அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3265 topics in this forum
-
கூகுள் நிறுவனம் தானாக இயங்கக்கூடிய கார் ஒன்றினை பரிசோதித்து வருவாக அறிவித்துள்ளது. சுயமாக காரினை செலுத்தும் இத்தொழில்நுட்பமானது செயற்கை அறிவாண்மை (Artificial Intellligence) மென்பொருளின் மூலம் வாகனங்களைக் கட்டுப்படுத்தும் முறையாகும். காரின் மேற்பகுதியில் புனல் போன்ற சிலிண்டர் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இது காரின் கண்போன்று தொழிற்படுகின்றது. இக்கார்கள் வீடியோக் கெமராக்கள், ராடார் சென்ஸர்கள், லேஸர் தொழில்நுட்பங்கள் மூலம் போக்குவரத்து நெரிசல் நிலைமைகளை அறிந்து கொள்கின்றன. இச்செயற்கை அறிவாண்மை தொழில்நுட்பத்தின் மூலம் வீதிவிபத்துக்களைப் பாதியாக குறைக்க முடியுமென கூகுள் தெரிவிக்கின்றது. கூகுள் இக்காரை பல்வேறு நகரங்களில் பல கிலோ மீட்டர்கள் செலுத்தி ஆய்வ…
-
- 0 replies
- 810 views
-
-
[size=4][/size] [size=4]செவ்வாய் கிரகத்தில் தீவிரமாக ஆராய கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை நாசா விஞ்ஞானிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விண்ணில் செலுத்தினர். மணிக்கு 20 ஆயிரத்து 800 கி.மீட்டர் வேகத்தில் சென்ற இந்த விண்கலம், நேற்று செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கியது.[/size] [size=4]இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைப்பகுதியில் கேலே பள்ளத்தாக்கில் தரை இறக்கப்பட்டது. அங்கு 96 மைல் பரப்பளவில் சுற்றி வந்து ஆய்வுகளை மேற்கொள்ளும். செவ்வாய் கிரக ஆராய்ச்சி குழுவில் ஈடுபட்டுள்ள நாசா விஞ்ஞானிகள் குழுவில் இந்திய விஞ்ஞானி அமிதாப் கோஷ் என்பவரும் உள்ளார். இவர்தான் கியூரியாசிட்டி விண்கலத்தை கேலே பள்ளத்தாக்கில் இறக்குவதற்கான இடத்தை தேர்வு செய்தார்.[/size] [s…
-
- 4 replies
- 809 views
-
-
ஓசோன் காப்பின் முக்கியம் அறிவீரோ! சர்வதேச ஓசோன் பாதுகாப்பு தினம் இன்று சூரிய ஒளிப்பிழம்பின் ஒரு பகுதியான புற ஊதாக் கதிர்வீச்சைத் தடுத்து நிறுத்தி, புவியைக் காத்து வரும் வளையமே ஓசோன் படலம் ஆகும். கடல் மட்டத்திலிருந்து 20 கி.மீ., முதல் 50 கி.மீ., வரை உள்ள "அடுக்கு வாயு மண்டலத்தில்´ தான் ஓசோன் உள்ளது. ஓசோனின் அளவையும், பரப்பையும் செயற்கைக்கோள் மூலமாகத் துல்லியமாக அறியலாம். பூமியைக் காக்கும் ஓசோனின் அளவு படிப்படியாகக் குறைந்து வருவதை அறிஞர்கள் கண்டறிந்தனர். இதையடுத்து ஓசோனைக் காக்க 1987, செப்.16ல் கனடாவில் உள்ள மான்ட்ரீல் நகரில் "மான்ட்ரீல் ஒப்பந்தம்´ எனும் உடன்படிக்கை ஏற்பட்டது. இதன் பின் ஓசோன் துளை அளவு குறைந்திருந்தது. எனினும் இதே நிலை நீட…
-
- 2 replies
- 809 views
-
-
செல்போன் திருடர்களுக்கு எச்சரிக்கை! இன்றைய உலகம் தகவல் தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைந்து விட்டது என்பதை உணர்த்தும் அறிவியல் அளவு கோல் செல்போன்' ஆகும். காணும் இடம் எல்லாம் பெரும்பாலும் அனைவரது கையிலும் நீங்காது இடம் பெற்றிருக்கும் அடையாளங்களில் ஒன்றாகவும் செல்போன் மாறிவிட்டது என்றும் சொல்ல முடியும். இதற்கு காரணம் எங்கும் எளிதில் எடுத்துச் செல்லும் வகையில் நவீன வசதிகளுடன் கவர்ச்சிகரமான தோற்றத்தில் இந்த தொலைபேசி குழந்தைகள் விற்கப்படுவது முக்கிய காரணங்களில் ஒன்று. இதற்கு மக்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பும், விற்பனை அதிகரிப்பையும் செல்போன் நிறுவனங்களும், தகவல் தொடர்பு நிறுவனங்களும் சரியாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளன. போட்டிப் போட்டுக் கொண்டு சலுகைகளைய…
-
- 0 replies
- 808 views
-
-
[செவ்வாயில் கியூரியோசிற்றி ஆய்வில் ஈடுபட்டுள்ள போது] செவ்வாயில் மீதேன் (காபன் மற்றும் ஐதரசன் கொண்ட ஒரு வாயு - CH4) வாயுவின் இருப்புப் பற்றி ஆராய அனுப்பப்பட்ட நாசாவின் கியூரியோசிற்றி ரோபோ விண்கலம் அதன் முயற்சில் தோல்வி கண்டதை அடுத்து செவ்வாயில் இன்னும் உயிரினங்கள் குறிப்பாக நுண் உயிரினங்கள் இருக்கக் கூடும் என்ற விஞ்ஞானிகளின் எதிர்பார்ப்பை மலினப்படுத்தியுள்ளதாக நாசாவை ஆதாரம் காட்டி செய்திகள் வெளியாகி உள்ளன. பூமியின் வளிமண்டலத்தில் மீதேன் வாயு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளமையும் அதன் பெரும்பகுதி நுண்ணுயிர்களால் குறிப்பாக பக்ரீரியாக்களால் ஆக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கதாகும். செவ்வாயில் மீதேன் இருப்பு கண்டறியப்பட்டிருந்தால்.. அங்கு தற்போதும் உயிரினங்களில் சில வகைகள் வாழக்…
-
- 1 reply
- 808 views
-
-
ஆண்மீன் துணையின்றி குஞ்சு பொரித்த அதிசய பெண் மீன்கள் வாள் சுறா, வாள் மீன், கோலா மீன் என்று அழைக்கப்படும் மீன்கள்அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கன்னித்தன்மை மாறாமலே, அதாவது ஆண்மீனின் துணையின்றி தாமாகவே குஞ்சுபொரித்த வாள்மீன்களை (கோலா மீன்கள்) கண்டுபிடித்திருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதற்குமுன்பும் இப்படியான வித்தியாசமான குஞ்சுபொரிக்கும் முறையை மீன் தொட்டிகளில் அல்லது தனியாக சோதனைக்கூடங்களில் வளர்க்கப்படும் பெண் மீன்களிடம் விஞ்ஞானிகள் அடையாளம் கண்டிருந்தாலும், இயற்கை நீர் நிலைகளில் இப்படியான மீன்குஞ்சுகளை அவர்கள் கண்டிருக்கவில்லை. ஆங்கிலத்தில் saw fish என்றும் தமிழில் வாள் சுறா, வாள் மீன், கோலா மீன் என்றும் பல பெயர்களில் அழைக்கப்படும் மீன்வகையைச் சேர்ந…
-
- 8 replies
- 808 views
-
-
தேவையான பொருட்கள்: நாட்டு பசுஞ்சாணம்-10 கிலோ, (அல்லது நாட்டு பசுஞ்சாணம் 5 கிலோ + நாட்டு காளைமாட்டுச் சாணம் 5 கிலோ (அ) நாட்டு எருமைமாட்டுச்சாணம் 5 கிலோ) நாட்டு பசுங்கோமியம் 5 முதல் 10 லிட்டர் (அல்லது நாட்டு பசுங்கோமியம் பாதி அளவு + (அ) நாட்டு காளைமாட்டு கோமியம் (அ) நாட்டு எருமைமாட்டு கோமியம், வெல்லம் (கருப்பு நிறம்) 2 கிலோ (அ) கரும்புச்சாறு 4 லிட்டர், இரு விதை இலைத் தாவரங்களின் தானிய மாவு 2 கிலோ (தட்டைப்பயறு (அ) துவரை (அ) கொள்ளு (அ) கொண்டைக் கடலை (அ) உளுந்து) பண்ணைகளின் வரப்பிலிருந்து எடுக்கப் பட்ட காட்டின் (ஜீவனுள்ள) மண் கையளவு மற்றும் தண்ணீர் 200 லிட்டர் (குளோரின் கலக்காதது) தயாரிப்பு முறை நாட்டு பசுஞ்சாணம்-10 கிலோ, (அல்லது நாட்டு பசுஞ்சாணம் 5 கிலோ + நாட்டு காளைமாட்டுச் …
-
- 5 replies
- 807 views
-
-
-
- 1 reply
- 807 views
-
-
Whats App-பை மாதமொன்றுக்கு ஒரு பில்லியன் பேர் பயன்படுத்துவதாக தகவல் [ Tuesday,2 February 2016, 07:02:00 ] கையடக்க தொலைபேசி தகவல் சேவையான வட்ஸ் அப்பை ஒவ்வொரு மாதமும் ஒரு பில்லியன் பேர் பயன்படுத்துவதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. பேஸ்புக் வலையமைப்புக்கு சொந்தமான மெசஞ்ஜர் கையடக்க தொலைபேசி அப்-பை விட வட்ஸ் அப்-பை அதிகளவிலானவர்கள் பயன்படுத்துவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் மெசஞ்ஜர் அப்-பை மாதமொன்றுக்கு 800 மில்லியன் பேர் பயன்படுத்துகின்றனர். நாளாந்தம் வட்ஸ் அப்-பின் ஊடாக 42 பில்லியன் தகவல்களும் 250 மில்லியன் காணொளிகளும் அனுப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது. எவ்வாறாயினும் போட்டிமிக்க உள்ளூர் சந்தைகளி…
-
- 0 replies
- 807 views
-
-
அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு விஞ்ஞானிகள் ‘சிந்திக்கும் தொப்பி’ ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். பெயர் சிந்திக்கும் தொப்பி என்றாலும் இது தானாக சிந்திக்காது. இந்தத் தொப்பியை அணிந்துகொண்டால் வேகமாக எதையும் கற்றுக்கொள்ளவும் விரைவாக முடிவெடுக்கவும் முடியும் என்கிறார்கள். ஒரு விஷயத்தில் முடிவெடுக்கத் திணறுகிறவர்களுக்கும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளத் திணறுகிறவர்களுக்கும் தொப்பியை அணிவித்து, குறைந்த அளவு மின்சாரம் மூளைக்குள் செலுத்தினார்கள். அப்பொழுது மிகச் சரியாக முடிவெடுத்துவிடுகின்றனர் ,வேகமாகக் கற்றுக்கொள்கின்றனர் . இதுவரை 60 மனிதர்களிடம் இந்தச் சோதனையை நடத்தி, 75 சதவிகிதம் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இன்னும் பல சோதனைகளுக்குப் பிறகுதான் இந்தத் தொப்பி வெளிவரும் என்…
-
- 0 replies
- 806 views
-
-
நெட் பிரியர்களுக்கு ஒரு அரிய விருந்து! தற்போது பயன்படுத்தும் "wi-fi"ஐ விட நூறு மடங்கு அதிவிரைவான வயர்லெஸ் இன்டர்நெட் டெக்னாலஜி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் பெயர் "li-fi" ஆகும். இதன் சிறப்பு, ஒரு நொடிக்கு 1ஜிகாபைட் டேட்டாக்களை அனுப்பக்கூடியது என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா? இந்த வேகத்தை பயன்படுத்தி மிகப்பெரிய ஆல்பம், அதிக டெஃபனிஷன் கொண்ட படங்கள் மற்றும் வீடியோக்களை கண்ணிமைக்கும் நொடியில் டவுன்லோடு செய்யலாம். இந்த வேகத்ற்கு காரணம் இந்த டெக்னாலஜியில் LED லைட்டுகளை பயன்படுத்தப்படுவதே. இதற்காக கண்ணால் காணக்கூடிய ஒளி யை தகவல் தொடர்புக்காக பயன்படுத்துகிறது. இந்த நெட்வர்க் மிகவும் பாதுகாப்பானதும் கூட. இதனை மிகவும் சிறிய சிப் பில் வடிவம…
-
- 3 replies
- 806 views
-
-
Dassault Mirage 200 மிராச் 2000 1978 ல் தயாரிக்கப்பட்டு 1984 முதல் பிரஞ்சு விமானப்படையின் செயல்பாட்டு வருகிறது, மற்றும் அபுதாபி, எகிப்து, கிரீஸ், இந்தியா, பெரு, கத்தார், தைவான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளிலும் பாவனையில் உள்ளது . இது ஒற்றை இயந்திரச் சக்தி கொண்ட 4ம் தலைமுறைப் போர் வானூர்தி ஆகும். இது நிறை குறைந்த வானூர்தியான, மிராச் III இன் வடிவமைப்பைக் கொண்டு 1970 களின் பிற்பகுதியில் உருவாக்கப்பட்டது. இவ்வகை வானூர்திகள் வெற்றிகரமாக அமைந்ததால், இதை முன்மாதிரியாகக் கொண்டு மிராச் 2000N , மிராச் 2000D போன்ற தாக்குதல் வானூர்திகளும், மிராச் 2000 -5 என்ற மேம்படுத்தப்பட்ட வானூர்திகளும், மேலும் பல்வேறு வகையான வானூர்திகளும் உருவாக்கப்பட்டன. 2009 நிலவரப்…
-
- 0 replies
- 806 views
-
-
அமெரிக்காவின் புதிய (ரோபோட்) போர்வீரர்கள் : ச.ச.முத்து டேர்மினேற்றர் திரைப்படத்தில் அந்த காட்சி அடிக்கடி அந்த நேரங்களில்(1984) ஆச்சர்யத்துடன் பார்க்கப்பட்டது. அந்த காட்சிக்காகவே அந்த படமும் மிகப்பெரிய வெற்றியையும் பெற்றது.என்னதான் சுட்டாலும், வெடிவைத்து தகர்த்தாலும்,எரியும் தீச்சுவாலைக்குள் வீழ்த்தினாலும் மீண்டும் அந்த உருவம் எழுந்து இயந்திரமனிதனாக,மனிதனாக மாறி எதிரிகளை வேட்டையாடும்.ஆர்னோல்ட் ஸ்வாஸ்நேகர் இந்த பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருப்பார். ரைற்றானிக்,அவ்தார் படங்களை எடுத்த ஜேம்ஸ்கமரூனின் அருமையான ஒரு பாத்திரப்படைப்புஅது. இதைப்போலவே, புதிய ரோபோ போர்வீரர்களை களங்களில் இறக்கும் ஒரு திட்டத்தை பென்ரகன் கொண்டிருப்பதாக அண்மையில் செய்தி ஒன்று வெளியாகி இருக…
-
- 1 reply
- 806 views
-
-
ஒளி வளைவு அறிதல் அரவிந்தன் நீலகண்டன் மே 29 1919 தேதியன்று பூமத்திய ரேகைப் பிரதேசத்தில் ஒரு முழு சூரிய கிரகணம் நிகழ்ந்தது. அன்று ஆப்பிரிக்காவின் கினியா வளைகுடாவில் உள்ள தீவு ஒன்றில் அறிவியலாளர் குழு ஒன்று தயாராக இருந்தது. அதே போல மற்றொரு குழு பிரேஸிலில் ஓரிடத்தில். இக்குழுக்களை ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்தவர் ஆர்தர் எடிங்டன் என்கிற இயற்பியலாளர். சரியாக சொன்னால் வானவியல் இயற்பியலாளர் (astro-physicist). அவர்களது நோக்கம் சூரியனில் முழு கிரகணம் ஏற்படும் போது ஹையடெஸ் எனும் விண்மீன் தொகுப்பை (Hyades star cluster) புகைப்படங்கள் எடுப்பது. இந்த விண்மீன் தொகுப்பு சூரியனுக்கு அருகில் உள்ள தொகுப்பு. முழு சூரிய கிரகணம் அன்று ஆறு நிமிடங்கள் நீடித்தது. அப்போது எவ்வள…
-
- 0 replies
- 805 views
-
-
[size=5]தண்ணீர் ஓடிய தடங்கள்..[/size] [size=5]தண்ணீர் ஓடிய தடங்கள் செவ்வாயிலும் பூமியிலும்..[/size]
-
- 7 replies
- 804 views
-
-
ஊரடங்கு காலத்தில் கழிவு பொருட்களை பயன்படுத்தி மகிழுந்து தயாரித்த கிளிநொச்சி இளைஞன்..! ஏழ்மையிலும் சாதனை. பாராட்டுங்கள்.. கிளிநொச்சி- பரந்தன் பகுதியில் கழிவு பொருட்களை கொண்டு பாடசாலை மாணவன் ஒருவன் கார் ஒன்றை தயாரித்து சாதனை புரிந்துள்ளான். நாட்டின் அபிவிருத்தி, உள்ளுர் உற்பத்திகளில் முக்கிய காத்திரமான பங்கு இளைஞர்கள் கரங்களில் உள்ளது. நாட்டினை அபிவிருத்தி பாதைக்குள் அழைத்து செல்லவேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கானது என வெறுமனே வார்த்தைகளால் கூறி நாம் தப்பித்துக்கொள்ளாமல் அனைத்து பிரஜைகளின் கரங்களிலும் தங்கியுள்ளது என்பதை உணர்த்தும் விதமாக கொரோனா அச்சுறுத்தல் நிறைந்த சூழலை சாதகமாக பயன்படுத்தி, தனது திறமை, நீண்ட கால முயற்சி, சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத…
-
- 5 replies
- 804 views
-
-
ப்ளே ஸ்டோரில் போலி ஆப்ஸ்களை தவிர்ப்பது எப்படி? #PlayStoreBasics நமது மொபைல் போனில் தவிர்க்கவே முடியாத விஷயங்களில் ஒன்று, ஆப்ஸ் எனப்படும் மொபைல் அப்ளிகேஷன்கள். செய்தி, கேம்ஸ், இசை, வீடியோ, இ-வாலட்கள் என ஒவ்வொன்றிற்கும் ஏதாவது ஒரு ஆப்பை டவுன்லோடு செய்து பயன்படுத்துவோம். அப்படி ஒவ்வொரு முறை குறிப்பிட்ட ஒரு ஆப்பை டவுன்லோடு செய்ய நினைக்கும் போது, நமக்கு தொல்லை தருவது போலி ஆப்ஸ்கள். இதற்கு உதாரணமாக மோடி சமீபத்தில் அறிமுகம் செய்த பீம் ஆப்பையே கூறலாம். நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா உருவாக்கியதுதான் இந்த பீம் ஆப். ஆனால் நீங்கள் வெறும் BHIM என மட்டும் ப்ளே ஸ்டோரில் டைப் செய்தால், சுமார் 20-க்கும் மேற்பட்ட ஆப்ஸ்கள் வந்து கொட்டுகின்றன. எது…
-
- 0 replies
- 804 views
-
-
[size=3] [size=5][/size][/size][size=3] [size=5]சந்தைக்கு வந்து சில மாதங்களேயானாலும், வந்தவையனைத்தும் விற்று முடிந்து தற்போது மேலதிக தயாரிப்புக்களிற்கான ஓடர்களை வாடிக்கையாளரிடமிருந்து பெற்று வருகிறது ரெஸ்லா [Tesla] என்கிற நிறுவனம் தயாரிக்கும் மின்சாராக் கார்கள். அது மாத்திரமல்லாமல் 2013ம் ஆண்டிற்கான சிறந்த கார் என்ற பரிசை எல்லோரின் ஆதரவுடனும் தட்டிச் சென்றுவிட்டது.[/size][/size][size=3] [size=5]அமெரிக்காவில் மாத்திரம் விற்பனை செய்யப்பட்ட கார் கடந்த சில மாதங்களிற்கு முன் கனடாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. மக்கள் அதிகமாகக்கூடும் பல் அங்காடித் தொகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்தக் கார் ஏனைய கார்களைப் போல எந்தவித பாரிய இயந்திரப் பகுதியைக் கொண்டிருக்கவில்லை என…
-
- 5 replies
- 804 views
-
-
மொத்த கிரகமுமே வைரம், வைடூரியம்தான்! ஆனா கிட்ட நெருங்க கூட முடியாது! – புதன் கிரகத்தில் புதிய கண்டுபிடிப்பு! சூரிய குடும்பத்தின் முதல் கிரகமான புதன் கோளை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் அந்த கிரகம் முழுவதும் வைரம், வைடூரியங்கள் நிரம்பி வழிவதை கண்டுபிடித்துள்ளனர். இந்த பிரபஞ்சத்தில் பூமியை தவிர வேறு எந்த கோள்களிலும் ஜீவராசிகள் வாழ்வதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் தொடர்ந்து சூரியன் குடும்பத்தில் உள்ள கிரகங்களையும், பிரபஞ்சத்தில் உள்ள மற்ற கிரகங்களையும் விண்வெளி விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வரும் நிலையில் ஏராளமான ஆச்சர்ய தகவல்கள் தினசரி வெளியான வண்ணம் உள்ளது. பூமியில் தாதுப்பொருட்களுக்கான பற…
-
- 3 replies
- 804 views
-
-
சனி கிரகத்தை இன்று வெறும் கண்களால் மிக அருகில் பார்க்க முடியும்! பூமியில் இருந்து வெறும் கண்களாலேயே சனி கிரகத்தை இன்று (28) பார்க்க முடியும். சனி கிரகம் இன்று சூரியனுக்கு நேர் எதிர் திசையில் வரவிருக்கிறது. மேலும் பூமிக்கும் சனி கிரகத்துக்கும் இடையிலான தூரமும் இந்த ஆண்டில் இன்று (28) மிகக் குறைவாகவும் இருக்கப் போகிறது. பூமிக்கு ஒரு பக்கத்தில் சூரியனும் நேர் எதிர் திசையில் சனி கிரகமும் இன்று வருகின்றன. இதனால் சூரியனின் ஒளி சந்திரனில் பிரதிபலித்து அதை மிகப் பிரகாசமானதாகக் காட்டும். இதனால் இதை வெறும் கண்களாலேயே பார்க்க முடியும். இன்று மாலை சூரியன் அஸ்தமித்த பின் ஒரு மணி நேரத்தில் கிழக்குப் பகுதியில் சனி கிரகத்தை பார்க்க முடியும். மற்ற விண்மீன்கள் போல் அல்லா…
-
- 7 replies
- 803 views
-
-
உங்கட துணைவி (Wifey) உங்களுக்கு உதவியோ.. உபத்திரபமோ தெரியாது, ஆனால் எதிர்காலத்தில் Wi-Fi (வயர்லெஸ்) இலத்திரனியல் உபகரணப் பாவனையில் மட்டுமன்றி வியாபார நிலையங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் உங்களோடு வகை வகையாக பேசவும்.. கண் சிமிட்டவும்.. கார்கள் தானியங்கியகாக மின் சக்தியில்.. இயங்கவும் ஏன் உங்கள் அலைபேசி.. சிலேட்டு.. போன்ற எல்லா இலத்திரனியல் உபகரணங்களும் தானே தன்பாட்டில் மீள் மின் சக்தியாக்கம் (Re-charge) பெற்றுக் கொள்ளவும் இது வழிவகுக்கப் போகிறது. இன்று இணைய உலகில்... தொடர்பாடல் உலகில்.. உங்களை இன்னொருவரோடு.. ஏன் இந்த உலகின் ஒவ்வொரு மூலையோடும் இணைப்பதில் வெற்றியோடு பங்களிக்கும் வயர்லெஸ்.. தொழில்நுட்பம்.. நாளை உங்களை.. உலகை ஆளப் போகும் Wifey ஆகப் போகிறது..! …
-
- 2 replies
- 803 views
-
-
தமிழ் விக்கிபீடியாவில் நீங்களும் எழுதலாமே !! http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88
-
- 0 replies
- 803 views
-
-
விண்வெளி பயணத்தில் ஒளியை மிஞ்ச முடியுமா? – லட்சுமி கணபதி பயணம் மனிதனுக்கு பயணம் அவசியமானது. ஆதி மனிதன் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஆப்ரிக்காவில் தொடங்கி உலகம் முழுவதும் நடை பயணம் மூலமாகவே சென்று சேர்ந்தான். பயணப்பட பல காரணங்கள் இருந்தாலும் மிக முக்கிய ஆதாரத் தேவைகளில் ஒன்று “உறைவிடம்”. இந்த உறைவிடத் தேடல் நமக்கு பூமியில் மட்டுமில்லாது நமது பிரபஞ்சம் நோக்கியும் திரும்பியது என்னவோ சென்ற நூற்றாண்டில் தான். நமது பிரபஞ்சத்தின் பல நட்சத்திரத் திரள்களையும், விண்மீன்களையும் அவற்றைச் சுற்றி வரும் கோள்களையும் நோக்கிப் பயணம் செய்ய அறிவியல் உலகம் பல முயற்சிகளை எடுத்தது. நிலவில் மனிதனை இறக்கிய பின் மனித குலம் இந்த தேடுதலை உற்சாகத்துடன் தொடர்ந்தது. நமது சூரிய குடும்பத்தில் …
-
- 2 replies
- 803 views
-
-
[size=4]கரப்பான் பூச்சிகளைக் கண்டால் யாருக்குமே ஆகாது. ஆனால் விஞ்ஞானிகள் அப்படி இருக்க முடியாது. ஏனெனில் அவர்கள் குறிப்பிட்ட முக்கிய பணிகளுக்கு கரப்பான் பூச்சிகளைப் பயன்ப்டுத்த விரும்புகின்றனர். ஆகவே கரப்பான் பூச்சிகளை வைத்து சில ஆராய்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இரவில் நீங்கள் கரப்பான் பூச்சியைக் காண நேரிட்டு அதை அடித்துக் கொல்ல முயன்றால் அது மிக வேகமாக ஓடி எங்கேனும் இடுக்கில் ஒளிந்து கொள்ளும். எந்த சிறிய இடுக்கானாலும் அது புகுந்து கொள்ளும். கரப்பான் பூச்சியின் இத் திறன் விஞ்ஞானிகளுக்குத் தேவையில்லை. தாஙகள் விரும்புகின்ற இடங்களுக்கு கரப்பான் பூச்சிகள் செல்லும்படி செய்வதே விஞ்ஞானிகளின் நோக்கம்.[/size] [size=4][/size] [size=4]கரப்பான் பூச்சியி…
-
- 0 replies
- 802 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், அலெசியா பிராங்கோ மற்றும் டேவிட் ராப்சன் பதவி, ஃபீச்சர்ஸ் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் புதன் கோள், அதன் "பொருத்தமில்லாத" மையப்பகுதியில் தொடங்கி அதன் மேற்பரப்பின் குழப்பமான ரசாயன கலவை வரை, ஆச்சரியங்கள் நிறைந்தது. இந்தக் கோளின் தோற்றம் குறித்த பின்னணியிலும் ஆச்சரியத்திற்குக் குறைவு இல்லை. ஆனால், சைப்ரஸில் காணப்படும் பாறைகளில் அதற்கான சில பதில்கள் கிடைக்கக்கூடும். அறிவார்வம் பல ஆய்வாளர்களைப் பலி வாங்கியுள்ளது. அந்த வரிசையில் தாம் அடுத்தாக இருக்கக்கூடும் என்று நிக்கோலா மாரி அஞ்சினார். சைப்ரஸின் தொலைதூர…
-
- 0 replies
- 802 views
- 1 follower
-