Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்போர் ஈகியர்களுக்கு வீரவணக்கம்

Featured Replies

murugathas.jpg

  • தொடங்கியவர்

உறங்கிகிடந்த தமிழ் பிணங்களை தட்டி எழுப்பிய தியாக சுடர் -

மாவீரன் முத்துக்குமாரின் நினைவு நாள் !!

417032_3319696351611_1244345837_33630803_1513842518_n.jpg

தமிழர் நட்பு கழகம் -மும்பை நடத்தும் மாவீரன் முத்துக்குமாரின் நினைவு நாள் கூட்டம்.

மும்பை சீத்த கேம்ப் யில் 29/01/1012 மாலை 6.30 மணிக்கு, D - செக்டர் ல் நடைபெறள்ளது, தமிழர் நட்பு கழக நிறுவன தலைவர் மா.கதிரவன் தலைமை தாங்குகிறார் ..

இதில் இன உணர்வாளர்கள் பெரு வாரியாக கலந்து கொள்ள உள்ளனர் ..

நீங்களும் கலந்து கொள்ளுங்கள் ...

M : 09321454425 / 9987457276

(மின்னஞ்சல் ஊடாக) : http://www.facebook.com/photo.php?fbid=3319696351611&set=o.252661648083683&type=1

  • தொடங்கியவர்

ஈழத்தில் நடைபெற்ற தமிழினஅழிப்புக்கு எதிராக போர்க்குரல் எழுப்பி தீயுடன் சங்கமித்து தங்கள் இன்னுயிரை ஈகம்செய்த வீரமறவர்களை என்றும் நினைவில் வைத்து வணங்குவோம்.

ஜனவரி 29.பக்கத்து மண்ணில்,ஈழத்தில் கொத்துக் கொத்தாக தமிழர்கள் வயதுவேறுபாடின்றி குழந்தைகள்,சிறுவர்கள்,பெண்கள்,வயோதிபர் என்று கொன்று குதறி எறியப்பட்டு ஒரு பெரும் தமிழின அழிப்பு நடந்துகொண்டிருந்தபோது அதனை தடுப்பதற்காக தமிழர்கள் அனைவரும் எழவேண்டும் என்ற வேண்டுகோளை அற்புமான இறுதிக்கடிதமாக எழுதிவைத்துவிட்டு நெருப்புக்குள் நின்று கருகிய முத்துக்குமாரனின் நினைவுநாள்.

முத்துக்குமாரனும் அவனைப்போலவே ஈழத்துக்கு தமிழினத்துக்காக தங்களை வெந்தணலில் வேகவைத்த

அனைவரையும் நாம் மறந்துபோனால் நன்றிகொன்றவர்களாகி விடுவோம்.

ஜனவரி 29 ஈகியர்தினம்.ஈழத்துக்காக எரிந்தவர்களை நினைவில்கொள்ளும் நாள்.

காலம் எத்தனை கடந்துபோகினும்

எம் மக்களின் கதறலுக்காக

அழிவிலிருந்து எம் இனத்தை

காப்பாற்ற வேண்டும் என்ற

உயரிய எண்ணத்துடன்

உடல்கருக தீயில் எரிந்து

உயிர்தந்த உத்தமர்களை

vvtuk.com இணையம் தலைதாழ்த்தி

என்றும் வணங்கிநிற்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

muthukumaran-11.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களுக்கு எனது நினைவு வணக்கங்கள்..! நிகழ்வு இன உணர்வுடன் நடந்தேற வாழ்த்துக்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

எனது நினைவு வணக்கங்கள்!

ஒவ்வொரு வருடமும், உங்கள் நினைவு நாட்களே, நாம் இழந்தவற்றை நினைவு படுத்துகின்றன!

எங்கள் கனவுகள், நனவாகும் வரை உங்கள் நினைவுகள் சுமந்திருப்போம்!!!

  • தொடங்கியவர்

420194_3184086284600_1339044043_33237050_1095050618_n.jpg

கனடா, ரொரன்டோவின் பல பகுதிகளிலும் முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்தும் சுவரொட்டிகள் கண்டமை மனசுக்குள் திருப்தியை தந்தது. யாரை நாம் மறந்தாலும் எவரும் எமக்கு ஆதரவு தர மறுத்த நேரத்தில் உயிரை விளக்காக்கி கொண்ட முத்துகுமாரையும் அவரைப் போன்ற ஏனையோரையும் ஈழ தமிழ் மக்கள் மறக்கவே கூடாது

  • கருத்துக்கள உறவுகள்

எனது நினைவுநாள் வணக்கங்கள்

  • தொடங்கியவர்

தமிழகமெங்கும் எழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரன் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுகள்!

தமிழீழ மக்கள் மீது இந்திய - சிங்கள அரசுகளால் திணிக்கப்பட்ட 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் போரை நிறுத்தக்கோரி ஜனவரி மாதம் 29ஆம் திகதி அன்று மாவீரன் முத்துக்குமார், சென்னையில் செயல்பட்டு வரும் இந்திய அரசின் வருமானவரித்துறை அலுவலகமான சாஸ்திரி பவனில் தீக்குளித்து உயிரீகம் செய்தார். அவரைத் தொடர்ந்து, 18 தீந்தமிழர்கள் போர் நிறுத்தம் கோரி தன்னுயிரை ஈகம் செய்தனர். ஈகியர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் நேற்று தமிழகமெங்கும் பல்வேறு அமைப்பினரால் சிறப்பாக நினைவுகூறப்பட்டது.

நேற்று மாலை சென்னை திரு.வி.க. நகரில், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நினைவஞ்சலிப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பெ.தி.க. தலைவர் கொளத்தூர் தா.செ.மணி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முன்னணித் தலைவர் தோழர் சி.மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு நினைவேந்தல் உரையாற்றினர்.

தஞ்சை செங்கிப்பட்டியில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியினரால் நிறுவப்பட்டுள்ள மாவீரன் முத்துக்குமார் சிலைக்கு நாள் முழுவதும், தஞ்சை, திருச்சி, சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்த வந்த த.தே.பொ.க. மற்றும் தோழமை அமைப்புத் தோழர்களும், உணர்வாளர்களும் மலர் மாலைகள் அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர். நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், முத்துக்குமார் சிலை அமைக்க தனது நிலத்தை இலவசமாக வழங்கி நின்ற புலவர் இரத்தினவேலவர் முன்னின்று மேற்கொண்டார். பங்கேற்ற தொண்டர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது. மாலையில் எழுச்சியான கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டன.

ஓசூரில் தமிழ்த் தேசப் பொதுவடைமைக் கட்சி சார்பில் மாவீரன் முத்துக்குமார் உள்ளிட்ட ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் வீரவணக்க சுடரோட்டமும், நினைவேந்தல் பொதுக்கூட்டம் சிறப்பாக நடந்தேறியது. தமிழக கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் மாலை 4.30 மணிக்கு தொடங்கிய சுடரோட்ட நிகழ்வில், தோழர் ஸ்டாலின் சுடரேந்திவர, திரளான த.தே.பொ.க. தொண்டர்களும், நிகரன், மெய்யறிவு, அகஸ்டின், வெண்ணிலா உள்ளிட்ட குழந்தைகளும் அவரைப் பின் தொடர்ந்தனர்.

சுட்ரோட்டத்தை இரவீந்தரன் தொடக்கி வைத்தார். மகளிர் ஆயம் செயலாளர் கண்மணி உள்ளிட்ட பெண் தொண்டர்கள் முன்னிலை வகித்தனர். முழக்கங்கள் எழுப்பியவாறு சற்றொப்ப 9 கிலோ மீட்டர் தொலைவு நடைபெற்ற இச்சுடரோட்ட நிகழ்வு ஓசூர் நகரில் முத்துக்குமாரின் ஈகம் குறித்த விரிவான பரப்புரையாக அமைந்தது. ராம் நகரில் நிறைவடைந்த சுடரோட்ட சுடரை தென்னிந்திய நுகர்வோர் பாதுகாப்புக் கவுன்சில் செயலாளர் திரு. இராம்குமார் பெற்றுக் கொண்டார். அங்கு நடந்த நினைவேந்தல் பொதுக் கூட்டத்திற்கு, ஓசூர் த.தே.பொ.க. நகரச் செயலாளார் இரமேசு தலைமை தாங்கினார். த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் கோ.மாரிமுத்து, பெரியார் திராவிடர் கழக மாவட்டத் தலைவர் பழனி ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினர். நிறைவில், முருகப்பெருமாள் நன்றி நவின்றார்.

குடந்தையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், ஈகியருக்கு வீரவணக்க நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டது. இன்று காலை குடந்தை மேலக்காவிரி அருகில் நடைபெற்ற இந்நிகழ்வில், த.தே.பொ.க. குடந்தை நகரச் செயலாளர் விடுதலைச் சுடர், குடந்தைத் தமிழ்க் கழக அமைப்பாளர் பேகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.

ஈரோடு கருங்கல்பாளையத்தில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், மாவீரன் முத்துக்குமார் உள்ளிட்ட ஈகியருக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. த.தே.பொ.க. தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் ஈரோடு வெ.இளங்கோவன் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார். பார்த்திபராசன் தலைமை தாங்கினார். தோழர் தமிழ் வரவேற்புரையாற்றினார். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட முத்துக்குமார் நிழற்படத்திற்கு தொண்டர்கள் மலர் மாலை அணிவித்து, வீரவணக்க முழக்கங்களை எழுப்பினர். த.தே.பொ.க. தலைமைப் பொதுக்குழு உறுப்பினர்; இராசையா, தீரன் ஆகியோர் ஈகியரை நினைவுகூர்ந்து வீரவணக்க உரையாற்றினார்.

பவானி நகரம் ஒருச்சேரியில், தமிழக இளைஞர் முன்னணி சார்பில் மாவீரன் முத்துக்குமார் உள்ளிட்ட ஈகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. த.இ.மு. கிளைச் செயலாளர் ம.பழனிச்சாமி முன்னிலையில், சின்னராசு தலைமையேற்க ஈழவிடுதலைக்காக சிறை சென்ற தமிழச்சி தாயம்மா மலர் தூவி ஈகியருக்கு மரியாதை செலுத்தினார். இலக்கியத் தளம் அமைப்பின் பகலவன் சிறப்புரையாற்றினார். நிறைவில் சேகர் நன்றி கூறினார். பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஊர் பொது மக்கள் இதில் திரளாக கலந்து கொண்டனர்.

மதுரை செல்லூரில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் மாவீரன் முத்துக்குமார் உள்ளிட்ட ஈகியருக்கு வீரவணக்க நிகழ்வு நிடைபெற்றது. த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் அ.ஆனந்தன் தலைமை தாங்கினார்.

திருச்செந்தூரில் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை சார்பில் நடக்கும் வீரவணக்கக் கூட்டத்தில் கட்சித் தலைவர் இயக்குநர் சீமான் வீரவணக்க உரை நிகழ்த்தினார்.

காட்டுமன்னார் கோயில் பேருந்து நிலையம் அருகில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் இன்று மாலை ஈகியருக்கு வீரவணக்க பொதுக்கூட்டம் நடக்கிறது. த.தே.பொ.க. செயலாளர் சிவ.அருளமுதன் உள்ளிட்டோர் இதில் உரையாற்றுகின்றனர்.

இதே போன்று, தமிழகமெங்கும் பல்வேறு அமைப்புகள் பல்வேறு பகுதிகளிலும் வீரவணக்க நிகழ்வுகள் எழுச்சியுடன் நடந்தன. ஈழத்தமிழர்களுக்காக உயிரீகம் செய்த அம்மாவீரர்களின் ஈகம் வீண்போகாது என்பதையே இது உணர்த்துகின்றது.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=f16ddb03-c954-4046-9080-13ab7e6ccb96

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.