Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2012 இல் உலகப் பொருளாதாரம் ஆழ்ந்த ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய வலய (euro zone) பொருண்மிய நெருக்கடி.. பொருண்மியத்தில் வளர்ந்தவர்கள் என்று மார்தட்டிக் கொள்ளும் ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன்.. ஜேர்மனி.. பிரான்ஸ்.. இத்தாலி.. ஸ்பெயின் என்று எல்லோரையும் சோதனைக்குள்ளாக்கி உள்ளதோடு 2012 நிதியாண்டில்.. எதிர்பார்த்த பொருண்மிய வளர்ச்சியை விட குறைவான வளர்ச்சியையே அந்த நாடுகள் எட்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில்.. உலக நாணய நிதியம் (IMF) உலகப் பொருளாதாரம் மீண்டும் 2012 இல் ஆழ்ந்த ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக எச்சரிக்கையை விடுத்துள்ளது.

ஐரோப்பிய வலய பொருண்மிய நெருக்கடி உலகெங்கும் வியாபித்து 2012 உலகின் மிக பொருண்மிய நெருக்கடி ஆண்டாக அமைய எதிர்வு கூறப்பட்டுள்ள அதேவேளையில்.. மத்திய கிழக்கின் முக்கிய எண்ணெய் உற்பத்தி நாடான ஈரானைக் குறிவைத்து அமெரிக்கா தலைமையில் நாடுகள் போர் அச்ச சூழல் ஒன்றை ஏற்படுத்தி உள்ளன. அதுமட்டுமன்றி ஈரான் மீது புதிய பொருண்மிய தடைகளையும் அமெரிக்கா தலைமையிலான நாடுகள் விதித்துள்ளன.

இது ஈரானின் எரிபொருளை நம்பி பொருண்மியம் வளர்க்கும் சீனா.. இந்தியா போன்ற ஆசிய பொருண்மிய சக்திகளுக்கு இரட்டிப்பு நெருக்கடியை வழங்கும் என்பதில் சந்தேகம் இருக்க வேண்டியதில்லை.

இத்தனை சவால் மிகு சூழலை உலகப் பொருண்மியம் எப்படி சந்திக்கப் போகிறதோ என்ற அச்ச நிலை ஒரு பக்கம் இருக்க.. இன்னொரு பக்கம்.. ஆபிரிக்க தேசங்களோ வறட்சி.. வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் நிலையும் தொடர்கிறது.

உலகப் பொருண்மியத்தின் இந்த நெருக்கடி நிலை.. மூன்றால் உலக நாடுகளை.. பணக்கார நாடுகளின் உதவியை எதிர்பார்த்திருக்கும் நாடுகளை.. அதிகம் பாதிக்க செய்யும் என்பதிலும் மாற்றுக் கருத்திருக்க முடியாது.

இதனை உலக சமூகம் எப்படி எதிர்கொள்ளப் போகிறதோ.. என்ற பெரிய அச்சம் சூழ்ந்துள்ள நிலையில்.... Doomsday (21-12-2012) உலக அழிவு நாள் பற்றிய பீதியும் 2012 இல் கிளம்பித் திரிகிறது. இவ்வகையான அச்ச சூழல்களின் மத்தியில் உள்ள உலக மக்களுக்கு.. லண்டன் ஒலிம்பிக் மட்டுமே.. கொஞ்சம் ஆறுதலான விடயமாக இருக்கும்..!

http://kundumani.blogspot.com/

Edited by nedukkalapoovan

இன்னும் சில நாட்களில் இழுத்துப்பிடித்தவண்ணம் உள்ள கிரேக்க நாட்டை கைவிடுவது என்ற எண்ணத்திற்கு ஐரோப்பிய யூனியன் வரலாம். அதுவே உடனடி பிரச்சனை.

ஈரானுக்கு பொருளாதார தடை மட்டுமே, இப்போதைக்கு. மாற்று கச்சாய் - மசகு எண்ணெய்க்கு சவூதி உட்பட பல நாடுகள் கேட்கப்படுகின்றன. அமெரிக்க தேர்தல் இந்த வருடம் முடிந்த பின்னரே இராணுவ தாக்குதல் சாத்தியமாகலாம்.

டாவோஸ் 2012: உலகமயமாதலும் மனித உரிமைகளும்

சுவிட்சர்லாந்து டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார மன்றத்தில் கூடியிருக்கின்ற உலக நாட்டுத் தலைவர்கள் உலகமயமாதலுக்கும் மனித உரிமைகளுக்குமிடையிலுள்ள தொடர்புகளை புரிந்துகொள்ள வேண்டுமென்று உணவுக்கான உரிமை தொடர்பான ஐநாவின் சிறப்பு நிபுணர் ஒலிவர் டி ஷூட்டர் கோரிக்கை விடுத்துள்ளார்.

உலகமயமாதல் என்பது அதனால் பாதிக்கப்பட்ட தனிப்பட்ட நபர்கள் குறித்து கண்மூடித்தனமான இருக்காமல் மனித உரிமைகளையும் அவற்றின் நீடித்த வளர்ச்சியையும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் ஐநாவின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகரகம் சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உலகப் பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதற்காக எடுக்கப்படுகின்ற முயற்சிகளில் உலகமயமாதலில் மனித உரிமைகள் சார்ந்த விழுமியங்களை உறுதிப்படுத்துவது புதிய கோணமாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.

கட்டுப்பாடற்ற உலகமயமாதலின் அடையாளங்களாக உலகில் பரவலான ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்திருப்பது குறித்து இப்போதாவது கவனம் செலுத்தவேண்டியிருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நாட்டின் பொருளாதார கட்டமைப்பையே மாற்றியமைத்துவிடுகின்ற இருதரப்பு வர்த்தக உடன்படிக்கைகள் ஊடாக நாடுகளுக்குள் உலகமயமாக்கம் நுழைகின்றது. இவ்வாறான இருதரப்பு முதலீட்டு உடன்படிக்கைகள் உலகஅளவில் 6000 வரை அதிகரித்திருப்பதை ஐநா சுட்டிக்காட்டுகின்றது.

http://www.bbc.co.uk/tamil/global/2012/01/120126_davoshumanrights.shtml

கிரேக்க பேச்சுவார்த்தைகள் முறிந்து வங்குரோத்து நிலை வருமா ??

  • கருத்துக்கள உறவுகள்

நாள்ளையோ அல்லது திங்களோ கிரேக் தனது தேரேசரி நோடீன் எழுபது வீத விழுக்காட்டை அறிவிக்க போகின்றது.

அதை பெரும்பாலும் ஐரோப்பா வங்கிகளே வைத்திருக்கின்றன. மொத்தம் 228 பில்லியன் டாலார். அவர்களின் கெதி அதோ கெதிதான்.

கடந்த வெள்ளி சந்தை சரிந்ததட்கு அதுவே காரணம்.............

திங்கள் சந்தை நிலவரம் சொல்லவே தேவையில்லை.

நாள்ளையோ அல்லது திங்களோ கிரேக் தனது தேரேசரி நோடீன் எழுபது வீத விழுக்காட்டை அறிவிக்க போகின்றது.

அதை பெரும்பாலும் ஐரோப்பா வங்கிகளே வைத்திருக்கின்றன. மொத்தம் 228 பில்லியன் டாலார். அவர்களின் கெதி அதோ கெதிதான்.

கடந்த வெள்ளி சந்தை சரிந்ததட்கு அதுவே காரணம்.............

திங்கள் சந்தை நிலவரம் சொல்லவே தேவையில்லை.

கருப்புத்திங்களாக அமையலாம் :wub:

ஆனால் முக்கிய கேள்வி என்னவென்றால் அடுத்து யார்? ஏனெனில் அதன் பாதிப்பு இதைவிட பலமடங்காக இருக்கும். அதனால் கிரேக்கத்தை கைவிடமாட்டார்கள் :D. 2008 இல் லீமன் பிரத்ர்சை இவ்வாறு கைவிட்டதே அன்றைய தவறு என்றும் அதுவே இன்றும் மீளமுடியாமல் பொருளாதாரத்தை வைத்துள்ளது என்பது பொதுவான கருத்து.

Edited by akootha

அமெரிக்க பொருளாதாரம் எழுச்சி ஐரோப்பாவில் மெல்லிய மகிழ்ச்சி

அமெரிக்க பொருளதாரதம் இந்த ஆண்டு எதிர்பாராத விதமாக வளர்ச்சி கண்டுள்ளது. இந்த வளர்ச்சி ஐரோப்பிய நாடுகளுக்கு புதிய நம்பிக்கையையும் மகிழ்வையும் கொடுத்துள்ளது. கடந்த ஒன்பது மாதங்களாக படிப்படியாக உயர்ந்துவந்த அமெரிக்கப் பொருளாதாரம் இந்த ஆண்டு ஆரம்பத்தில் மிகவும் சிறப்பாக முன்னேறியிருக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டம் எட்டு வீதம் ஆக குறைவடைந்துள்ளது. தற்போதைய வேலையில்லாத் திண்டாட்ட அளவு 8.3 வீதமாக இருக்கறது. விவசாயம் தவிர்ந்த மற்றைய துறைகளில் 243.000 பேர் புதிதாக வேலை பெற்றுள்ளனர்.

நாட்டின் பொருளாதாரம் மறுபடியும் நல்ல பக்கத்தில் சுழல ஆரம்பித்துள்ளது. அதேவேளை இதைத் தடுக்க அமெரிக்க காங்கிரசை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் எதிர்க்கட்சிகள் தந்திரமாக முயன்று வருகின்றன அமெரிக்க அதிபர் குறை கூறியுள்ளார். வரும் தேர்தலில் வேலையில்லாத் திண்டாட்டத்தை குறைக்க ஒபாமாவால் முடியவில்லை என்று புள்ளிவிபரங்களைக் காட்டி, அவரைத் தோற்கடிக்க திரை மறைவு வேலைகளை நடாத்தி வருகின்றன. இதைக் கருத்தில் கொண்டு, பொருளாதார வளர்ச்சியை தடைப்படுத்தும் வேலைகளை உடனடியாக நிறுத்தும்படி பராக் ஒபாமா அமெரிக்க செனட், காங்கிரஸ் இருசபைகளையும் எச்சரித்துள்ளார். இந்த வேகத்தில் சென்றால் வரும் நவம்பரில் நடைபெறவுள்ள தேர்தலில் ஒபாமா மீண்டும் வெற்றி பெறுவார் என்றும் நிபுணர்கள் கூறுகின்றார்கள்.

  • 2 weeks later...

கிரேக்க நாட்டை மீண்டும் வசதியான ஐரோப்பிய நாடுகள் சில காப்பற்றியுள்ளன இந்த ஆட்டத்திலும் . ஆனால் வங்குரோத்து விலையை தவிர்க்க மீண்டும் கடுமையான செலவுக்குறைப்புக்களை அரசு அறிமுகப்படுத்தியது. ஆனால், மக்கள் இலட்சக்கணக்கில் வீதிகளில் இறங்கி தமது எதிர்ப்பை காட்டினர்.

இனி பொருளாதாரத்தை தாக்க தக்க பாரிய அசைவுகள் ஒன்றும் எதிபார்க்கப் படாமையினால் டவ் யோன்ஸ் 15,000 புள்ளிகளை அடைந்து இந்த வருடம் சாதனையை நிலை நாட்டலாம் என்று எதிர் பார்க்கப் படுகிறது..

- இன்று ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு ஐநூறு டாலரை முதல்முறையாக தாண்டியது : http://www.ft.com/intl/cms/s/2/242a84f6-5657-11e1-8dfa-00144feabdc0.html

- யூரோ பணத்தின் தரம் குறைக்கப்பட்டது : http://www.ft.com/cms/s/0/6f26dd0e-55f0-11e1-9d95-00144feabdc0.html

RCA, போன்ற பழைய இசை-இலத்தியனியல் கம்பனிகள் நட்டப் பட்ட போது இலத்திரன் மாதிரி தொழில் நுட்பங்கள் அமெரிக்காவால் தக்க வைக்க முடியாதவை என்றார்கள். 1980 களில் Fujitsu, Panasonic, Toshiba, NEC போன்றவை செயற்கை மனிதர்களை எந்நேரமும் வெளியிடலாம் என்று எதிர் பார்த்தார்கள். அதாவது Texas Instruments, Honeywell போன்ற கமபனிகளுக்கும், AST, Compaq, Xerox போன்வற்றுக்கும் நடந்தவைதான் IBM, Intel போன்ற பாரிய கம்பனிகளுக்கும் நடக்கும் என்று நினைத்தார்கள்.

1980 களுக்கு பிறகு கணனி கம்பனிகள் தங்கள் ஆளுமையை மெல்ல மெல்ல மீளப்பெற்றன. இன்று ஆப்பிள் தனது TVயை வடிவமைத்து சந்தைப்படுத்த தயாராகி வருகிறது. அது நடந்தால் கிடத்தட்ட 30 வருடங்களுக்கு முன்னர் Sony யிடம் இழந்த நல்ல TV பெயர் அமெரிக்காவிற்கு திரும்ப வரப்போகுது.

Edited by மல்லையூரான்

கிறேக்கத்திற்கு கடன் வழங்குவதற்கு யூறோ வலய நாடுகள் இணக்கம் கண்டன

பெற்ற கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்குப் புதிய கடன் தேவைப்பட்ட கிறேக்க நாட்டிற்குக் கடன் வழங்குதற்கு யூறோ வலய நாடுகள் இணங்கியுள்ளன.

பிறஸல்சில் 13 மணி நேரமாக இடம்பெற்ற பேச்சுக்களின் பின்னர், யூறோ வலய நாடுகளின் நிதியமைச்சர்கள் இன்று அதிகாலை கடன் வழங்குவது குறித்து இணக்கத்தைக் கண்டார்கள்.

மொத்தமாக 170 பில்லியன் டொலர் அளவு கடன் வழங்கப்படும். கடனைப் பெறுவதற்குப் பதிலாக 2020 ஆம் ஆண்டளவில், அதன் கடன்களின் அளவை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 120.5 சதவீதமாகக் குறைப்பதற்கு உறுதிமொழியொன்றை கிறேக்கம் வழங்கியது,

ஐந்து வருடங்களாக பொருளாதாரத் தேக்கத்தை எதிர்கொண்டுள்ள கிறேக்கத்தின் கடன், அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 160 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கிறேக்க அரசைக் கண்காணிப்பதற்காக யூறோ வலய கண்காணிப்பாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த இணக்கத்தின்படி, கிறேக்கத்திற்குக் கடன் வழங்கிய தனியார் முதலீட்டாளர்கள், மொத்தமாக 70 சதவீதம் வரையான கடனைக் கைவிடவேண்டி ஏற்பட்டுள்ளது.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=11173

- கிரேக்கம் கொடுத்த பணத்தை ஏப்பம் விட்டுவிட்டு மீண்டும் பணம் கேட்கும் என்கிறார்கள்.

- அதனால் ஒரு ஆரோக்கியமான வங்குரோத்து நிலைக்கே அதை இட்டுச்செல்வது நல்லம் என்கிறார்கள்

- பல கிரேக்கர்களும் 'பொருளாதார அகதிகளாக' படை எடுக்க உள்ளார்கள்

- அடுத்து எந்த நாடு??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.