Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பெருமளவிலான பொதுமக்களை புலிகளே சுட்டுக்கொன்றனர்- நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்!

Featured Replies

பெருமளவிலான பொதுமக்களை புலிகளே சுட்டுக்கொன்றனர்- நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்!

Published on March 25, 2012-9:07 am ·

sumanthiran-2-150x150.jpgயுத்தத்தின் போது பெரும்பாலான பொதுமக்களை புலிகளே சுட்டுக்கொன்றனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கொழும்பில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

புலிகளை நாங்கள் ஒருபோதும் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என ஏற்றுக்கொள்ளவில்லை. இறுதி யுத்தத்தின் போது புலிகளும், இராணுவமும் பொதுமக்களை சுட்டுக்கொன்றனர். சிறிலங்கா இராணுவத்தின் மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட்டால் விடுதலைப்புலிகள் மீதும் போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். இரு தரப்பும் போர்க்குற்றங்களை புரிந்தனர். எனவே போர்க்குற்ற விசாரணை வேண்டும் என கோருவதில் அர்த்தம் இல்லை என சுமந்திரன் தெரிவித்தார்.

போர் நடைபெற்ற காலத்தில் விடுதலைப்புலிகள் பொதுமக்களை இராணுவக்கட்டுப்பாட்டு பகுதிக்கு செல்வதற்கு அனுமதிக்கவில்லை. அனுமதித்திருந்தால் பொதுமக்களின் உயிரிழப்பை தவிர்த்திருக்க முடியும். இதனாலேயே பெருமளவிலான பொதுமக்கள் உயிரிழக்க காரணமாக அமைந்தது என்றும் சுமந்திரன் தெரிவித்தார்.

அரசியல் தீர்வு திட்டம் பற்றிய கேள்விக்கு பதிலளித்த சுமந்திரன் சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வுத்திட்டத்தை தான் தமிழர்கள் முன்வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை சுமந்திரன் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக வேண்டும் என யாழ்ப்பாணத்தில் துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது

டெயிலி மிரரில் வெளியான செய்தி ஆதாரம்

SUMANTHIRDAILY-MIRROR.jpg

http://www.thinakkathir.com/?p=33174

மேலே உள்ள ஆங்கில பதிப்பில் உள்ளதை தவறாக மொழி பெயர்த்து அதையே தலையங்கமாகவும் வைத்துள்ளார்கள்?

ஆங்கில பதிப்பில் எங்கே பெருமளவிலான பொதுமக்களை புலிகளே சுட்டுக்கொன்றனர் என்றுள்ளது??

  • கருத்துக்கள உறவுகள்

TNA faults both govt. and LTTE

The Tamil National Alliance (TNA) says that both the security forces and the LTTE were responsible for civilian casualties during the final phase of the war.

During an interview in Sinhala with a private television channel on Monday, TNA parliamentarian MA Sumanthiran found fault with the government troops for launching their final military thrust before the civilians (who had been trapped in the war theatre) could leave the area. He also said that the LTTE was responsible for the tragedy as they did not let the civilians trapped with them in the Mullaitivu District go to government controlled areas.

The TNA’S position was that the excesses committed by both sides during the final phase of the war should be investigated, Sumanthiran said.

The MP stated that he had written to the government as well as to the LTTE during the final days of the war requesting the former to wait until the civilians moved to government held areas and requesting the latter to release the civilians.

He complained that both sides had ignored his requests and this had ultimately resulted in a tragedy.

Mr. Sumanthiran acknowledged the right of the State to counter any violent rebellion against it but stressed the need to address the root causes of the uprising at the same time.

The TNA had never accepted the LTTE as the sole representative, of the Tamil people, he said; and added that he did not accept the notion that problems could be solved through violent means

By KELUM BANDARA

INFOLANKA

பன்னாடைத்தனங்கள் அதிகமாகத்தானுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கை எல்லாமே பன்னாடைத்தனமாதான் எனக்கும் புரியுது.

இந்த செய்தியை பிழையாக மொழிபெயர்த்தது, பின் அதை சரிபார்க்காம யாழிலை பதிஞ்சது.

சுமந்திரனும் சிங்கள பத்திரிகைகள் பற்றி விழிப்புணர்வுடன் செயல்படவேண்டும்.

இந்த கிறுக்கன் எல்லாம் ஒரு ஆள் என்று அவன் உளறுவதை எல்லாம்

கட்டாயம் இங்க போடனுமா. மகிந்தவுக்கு காகா பிடிக்கிற நாய்

தலைப்புக்கும் சுமந்திரன் பேசியதற்கும் சம்பந்தம் இல்லையென்றாலும்,

குறுக்கு வழிகளில் அரசியலுக்கு வருபவர்களால் இவ்வாறுதான் பேசமுடியும். எதை எதோடு ஒப்பிடிவது என்று சுமந்திரனுக்கு தெரியவில்லை. குறுக்குப் புத்தியுள்ளவர்களின் மனச்சாட்சி நேர்மையாக இருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

அவர் பேசினாரா இல்லையா என்பது உறுதி செய்யப்படாமல் கருத்து வைக்கமுடியாது.

அவரது தேசியப்பற்றைச்சந்தேகம்கொள்ளவைக்கும் வார்த்தைகள் இவை. அவற்றை அவர் பாவித்திருந்தால் தமிழர்களிலிருந்து தானே தள்ளிச்செல்கிறார் என்றுதான் அர்த்தம். கூட்டமைப்பு மீதான சந்தேகங்களுக்கு இது மேலும்வழி சமைக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பு தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தமிழ் தேசியத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு வருவதாலும் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி வருவதாலும் சிங்கள பேரினவாதிகளுடன் ஒட்டி உறவாடி வருவதாலும், சுமந்திரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு வெளியேற்றுமாறு கோரிக்கைவிடுக்கின்றோம் என தமிழீழ புரட்சிகர மாணவர் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின், மக்களால் தெரிவு செய்யப்படாத பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தமிழீழ விடுதலைக்கும் போராடிய எமது போராளிகளையும் தலைவரையும் புலம்பெயர் மக்களையும் தொடாந்தும் அவதூறாக பேசிவருகிறார்.

சுமந்திரன் சிங்கள பேரினவாத அரசுக்கு சார்பாகவும் தமிழர்களுக்கு விரோதமாகவும் விதைத்த கருத்துக்களை இங்கே பட்டியல் இடுகின்றோம்.

1. தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் இல்லை

2 .புலிகளை நாங்கள் ஒருபோதும் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என ஏற்றுக்கொள்ளவில்லை

3. இறுதி யுத்தத்தின் போது புலிகளும் பொதுமக்களை சுட்டுக்கொன்றனர்

4. சிறிலங்கா இராணுவத்தின் மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட்டால் விடுதலைப்புலிகள் மீதும் போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்

5. இரு தரப்பும் போர்க்குற்றங்களை புரிந்தனர். எனவே போர்க்குற்ற விசாரணை வேண்டும் என கோருவதில் அர்த்தம் இல்லை

6. சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வுத்திட்டத்தை தான் தமிழர்கள் முன்வைக்க வேண்டும்

7. புலம்பெயர் மக்கள் போர்க்குற்ற விசாரனை என்ற ரீதியில் போராட்டங்கள் செய்யக்கூடாது. இலண்டனில் நடந்த கூட்டத்தில்

8. பெரும் எதிர்ப்புக்கு மத்தியிலும் சிங்கள பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் இனப்படுகொலைவாதி மகிந்தவுடன் கிரிக்கெட் விளையாடியது.

9. புலம்பெயர் மக்கள் எவ்வளவு போராட்டங்கள் செய்தாலும் அதனால் எதுவும் நடக்காது, வெளிநாட்டு அரசியல்வாதிகள் அப்போராட்டங்களை மதிப்பதில்லை எதை என்னிடம் அவர்களே கூறியதாக இலண்டனில் நடந்த கூட்டத்தில் கூறி புலம்பெயர் மக்களின் பேராட்டங்கள் அர்த்தமற்றது என போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முற்பட்டார்.

10. வன்முறையை கைவிடுமாறு நான் புலிகளை கேட்டிருந்தேன். தேசியப் பிரச்சனைக்கு வன்முறை மூலம் தீர்வு சாத்தியமில்லை.

இவர் கூறிய கருத்துக்கள் அவ்வளவும் சிங்கள பேரிவாத அரசியல்வாதிகள் பரப்புரை செய்த கருத்துக்கள். இப்போது இவர் ஊடாக தமிழ் மொழியில் பிரச்சாரம் செய்யப்படுகின்றது.

தமிழ் தேசியத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு வருவதாலும் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி வருவதாலும் சிங்களத்தடன் ஒட்டி உறவாடுவதாலும் யாழ் பல்கலைக்கழகத்தில் இவரது கொடும்பாவி எரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழீழ புரட்சிகர மாணவர்கள்

இவர் கொழும்பில் பிறந்து வளர்ந்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும் வடமாகாண கிழக்கு மாகாண மக்கள் பட்ட அவஸ்தைகள் தெரியாத ஒரு சிங்களக்காற்றைச்சுவாசித்தவர் இவரை தமிழ்த்தேசீயக்கூட்டமைப்புக்குள் கொண்டு வந்தவர் சம்பந்தந்தான் என்றால் அவரே இவரைக்கூட்டிக்கொண்டு ஓய்வு பெறுவது அவருக்கும் மரியாதை அப்படி இல்லையென்றால் வரும் தேர்தலில் சம்பந்தனும் சுமந்திரனும் மக்களிடம் அனுமதி கேட்டு வென்றால் எல்லோருக்கும் நல்லது இல்லையென்றால் சுமந்திரன் தானாகவே ஒதுங்கிக்கொள்வது அவருக்கு நல்லது.தமிழரின் சாபக்கேடு இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழருக்குள் தறுதலைகள் புகுந்து கெடுப்பது.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் நல்லவரோ கெட்டவரோ.. :unsure: அது ஒருபுறம் இருக்கட்டும்..

தலைப்பில் எழுதப்பட்ட விடயட்ம் ஆங்கில் வடிவில் காணவில்லை..! இவர் சொல்லியிருப்பது பெரும்பாலும் ஐநா நிபுணர் அறிக்கையில் சொல்லப்பட்ட விடயமே.. :huh:

விசமிகளால் பரப்பப்படும் போலி பிரச்சாரங்களை நம்பி தேசியப்பட்டியல் அரசியல் வாழ்கையை இலாது செய்வதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.

எதிரி உளவியல் யுத்தத்தால் தமிழரை வெற்றி கொள்ளமுடியாததனால்....................

நேரடியாகவே பொய் பித்தல்;ஆட்டம்.சுத்துமாத்து என்னும் யுத்தத்தை ஆரம்பித்துவிட்டானோ??????? :o:icon_idea::rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.