Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் வெற்றி பெற்றுள்ள சீன நிறுவனம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

chi.jpg

கிளிறிசிடியா மரத்தில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஆய்வு இலங்கையில் வெற்றி பெற்றுள்ளதாக சீன நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.

இந்த ஆய்வை மேற்கொண்ட சீனாவின் ஹெனா சக்தி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சினிகியாங் சூ தலைமையிலான அதிகாரிகள் குழு இலங்கைப் பிரதமர் டி.எம்.ஜெயரட்ணவிடம் தனது ஆய்வு அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.

இந்த அறிக்கையில கிளிறிசிடியாவில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வது குறித்த முழுமையான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

கிளிறிசிடியாவில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்றும், சீனாவின் உதவியுடன் வவுனியா, மொனராகல, அம்பாறை, எம்பிலிட்டிய, கண்டி, நுவரெலிய போன்ற இடங்களில் இந்த மின்உற்பத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, வேலிகளுக்கும், கால்நடைத் தீவனமாகவும் இதுவரை பயன்படுத்தப்பட்டு வந்த கிளிறிசிடியா மரம் மின்சார உற்பத்திக்கு பயன்படுத்தப்படவுள்ளதால் கிராம மக்களுக்கு அதிக வருவாயை ஈட்டிக் கொடுக்கும் பயிராக அது மாற்றமடைந்துள்ளது என்று பிரதமர் தெரிவித்துள்ளார். கிளிறிசிடியா மரத்தில் இருந்து பெறப்படும் மின்சாரத்தால் இயற்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனவும், அத்துடன் மிகக்குறைந்தளவிலான முதலீட்டில் அதிக பயனைப் பெற முடியும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

http://www.eelampres.../2012/01/47155/

கிளிறிசிடியா மரத்தில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஆய்வு ...

இந்த மரம் தெரிந்தவர்கள் மேலதிக விபரத்தை இணைத்துவிடவும். நன்றிகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த மரம் தெரிந்தவர்கள் மேலதிக விபரத்தை இணைத்துவிடவும். நன்றிகள்.

எனக்கு தெரியும் என்னிடம் படம் இல்லை ஆனால் யாழ் மாவட்டத்தில் வேலிஓரம் அனேக வீடுகளில் பார்க்கலாம் ஆடு இதின் இலைகளை மிகவும் விரும்பி சாப்பிடும் :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மரம் தெரிந்தவர்கள் மேலதிக விபரத்தை இணைத்துவிடவும். நன்றிகள்.

படம் இணைக்கப் பட்டுள்ளது, அகூதா!

படத்தைக்கண்டதும், உங்கள் நினைவுகள், இரைமீட்சி செய்யும்!

அதன் பின்பு, மேலதிக தகவல்களுக்குத் தேவையிருக்காது!

Gliricidia_sepium_lv.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மரம் தெரிந்தவர்கள் மேலதிக விபரத்தை இணைத்துவிடவும். நன்றிகள்.

எனக்கு தெரியும் என்னிடம் படம் இல்லை ஆனால் யாழ் மாவட்டத்தில் வேலிஓரம் அனேக வீடுகளில் பார்க்கலாம் ஆடு இதின் இலைகளை மிகவும் விரும்பி சாப்பிடும் :icon_mrgreen:

கூகிளில் தேடிய போது கிடைத்த படம்.

நாங்க வளர்த்த ஆடு, பூவரசம் இலை மட்டும் தான் சாப்பிடும் :lol: .

Gliricidia.jpgimages1-150x150.jpg.kiliceriya_001.jpg

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

கூகிளில் தேடிய போது கிடைத்த படம்.

நாங்க வளர்த்த ஆடு, பூவரசம் இலை மட்டும் தான் சாப்பிடும் :lol: .

Gliricidia.jpgimages1-150x150.jpg.kiliceriya_001.jpg

நல்ல நாட்டுப்பற்றுள்ள ஆடு போலக் கிடக்கு, தமிழ் சிறி!

உங்கள் வீட்டு ஆடல்லவா, அது தான்!!!

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் ஒரு 60000 சீனர்களுக்காவது சிறிலங்காவில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என நம்பலாம்.

பலரின் தகவல்களுக்கும் நன்றிகள்.

சீனர்கள் இதை வைத்து இந்தியாவுக்கு ஆப்பு வைக்க நுழைகிறார்களா என எண்ணத்தோன்றுகின்றது

பொதுவாக சக்கரை அதிகமுள்ள மரங்களில் இருந்தே எரிபொருள் சக்தி உருவாக்கப்படுகின்றது. உதாரணத்திற்கு எதனோல் என்பது அதிகளவில் பிரேசில் நாட்டிலும் மேற்குலத்திலும் பயன்படுத்தப்படுகின்றது. அதற்கு சோளன் முதல்கொண்டு கரும்பு போன்ற மரங்கள் பயன்படுப்பத்தப்படுகின்றன.

எனவே ....சந்தேகமாகவே உள்ளது.

சீனா நுரைச்சோலையை அனல் மின்நிலையத்தை ஆரம்பித்து விட்டது. என்ன செலவிலும் இலங்கை அதை பயன் படுத்தும். சீனா என்ன செலவிலும் மீள புதுபிக்க தக்க மின் உற்பத்தியை இலங்கையில் அறிமுகம் செய்யும். இந்த திட்டம் தமிழர்களின் நிலங்களைப்பறித்து மூதூரில் இந்தியா கட்டப் பார்க்கும் அனல் மின் நிலையத்திற்கு சாவுமணி அடிப்பதற்காகவே. நல்ல செய்தி.

Edited by மல்லையூரான்

இப்படி எதோ ஒருகாரணத்தைச் சொல்லி வடபகுதி மண்ணில் நிலைகொள்வது இலகு.

அயல்நாட்டு பிச்சைக்கார ராஜதந்திரிகள் தமது குடும்ப விழாக்களில் மின்சாரத்தை இலகுவாக பெற்றுக்கொள்ளலாம் என்று கனவும் காணலாம்.

பலரின் தகவல்களுக்கும் நன்றிகள்.

சீனர்கள் இதை வைத்து இந்தியாவுக்கு ஆப்பு வைக்க நுழைகிறார்களா என எண்ணத்தோன்றுகின்றது

பொதுவாக சக்கரை அதிகமுள்ள மரங்களில் இருந்தே எரிபொருள் சக்தி உருவாக்கப்படுகின்றது. உதாரணத்திற்கு எதனோல் என்பது அதிகளவில் பிரேசில் நாட்டிலும் மேற்குலத்திலும் பயன்படுத்தப்படுகின்றது. அதற்கு சோளன் முதல்கொண்டு கரும்பு போன்ற மரங்கள் பயன்படுப்பத்தப்படுகின்றன.

எனவே ....சந்தேகமாகவே உள்ளது.

சீமைக்கிழுவை விரைவாக வளரும். தேவையான நைதரசனை தானே பதித்துக் கொள்ளும் பசளை தேவையில்லை. எரியும் போது அதிக வெப்பம் தரும்.

மரப்பகுதிகளை எரித்து வரும் வெப்பத்தில் நீராவி இயந்திர பொறிமுறை மூலம் மின்னை உற்பத்தி செய்வார்களாக்கும். வேறு முறைகள் சாத்தியம் குறைவு.

வெற்றிகரமான புரொஜெக்ட் ????

சீனர்கள் இலாபம் ஒன்றை மட்டுமே இலக்கு வைக்கும் ஆசாமிகள்.

எத்தனை கிலோ வாட் மின்சாரத்தை இல்லை மின்வலுவை இந்த அணுகுமுறையில் வருடத்திற்கு உற்பத்தி செய்யமுடியும்?

இதற்கு எத்தனை மரங்கள் தேவை வருடத்திற்கு? இந்த மரங்கள் மீள நடப்படுமா?

என் தனிப்பட்ட கருத்து, வெறும் பைலட் புரொஜெக்ட் உடன் முடிவடையப் போகின்ற புரொஜெக்ட் இது. இலங்கை போன்ற வளமான அயனமண்டல நாட்டில் வேறு பிரியோசனமான உணவுப் பயிர்களை வளர்ப்பதை விட்டு பெரும் நிலப்பரப்பில் சீமைக்கிளுவையைப் பயிரிட்டு...

அதோடு இப்படியான முறையில் மின் உற்பத்தி வினைத்திறன் உடையதல்ல. இது ஒரு Green முறைதான். ஆனாலும் இவ்வளவு நிலப்பயன்பாட்டிற்கு உரிய Return இல்லை.

அதே நிலத்தை விவசாயத்திற்கு பயன் படுத்தினால் Return பலமடங்கு.

நீராவிப் பொறிமுறை என்றால் குறைந்த முதலீடு போதும். அவ்வளவு தான் சீன முதலீடாக இருக்கும். பெருமளவு பயிரீட்டு நிலம் இலங்கை தான் கொடுக்க வேண்டும். ஆகவே சீனர்கள் பாரத்தை இலங்கையின் தலையில் கட்டி விடுவார்கள்.

மரத்தை வெட்ட மாட்டார்கள். Crop செய்வார்கள். மிக விரைவாக தடிகள் (கதியால்) வளரும்.

நன்றி ஈசன், நல்ல கருத்துக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

இதையா சீமையில் கிளுவை என்று அழைப்பார்கள்?

ஆம்... இந்த மரத்தை சீமைக்கிளுவை, அல்லது மைக்கொண்ணா மரம் என்று அழைப்பார்கள்.

நல்ல நாட்டுப்பற்றுள்ள ஆடு போலக் கிடக்கு, தமிழ் சிறி!

உங்கள் வீட்டு ஆடல்லவா, அது தான்!!!

ஆடு, அப்பவே... வெளிநாட்டு இலைகளை புறக்கணிக்கத் தொடங்கீட்டுது போலை, புங்கையூரான். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கிளிசெறியா மரத்தை திருமலையில் உள்ள நிப்போன் (மிற்சுயி) சீமெந்து தயாரிப்புக்கு பாரியளவில் பயன்படுத்துகின்றது. மற்றும் இம் மரத்தினை கூடுதலாக தோட்ட காணிகளில் பரவலாக நாட்டுகின்றனர் இதற்க்கான காரணம் இதன் மணம் கிருமி தாக்கங்களை கட்டுப்படுத்தவல்லது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆம்... இந்த மரத்தை சீமைக்கிளுவை, அல்லது மைக்கொண்ணா மரம் என்று அழைப்பார்கள்.

ஆடு, அப்பவே... வெளிநாட்டு இலைகளை புறக்கணிக்கத் தொடங்கீட்டுது போலை, புங்கையூரான். :lol:

:lol: :lol: :lol: :lol:

சில விவசாயிகள் இந்த கிளிசரியா (சீமைகிளுவையை) இயற்க்கை உரத்துக்கு நிலத்தில் புதைப்பதுண்டு இது நல்ல பலனை கொடுப்பதாகவும் சொல்வார்கள் ஆக மொத்தத்தில் இது மிகவும் பலன்னுள்ள மரம். இது பெரும்பாலான இடங்களில் தானாக வழரும் ஒரு தாவரம் :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆடு, அப்பவே... வெளிநாட்டு இலைகளை புறக்கணிக்கத் தொடங்கீட்டுது போலை, புங்கையூரான்.

:lol:

சில மனிதருக்கு இல்லாத உணர்வு சிறி வீட்டு ஆட்டுக்கு இருக்கின்றது என்றால் சிறியின் உணர்வை சொல்லவா வேண்டும். :lol: :icon_idea:

goat1.jpg

adukal.jpg

Edited by தமிழரசு

ஆம்... இந்த மரத்தை சீமைக்கிளுவை, அல்லது மைக்கொண்ணா மரம் என்று அழைப்பார்கள்

நன்றி தமிழ்சிறி

:lol:

சில மனிதருக்கு இல்லாத உணர்வு சிறி வீட்டு ஆட்டுக்கு இருக்கின்றது என்றால் சிறியின் உணர்வை சொல்லவா வேண்டும். :lol: :icon_idea:

adukal.jpg

தமிழ் சிறி வீட்டு ஆடுகளா? தென்னை மரதில்லையல்லவா புல் புடுங்க ஏறுவாங்க. இது என்ன மரம். பூவரசா?

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.