Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏன் தமிழர்கள் சிங்கள துடுப்பாட்ட அணிக்கு ஆதரவு தருவதில்லை?

Featured Replies

இந்த தலையங்கமே தப்பு தமிழர்கள் எப்ப சிங்கள அணிக்கு ஆதரவு கொடுக்காமல் விட்டவர்கள் ஒரு,சிலரை தவிர?...ஈழத்திற்கு ஒரு தடவை முடிந்தால் போய் வந்து உங்கள் கருத்தை முன் வையுங்கள்...கடைசி யுத்தத்தில் பாதிக்கப் படாத வட‌க்கு,கிழக்கு மக்களில் இருந்து,போரினால் கடுமையாக பாதிக்கப்பட்ட வன்னி மக்கள் கூட‌ சிங்கள அணியைத் தான் ஆதரிக்கிறார்கள்....முதலில் சிங்கள அணி அல்லது இந்தியா வெல்ல வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள்.

இலங்கை அணிக்கு ஆதர‌வு இல்லை என்டு சொல்லிப் மட்ச்சைப் பார்ப்பதை விட‌ அவர்கள் எவ்வளவோ மேல்...இலங்கையும்,அவுஸ்சும் விளையாடுவதை பார்ப்பார்கள் கேட்டால் தங்கள் ஆதர‌வு அவுஸ்சுக்கு அதனால் பார்க்கிறோம் என்பார்கள் ஆனால் இலங்கையும்,இந்தியாவும் விளையாடுவதை எதற்காக பார்க்கிறார்கள்?...எதிரியும்,துரோகியும் விளையாடுகிறார்கள் யார் வென்டால் என்ன/தோற்றால் என்ன என்று போட்டு இருக்க வேண்டியது தானே?... கிரிக்கட் பிடிக்கும் என்பத்ற்காகத் தானே போட்டியைப் பார்க்கிறீர்கள்?...இதைத் தான் நாங்களும் சொல்கிறோம் ஒரு வித்தியாச‌ம் தான் நீங்கள் களவாக செய்கிறீர்கள்,நாங்கள் நேர‌டியாக செய்கிறோம்

உங்கள் வாதம் தவறானது , நான் இன்றுவரை சிறீலங்கா அணிக்கு சார்பாக இருந்தது இல்லை . இலங்கையோடு யர விளையாடினாலும் எதிர் அணிக்கு தான் சப்போர்ட். அதே போல இந்தியா பாகிஸ்தான் என்று வந்தால் பக்கிக்கு. அதே நேரம் எனக்கு பிடித்த நாடுகளில் ஒன்று அவுஸ், 2 வது வெஸ்ட் இண்டிஸ். அதன் பின் தான் இங்கிலாந்த் நீயுஸோலாந்த்.

என்னோடு வேலை செய்யும் சிங்களவருக்கும்(வேதியலில் முனைவர் பட்டம்) சிறிலங்காவில் குடும்ப சிங்கள நண்பர் (உடைகள் தோய்ப்பவர்), இருவருக்கும் ஒரே விதமான சிந்தனை போக்கு ,அதாவது தமிழருக்கு அடிக்க வேண்டும்.அடிமையாக வைத்திருக்க வேண்டும் என்பது.ஏன் உங்களை போல தமிழர்களுக்கு தமிழர்கள் எதிரியாகவும் சிங்களவர்கள் இத்தனை கொலைத்தாண்டவம் ஆடியும் அவர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும் உள்ளீர்கள் என நடிக்கத்தெரியாத உங்களை கேட்கலாமா??

சிங்கள அரசு விளையாட்டோ, கலை நிகழ்ச்சியோ அதனை அரசியலாக்கி செயற்படுகிறது என்பதை சாதாரண குழந்தையே கூறிவிடும்?. நீங்கள் விரும்பும் இலங்கை அணியில் இருந்த அர்ஜுனா ரணதுங்கா எப்படியான இனவாதியாக ஒரு இனவாத கட்சியில் உள்ளார் என்பதே இதற்கான clasic சான்று.

தனி நபர்கள் பற்றிய உங்கள் கருத்துக்களை அரசியலாக பார்க்க முடியாது .

சிறிலங்கா அரசு நாம் சுதந்திரம் பெற்றதில் இருந்து எம்மை அடக்க நினைக்கும் ஒரு மிலேச்சத்தனமான நாடு ,அதற்கு எமக்கு தேவை ஒரு அரசியல் தீர்வு.அது தமிழிழம் ஆகவும் இருக்கலாம் அல்லது சுயநிர்ணய உரிமையுடன் கூடிய ஒரு மாநில சுயாட்சியாகவும் இருக்கலாம்.அதற்காகத்தான் நாம் அனைத்து வழிகளிலும் போராடுகின்றோம்.

2002 நான் பல வருடங்களுக்கு பின் இலங்கை சென்றபோது கதிர்காமம் போக எனக்கு ஒழுங்கு செய்த பஸ் சாரதி ஒரு சிங்களவர் ,நள்ளிரவு கிக்கடுவையில் ஒரு லோட்சில் போய் இறங்கி தங்கினோம் ,அதுவும் முழு சிங்கள வேலையாட்களால் நிறைந்திருந்தது .சாப்பாடு முடிந்திருந்த நிலையில் திருப்ப சமைத்து பரிமாறினார்கள் .நான் கடற்கரையோரம் இருந்து தண்ணியடிதுக்கொண்டிருந்தேன்.இப்போ யோசிக்க கொஞ்சம் பயமாக இருக்கு .அவர்கள் நான் கனடாவில் என்ன செய்கின்றேன் ,எனது சம்பளம் என்ன இது இரண்டிலும் தான் அக்கறையாக இருந்தார்கள்.அந்த சாரதி எம்மை மிக மரியாதையுடன் முழு இடமும் சுத்திக்காட்டினார் .கடைசியில் இறங்கும் போது நான் கொடுத்த டிப்ஸ் கூட வாங்க மறுத்தார்.தமிழர் ஒருவரின் ஏஜென்சியில் தான் அவர் வேலை செய்கின்றார் .

இதை நான் எழுதுவதற்கு காரணம் தனி மனிதர் குணாம்சம் வேறு அரசியல் வேறு .எனது மிக நெருங்கிய நண்பர் ஒருவர் இப்போ இலங்கை போய் டக்கிலசுடன் திரிகின்றார் .நீச்சல் குளம் திறக்கையில் அருகில் நிற்கும் படங்கள் கூட இணையங்களில் வந்தது .

போராடி எமது உரிமையை பெற வேண்டியதுதான் எமது தேவை .தனி நபர்களின் சில செய்கைகள் எமக்கு கோபம் ஊட்டாலாம் ஆனால் நாம் போராடுவது ஒரு அரச நிறுவனத்துடன் தான் .இந்தியாவுடனும் உலகுடனும் எனது அரசியல் நிலை அதுதான்.

Edited by arjun

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்களுக்கு (தமிழர்களுக்கு) என்று உருப்படியான 100 ஆண்டுகளுக்கும் மேலான தனித்துவமான கிரிக்கெட் வரலாறு உண்டு. அதை மையமாக வைத்து எமது தேசிய இன நிலைப்பாட்டை வலியுறுத்தி.. எமக்கான சர்வதேச அங்கீகாரமுள்ள கிரிக்கெட் அணியை உருவாக்க.. புலம்பெயர் அமைப்புக்கள் முயல வேண்டும். தமிழீழ தேசிய கிரிக்கெட் அணியை உருவாக்க நாடு கடந்த தமிழீழ அரசு போன்றவை முயற்சிப்பது அவசியம். அது சர்வதேச அளவில் எமது தேசிய நாட்டின் இருப்பை சொல்லி வைக்க உதவும்..! -நெடுக்ஸ் .

எழுத்தில் மட்டும் நிற்காமல் செயலில் எதையாவது செய்யவும் ,நான் லண்டனில் முன்னர் விளையாடிய கிரிக்கெட் நண்பர்களுடன் தொடர்புகொண்டு உதவி செய்ய சொல்லுகின்றேன்.

அடுத்து தேவனுக்கு அடியுடன் மண்டை பிழை போன சிலருக்கு பதில் எழுதுவதில்லை என்று எப்போதோ எடுத்த முடிவு .

முன்றாம் வகுப்பு படிக்கும் போது தமிழ் நாட்டு டீம் வர சென்று பார்த்து வெங்கட்ராகவனிடம் ஆட்டோகிராப் வாங்கினேன் .பின்னர் அவுஸ்திரேலிய டீம் வந்ததது,பின்னர் மியாண்டாத் தலைமையில் பாகிஸ்தான் டீம் வந்தது .இவ்வளவும் நடந்தது யாழ் மத்தியகல்லூரியில் அப்போ யாழ்பாண டீமிற்குத்தான் ஆதரவை கொடுத்தோம் .பின்னர் வெஸ்ட் இண்டீஸ் வர கொழும்பு சென்று ஓவலில் மாட்ச் பார்த்தேன் அப்போ இலங்கை டீமிற்குத்தான் ஆதரவு கொடுத்தேன் .அந்த நேரம் புலியென்ற ஒன்றே இல்லை .

வேஷம் போட்டு வாழ எனக்கு தெரியாது உங்களில் பலர் போல்.

கேள்வி எல்லாவற்றுக்கும் திருடன் வாயில் பதில் இருக்காது, அதனால் தேவைக்கு மூடித்தான் வைத்திருக்க வேண்டும் அவன் வாயை. அப்படி அவன் மூடிவைத்திருக்கும் வாயை தனது புத்திசாலித்தனம் என்று அவன் மட்டும்தான் எண்ண முடியும்!

முன்னறிமுகம் ஒருவருக்கு ஒருவர் இல்லாத ஒரு கூட்டத்தில் ஒருவர் ஒரு பொருளைப்பார்த்து இது சிறப்பானது என்று பிறருக்கு அறிமுகம் செய்ய விளைவதானது கண்ணால் பார்க்கப்படாத ஒரு பொருளை இன்னொரு கணால் பார்க்கப்பாடாத பொருளைக்கொண்டு விளக்கம் செய்யும் முயற்சியைப் போன்றது.

இத்தகைய ஒரு முயற்சி ஒருபோதும் அறிவுடமையினதாகாது!

ஒருவரது பதிவு கொண்டுள்ள பொருளை தர்க முறையால் வெல்லும் முயற்சி இல்லாமல் இது மொக்குப் பதிவு, இது மண்ணை கழண்ட பதிவு என முத்திரை குத்தும் உரிமை, அந்தப் பண்பு ஒரு தரமான அறிவிற்கு ஒரு போதும் வழக்கமாயிராது.

நான் இங்கே அர்யுனின் பதிவுகளுக்கு பதில் எழுதிகின்றேன் ஆனால் இது அவருக்காக எழுதுவதில்லை. அப்படி நான் எண்ணியிருந்தால் உண்மையில் நான் மண்டைப் பழுதாய்த்தான் இருக்க வேண்டும். எமது மக்களினது புலி அபிமானத்தை எத்தகையது என்று இந்த சிங்களம் சொல்கின்றதோ அதைவிட கேவலமானதாக அர்யுனினது அளவு இருக்கின்றது. இந்த அளவு முரண்பாடு சீர்படுத்தக் கூடியதல், இது சீர்கெட்ட நிலை. இதை திருத்தும் எண்ணத்தில் ஒருபோதும் நான் பதிவை எழுதியதே இல்லை! ஏனய பதிவர்களுக்காகவே இதை பதிந்து கொண்டிருக்கின்றேன்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழருக்கு அடிக்கோணும்...அவங்களை அடிமையாய் வைச்சிருக்கோணும் எண்ட சிங்களவனுக்கும்......ஊர்சுத்திக்காட்டி டிப்ஸ் வாங்காத சிங்களவனுக்கும் எவ்வளவு வித்தியாசம்...என்னதொரு பாச உணர்வுகள்????????

தமிழருக்கு அடிக்கோணும்...அவங்களை அடிமையாய் வைச்சிருக்கோணும் எண்ட சிங்களவனுக்கும்......ஊர்சுத்திக்காட்டி டிப்ஸ் வாங்காத சிங்களவனுக்கும் எவ்வளவு வித்தியாசம்...என்னதொரு பாச உணர்வுகள்????????

அரசியல் பொறுப்பாளர் நடேசனின் மனைவியும் சிங்களவர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரசியல் பொறுப்பாளர் நடேசனின் மனைவியும் சிங்களவர்.

மகிந்தவின்ரை மச்சானும் தமிழன்?

அப்ப இனி ஒண்டுக்கு ஒண்டு!!!!!

மகிந்தவின்ரை மச்சானும் தமிழன்?

அப்ப இனி ஒண்டுக்கு ஒண்டு!!!!!

மீசையில் ஓடவில்லையாக்கும் :D:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த தலையங்கமே தப்பு தமிழர்கள் எப்ப சிங்கள அணிக்கு ஆதரவு கொடுக்காமல் விட்டவர்கள் ஒரு,சிலரை தவிர?...

டக்ளஸ், கருணா கூட இப்படித்தான் சொல்கின்றார்கள், "... ஒரு சில தமிழரைத் தவிர யார் புலிகளுக்கு ஆதரவாய் இருந்திருக்கின்றார்கள்.." என்ன செய்வது? எதைச் சொல்வதற்கு என்ன தகமை, என்ன உரிமை வேண்டும் என்பதை எண்ணும் அறிவிலாரின் இந்தச் செயல்களுக்கு?

ஈழத்திற்கு ஒரு தடவை முடிந்தால் போய் வந்து உங்கள் கருத்தை முன் வையுங்கள்...கடைசி யுத்தத்தில் பாதிக்கப் படாத வட‌க்கு,கிழக்கு மக்களில் இருந்து,போரினால் கடுமையாக பாதிக்கப்பட்ட வன்னி மக்கள் கூட‌ சிங்கள அணியைத் தான் ஆதரிக்கிறார்கள்....முதலில் சிங்கள அணி அல்லது இந்தியா வெல்ல வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள்.

ஆமாம், "இப்போது அவர்களுக்கு தமிழீழம் வேண்டாம் சிங்களவர்களுடன் ஒன்றாகவே இருப்பதுதான் பிடிக்கும்" என்று கோத்தா சொன்ன வகையாகவே இருக்கின்றது.

தனி நபர்கள் பற்றிய உங்கள் கருத்துக்களை அரசியலாக பார்க்க முடியாது .

சிறிலங்கா அரசு நாம் சுதந்திரம் பெற்றதில் இருந்து எம்மை அடக்க நினைக்கும் ஒரு மிலேச்சத்தனமான நாடு ,அதற்கு எமக்கு தேவை ஒரு அரசியல் தீர்வு.அது தமிழிழம் ஆகவும் இருக்கலாம் அல்லது சுயநிர்ணய உரிமையுடன் கூடிய ஒரு மாநில சுயாட்சியாகவும் இருக்கலாம்.அதற்காகத்தான் நாம் அனைத்து வழிகளிலும் போராடுகின்றோம்.

2002 நான் பல வருடங்களுக்கு பின் இலங்கை சென்றபோது கதிர்காமம் போக எனக்கு ஒழுங்கு செய்த பஸ் சாரதி ஒரு சிங்களவர் ,நள்ளிரவு கிக்கடுவையில் ஒரு லோட்சில் போய் இறங்கி தங்கினோம் ,அதுவும் முழு சிங்கள வேலையாட்களால் நிறைந்திருந்தது .சாப்பாடு முடிந்திருந்த நிலையில் திருப்ப சமைத்து பரிமாறினார்கள் .நான் கடற்கரையோரம் இருந்து தண்ணியடிதுக்கொண்டிருந்தேன்.இப்போ யோசிக்க கொஞ்சம் பயமாக இருக்கு .அவர்கள் நான் கனடாவில் என்ன செய்கின்றேன் ,எனது சம்பளம் என்ன இது இரண்டிலும் தான் அக்கறையாக இருந்தார்கள்.அந்த சாரதி எம்மை மிக மரியாதையுடன் முழு இடமும் சுத்திக்காட்டினார் .கடைசியில் இறங்கும் போது நான் கொடுத்த டிப்ஸ் கூட வாங்க மறுத்தார்.தமிழர் ஒருவரின் ஏஜென்சியில் தான் அவர் வேலை செய்கின்றார் .

இதை நான் எழுதுவதற்கு காரணம் தனி மனிதர் குணாம்சம் வேறு அரசியல் வேறு .எனது மிக நெருங்கிய நண்பர் ஒருவர் இப்போ இலங்கை போய் டக்கிலசுடன் திரிகின்றார் .நீச்சல் குளம் திறக்கையில் அருகில் நிற்கும் படங்கள் கூட இணையங்களில் வந்தது .

போராடி எமது உரிமையை பெற வேண்டியதுதான் எமது தேவை .தனி நபர்களின் சில செய்கைகள் எமக்கு கோபம் ஊட்டாலாம் ஆனால் நாம் போராடுவது ஒரு அரச நிறுவனத்துடன் தான் .இந்தியாவுடனும் உலகுடனும் எனது அரசியல் நிலை அதுதான்.

அர்ஜுன்,

உங்களுக்கு சிங்களவர்களை இந்த அளவுக்குத் தான் அறிமுகம். என் நண்பர்களில் இன்றும் அரைவாசிக்கும் மேலாக சிங்கள நண்பர்கள்தான். என் சொந்த facebook இல் இருப்பது அரைவாசிக்கும் மேலாக அவர்கள்தான். அத்துடன் இன்றும் வீட்டில் கதைக்கும் போது இடையிடை சிங்கள வார்த்தைகள் வந்து விழும் எனக்கு, என் சொந்த வாழ்க்கையில், தொழிலில் முன்னேற உதவி செய்த அனைத்தும் சிங்களவர்கள் தான் (மருந்துக்கும் ஒரு தமிழர் கூட இல்லை).... என் அப்பா செத்த 30 நிமிடங்களில் அன்றைய நாளுக்கு தேவையான உணவைக் கொண்டு தந்ததுடன் செத்த வீடு செய்து முடிக்கும் மட்டும் தோளோடு தோளாக நின்றவர்களும் அவர்கள் தான்

தனி மனித சுபாவங்களும், தனி மனித செயல்களும் அரசியல் கலப்படம் அற்றவையாகத்தான் எங்கும் இருக்கும். பாகிஸ்தானியர் பக்கத்து வீடென்றால், உணவு கொடுத்து உபசரிக்கும் வட இந்தியர்கள் ஏராளம். நான் முதல் வேலை செய்த ஈரானியரின் அலுவலகத்திற்கான இலத்திரனியல் பொருட்கள் அனைத்தையும் பொறுப்பெடுத்து maintenance செய்ய கொடுத்தது ஒரு இஸ்ரேலிய யூதருக்குத்தான்

இலங்கை அணி அதன் தேசியத்தையும், இன ஒடுக்கல்களுக்கு துணையாகும் அரசியலமைப்பையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது, இலங்கை அணியின் வெற்றியை சிங்கள சமூகம் தன் நாட்டின் வெற்றியாக மட்டும் பார்க்காமல் தம் இனத்தின் வெற்றியாகவே பார்க்கின்றது. இதனால் சிங்கள அணியை மிகவும் எதிர்க்கின்றேன்....என்னைப் பொறுத்தவரைக்கும் அது இலங்கை அணி அல்ல; பெளத்த பேரினவாதத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் ஒரு அணி...

  • கருத்துக்கள உறவுகள்

தனி நபர்கள் பற்றிய உங்கள் கருத்துக்களை அரசியலாக பார்க்க முடியாது .

சிறிலங்கா அரசு நாம் சுதந்திரம் பெற்றதில் இருந்து எம்மை அடக்க நினைக்கும் ஒரு மிலேச்சத்தனமான நாடு ,அதற்கு எமக்கு தேவை ஒரு அரசியல் தீர்வு.அது தமிழிழம் ஆகவும் இருக்கலாம் அல்லது சுயநிர்ணய உரிமையுடன் கூடிய ஒரு மாநில சுயாட்சியாகவும் இருக்கலாம்.அதற்காகத்தான் நாம் அனைத்து வழிகளிலும் போராடுகின்றோம்.

2002 நான் பல வருடங்களுக்கு பின் இலங்கை சென்றபோது கதிர்காமம் போக எனக்கு ஒழுங்கு செய்த பஸ் சாரதி ஒரு சிங்களவர் ,நள்ளிரவு கிக்கடுவையில் ஒரு லோட்சில் போய் இறங்கி தங்கினோம் ,அதுவும் முழு சிங்கள வேலையாட்களால் நிறைந்திருந்தது .சாப்பாடு முடிந்திருந்த நிலையில் திருப்ப சமைத்து பரிமாறினார்கள் .நான் கடற்கரையோரம் இருந்து தண்ணியடிதுக்கொண்டிருந்தேன்.இப்போ யோசிக்க கொஞ்சம் பயமாக இருக்கு .அவர்கள் நான் கனடாவில் என்ன செய்கின்றேன் ,எனது சம்பளம் என்ன இது இரண்டிலும் தான் அக்கறையாக இருந்தார்கள்.அந்த சாரதி எம்மை மிக மரியாதையுடன் முழு இடமும் சுத்திக்காட்டினார் .கடைசியில் இறங்கும் போது நான் கொடுத்த டிப்ஸ் கூட வாங்க மறுத்தார்.தமிழர் ஒருவரின் ஏஜென்சியில் தான் அவர் வேலை செய்கின்றார் .

இதை நான் எழுதுவதற்கு காரணம் தனி மனிதர் குணாம்சம் வேறு அரசியல் வேறு .எனது மிக நெருங்கிய நண்பர் ஒருவர் இப்போ இலங்கை போய் டக்கிலசுடன் திரிகின்றார் .நீச்சல் குளம் திறக்கையில் அருகில் நிற்கும் படங்கள் கூட இணையங்களில் வந்தது .

போராடி எமது உரிமையை பெற வேண்டியதுதான் எமது தேவை .தனி நபர்களின் சில செய்கைகள் எமக்கு கோபம் ஊட்டாலாம் ஆனால் நாம் போராடுவது ஒரு அரச நிறுவனத்துடன் தான் .இந்தியாவுடனும் உலகுடனும் எனது அரசியல் நிலை அதுதான்.

வெகு நாளைக்குப் பிறகு நிதானத்துடன் புலிக்காய்ச்சல் இல்லாமல் கருத்து எழுதியிருக்கிறீர்கள். வாசிக்கவும் ஆர்வமாக இருக்கிறது. இப்படியே தொடர்ந்து எழுதங்களேன், எதற்கு எல்லோருடனும் முரண்பட்டுக்கொண்டு....??இது தேவையா??

உங்களைப்போல எனக்கும் பல சிங்கள நண்பர்கள் இருந்தார்கள். மொறட்டுவையில் நான் படிக்கும் காலத்தில் என்னை அவர்கள் ஒரு சிங்களவனாகத்தான் பார்த்தார்கள். நான் கதைக்கும் சிங்களத்திலிருந்து என்னைத் தமிழன் என்று பிடிப்பது கடினம். பலமுறை அவர்களின் வீடுகளுக்குச் சென்றிருக்கிறேன். ஒருமுறை செத்தவீடு ஒன்றிற்காக காலிக்குச் சென்று மூன்று நாள் தங்கினேன். அந்த வீட்டில் என்னையும் தங்கள் மகனைப்போலவே கவனித்தார்கள். இரவிரவாக கூடியிருந்து எனது அனுபவங்களை நான் பகிர ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார்கள். இன்னொருமுறை கம்பஹாவிற்குச் சென்று எனது நண்பன் சஜீவவுடன் இரு நாட்கள் தங்கியிருந்துவிட்டு வந்தேன். இதெல்லாம் 83 இற்கு முற்பட்ட காலம் கிடையாது. 98- 99 இல்த்தான் நடந்தது. கைய்யில் பணமில்லையென்றால் பக்கேட்டிலிருக்கும் எல்லாவற்றையும் தருவான் அவன். தமிழரில் அப்படியொரு நண்பன் எனக்கு இருக்கவில்லை. அதேபோல என்னுடன் கூடப்படித்த சரோஜினி எனும் பெண். மற்றைய தமிழ்ப் பெண்கள் பார்த்துப் பொறாமைப்படும் அளவிற்கு என்னுடன் பழகும் அற்புதமான ஒரு பெண். அவளை அவுஸ்திரேலியாவுக்கு வரும்படி எவ்வளவோ கேட்டுப் பார்த்தேன். பிடிவாதமாக அங்கேயே இருந்துவிட்டாள். அவர்கள் எப்போதுமே என்னை ஒரு புலியாகப் பார்த்ததில்லை. நான் கட்டுப்பெத்தையில் தங்கியிருந்த வீட்டு அன்ரி எனக்குத் தாய்க்குச் சமம். சீ.வீ. குணரத்தின கொல்லப்பட்ட அன்று என்னையும் இன்னும் 60 தமிழ் மாணவர்களையும் இரவோடு இரவாக அள்ளிக்கொண்டு போய் மொறட்டுவைப் பொலீசில் வைத்து சாத்தோ சாத்தெண்டு சாத்தினார்கள். ராஜரட்ணம், நிலாப்தீன் போன்றோரை எமக்கு அடையாளப்படுத்தியதும் அந்த மூன்று நாட்கள்தான். அந்த மூன்று நாளும் தனது தள்ளாத வயதிலும் என்னைப் பார்க்க மொறட்டுவைப் போலீசுக்கு வந்துபோனார் அந்த அன்ரி. புலிகளுக்கு அடைக்கலம் குடுக்கிறீர்கள் என்று பார்த்தால் இன்றைக்கு அவர்களைப் பார்க்கக் கூட இங்கு வருகிறீர்களோ என்று அவரைப் பார்த்து மொறட்டுவை ஓ.ஐ.சீ கத்தியது நினைவிருக்கிறது.

இறுதியாக, கிரிக்கெட். நான் கிரிக்கெட் பார்க்கத் தொடங்கியது அரவிந்தவும் அர்ஜுனவும் ஆடும் ஆட்டத்தைப் பார்த்துத்தான். 2009 வரை சிறிலங்கன் கிரிக்கெட் அணியென்றால் எனக்கு உயிர். ஆனால் 2009 எல்லாவற்றையுமே மாற்றிவிட்டது. ஏதோவொன்று தொடர்ந்தும் அவர்களை ஆதரிப்பது தவறென்று சொல்கிறது. ஆனாலும், இந்தியா பாக்கிஸ்த்தான் போன்ற அணிகளுடன் சிறிலங்கா மோதினால் இப்போதும் கூட அவர்களைத்தான் ஆதரிப்பேன்.

எவ்வளவோ நல்லவர்கள்...என்ன செய்ய இந்த இனப்பகை எல்லாவற்றிற்குமிடையே வந்து விட்டது. நிச்சயம் அவர்களை ஒரு நாள் பார்ப்பேன் என்கிற நம்பிக்கை இருக்கிறது. அதற்குமுதல் எனது மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்கிற ஆசையுமிருக்கிறது. பார்க்கலாம்.

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவரிடம் கேட்டால் "அபே மினிசுத்தேக்க இன்ட பா"என்கன்ட சனத்தோட இருக்க ஏலாது....என்பார்கள்...

தமிழனை கேட்டால் எங்கன்ட தமிழனோட இருக்க ஏலாது என்பார்கள்....

வேறு ஒரு இனத்துடன் பழகும் பொழுது எல்லோரும் கொஞ்சம் கவனமாகத்தான் பழகினம்.......

:rolleyes::lol::D

Edited by I.V.Sasi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.