Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீங்கள் எல்லோரும் நன்றாக முன்னேற வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா போன்று பல அமைச்சர்களை மத்திய கல்லூரி உருவாக்க வேண்டும்: நீச்சல் குளம் திறந்துவைத்தார் ஜனாதிபதி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் எழுதேக்குள்ள வேண்டுமானால் சாதியில்லை அதோ,இதோ என்று எழுதலாம் ஆனால் இன்றும் புலம் பெயர் நாட்டில் கூட சாதி பார்க்கும் பழக்கம் இருக்குது...தங்கட பிள்ளைகள் தங்கள விட உயர்ந்த சாதியில் காதலித்தால் ஏற்கும் பெற்றோரால் தங்களை விட தாழ்ந்த சாதியில் காதலித்தால் ஏற்க முடிவதில்லை...தாழ்ந்த சாதியினர் கூட தங்களை விட உயர்ந்த சாதியில் தான் தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்ய விரும்புகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் யாழ்ப்பானி இல்லை என்று சொல்லுகிறீர்கள் அதிலிருந்தே புரிகின்றது உங்களுக்கு உள்ளேயும் ஒரு பிரதேசவாதம் இருக்கு என்பது

எல்லோருக்குள்ளும் தாம் பிறந்த இடத்தைப் பற்றிய பெருமை இருக்கும். அது தவறில்லை. அதே வேளை வேறு இடங்களைச் சேர்ந்தோரை இழிவாகப் பார்க்கவும், நடாத்தவும் முனைபவர்கள் இங்கு அதிகம்தான்.

தமிழர்கள் ஒருவரை ஒருவர் அனுசரித்துப் போவது குறைவு. இதனை மாற்ற "அரவணைத்து"ப் பழகும் கலையை தமிழர்கள் பழகவேண்டும்.

யாழில் எழுதேக்குள்ள வேண்டுமானால் சாதியில்லை அதோ,இதோ என்று எழுதலாம் ஆனால் இன்றும் புலம் பெயர் நாட்டில் கூட சாதி பார்க்கும் பழக்கம் இருக்குது...தங்கட பிள்ளைகள் தங்கள விட உயர்ந்த சாதியில் காதலித்தால் ஏற்கும் பெற்றோரால் தங்களை விட தாழ்ந்த சாதியில் காதலித்தால் ஏற்க முடிவதில்லை...தாழ்ந்த சாதியினர் கூட தங்களை விட உயர்ந்த சாதியில் தான் தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்ய விரும்புகின்றனர்.

இப்போது புலத்தின் பெருமையான தண்ணி அடி பாட்டிகளுக்கே தங்கள் கூட்டங்களுக்குத்தான் இன்விடேசன் போவதாக கேள்வி.

  • கருத்துக்கள உறவுகள்

அங்கால எங்கையென் வன்னிப் பக்கம் போய் ஒரு ஓரமா நின்று கூத்தடிப்பார்கள் தானே..! :):icon_idea:

இந்த சொற்பிரயோகத்தின் பின்னணியில் காணப்படும் வன்னி மக்கள் பற்றிய பிரதேசவாத அபிப்பிராயம் மிகவும் கவலைக்குரியது. யாழ்ப்பாணத்தில் இருந்து இடம் பெயர்ந்து வன்னிக்கு சென்ற மக்களுக்கும், போராளிகளுக்கும், அதன் தலைமைக்கும் இடம் கொடுத்து, வரவேற்று, உணவளித்து, வாழ்வளித்து ,அதனாலேயே அனைத்தையும் இழந்து ஏதிலிகளான எம் மக்களை பரிகசிக்கும் மனப்பான்மை அந்த சொற்பிரயோகத்தில் தெரிகிறது. இது தவறு. இதனை மீண்டும் எவரும் செய்யாதீர்கள்.

அங்கால எங்கயென் வன்னிப்பக்கம் என்ற தொனியில் ஏன் வன்னி என்றால் உங்களுக்கு என்ன கேவலமா?

தமது தவறுகளை ஏற்றுக்கொண்டு திருந்த மறுப்பவர்கள் முன்னேறுவதும் இல்லை, வெற்றி பெறுவதும் இல்லை. ஈழத்தமிழரின் தொடர்ச்சியான தோல்விகளுக்கான முக்கியமான காரணங்களில் இதுவும் ஒன்று.

மறுவளமாக, சிங்களவர் தலைமைகள், குறிப்பாக இராணுவத்தலைமையும் இராஜதந்திர தலைமையும் பெருமளவில் தங்கள் தவறுகளை அடையாளம் கண்டு திருத்திக் கொண்ட காரணத்தாலேயே விடுதலைப் புலிகளை வெற்றி கொள்ள முடிந்தது. அவர்கள் ஊடறுத்து தாக்கும் முறைகளையும், விடுதலைப்புலிகளின் அமைப்புக்குள்ளேயே ஊடுருவி முக்கியமான தலைவர்கள் என்று பகிரங்கமாக அறிவிக்கப்பட்டவர்களையே தமதாக்கி செயற்படும் ஆற்றலை பெற்று கொண்டமைக்கும், முதல் காரணம் தாம் திருந்த வேண்டிய இடங்களை அவர்கள் அடையாளம் கண்டு அதற்கான முயற்சிகளை மேற்கொண்டதே.

எமது மக்கள் மத்தியில் உள்ள பிரதேசவாத, சாதியவாத, இயக்கவாத அடக்குமுறைகளும் ,ஒதுக்குமுறைகளும் எமது தோல்விகளுக்கான முக்கியமான காரணம். இதனை நாம் திருத்திக் கொள்வது எமது வெற்றிக்கான முதற்படியாக அமையும்.

வன்னியில் தமிழன் சாகும்போது தமிழ்நாட்டுத்தமிழன் தீக்குளித்தான் யாழ்பாணத்தில் திருவிழாக்கொண்டாடியது மறந்துபோச்சா?

வன்னியில் செத்த தமிழர்கள் வன்னி தமிழர்கள் மட்டுமல்ல, பெருமளவிலான யாழ்ப்பாண தமிழர்களும் தான். மக்கள் திருவிழா கொண்டாடுவதற்காகவும் தான் போராடி மாண்டு போனார்கள். மக்களது பண்பாட்டு விழுமியங்களில் திருவிழாக்களும் அடங்கும். இதற்காக தான் மக்களுக்கு விடுதலை தேவைப்படுகிறது. யாழ்ப்பாண மக்கள் உலகின் நீண்டகால போர் ஒன்றினுள் வாழ்கிறார்கள். இந்த போர் முடியும்வரை மக்கள் வாழக் கூடாது என்று எதிர்பார்த்தால் அதுவே மக்களின் பண்பாட்டை அழிக்கும் ஆயுதமாகிவிடும். காரணம் ஒரு தலைமுறையே தமது பண்பாட்டை மறந்து போய்விடும்.

ஒரு இனத்தின் அடையாளத்தை அழிப்பதற்கு, சிறந்த வழி ஒரு தலைமுறைக்ககு அந்த அடையாளத்தை இல்லாமல் செய்வதாகும்.

சிங்களத்துடன் அதிக ஐக்கியமாகிப்போவதும் அதிக அடிமைத்தனமும் புத்திஜீவிகளிடமே உள்ளது. அரச உத்தியோகம் அரசை அண்டிப்பிழைத்தல் அரசுக்கு சேவகம் செய்தல் இதுவே கௌரவம் இதுவே மேலாண்மை என யாழ்பாணியமே ஏகலும் போதிக்கின்றது. இது இப்போது உள்ள சிங்கள அரசை அண்டிப்பிழைப்பது மட்டுமல்ல ஆங்கிலேய ஆட்சிக்காலத்திலும் இதுவே நடந்தது.

எந்த நாட்டிலும் வாழும் மக்கள் அரசுடன் ஒத்துழைத்தே வாழ முடிகிறது. இவ்வாறாகவே உலகம் இயங்குகிறது. அரசை எதிர்ப்பவர்கள் போராடி ஒன்றில் அழிந்து போகிறார்கள் அல்லது அரசமைத்து மற்றவர்களை தமது அரசை அண்டி வாழ வற்புறுத்துகிறார்கள். ஆனால் இவ்வாறாக அரசை எதிர்த்து மாண்டு போக அல்லது அரசமைக்க பெருமளவு மக்களுக்கு ஆற்றலோ அறிவோ விருப்பமோ இல்லை.

இலங்கையில் பெருமளவிலான தொழில்வாய்ப்புகள் அரச ஊழியமாக இருக்கின்றன. படித்தவர்களுக்கு இவ்வாறான அரச ஊழியத்தில் உழைக்கும் சந்தர்ப்பமே அதிகமாக உள்ளது. இது கௌவரவமோ மேலாண்மையோ அல்ல பொருளாதார ரீதியில் சாத்தியமான வாழும் ஒரு வழி.

யாழ்பாணியத்தை வைத்தே ஈழத்தை அடக்கியாள முடியும் என்பது சிங்களத்துக்கும் தெரியும் அண்மையில் வந்த இந்தியப்பிரதிநிதி அப்துல் கலாமுக்கும் தெரியும். அதிலும் குறிப்பாக கல்லுரிகளிலும் கோயில்களிலும் தான் இதற்கான சாவி இருப்பதும் நன்கு தெரியும்.

தலைமைத்துவம் வளரும், வாழும் இடங்கள் கோவில்களும், கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் என்பது உலகறிப்பட்ட ஒன்று. இதனாலேயே புரட்சிகளும் மாற்றங்களும், கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் கோவில்களிலும் இடம்பெறுகின்றன.

தமிழரின் பெரும்பாலான கல்லூரரிகளும் பல்கலைக்கழகமும் கோவில்களும் யாழ்ப்பாணத்திலேயே இருக்கின்றன. யாழ்ப்பாணம் இலங்கையின் இரண்டாவது பெரிய நகரமாக முன்னர் இருந்தது இதற்கான காரணமாக இருக்கலாம்.

kp-dauglas-karuna-pillaiyaan-mahinda.jpg

தேசியத் தலைவரின் பாசறையில் வளர்ந்தவர்கள் எவ்வாறு வெற்றி கொள்ளப்பட்டார்கள் என்பதை இந்த படம் காட்டுகிறது. பிரதேசவாதம், இனவாதம், மொழி, மதம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்ட இவர்களின் கூட்டு முயற்சி, ஒரு காலத்தில் வெற்றி கொள்ளப்பட முடியாதது என்று கருதப்பட்ட விடுதலைப்புலிகளையே அழிக்க முடிந்திருக்கிறது என்றால், அந்த ஒற்றுமையின் சக்தியுடன், பிரதேச, இயக்க, இன முரண்பாடுகளுடன் அல்லல்படும் ஈழத்தமிழினத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது … கேள்விக்குறிகளே எஞ்சும்.

Edited by Jude

தலைப்பு ....

நீங்கள் எல்லோரும் நன்றாக முன்னேற வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா போன்று பல அமைச்சர்களை மத்திய கல்லூரி உருவாக்க வேண்டும்: நீச்சல் குளம் திறந்துவைத்தார் ஜனாதிபதி.

... இது!

அத்தியடிக்குத்தியை போல் ... சிங்களத்துக்கு ...

1. கூட்டிக்கொடுப்பவன்

2. காட்டிக்கொடுப்பவன்

3. போட்டுக்கொடுப்பவன்

4. கழுவி விடுபவன்

5. ...

.... போல், யாழ் மத்திய கல்லூரி தலைவர்களை உருவாக்க வேண்டுமா? இல்லையா? என்பதனை இங்கு விவாதியுங்கள்!!

அதை விடுத்து ... ஏனப்பா, பின் ஆட்டுக்குள் மாட்டை ...??????

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எல்லோரும் நன்றாக முன்னேற வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா போன்று பல அமைச்சர்களை மத்திய கல்லூரி உருவாக்க வேண்டும்: நீச்சல் குளம் திறந்துவைத்தார் ஜனாதிபதி.

கல்லூரிக்குள் எதற்கு நீச்சல் குளம்.. சரி குளித்து விட்டு போகட்டும்.. அல்லது நீச்சல் பழகட்டும்.. (ஈழத்தில்... கிணறு ..ஆறு.. ஏரி குளம்... இல்லாது போல) அதென்ன டக்லஸ் போன்று..? அவருடைய மகன்கள் அங்கிட்டு டூயட்டு பாடவா..?

டிஸ்கி:

பாம்பையும்.. பகையையும்... சிசுவுடன் வேரறுக்க வேண்டும் என சொல்கிறது .. சாணக்கிய நீதி.(அர்த்த சாஸ்திரம்..) (எ.கா: சோனியா மைனா) இந்த கைகூலியின் ரத்தங்களும் ஈழத்தில் பரவாமல் தடுக்க வேண்டும்..வேம்பு விதையை போட்டால் ... சாத்துகுடி.. ஆப்பிள்... வரபோவது இல்லை....(எல்லாம் ஒரே மாதிரிதான் இருக்கம்)

மறுவளமாக, சிங்களவர் தலைமைகள், குறிப்பாக இராணுவத்தலைமையும் இராஜதந்திர தலைமையும் பெருமளவில் தங்கள் தவறுகளை அடையாளம் கண்டு திருத்திக் கொண்ட காரணத்தாலேயே விடுதலைப் புலிகளை வெற்றி கொள்ள முடிந்தது. அவர்கள் ஊடறுத்து தாக்கும் முறைகளையும், விடுதலைப்புலிகளின் அமைப்புக்குள்ளேயே ஊடுருவி முக்கியமான தலைவர்கள் என்று பகிரங்கமாக அறிவிக்கப்பட்டவர்களையே தமதாக்கி செயற்படும் ஆற்றலை பெற்று கொண்டமைக்கும், முதல் காரணம் தாம் திருந்த வேண்டிய இடங்களை அவர்கள் அடையாளம் கண்டு அதற்கான முயற்சிகளை மேற்கொண்டதே

தெளிவான விளக்கம்.

சிங்களவர்கள் இராஜதந்திர செயல்பாடுகளிலும் மிக அற்புதமாகச் செயல்படுகிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அத்தியடிக்குத்தியை போல் ... சிங்களத்துக்கு ...

1. கூட்டிக்கொடுப்பவன்

2. காட்டிக்கொடுப்பவன்

3. போட்டுக்கொடுப்பவன்

4. கழுவி விடுபவன்

5. ...

சிங்களவன் அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சரின் அடிப்படைத்தகமைகள்

இந்த குறுநில மன்னனுக்கு மேலதிகமாக உண்டு ....... :lol::icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.