Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்து சமுத்திர பிராந்தியத்தை தனது கூட்டுப்பாட்டில் கொண்டுவரும் முயற்சியின் ஓரங்கமே இலங்கை மீதான தீர்மானம் மக்கள் விழிப்புடன் இருப்பது அவசியம; அமைச்சர் சம்பிக

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்து சமுத்திர பிராந்தியத்தை தனது கூட்டுப்பாட்டில் கொண்டுவரும் முயற்சியின் ஓரங்கமே இலங்கை மீதான தீர்மானம் மக்கள் விழிப்புடன் இருப்பது அவசியம; அமைச்சர் சம்பிக

இந்து சமுத்திர பிராந்தியத்தையும் தனது செல்வாக்குட்பட்ட பிராந்தியமாக அமெரிக்கா எடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியே இலஙகை மீது கொண்டுவரும் தீர்மானம் என மின்வலு அமைச்சரும் ஜாதிக்க ஹெலஉறுமயவின் செயலாளருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் இந்த முயற்சி குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். 21 ஆம் நூற்றாண்டின் இந்து சமுத்திரத்தின் முக்கியத்துவத்தை அமெரிக்கா நன்றாக உணர்ந்துள்ளது எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இப்பிராந்தியத்தில் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள கடற்கரை எதுவும் இல்லை. இலங்கைக்கு எதிராக தீர்மானத்தைக் கொண்டு வந்தாலும், கொண்டுவராவிட்டாலும் நாம் வென்றாலும் வெல்லாவிட்டாலும் அவர்களால் எம்மீது அழுத்தம் பிரயோகிக்க முடியும். இதையே அமெரிக்கா ஈரானிலும் செய்துள்ளது என அவர் கூறியுள்ளார்.

http://thinakkural.com/news/all-news/local/10652-2012-03-02-10-14-51.html

இலங்கைக்கு எதிராக தீர்மானத்தைக் கொண்டு வந்தாலும், கொண்டுவராவிட்டாலும் நாம் வென்றாலும் வெல்லாவிட்டாலும் அவர்களால் எம்மீது அழுத்தம் பிரயோகிக்க முடியும்.

விளங்கினால் சரி. மறைமுக அடியான ஈரானிட்டை இருந்து வாங்குகிற எண்ணைக்கு அமெரிக்க டொலரைக்கொடுக்க வேண்டாம் என்றால் இந்தளவு ஞானம் வெளிவருகிறது. GSP + நேரடியான ஒன்று. அமெரிக்க படைகளை அல்ல உலக நாடுகளின் படைகளை நாம் சந்திக்க தயார் என்று பேசிய பேச்சை எங்கை போய்த்தேடுவது?

சம்பிக்க ரணவக்க: மிகச் சிறந்த அறிவு மிக்க ஒரு கடும் சிங்கள தேசியவாதி / இனவாதி. முதலில் ஜே.வி,பியில் இருந்து பின்னர் அதன் அரசியல் சிங்கள கடும் தேசியத்தை வளர்க்க முற்படுவதில்லை என்று விலகி விட்டவர். மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்ற பொறியியலாளர். இவரின் முக்கிய பார்வையிலேயே 'சிங்கள வீர விதான' இயக்கம் வளர்ந்தது (அதன் பிதா மகன்களில் ஒருவர்). தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் வியாபார நிலையங்களில் பொருட்களை வாங்க வேண்டாம் என்று பிரச்சாரம் செய்த முக்கிய இயக்கம் இவரது இயக்கம் (நுவரேலியாவில் பல போஸ்டர்களை அச்சிட்டு ஒட்டி தமிழ் வியாபார நிலையங்களை அச்சிறுத்தி இருந்தது). அரசியல், இலக்கிய வடிவங்களில் சிங்களத் தேசியத்துக்காக போராடி இறுதியில் ஐ,தே,க ஆட்சிக் காலத்தில் இராணுவ ரீதியிலும் போராட முற்பட்ட அமைப்பு சிங்கள வீரவிதான அமைப்பு. சிஹல உறுமய வின் தோற்றத்தின் முக்கிய காரணகர்த்தாவாக இருந்து பின் விலகியவர்

இவரது இராணுவ உடை அணிந்த படத்தினை என் சிங்கள நண்பன் எனக்கு ஒரு முறை காட்டி இருந்தான் (இந்த நண்பன் முன்னால் இலங்கை பிரதமர் ரத்தினசிரி யின் மருமகன்; கடும் சிங்கள தேசிய உணர்வு கொண்ட ; எனக்கு பல வழிகளில் உதவிய ஒருவன்)

இவரைப் போன்ற பலரைக் கொண்டது சிங்கள தேசியம். புலிகளில் சிலரைத் தவிர பல போலிகளைக் கொண்டது எம் சமூகம்...அதனால் தான் அவர்களால் வரலாறு முழுதும் எம்மை தோற்கடிக்க முடிகின்றது

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப... இந்து சமுத்திரம். இந்தியாவின் கட்டுப்பாட்டில் இல்லையா?

இந்திராகாந்தியின் மருமகள் சோனியாவின், அரசியலால் வந்த விளைவு இது.

இந்து சமுத்திர பிராந்தியத்தியத்தை, தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க இந்திராகாந்தி அம்மையார் செய்த பிரயத்தனத்தை... இத்தாலிகாரி நாறடிச்சுப் போட்டாள்.

சம்பிக்க ரணவக்க: மிகச் சிறந்த அறிவு மிக்க ஒரு கடும் சிங்கள தேசியவாதி / இனவாதி. முதலில் ஜே.வி,பியில் இருந்து பின்னர் அதன் அரசியல் சிங்கள கடும் தேசியத்தை வளர்க்க முற்படுவதில்லை என்று விலகி விட்டவர். மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்ற பொறியியலாளர். இவரின் முக்கிய பார்வையிலேயே 'சிங்கள வீர விதான' இயக்கம் வளர்ந்தது (அதன் பிதா மகன்களில் ஒருவர்). தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் வியாபார நிலையங்களில் பொருட்களை வாங்க வேண்டாம் என்று பிரச்சாரம் செய்த முக்கிய இயக்கம் இவரது இயக்கம் (நுவரேலியாவில் பல போஸ்டர்களை அச்சிட்டு ஒட்டி தமிழ் வியாபார நிலையங்களை அச்சிறுத்தி இருந்தது). அரசியல், இலக்கிய வடிவங்களில் சிங்களத் தேசியத்துக்காக போராடி இறுதியில் ஐ,தே,க ஆட்சிக் காலத்தில் இராணுவ ரீதியிலும் போராட முற்பட்ட அமைப்பு சிங்கள வீரவிதான அமைப்பு. சிஹல உறுமய வின் தோற்றத்தின் முக்கிய காரணகர்த்தாவாக இருந்து பின் விலகியவர்

இவரது இராணுவ உடை அணிந்த படத்தினை என் சிங்கள நண்பன் எனக்கு ஒரு முறை காட்டி இருந்தான் (இந்த நண்பன் முன்னால் இலங்கை பிரதமர் ரத்தினசிரி யின் மருமகன்; கடும் சிங்கள தேசிய உணர்வு கொண்ட ; எனக்கு பல வழிகளில் உதவிய ஒருவன்)

இவரைப் போன்ற பலரைக் கொண்டது சிங்கள தேசியம். புலிகளில் சிலரைத் தவிர பல போலிகளைக் கொண்டது எம் சமூகம்...அதனால் தான் அவர்களால் வரலாறு முழுதும் எம்மை தோற்கடிக்க முடிகின்றது

சுமார் 10 வருடங்களின் முன்னர் இருக்கலாம், TNL இல் நடந்த ஒரு சிங்கள அரசியல் விவாதத்தில் 80 பேர் நலமாக வாழ 20 பேரை அழிக்கலாம் என்று விவாதித்தவன் இந்த சம்பிக்க. இவன் ஒரு சிங்கள பௌத்த வெறியன், சிங்களப் பயங்கரவாதி என்றும் சொல்லலாம். ஆனால் சம்பிக்க சிலவேளைகளில் ஒரு தமிழ் குடும்பத்தினர் வீட்டிலேயே தனது பிள்ளைகளை விட்டுச் செல்லும் வழக்கமுடையவன்.

கருணாவின் முரண்பாட்டின் போது அதை பிளவாக மாற்றி, கருணாவுக்கு சிங்கள ராணுவப் பயங்கரவாதிகள் குழுவொன்றின் துணையை பெற்றுக்கொடுத்து, பின்பலமாக இருந்து, கிழக்கில் பல தமிழினக் கொலைகளை (கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் உட்பட) செயவித்தவனும் இந்த சம்பிக்க. கொழும்பில் கருணா குழுவினர் கப்பம், கடத்தல் கொலைகளை திட்டமிட உதவியவனும் சம்பிக்க.

இவன் பலவருடங்களின் முன்னர் கொழும்பிலுள்ள தமிழர்களின் விபரங்களைத் திரட்டி ஒரு இனக்கலவரத்தின் மூலம் தமிழரை விரட்டியடிக்க திட்டங்கள் தீட்டியவன். பின்னர் சந்திரிகாவின் பின்னடிப்பால் நடைமுறைப்படுத்த முடியாமல் போய்விட்டது. பின்னர் பயங்கரவாதி கோத்தபாயவுடன் இணைந்து இரவோடிரவாக பேரூந்துகளில் தமிழரை அனுப்பியதுவும் இவனது மூலையில் உதயமான சிந்தனையே.

இவனைப் போலவே மிக மோசமான சகுனி வேளைகளில் திறமையானவன் சம்பிகவின் நண்பன் உதய கம்மன்பில.

இவர்கள் 2000 க்களில் இந்திய அரச பயங்கரவாதிகளிடம் இருந்து பலவருடங்களாக பெருந்தொகை பணத்தை பெற்றுவந்தவர்கள். இந்திய பயங்கரவாதிகளின் முக்கிய நோக்கம் - சமாதான பேச்சுவார்த்தைகளை குழப்புவதே!

என்னதான் இனவாதியாகவிருந்தாலும் தெளிவான ஒரு உண்மையைச் சொல்லியிருக்கிறான். தமழனோ சிங்களவனோ அமெரிக்காவிற்கோ இந்தியாவிற்கோ சீனாவிற்கோ அவசியமில்லை. இந்துசமுத்திரத்தின் கட்டுப்பாடுதான் இவர்களுக்கு முக்கியமானது.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத் தேசியவாதிகள் திறமையானவர்கள். தங்களின் தமிழர் விரோதப் போகிற்காக.. பேயுடனுன் கூட்டம் போடுவார்கள். முடிந்ததும்.. சிங்கள தேசியம் பேசி முழு உலகையும் தங்களின் பக்கம் தக்க வைக்க முயற்சிப்பார்கள். இதன் வழி பிறந்ததே சம்பிக்கவின் இந்த அறிக்கை.

2009 மேயில் எழுதிய இந்தக் கட்டுரையையும் இன்ற நிலையையும் பாருங்கள்.. சம்பிக்க இன்று சொல்வதை அப்போதே எம் மக்களுக்காக நாம் சொல்லிட்டம்..! கேட்டால் தானே....

Friday, May 15, 2009

அமெரிக்காவின் திடீர் பாசம் ஒன்றும் ஈழத்தமிழரின் கண்ணீரிலல்ல.

Superpowers_in_World.png

அமெரிக்க வல்லாதிக்க அரச கடற்படை இன்று (15-05-2009) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் ஈழத்தில் வன்னியில் யுத்த வலயத்தில் சிக்கி இருக்கும் மக்களை மீட்க அல்லது அவர்களுக்கான மனிதாபிமான உதவியை வழங்க தான் தயாராக இருப்பதாகவும் இந்தியக் கடற்படையின் ஒத்துழைப்போடு தான் இதனை முன்னெடுக்க முடியும் என்றும் கூறி இருக்கிறது.

ஐநாவே கடந்த 5 மாதங்களாக போரில் பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள் என்று அறிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்க முன்வராத அமெரிக்கா, சிறீலங்கா சிங்கள அரசு முன்னெடுக்கும் தமிழின அழிப்புப் போர் முடிவடையும் தறுவாயில்.. இப்போ திடீர் என்று தமிழ் மக்கள் மீது பாசம் காட்டுவது ஒன்றும் அவர்கள் மீதான அக்கறையில் அல்ல.

ஐநா பாதுகாப்புச் சபைக்கு சிறீலங்கா விவகாரத்தை பிரிட்டனும் பிரான்சும் அமெரிக்காவும் கொண்டு வந்ததே தமது பார்வையிலிருந்தும் கவனிப்பில் இருந்தும் விலகிச் செல்லும் சிறீலங்காவை தமது வழிக்குக் கொண்டு வரவே அன்றி ஈழத்தமிழர் மீதான அக்கறையில் அல்ல.

பாதுகாப்புச் சபையில் சிறீலங்கா தொடர்பான விவாதம் நிகழ்வதை சீனாவும் ரஷ்சியாவும் வலுவாக எதிர்த்து வந்ததுடன் இவ்விரண்டு நாடுகளும் விடுதலைப்புலிகளுடனான போர் என்ற தொனியில் தமிழ் மக்கள் மீது சிங்கள அரசு செய்யும் போருக்கு பகிரங்க ஆதரவு வழங்கியதுடன் ஆயுத மற்றும் இராணுவ உதவிகளையும் குறைவின்றி தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கின்றன.

சீனா இவ்வுதவிகளோடு மட்டும் நின்று விடாமல் இந்தியாவின் சிறீலங்கா சிங்கள அரசு நோக்கிய நட்புறவு ரீதியான வலிந்த நகர்வுகளை முறியடிக்கும் வகையில் இந்தியா சிறீலங்காவுக்கு வலிந்து வழங்கி வரும் இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளுக்கு அதிகப்படியாக தனது உதவிகளை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிறது.

அண்மையில் இந்தியா சிறீலங்காவுக்கு வழங்கிய 100 கோடி இந்திய ரூபாய் கடனுக்கு போட்டியாக மில்லியன் டொலர்கள் கடனை தூக்கி வீசியது சீனா. அதுமட்டுமன்றி சிறீலங்காவின் தென்கோடித் துறைமுகமான அம்பாந்தோட்டை துறைமுகத்தை குறிவைத்து 1 பில்லியன் டொலர் அபிவிருத்தி என்ற போர்வையில் அதனை தனதாக்கிக் கொண்டதுடன் அந்த நிதியும் சிறீலங்காவை வந்தடைய இருக்கிறது.

விடுதலைப்புலிகளைப் பயங்கரவாதிகளாக்கி.. தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாக்கி அதில் சிறீலங்காவை மயங்க வைத்து அதனூடு தமது நலன் காக்கலாம் என்றிருந்த அமெரிக்கா மற்றும் இந்தியாவின் எதிர்பார்ப்புக்களை மிஞ்சி சீனாவினதும் ரஷ்சியாவினதும் ஈரானினதும் மற்றும் சில அமெரிக்க மற்றும் இஸ்ரேல் எதிர்ப்பு அரபுலக நாடுகளினதும் சிறீலங்காவுடனான நெருக்கம் அதுவும் விடுதலைப்புலிகளின் கதை கிட்டத்தட்ட முடிந்ததாகக் கூறப்படும் நிலையில் அதிகரித்துள்ளமை அமெரிக்காவையும் இந்தியாவையும் தூக்கிவாரிப் போட்டுள்ளது.

இந்த நிலையில் சிறீலங்காவின் மீதான தமது பிடி மேலும் இழகி.. மோசமாகி தமது கட்டுக்குள் அடங்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் தான் சிறீலங்காவுக்கான சர்வதேச நாணய நிதிய கடனையும் அமெரிக்கா தள்ளி வைத்தது. தமிழ் மக்களின் மீதான அக்கறையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையாக சிலர் இதனைச் சித்தரிக்க முயல்கின்றனர். அது உண்மையில் மிகத் தவறானது. தமிழர்களுடனான சிங்கள அரசின் போரில் சிங்கள அரசுக்கு ஆயுத உதவி மற்றும் உளவுத்தகவல்களை வழங்கி அமெரிக்கா உதவி வந்ததை அண்மையில் ரணில் விக்கிரமசிங்கே பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருந்தது ஒன்றே போதும் அமெரிக்காவின் இந்த நகர்வுகள் எவையும் தமிழ் மக்களின் நலன் கருதியதல்ல என்பதை நிரூபிக்க.

சுருங்கக் கூறின் விடுதலைப்புலிகளையும் தமிழ் மக்களின் போராட்டத்தையும் மையமாக வைத்து தமது நலன்களை பாதுகாக்க இந்தியாவும் அமெரிக்காவும் பெரிய திட்டம் வகுத்திருந்த நிலையில் சீனாவும் ரஷ்சியாவும் விசயத்தில் முந்திக் கொண்டுள்ளன. குறிப்பாக சீனா தத்துரூபமாகக் காய் நகர்த்த அதனை தனக்கே உரித்தான சிறப்பு முறையில் கையாள்கிறது சிறீலங்கா என்பதே யதார்த்தம்.

04+09+039.jpg

//இன அழிப்புப் போரை எதிர்கொண்டு சொந்த மண்ணின் விடுதலைக்காய் போராடும் ஈழத்தமிழர்கள்.//

தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை மையமாக வைத்து அதனைப் பயங்கரவாதமாக்கி தமிழர்களை இலங்கைத் தீவிலின்றும் அழிக்க வேண்டும் என்ற இனவெறியை சிறீலங்கா பன்னெடுங்காலமாகக் கொண்டிருப்பினும் இன்று சர்வதேச நாடுகள் மத்தியில் நிலவும் சிறீலங்காவை மையமாக வைத்த இந்து சமுத்திரத்தில் ஆதிக்கத்துக்கான போட்டா போட்டிச் சூழலை தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு அதில் தனது நீண்ட நாள் கனவை நனவாக்க நினைக்கிறது சிங்களச் சிறீலங்கா.

ஆனால் இந்தச் சூழ்நிலைகளை எல்லாம் தெளிவாக விளங்கிக் கொண்டிருந்தும் இந்திய உபகண்டத்தில் தமிழர்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்யாமல் விட்டமை என்பதற்கு தமிழர்களுக்கு தார்மீக ரீதியில் உதவ பிராந்தியத்தில் பலம் பொருந்திய அரசோ அல்லது தமிழர்கள் மத்தியில் தமது பலத்தை நிரூபிக்கக் கூடிய ஒற்றுமையோ இருக்கவில்லை என்பதே முக்கியமான காரணிகளாக இருக்கின்றன.

இன்று ஐரோப்பிய பிரதிநிதிகளும் ஐநாவும் ஒபாமாவும் மேனனும் சிதம்பரமும் கருணாநிதியும் மற்றும் ஜெயலலிதாவும் ஈழத்தமிழர்கள் மீது அக்கறை காட்டுகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்கல்ல. தமது நாடுகளின், அரசுகளின் மற்றும் தமது சொந்த அரசியல் நலன்களை காக்கும் நோக்கில் சிறீலங்காவை பயன்படுத்தவும் அதனை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்குமே ஆகும். இதற்காகவே தான் சீனாவும் வியட்நாமும் ரஷ்சியாவும் சிறீலங்காவை அரவணைக்கின்றன.

இந்த அரவணைப்புக்களின் சுகத்தில் தான் சிறீலங்கா சிங்களப் பயங்கரவாத தேசம் தமிழின அழிப்பை, மிக வசதியாக இத்தனை மனித உரிமை மீறல்களையும் பகிரங்கமாகச் செய்து கொண்டு ஐநாவைக் கூட எதிர்த்து மிடுக்காகப் பேசிக் கொண்டு செய்ய முடிகிறது.

இதன் பின்னணியில் ஈழத் தமிழர்கள் இன்று அனுபவிக்கும் துன்பியல் என்பது உண்மையில் தமிழர்களுக்கு என்றான ஒன்றல்ல. ஒட்டுமொத்த உலகுக்குமானது.

இன்றைய புதிய உலகு ஒழுங்கில் இது மனித உரிமைகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் சவால் என்பதற்கும் மேலாக இனங்களின், மக்களின் விடுதலை என்பது அவர்கள் எந்த வல்லாதிக்க சக்தியை அரவணைக்கிறார்களோ அதன் பால்பட்டே அமையும் என்ற உண்மையையும் உலகுச் சொல்லி இருக்கிறது. அதாவது மக்களின் வாழ்வுரிமை என்பது வல்லாதிக்க சக்திகளை, ஆதிக்க சக்திகளை அரவணைப்பதால் பெறப்படுமே அன்றி வேறு வழியில் அது அமைய முடியாது என்பதே ஆகும். எனி என்று மாறுமோ இந்த நிலை என்பது கேள்விக் குறியாகவே இருக்க, அது மாறுவதற்கிடையில் ஈழத்தில் தமிழினம் அழிக்கப்பட்டு அல்லது முழுமையாக அடிமைப்படுத்தப்பட்டு இலங்கைத் தீவு முழுமைக்கும் சிங்கள இராட்சியம் அமைக்கப்பட்டு விடும் என்பது மட்டும் திண்ணம்.

http://kundumani.blo...-post_4541.html

Edited by nedukkalapoovan

எவ்வளவோ வாதாட்டங்கள் வைக்கலாம். அமெரிக்கா சர்வாதிகாரிகளை இலகுவில் விட்டு வைப்பதில்லை. ஒருவர் இருப்பதை கண்டு கொண்டால் அவரின் மூக்குக்குள் கையைவிட்டு தனது காரியங்களை செய்விக்கும். அதன் பின், தேவை இல்லாத போது அடித்து நொறுக்கி விடும்.

ரீகன் காலத்தில் ஈரான் கொன்றாவின் போது அமெரிக்காகவுக்காக மருந்து கடத்திக்கொடுத்வர் மனுவல் நோறியாக்கோ. அப்போது உப அதிபர் சீனியர் புஸ்.

சீனியர் பூஸ் காலத்தில் பனாமவிலிருந்து நோரியாக்கோ புளோரிடா கொண்டு வரப்பட்டு மருந்து கடத்தலுக்காக சிறையில் போடப்பட்டர்.

நிச்சயமாக சர்வாதிகாரி ராசபக்சா இலங்கையில் இருப்பது அமெரிக்கவுக்கு தெரியும். இவருக்கெதிராக வழக்குகள் அமெரிக்காவில் பதியவும் பட்டிருக்கிறது. அவை முழு வசங்களில் தள்ளப்படவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.