Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய படை வீரர்களின் நினைவிடத்தில் அப்துல்கலாம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் இந்திய அமைதிப்படை வீரர்களின்

நினைவிடத்தில் அப்துல்கலாம் அஞ்சலி.

kalam%20srilanka%201.jpg

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கே அவர், இந்திய அமைதிப் படை வீரர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

இலங்கையின் மும்மொழித் திட்டத் துவக்க விழாவிலும் கலந்து கொண்டார்.

இலங்கை நாட்டவர் அனைவரும், மூன்று மொழிகளையும் கற்றுக் கொள்ளும் நோக்கில், தமிழ், சிங்களம், ஆங்கிலம் என்ற மும்மொழித் திட்டம், கொழும்பில் உள்ள அதிபர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், தனது உரையில், இத்திட்டத்தை அப்துல் கலாம் வரவேற்றுப் பேசினார்.

பின், பண்டார நாயக்க சர்வதேச ஆய்வு மையத்தில் உரையாற்றினார்.

இதையடுத்து, கொழும்பின் புறநகர்ப் பகுதியில் உள்ள இந்திய அமைதிப் படை வீரர்களின் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்.

kalam%20srilanka%202.jpg

அங்கு அஞ்சலி செலுத்திய முதல் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

kalam%20srilanka%203.jpg

நன்றி நக்கீரன்.

போரின் ஞாபகார்த்தமாக உள்ல, எல்லா நினைவிடங்களையும் புல்டோசர் வைத்து அழிக்கும் போது, இதனை ஏன் விட்டு வைத்திருக்கிறார்கள்.

அல்லது, இவர்கள் தற்கொலை செய்து கொண்ட வீரர்களா?

Edited by தமிழ் சிறி

சிங்கள - கிந்திய நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் காலம் அவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளார். அதை மாற்றும் நிலையில் நாம் இல்லை.

இருந்தாலும் எமது தாயக சமுதாயம் இவரின் வாழ்க்கையில் இருந்து, குறிப்பாக மாணவ சமூகம், தாமும் படித்து முன்னேற வேண்டும் என்ற பாடத்தை கற்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இருந்தாலும் எமது தாயக சமுதாயம் இவரின் வாழ்க்கையில் இருந்து, குறிப்பாக மாணவ சமூகம், தாமும் படித்து முன்னேற வேண்டும் என்ற பாடத்தை கற்கவேண்டும்.

இந்த விடயத்தில் எமது சமுதாயம் பின் நின்டதில்லை...

“எனது தேசத்தின் காவலர்களே! நீங்கள் கடல்கடந்து தேசங்களைப் பாதுகாத்தீர்கள், நீங்கள் எமது தேசத்தின் மிகப்பெரிய புதல்வர்கள். உங்களுக்காக பிரார்த்திகின்றோம்.“ - இலங்கையில் உள்ள இந்திய ராணுவ நினைவிடத்தில் அப்துல்கலாம் எழுதிய நினைவுக் குறிப்பு

“எனது தேசத்தின் காவலர்களே! நீங்கள் கடல்கடந்து தேசங்களைப் பாதுகாத்தீர்கள், நீங்கள் எமது தேசத்தின் மிகப்பெரிய புதல்வர்கள். உங்களுக்காக பிரார்த்திகின்றோம்.“ - இலங்கையில் உள்ள இந்திய ராணுவ நினைவிடத்தில் அப்துல்கலாம் எழுதிய நினைவுக் குறிப்பு

சரியான பைத்தியகாரன் படித்தும் அறிவில்லாதவன். எத்தனை தன் இனமக்களை கொன்றார்கள் எனபதை கலாம் அறியவில்லை போலும் சிலவேளை முஸ்லீம்களை கொல்லவில்லை இந்தியன் ஆமி கொன்றது இந்துக்கள்,கிறிஸ்தவ்ர்கள் என்பதால் கலாம் தனது நாட்டு ஆமியை இப்படி புகழ்ந்து இருக்கலாம்,

தமிழ் என்று சொல்வதில் கலாம் உமக்கும் வெட்கம்,தமிழுக்கும் வெட்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

கலாம் அரசியல் சார்ந்து நல்ல மனிதரல்ல. அறிவியல் சார்ந்தும்.. அவரின் சில கண்டுபிடிப்புக்கள் மனித குலத்திற்கு ஆபத்தை உண்டு பண்ணுவதாக உள்ளதே அன்றி தமிழகளுக்கு ஒன்றும் உதவப் போறதில்லை. அவர் ஹிந்திய மேலாதிக்க சக்திகளின் எடுபிடி. அவரிடம் மனித நீதி என்பதற்கு இடமில்லை..!

அதைவிட அவரிடம் தமிழ் தேசிய உணர்வை.. தமிழன் என்ற உணர்வை எதிர்பார்க்கும் நாமே முட்டாள்கள். ஆனால் கலாம் உணரும் வகையில் எமக்குள் இருக்கும் தமிழ் தேசிய உணர்வை.. இந்திய மேலாதிக்க எதிர்ப்புணர்வை.. சிங்கள பெளத்த பேரின மேலாதிக்கத்திடம் இருந்து விடுதலை வாங்க நிற்கும் எங்கள் உணர்வை புரிய வைக்க இந்தச் சந்தர்ப்பத்தை பாவிக்கலாம்.

புரிந்து கொள்வதும் விடுவதும் அவரின் பொறுப்பு..! :icon_idea:

Edited by nedukkalapoovan

கலாம் யாரு? இவர் ஒரு இந்திய அணு விஞ்ஞானி. இவரால் தமிழருக்கு என்ன லாபம்? குறிப்பா ஈழ தமிழருக்கு என்ன லாபம்?? ஒண்டுமே இல்ல. சாதாரண இந்திய அரசியல் வாதி தான் . இவரால் இறுதி யுத்தத்தை நிறுத்த முடிஞ்சுதா? இல்லை இறந்த பொது மக்களுக்கு கண்ணீர் தன் விட்டாரா? இந்திய ராணுவத்தால் இலங்கையில் படு கொலை செய்யப்பட்ட பொது மக்களுக்கோ இல்லை கற்பழிக்கபட்ட பெண்களுக்கோ அனுதாபம் தெரிவித்தாரா? இல்லா யாழ் வையித்திய சாலை படுகொலை நிறைவு சின்னதிட்கு என்றாலும் போனாரா ?? எப்பிடி பாகிஸ்தான், ஈரான் அணு விஞ்ஞானிகளால் எமக்கு பிரயோசனம் இல்லையோ அது போலவே இந்திய அணு விஞ்ஞானி யாலும் எமக்குஒன்றும் ஆக போவதில்லை. இவர் இந்தியாவிற்கு தான் பெரிய ஆள். இவர் பாகிஸ்தான் போனா மாலை போடுவாங்களா?? இல்லை போட்டு தள்ளுவான்கள் . இவர் எமக்கு இன்னொரு சனி . இந்திய கலைஞர்களை இலங்கை செல்ல விடாமல் தடுத்த எமக்கு சிங்களவனும் கிண்டியனும் வைக்கும் ஆப்பு இது.

ஒரு இனத்தின் கலாச்சாரம் பிரதானமாக பெண்களின் உற்சாக முன்னெடுப்புகளால்தான் காக்கப்படுவது. ஒரு இனத்தின் ஒட்டுமொத்த பெண்குலத்தையே அழித்து கலாச்சாரத்தை சீரழிக்க முயல்கிறது இலங்கை அரசு. அதன் பாகமாக உதய காலத்தில் தமிழ் இந்துகளின் இறைவனுக்கு பொங்கி படைக்கும் நம்பிக்கையையும், பண்பாட்டையிம் புண்படுத்துவதற்காக தனி ஒரு மனிதனை முன் வைத்து தமிழரின் நம்பிக்கையைச் சிதைத்து, அவர்களின் இறை வழி பாட்டை பின் தள்ளி கொச்சைப்படுத்திப், பொங்கலை அந்தியில் பொங்கியது சிங்கள அரசு. கன்னட மந்திரிக்கு விலாசம் காட்டவென்றால் இலங்கை அரசு இப்படி ஒரு கன்னட பண்பாட்டை சிதைத்திருக்கது. அப்படி செய்திருந்தால் கன்னட மந்திரியும் ராசபக்சா பண்பின் சிகரம் என்று வர்ணிக்க போயிருகார். கன்னட மந்திரியும் சிங்கள அர்சும் சேர்ந்து தமிழரின் பண்பாட்டை சிதைத்து ஒரு வாரகாலமாக்வில்லை. மீண்டும் அவர்கள் தங்கள் கை வரிசையை காட்டுகிறார்கள்.

தமிழனை வைத்தே தமிழனை அழிப்பேன் என்று சூழ் உரைத்தவர் தான் மகிந்தா. அதை நிறைவேற்றத்தான் இந்த அறிவில்லாத அறிவியல் மேதையை இலங்கைக்கு கொண்டுவந்தவர்கள். அதனால்த்தான் இந்த அறிவில்லாத மேதையான தமிழனின் கையால் தமிழனின் அழிவு நினவுகளுக்கு மலரிட்டு வணக்கம் செலுத்த வைத்தார்கள் . இவர் தமிழீழ மக்களின் மீதான இந்திய ஆக்கிரமிப்பின் பிரதிநியாக வந்து கிந்திய இராணுவம் செய்த அழிவுகளை திரும்பவும் ஒரு தடவை தமிழ் மக்களுக்கு நினைவூட்டி அவர்களை வேதனைப்படுத்துகிறார். இந்த கிந்திய இராணுவம் இதுவரையில் சர்வதேச நியமங்களுக்கமைய எவருக்கும் நட்ட ஈடு எதுவும் வழங்கவுமில்லை. மன்னிப்பு கேட்கவுமில்லை. அப்துல் கலாம் தான் தமிழனாக பிறந்து வளந்திருக்கிறார் என்று எபோதாவது நினைத்தால் தமிழ மண்ணை விட்டு விலகமுன் தன் தனிப்பட்ட முறையிலாவது கிந்திய இராணுவத்தால் கொல்லப்பட்டோரின் உறவினரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்

Edited by மல்லையூரான்

இத்தால் சகலருக்கும் தெரிவிப்பது யாதெனில்.........

இந்திய ராணுவத்துக்காக நிறுவப்பட்ட நினைவுத்தூபி முன்னர் இறந்த ராணுவத்தினருக்காக அமைக்கபட்டது என்றால் அது பொய்.உண்மையில் குள அணைக்கட்டு உடைப்பில் இறந்தவர்களுக்காக அமைக்கப்பட்டது என்பது தான் உண்மை.

கொழும்பில் இந்திய அமைதிப்படை வீரர்களின்

நினைவிடத்தில் அப்துல்கலாம் அஞ்சலி.

செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 29, 2008

IPKF3-250_29042008.jpg

டெல்லி: இந்திய அமைதி காக்கும் படைக்கு இலங்கை நாடாளுமன்றம் அருகே நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

20 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய-இலங்கை அமைதி ஒப்பந்தத்தின் கீழ் இந்திய அமைதி காக்கும் படை, இலங்கைக்கு அனுப்பப்பட்டது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள் நிராகரித்து விட்டதால், அவர்களுக்கும், இந்தியப் படையினருக்கும் இடையே போர் மூண்டது. இதில் இந்தியப் படைக்கு கணிசமான பாதிப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து இந்தியப் படையினர் திரும்பப் பெறப்பட்டனர். இந்த நிலையில், இந்திய அமைதி காக்கும் படையினருக்கு இலங்கை நாடாளுமன்றம் அருகே நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. நினைவிடம் அமைக்கும் பணி கிட்டத்தட்ட முடிந்து விட்டது. இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.

இந்த நினைவிடத்தில் இந்திய அமைதி காக்கும் படையைச் சேர்ந்த 1,500 வீரர்களின் பெயர்களும் பொறிக்கப்படவுள்ளன.

மே 22ம் தேதி இந்த நினைவிடம் திறந்து வைக்கப்படும். அல்லது கொழும்பில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டில் பங்கேற்க வரும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இந்த நினைவிடத்தைத் திறந்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

1987ம் ஆண்டு ஜூலை மாதம் இந்திய அமைதி காக்கும் படை இலங்கைக்கு சென்றது. அந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியப் படைகளுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே சண்டை மூண்டது. இதில் இந்தியப் படையைச் சேர்ந்த 1,200 பேர் உயிரிழந்தனர். 2,800 பேர் படுகாயமடைந்தனர். பலருக்கு கை, கால் போன்ற உறுப்புகள் துண்டிக்கப்பட்டன. 1990ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியப் படை இலங்கையை விட்டு வெளியேறியது.

இந்திய அமைதி காக்கும் படையினருக்கான நினைவிடத்தில் அசோக சக்கரம் பொறிக்கப்பட்டுள்ளது.

http://tamil.oneindia.in/news/2008/04/29/india-sri-lanka-to-build-memorial-to-ipkf.html

Edited by மல்லையூரான்

இத்தால் சகலருக்கும் தெரிவிப்பது யாதெனில்.........

இந்திய ராணுவத்துக்காக நிறுவப்பட்ட நினைவுத்தூபி முன்னர் இறந்த ராணுவத்தினருக்காக அமைக்கபட்டது என்றால் அது பொய்.உண்மையில் குள அணைக்கட்டு உடைப்பில் இறந்தவர்களுக்காக அமைக்கப்பட்டது என்பது தான் உண்மை.

:D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

நினைவிடம் என்று சொல்லுறீங்கள்.. ஆனால் அவர் ஒரு மரத்துக்கு தண்ணி ஊத்துறார்..! :rolleyes: போன கிழமை நட்டு இந்தக்கிழமை பம்மாத்துக் காட்டுறாங்களோ தெரியாது..! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆள் படிச்சதும் ஸ்கோலர்சிப்பு விஞ்சானியா ஆனதும் ஸ்கோலர்சிப்பு .. அப்புறம் கிந்திய அரசிற்கு விசுவாசமா எப்படி இல்லாது இருப்பார்..? அது போகட்டும் ஏதோ எதாவது கல்லுரியில் பேச அழைத்தால் பேட்டா காசு +பென்சன் காசில் இவரது வண்டி ஓடுகிறது.. அதை விட கூட ஒரு படி மேலே கொடுத்தால்தானே இவரை கவர் செய்யமுடியும்..? அங்க இருந்திட்டு இங்க சும்மா வந்துட்டார் வந்துட்டாரென கூவுவதால் பயன் இல்லை.. நாலுமுறை தமிழ்சங்க மாநாடு அது இது என்று வெளிநாட்டுக்கு அழைத்து வந்து உள்ள நிலமை விளக்கி ஒரு போட்டோ சூட் நடத்தி இருந்தால் மனிதர் போயிருக்கவே மாட்டார்.. சினிமா காரிகளை அழைத்து வருவதிலும் இது பெட்டர். அடுத்த டார்கெட்டு எனக்கு தெரிந்து தோட்டகலை நிபுணர் சுவாமிநாதனோ எந்த நாதனோ மற்றும் இயற்கை விஞ்சானி நம்மாழ்வார்..போலீஸ் விஜயகுமார்(இவர் செத்த பொணத்தை சுடுவதில் வல்லவர் (வீரப்பன்)) . இந்த மாதிரி அரசியல் சாரத தமிழ்நாட்டில் பிறந்த அல்லகைகளை இலங்கைக்கு வரவழைத்து ஜில்மா வேலைகளை கிந்தியா ஏற்கனவே ஆரம்பிச்சு போட்டுது... இதற்கு பதிலடியாக தகுந்த அறிக்கைகளை பாதிக்கபட்டவரக்ள் சம்பந்த பட்டவர்கள் வெளியிட வேணும். இல்லையென்றால் நடந்தது நடந்து போச்சி... சரி மறங்கள் மன்னியுங்கள் என்று கில்மா காட்ட வெளிக்கிடுவார்கள்..அதற்கான சொற்பதம்(இலங்கையில் தமிழர்கள் அனைவரும் சம உரிமையோடு வாழ வேணும்!!) கொஞ்சம் தோண்டி துருவி இந்த பதத்திற்கு விளக்கம் கேட்டால் சொன்ன அவனுக்கும் தெரியாது .. எழுதி கொடுத்த அதிகாரிகளுக்கும் தெரியாது.. ஏ.சி ரூமிற்குள் உக்கர்ந்து கொண்டு இருப்பவரை வாசித்திட்டு வர சொன்னால் .. அது வேலைக்கு ஆகாது..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.