Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்தவைக் காப்பாற்ற நல்லைக் கந்தனிடம் கையேந்திய இளைஞர்களுக்கான நாளைய அமைப்பு

Featured Replies

226134_104154746353070_100002756352837_18447_7989514_n.jpg

ஐ.நா மனிதவுரிமைப் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா சமர்ப்பித்துள்ள நிலையில் மஹிந்த ராஜபக்‌ஷவிற்கு நல்லாசி வேண்டி தமிழ்க் கிழவனாம் நல்லூர் முருகனிடம், இளைஞர்களுக்கான நாளைய அமைப்பினர் நேற்றையதினம் வழிபாடு செய்துள்ளனர்.

யுத்தம் என்ற பெயரில் பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்களை கொன்றொழித்த பழி பாவங்களைச் சுமந்து கொண்டிருக்கும் மஹிந்தவின் நலனுக்காக தமிழ்க் கிழவன், தமிழர்களுக்கேயுரித்தான தனிப்பெருங்கடவுள் என்றெல்லாம் புகழப்படுகின்ற நல்லூர் முருகனிடம் அடிக்கடி சிங்களம் வழிபட்டு வருகிறது.

முள்ளிவாய்க்காலில் குண்டுமாரி பொழிந்து மக்களின் உயிர்களைப் பறித்த உலங்கு வானூர்திகளைக் கொண்டு நல்லூர்த் தேர்த்திருவிழாவின் போது பூ மாரி பொழிந்தது சிறிலங்கா வான்படை. மஹிந்தவின் பிறந்தநாள் முதற்கொண்டு அனைத்துக்கும் நல்லூர்க் கந்தனையே கதி என்று சரண்புகுவது வழக்காகிவிட்டது.

http://184.107.230.170/~onlineut/News_More.php?id=84734891410195579

  • தொடங்கியவர்

... நேற்றோ 31 மனிதத்தை நேசிக்கும் பாதிரிகள் தங்கள் உயிராபத்தையும் பொருட்படுத்தாது சர்வதேசத்துக்கு அறைகூவல்!! ... இங்கோ நம்ம பரதேசிகள் .... வெட்கமாக இருக்கிறது ... ஒரு இந்து என்று கூற!!!!

... கேவலம் கெட்ட நம்ம பரதேசிகள் ... அத்தியடி குத்தியிடம் ஓட்டோ/கார்/பணம்/சலுகைகள் பெற பின்னால் அலையும் சூழல் இன்று!! ... மகிந்தவோ எந்த சிங்களவன் போனாலும் கொழும்பில் இருந்து யாழ் சென்றால் , கொழும்பில் குந்தி இருக்கும் சில பரதேசிகள் விமானத்தில் அழைத்து செல்லப்பட்டு சிங்களவனுக்கு மாலை போட ஆயிரங்களாம்!!!

... யாராவது உந்த நல்லூர் கந்தனை கொழுத்தி எரித்தால் ... பிறந்த புண்ணியத்தை அடைவார்கள்!!

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லையன் ஏனிந்தக்கொலைவெறி

நேற்று டக்லசின் நெடுந்தீவு கொலையாளியை கொழுத்தச்சொல்கிறீர்கள்

இன்று முருகனையே கொழுத்தச்சொல்கிறீர்கள்??

:lol::D :D :D

நல்லூர்க்கந்தன் தமிழ் மக்களை கைவிட்டது போல மகிந்தாவையும் கைவிடப்போறார் :)

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் கந்தன்மீது எனக்கு அதீதபக்தி உண்டு அது எப்போதும் மாறாதது. கந்தனைப்பற்றி புதுவையர் பாடிய பாட்டுக்கள் காலத்தால் அழிக்கமுடியாதவை. இப்போதும் ஒரு ரூபாய் காசு இருந்தால் போதும் எமக்கு அன்பானவர்களது பெயருக்கு அர்ச்சனை செய்துவிடலாம். இதுபோல் கோவில் உலகில் எங்கும் இல்லை. தற்போது இலங்கையில் இருக்கும் கோவில்களின் முகப்பு மண்டங்களில், நல்லைக்கந்தனது கோவிலின் முகப்பு மண்டபத்தின் பாதிப்பு இல்லாத கோவில்கள் குறைவெனலாம். இருந்தாலும் பதின்மூண்று நாட்கள் நீராகாரமுமின்றி நோன்பிருந்தானெ எனது திலீபன். அவனுடன் ஒப்பிடும்போது கந்தன் எதுவுமே இல்லை. இதில் என்ன வேடிக்கை என்றால் திலீபன் காவியமாக யாரெல்லாம் காரணமாகவிருந்தார்களோ அவர்களையெல்லாம் கந்தன் வரவேற்றிருக்கிறான். மற்றும்படி திருவிழாக்காலத்தில் கந்தனைச் சுற்றி பெரும் சோம்பேறிப்பட்டாளமே கூடிநிட்று கும்மியடிப்பதை காணச் சகிப்பதில்லை. மேலதிக கொசுறுச் செய்தியாக எனது சிறுவயதுக்காலம்முதலே அச்சுற்றாடலிலேயே நான் வளர்ந்தவன். அப்போது தேர் முட்டிக்கு நேரே முன்னால் இப்போது ஆலயம் தரிசிக்க வருவோர் கால் கழுவும் இடத்திற்கு அண்மையாக கோவில் திருவிழா காலத்திலும் ஒருசில இஸ்லாமியச் சகோதரர்கள் கற்பூரம் தேங்காய் விற்பனை செய்வதை யாராவது அவதானித்திருப்பீர்கள். அவர்களது முன்நாள் சந்ததியைச் சேர்ந்த இஸ்லாமிய பெரியார் ஒருவரது உடல் கோவில் உள்வீதியில் மூலஸ்தானத்திற்கு நேராக கஜவல்லி மகாவல்லி திருவிடத்திற்கு அருகில் அடக்கம் செய்திருப்பதாக அறியக்கிடக்கின்றது. இது உண்மையான தகவலா என்பது எனக்குத் தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா நடக்குது இங்க???

முதலில் நெல்லையன் இணைத்த இந்த புத்தருடனான இந்த முகப்பு படத்தை பார்த்ததுமே திக்கென்றது எனக்கு.

இப்ப எழுஞாயிறு இஸ்லாமிய பெரியாரது உடல் உள்ள இருக்கு என்கிறார்.

முருகா கந்தா மன்னிச்சுடப்பா இந்த சிறு மனிதப்பிறவிகளை...??? :lol::icon_idea: :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் கந்தன் தனது பாதுகாப்பு கருதி அகதியாகி புலம்பெயந்து பல ஆண்டுகளாகி விட்டது,

என்னும் அவர் அருள் பாலித்த ஆலயத்தில் சென்று வேண்டுதல் நடத்துவதில் என்ன பயன் .................?

முதலில் அவர் எங்குள்ளார் என்று அவரைத்தேடுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவர் எல்லாம் மூன்று தலைமுறைக்கு  முன்  தமிழர் தான். 

என்ன இருந்தாலும் நாங்கள் கேட்டதை எல்லாம் கடவுள் செய்கிறாராக இருந்தால் நாங்களுமே ஒரு சடோ கடவுள்களே. இனிமேல் கடவுளை எப்படி கும்பிடவேண்டும் என்று மகிந்தாவிடம் பழகிக் கொள்வோம்.

இப்போதைக்கு முருகனும் பெட்டையள் பிடிக்க குத்தியிடம் தான் கொன்றாக்டோ தெரியவில்லை. அந்த விசையத்திலை ஒருதடை யாரையும் மன்னிச்சுடலாம்.

சிங்களவர் எல்லாம் மூன்று தலைமுறைக்கு முன் தமிழர் தான்.

மிகவும் தவறான அபத்தமான கருத்து. சிங்களவர்கள் ஆரியர் இனத்தின் பரம்பரை. தமிழர்கள் அப்படி அல்ல

  • தொடங்கியவர்

சிங்களவர் எல்லாம் மூன்று தலைமுறைக்கு முன் தமிழர் தான்.

..முற்று முழுதாக அல்ல ... ஆனால் பெரும்பாலானவர்கள் தமிழர்களே பின்பு மத மாற்றம் ... காலப்போக்கில் மொழிமாற்றம் என மாறியதாக வரலாறு! ... 15 வருடங்களுக்கு முன்னர் கனடாவில் இருந்து ஓர் வரலாற்று ஆசிரியர், தமிழர்கள் எவ்வாறு பவுத்த சிங்களவர்களாக மாறியதை புத்தகமாக வெளியிட்டார். அதை விட இன்றும் தமிழ் பகுதிகளில் பவுத்த எச்சங்கள் பல உள்ளன. அது சிங்களவர் அங்கு குடியிருந்ததற்கான சான்றுகள் அல்ல மாறாக எம்மவர்கள் பவுத்த மதத்தில் இருந்ததற்கான சான்றுகள்!! ..

... 85ம் ஆண்டு அநுராதபுரத்தில் ஓர் சம்பவம் நடந்து ஓரிரு நாட்களில் தனிச்சிங்கள ஊர் ஒன்றினூடாக தந்தையுடன் பஸ்ஸில் பயணம் ... பக்கத்தில் சில சிங்கள பெண் உடைகளில் சிலர் அமர்ந்திருந்தார்கள். அதில் முன்னிருந்த ஒரு வயோதிப பெண், தனது பையினுள் இருந்து ஒரு பேப்பரை எடுத்து வாசிக்க முற்பட்டார் அப்பேப்பரை உற்றுப்பார்த்தால், அது தினகரன் . தமிழ்ப்பேப்பர். பின்பு கதை கொடுத்தபோது ... நாமும் தமிழர்கள் தான். நீர்கொழும்பை சேர்த்தவர்கள். சிங்களவர்கள் மத்தியில் நீண்ட காலம் வாழ்ந்ததனால், கலப்பு திருமணங்கள் நிகழ தொடங்கி, நாமும் அவர்களது அவர்களது கலாச்சாரங்களை பின் பற்ற தொடங்கி விட்டோம் என அரைகுறை தமிழில் பதில்!!!

Edited by Nellaiyan

  • தொடங்கியவர்

நல்லூர் கந்தன் தனது பாதுகாப்பு கருதி அகதியாகி புலம்பெயந்து பல ஆண்டுகளாகி விட்டது,

என்னும் அவர் அருள் பாலித்த ஆலயத்தில் சென்று வேண்டுதல் நடத்துவதில் என்ன பயன் .................?

முதலில் அவர் எங்குள்ளார் என்று அவரைத்தேடுங்கள்.

நன்றிகள் தமிழரசு, முருகனோ கந்தனோ நல்லூரை விட்டு வெளியேறி பலவருடங்கள்!! எதோ ஐந்து நட்சத்திர விடுதி ஒன்று இருக்கும் பிரமையே, அதனை பார்க்கும் போதெல்லாம்!! ... செல்வச்சந்நிதியானையோ, ஊர்களில் உள்ள சிறு கோயில்களை கடக்கும் போது வரும் பக்தியோ பயமோ, நல்லூரை கடக்கும்போது வருவதில்லை என ஓர் ஆசிரியர் சொன்ன ஞாபகம்!! ... ஏழ்மையில்தான் இறைவனை காணலாம்!!

... 85ம் ஆண்டு அநுராதபுரத்தில் ஓர் சம்பவம் நடந்து ஓரிரு நாட்களில் தனிச்சிங்கள ஊர் ஒன்றினூடாக தந்தையுடன் பஸ்ஸில் பயணம் ... பக்கத்தில் சில சிங்கள பெண் உடைகளில் சிலர் அமர்ந்திருந்தார்கள். அதில் முன்னிருந்த ஒரு வயோதிப பெண், தனது பையினுள் இருந்து ஒரு பேப்பரை எடுத்து வாசிக்க முற்பட்டார் அப்பேப்பரை உற்றுப்பார்த்தால், அது தினகரன் . தமிழ்ப்பேப்பர். பின்பு கதை கொடுத்தபோது ... நாமும் தமிழர்கள் தான். நீர்கொழும்பை சேர்த்தவர்கள். சிங்களவர்கள் மத்தியில் நீண்ட காலம் வாழ்ந்ததனால், கலப்பு திருமணங்கள் நிகழ தொடங்கி, நாமும் அவர்களது அவர்களது கலாச்சாரங்களை பின் பற்ற தொடங்கி விட்டோம் என அரைகுறை தமிழில் பதில்!!!

நீர்கொழும்பில் இருந்தவர்கள் எல்லாம் தமிழர்கள்தான். கதிர்காமம், மன்னம்பிட்டி, பொலநறுவை ஐ ஒட்டியுள்ள பிரதேசங்கள் எல்லாம் தமிழர்கள்தான் வாழ்ந்தார்கள்.

தமிழ் பௌத்த அமைப்பினர்தான் வழிபாட்டதாக செய்தியொன்றில் கூறினார்கள்.

வேள்விக்கிடாயாக மகிந்த!

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவரின் டி என் ஏ பரிசோதனையில் அவர்களிடம் சராசரியாக 60% திராவிட மூலக்கூறுகள் இருப்பதாகப் படித்த ஞாபகம்..! சிங்களம் எனும் சொல்லே இருநூறு ஆண்டுகளுக்கு முன் உருவானதுதான்..! அவர்களது மகாவம்சம் பாளி மொழியில் எழுதப்பட்டதற்கும் காரணம் அதுதான்..!

ஆரியர் இலங்கைத் தீவை அடைந்து குலம் கோத்திரத்தை வளர்த்தது உள்ளூர் மக்களுடன்..! சிங்களவர் ஆரியர் போல் நிறமாக இல்லாததற்கு (எல்லோருமல்ல) இதுவும் ஒரு காரணம்..! அந்த உள்ளூர்வாசிகள் ஆதிதிராவிடர் என்பது நிதர்சனமானது..!

மொத்தத்தில் ஆதி தமிழுடன் சமஸ்கிரதம் கலந்து மலையாளம் உருவானதுபோல ஆதித்தமிழுடன் பாளி மற்றும் பலமொழிகள் கலந்து உருவானதே சிங்களம்..! அதனால் அவர்களுக்கு ஒரு தேசியம் இல்லையென்றில்லை..! ஆனால் தமிழர் தேசியத்தை அவர்கள் எதிர்ப்பதே இதில் கேலிக்குரியது..! :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.