Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருகமணி மாலை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

110beads.jpg

என்ன பிள்ள சுமங்களா.. கொலிடேக்கே ஊருக்குப் போறியே. பவளம் அன்ரி லண்டன் முருகன் கோவிலில் கண்டு விசாரிக்க..

ஓம் அன்ரி. இவரும் வந்து அசைலம் கேட்டு இப்ப 12 வருசம் ஆகுது. இப்ப ஒரு வருசமாத்தானே எங்கள் எல்லோரும் பாஸ்போட் தந்திருக்கிறாங்கள். நானும் கனடாவில உள்ள அண்ணா அண்ணிட்ட கூடப் போக முடியாமல் இவ்வளவு காலமும் இந்த லண்டனுக்கையே சிக்குப்பட்டு கிடக்கிறன். அதுதான் இந்தக் கொலிடேக்கு என்றாலும் ஒருக்கா ஊருக்கும் கனடாவுக்கும் போகத்தான் இருக்கிறம். ஏன் அன்ரி.. ஏதேனும் விசயமே...

இல்லப் பிள்ள.. ஊருக்குப் போறதுக்கு எனக்கும் விருப்பமா இருக்குது. ஒரு மாதமாவது போய் நின்றிட்டு வருவம் என்றிருக்கிறன். அதுதான் நீங்கள் போறதெண்டால் உங்களோட சேர்ந்து வந்தால் உதவியா இருக்கும் தானே.. என்று தான் கேட்டனான்.

நாங்கள் பிள்ளைகளின்ர ஸ்கூல் கொலிடே வரத்தான் அன்ரி போவம். வேணும் என்றால் சொல்லுங்கோ எங்களுக்கு ரிக்கட் போடேக்க உங்களுக்கும் போட்டு விடுறம். பிறகு நீங்கள் காசை கையில தந்தியள் எண்டால் சரி தானே. இப்ப எல்லாம் மூன்று நாலு மாசத்துக்கு முதலே ரிக்கட் போடனும். அது கூட எக்கச்சக்க விலை போகுது.. அவரட்ட சொல்லி இருக்கிறன் இன்ரநெட்டில பார்த்து மலிவா வரேக்க உடன புக் பண்ணிடுங்கோ என்று.

எந்தப் பிளேனில பிள்ள நீங்க போடப் போறீங்கள்..?!

நாங்கள் சின்னனுகளோட போறது. பிளேன் எல்லாம் மாறிமாறி ஏறிக் கொண்டு திரிய ஏலாது. சிறீலங்கன் எயார் லைன்சில தான் போடப் போறன் என்று சொன்னவர். உங்களுக்கும் ஓகே தானே அன்ரி.

எனக்கும் பிரச்சனை இல்லப் பிள்ள. உவன் என்ர பேரன் உங்கின லண்டனில யுனிவேர்ச்சிட்டியில படிக்கிறான். அவன் சொன்னான் ஆச்சியம்மா ஊருக்குப் போகாதேங்கோ. போறதெண்டால் சிறீலங்கன் எயார் லைன்சில போகாதோங்கோ எண்டான். ஏண்டா எண்டன்.. அவங்கள் தானே எங்கட சனத்தைக் கொல்லுறாங்கள். ஏன் அவங்கட பிளேனில போகனும் என்று கேட்கிறான்.

சும்மா இருங்கோ அன்ரி. உங்கட பேரன்மார் இஞ்ச லண்டனில பிறந்தவை. அவைக்கு ஊர் நடப்புகள் தெரியாது. உங்க சொல்லிக் கொடுக்கிறதை அதுகள் சொல்லிக் கொண்டு திரியுதுகள். போன மாசமும் எங்கட அவரின்ர அண்ணா போயிட்டு வந்தவர். அங்க எல்லாம் நல்லா இருக்காம். ஆமிக்காரங்கள் நல்ல சிநேகிதமா நடக்கிறாங்களாம். எங்கட பொம்பிளப் பிள்ளையள விரும்பிக் கலியாணமே கட்டிறாங்களாம். முந்தி போல.. கோவில் திருவிழாவிற்கு சோனகரின்ர பன்சி கடைகள் எல்லாம் வருகுதாம். கருகமணி மாலை எல்லாம் விக்கினமாம். அங்க இப்ப நிலைமை யுத்தத்திற்கு முந்தின பழைய நிலைமையாம். நல்லா இருக்காம்.

அப்படியே பிள்ள.. நானும் அறிஞ்சனான் தான். உதுகளை எல்லாம் என்ர மகனட்டையும் பேரப்பிள்ளையளட்டையும் சொன்னால் அவை சண்டைக்கு வருவினம். நீங்கள் யாழ்ப்பாண ரவுனுக்கும்.. கொழும்புக்கும்.. திருகோணமலை ரவுனுக்கும்.. மட்டக்களப்பு ரவுனுக்கும் போயிட்டு கூத்தடிச்சிட்டு வாறவையிண்ட கதையைக் கேட்டிட்டு எங்களுக்கு வந்து சொல்லி கடுப்பேத்தாதேங்கோ.. அங்க ஊர்மனை வழிய சனம் இரவில நிம்மதியா நித்திரை கூட கொள்ள முடியாமல் கிடக்குதுகளாம் என்று பேசுவினம்.

ஒரு சில இடத்தில பிரச்சனை தான். ஏன் இப்ப லண்டனில பிரச்சனை இல்லையா அன்ரி. இரவு 9 மணிக்கு மேல றோட்டால போக முடியல்ல. பயம். அதோட ஒப்பிடேக்க ஊரில நிலைமை பறுவாயில்லைத் தானே அன்ரி.

நீ சொல்லுறதும் சரி தான் பிள்ள. அது இருக்க.. ஊருக்குப் போய் எங்க நிக்கப் போறியள்.

ஊரில அன்ரி என்ர சகோதரி ஒருவா கலியாணம் கட்டி இருக்கிறா. யாழ்ப்பாணத்தில. அவையோட நிற்பன். அங்க கிட்ட தான் என்ர சீதன வீடும் இருக்குது. அதை திருத்தி ஒரு மூன்று மாடி கட்டிவிட்டால் வாடகைக்கு விடலாமாம் அன்ரி. சிங்கள ஆக்கள் வீட்டுக்கு அலையுதுகளாம். நல்ல வாடகையும் கொடுக்குதுகளாம். அதுகளால ஒரு பிரச்சனையும் இல்லையாம். எங்கட ஆக்களுக்கு கொடுத்தா வீட்டு உரிமை ஆக்கள் வெளிநாட்டில என்று சொல்லி நடப்புக் கதைப்பினமாம். எழும்ப மாட்டம் எண்டினமாம். சிங்களச் சனம்.. வந்து தங்கிப் போறதுகள் தானே. பிரச்சனை இல்லையாம். அதுதான் உதுகளைப் போய் செய்துட்டு வரும் என்று நினைச்சிருக்கிறன். இங்க இருந்து ஒரு ஐயாயிரம் பத்தாயிரம் பவுனை பாங்கில கடன் எடுத்துக் கொண்டு போனாலே போதும் தானே அன்ரி. அங்க நினைச்சதை செய்திட்டு வரலாம். வருமானமும் ஆகுது தானே.

நீ சொல்லுறது சரி தான் பிள்ள. எனக்கும் நிறைய சீதனக் காணிகள் கிடக்குது தொல்லிப்பழைப் பக்கம். எல்லாம் தரிசாக் கிடக்காம் என்று போய் வந்தவை சொல்லிச்சினம். நானும் உங்களோட வந்தன் எண்டால்.. அதுகளை திருத்தி.. ஒரு சின்ன தங்கும் இடமும் கட்டிட்டு குத்தகைக்கு விட்டிட்டு வந்தன் என்றால் கொஞ்சக் காசாவது வரும் தானே பிள்ள.

ஓம் அன்ரி. நீங்கள் சொல்லுறது சரி. ஆனால் ஊரில சனம் சரியான வறுமையில இருக்காம். சமான் சக்கட்டையள் எல்லாம் விலை கூடிப் போச்சுதாம். களவு அதிகமாம். அதுதான் போகேக்க கனக்க நகைகள் கொண்டு போகாமல்.. என்னட்ட உங்கின வாங்கின நிறைய கருகமணி மாலைகள் கிடக்கு போட்டுக் கொண்டு போகப் போறன். உங்களுக்கும் வேணும் எண்டால் சொல்லுங்கோ அன்ரி தாறன்.

வேண்டாம் பிள்ள. என்னட்டையும் உதுகள் உந்த பேர்த்டே பாட்டியளுக்கு என்று வாங்கினதுகள்.. நிறையக் கிடக்குது. உதுகளைத் தவிர.. நாங்கள் லண்டனிலையே லொக்கரில தான் நகைகள் வைச்சு எடுக்கிறம். எல்லாம் இடமும் நகை என்றால் பயம் பிள்ள. நீங்கள் எப்படி..?!

நாங்களும் தான் அன்ரி. உந்த மனிசனட்ட திட்டு வாங்கி வாங்கி..எவ்வளவு சீட்டைக் கட்டி நகைகளை வேண்டி இருப்பன். அதுகள வீட்டில வைச்சிருக்க ஏலுமே. லொக்கரில தான் வைச்சிருக்கிறம் அன்ரி.

அதுதான் நல்லது பிள்ள. பிள்ள.. எனக்கு நேரம் ஆகுது. நல்ல விலை வரேக்க உங்களோட சேர்த்து எனக்கும் சிறீலங்கன் எயார் லைன்சில டிக்கட்டப் போடுங்கோ. ஒரு மாசம் நின்றிட்டு வருறது போல போட்டால் நல்லது. அங்க இப்ப சரியான வெயிலாம். அதுதான் தாங்க ஏலாது. பார்த்துச் சமாளிப்பம்.

ஓம் அன்ரி. நாங்களும் பிள்ளை குட்டியளோட போறது.. வெயில் தான் அன்ரி ஒரு பெரிய பிரச்சனை. மற்றும்படி அங்க ஒரு பிரச்சனையும் இல்ல. எங்களுக்கு என்ன அன்ரி.. வெளிநாட்டுப் பாஸ்போட் தானே. யாரும் லேசில பிரச்சனைக்கும் வரமாட்டினம்.

நீ சொல்லுறதும் சரிதான் பிள்ள. அப்ப நான் வாறன். ஏதேனும் எண்டால் கோல் பண்ணு பிள்ள. என்ர நம்பர் இருக்கல்லே...?!

ஓம் அன்ரி. உங்கன்ர நம்பர் எல்லாம் இருக்குது. அப்ப போயிட்டு வாங்கோ அன்ரி. நான் ஒரு 5 பவுனுக்கு முருகனுக்கு அர்ச்சனை செய்து கொண்டு போகப் போறன்.

சரி பிள்ள. கவனமாய் இரும்மா. அப்ப நான் போயிட்டு வாறன்.

[மிக அண்மையில் காதில் விழுந்த நம்மவர் சம்பாசணை அப்படியே குட்டிக் கதை வடிவில்.. எப்படி எல்லாம் சுழிக்கிறாய்யா தமிழன்.. தன்னைத் தானே..!]

Edited by nedukkalapoovan

எந்தப் பிளேனில பிள்ள நீங்க போடப் போறீங்கள்..?!

நாங்கள் சின்னனுகளோட போறது. பிளேன் எல்லாம் மாறிமாறி ஏறிக் கொண்டு திரிய ஏலாது. சிறீலங்கன் எயார் லைன்சில தான் போடப் போறன் என்று சொன்னவர். உங்களுக்கும் ஓகே தானே அன்ரி.

எனக்கும் பிரச்சனை இல்லப் பிள்ள. உவன் என்ர பேரன் உங்கின லண்டனில யுனிவேர்ச்சிட்டியில படிக்கிறான். அவன் சொன்னான் ஆச்சியம்மா ஊருக்குப் போகாதேங்கோ. போறதெண்டால் சிறீலங்கன் எயார் லைன்சில போகாதோங்கோ எண்டான். ஏண்டா எண்டன்.. அவங்கள் தானே எங்கட சனத்தைக் கொல்லுறாங்கள். ஏன் அவங்கட பிளேனில போகனும் என்று கேட்கிறான்.

பொய்சொல்லகூடாபா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொய் சொல்லக் கூடாப்பா

இதில பொய் எதற்கு..! புலம்பெயர் தேசங்களில் பிறந்த சிலரிடம் இருக்கும் தாயகம் பற்றிய விழிப்புணர்வு.. தாயகத்தில் பிறந்து பொருண்மிய.. வசதி தேடி.. அகதி என்று புலம்பெயர்ந்த பலரிடம் இல்லை. இது கண்கூடாகக் காணக் கூடிய யதார்த்தம். அதற்காக புலம்பெயர்ந்த தேசத்தில் பிறந்த எல்லோரும் அப்படி என்றில்லை. அவர்களிலும் பலர் ஏனோ தானோ பேர்வழிகள் தான். இருந்தாலும் ஒரு சிலர் தாயகம் பற்றி சிந்திக்க பெற்றோரால் சரியாக தூண்டப்பட்டுள்ளதையும் காண்கிறோம். :):icon_idea:

இப்படி நிறைய நடக்குது நெடுக்ஸ், சில பேருக்கு உள்ள குற்ற உணர்வோ என்னவோ சிறிலங்கன் எயார் லைன்சைத் தவிர்த்து கொள்கிறார்கள். பலர் 'வடக்கில் வசந்தம், அந்த மாதிரி ஊர் இருக்கு' என்று போய் வந்த கையோட அடுத்த விடுமுறைக்கு போகத்தான் இருக்கு என்று வாயைப் பிளக்கிறார்கள். இன்னும் சிலர் 'எங்கட பொடியள் திரும்ப வரவேணும்...! அது எப்ப நடக்குமோ??' என்று ஆதங்கத்தோடும் சொல்லி முகட்டைப் பார்க்கிறார்கள்...

உங்கட radar-றின் திறமையைப் பயன்படுத்தி, நல்லா tune பண்ணி முழு coverage-ம் எடுத்து அதை எழுத்து வடிவில் பகிர்ந்தமைக்கு வாழ்த்துகள் :D:)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கட radar-றின் திறமையைப் பயன்படுத்தி, நல்லா tune பண்ணி முழு coverage-ம் எடுத்து அதை எழுத்து வடிவில் பகிர்ந்தமைக்கு வாழ்த்துகள் :D:)

கெலிடேயும் அதுவுமா ரடாரின் ரேஜ்ஜைக் கூட்டி வைக்கனும். அப்ப தான்.. இன்னும் மேலைநாடுகளில் வாழும் தமிழ் அடிமைகளின் வெட்டிப் பந்தாவை வெளிக்கொணரலாம்.

நாட்டை விட்டு ஓடிவரக் காரணமான சிங்களவன் நல்லமாம்.. பிறந்து வளர்ந்த பூமியில் வெயில் படுவது தான் நம்மவருக்கு பிரச்சனையாம் எல்லோ. தூ...! இதுகளுக்கு விடுதலை ஒரு கேடு..!

வெள்ளைக்காரனோ.. வெயில் குளிக்க அங்க ஓடுறான்..! வடலிக்க பனையோட பனையா காய்ஞ்சதுகளுக்கு வெயில் ஒரு கேடாம் எல்லோ..??! :):icon_idea::rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என வாழ்பவர்கள், பலர் நெடுக்கர்!

வெகு சிலரே , சில கொள்கைகளுடன் வாழ முயற்சிக்கிறார்கள்!

எல்லாவற்றிலும் அசிங்கம் என்னவெனில், ' அகதி விண்ணப்பம்' மூலம் 'பிரஜாவுரிமை' பெறுபவர்களே பெரும்பாலும், 'சிறிலங்கா' விமான சேவையைப் பயன்படுத்துகிறார்கள்!

தங்கள் சிறுகதைக்கு, நன்றிகள்!

:D:lol: :lol:

அதுமட்டுமல்ல.. குட்டி.. மற்றும் புங்கையூரன்.. ஊரில முந்தி இடுப்பிள பப்பாக்காய் செருகி பெட்டையளுக்கு show காட்டின கூட்டமெல்லாம்.. அப்பவே புத்திசாலித்தனமா இயக்கத்தை விட்டு ஓடியாந்திட்டு இப்ப வெளிநாடுகளில இருந்து கொண்டு.. சும்மா இல்ல ஒன்றுக்கு இரண்டு மூன்று மனிசி என்று.. ஒவ்வொரு மனிசிமாருக்கும் தலா ஒரு பிள்ளை குட்டியென்று நாய் குட்டி போட்ட கணக்கா... இருந்து கொண்டு.. கடந்து வந்த பாதைகளில் தாங்க செய்த திருவிளையாடல்களை ஊருக்குச் சொல்லி விசிலடிச்சான்களோட கொண்டாடிக் கொண்டிருக்கினம். இதில அவையின்ர விடுப்புக்கு விண்ணாணத்திற்கு கற்பனைக்கு.. பலிக்கடாவாகவும்.. மாவீரர்கள் தான்..!

உண்மையான போராளிகள்.. 40,000 மாவீரர்களில் ஒருவராக மண்ணோடு மண்ணாக..!

இப்படியான கேடு கெட்ட சமூகத்திற்காக 40,000 பேர் உயிரைக் கொடுத்ததே வீண்..! அவர்கள் வாழவில்லை.. அவர்களை வைத்து வெளிநாடுகளில் வளமான வாழ்வு தேடிக் கொண்ட வாலுகளுக்கு வாலும்.. ரெம்பவே நீளமும் கூடிக்கிட்டு போகுது. ஒட்ட அறுக்கும் நேரம் நிச்சயம் வரும்..! அதை காலம் விரைந்து தீர்மானிக்கும். :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நேரத்திற்கும் சொல்லவேண்டிய கருத்தை சொல்லவேண்டிய நேரத்தில் சொன்னதற்கும்.

Edited by விசுகு

இப்படி நல்ல குட்டிகதைகளை எழுதுங்க :) :) :)

கெலிடேயும் அதுவுமா ரடாரின் ரேஜ்ஜைக் கூட்டி வைக்கனும். அப்ப தான்.. இன்னும் மேலைநாடுகளில் வாழும் தமிழ் அடிமைகளின் :(:( :(வெட்டிப் பந்தாவை வெளிக்கொணரலாம்.

பாவம் அந்த அன்ரியும் அக்காவும் நெடுக்கரின்ர ரடாரின் power தெரியாமல் சும்மா முழங்கித் தள்ளிட்டினம். இனிமேல் நெடுக்கர் கோயிலுக்கு போக முன்னமே நான் போய் இந்த அன்ரிமாரை அலாட்டாக்க வேணும்.சும்மா இருக்கிற எனக்கும் வேலை வந்திட்டு.

:huh: :huh: :huh:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாவம் அந்த அன்ரியும் அக்காவும் நெடுக்கரின்ர ரடாரின் power தெரியாமல் சும்மா முழங்கித் தள்ளிட்டினம். இனிமேல் நெடுக்கர் கோயிலுக்கு போக முன்னமே நான் போய் இந்த அன்ரிமாரை அலாட்டாக்க வேணும்.சும்மா இருக்கிற எனக்கும் வேலை வந்திட்டு.

:huh: :huh: :huh:

எனி லண்டனில வீதிக்கு வீதி உள்ள கோயில்களில் திருவிழாவும்.. தேரும் தானே. நம்ம சனங்களின் சவுண்டு.. 100 அடி தள்ளிப் போனேலே காதில விழும். இதுக்காக எல்லாம் ஸ்பெசல் ரடார் தேவையில்ல. காதைக் கூர்மையா வைச்சிருந்தாலே போதும்.

என்னத்தை அலேட் பண்ணி. வருசா வருசம் அலேட் பண்ணிறாங்க.. நகைகளை கழுத்து நிறைய மாட்டி வந்து கள்ளனுக்கு கொடுக்கிறன் என்று தானே வருகுதுகள்..! திருத்த ஏலாது. வாங்கினதை காட்ட திருவிழா.. பேட்த்டே பாட்டி.. சாமத்தியவீடு.. கலியாணம் வீடு.. இதைவிட்ட வேற என்ன இருக்கு..?????! ஊரிலும் இதே.. இங்கும் அதே..! (என்ன அங்க.. வீடு குடிபூர(குத)லும் இருக்கும்... இங்க அது கொஞ்சம் குறைவு ஏன்னா.. இங்கு கைமாறு வீடுகள் தானே. வங்கி தானே மேர்கேஜ் கட்டி முடிக்கும் வரை ஓர்னர்.) :lol::D

Edited by nedukkalapoovan

உப்பிடிக் கொடுமை பிடிச்ச கதைகள் தான் எத்தனை!

நன்றி நெடுக்ஸ் பகிர்வுக்கு!

வாங்கினதை காட்ட திருவிழா.. பேட்த்டே பாட்டி.. சாமத்தியவீடு.. கலியாணம் வீடு..

கல்யாண அனிவேசரிப் பாட்டி....... அதைவிட ஏதோ 60 ஆம் கல்யாணமாம்! ஆண்டவா அரசாங்க பிச்சைக்காசு (welfare) ...........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கல்யாண அனிவேசரிப் பாட்டி....... அதைவிட ஏதோ 60 ஆம் கல்யாணமாம்! ஆண்டவா அரசாங்க பிச்சைக்காசு (welfare) ...........

உது ஊரிலும் மேட்டுக்குடி ஆக்கள் தங்கள் வசதி வாய்ப்பைக் காட்ட முந்திச் செய்யிறவை. இப்ப பட்டி தொட்டி எங்கும் செய்யினம். :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு பொறாமை...??? :lol::D :D

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாண அனிவேசரிப் பாட்டி....... அதைவிட ஏதோ 60 ஆம் கல்யாணமாம்!  ஆண்டவா அரசாங்க பிச்சைக்காசு (welfare) ...........

:lol::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு பொறாமை...??? :lol::D :D

எதுக்கண்ணா.. இவண்ட வடைக்கும் றோலுக்குமா. ஒரு 5 நட்சத்திரத்துக்குப் போனால் இதைவிட எவ்வளவே சாப்பிடலாம்..! இதில பொறாமைப்பட என்ன இருக்குது..! ஆனால் அதை அறியாமல் நம்மவர் போடும்.. கூத்து கொஞ்சம் ஓவர்..! பார்டிகள் வைக்கக் கூடாதென்றல்ல. அது சமூக உறவாடலுக்கு அவசியம். ஆனால்.. அதை ஒரு அளவோட வைக்கனும்..! 15,000 பவுன்ஸ் செலவு செய்து பேர்த்டே பாட்டி.. நாட்டிய அரங்கேற்றம் எல்லாம் செய்யுது சனம்.. நீங்கள் என்னடான்னா..! :lol::icon_idea:

ஓ உங்கள் நாட்டிலும் இந்தக் கூத்துக்களுக்கு குறைவில்லையா...ம்ம்ம்....ரொம்ப எடுப்பு காட்டத் தானே வேணும்..இராணியின் நாட்டில் அல்லவா இருக்கிறார்கள் எனது உறவுக்கார பையன் ஒருவர் சொன்ன வார்த்தை இது..எனக்கு அவ்விடம் வர இருந்த விருப்பமே அறவே இல்லாமல் போய்ட்டு..:)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓ உங்கள் நாட்டிலும் இந்தக் கூத்துக்களுக்கு குறைவில்லையா...ம்ம்ம்....ரொம்ப எடுப்பு காட்டத் தானே வேணும்..இராணியின் நாட்டில் அல்லவா இருக்கிறார்கள் எனது உறவுக்கார பையன் ஒருவர் சொன்ன வார்த்தை இது..எனக்கு அவ்விடம் வர இருந்த விருப்பமே அறவே இல்லாமல் போய்ட்டு.. :)

அப்ப கனடாவிலும் இது சர்வ சாதாரணம் என்றீங்க..! :):icon_idea:

அப்ப கனடாவிலும் இது சர்வ சாதாரணம் என்றீங்க..! :):icon_idea:

கனடாவில் நடக்கும் அலப்பறைக்கு லண்டன் கொஞ்சம் குறைவு தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாட்டை விட்டு ஓடிவரக் காரணமான சிங்களவன் நல்லமாம்.. பிறந்து வளர்ந்த பூமியில் வெயில் படுவது தான் நம்மவருக்கு பிரச்சனையாம் எல்லோ. தூ...! இதுகளுக்கு விடுதலை ஒரு கேடு..!

வெள்ளைக்காரனோ.. வெயில் குளிக்க அங்க ஓடுறான்..! வடலிக்க பனையோட பனையா காய்ஞ்சதுகளுக்கு வெயில் ஒரு கேடாம் எல்லோ..??! :):icon_idea::rolleyes:

இதை தான் நெடுக்ஸ் அண்ணா சொல்லுறது அற்பனுக்கு பவுசு வந்தால் அர்த்த ராத்திரியிலையும் குடைபிடிப்பான் என்று :wub::icon_idea:

நன்றி எழுத்துப்பகிர்வுக்கு :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவருக்கு பொறாமை...??? :lol::D :D

விசுகு அண்ணா சொல்ல வந்த விடையம் வேறு நெடுக்ஸ் அண்ணா :lol::icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா சொல்ல வந்த விடையம் வேறு நெடுக்ஸ் அண்ணா :lol::icon_idea:

நம்ம விசுகு அண்ணாவா விளங்கிக் கொள்ளாட்டி.. எழுதி என்ன பயன்..! :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.