Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தந்தை செல்வாவின் அரசியல் கோட்பாட்டின் கீழ் அனைவரும் ஒன்றுபட்டு உரிமைக்குப் போராடுவோம்! இரா சம்பந்தன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Tanthai-Selva-seithycom-150.jpg

தந்தை செல்வாவின் 114வது பிறந்த நாளில் சூளுரைப்போம்!

பல்லின மக்கள் வாழும் இலங்கையில் சகல மக்களும் ஐக்கியமாகவும் சமாதானமாகவும் வாழக் கூடிய அரசியல் கோட்பாட்டை (சமஷ்டி அரசியல் அமைப்பு) 1949ல் அறிமுகம் செய்த அரசியல் மேதை மூதறிஞர் எஸ்.ஜே.வி செல்வநாயம் கியூ.சி ( தந்தை செல்வா) அவர்களின் 114வது பிறந்தநாள் மார்ச் 31 ஆகும்.

ஓற்றை ஆட்சியின்கீழ் இலங்கையில் நிரந்தரமான சமாதானம் ஏற்படாது பெரும்பான்மை இனத்தவர் சிறுபான்மை இனத்தை நசுக்கும் நிலை ஏற்படும் பதவி ஆசை கொண்ட சிங்களத் தலைவர்கள் இனவாதப் பாதையில் செல்வதால் ஜனநாயகக் கோட்பாட்டை அனுசரித்து அரசியல் பாரம்பரியத்தைப் பேணுபவர்கள் அல்ல சிங்கள அரசியல்; தலைவர்கள் என்பதை அன்றே உணர்ந்த தீர்க்கரிசித் தலைவர் தந்தை செல்வா.

ஓக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்ற எஸ்.டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா 1921ல் இலங்கைக்குப பொருத்தமான ஆட்சிமுறை சமஷ்டி அரசியல் ஆட்சிமுறை என்றார். பிற்காலத்தில் அதனை ஒரு தமிழ் அரசியல்வாதி முன்னெடுத்தபோது அது நாட்டைப் பிரிக்கும் சதி என்றார். அவருக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்தவர்கள் 30 வருட அகிம்சைப் போராட்டத்தை இராணுவ பலத்தைக் கொண்டு முறியடித்தனர். அதன்பின் 26 வருடங்களாக நடைபெற்ற தமிழ் இளைஞர்களின் ஆயுதப் ;போராட்டத்தையும் உலக நாடுகளின் ஆயுதபலத்துடன் முறியடித்தனர்.

மீண்டும் தந்தை செல்வாவின் அரசியல்கோட்பாட்டின் அடிப்படையில் அரசியல் தீர்வு காணவேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது.

சுயநிர்ணயமுடைய மக்கள்

அகில இலங்கைத் தமிழரசுக் கட்சி (சமஷ்டிக் கட்சியை) 1949ல் ஆரம்பித்தபோது வடகிழக்கு மாகாணங்கள் உள்ளடக்கிய தமிழர் தாயகம் அங்கு இடம்பெறும் குடியேற்றங்கள் யாவற்றிலும் அப்பகுதி மக்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். இது அதன் முதலாவது கோட்பாடு. குடியுரிமை � வாக்குரிமை இழந்த மலைநாட்டுத் தமிழர்கள் அனைவருக்கும் அவற்றை வழங்குதல் தமிழுக்கும் சிங்களத்திற்கும் சம உரிமை வழங்குதல் என்பன பிரதான கொள்களாக இருந்தன. தமிழ் அரசு என்பது தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்த நிலத்தில் கூட்டாட்சியின் கீழ் தமிழ் மக்களின் உரிமைகளை நிலைநாட்டுதல் தந்தை செல்வா திர்க்கதரிசனத்துடன் முன்வைத்த அரசியல் கோட்பாட்டின் அடிப்படையில் தமிழர்களுக்கு சுயாட்சியைப் பெற்றுக்கொடுக்க 30 வருடங்களாக அகிம்சை வழியில் நடத்திய போராட்டத்தால் தந்தை செல்வாவுடன் இரு ஒப்பந்தங்கள் எழுதப்பட்டன. பின்னர் அரசாங்கத்தினால் கிழித்தெறியப்பட்டன.

1972 ல் புதிய அரசியல் சட்டம் கொண்டு வரப்பட்டபோது தந்தை செல்வா பின்வரும் ஆறு அம்சத் திட்டத்தை முன்வைத்து இனவாத அரசை பரிசோதனைக்குட்படுத்தினார்.

1.தமிழுக்கும் சிங்களத்திற்கும் சம அந்தஸ்து அரசியல் யாப்பில் தரப் படல்வேண்டும்.

2. நாடற்றவர்கள் நெடுங்காலம் வாழந்தவர்கள் எனப்படும் அனைவருக்கும் சட்டப்படி குடியுரிமை தரப்படல் வேண்டும்.

3. மதசாhபாற்று சகல மதங்களுக்கும் சம உரிமை உறுதிப்படுத்தல.

4. சகல இனமக்களும் அவரவர் பண்பாடுகள் அடிப்படையில் அடிப்படை உரிமைகள் சமவாய்ப்பு சுதந்திரம் அரசியல் சட்டமூலம் உறுதிப்படுத்தல் வேண்டும்.

5. தீண்டாமை சாதி வேறுபாடுகள் ஒழிப்பு.

6. அதிகாரப் பரவலாhக்கல் மூலம் மத்திய அரசின் அதிகாரங்கள் மக்கள் அதிகாரங்களாக மாற்றுதல்.

மிகக் குறைந்த இந்தக்கோரிக்கைகள் கூட மறுக்கப்பட்ட பின்னர் தனித் தமிழீழமே மாற்றமுடியாத முடிவு என தந்தை செல்வா பிரகடனப்படுத்தினார்.

அதை அடைவதற்குப் போராடிய தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டத்தை இலங்கை அரசு பயங்கரவாதம் என்று பெயர்சு10ட்டி முள்ளிவாய்க்காலில் 40��000 தமிழர்களைப் படுகொலை செய்து முறியடித்த வரலாறு தெரிந்ததே.

ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ்மக்களையும் 30��000 க்கு மேற்பட்ட போராளிகளையும் பலிகொடுத்தபின்னர் தந்தை செல்வா காட்டிய சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீhவை சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் முன்னெடுக்க வேண்டிய நிலைக்குத் தமிழ்க் கட்சிகள் தள்ளப்பட்டுள்ளன. அறுபது வருடங்களின் பின் தீர்;க்தரிசி தந்தை செல்வாவின் அரசியல் கோட்பாட்டின் அடிப்படையில தமிழ்மக்கள் தங்கள் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம் என்பது யதார்த்தம்.

இதை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு தந்தை செல்வாவின் அரசியல் பாசறையில் வளர்ந்த அரசியல் அனுபவமிக்க தலைவர் திரு. இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறவழியில் உரிமைப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய கடப்பாடு உண்டு. அண்மையில் ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட தீர்மானம் எமக்குத் தென்பூட்டும் நல்ல காரியமாக அமைந்துள்ளது.

இந்தியா உட்பட சர்வதேச நாடுகளின் அதரவுகளும் அதிகரித்து வரும் சு10ழ்நிலையில் தமிழ்க் கட்சிகள் பகைமைகளை மறந்து ஒன்றுபடவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எமது ஒற்றுமை இன்மையாலும் இராஜதந்திரமின்மையாலும் பல சந்தர்ப்பங்களை நழுவவிட்டோம்.

நாம் கற்றுக்கொண்ட பாடங்களை கருத்தில்கொண்டு இதய சுத்தியுடன் ஒன்றுபட்டுச் செயற்படுவோமாக.

எமது எந்த அரசியல் தீர்வுக்கும் பக்கபலமாகக் காத்திரமாக பங்களிப்பவர்கள் புலம்பெயர் தமிழர்களும் அவ்வவ் நாடுகளில் செயற்படும் தமிழ் அமைப்புகளும் ஆகும். ஆனால் இவர்களிடையே ஒருமுகப்படுத்தப்பட்ட வேலைத் திட்டம் இல்லை. விட்டுக்கொடுத்து செயற்படும் மனோபாவமும் இல்லை. அன்று அல்லல் பட்ட யூதர்கள் எவ்வாறு ஒன்றுபட்டு நாடில்லாதவர்கள் நாடமைக்க முடிந்ததோ எமக்கென்று இருக்கும் தாயகத்தைப் பெற நாம் ஏன் ஒன்றுபடக் கூடாது?

எமது போராட்ட வடிவம் ஜனநாயக வழிக்கு வந்துள்ளதால் எமது பிச்சனைகளை சமாந்திரமான முறையில் சர்வதேச சமூகத்திற்கு எடுத்துக் கூறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு செயற்படுவது புத்திசாலித்தனம்.

வெளிநாடுகளில் மறைந்திருக்கும் புத்திசாலிகள் வெளிவந்து பணியாற்றவேண்டிய காலம் வந்துள்ளது.

மேற் கூறியவை தந்தை செல்வா அவர்களின் 114வது பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியாக தமிழ் மக்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கின்றோம். அவரது இலட்சியத்தை அடையச் சூளுரைப்போம்!

http://www.seithy.co...&language=tamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சூளுரைத்து போராடுவோம் என்று கிளப்பிவிட்டு கடைசி நேரத்தில் எஸ்சாகிவிடுவார் தலைவர். 

  • கருத்துக்கள உறவுகள்

சூளுரைத்து போராடுவோம் என்று கிளப்பிவிட்டு கடைசி நேரத்தில் எஸ்சாகிவிடுவார் தலைவர்.

மேலதிக தகவல்களுக்கு புத்தனின் "சுழியன்" வாசிக்கவும்.

527309_274287442654338_100002192543157_627325_1212325011_n.jpg

சில நாட்களுக்கு முன் திருமலையை சேர்ந்த என் நண்பர் ஒருவரை சந்தித்தபோது, தன் தந்தையார் கூறிய ஒரு சுவையான விடயத்தை கூறினார் ..

.. வட்டுக்கோட்டை தீர்மானத்தை தந்தை செல்வாமுன் மொழிந்து நிறைவேற்றிய பின், தமிழ்ப்பிரதேசங்கள் எங்கும் அத்தீர்மானத்தை எடுத்துச் சென்று விளக்க கூட்டங்கலை நடத்தியபடியே திருமலை வந்தாராம், தந்தை செல்வாவை அப்போது சந்தித்த சம்பந்தர் எனும் இன்றைய கூட்டமைப்பு தலைவர் கூறினாராம் "நாங்கள் வட்டுக்கோட்டை தீர்மானம்" நிறைவேற்ற அவசரப்பட்டு விட்டோம் போலிருக்கிறது" என்று, அதற்கு தந்தை செல்வா உடன் சொன்னாராம் "நாம் ஆறுதலாக விவாதித்து, தூரநோக்கில் எடுத்த தீர்மானம்தான் இது" என்று ...

... அப்படியானவர்தான் இந்த சம்பந்தர் ஐயா! ... என்ன செய்வது கீரைக்கடைக்கு எதிர்க்கடை போட்டால் எதிரிக்கு சாதகமாகி விடும் என்ற எம் ஐயம், சம்பந்தரின் காட்டில் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருக்கிறது!

சம்பந்தர் எனும் இன்றைய கூட்டமைப்பு தலைவர் கூறினாராம் "நாங்கள் வட்டுக்கோட்டை தீர்மானம்" நிறைவேற்ற அவசரப்பட்டு விட்டோம் போலிருக்கிறது" என்று, அதற்கு தந்தை செல்வா உடன் சொன்னாராம் "நாம் ஆறுதலாக விவாதித்து, தூரநோக்கில் எடுத்த தீர்மானம்தான் இது" என்று ...

... அப்படியானவர்தான் இந்த சம்பந்தர் ஐயா! ...

இது உண்மைதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.