Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முகத்தாருக்கு பிரியாவிடை......!

Featured Replies

தாயகம் திரும்பும் முகத்தார் ஐயா பயணம் இனிதே அமைய வாழ்த்துகிறேன்

  • Replies 65
  • Views 11.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

முகத்தான் ஊருக்கு போனாலும் அடிக்கடி இந்தபக்கம் வந்து போடாப்பா மற்றைய உறவகளை போலவே சாத்திரியும் யாழ் கள் வாசலில் காத்திருப்பேன் மனைவி பிள்ளைகளுடன் சந்தோசமாய் இரு அதோடை எங்கடை மருதடி பிள்ளையாரை நான் சுகம் கேட்டதாக சொல்லு ஊருக்கு வரேக்கை சந்திக்கிறன்

அன்புடன் சாத்திரி :lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

முகத்தார் யாழ்ப்பாணத்தில கனனி, இன்ரர் நெட் இருக்குத்தானே? (என்ன 1 மணித்தியாலத்துக்கு 50 ரூபா சார்ச் பன்னுவாங்க,,) கிழமையில 2 தரம் வந்துட்டுப்போகலாம் தானே.... பொன்ஸ்சை சுகம் கேட்டதா சொல்லுங்க,,, பொன்ஸிட்ட சொல்லுங்க, எனக்கு இப்ப பல உறவுகள் (பேரன், பேத்தி, மகள்,மகன், நண்பர்கள், நண்பிகள்) இருக்கெண்டு,, அப்படியே அடிக்கடி எம்.எஸ்.எனுக்கும் வந்துட்டுபோங்க,,, :lol:

மாதத்தில 5 தரம் எண்டால் வாங்கப்பா..... தாய் நாட்டிற்குத்தானே போறியள்,, அதால கவலை இல்லை,, சந்தோசமா போங்க,,, :wink: :P :P

இவ்வளவு நாளும் மொட்டாக்கோட டூயட், எனி என்ன பொன்ஸேட டூயட்டா? மச்சக்காரனப்பா.... :wink: :lol::lol:

அன்பின் முகத்தார்;

இந்தத் தலைப்பு பிழையென நினைக்கிறேன். பிரியாவிடை பாலவன தேசத்துக்குத்தான், யாழ் களத்திற்கல்ல!!

உங்களது கருத்துக்கள் சிரிக்க மட்டுமல்ல, சிந்திக்கவும் வைத்தவை. உங்கள் எதிர்காலம் சிறப்பாக இருக்க ஆண்டனை வேண்டுவதோடு, தாயகத்திலிருந்தும் தொடர்ந்தும் எம்முடன் இணைந்திருங்கள்.

வணக்கம் முகத்தார் அங்கிள்(மு.அங்கிள்),

என்றைக்கும் உங்களுக்கு நான் வணக்கம் சொன்னது கிடையாது. எப்பவுமே உங்கள் நக்கலுக்கு பதிலுக்கு எப்படி நக்கல் செய்யலாம் என்று தான் யோசித்து பிடித்து உங்களை நக்கல் அடிப்பேன். இப்போது..நீங்கள் போவதாய் அறிய..மனசுக்கு உண்மையாவே கவலையா இருக்கு.

ஆனாலும் நீங்கள் தாயகம் செல்வதையொட்டி சந்தோசமாக தான் இருக்கின்றது. தாயகத்திலிருந்து எத்தனையோ பேர் வருகிறார்கள்..நீங்களும் அப்படி வழமை போல..உங்கள் நகைச்சுவைகளோடும், சிந்திக்கும் கருத்துக்களோடு எங்களோடு இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்... :lol:

சந்தோசமாக சென்று வாருங்கள்.....

முகத்தார்... களத்தில் ஏதோ சுமையை இறக்கிவைக்க... முயன்றார்போல் தெரிகிறது எனதுபார்வையில்... பிரியாவிடைதான் மிச்சமாகுமோ... அவரால் இந்த உண்மையை இப்ப சொல்லமுடியுமோ.... :? அப்படி ஒன்றும் இல்லைஎன்றால் என்னை மன்னிக்க முகத்தார்... :oops: மீண்டும் சந்திப்போம்... மகிழ்சியுடன் செல்லாவிடினும்... ஈழம் உங்களை கட்டாயம் மகிழ்விக்கும். 8) (கொஞ்சகாலம்... பின் பொருளாதரத்தை பொறுத்து) :idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெட்பிரன்ட்.. திரு அன்பகம் இல்லாத குறையை நிவர்த்தி செய்கிறீர்கள் போல கிடக்கு.. சரி சரி முகத்தாருக்கு விளங்கினால் போதும் நீங்க என்ன சொல்றியள் என்று. :lol:

முகத்தாரின் தாயகப் பயணத்திற்கு எனது வாழ்த்துக்கள் யாழுக்கு வருவீர்கள் என்ற நம்பிக்கையில் வாழ்த்துகின்றேன்.

முகத்தார்

வேலைக்கு வந்த இடத்தை விட்டுத்தானே செல்கிறீர்கள்.

இது எம்மை பிரிக்காது.

தொடர்ந்து களம் வழி வருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

தான் பிறந்த மண்ணை விட்டு

உழைப்புக்கும் - உயர்வுக்குமாய் வந்த மக்களது

கண்ணீரிலான வாழ்வு

தாக்கத்துக்குள்ளானவர்களால் நிச்சயம்

புரிந்து கொள்ளக் கூடியது.

நாம் புலம் பெயர்ந்த பின்

பட்ட இன்னல்களும் வார்த்தைகளால் சொல்ல முடியாதவை.

அவை இப்போது பழக்கமாகி விட்டன.

உங்கள் வாழ்வு மென்மேலும் உயர்வு பெற்று

வளமாக வாழ வாழ்த்துகிறேன்.

நட்புகள் தொடரட்டும்...............

வணக்கம் முகத்தார்,

களத்தில் உங்கள் நகைச்சுவையான, சிந்திக்கத்தக்க கருத்துக்கள் மூலம் அனைவரையும் கவர்ந்த ஒருவராக இருந்துள்ளீர்கள். உங்கள் ஆக்கங்களை படித்து நாம் சிரித்தும் சிந்தித்தும் மகிழ்ந்துள்ளோம். பணி முடிந்து நாடு திரும்பினாலும், உங்கள் ஆக்கங்கள் மூலம் யாழ் களத்தில் தொடர்ந்தும் எம்மோடு இணைந்தே இருக்கிறீர்கள். அதேபோல் தாயகத்திலிருந்தும் இணைய வசதிகள் கிடைக்கிறபோது எம்மோடு யாழ் களமூடாக தொடர்பில் இருப்பீர்கள் என நம்புகிறோம். தாயகத்தில் குடும்பத்தோடு மகிழ்வுற்றிருக்க வாழ்த்துகிறோம்.

நன்றி

முகத்தார்,

உங்களுடைய நகைசுவை இழையோடும் படைப்புக்களை மற்றய கள உறுப்பினர்களை போல் நானும் படித்து ரசித்திருக்கின்றேன். தனியே வெறுமையாக ஒரு நாட்டில் உறவுகள் இன்றி இருக்காமல் குடும்பத்தினருடன் இணைந்து இருப்பது மனதுக்கு எவ்வளவோ இதமான ஒன்று. அதனால் நீங்கள் குடும்பத்தினருடன் இணைய செல்லவது மகிழ்ச்சியான ஒன்றுதான். அப்படியே யாழ் களத்தை மறந்துவிடாமல் உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் உங்களால் முடிந்தவரையில் இணைந்திருந்து உங்கள் படைப்புக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

உங்களை எதிர்காலத்தில் தாயத்திலோ அல்லது வேறொரு இடத்திலோ சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகின்றேன். உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

நட்புடன்

மதன்

வணக்கம் முகத்தார் அவர்களே உங்கள் தாயகம் நோக்கிய பயணம் இனிதாக அமையட்டும். உங்கள் எழுத்துக்கள் என்றும் போல வழமானதாக ஈழமண்ணில் இருந்து முழங்கி யாழ்கள உறவுகளையும் ஏனையோரையும் மகிழ்விப்பீர்கள் என்னும் நம்பிக்கையோடு.

உங்கள் புதிய சிந்தனைகள் மிளிர்ச்சி பெற வாழ்த்தி அனுப்புகின்றோம்.

யாழ்கள உறவுகளில் ஒருவர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் அங்கிள்.... நான் அதிகம் களம் வரா விட்டாலும்....எப்பவும் உங்கள் நகைச்சுவை கருத்துக்களை ரசித்திருக்கிறேன்... தாயகம் போனாலும் அங்கிருந்தும் எங்களுடன் இணைவீர்கள் என்று நம்புகிறோம்...

வணக்கம் திரு. முகத்தார்....

நீங்கள் தாயகம் திரும்புவது குறித்து மகிழ்ச்சி.....

தாயகத்திலிருந்தும் களத்துக்கு வருவதில் உங்களுக்கு பிரச்சினை ஏதும் இருக்காது என்று நம்புகிறேன்....

வணக்கம் முகத்தார்...ஜீவனூட்டுமுள்ள நகைச்சுவை மூலம்....சிறுசுகள் மூதல் பெரிசுகள் வரை உன்னில் கிறங்கடிக்க வைத்தாய்..களத்தில் ஹீரோக்கள் போல பலர் இருந்தாலும் நகைச்சுவை நாயகனான நீ இல்லாது களம் சோபை இழக்க போறது உண்மை...களத்தில் யாரோ சொன்னது போல பிரியாவிடை பாலை வனத்துக்கு தான் களத்துக்காய் இருக்காது மகனே........ முகத்தான் கன நாளுக்கு பிறகு நாட்டுக்கு வீட்டுக்கு போறாய்..காய்ச்ச மாடு கம்பில பாய்ஞ்ச மாதிரி இல்லாமால் பார்த்து என்ன....................................

சென்று வருக முகத்தாரே...மீண்டும் வருக..! உங்கள் ஆக்கங்களை ரசித்தவர்கள் என்ற வகையில்..

நட்புடன் குருவிகள்..!

கொஞ்சகாலம் பழகினாலும் நீண்டநாள் பழகிய நட்பு. ஊர்திரும்புவது சந்தோஷமான விடயமென்றாலும் உங்கள் எழுத்துக்களை வாசிக்கும் பேறு தொடர்ந்து கிடைக்கவேண்டுகிறேன், எழுதுவதை நிறுத்தாது தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள். முகத்தாரண்ணக்கு எனது இதயம்கனிந்த பிரியாவிடைவாழ்த்துக்கள்.

30ரூபாய் செலவழித்து மாதம் இருமுறையாவது யாழ்களம் வரலாமே. வருவீர்கள் என நம்புகிறோம். தங்கள் வாழ்கைப்பயணத்தை வெற்றிகரமாக தொடர வாழ்த்துக்கள்.

முகத்தார் அவர்களே உங்கள் தாயக பயணத்துக்கு எனது வாழ்த்துக்கள்! தாயகத்தில் இருந்தாலும் யாழ்களத்துக்கும் அடிக்கடி வாருங்கள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓய் முகத்தார்ஸ்... தாயகம் போறீராம்?? பயனம் நன்னாக அமையட்டும், வாழ்த்துக்கள்!!

அங்கை பாரும், ஈழ்பதீஸான் மாதிரி வல்லிபுர ஆழ்வார், ... போன்றவற்றில் பலபல உண்டியல் சமாச்சாரங்கள் நடக்குதாம்!!! சின்னக் கோவில்களில் கூடவாம் வருமானம் அந்த மாதிரியாம்!! வெளிநாட்டு அர்ச்சனை என்ற பெயரில் குவியுதாம்!!! உதுகளைப் பகிர பயங்கரப் பிடிக்குப்பாடுகளாம்!!!! சும்மா ஏதோ கோவிலுக்கு செய்கிறோம் என்று காட்ட, கோவில்களை மேற்கத்தேய "ரொயிலற்" லெவலுக்கு அலங்கரிக்கிறார்களாம்!!!! ... விளங்கேலையோ??? உந்த சுவர், நிலமெல்லாம் மாபிளேத்துகிறாங்களாம், அதைத்தான் சொன்னன்!!!!!! ...

... உப்படி கனக்க இருக்கும்!!! ... அதுகளையெல்லாம் களத்துக்கு ......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முகத்தார் உங்கள் தாயக பயணமும் வாழ்வும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்க முகத்தாற்ற சிலவனைக்காணம்.. தயாகம் சென்று விட்டாரா..?? சின்னப்புவையும் காணவில்லையே..?? :roll: :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முகத்தார், உங்கள் தாயக பயணத்திற்கு வாழ்த்துக்கள். அங்கு சென்றாலும் யாழுக்கு வரலாம்தானே?

  • கருத்துக்கள உறவுகள்

முகத்தார், உங்கள் தாயக பயணத்திற்கு வாழ்த்துக்கள். அங்கு சென்றாலும் யாழுக்கு வரலாம்தானே?

அது தான் உதைக்கின்றது! முகத்தார் பிரிந்தா போகப் போகின்றார்? எம் கள உறவுகளை விட்டு எப்படி பிரிய மனம் வரும்!! :cry: :cry:

ஆகவே பிரியவிடை என்பது சரிதானோ தெரிவில்லை. எங்கிருந்தாலும், எச் சண்டை பிடித்தாலும் யாழ் குழுமம் என்பது ஒரு குடும்பம். அதன் உறவுகளை எப்போதும் உடையாது!! :idea:

  • கருத்துக்கள உறவுகள்

முகத்தார், உங்கள் தாயக பயணத்திற்கு வாழ்த்துக்கள். அங்கு சென்றாலும் யாழுக்கு வரலாம்தானே?

முகத்தார் யாழ்ப்பாணம் போனாலென்ன, இந்தியாவில இருக்கிற கொலைகாரன் பேட்டைக்கு போனால் என்ன யாழுக்கு வருவார் சந்தேகமில்லை,, ஆனால் பிரச்சினை என்னெவென்றால் துட்டுமாமு துட்டு,,,,

அங்கினி இங்கினை பார்த்து டொலரோ, பவுண்ட்சோ, அல்லது யூரோவோ அனுப்பினால் முகத்தார் யாழ்கள யாழ்ப்பாண செய்தியாளாராக மாறிடுவார்,,,,

அப்படி யாருக்கும் காசு அனுப்பி முகத்தாரை யாழுக்கு கூப்பிடுற நோக்கம் இருந்தால் டன்னோட தொடர்பு கொள்ளுங்க,, (அட யாழ்களத்திலேயே கிரடிட் கார்ட் இருக்கிற ஆள் டன் தானே), :wink: :P

இப்ப லக்கி, ராஜா, வசம்பர், சுகுமாரிண்ட அக்கவுண்டில போட்டால் என்ன நடக்கும்? ராமராஜனை வெளியில கொண்டுவாரதுக்கு அந்த காசு போகும் தேவையா? :evil:

அதுதான் சேவ்டியா காசு முகத்தாருடைய கைக்கு போகவேனுமெண்டால் டன்னிட்ட கொடுக்கச்சொல்லி புலனாய் வவ்வ, வவ்வ்வ்வ்வ்...(சொல்லுது) :lol: :oops:

பணம் அனுப்புபவர்கள் $50 இருந்து ஆரம்பிக்கவும்,,, :roll:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.