Jump to content

முரளிதரன் சாதனை


Recommended Posts

பதியப்பட்டது

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன், சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் 1000 விக்கெட்டுகை வீழ்த்திய முதல் பந்து வீச்சு வீரர் என்கிற பெருமையை பெற்றிருக்கிறார்.

இந்த வரலாற்று சாதனையை, வங்காள தேசதுக்கெதிராக, சிட்டகாங்கில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் 3 ம் நாள் அன்று அவர் நிகழ்த்தினார்.

3ம் நாள் ஆட்ட முடிவில் 163 ஓட்டங்கள் எடுத்தால், இரண்டாவது இன்னிங்ஸ் ஆடமலேயே, வெற்றி பெறும் வலுவான நிலையில் இலங்கை உள்ளது.

நன்றி : http://www.bbc.co.uk/tamil/news/story/2004...sbulletin.shtml

Posted

தகலுக்கு நன்றி,,,

இன்றைய போட்டியில் 6 விக்கட்களை அள்ளினாரே,,,

ஆனாலும் எனக்கு ஒரு சின்ன கவலை,, அவுஸ்ரேலியாவில் வைத்து அத்தபத்து முரளியை அவமானப்படுத்திவிட்டாரோ என்று தோன்றுகின்றது,,ஏனெனில் அவுஸ்ரேலியாவில் நடைபெற்ற முக்கோணப்போட்டியில் இறுதி இரண்டாவது ஆட்டத்தில் முரளிதரன் 99 ஓட்டங்களை வாரி இறைத்தார்,, ஒரு நாள் போட்டியில் அதிக ஓட்டங்களை வாரி இறைத்தவர் பட்டியலில் 2ம் இடத்தைபிடித்து, தனது மோசமான பந்துவீச்சை வெளிக்காட்டினார், இந்த நேரத்தில் எனது ஆதங்கம் என்னெவெனில் முரளியின் பந்துவீச்சை அவுஸ்ரேலிய துடுப்பாட்ட வீரர்கள் ஒரு பிடி பிடித்துக்கொண்டு இருந்தார்கள், அந்த நேரத்தில் அத்தபத்து என்ன செய்து இருக்கவேண்டும்? பந்துவீச்சாளரை மாற்றி இருக்கவேண்டும், முரளி தொடர்ந்து வீச அவுஸ்ரேலியர்கள் வெளுத்து வாங்கிவிட்டார்கள்,,, சிலவேளை அந்த நேரத்த்ல் பகுதி நேர பந்துவீச்சாளர்களை பந்து வீச அழைத்திருந்தால் விக்கட்கள் விழ சாத்தியம் இருந்திருக்கும், அல்லது ஓட்டவிகிதம் குறைய சாத்தியம் இருந்திருக்கும்,, :oops:

முரளிதரனுக்கு வாழ்த்துக்கள்,, மேலும் சாதனைகள் தொடர வாழ்த்துக்கள்.... :P

Posted

அத்தப்பத்து நினைத்திருப்பார் முரளிதரன் எப்படியும் ஒரு விக்கட்டை எடுத்திருவார் என்று. அன்று காலம் வேளைசெய்யவில்லை என்று நினைக்கிறேன்.

முரளிதரனுக்கு என் வாழத்துக்கள்.

Posted

தகவலுக்கு நன்றி குளக்காட்டான். அப்பிடியே முரளிக்கும் வாழ்த்து சொல்லிவிடுவம். :-)

Posted

முரளிக்கு வாழ்த்துக்கள் :)

Posted

மென்மேலும் சாதனை படைத்திட முரளிக்கு வாழ்த்துக்கள்.

Posted

Most international wickets

Bowler---------------Wkts-Tests ++++ Wkts-ODI=======Total

1.Muralitharan-----593----------411 -----1004

2.Warne----------659----------293 -----952

3.Akram ---------414----------502-------916

4.McGrath--------542----------331-------873

5.Kumble---------494----------329-------823

6.Younis----------373----------416------789

7.Walsh----------519-----------227------746

8.Pollock---------385----------346-------731

9.Kapil-----------434-----------253------687

10.Vaas----------301----------352-------653

Posted

Most international wickets

Bowler---------------Wkts-Tests ++++ Wkts-ODI=======Total

 

1.Muralitharan-----593----------411 -----1004

2.Warne----------659----------293 -----952  

3.Akram ---------414----------502-------916  

4.McGrath--------542----------331-------873  

5.Kumble---------494----------329-------823  

6.Younis----------373----------416------789  

7.Walsh----------519-----------227------746  

8.Pollock---------385----------346-------731  

9.Kapil-----------434-----------253------687  

10.Vaas----------301----------352-------653

அப்பு என்னடாப்பு உது எல்லாம்

:oops: :oops: :oops: :oops: :oops:

Posted

அதொண்டுமில்லை சின்னா, ஏதோ கிறிக்கட்டாம், முரளியாம் 3 தடிக்குச்சிக்கு பந்தால எறிஞ்சாராம் ஏதோ விழுத்தினாராம்,, 1000குச்சிகளை சாச்சுப்புட்டாராம்,,, ஏதோ ஏதோ எல்லாம் புலம்புறாங்களய்யா...:evil:

உப்படிப்பார்த்தால் சின்னப்பு அந்தக்காலத்தில எத்தனை கட்டைகளை சா விக்கட்டுக்களை போல்டாகி இருப்பார்,, :wink: :P

Posted

அதொண்டுமில்லை சின்னா, ஏதோ கிறிக்கட்டாம், முரளியாம் 3 தடிக்குச்சிக்கு பந்தால எறிஞ்சாராம் ஏதோ விழுத்தினாராம்,, 1000குச்சிகளை சாச்சுப்புட்டாராம்,,, ஏதோ ஏதோ எல்லாம் புலம்புறாங்களய்யா...:evil:

உப்படிப்பார்த்தால் சின்னப்பு அந்தக்காலத்தில எத்தனை கட்டைகளை சா விக்கட்டுக்களை போல்டாகி இருப்பார்,, :wink: :P

_41394046_feat_murali270.jpg

http://www.bbc.co.uk/sinhala/news/story/20...rali_1000.shtml

வாழ்த்துக்கள் முரளிக்கு................

"உப்படிப்பார்த்தால் சின்னப்பு அந்தக்காலத்தில எத்தனை கட்டைகளை சா விக்கட்டுக்களை போல்டாகி இருப்பார்"

:) :P :lol:

Posted

ஒரு நாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 1,000 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய உலக சாதனை படைத்த இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரனுக்கு திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள தமிழரான முத்தையா முரளீதரன், உலக கிரிக்கெட் அரங்கில் நட்சத்திர வீரராக விளங்குகிறார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி முதன் முதலில் சாதனை படைத்தவர் முரளீதரன்.

இந் நிலையில், தற்போது புதிய உலக சாதனை ஒன்றை முரளீதரன் படைத்துள்ளார். டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் 1,000 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார்.

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் முரளீதரன் இந்தச் சாதனையை நிகழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து முரளீதரனுக்கு வாழ்த்துத் தெரிவித்து திமுக தலைவர் கருணாநிதி கடிதம் அனுப்பியுள்ளார். கருணாநிதி பயங்கரமான கிரிக்கெட் பிரியர் என்பது தெரிந்தது தானே..

அதிலும் முத்தையா மீது எப்போதும் தனி ஆர்வம் காட்டுபவர்.

Posted

அதிலும் முத்தையா மீது எப்போதும் தனி ஆர்வம் காட்டுபவர்.

தமிழ்ழனா இருப்பதால் தானே நன்பரே :roll:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஓரு முறை shane warne முரளிய பத்தி சொல்லேக்க..முரளி வலுவிள்ளாத அணிகளுக்கு எதிரா தான் அதிக விக்கட்டுக்களை எடுப்பார் என்று குற்றம்; சாட்டி இருந்தார்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முரளிக்கு வாழ்த்துக்கள்... :lol::lol:

Posted

முரளிக்கு வாழ்த்துக்கள்... :lol::lol:

இப்ப தான் முரளிக்கு உண்மையிலேயெ சந்தோசமாக இருக்கும் சுண்டல்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்ப தான் முரளிக்கு உண்மையிலேயெ சந்தோசமாக இருக்கும் சுண்டல்

:lol::lol::lol:

Posted

ஆசியாவை ஆட்டிபடைக்கும் கிரிக்கட் விளையாட்டில் அடுத்தடுத்த போட்டிகளில் ஒவ்வொரு சாதனைகளை செய்து வருகிறார் இலங்கை அணியின் துரும்பு சீட்டு, உலக நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன்,,

பங்களாதேஸ் அணியுடனான முதலாவது ரெஸ்ற் போட்டியில் ஒரு சாதனை அதாவது ரெஸ்ற், ஒரு நாள் போட்டிகளில் மொத்தமாக 1000 விக்கட்டுகளை அள்ளிய முதல் கிரிக்கட் வீரர் எண்ட சாதனையை படைத்தார்,

இரண்டாவது ரெஸ்ற் போட்டியின் முதல் இன்னிங்க்ஸில் 5 விக்கட்டுகளள விழுத்தியதன் மூலம் 50தரம் 5விக்கட்களை சாய்த முதல் வீரர் எண்ட என்னொமொரு சாதனையை தன் வசமாக்கினார், (அவுஸ்ரேலியவின் சுழல் & செக்ஸ் மன்னன் சேர்ன் வோர்ன் 35தடவைதான் 5 விக்கட்களை விழுத்தி உள்ளார்)..

இரண்டாவது இன்னிங்க்ஸில் ஒரு சாதனை அதாவது 600 விக்கட்களை வீழ்த்திய இலங்கை & ஆசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்,, விரைவில் பெண்கள் சர்ச்சையில் அடிக்கடி விழும் சேர்ன் வோனின் 659 விக்கட்டை முறியடிப்பார்,,, :idea:

Posted

தமிழ்ழனா இருப்பதால் தானே நன்பரே :roll:

ஆமாம்... முரளியுடன் அவருக்கு தனிப்பட்ட நட்பும் உண்டு.....

  • கருத்துக்கள உறவுகள்
Posted

shane warne um அவருடைய மனைவியும்..திரும்ப ஒன்டா சேர்ந்த்pட்டாங்களாமே.... :) :oops:

Posted

sundhal எளுதியது

shane warne um அவருடைய மனைவியும்..திரும்ப ஒன்டா சேர்ந்த்pட்டாங்களாமே....

அவருடைய இல்லற வாழ்க்கை மீண்டும் சிறப்படைய வாழ்த்துக்கள்

Posted

நேற்று முரளி 600 விக்கெட்டுக்களினை எடுக்கும்போது பாங்களதேஸ் அணிக்கு எதிராக 50 விக்கெற்றுக்களினையும் கைப்பற்றினார். டெஸ்ட் விளையாடும் எல்லாம் நாடுகளுக்கும் எதிராக குறைந்தது 50 விக்கெற்றுக்களினை வீழ்த்திய முதல் வீரன் என்ற பெயரினையும் இதன்மூலம் தட்டிக்கொண்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முரளிதரனுக்கு வாழ்த்துக்கள் தமிழன் என்ற ரீதியில் அல்ல ஒரு சாதனையாளன் என்றரீதியில்.

{தமிழில் பேசுவதற்கோ பேட்டி கொடுப்பதற்கோ பின் வாங்குபவர்}

  • கருத்துக்கள உறவுகள்
Posted

(அவுஸ்ரேலியவின் சுழல் & செக்ஸ் மன்னன் சேர்ன் வோர்ன் 35தடவைதான் 5 விக்கட்களை விழுத்தி உள்ளார்)..

(டங்களஸ் அவர்களால் எழுதபட்டது)

ஒசி ஒசி ஒசி ஒய் ஒய் ஒய்

ஏனய்யா நம்ம நாட்டு வீரர்களை பற்றி அவதூறு சொல்லுகிறீர்கள் அவங்கள் நேரா நடத்துவதை உங்க பசங்க மறைவாக நடத்துகிறாங்க

ஆண்டவனின் ஊரிலே ஏண்டவனின்(ஏலுமானவனின்) ஆட்சி

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.