல் திரிகளை சரியான வழியில் கொண்டு செல்ல முடியும்.

அறிவிலி போன்றவர்களின் விசமத்தனமான செயற்பாடுகளால்.. சொல்ல வந்த விடயம்.. வாசகர்களால் புரியப்பட வேண்டிய விடயம்.. புரிதலில் இருந்து.. தூர கொண்டு செல்லப்பட்டிருப்பது கவலைக்குரியது.

இப்படியே நாங்களும் பதிலுக்கு குழப்ப வெளிக்கிட்டால்.. ஒரு திரியும் உருப்படியா மிஞ்சாது. எங்களுக்கும் அறிவிலியை விட நல்லா கிரந்தம் எழுத வரும்..! :lol::icon_idea:

இது தான் நெடிக்கரின் படிப்பு என்று நினைக்கின்றேன்

BSc ( Biology) அவர் முதுமாணி மாணவன் அவ்வளவு தான். பெரிசாய் ஒன்றும் வெட்டி விழுத்தேலை, ஆனால் என்னை விட சிமாட் என்று ஒத்துக் கொள்கின்றேன் அவ்வளவும் தான். நெடுக்கர் வாறதற்கிடையில் நான் எஸ்கேப்

Edited by அலைமகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.