Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு எதிராக வாக்களித்தமையினால் இந்தியாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது

Featured Replies

இந்தியாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது - ஏ.எஸ்.கல்கட்

இலங்கைக்கு எதிராக வாக்களித்தமையினால் இந்தியாவுக்கு பாதுகாப்பு ரீதியான அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் பாதுகாப்புத்துறை பிரதானியொருவர் தெரிவித்துள்ளார்.

ஐ.நாடு மனிதவுரிமை கூட்டத் தொடரில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் போது, இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தமையினால் இந்தியாவின் பாதுகாப்பு சார்ந்த ரீதியில் அச்சறுத்தல் எற்பட்டடுள்ளது.

1987 ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்ததிற்கு அமைய இலங்கைக்கு வந்த இந்தியாவின் சமாதான படையின் பிரதானியான லெப்டினன் ஜெனரல் ஏ.எஸ்.கல்கட் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். இவ்வாறான அச்சுறுத்தல்களை கட்டுப்படுத்துவதற்கு இந்தியா முயற்சி செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதுள்ள சூழ்நிலையில், சீனாவின் தலையீடுகளை உயரவிடாது தடுப்பதற்கு இலங்கையுடன் இணைந்து செயற்படவேண்டும் எனவும் இந்தியாவிற்கு அவர் கோரிக்கையினையும் விடுத்துள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகள் இந்தியாவின் பாதுகாப்பு ரீதியிலான செயற்பாடுகளில் நெருக்கடி நிலைமையை தோற்றுவிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியாவின் சகலவித பாதுகாப்புத்துறைசார் விடயங்களிலும், கடற்பிராந்திய பாதுகாப்பு தொடர்பிலும் இலங்கை முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இருப்பதாகவும் அவர் மேலும் தெவித்துள்ளார்.

http://www.alaikal.com/news/?p=100874

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

கடிபடுங்கோ

அதற்குள் தமிழனுக்குவிடிவு வரணும்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா இந்த முடிவை நிச்சயம் எதிர்பார்த்திருக்கும்.

இல்லையானால் இந்தியாவின் வெளிவிவகாரங்களில் உள்ளவர்களை மாற்ற வேண்டும்!

  • தொடங்கியவர்

இந்திரா காந்தி காலத்தின் பின்னராக இந்தியாவின் தோற்றுப்போன வெளிவிகார கொள்கை அண்மைக்காலமாக சில புதிய முன்னேற்றகரமான மாற்றங்களை சந்தித்துவருகின்றது. உதாரணத்திற்கு நேபாளம், பர்மா, இலங்கை எனப்பார்க்கலாம்.

மேலும் மாற்றங்கள் நிகழ காங்கிரஸ் அகற்றப்படல் இல்லை அதன் பலம் குறைக்கப்படல் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் அறுக்கப்பட்டாயிற்று

  • கருத்துக்கள உறவுகள்

திரு கல்கட் அவர்களே, உங்கள் கூற்று தப்பானது. இலங்கை புலிகள் அழிக்கப்பட்டு விட்டது என்றது. ஆனால் இலங்கை அரசு இலங்கையின் வடகிழக்கு மாகாணங்களில் கட்டி எழுப்பும் இராணுவ மயமாக்கலின் structure and pattern of the militarization தொடர்பாக ஆராய்கிறவர்கள் உங்கள் கூற்றை மறுதலிப்பார்கள்.

Edited by poet

  • தொடங்கியவர்

மன்னார் மாவட்டக் கரைகள், கச்சதீவு, நெடுந்தீவு முல்லைத்தீவு மாவட்டக் கரைகள், வன்னிப் பகுதிகள் என அவர்கள் கட்டி எழுப்பும் இராணுவ அமைப்புகள் இரண்டாவது IPKF வரவை இலங்கை எதிர்பார்த்துத் தயாராகுவதையே உணர்த்துகிறது.

முதலாவது சந்தர்ப்பத்தையும் தவற விட்ட இந்தியா பின்னர் தனது தலைக்கு தானே மண்ணை அள்ளிப்போட்டது.

இனி இரண்டாவது ஐ.பி.கே.க்கு சாத்தியமே இல்லை. ஐ.நா. படைக்கே கூடுதல் சாத்தியம்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு எதிராக வாக்கலித்ததால் இந்தியாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்கிற ஏ.எஸ்.கல்கட் அவர்களின் கூற்று தவறானது

திரு கல்கட் அவர்களே, உங்கள் கூற்று தப்பானது. இலங்கை புலிகள் அழிக்கப்பட்டு விட்டது என்றது. ஆனால் இலங்கை அரசு இலங்கையின் வடகிழக்கு மாகாணங்களில் கட்டி எழுப்பும் இராணுவ மயமாக்கலின் structure and pattern of the militarization தொடர்பாக ஆராய்கிறவர்கள் உங்கள் கூற்றை மறுதலிப்பார்கள்.

மன்னார் மாவட்டக் கரைகள், கச்சதீவு, நெடுந்தீவு முல்லைத்தீவு மாவட்டக் கரைகள், வன்னிப் பகுதிகள் என அவர்கள் கட்டி எழுப்பும் இராணுவ அமைப்புகள் இரண்டாவது IPKF வரவை இலங்கை எதிர்பார்த்துத் தயாராகுவதையே உணர்த்துகிறது.

நெடுந்தீவு போன்ற இடங்களில் அவர்கள் தொலை தொடர்புக் கோபுர போர்வையில் அமைதிருக்கும் அமைப்புகள் தொடர்பாகவும் சந்தேகங்கள் உள்ளது.

இலங்கையின் வடபகுதி இராணுவ மயமாக்கல் அமைப்பு புலிகள் மீழமைப்புத் தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கையென்று நீஙகள் நம்புகிறீர்களா?

அவற்றின் அமைப்பும் ஆற்றலும் புவியியலும் அவை 2ம் IPKF வருகை நிகழ்ந்தால் இந்திய முப்படைகளையும் சர்வதேச தலையீட்டுக்கு அவசியமான சில நாட்க்கள் வரைக்குமாவது தடுத்து நிறுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப் படுகிறது என்பதை நீங்கள் உணரவில்லையா? அத்தகைய சில நாட் போரின்போது தென்னிந்திய அணுமின் நிலையங்கள் உட்பட முக்கியமான நிலைகளைத் தாக்கும் வல்லமையை இலங்கை விமானப் படை பெற முனைவது மற்றும் இலங்கை தொலைத் தாக்கல் வல்லமையை அதிகரிக்க முனைவது இந்தியப் பாதுகாப்புக்கு ஆபத்தானது என உங்களுக்குத் தோன்றவில்லையா?

மேலும் இந்திய பாதுகாப்புக்கு மிக முக்கியமான மன்னார்க் கடல் எண்ணை வளங்களை ஆராய்ந்து அறுவடை செய்ய இலங்கை அரசுக்கு இந்திய நிறுவனங்கள் மட்டுமே தெரிவாக இல்லையென்பதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்.

ஜெனீவாவில் இந்தியா எடுத்த நிலைபாடு இலங்கை அரசுக்கு அதிற்ச்சியில்லை. ஆனால் என்றோ வரும் என்று இலங்கை எதிர்பார்த்த இந்திய முரண்பாடு தாங்கள் முழுமையாக தாயராகுமுன்னம் இத்தனை விரைவாக இடம் பெற்றதுதான் அவர்களுக்கு அதிற்ச்சி.

இந்த பின்னணியில் ஜெனீவாவில் இந்தியா எடுத்த நிலைபாடு இந்திய பாதுகாப்புக்குக்கு சாதகமானது என்றே கருதுகிறேன்.

என்னுடைய எதிர்வினை உங்களுக்கு கிடைக்க வேண்டுமென்றும் இது தொடர்பாக உங்களோடு தொடர்ந்து விவாதிக்கவேண்டும் என்றும் விரும்புகிறேன் எனது மின்னஞ்சல் visjayapalan@gmail.com

.

1. இராணுவ அதிகாரி அரசியல் பேசக்கூடாது.

2. ஐ.நா. வில் அமெரிக்க தீர்மானத்திற்கு ஆதரவளிப்பதற்கு மத்திய அரசு ஏற்கனவே தீர்மானித்திருக்கும். தமிழ்நாட்டின் எதிர்ப்பால் தான் இதனைச் செய்கிறோம் என்று காட்டவே சாக்கு தேடினார்கள். அதுவும் கிடைத்தது. சும்மா கிடந்த சிதம்பரம் சங்கூதியது இதற்குத்தான் போல.

3. பனிப்போர்காலத்தில் படைகளை இறக்கிய இந்தியா.. இன்று ஆபத்து பின் வாசலைத் தட்டுகிறது. இந்தியா எந்தளவிற்குப் போகும்..?

ஜெனீவா பிரேரணையால் நாட்டின் சுயாதிபத்தியத்துக்கு பாதிப்பில்லை அமைச்சர் வாசுதேவ _

ஜெனீவா சர்வதேச மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்க பிரேரணை நிறைவேற்றப்பட்டதால் இலங்கையின் சுயாதிபத்தியத்துக்கு எதுவித பங்கமும் இல்லை.

பிரேரணையிலுள்ள பாதகமான கருத்துக்களை நீக்கும் வகையில் இந்தியா திருத்தம் கொண்டு வந்தது பாராட்டத்தக்கதாகும் என்று தேசிய மொழிகள் மற்றும் நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

ஜெனீவா சர்வதேச மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்ததெனக் கூறப்படும் பிரேரணை நிறைவேறியது குறித்து அமைச்சரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறியதாவது, ஜெனீவா சர்வதேச மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்க பிரேரணை நிறைவேற்றப்பட்டதால் இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. இலங்கை கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள சிபாரிசுகளை படிப்படியாக அமுல்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது.

இதன் பின்னரும் தொடர்ந்தும் எஞ்சிய சிபாரிசுகளை மேற்கொள்ள வேண்டும்.

ஜெனீவாவில் அமெரிக்கா முன் வைத்த பிரேரணையிலிருந்து இலங்கைக்கு பாதகமான சரத்துக்களை இந்தியா திருத்தங்களை முன் வைத்து நீக்க நடவடிக்கை எடுத்துக் கொண்டது.

இதனால் இலங்கைக்கு எதுவித பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் சொன்னார். ___

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=37258

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.