Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கமலவாசன்- கணிதப் பிரிவில் முதலாம் இடம்

Featured Replies

கமலவாசனின் கல்விச் சாதனை

பாரம்பரிய கலாசாரப் பின்னணியுடன் வாழும் யாழ். மக்களின் மத்தியில் கலாசாரச் சீரழிவுகளை ஏற்படுத்தி எமது சமூகத்தையே அழித்து ஒழிக்க சதி முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

udupi1-259x300.jpg

எனினும் அவற்றை முறியடிப்பதற்கான ஒரு சவாலாகவே கணிதப்பிரிவில் கமலவாசனின் தேசிய சாதனை அமைந்துள்ளது. இது எமது மாணவ,மணிகளுக்கு ஒரு உந்து சக்தியாக அமைந்துள்ளது இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்.

நேற்று முன்தினம் வட்டுக்கோட்டை அராலி தெற்கு சரஸ்வதி மகா வித்தியாலய மண்டபத்தில் அராலி கல்விக் கழக மாணவர்களின் ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றும்போது மேலும் குறிப்பிட்டதாவது:

புகழ் பெற்ற நகரத்துப் பாடசாலைகளில் கற்றால் மட்டுமே சாதனைகளைப் படைக்க முடியும் என்பதில்லை. சாதாரண பாட சாலையில் பயிலும் மாணவர்களினாலும் முடியும் என்பதற்கு முன்னுதாரணமாகவும், உந்துசக்தியாகவும் அமைந்துள்ளது கமலவாசனின் சாதனை.

முப்பது வருட சாத்வீகப் போராட்டம், முப்பது வருட ஆயுதப்போராட்டம் இப்படியான இக்கட்டான சூழலில் அராலி கல்விக்கழகம் முப்பது வருடங்களாக இலவச கல்விப் பணியை ஆற்றியுள்ளதும் ஒரு சாதனைதான்.யாழ். மக்கள் பாரம்பரிய கலாசார பண்பாடுகளுடன் வாழ்பவர் கள். ஆசியாவிலேயே கல்வி வளர்ச்சியில் யாழ். மக்களே முன்னணி வகித்தனர். இதனை மழுங்கடிக்கும் நோக்குடனேயே பல்கலைக்கழக வெட்டுப்புள்ளியும் இன விகிதாசாரமுறையும் கொண்டுவரப்பட்டது. இதன்மூலம் எம்மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு திட்டமிட்டுக் குறைக்கப்பட்டது.

எம்மை, எமது சமூகத்தை திட்டமிட்டே அழித்தொழிக்க திரைமறைவில் பல சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதற்கு நம்மவர்கள் சிலரும் துணை போவதுதான் வேதனை.இந்த வேதனைகளுக்கும் சோதனைகளுக்கும் மத்தியில் உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரி மாணவன் கமலவாசன் உயர்தரப் பரீட்சையில் கணிதப்பிரிவில் தேசிய ரீதியில் முதலாம் இடத்தைப் பிடித்து தேசிய சாதனை படைத்துள்ளார்.

இதேபோன்று யாழ். மாவட்டத்தில் கலைப்பிரிவு, வர்த்தகம், விஞ்ஞானம் என பல துறைகளிலும் பெருமளவு சித்தியடைந்து யாழ். மண்ணுக்குப் பெருமை சேர்த்துள்ளனர். இவை எல்லாம் நமக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளன. எமது இனத்தை அழிக்க எந்தவிதமான சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அவற்றையெல்லாம் எதிர்கொண்டு நாம் இழந்தவற்றை எல்லாம் மீண்டும் பெறமுடியும் என்ற தெம்பு இந்த மாணவனின் சாதனை மூலம் ஏற்படுகின்றது.

கம்பர்மலை தமிழ் வித்தியாலயம் என்ற சிறிய பாடசாலையில் அத்திபாரமிடப்பட்ட கமலவாசனின் கல்விப் பயணம் இன்று தேசிய சாதனையாகப் பரிணமித்துள்ளது.ஏராளமான புத்திஜீவிகள் உருவாகிய அராலி மண்ணில் மேலும் பல வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள் எனப் பல கல்விமான்கள் உருவாகவேண்டுமென வாழ்த்துகிறேன்என்றார்.

இந்த வைபவத்தில் ஜீ.சி.ஈ சாதாரணதரப் பரீட்சையின் பின் வெளியேறும் மாணவர்களுக்கான பிரியாவிடையும், கழகத்தின் ஸ்தாபகரும் இயக்குநருமான வி.சிவஞானபோதனுக்கு பாராட்டும் நன்றி கூறலும் இடம்பெற்றன. வலி. தெற்கு பிரதேச சபைத் தலைவர் திருமதி நா.ஐங்கரனும் இதில் கலந்துகொண்டார்.

http://www.alaikal.com/news/?p=92343

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

கமல வாசனுக்கு பாராட்டுக்கள்

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

கமல வாசனுக்கு பாராட்டுக்கள்! தொடர்ந்தும் படித்து பல சாதனைகளை புரியவேண்டும் என்று வாழ்த்துகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கமலவாசனுக்கு வாழ்த்துகளும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்

வாழ்த்துகளும் பாராட்டுக்களும் கமலவாசன்.......!

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் கமலவாசன்!

தொடர்ந்தும் வளருங்கள்!!!

வாழ்த்துக்கள் கமலவாசன்!

  • கருத்துக்கள உறவுகள்

கமலவாசனுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

Edited by nunavilan

  • தொடங்கியவர்

கமலவாசனின் வெற்றி மற்றைய மாணவர்களுக்கு படிப்பினையாக, வழிகாட்டலாக இருக்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சாதனை படைத்த கமலவாசனுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.