Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்கா- இலங்கை - இந்தியா

Featured Replies

கொழும்பு டெலிகிராப் இணையதளத்தில் கடந்த மாதத்தில் இலங்கை தொடர்பாக பிராந்திய, சர்வதேசிய மட்டங்களில் நடந்து வரும் நகர்வுகள் தொடர்பான செய்திக் கட்டுரை ஒன்று வெளியாகியிருக்கிறது. அதனை அடியொற்றி தமிழ் இணையதளங்களிலும் அந்தச் செய்தி தொடர்பான அனுமானங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

எம்.எஸ்.கிருஷ்ணாவின் இலங்கைப் பயணம், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகத்திலுள்ள தென் ஆசியப் பிராந்தியம், மனித உரிமை, போர்க்குற்றத் துறைகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளின் இலங்கை விஜயங்களின் பின்னணியை கொழும்பு டெலிகிராப் கட்டுரை பகுப்பாய்வுக்கு உட்படுத்துகிறது.

இலங்கை சுதந்திரத் தினக் கொண்டாட்டங்களில் பங்கு பெறாமல், அமெரிக்க அதிகாரிகளைச் சந்திக்காமல்,இந்தியாவிலுள்ள ஷிர்டி சாய்பாபா கோவிலுக்கு அவசரமாக விஜயம் செய்த இலங்கைப் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாயாவின் மன உலைச்சல்கள் என்ன என்பதனையும் கட்டுரை பகுப்பாய்வுக்கு உட்படுத்துகிறது.

நடந்தேறிய சில நிகழ்வுகளையும், நிகழ்வுகளின் பின்னுள்ள இடைவெளிகளையும் எடுத்துக் கொள்ளும் கட்டுரை,எதிர்வரும் ஐநா மனித உரிமைக் கூட்ட அமர்வுகளுக்கு முன்பாக, இலங்கையில் எதிர்காலத்தில் என்ன நடக்கக் கூடும் என்பது தொடர்பான சில அனுமானங்களை முன்வைத்திருக்கிறது.

ஐநா மனித உரிமை கூட்டத்தொடரில் அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளால் இலங்கைக்கு எதிராகக் கொண்டவரப்படவிருக்கும் தீர்மானத்திற்கான முன்மொழிவினை அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் அதிகாரபூர்வமாக இலங்கை வெளிவிவகார அமைசசர் ஜி.எல்.பிரீசுக்கு அறிவித்திருக்கிறார்.

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை நடைமுறைப்படுத்துமாறு கோரியிருக்கும் இந்நாடுகள், போர்க்குற்றங்கள் தொடர்பாக இந்த அறிக்கை கவனமெடுக்கவில்லை என்றும் தெரிவித்திருக்கின்றன.

இந்திய- அமெரிக்க ராஜாங்க அதிகாரிகளின் விஜயங்களுடன் இவையே வெளிப்படையாக எவருக்கும் தெரிந்த நிகழ்வுகள்.

இந்த நிகழ்வுகளின் பின்னிருந்த நகர்வுகள் என்ன?

கோத்தபாய ராஜபக்சாவுக்கும் போர்முனைத் தளபதிகளுக்கும் விடுதலைப் புலிகளின் தலைவர்களை முழுமையாகக் கொன்றொழிப்பது தொடர்பாக நடந்த உரையாடல் பதிவு அமெரிக்காவிடம் இருக்கிறது. சரணடைய வந்தவர்கள் தொடர்பாக பசில் ராஜபக்சேவுக்கும், பாலித கோகனேவுக்கும் நடந்த அஞ்சல் தொடர்புகளின் பதிவு அமெரிக்காவிடம் இருக்கிறது.

ராஜபக்ச சகோதரர்கள் போர்க்குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்பதற்கான வலுவான ஆதாரங்கள் இவை.

இதுவன்றி நல்லிணக்க ஆணைக்குழு சுட்டிக்காட்டுகிறபடி யுத்தத்தின் இறுதிநாட்களில் கொல்லப்பட்டவர்கள் குறித்து எந்தக் கணக்கீடுகளையும் அரசு மேற்கொள்ளவில்லை.

இந்த மூன்று தரவுகளையும் கொண்டு இலங்கையைத் தனது நிகழ்ச்சி நிரலின் கீழ் கொண்டுவர அமெரிக்கா இலங்கையின் மீது அழுத்தத்தைப் பிரயோகிக்கிறது என்கிறது கட்டுரை.

யுத்தக் காலங்களிலும் சரி, இன்றும் சரி, இலங்கையின் வலுவான கூட்டாளியாக இருக்கிற இந்தியாவையும் தனது செல்வாக்கின் கீழ் கொணர அமெரிக்கா முயல்கிறது.

இலங்கைக்கு பொறுப்புக் கூறுவதற்கு இன்னுமொரு வாய்ப்பைத் தருமாறு இந்தியா அமெரிக்காவைக் கோருகிறது. இலங்கைப் பிரச்சினையில் அமெரிக்காவுக்கும் இந்தியாவிற்கும் இடையறாத உரையாடல் நடந்து வருகிறது. இந்தியா முழுமையாக அமெரிக்கச் சார்பு நிலைபாடு எடுக்கும் எனச் சொல்ல முடியாது.

என்றாலும், இலங்கையை இந்த இக்கட்டிலிருந்து தப்ப வைப்பதற்காக தமி;ழ் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசுக்கும் இடையில் அதிகாரப்பகிர்வு ஒப்பந்தமொன்றினைக் கைச்சாத்திட எம்.எஸ்.கிருஷ்ணா வலியுறுத்தினார். தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தன் பிரீசுக்கு ஒரிருநாட்கள் கால அவகாசம் தருமாறு கிருஷ்ணாவைக் கோரினார்.

தனது தமையனான கோத்தபாய நாட்டில் இல்லாதபோது இத்தகைய ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ள முடியாது என ராஜபக்ச தெரிவித்தார் என்கிறது கொழும்பு டெலிகிராப் செய்திகள்.

மனித உரிமைக் கூட்டத்தொடரின் முன்பாக இலங்கை ஜனாதிபதி சில அறிவிப்புக்களை வெளியிடலாம் என்கிறது கொழும்பு டெலிகிராப்.

ஜனநாயகக் கோருதல்களுடன் சரத்பொன்சேகாவை விடுதலை செய்யலாம். அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இதிலென்ன நாட்டம்? இலங்கையில் வலுவான எதிர்க்கட்சியே இல்லாமல் போய்விட்டது. சரத்பொன்சேகாவின் விடுதலை இந்நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

தமிழ்தேசியக் கூட்டமைப்புக்கும் இலங்கை அரசுக்கும் அதிகாரப் பகிர்வு தொடர்பாக ஒரு ஒப்பந்தம் உருவாகலாம். நல்லிணக்க ஆணைக்குழ பரிந்துரைகளைச் செயல்படுத்த ஒரு கால அளவை இலங்கை அரசு அறிவிக்கலாம்.

இதன் மூலம் தனக்கான சவக்குழியை ராஜபக்ச தானே தோண்டத் துவங்குவார் என்கிறது கொழும்பு டெலிகிராப்பின் அறிக்கை.

அரசியல் என்பது சாத்தியங்களின் கலை என்று கொள்வோமானால், இலங்கையின் மீதான அமெரிக்காவின் அழுத்தங்கள் இந்த நிலைமையை நோக்கித்தான் செல்கின்றன என்பதை அவதானிக்க முடியும்.

இந்தியா அமெரிக்காவின் செல்வாக்கிற்கு உட்படுமா? இது மிகமுக்கியமானதொரு கேள்வி.

லிபியாவின் கடாபி விஷயத்தில் சீனாஇரஸ்யாவுடன் நின்ற இந்தியா சிரியாவின் சதாத் விஷயத்தில் அமெரிக்க நிலைபாட்டையே எடுத்தது.

புதுதில்லியை மையமாகக் கொண்ட அனைத்து ஆப்ரிக்க, இலத்தீனமெரிக்க நாட்டுப் பிரதிநிதிகளை இலங்கை கொழும்புக்கு அழைத்தது, ராஜபக்சேவின் பாகிஸ்தான் விஜயம் போன்ற நகர்வுகள் புதுதில்லிக்கு ஒப்புதலான நகர்வுகள்தானா?

இதனை எவரும் திட்டவட்டமான சொற்களில் சொல்லமுடியாது.

அமெரிக்கா எந்த அளவு இந்தியாவின் மீது இப்பிரச்சினையில் செல்வாக்கு செலுத்தும் என்பதனைப் பொறுத்தே ராஜபக்ச சகோதர்களின் எதிர்காலம் இருக்கப் போகிறது.

கொழும்பு டெலிகிராப்பின் அனுமானங்களும் இதனைப் பொறுத்தே அமையும்.

மனித உரிமை, போர்க்குற்றம், ஜனநாயகம் என்பது உலக அளவில் அமெரிக்க-மேற்கத்திய அரசியல் நலன் விரிவாக்கத்திற்கான அரசியல் பொறிமுறை. மத்தியக்கிழக்கு முதல் தென் ஆசியா வரை அதுவே அதனது கொள்கை. எந்த நாடு, இயக்கம் என்று பார்க்காமல் அது இந்தக் கொள்கையை முன்னெடுக்கும்.

தமிழ்தேசியக் கூட்டமைப்பு என்பது அந்தச் சதுரங்க மேடையில் ஒரு காய்.

இதே வகையில்தான் இந்திய பிராந்திய நகர்வுகளுக்கான சதுரங்கக் காய்தான் தமிழ்தேசியக் கூட்டமைப்பு.

ஆனால், இலங்கையைப் பொறுத்து அமெரிக்காவைப் போல இந்தியாவுக்கு ஜனநாயகம், மனித உரிமை, போர்க்குற்றம் போன்ற மதிப்பீடுகளின் பாலான எந்த அரசியலும் இல்லை. அதனது அபிலாஷைகள் அப்பட்டமான பிராந்திய பொருளியல், அரசியல் மேலாண்மை எனும் அடிப்படையிலானது.

தனது நலன்கள் எனும் அடிப்படையிலேனும் இலங்கை தொடர்பான இந்தியாவின் அடிப்படைக் கொள்கைகளில் மாற்றம் ஏற்படாத வரையில் ராஜபக்ச சகோதரர்கள் நிம்மதியாக நித்திரை கொள்வார்கள்.

இதுவே தென் ஆசியப் பிராந்திய அரசியல் யதார்த்தம்

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleID/73526/Default.aspx

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள், வீணா!

நல்லதொரு ஆய்வை இணைத்தமைக்கு!

பெண் மனதின் ஆழத்தைக் கூட அளந்துவிடலாம்!

ஆனால், இந்தியாவின் நாடித்துடிப்பை அறிவது மிகவும் கடினம்!

ஒரு 'யோக சமாதி' நிலையிலேயே அதன் நாடித்துடிப்பு, எப்போதும் இருக்கும்!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றிகள், வீணா!

நல்லதொரு ஆய்வை இணைத்தமைக்கு!

பெண் மனதின் ஆழத்தைக் கூட அளந்துவிடலாம்!

ஆனால், இந்தியாவின் நாடித்துடிப்பை அறிவது மிகவும் கடினம்!

ஒரு 'யோக சமாதி' நிலையிலேயே அதன் நாடித்துடிப்பு, எப்போதும் இருக்கும்!!!

யோக சமாதி ஒன்றும் இல்லை.   காசை எறிந்தால் கையை நாடி பிடிக்க தருவான்.

கொள்கைக்கும் இந்திய இரானிய குடும்ப ஆட்சிக்கும் ஒரு தொடர்பும் இல்லை.

இந்தியா இலங்கையில் தமிழர்கள் விடயத்தில் அமெரிக்காவின் செல்வாக்கை விரும்பாது. எனவே எவ்வாறாயினும் பேச்சுவார்த்தை நாடகத்தை உயிர்ப்பிக்க முயலும். அதன் மூலம் தற்போதைய நிலைமையை சமாளிக்க விரும்பும்.

இங்கே உறுதியாக நிற்கவேண்டியவர்கள் கூட்டமைப்பினர். அவர்கள் ஜெனிவா போவதா இல்லையா என்பதே டெல்லி தான் முடிவு செய்யும். அற்ப சொற்பங்களுக்கு அடிபணியாமல் இந்திய - அமெரிக்க நலன்களுக்கு நடுவே தாமும் உரிமையை வென்றெடுக்கும் சந்தர்ப்பத்தை நழுவவிடக்கூடாது.

எல்லாப் பத்திரிகைகளும் ராசபக்சாகளின் இரகசிய அரசியலை வைத்து நல்ல புதிய வியாபாரங்கள் கண்டுபிடித்து விட்டார்கள்.

ஒரு வரி செய்தி கிடைத்தால் ஒரு ஆராச்சிக்கட்டுரை என்றாகிவிட்டது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Read this also:

(12 February 2012 - 10:59 PM) Mr. Blake Do You Want Mercenaries Or To Twist The Arms Of US Citizens?Are they really concerned or do they want to play with human rights?http://www.thesundayleader.lk/2012/02/12/mr-blake-do-you-want-mercenaries-or-to-twist-the-arms-of-us-citizens/

இக் காலகட்டத்தில் இந்தியப் பயங்கரவாதிகளின் அடிவருடிகள் என்னமோ அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்தே இனப்பிரச்சினைத் தீர்வு அழுத்தத்தை ஏற்படுத்துவதாக சரடு விடுகிறார்கள். இதில் உண்மையில்லை!

இந்தியக் காட்டுமிராண்டிகள் தமது இருப்பை தக்கவைக்க இத்தகைய கட்டுக் கதைகளை முன்வைக்கின்றனர்.

தமிழினப் படுகொலையில் இந்திய காட்டுமிராண்டி ஜனநாயகவாதிகளின் முழுமையான பங்களிப்பை முக்கிய உலகத் தலைவர்கள் அறிந்துள்ளார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

A group of influential members of Congress have urged President Barack Obama to strengthen ties between the United States and Sri Lanka, noting Sri Lanka’s May 2009 triumph over terrorism, its flourishing trade ties with U.S. companies and its regional strategic importance, the Sri Lankan Embassy in Washington stated.

“After three decades of internal strife, Sri Lanka has an opportunity to move forward as a unified nation guided by its

democratic ideals and institutions,” the letter states.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------

Those members of Congress who signed the letter include Representatives Kingston (R-Ga.,), Heath Shuler (D-N.C.), Ed Royce (R-Calif.), Judy Chu (D-Calif), Ben Chandler (D-Ky.), Hansen Clark (D-Mich.,), Daniel Lapinski (D-Ill.), David Reichert, Mike Pompeo (R-Kan.,) Jeff Duncan (R-S.C.), Michael T. McCall (R-Tx.), Frank Pallone (D-N.J.)

Follow the below link to download a copy of the letter in PDF :

http://slembassyusa.org/downloads/Congressional%20Letter2012023.pdf

Please write to the following (and urge US residents):

The Honorable Congresswoman Judy Chu (D-Calif),

Chief of Staff:

Amelia.Wang@mail.house.gov

Communication Director:

Allison.Rose@mail.house.gov

The Honorable Congressman Ben Chandler (D-Ky.),

Chief of Staff:

denis.fleming@mail.house.gov

Comm Director:

meghan.groob@mail.house.gov

The Honorable Congressman Hansen Clark (D-Mich.,),

Senior Advisor:

Kim Bowman

kim.bowman@mail.house.gov

The Honorable Congressman Daniel Lapinski (D-IL.),

Chief of Staff:

eric.lausten@mail.house.gov

Comm Director:

nathaniel.zimmer@mail.house.gov

The Honorable Mike Pompeo

Chief of Staff:

mark.chenoweth@mail.house.gov

Comm Dir:

Rachel.Taylor@mail.house.gov

The Honorable Jeff Duncan

Chief of Staff:

lance.williams@mail.house.gov

Comm Dir:

Allen.Klump@mail.house.gov

The Honorable Michael McCaul

Chief of Staff:

greg.hill@mail.house.gov

Comm Dir:

mike.rosen@mail.house.gov

The Honorable Frank Pallone, Jr.

Chief of Staff:

Jeff.carroll@mail.house.gov

Comm Dir:

ray.zaccaro@mail.house.gov

GTVவெளிச்சம் :ஈழ விதலை போராட்டம் இந்தியாவின் வகிபாகம் அன்றும் இன்றும்

சர்வதேச சமூகம் என்ன செய்கிறது? ஒரு விமர்சனம்.

கலந்து கொள்வோர்: மனித உரிமைகள் செயல்பாட்டாளர் கிருபாகரன், எழுத்தாளர் சேனன் மற்றும் தினேஷ் குமார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.