Jump to content

பூவுக்கும் பெயருண்டு


Recommended Posts

Posted

தோழர் கோமகன்... நல்லா சமையலுக்கு பயன் படும் கோஸ்பூ .. முருங்கைப்பூ.. போன்ற பூக்களை இணைத்து போடுவீர்களா..?

மிக்க நன்றிகள் புரட்சி . கோஸ் பூ சங்ககாலப் பூங்களில் இல்லை :D:icon_idea: . முருங்கை மரம் , அதன் பூ சங்ககால மரங்களில் உள்ளது . இணைத்துவிடுகின்றேன் :):) .

  • Replies 156
  • Created
  • Last Reply
Posted

அண்ணை இரண்டு கிழமையா பார்துகொண்டிடுக்கிரன் . தாளம் பூவை நீங்கள் இன்னும் இணைக்க வில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அண்ணை  இரண்டு கிழமையா  பார்துகொண்டிடுக்கிரன் .   தாளம் பூவை நீங்கள் இன்னும் இணைக்க வில்லை.

அண்ணை உங்கள் கேள்விக்கு உரிய பதில்..பக்கம் 4ல் இருக்கிறது பார்த்து மகிழுங்கோ... :lol:

Posted

snapback.pngஇசைக்கலைஞன், on 19 February 2012 - 12:37 PM, said:

வட் மணல்காடு? :D யூ மீன் சம் றூறல் ஏரியா? :wub:

ஐ ஷுட் கோ ஃபோர் காம்பிங் வன் டே..! :lol:

முடியலைப்பா சாமி.. உலகமகா நடிப்புங்கோ சாமியோவ்.. :icon_mrgreen::lol:

உங்கடை தேனிலவு அங்கை நடந்ததாய் தானே மாமோய் பட்சி சொல்லுது????? ^_^:wub::lol::icon_idea:

:lol:

Posted

மன்னிக்கவும் . தாளம் பூஎன்ற தலைப்பிலேயே தேடியதால் சரியாக கவனிக்க வில்லை . நன்றி யாயினி .

தாளம் பூவை பற்றி மிகைபடுத்தபட்ட கற்பனையை நான் கொண்டிருப்பதால் அந்த படத்தில திருப்ப்தியில்லை.

Posted

மன்னிக்கவும் . தாளம் பூஎன்ற தலைப்பிலேயே தேடியதால் சரியாக கவனிக்க வில்லை . நன்றி யாயினி .

தாளம் பூவை பற்றி மிகைபடுத்தபட்ட கற்பனையை நான் கொண்டிருப்பதால் அந்த படத்தில திருப்ப்தியில்லை.

உங்களுக்காத் தாளம் பூவைத் தேடி இணைக்க முயற்சி செய்கின்றேன் சுடலைமாடன் .

Posted

ஒரு சிறிய இடைவேளையின் பின்பு பூக்கள் பூக்கும் .

Posted

வணக்கம் கோமகன்..! உங்கள் மீள்வரவு நல்வரவாகட்டும்..!

Posted

81 மாப் பூ தேமா

78142442.jpg

82959197.png

62840129.png

தவறுதலாக தேமாப் பூ படத்தை இதில் இணைத்து விட்டேன் திருத்தியுள்ளேன் .

10698528.jpg

பட்டினப்பாலை .

ஆசிரியர் : கடியலூர் உருத்திரங் கண்ணனார் .

மருத நிலத்தின் வளமை

விளைவு அறா வியன் கழனி

கார்க்கரும்பின் கமழ் ஆலைத்

தீத் தெறுவின் கவின்

வாடிநீர்ச் செறுவின் நீள் நெய்தற்

பூச்சாம்பும் புலத்து ஆங்கண்,

காய்ச் செந்நெல் கதிர் அருந்து

மோட்டு எருமை முழுக்குழவி

கூட்டு நிழல் துயில் வதியும்

கோள் தெங்கின் , குலை வாழை,

காய்க் கமுகின் , கமழ் மஞ்சள்

இனமாவின் இணர்ப் பெண்ணை

முதற் சேம்பின் முளை இஞ்சி (8-19)

கருத்துரை :

சோழ நாட்டு அகன்ற வயல்களில் விளைச்சல் நீங்காது நடந்து கொணடேயிருக்கும். அவ்வயல்களில் விளைந்த நன்கு முற்றிய கரும்பினைப் பாகாகக் காய்ச்சும் மணம் கமழும் ஆலைகளும் உண்டு. அவ்வாலைகளில் இருந்து வரும் நெருப்புப் புகையின் வெப்பத்தால் நீர் நிறைந்த வயல்களில் நீண்டு வளர்ந்திருக்கும் நெய்தல் பூக்கள், அழகு கெட்டு வாடிப் போகும். அவ்விடங்களிலே விளைந்த காய்ந்த செந்நெல்லின் கதிர்களைத் தின்ற பெரிய வயிற்றையுடைய எருமை மாட்டின் முதிர்ந்த கன்றுகள், நெற்கூடுகளின் நிழலிலே படுத்து உறங்கும். மருத நிலத்தில் குலைகளையுடைய தென்னை, தாறு போட்டிருக்கும் வாழை, காய்த்திருக்கும் பாக்கு , மணக்கும் மஞ்சள், பல்வேறு இன மா மரங்கள் , குலை குலையாகத் தொங்கும் காய்களையுடைய பனை மரங்கள், கிழங்கினையுடைய சேப்பஞ்செடிகள் மற்றும் முளைத்திருக்கும் இஞ்சி செடிகளும் காணப்படும்.

37068190.jpg

நற்றிணை 87,

நக்கண்ணையார் .

நெய்தல் திணை – தலைவி சொன்னது .

உள்ளூர் மா அத்த முள் எயிற்று வாவல்

ஓங்கல்அம் சினைத் தூங்கு துயில் பொழுதின்

வெல் போர்ச் சோழர் அழிசிஅம் பெருங் காட்டு

நெல்லி அம் புளிச் சுவைக் கனவியாஅங்கு

அது கழிந்தன்றே தோழி அவர் நாட்டுப்

பனி அரும்பு உடைந்த பெருந் தாட் புன்னை

துறை மேய் இப்பி ஈர்ம் புறத்து உறைக்கும்

சிறுகுடிப் பரதவர் மகிழ்ச்சியும்

பெருந் தண் கானலும் நினைந்த அப் பகலே.

79744203.jpg

ஐங்குறுநூறு 349,

ஓதலாந்தையார்.

பாலை திணை – தலைவி தோழியிடம் சொன்னது .

அவரோ வாரார் தான்வந் தன்றே

பொரிகால் மாஞ்சினை புதைய

எரிகால் இளந்தளிர் ஈனும் பொழுதே.

17994596.jpg

குறுந்தொகை 26,

கொல்லன் அழிசி .

குறிஞ்சி திணை – தோழி சொன்னது .

அரும்பு அற மலர்ந்த கருங்கால் வேங்கை

மேக்கு எழு பெருஞ்சினை இருந்த தோகை

பூக்கொய் மகளிரின் தோன்று நாடன்

தகாஅன் போலத் தான் தீது மொழியினும்

தன்கண் கண்டது பொய்க்குவ தன்றே

தேன்கொக்கு அருந்தும் முள்ளெயிற்றுத் துவர்வாய்

வரையாடு வன்பறழ்த் தந்தைக்

கடுவனும் அறியும்அக் கொடியோ னையே.

38199647.jpg

குறுந்தொகை 278

பேரிசாத்தனார் .

பாலை திணை – தலைவி தோழியிடம் சொன்னது .

உறுவளி உளரிய அம் தளிர் மாஅத்து

முறி கண்டன்ன மெல் என் சீறடிச்

சிறு பசும் பாவையும் எம்மும் உள்ளார்

கொடியர் வாழி தோழி கடுவன்

ஊழுறு தீங்கனி உதிர்ப்பக் கீழிருந்து

ஏற்பன ஏற்பன உண்ணும்

பார்ப்புடை மந்திய மலை இறந்தோரே.

http://treesinsangamtamil.wordpress.com/%e0%ae%ae%e0%ae%be-mango-tree/

Posted

யாழிலை கனபேர் உங்களுக்கு பூ போட நினைச்சவை ஆனாலும் மீண்டும் வந்து யாழிற்கு பூ போடுவது மகிழ்ச்சி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கோமகன் அண்ணா..!தொடர்ந்து யாழில் நல்ல பதிவுகளை கொடுங்கள்...

Posted

யாழிலை கனபேர் உங்களுக்கு பூ போட நினைச்சவை ஆனாலும் மீண்டும் வந்து யாழிற்கு பூ போடுவது மகிழ்ச்சி

மிக்க நன்றிகள் சாத்திரி உங்கள் நந்தவன வருகைக்கு .

கோமகன் அண்ணா..!தொடர்ந்து யாழில் நல்ல பதிவுகளை கொடுங்கள்...

போட்டால் போச்சுது , பதிவுகளை . மிக்க நன்றிகள் சுபேஸ் .

Posted

82 முல்லைப் பூ ( கல் இவர் முல்லை )

18426072.jpg

27478899.jpg

83 முல்லைப் பூ

46379422.jpg

முல்லை அகத்திணை உரிப்பொருள்

முல்லை நிலத்து மக்களுக்கு ஆனிரை மேய்த்தல் தொழில். அடுத்த நாட்டு ஆடுமாடுகளைக் கவர்ந்து செல்வதும், போரிட்டு மீட்பதும் இந்த நிலத்தில் நிகழும். மேய்க்கும் காலத்திலும், போரிடும் காலங்களிலும் மனைவி கணவனைப் பிரிந்திருக்க வேண்டிவரும். .இந்தப் பிரிவைத் தாங்கிக்கொண்டிருத்தலை ‘இருத்தல்’ என்றனர். இருத்தலோடு தொடர்புடைய நிகழ்வுகளை ‘இருத்தல் நிமித்தம்’ என்றனர்

மருதநிலத்து வேந்தன் போருக்காகப் பிரிவது பாலை. நெய்தல் நிலத்து ஆண்நுளையர் கடலில் மீனுக்காகப் பிரிவது நெய்தல். நானிலத்து மக்கள் பொருளுக்காகவும், போருக்காகவும், தூது சொல்லவும், கல்விக்காகவும் பிரிதல் பாலை. இந்தப் பிரிவுகளை மகளிர் தாங்கிக்கொண்டிருத்தலை முல்லைத்திணை எனக் கொள்ளும் மரபு இல்லை.

முல்லை புறத்திணைத் துறையில் விரிபொருள்

மூதின்முல்லை என்னும்போது குடும்பத்தில் முதிர்ந்த இல்லத்தரசி விருந்தோம்பி, வீரனாக மகனை வளர்க்கும் திறம் கூறப்படும்.

வல்லாண்முல்லை என்னும்போது குடும்பத்தில் வாழும் வீரன் ஒருவன் தன் உடைமைகளை ஏற்போருக்கு வழங்கி மகிழும் வள்ளண்மைத் திறம் கூறப்படும்.

முல்லைப்பூ வகை :

குறிஞ்சிப்பாட்டு என்னும் நூலில் தொகுக்கப்பட்டுள்ள 99 மலர்களில் முல்லை (நன்முல்லை), கல் இவர் முல்லை, குல்லை, தளவம் , நந்தி ,பிடவம் , மௌவல் ஆகிய மலர் வகைகள் இடம்பெற்றுள்ளன.

முல்லை :

220pxflowermullai2.jpg

முல்லை என்னும் சொல்லே காட்டில் மலரும் வனமுல்லையைத்தான் குறிக்கும். பாரி வள்ளல் தன் தேரை வழங்கியது இந்த முல்லைக்குத்தான். இதற்குக் காய்கள் உண்டு.

முல்லை - நன்முல்லை :

220pxflowermullaii.jpg

அள்ளூர் நன்முல்லையார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இக்காலத்தில் மகளிர் தலையில் சூடிக்கொள்ளும் முல்லை இந்த நன்முல்லை ஆகும். இதனைச் சூடிக்கொண்ட புலவர் நன்முல்லையார். இவரது பாடல்களில் 11 சங்கப்பாடல்களில் இடம் பெற்றுள்ளன.

முல்லை நாள்முல்லை என்னும் நித்தியமுல்லை :

220pxflowernithiyamalli.jpg

இதற்குப் பருவகாலம் இல்லை. நாள்தோறும் பூக்கும்.

முல்லை தளவம் என்னும் செம்முல்லை சாதிமல்லி :

220pxflowermullaithalav.jpg

இதன் புறவிதழின் வெளிப்பக்கம் சிவப்பாக இருக்கும்.

முல்லை அடுக்குமல்லி :

220pxflowermullai4.jpg

இந்த மல்லிகையில் ஒரே பூவில் (தாமரை போல்) பல அடுக்குகள் இருக்கும்.

குல்லை என்னும் குட்டிப்பிலாத்தி :

கார் காலத்தில் முதல் மழை பெய்த நாளில் அரும்பு விட்டு புதர் புதராகப் பூத்துக் குலுங்கும்.

பிடவம் :

பிடவம் பூத்துக் குலுங்கும் ஊர் பிடவூர். பிடவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தன் மாண்டபோது அவ்வூரில் பூத்திருந்த பூக்களை யாரும் சூடிக்கொள்ளவில்லை. துக்கம் கொண்டு ஆடும் நாளில் முல்லையே! ஏன் பூக்கிறாய் எனப் புலவர் பாடுகிறார்.

220pxflowertreemalli.jpg

மரமல்லி :

நள்ளிருளில் பூத்து நாறும்(மணக்கும்). இதனை மௌவல் என்பர்.

நள்ளிருள்-நாறி ( நந்தி ) :

220pxflowernanthi.jpg

நந்தியாவிட்டை என இக்காலத்தில் வழங்கப்படும் நந்திப் பூவில் இரண்டு வகை உண்டு. இதில் ஒரே ஒரு அடுக்கு கொண்டது ஒருவகை. ஒன்றுக்குள் ஒன்றாகப் பல அடுக்குகள் கொண்டது அடுக்கு நந்தியாவிட்டை. http://ta.wikipedia....%AE%95%E0%AF%88

  • 2 weeks later...
Posted

வணக்கம் கோமகன்..! உங்கள் மீள்வரவு நல்வரவாகட்டும்..!

மிக்க நன்றிகள் இசை உங்கள் வரவேற்பிற்கு .

Posted

யாழிலை கனபேர் உங்களுக்கு பூ போட நினைச்சவை ஆனாலும் மீண்டும் வந்து யாழிற்கு பூ போடுவது மகிழ்ச்சி

உங்கடை சாத்திரத்தில கிரகநிலையள் அப்பிடி இருக்கோ தெரியாது . உங்கள் கருத்திற்கு நன்றிகள் சாத்திரி .

Posted

வணக்கம் கோமகன்..! உங்கள் மீள்வரவு நல்வரவாகட்டும்..!

Posted

வணக்கம் கோமகன்..! உங்கள் மீள்வரவு நல்வரவாகட்டும்..!

மிக்க நன்றிகள் செம்பகன். விரவில் பூந்தோட்டம் திறக்கும் .

  • 2 weeks later...
Posted

மௌவல் பூ 83

33976852.jpg

மௌவல் எனச் சங்ககாலத்தில் வழங்கப்பட்ட மலரை இக்காலத்தில் மரமல்லி (மரமல்லிகை) என வழங்குகின்றனர். இது வீட்டில் வளர்க்கப்படும் மரம். இந்த மலரின் அரும்புகள் மகளிரின் பல் வரிசைக்கு உவமையாகக் காட்டப்பட்டுள்ளன. சங்கநூல் குறிப்புகள்

  • குறிஞ்சி நில மகளிர் குவித்து விளையாடிய மலர்களில் ஒன்று மௌவல்.
  • குடியிருப்பு மனைகளில் இதனை நட்டு வளர்ப்பர்.
  • இரவில் பூக்கும் இந்த மலர் சுற்றிலும் மணக்கும்.
  • ஊர் ஓரப் பள்ளங்களில் இது வளர்க்கப்படும்.
  • மல்லிகை, மௌவல், சண்பகம் ஆகியவை வெவ்வேறு மலர்கள்.
  • மகளிர் சிரிப்பது போலப் பூக்கும்.
  • சில பெண்களின் பற்களை இக்காலத்தில் ‘அரிசிப்பல்’ எனப் பாராட்டுவர். இதனைச் சங்கப்பாடல்கள் மௌவலோடு ஒப்பிட்டுப் பாராட்டுகின்றன.
  • நொச்சிச் செடி ஆற்றங்கரைகளில் வளரும். இது ஆற்று நொச்சி. வீட்டில் நட்டு வளர்க்கும் மௌவலை ‘மனைநொச்சி’ எனவும் வழங்கினர்.

http://ta.wikipedia.....org/wiki/மௌவல்

45669301.jpg

வகுளம் பூ 84

77088524.jpg

பாறையில் மலர் குவித்த பாவையர்

———– ———— ———– வள்இதழ்

ஒண்செங் காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண்கயக் குவளை குறிஞ்சி வெட்சி

செங்கொடு வேரி,தேமா, மணிச்சிகை

உரிதுநாறு அவிழ்தொத்து உந்தூழ் கூவிளம்

எரிபுரை எறுழம், சுள்ளி, கூவிரம்

வடவனம், வாகை, வான்பூங் குடசம்

எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை

பயினி, வானி, பல்லிணர்க் குரவம்,

பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா,

விரிமலர் ஆவிரை, வரல், சூரல்,

குரீஇப் பூளை, குறுநறுங் கண்ணி,

குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,

போங்கம் , திலகம், தேங்கமழ் பாதிரி,

செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்,

கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத்

தில்லை, பாலை, கல்இவர் முல்லை,

குல்லை பிடவம், சிறுமா ரோடம்,

வாழை வள்ளி நீள்நறு நெய்தல்

தாழை தளவம் முள்தாள் தாமரை

ஞாழல், மௌவல், நறுந்தண் கொகுடி,

சேடல், செம்மல், சிறுசெங் குரலி

கோடல், கைதை, கொங்குமுதிர் நறுவழை

காஞ்சி, மணிக்குலைக் கள்கமழ் நெய்தல்,

பாங்கர், மராஅம், பல்பூந் தணக்கம்,

ஈங்கை, இலவம், தூங்குஇணர்க் கொன்றை

அடும்புஅமர் ஆத்தி, நெடுங்கொடி அவரை,

பகன்றை, பலாசம், பல்பூம் பிண்டி,

வஞ்சி, பித்திகம், சிந்து வாரம்,

தும்பை, துழாஅய் சுடர்ப்பூந் தோன்றி,

நந்தி, நறவம், நறும் புன்னாகம்,

பாரம், பீரம், பைங்குருக் கத்தி,

ஆரம் காழ்வை கடிஇரும் புன்னை,

நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி,

மாஇருங் குருந்தும், வேங்கையும் பிறவும்

அரக்குவிரிந் தன்ன பருஏர்அம் புழகுடன்

மால்அங்கு உடைய மலிவனம் மறுகி,

வான்கண் கழீஇய அகல்அறைக் குவைஇ(61-98)

கருத்துரை - வளமையான இதழ்களையுடைய அழகிய செங்காந்தள் மலர், ஆம்பல் மலர், அனிச்ச மலர், ஆம்பல் மலர்,

குளிர்ச்சியான குளத்திலே பூத்த குவளை மலர், குறிஞ்சி மலர், வெட்சி மலர், செங்கோட்டு வேரி, இனிய கனிகளைத்

தரும் மாம்பூ , செம்மணிப்பூ, தனக்கே உரிய மணமும் விரிந்து கொத்தாகவுள்ளதுமாகிய பெரிய மூங்கிற்பூ,வில்வம்,

தீயின் நிறத்தை ஒத்த எறுழம்பூ, மராமரப்பூ, கூவிரம், வடவனம், வாகைப்பூ, வெண்ணிறமுடைய வெட்பாலைப்பூ,

பஞ்சாய்க்கோரை, வெண்காக்கண மலர், நீலமணி போன்றிருக்கும் கருவிளம்பூ, பயினிப்பூ, வானிப்பூ, பல கொத்துக்களையுடைய குரவ மலர், பச்சிலைப்பூ, மகிழம்பூ, கொத்தாய் மலர்ந்திருக்கும் காயாம்பூ, விரிந்த பூக்களையுடைய ஆவிரம், சிறுமூங்கிற்பூ, சூரைப்பூ, சிறு பூளை,குன்றிப்பூ, முருக்கிலை, மருதப்பூ, விரிந்த பூக்களையுடைய கோங்கமலர், மஞ்சாடிப்பூ, திலக மரத்தின் மலர், தேன் மணக்கும் பாதிரிப்பூ, செருந்தி மலர், புனலி, பெரிய குளிர்ச்சியான சண்பக மலர், கரந்தைப்பூ, காட்டு மல்லிகைப்பூ, மிக்க மணம் வீசும் மாம்பூ, தில்லைப்பூ, பாலைப்பூ, கல்லில் படர்ந்திருக்கும் முல்லைப்பூ, கஞ்சங்குல்லை மலர், பிடவ மலர், செங்கருங்காலி மலர், வாழைப்பூ, வள்ளிப்பூ, நீண்டிருக்கும் மணம் வீசும் நெய்தற்பூ, தெங்கம்பாளைப்பூ, செம்முல்லைப்பூ, முள்ளினையுடைய தண்டினைக் கொண்ட தாமரைப்பூ , ஞாழல்பூ, முல்லைப்பூ, குளிர்ந்த கொகுடிப்பூ, பவழமல்லிப்பூ, சாதிப்பூ, கருந்தாமக் கொடிப்பூ, கோடல்பூ, தாழைப்பூ, தாது முதிர்ந்து மணம் வீசும் சுரபுன்னைப்பூ, காஞ்சிப்பூ, நீலமணி போலும் கொத்துக்களையுடைய தேன் நாறும் கருங்குவளைப்பூ,பாங்கர்ப்பூ, ஓமைப்பூ, மரவப்பூ, பல பூக்களும் நெருங்கியிருக்கும் தணக்கம்பூ, இண்டம்பூ, இலவம்பூ, கொத்தாய் தொங்கும் சுரபுன்னைப்பூ, அடும்பம்பூ, ஆத்திப்பூ, நீண்ட கொடியில் மலரும் அவரைப்பூ, பகன்றைப்பூ, பலாசம்பூ, அசோக மலர், வஞ்சி மலர், பிச்சி மலர், கருநொச்சி மலர், தும்பைப்பூ, துளசிப்பூ, விளக்கின் ஒளி போன்றிருக்கும் தோன்றிப்பூ, நந்திவட்டப்பூ, நறவம்பூ, மணம் வீசும் புன்னாகம் பூ, பருத்திப்பூ, பீர்க்கம்பூ, பசுமையான குருக்கத்தி மலர், சந்தன மலர், அகிற்பூ, மிக்க மணத்தினையுடைய பெரிய புன்னைப்பூ, நாரத்தம்பூ, நாகப்பூ, நள்ளிரவிலே மணம் வீசும் இருவாட்சி மலர், கரிய பெரிய குருந்த மலர், வேங்கை மலர் முதலிய பிற பூக்களையும் சிவப்பு நிறத்தைப் பரப்பி வைத்தாற் போன்றிருக்கும் மிக்க அழகுடைய செம்பூவினையும் அங்கு இருந்த மிக்க காடு அடர்ந்த பகுதியில் மனமகிழ்ச்சியோடு உலவித் திரிந்து, ஆசையோடு மலர்களைப் பறித்து வந்தோம். மழை பெய்ததால்

கழுவி சுத்தம் செய்யப்பெற்ற அகன்ற மலைப்பாறையின் மீது அனைத்துப் பூக்களையும் குவித்து வைத்தோம்.

http://treesinsangam...ளம்-bakul-tree/

Posted

வஞ்சிப் பூ 85

46057814.jpg

வடவனம் பூ 86 ( துளசிப் பூ ) .

44658528.jpg

67598774.jpg

வடவனம் என்னும் மலரைப் பற்றிய குறிப்பு சங்க இலக்கியங்களில் ஒரே ஒரு இடத்தில் மட்டுந்தான் உள்ளது. துழாஅய் என்னும் மலரும் 99 மலர்களில் ஒன்றாக எண்ணப்படுவதால் வடவனம் என்னும் மலரைத் துளசி என அறிஞர்கள் காட்டுவதை ஏற்க இயலவில்லை. துளசியில் செந்துளசி, கருந்துளசி என இரண்டு வகை உண்டு. செந்துளசி என்னும் சொல்லிலுள்ள செம்மை செந்நிறத்தைக் குறிப்பது அன்று. செம்பொருள் என்னும் சொல்லிலுள்ள செம்மை என்பது உண்மை என்னும் பொருளை உணர்த்துவது போல உண்மையான துளசி எனப் பொருள்படுவது. வடவனம் கருந்துளசி மலரைக் குறிப்பதாகலாம். துளசி போலவே இருக்கும் மற்றொரு செடி திருநீற்றுப்பச்சை.

குறிஞ்சி நில மகளிர் குவித்து விளையாடியதாகக் கூறும் 99 மலர்களின் தொகுப்பில் அது இடம்பெற்றுள்ளது.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D

88423757.jpg

84622791.jpg

Posted

வழை மரப் பூ ( கொங்கு முதிர் நறுவழை ) 87 .

70622016.jpg

வழை என்பது சுரபுன்னை மரத்தைக் குறிக்கும். 'கொங்கு முதிர் நறு வழை' எனக் குறிஞ்சிப்பாட்டு விளக்கம் தருகிறது. அதன்படி இந்தப் பூவில் மகரந்தப்பொடிகள் முதிர்ந்து கிடக்கும் காட்சியை இந்தப் படத்தில் கண்டு இன்புறலாம். வழைமரம் பற்றிச் சங்கப்பாடல்கள் தரும் செய்திகள்

  • ஆய் அண்டிரனின் குடிப்பூ வழை.
  • குறிஞ்சி நில மகளிர் குவித்து விளையாடியதாகக் கூறப்பட்டுள்ள 99 மலர்களில் ஒன்று வழை.
  • வையை ஆறு அடித்துக்கொண்டுவந்த மலர்களில் ஒன்று.
  • நல்ல நீரோட்டமுள்ள நிலத்தில் வழை வளரும்.
  • கழை என்னும் பெருமூங்கில், ஆசினிப்பலா போன்ற மரங்களுடன் சேர்ந்து வளரும்.
  • குமணன் ஆண்ட முதிரமலையில் கழை வளர்ந்திருந்த்து.
  • தொண்டைநாட்டு மலைகளில் செழித்திருந்த்து.
  • யானை விரும்பும் தழைமரம்.
  • மூங்கில் நெல் அரிசி போட்டுக் குறமகள் வழை வளர்ந்த மலைச்சாரல் மணக்கும்படி சோறு ஆக்கினாள்.
  • வழை வளர்ந்த காடு நீர்வளம் மிக்கது ஆகையால் பாலைநிலமாக மாறுவதில்லை.
  • வழைக்காட்டில் வருடை மான்களை மலைமக்கள் வளர்ப்பர்.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B4%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D

ochrocarpuslongiflius.jpg

குறுந்தொகை 260, கல்லாடனார், பாலை திணை – தோழி தலைவியிடம் சொன்னது .

குருகும் இரு விசும்பு இவரும் புதலும்

வரி வண்டு ஊத வாய் நெகிழ்ந்தனவே

சுரி வளைப் பொலிந்த தோளும் செற்றும்

வருவர் கொல் வாழி தோழி பொருவார்

மண்ணெடுத்து உண்ணும் அண்ணல் யானை

வண் தேர்த் தொண்டையர் வழை அமல் அடுக்கத்துக்

கன்று இல் ஓர் ஆ விலங்கிய

புன் தாள் ஓமைய சுரன் இறந்தோரே.

http://treesinsangamtamil.wordpress.com/%e0%ae%b5%e0%ae%b4%e0%af%88-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b0%e0%ae%aa%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88/

42324366.jpg

வள்ளிப் பூ 88 .

44129247.jpg

84851360.jpg

Posted

வாகைப் பூ 89 .

77712430.jpg

குறுந்தொகை 39. இயற்றியவர் ஔவையார், பாலை திணை – தலைவி சொன்னது .

வெந்திறற் கடுவளி பொங்காப் போந்தென

நெற்றுவிளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும்

மலையுடை அருஞ்சுரம் என்பநம்

முலையிடை முனிநர் சென்ற ஆறே.

வாகை மரம் உழிஞ்சில் மரம் என்றும் அழைக்கப்படும் .

http://treesinsangam...ை-sirissa-tree/

30440298.jpg

வாகை, Albizia lebbeck என்னும் மரம் தெற்காசியாவைப் பூர்வீர்கமாகக் கொண்டது. இம்மரம் பிற வெப்பமண்டல பகுதிகளில் பரவலாகக் காணப்படுகின்றது. இது வாகை இனத்தை சேர்ந்தது. வாகை மரம் வலுவான மரமாகவும், தமிழர்கள் வாழும் பகுதிகளில் காணப்படும் பழைமையான மரங்களுக்குள் ஒன்றாகவும் கருதப்படுகின்றது. சங்ககாலத்தில் போரில் வெற்றிபெறும் வீரர்களுக்கு வாகை மலர் சூட்டப்பட்டு வெற்றிக் களிப்பை பகிர்ந்ததாக தமிழ் இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளன. "வெற்றி வாகைச் சூடினான்" எனும் தொடர் இன்னமும் வழக்கிலுள்ளது. வாகை என்பதை தூங்கமூஞ்சி மரத்துடன் தற்காலத்தில் தவறுதலாகப் பொருள் கொள்ளப்படுகிறது.

http://ta.wikipedia....a.org/wiki/வாகை

வாழைப் பூ 90 .

33901294.jpg

23173834.jpg

பட்டினப்பாலை, ஆசிரியர் – கடியலூர் உருத்திரங் கண்ணனார் .

மருத நிலத்தின் வளமை

விளைவு அறா வியன் கழனி

கார்க்கரும்பின் கமழ் ஆலைத்

தீத் தெறுவின் கவின்

வாடிநீர்ச் செறுவின் நீள் நெய்தற்

பூச்சாம்பும் புலத்து ஆங்கண்,

காய்ச் செந்நெல் கதிர் அருந்து

மோட்டு எருமை முழுக்குழவி

கூட்டு நிழல் துயில் வதியும்

கோள் தெங்கின் , குலை வாழை,

காய்க் கமுகின் , கமழ் மஞ்சள்

இனமாவின் இணர்ப் பெண்ணை

முதற் சேம்பின் முளை இஞ்சி (8-19)

கருத்துரை :

சோழ நாட்டு அகன்ற வயல்களில் விளைச்சல் நீங்காது நடந்து கொணடேயிருக்கும். அவ்வயல்களில் விளைந்த நன்கு முற்றிய கரும்பினைப் பாகாகக் காய்ச்சும் மணம் கமழும் ஆலைகளும் உண்டு. அவ்வாலைகளில் இருந்து வரும் நெருப்புப் புகையின் வெப்பத்தால் நீர் நிறைந்த வயல்களில் நீண்டு வளர்ந்திருக்கும் நெய்தல் பூக்கள், அழகு கெட்டு வாடிப் போகும். அவ்விடங்களிலே விளைந்த காய்ந்த செந்நெல்லின் கதிர்களைத் தின்ற பெரிய வயிற்றையுடைய எருமை மாட்டின் முதிர்ந்த கன்றுகள், நெற்கூடுகளின் நிழலிலே படுத்து உறங்கும். மருத நிலத்தில் குலைகளையுடைய தென்னை, தாறு போட்டிருக்கும் வாழை, காய்த்திருக்கும் பாக்கு , மணக்கும் மஞ்சள், பல்வேறு இன மா மரங்கள் , குலை குலையாகத் தொங்கும் காய்களையுடைய பனை மரங்கள், கிழங்கினையுடைய சேப்பஞ்செடிகள் மற்றும் முளைத்திருக்கும் இஞ்சி செடிகளும் காணப்படும்.

http://treesinsangam...ழை-banana-tree/

31965165.jpg

வாழை அறிவியல் வகைப்பாட்டின் பூண்டுத்தாவரங்களைக் கொண்ட பேரினம் ஆகும். அனைத்து இன வாழைகளையும் உள்ளடக்கிய வாழைப்பேரினம் அறிவியல் வகைப்பாட்டில் பயன்படுத்தப்படும் இலத்தீன் மொழியில் மியுசா (Musa) எனப்படுகிறது. தென் கிழக்கு ஆசியாவில் தோன்றிய வாழை முதன் முதலாக பப்புவா நியூ கினியில் கொல்லைப்படுத்தப்பட்டது. இன்று அனைத்து வெப்ப வலய பகுதிகளிலும் வாழை பயிரிடப்படுகிறது.

வாழை முதன்மையாக அதன் பழங்களுக்காக பயிரிடப்படுகிறது எனினும் சிலவேளைகளில் அலங்காரச்செடியாகவும் நார் பெறுவதற்காகவும் வேறு தேவைகளுக்காவும் வாழை பயிரிடப்படுகிறது. உறுதியாக உயர வளரும் வாழையை மரமாக கருதுவதுண்டு ஆனால் வாழையில் நிலைக்குத்தாக உள்ள பகுதி ஒரு போலித்தண்டாகும் . சில இன வாழைகளுக்கு போலித்தண்டு 2 தொடக்கம் 8 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. அதன் பெரிய இலைகள் 3.5 மீட்டர் நீளம் வரை இருக்கும். ஒவ்வொரு போலித்தண்டும் ஒவ்வொரு குலை வாழைப்பழங்களைத் தரவல்லது. வாழைக்குலை ஈன்றப்பின்பு போலிதண்டு இறந்து இன்னொரு போலித்தண்டு அதனிடத்தைப் பிடிக்கிறது. வாழைப்பழம், முதன்மையாக மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் நீளமாக தோற்றம் அளிக்கும் ஆனால வாழைப்பழத்தின் நிறமும் அளவும் வடிவமும் இனத்துகினம் வேறுபட்டிருக்கும். வாழைப்பழங்கள் வாழைக்குலையில் வரிசையாக கொத்துக்கொத்தாய் (சீப்பு) அமைந்திருக்கும்.

http://ta.wikipedia....a.org/wiki/வாழை

46446376.jpg

Posted

வாழ்த்துக்கள் கோமகன் அண்ணா. இதில் பல பூக்களை அல்லது பூக்களின் தமிழ் பெயரை அறியக்கூடியதாக உள்ளது... உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள்....

Posted

வாழ்த்துக்கள் கோமகன் அண்ணா. இதில் பல பூக்களை அல்லது பூக்களின் தமிழ் பெயரை அறியக்கூடியதாக உள்ளது... உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள்....

மிக்க நன்றிகள் காதல் உங்கள் கருத்துப்பகிர்வுகளுக்கு . இத்தொடர் விரைவில் முடிவுக்கு வர இருக்கின்றது . இந்த பூந்தோட்டத்தில் உங்களைப்போலப் பல இளையவர்கள் வந்தது தோட்டக்காறனுக்குச் சந்தோசமே .

Posted

மனதுக்கு இதமளிக்கும்

மலர்ச்சோலை - என்றும்

மணங்கமழ வேண்டும்.

மனமாற வந்தவர்கள் மலர்பார்த்து

மகிழ்வுடனே திரும்ப வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரஸ்யா, ஈரானுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையின் காரணமாகவே அசாத்தின் அரசு கலைக்கப்பட்டது - துருக்கிய வெளிவிவகார அமைச்சர்.  We paved the way': Turkey negotiated fall of Assad with Russia, Iran, Turkish FM says - report https://m.jpost.com/middle-east/article-833382
    • புதிய விடியல் யாழ்ப்பாணம் reodotsSpn1uf91acm3a21h3ic28hh9t1lc300th6 8cch81787i63ah3fi0  ·  வைத்தியர் Mp அர்ச்சுனா பல்வேறுபட்ட திணைக்கள ரீதியாக செய்யற்படுகளை சரியான விதத்தில் திணைக்களத் தலைவர்களிடம் கேள்விகளை தொடுத்த வண்ணமே காணப்பட்டார் . விமர்சன ரீதியான பார்வை...... ஒரு கட்டத்தில் அரசாங்க உத்தியோகத்தர்கள் கணக்கு வழக்கில் திண்டாடிக் கொண்டிருந்த தருணங்களில் வைத்தியர் Mp அர்ச்சுனா சரியான கணக்கு வழக்கினை தெரிவித்துக் கொண்டிருந்தார். அமைச்சர் சந்திரசேகரன் சிறப்பான குண இயல்பு ஆளுமை அனைவரது பார்வையையும் பெற்றது .மாவட்ட ஒருங்இணைப்புக் குழுவின் தலைவர் என்ற வகையில் அவரது செயற்பாடுகள் மிகவும் சிறப்பானதாக இருந்தது. இடத்தில் அமைச்சர் சந்திரசேகரன் சொன்னார் இவரைப்போல பல கேள்விகளைக் கேட்கின்ற பொழுது தான் அரசாங்க நிறுவனங்களை சரியாக நெறிப்படுத்த முடியும் எனவே இவ்வாறானவர் தேவை எனவும் கருத்துரைத்தார். இந்த கூட்டத்தில் ஊழல் தொடர்பான முறைகேடுகள், முறைப்படுகள் தொடர்பில் பல்வேறுபட்ட விடயங்கள் ஆளுநருக்கு தெரியும் என்பதால் பல்வேறு பட்ட விடயங்களை உற்று நோக்கிய வண்ணமே வட மாகாண ஆளுநர் காணப்பட்டார். இந்த விடயத்தில் வடக்கு மாகாண ஆளுநர் பல்வேறுபட்ட விடயங்களில் திறம்பட செயல்பட கூடியவர் எனவே எதிர்வரும் காலங்களில் அவரது நிர்வாக ரீதியான பல திறமையான செயற்பாடுகளை எதிர்பார்க்கலாம். அத்துடன் சில இடங்களில் வைத்தியர் சத்தியமூர்த்தி தொடர்புடைய செயற்பாடுகளை நேரடியாக வைத்தியர்Mp Ramanathan Archchuna விமர்சித்தார். அங்கிருந்தவர்கள் பலர் வைத்தியர் சத்தியமூர்த்தி தொடர்பான ஏதோ ஒரு கண்ணோட்டத்தில் அவரை அவதானித்தவாறும் காணப்பட்டனர். இது தொடர்பில் அமைச்சர் சந்திரசேகர் அவர்கள் நிறுவன ரீதியான பிரச்சினைகளை தனிப்பட்ட ரீதியில் குறிப்பிட்ட நபர்கள் மீது தாக்குதல் வேண்டாம் என கேட்டுக் கொண்டார். ஒவ்வொரு மாவட்டத்திலும் இடம்பெறுகின்ற இந்த மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் முக்கியத்துவத்தை பொதுமக்கள் அனைவருக்கும் வைத்தியர் Mp அர்ச்சுனா என்று உணர்த்திவிட்டார். அதன் செயற்பாடுகள் அபிவிருத்தி சார்ந்ததாக இருக்கவேண்டும் எனவும் ஒவ்வொரு திணைக்களங்களையும் அதன் செயற்பாடுகளையும் சரியான விதத்தில் இயங்குகின்றதா??? என மேற்பார்வை செய்வது கேள்வி கேட்கின்ற உரிமை மக்களின் பிரதிநிதிகளுக்கு உண்டு என்பதை இன்று உணர்த்தினார். இவ்வளவு காலமும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை எவ்வாறு பயன்படுத்தினார்கள் என்பதற்கும் இன்று NPP அரசாங்கம் மற்றும் வைத்தியர் Mp அர்ச்சுனா கூட்டத்தை எவ்வாறு சிறந்த முறையில் பயன்படுத்தினார்கள் என்பதற்கு உதாரணமாகும் . இங்கே இடம்பெறுகின்ற அபிவிருத்தியை செய்யாமல் பாராளுமன்ற போய் கதைத்து பிரயோசனம் இல்லை என்பதை தெளிவாக தெரியப்படுத்தினார். எனவே அபிவிருத்தி தொடர்பான முன்மொழிவுகள் ஒரு வரைவை கொண்டு வருவதற்கு வைத்தியர்Mp அர்ச்சுனா முன்மொழிய அதனை சந்திரசேகர் தலைமையில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்டனர். இதில் என்ன விடயம் சிறப்பானது என்றால் அரசியல் தலையீடுகள் இல்லாமல் வீதிகள் அபிவிருத்தி செய்யப்படுவதே அதேபோல் அனைத்து விடயங்களும் இவ்வாறு கவனத்தில் கொண்டு செயல்பட்டால் எமது பிரதிநிதித்து முன்னேற்ற முடியும் என அனைவரும் ஏற்றுக் கொண்டனர். இந்த விடயம் இவ்வளவு காலமும் ஏன் இடம்பெறவில்லை??? உண்மையிலேயே NPP அரசாங்கம் ஒரு சிறந்த அரசாங்கம் என்பதை இந்த இடத்தில் பொது மக்களாகிய நாங்கள் பார்க்கின்றோம். அதேபோல் வைத்தியர் அர்ச்சுனாவின் கோரிக்கை மருத்துவ ரீதியாக இடம்பெற்ற பிழைகள் ஊழலை உரிய தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களில் எதிர்பார்ப்பாக உள்ளது. அதனை நிறைவேற்றுகின்ற சந்தர்ப்பத்தில் இந்த நாடு அனைத்து துறைகளிலும் முன்னேறும் என் இதன் மூலம் ஊழல் ஒழிக்கப்படுவதற்கு முதலாவது மணி ஆக இதனை அடிக்க வேண்டும் . அத்துடன் ஊழல்வாதிகள் வைத்திய துறையில் இருக்கின்ற ஊழல்வாதிகள் களையப்பட வேண்டும் உண்மையில் யாழ்ப்பாணத்தில் வைத்திய மாபியா என்று சொல்லப்படுகின்றது இதனை முற்றாக ஒழிக்க வேண்டும் இதற்கு நிர்வாகத்தை மாற்றி அமைத்து கட்டமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாண போதனை வைத்தியசாலையில் தற்பொழுது கடமையில் இருக்கின்ற பனிப்பாளர் உரிய தகைமைகள் இன்றி வந்தவர் என்பதையும் சபையில் சுட்டிக்காட்டிய Archchuna Ramanathan என் போஸ்ட் என்று சொல்லப்படுகிற முறையில் மஹிந்தவின் காலத்தில் கொண்டுவரப்பட்டவர் என்பதையும் அனைவருக்கும் தெளிவுபடுத்தினார். இதனைத் தெளிவு படுத்தியதன் மூலம் இது ஒரு அரசியல் சார்ந்த நியமனம் என்பதையும் சபையில் ஒரு வகையில் மறைமுகமாக தெரியப்படுத்தினார். உண்மையில் ஒவ்வொரு பொதுமகனும் செலுத்துகின்ற வரி பணத்தின் அதன் பெறுமதியை உணர்ந்தால் போல வைத்திய அர்ச்சுனா அனைத்து திணைக்கள ரீதியான கணக்கு வழக்குகளையும் மிகவும் துல்லியமாக சிறிய நேரங்களில் பார்த்து செலவழித்த பணம் எவ்வளவு செலவழிக்காத பணமும் எவ்வளவு என விழாவாரியாக கேள்விகளை கேட்டார். ஒரு கட்டத்தில் பத்து நாட்களுக்கு இவ்வளவு மில்லியன் பணத்தை நீங்கள் செலவழிப்பீர்களா எனவும் கேட்டார். அந்த இடத்தில் தான் அனைவரது எதிர்ப்பும் கிளம்பியது என்று கூறலாம் உண்மையில் அரச அதிகாரிகள் மக்களின் வரிப்பணத்தை சரியாக செலவழிக்க வேண்டும் அவசரப்பட்டு திட்டங்களை நிறைவேற்றி வேண்டும் என்பதற்காக 10 நாட்களில் வருடம் முடிகின்றது என்று திட்டங்களை அரைகுறையாக நிறைவேற்றாமல் பூரணமாக செவ்வனே அந்த வேலை இடம்பெறாது என்ற உண்மையாயின் சபையில் போட்டு உடைத்தார் . பணத்தை செலவழிக்க வேண்டும் என்பதற்காக செலவழித்து 100 நிறைவைக் காட்டுகின்றார்கள் என்பதை இன்று பொதுமக்கள் அனைவருக்கும் வைத்தியர் உணர்த்தினார் . இங்கே அமைச்சர் சந்திரசேகரன் அவர்களின் செயல்பாடுகள் ஊழலுக்கு எதிரானதாக இருந்தது. என்பதை அனைவரும் உணர்ந்து கொண்டனர் பலர் டக்ளஸ் DCC தலைவராக இருந்த காலத்தில் இவ்வாறு கதைத்தால் எம்பி அர்ச்சனாவை பிடித்து வெளியில் விட்டிருப்பார் என்று முன்பு இருந்த அரசாங்க காலத்தில் கருத்து சுதந்திரம் இல்லாமை தொடர்பாக கதைத்துக் கொண்டனர். இருந்த பொழுதிலும் அமைச்சர் சந்திரசேகரன் சிறப்பான முறையில் அனைத்து அரசாங்க நிறுவனங்களையும் சரியான விதத்தில் அதன் செயற்பாடுகள் ஆராயப்பட வேண்டும் என்ற ஒரு எண்ணத்தோடு அதன் மூலமாக பிழையான விதத்தில் வீண் செலவு செய்யாமல் பணத்தினை உரிய பெறுமதியோடு காத்திரமான செயற்பாடுகளை செய்வதை விரும்புவதாக காணப்பட்டார் என்பது அனைவரது பாராட்டுகளையும் பெற்றது . பல ஊழல்வாதிகளை தூக்கி வாரி போட்டது. சிறந்த ஒரு முன்மாதிரியான மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டமாக கருதலாம் இனிவரும் காலங்களில் அரச உத்தியோகஸ்தர்கள் அரசு அதிகாரிகள் பலர் சிறப்பாக வேலை செய்ய ஆரம்பிக்க போகின்றார்கள் என்பதை உணர்த்துகின்றது ..... உண்மையில் வேலை செய்யாமல் பணத்தினை பெறுவது இதன் மூலம் தான் நமது நாடு அகல பாதாளத்திற்கு சென்றது எங்கும் ஊழல் எதிலும் ஊழல் இனி வரும் காலங்களில் எதுவும் சரிவராது என்பதை கட்டியம் கூறுவதாக அமைந்துள்ளது . இப்படிக்கு ஏழை தமிழ் மகன் நீலன். முடிந்தவரை இதனை பகிருங்கள் இதன் மூலம் பல ஊழல்வாதிவாதிகளுக்கு இன்றைய செய்தியானது இறுதி மணியாக ஒலிக்கட்டும்.
    • Mr. Minus, போராட்ட காலப்பகுதியில்  இடம்பெற்ற தவறுகளை மூடி மறைக்க வேண்டும். அதுபோல புலம்பெயர்ஸ் டமில் வியாபாரிகளின் சுருட்டல்களையும் கண்டும் காணாது  கடந்து போக வேண்டும் என்கிறீர்களா,.?  😏  
    • அசாத்தை நீக்கிவிட்டு அந்த இடத்திற்கு அசாத்தை விட மனித உரிமையில்   முன்னேற்றகரமான  அரசையோ அல்லது கிளர்ச்சியாளர்களையோ கொண்டுவந்திருந்தால் நீங்கள் சொல்வது சரியாக இருக்கும்.  ஆனால் தற்போதைய கிளர்ச்சியாளர்கள் முன்னைய ஆட்சியாளர்களைவிட மோசமானவர்களெல்லோ,.? அசாத் தூக்கில் மாட்டிக் கொலை செய்தாரானால் கிளர்ச்சியாளர்கள் கழுத்தை அறுக்கிறார்கள் அல்லது உயரமான கட்டடத்தின் உச்சியில் அல்லது கோட்டை கொத்தளத்தின் உச்சியில் வைத்து கீழே தள்லிவிடும் ஆட்களல்லவா?  சிறுவர்களின் கழுத்தை அரிந்துவிட்டு அல்லாஹு அக்பர் என்கிறார்கள். பெண்களை பாலியல் அடிமைகளாக வைத்திருக்கிறார்கள். சிறுபான்மையினரை அழிக்கிறார்கள்.  அசாத் செய்தது பிழை என்று கூறும் தாங்கள் கிளர்ச்சியாளர்களது பக்கத்தை மூடி மறைப்பது பக்கச் சார்பானது அல்லவா,......? 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.