Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் மாற்றம்... புலம்பெயர்ந்தவர்களால் நடக்கும்! கவிஞர் சேரனின் பேட்டி

Featured Replies

இலங்கையில் மாற்றம்... புலம்பெயர்ந்தவர்களால் நடக்கும்!: கவிஞர் சேரனின் பேட்டி

ருவருக்கு இரண்டு தாய் இருப்பதற்கான சாத்தியங்களைப் போன்றதுதான் இரண்டு தேசங்கள் இருப்பதும். தொடர்ச்சி யான இலங்கை இனப் படுகொலைகள் இரண்டு தேச சாத்தியம் பெற்ற லட்சோப லட்சம் புலம்பெயர்ந்தோரை உருவாக்கியது. வேரைவிட்டு வெகு தூரம் விலகி விழுந்த விதைகளில் ஒருவராக, இன்று கவிதை விருட்சமாக இருப்பவர் கவிஞர் சேரன். தன் 'காடாற்று’, மற்றும் 'எ செகண்ட் சன் ரைஸ்’ நூல்கள் வெளியீட்டு விழாவுக்காகக் கடந்த வாரம் சென்னை வந்திருந்தார். கனடாவில் விண்சர் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் - மானுடவியல் துறை பேராசிரியராக இருப்பவரிடம், இன்றைய புலம்பெயர்ந்தோர் நிலை குறித்துப் பேசினேன்!

''என் 'காடாற்று’ தொகுதியில் இருக்கும் பெரும்பாலான கவிதைகள் இலங்கையில் நடந்த இனப் படுகொலைகளின் தாக்கத்தின் விளைவாக எழுதப்பட்டவை. அதனால்தான் 'காடாற்று’ என்று பெயரிட்டேன். காடாற்று என்றால்... இறந்துபோனவர்களுக்குச் செய்யும் சடங்கு. இறந்துபோனவர்கள் பற்றிய சோகத்துக்கும் இழப்புக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, ஆக வேண்டிய அடுத்த வேலைகளைப் பார்க்க வேண்டும் என்பதற்கான சடங்கு அது. ஆனால், இலங்கையில் நடந்த படுகொலைகளுக்கு அப்படி காடாற்று செய்ய முடியாது. 'போர் முடிந்துவிட்டது. எல்லாவற்றையும் மறந்துவிட்டு, இனி அடுத்து ஆக வேண்டிய அபிவிருத்தி வேலைகளில் நீங்கள் உங்களை இணைத்துக் p88.jpgகொள்ள வேண்டும்’ என்று அரசு விரும்புகிறது. ஆனால், அது அப்படி இல்லை என்பதுதான் என் கவிதைகளின் மையம்!'' என விரிந்தது அவருடைய உரையாடல்.

''புகலிடச் சூழல் அனுபவங்கள் படைப்பின் செயல்பாடுகளை எப்படி பாதிக்கிறது?''

''தமிழகத்தில் பிறந்து வளர்ந்து, வாழ்ந்து படைக்கிற இலக்கியம் வேறு... 20 வயது வரை ஒரு தேசம், பிறகு இன்னொரு தேசம், இன்னொரு சூழல், இன்னொரு தேசிய கீதம், இன்னொரு நாட்டுடன் விசுவாசம் என்று வாழும் புகலிடத் தமிழர்களின் இலக்கியப் பங்களிப்பு கள் வேறு. அந்த விதத்தில் இது புதிய படைப்பு அனுபவத்தை முன்வைக்கிறது!''

''இலங்கைப் பிரச்னையில் இந்திய அரசு எடுத்த நடவடிக்கை களை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?''

''போர் ஆரம்பமான நாள் முதல் அது முடிவுக்கு வரும் வரை இந்திய அரசின் நேரடியான, மறைமுகமான உதவி இலங்கை அரசாங்கத்துக்கு இருந்தது. இந்திய உதவி இல்லாமல் அந்தப் போரில் அவர்கள் வெற்றி அடைந்ததற்கான சாத்தியங்கள் இல்லை. இலங்கையின் அதிபர் ராஜபக்ஷே, பாதுகாப்பு செயலர் கோத்தபய ராஜபக்ஷே ஆகியோரின் கூற்றுக்களும் இதை உறுதிபடுத்தின. ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையும் அதை தெளிவுபடுத்தியது. ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர் கார்டன் வைஸ், 'கேஜ்’ என்ற தன் நூலில் அதை நேர்மையுடன் பதிவுசெய்ததை, காலச்சுவடு பதிப்பகம் 'கூண்டு’ என்ற தலைப் பில் தமிழில் வெளியிட்டு இருக்கிறது. இதை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதில் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் செயல்பட்டு இருப்பது விளங்கும். எத்தனைஅப்பாவி மனிதர்களை அழித்தேனும் விடுதலைப் புலிகளை ஒழித்துவிட வேண்டும் என்ற அவர்கள் நோக்கம் நிறைவேறிவிட்டது. இந்த உடன்படிக்கையால்தான் உலக நாடுகளும் ஐக்கிய நாடுகள் அமைப்பும் அதைக் கண்டுகொள்ளாமல் இருந்தன.

'இவ்வளவு உயிர் இழப்பு ஏற்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை’ என்று இந்தியாவும் சர்வதேச அமைப்புகளும் யோசிக்கக்கூடும். ஆயினும், போரின் விளைவுகளையும் வழிமுறைகளையும் நியாயப்படுத்துவதற்கான காரணங்களைத் தேடுவதுதான் இந்தியாவின் இப்போதைய நோக்கமாக இருக்கிறது.

அதேபோல், வட கிழக்கு மாகாண மக்களுக்கு உண்மையில் என்ன தேவை என்பதை இவர்களாகவே முடிவு செய்து நடவடிக்கைகள் எடுத்துவருவது தமிழர் களுக்குப் பெரும்பாலும் பயன் அளிப்பதாக இல்லை. இப்போது இந்திய அரசு 50 ஆயிரம் வீடுகள் கட்டித்தருவதாக அறிவித்து உள்ளது. அதிலும்கூட பன்னாட்டு நிறுவனங்களுக்குக் கிடைக்கும் ஆதா யத்தைவிட இலங்கைத் தமிழர்களுக்குக் கிடைக்கும் பலன்கள் மிகக் குறைவு தான்!''

''வீடு கட்டித்தருவதை ஏதோ ஒரு கட்டட நிறுவனம் செய்துதானே ஆகவேண்டும்? அது பன்னாட்டு நிறுவனமாக இருப்பதில் என்ன தவறு?''

அபிவிருத்தித் திட்டங்கள் அந்தப் பிராந்திய மக்களின் நலன்களுக்குப் பாதகம் இல்லாமல் இருக்க வேண்டும் என்பார் அமர்தியா சென். மலைகளைக் குடைந்து கனிமங்களை வெட்டி எடுப்பது நல்லது என்பது பொதுவாக சரியான கருத்துதான். அது அங்கு வாழும் பழங்குடிகளை அப்புறப்படுத்துவதாக இருந்து விடக் கூடாது அல்லவா? சத்தீஸ்கரில் அதுதானே நடக்கிறது? கார்ப்பரேட் நிறுவனங்களிடம் பொது மக்களின் நலனை எதிபார்க்கவே முடியாது.

இலங்கை வட கிழக்குப் பகுதியில் நடைபெறும் பல அபிவிருத்தித் திட்டங் களில் அமெரிக்க, சீன கார்ப்பரேட் நிறுவ னங்கள் அடையும் பொருளாதாரப் பயன்கள்தான் அதிகம். அங்கு அமைக்கப் படும் p88a.jpgகாற்றாலைகள் மலேசியாவில் இருக் கும் சீனர்களின் நிறுவனம். இந்தியாவும், அமெரிக்காவும், சீனாவும், அங்கு நடப்ப தாகச் சொல்லும் பல நலத் திட்டங்களைப் போருக்குப் பிறகு பங்கு போட்டுக்கொண்டு இருக்கின்றன. இவை எல்லாமே அந்த நிறுவனங்களின் நலன்களுக்காகத்தான். மக்கள் நலன் அதில் குறைவாகவே இருக் கும்!''

''லட்சக்கணக்கில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு மீதம் இருப்போர் முள்வேலி சிறையில் அடை பட்டு இருக்கும் இந்தச் சூழலில் தமிழர்களின் அடுத்தகட்ட நடவடிக்கை எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?''

''ஐந்து முக்கிய அம்சங்களைச் சொல்ல வேண்டும்.

1. கடந்த 30 ஆண்டுகளில் நிகழ்ந்த போராட்ட வழிமுறைகள், வெற்றிகள், தோல்விகள் குறித்து, காய்தல் உவத்தல் இல்லாத சுய விமர்சனம் முன்வைக்கப்பட வேண்டும்.

2. இனிவரும் போராட்டம் பன்முகப் பட்ட, பரந்துபட்ட ஜனநாயகத்தை உள்ளடக்கிய அனைத்துத் தரப்பு இலங் கைத் தமிழரையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவரும் அமைப்பாக இருக்க வேண்டும்.

3. இந்தப் போராட்டத்தினால் புலம் பெயர்ந்து இருக்கும் தமிழர்கள், பல்வேறு நாடுகளில் வசித்துவரும் தமிழர்கள், தமிழகத் தமிழர்கள் அனைவரும் 'உணர்வுத் தோழமை’ என்ற அடிப்படையில் ஜனநாயகரீதியில் தோள் கொடுக்க வேண்டும். அது, குறுகிய கட்சி நோக்கில் இல்லாமல், பொதுமக்கள் தளத்தில் அமைய வேண்டும்.

4. சர்வதேச அமைப்புகளான ஐ.நா. போன்றவை மீது நம்பிக்கை நீர்த்துப் போனதால், அந்த அமைப்புகளுக்கு அப்பாற்பட்ட தீர்வுகள் தேவை.

5. இன்றைய புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஒரு தேசம், ஒரு நாடு, ஒரு பாஸ்போர்ட், ஒரு தேசிய கீதம் என்பது மறைந்துவிட்டது. நாடு கடந்த தேசிய அடையாளம் தேவையாக இருக்கிறது. அதை நோக்கிப் பயணிக்க வேண்டி இருக்கிறது.

''நாடு கடந்த தேசிய அடையாளத்தை நோக்கிப் பயணிப்பது என்றால்..?''

''கடந்த வாரத்தில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், ஜெய்ப்பூரில் நடந்த 'நாடு கடந்து வாழும் இந்தியர்களுக்கான ஓட்டுரிமை’ பற்றி பேசியிருக்கிறார். அதுபோன்ற ஓட்டுரிமை புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கும் வாய்க்கும் பட்சத்தில் இலங்கை அதிபர் தேர்தலில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். பொதுவாக இரண்டு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில்தான் அதிபர் தேர்தலில் வெற்றி நிர்ணயிக்கப்படுகிறது. பத்து லட்சம் புலம்பெயர்ந்த தமிழர்கள் இருக்கும் சூழலில் அவர்களுக்கும் ஓட்டுரிமை கிடைக்கும் எனில் மாற்றங்கள் ஏற்படும் என்று நம்புகிறோம்!''

''எலெக்ட்ரானிக் ஓட்டுரிமை சாத்தியமாக எத்தனை காலம் ஆகும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?''

''செல்போன், இணையதளம் மூலம் வாக்கு அளிக்கும் வசதிகள் இந்தியாவிலேயே ஓர் இடத்தில் பரீட்சார்த்தமாக செய்துபார்த்ததாக அறிகிறேன். குறைந்தது ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்குள் இது பரவலாக சாத்தியமாகலாம். வரிசையில் நின்று ஓட்டு அளிப்பதில் மக்களுக்கு இருக்கும் மனச்சோர்வு, அக்கறையின்மை போன்றவை இந்த எலெக்ட்ரானிக் ஓட்டுரிமையைத் துரிதப்படுத்தும். அதனால், வேகமாக இந்த மாற்றம் நிகழ்ந்துவிடும். இங்கிலாந்து போன்ற மேலை நாடுகளில் ஏற்கெனவே இந்த ஓட்டு அளிக்கும் முறை நடைமுறைக்கு வந்துவிட்டது. நாங்கள் கற்பனை செய்துவைத்து இருந்த 'நாடு கடந்த தேசியம்’ சாத்தியமாவதற்கு இதன் மூலம் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறோம்!''

''பிரபாகரன் இருக்கிறார், இல்லை என்று இன்னமும் தெளிவு இல்லாத நிலை இருக்கிறதே?''

''பலரும் பல இடங்களில் இந்தக் கேள்வியைக் கேட்கிறார்கள். இதற்கு ஒரு 'மல்டிபிள் சாய்ஸ் கேள்வி’ மூலமாகப் பதில் சொல்ல விரும்புகிறேன்.

1. பிரபாகரன் இருக்கிறார். திரும்பி வருவார்.

2. இல்லை. அவர் மாவீரர் ஆகிவிட்டார்.

3. காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

4. கனத்த மௌனம்.

5. மேற்கூறிய யாவையும் சரி.

- இந்த பதில்களில் நான் ஐந்தாவது பதிலை டிக் செய்கிறேன்!''

நன்றி விகடன்

புலம்பெயர் சமுதாயம் ஒரு பண / அரசியல் செல்வாக்குள்ள சமுதாயமாக, ஒற்றுமையான சமுதாயகமாக இருக்கும் வரை தமிழீழம் சாத்தியமே.

சேரன் ஒரே கொள்கையில் தொடர்ந்து பயணிப்பவர் பயணித்தவர் அல்ல, ஆனால் அண்மைக்காலமாக தேசியத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருபவர். அந்த மாற்றத்தை பெரிதும் வரவேற்கிறேன்.

அவரின் இந்த பேட்டியும் அவ்வாறே அமைந்துள்ளது. கனடாவில் வசிக்கும் இவர் தனக்கென ஒரு இடத்தை பெரும்பான்மை சமூக ஊடகத்துறையிலும் பிடித்துள்ளார். அதனையும் எமக்காக பாவித்து வருகிறார். அண்மையில் ஒரு ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஊடாக எமக்காக குரல் கொடுக்கும் அம்மையார், பேராசிரியர் ஒருவர், இவரின் மனைவி எனத்தெரிந்தது, அவர் யூத பெண்மணி என எண்ணுகிறேன். அதுவும் எமக்கு உதவும் :D

Edited by akootha

  • தொடங்கியவர்

சேரன் ஒரே கொள்கையில் தொடர்ந்து பயணிப்பவர் அல்ல

இதன் அர்த்தம் என்ன?

Edited by நிழலி

இதன் அர்த்தம் என்ன?

முதலில் 'பயணித்தவர்' என்பதற்கு பதிலாக 'பயணிப்பவர்' என தவறாக எழுதிவிட்டேன்.

அடுத்து, இவரின் கருத்துக்களில் முக்கியமான மாற்றமாக இன்றைய கால கட்டத்தில் ' தமிழர்கள் சிங்கவர்களுடன் ஒரே நாடு என்ற கூரைக்குள் வாழ முடியாது' என திட்டவட்டமாக கனடா உட்பட சர்வதேச அளவில் கூறிவருகிறார். முள்ளிவாய்க்கால் காலகட்டத்தில் பல தொலைக்காட்சிகள், பத்திரிகைகளுக்கு இவ்வாறு கூறினார், கூறி வருகிறார். இது வரவேற்கப்பட வேண்டியதும் ஆதரவு தரப்பட வேண்டியதும்.

ஆனால், 2006 க்கு முன்னைய கால கட்டத்தில் இதே மாதிரியான வெளிப்படையான கொள்கையை இவர் கொண்டிருக்கவில்லை என்பது எனது கருத்து. பல சர்வதேச நாடுகள் போல விடுதலைப்புலிகளே ஒரு நியாமான தீர்வுக்கு தடையாக இருக்கின்றார்கள் என்பது போன்ற கருத்துக்களை கூறி வந்திருக்கின்றார். சிங்களம் ஒரு தீர்வை தரும் என்பதை நம்பியதுடன், அது ஆயிரக்கணக்கில் எமது மக்களை கொன்று குவித்து பின்னர் மெல்ல மெல்ல அழிக்கும் என்பதை முன்கூட்டியே உணர தவறிவிட்டார்.

  • தொடங்கியவர்

முதலில் 'பயணித்தவர்' என்பதற்கு பதிலாக 'பயணிப்பவர்' என தவறாக எழுதிவிட்டேன்.

அடுத்து, இவரின் கருத்துக்களில் முக்கியமான மாற்றமாக இன்றைய கால கட்டத்தில் ' தமிழர்கள் சிங்கவர்களுடன் ஒரே நாடு என்ற கூரைக்குள் வாழ முடியாது' என திட்டவட்டமாக கனடா உட்பட சர்வதேச அளவில் கூறிவருகிறார். முள்ளிவாய்க்கால் காலகட்டத்தில் பல தொலைக்காட்சிகள், பத்திரிகைகளுக்கு இவ்வாறு கூறினார், கூறி வருகிறார். இது வரவேற்கப்பட வேண்டியதும் ஆதரவு தரப்பட வேண்டியதும்.

ஆனால், 2006 க்கு முன்னைய கால கட்டத்தில் இதே மாதிரியான வெளிப்படையான கொள்கையை இவர் கொண்டிருக்கவில்லை என்பது எனது கருத்து. பல சர்வதேச நாடுகள் போல விடுதலைப்புலிகளே ஒரு நியாமான தீர்வுக்கு தடையாக இருக்கின்றார்கள் என்பது போன்ற கருத்துக்களை கூறி வந்திருக்கின்றார். சிங்களம் ஒரு தீர்வை தரும் என்பதை நம்பியதுடன், அது ஆயிரக்கணக்கில் எமது மக்களை கொன்று குவித்து பின்னர் மெல்ல மெல்ல அழிக்கும் என்பதை முன்கூட்டியே உணர தவறிவிட்டார்.

நான் சேரனது குரலாக இருக்க முடியாது; அவரைப் பற்றிய கேள்விகளுக்கு அவரே பதில் சொல்ல முடியும்

ஆனால் எனக்குத் தெரிந்து, சேரன் என்றும் சிங்கள அரசிற்கு சார்பாகவோ அல்லது இந்திய அரசிற்கு சார்பாகவோ ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. தமிழ் மக்களின் விடுதலை பற்றி, அவரின் மொழியில் சொன்னால் 'காய்தல் உவத்தல்' இன்றி அவர் வெளியிட்ட பல விமர்சனங்கள் புலிகளின் பாசிசப் போக்கை கேள்விக்குட்படுத்தின

2002 இற்கும் 2005 இற்கும் இடைப்பட்ட காலத்தில் மேற்கின் அனுசரணையுடன் நடந்த சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் ஒரு குறைந்த பட்ச தீர்வு வரும் என்று நம்பியவர் போன்றே அவரின் பல பதில்கள் இருந்தன. ஆனால், 2005 இன் பின்னான காலத்தில் அது கானலாகி போய்விட்டது என்ற மாதிரி பதில் சொல்லி இருந்தார் (...ஒரு பேட்டியை யாழில் போட்ட நினைவு)

2002 இன் பின்னான சமாதானக் காலத்தினை அக்கு வேறு ஆணி வேறாக அலசியவர்கள் யாரும் இன்று இப்படியான ஒரு பெரும் தோல்வியும் அவலமும் நிறைந்த ஒரு முடிவை எதிர்பார்க்கவில்லை. எல்லாரும் ஒரு தீர்வு வரும் என்று நம்பவில்லை என்றாலும் புலிகளும் எம் போராட்டமும் இப்படியொரு முடிவை அடையும் என்று கனவிலும் நினைத்து இருக்கவில்லை...இதில் சேரன், நீங்கள், நான் என எல்லாரும் அடங்கும்

2002 இன் பின்னான சமாதானக் காலத்தினை அக்கு வேறு ஆணி வேறாக அலசியவர்கள் யாரும் இன்று இப்படியான ஒரு பெரும் தோல்வியும் அவலமும் நிறைந்த ஒரு முடிவை எதிர்பார்க்கவில்லை. எல்லாரும் ஒரு தீர்வு வரும் என்று நம்பவில்லை என்றாலும் புலிகளும் எம் போராட்டமும் இப்படியொரு முடிவை அடையும் என்று கனவிலும் நினைத்து இருக்கவில்லை...இதில் சேரன், நீங்கள், நான் என எல்லாரும் அடங்கும்

சமாதான காலத்தில் புலிகள் மீது தடை விதிக்கப்பட்ட பொழுது, கனடா உட்பட, அன்றைய புலிகளின் தலைமைகள் புலம்பெயர் புத்திசீவிகளை அதற்கெதிராக பரப்புரையையும் கொள்கை முன்னெடுப்பையும், அத்துடன் எமது பக்க நியாயத்தையும் சிங்களத்தின் கொடூர முகத்தையும் பற்றி கூற கேட்டனர். சிலர் அதில் முயன்றாலும், பலரும் 'புலிகளை ஆயுத ரீதியாக அழிக்க முடியாது' என்பதில் நம்பிக்கை வைத்தோ என்னவோ மௌனமாக இருந்துவிட்டனர்.

ஆனால், போராட்டம் முடியவில்லை. புலிகளில் தொடங்கவும் இல்லை புலிகளுடன் முடியவும் இல்லை.

அடுத்த கட்டத்திற்கு நகரவேண்டும். அந்தவகையில் எல்லோரையும் அரவணைத்து பயணிப்போம்.

  • தொடங்கியவர்

.

ஆனால், போராட்டம் முடியவில்லை. புலிகளில் தொடங்கவும் இல்லை புலிகளுடன் முடியவும் இல்லை.

அருமை....

நாம் புலிகளை முதன்மை படுத்தி கொண்டு செய்த போராட்டத்தின் அனைத்து தவறுகளையும் திறந்த வெளியில் நேர்மையாக விமர்சனம் செய்து, அதில் இருந்து பாடம் கற்று..................

தமிழீழம் சாத்தியமோ இல்லையோ எங்களால் ஒரு தற்காப்பு தீர்வை தாயகத்தில் ஏற்படுத்தி கொடுக்க முடியும்.. முதலில் அதற்கு உழைப்போம்

''லட்சக்கணக்கில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு மீதம் இருப்போர் முள்வேலி சிறையில் அடை பட்டு இருக்கும் இந்தச் சூழலில் தமிழர்களின் அடுத்தகட்ட நடவடிக்கை எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?''

''ஐந்து முக்கிய அம்சங்களைச் சொல்ல வேண்டும்.

1. கடந்த 30 ஆண்டுகளில் நிகழ்ந்த போராட்ட வழிமுறைகள், வெற்றிகள், தோல்விகள் குறித்து, காய்தல் உவத்தல் இல்லாத சுய விமர்சனம் முன்வைக்கப்பட வேண்டும்.

2. இனிவரும் போராட்டம் பன்முகப் பட்ட, பரந்துபட்ட ஜனநாயகத்தை உள்ளடக்கிய அனைத்துத் தரப்பு இலங் கைத் தமிழரையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவரும் அமைப்பாக இருக்க வேண்டும்.

3. இந்தப் போராட்டத்தினால் புலம் பெயர்ந்து இருக்கும் தமிழர்கள், பல்வேறு நாடுகளில் வசித்துவரும் தமிழர்கள், தமிழகத் தமிழர்கள் அனைவரும் 'உணர்வுத் தோழமை’ என்ற அடிப்படையில் ஜனநாயகரீதியில் தோள் கொடுக்க வேண்டும். அது, குறுகிய கட்சி நோக்கில் இல்லாமல், பொதுமக்கள் தளத்தில் அமைய வேண்டும்.

4. சர்வதேச அமைப்புகளான ஐ.நா. போன்றவை மீது நம்பிக்கை நீர்த்துப் போனதால், அந்த அமைப்புகளுக்கு அப்பாற்பட்ட தீர்வுகள் தேவை.

5. இன்றைய புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஒரு தேசம், ஒரு நாடு, ஒரு பாஸ்போர்ட், ஒரு தேசிய கீதம் என்பது மறைந்துவிட்டது. நாடு கடந்த தேசிய அடையாளம் தேவையாக இருக்கிறது. அதை நோக்கிப் பயணிக்க வேண்டி இருக்கிறது.

இப்படியான ஒரு நிலைப்பாட்டை தமிழன் எடுக்காதவரை விடிவு கிட்டாது .

  • கருத்துக்கள உறவுகள்

இதில் புலம் பெயர்ந்த தமிழரைப்பற்றி மட்டும்தான் அவர் தீர்வு சொல்கிறார். தாயகம் பற்றி இல்லையே???

‘In ravaged times, poets become the voice of the voiceless’ - R Cheran

A lot of your literature deals with the Sri Lankan Tamil experience. In places caught in ethnic conflicts, we witnesses destruction of cultural identity. In this context, how do you position your work?

My first collection of poetry was titled The Second Sunrise in English. It was written in 1981 after the burning of the Jaffna public library. When I look back, I am reminded of a saying by a German writer and intellectual: “First you burn books, then you end up burning human beings.”

That's very pertinent to what you're asking. I was very close to that library. Every Saturday my father would take us to the library. I would spend 4-5 hours there. I was a young university student in Jaffna at the time of the burning. We couldn't go to the library when it was being burnt but we went the next day. We saw a large number of Sri Lankan soldiers and other agents of the state stationed next to it in a huge stadium. They were laughing and mocking us. That is my very first memory of the library being burnt.

My poem was symbolic. It simply depicts the burning of the library as the second rise, which is unimaginably ironic, right? It’s a second sunrise in the sense that the Tamils were about to resist the cultural genocide. And this was the time when various Tamil militant movements emerged.

In the past 30 years, there has been a systematic attempt by the state of Sri Lanka to ethnically cleanse and culturally subjugate the entire Tamil population. And the culmination of that particular project, ethnic cleansing and pogrom, is the May 2009 genocide of Tamils.

How does your work counter this narrative of cultural genocide?

Well in one sense, in the past 30 years, my eight collections of poetry have been a witness to the ongoing resistance of the Tamils and the genocidal massacres of the Tamils by the Sri Lankan state. So in that sense I became a witness to that history. My witnessing is not just as a historian or an archaeologist or a social scientist. It’s the poet as the witness, which involves a different kind of sensibility. It’s a different kind of imagination that is involved in this particular kind of being a witness, which you can very clearly see in my work.

A lot of poetry that comes out of conflict spaces often tends to be primarily valued as a sociological document. Does its value then, as a craft for the literary devices, run the risk of going unnoticed?

That’s an interesting observation… I would like to mention that the cultural theorist Leo Lowenthal who said that historians, social scientists and sociologists should be prevented or banned from using poetry as raw material for their works. But on the other hand, when public intellectuals like journalists, politicians and academicians are silent to this kind of genocide or ethnic cleansing, the poets step in and articulate a particular kind of resistance. That shouldn't be the primary work of a poet. However, in the absence of all other voices of resistance, in the absence of counter narratives, sometimes it happens that the poets become the voice of the voiceless.

The second point is that, it is not that the poetry I wrote or the ones that my colleagues wrote were simply agitprop poetry. It’s not ‘kavitai koshum’ (sloganeering poetry) as we say in Tamil. But rather this is a different kind of poetry with a different sensibility and speaks to a particular kind of nuance at times of conflict, war, disappearances and genocide. The particular poetic movement that emerged in the north east of Sri Lanka in Tamil greatly impacted the Tamil poetry in Tamil Nadu and in various other parts of the world. When my poetry was translated to Kannada, some of the key Kannada literary critics and poets felt that the poetry from north eastern Sri Lanka had an organic combination of poetry, protest, resistance and aesthetics that was unique. So that is what I think differentiates the kind of poetry that I wrote and my colleagues wrote. That's a very important distinction. We can't simply say that this is a kind of poetry that witnesses an agony and resistance but there is more to it.

Bhamati Sivapalan is a Video Correspondent with Tehelka.com.

bhamati@tehelka.com

http://www.tehelka.c...40112JLF_II.asp

Edited by akootha

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செந்தமிழன் சீமான் பெயரை உச்சரிக்கும் தகுதி இல்லாதவர் எழுத்தாளர் சேரன்! -தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தொடக்க காலம் தொட்டு இன்று வரை சேரன் ஒரு குழப்ப வாதியாகவும் தன் அங்கீகாரத்திற்காக எதிரிக்குத் தெரிந்தோ தெரியாமலோ இருப்பதை காட்டிக் கொடுப்பவராகவுமே இருந்து வருகின்றார்.

நீண்ட காலமாக விடுதலைப் புலி எதிர்ப்பாளராகத் தன்னை அடையாளம் காட்டிக் கொண்ட சேரன் முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்ட பின்னடைவுக்குப் பின்னர் தன்னை ஒரு தமிழ்த் தேசியவாதியாக காட்ட முனைந்தார். ஆனால் மீண்டும் அவர் தமிழின எதிர்ப்புக் கூடாரத்தின் செல்லப்பிள்ளையாகி விட்டதை அவரது அண்மைக் கால பேச்சுக்கள் எடுத்துக் காட்டுகின்றன.

"அறம் சார்ந்து காலசுவடிற்கு எதிரான போராட்டம் செய்தவர்களை எழுபதுகளில் அமிர்த்தலிங்கதிடம் மைக்கை பிடிங்கியவர்களிடம் இருந்த வெறியை கண்டேன். மலையாளிகள் தமிழர்களைத் தாக்கினால் திருப்பி தாக்குவதை தவிர வேறு வழி இல்லை"என்று சீமான் கூறியதை சிங்கள அமைச்சர் பேசுவதைப் போல் இருக்கிறது என்று பாமரன் புத்தக வெளியீட்டு விழாவில் சேரன் பேசியுள்ளார்.

தமிழ்த் தேசியத்தை உளமார நேசிக்கிற ஒவ்வொரு தமிழனுக்கும் சீமானையோ அன்றி மே-17 இயக்கத்தினரையோ விமர்சிக்கும் தகுதியும் உரித்தும் இருக்கிறது. ஆனால் இந்திய உளவுநிறுவனத்துக்குத் தமிழினத்தைக் காட்டிக் கொடுக்கும் தமிழ்நாட்டுக் கிளையாக இயங்கிக்கொண்டு இருக்கின்ற 'காலச்சுவடு' என்ற மலையாளப் பார்பானியக் கூடாரத்தில் உட்காந்து இருப்பவர்களுக்கு அந்தத் தகதியோ உரிமையோ இல்லை.

கடந்த 15 ஆண்டுகளாக வெளிப்படையாகவும் பின்தளம் சார்ந்தும் தமிழ்த் தேசியத்தை முன்னிலைப் படுத்தியும் தமிழீழ விடுலைப் போராட்டத்துக்குத் தனது பேச்சாலும் எழுத்தாலும் மூச்சாலும் வலிமை சேர்த்து வருபவர் செந்தமிழன் சீமான். அவர் ஒரு ஒடுக்கப்பட்ட இனத்தின் விடுதலைக்காகப் போராடும் போராளி. பலமுறை சிறை சென்றிருக்கிளார்.மலையாளிகள் தாக்கினால் தற்காப்புக்காக அவர்களை எதிர்த்துத் தாக்குவது இனவாதம் ஆகாது. தமிழர்கள் தாக்காத போதும் தாக்கும் சிங்கள ஆட்சியோடு அதனை ஒப்பிடுவது சிறுபிள்ளைத்தனமானது.

மகாவம்ச மேலாண்மைச் சிந்தனையில் மூழ்கித் தமிழர்களை அடக்கி ஒடுக்கி கொடுங்கோலாட்சி நடத்தும் சிங்கள ஆட்சியாளர்களோடு செந்தமிழன் சீமானை ஒப்பிட்டுப் பேசுவது அறியாமை ஆகும். முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் சிறிலங்கா அரசு தீவிர இனச் சுத்திகரிப்பில் ஈடுபட்டுள்ளது. தமிழர்களது காணிகள் கையகப்படுத்தப்பட்டு அங்கு திட்டமிட்ட முறையில் சிங்களவர்கள் குடியேற்றப்படுகிறார்கள். தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளில் பாரிய படைத் தளங்கள், படைக் குடியிருப்புக்கள், படை முகாம்கள், பவுத்த விகாரைகள், புத்தர் சிலைகள் கட்டியெழுப்பப்பட்டு வருகின்றன.

தமிழ் நாட்டில் தமிழின எதிர்ப்பு என்பது காலச்சுவடு என்ற பார்ப்பனக் கூட்டத்தின் எழுதாத வேதமாக இருந்து வருகிறது. தமிழீழப் போராட்டம் என்றாலே பயங்கரவாதிகளின் போராட்டம் என்று காலச்சுவடு கொச்சைப்படுத்தி வந்திருக்கிறது. அதில் தமிழ் நாட்டுப் பார்பனீயத்தின் இராசகுரு துக்ளக் சோ, சுப்பிரமணியன் சுவாமி, இந்து இராம் போன்றவர்கள் வெளிப்படையாகத் தெரிந்த முகங்கள்.சேரன் கடந்த 2001 ஆண்டிலும் இதே காலச்சுவடு கூடாரத்துடன் சேர்ந்து தமிழீழத் தேசியக் கவிஞரான உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களைத் தாக்கியமை இங்கு நினைவு கூரத்தக்கது

சேரன் குறித்து மக்களை விழிப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

-தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.