Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்கள் இது போன்ற எண்ணற்ற கேர்ள்விகள் நம் மனதில் எழுவது உணடு. வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு நமது இஸ்ரோ விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட ஆம் என்று பதிலளித்து உள்ளனர். வேற்று கிரக வாசிகள் நமக்கு அருகிலோ, வெகு தொலைவிலோ நம்மை போலவே ஒரு கூட்டம் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறு இருக்கிறது. ஆனால், அவர்கள் உணவு சாப்பிட்டு, தண்ணீர் குடித்து நம்மை போலவே இருப்பார்களா என்பது சந்தேகம். அவர்கள் வேறு மாதிரியாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது. சேத் ஷோஸ்டாக் விஞ்ஞானி கூறும் போது இன்னும் 25 ஆண்டுகளில் நாம் அவர்களை நேரில் சந்திக்கலாம் என கூறி …

  2. வல்லிபுரத்தாள்வார் கோயில் திருவிழாவிற்கு நேர்த்திக்கடன் நிறைவேற்றுவதற்காக வந்த தூக்குக்காவடி தடம் புரண்டதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மந்திகை ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை ஒரு தூக்குக் காவடியில் 3 சகோதரர்கள் ஒன்றாக தெங்கியபடி வந்தவேளை மந்திகை முறாவில் பகுதியில் உள்ள வீதி வளைவில் தூக்குக்காவடி திரும்பும் போது உழவு இயந்திரம் குடைசாய்ந்தே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இச் சம்பவத்தில் வல்லிபுரம் புலோலியைச் சேர்ந்த இராசதுரை குகன் ( வயது 29 ) என்ற நபர் தலையிலும், முதுகிலும் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவடியில் வந்த செல்லக்கிளி றமணன் ( வயது 24 ), செல்லக்கிளி சந்திரன்…

  3. புடினுக்குச் சொந்தமான மாளிகைக்கு உரிமை கொண்டாடும் செல்வந்தர் ! கருங்கடல் கரையோரத்தில் அமைந்துள்ள 1.5 பில்லியன் டொலர் மதிப்புள்ள அரண்மனை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்குச் சொந்தமில்லை என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரஷ்ய பெரும் செல்வந்தரான அர்காடி ராட்டன்பெர்க் குறித்த அரண்மனையை தன்னுடையது என்று கூறியுள்ளார். கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நேவல்னி எழுதிய அரண்மனை பற்றிய வீடியோ அறிக்கையில், இந்த அரண்மனை புடினுக்குச் சொந்தமானது என தெரிவித்திருந்தார். இந்நிலையில் ரஷ்ய பெரும் செல்வந்தரும் ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு மிக நெருக்கமான அர்காடி ராட்டன்பெர்க், இந்த அரண்மனையை தன்னுடையது என கூறியுள்ளார். ரஷ்யா முழுவதும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு எதிரான ஒ…

  4. ஜெர்மனியில் தண்ணீரை வீணடித்த இளைஞரை கண்ணீர்ப்புகைக் குண்டு வீசிப் பிடித்த பொலிசார் ஜெர்மனியில் தொடர்ந்து தண்ணீரை வீணடித்து வந்த இளைஞரை கண்ணீர்ப்புகைக் குண்டு வீசிப் பிடித்த பொலிசார், அவரை மன நல சிகிச்சைக்கு உட்படுத்தியுள்ளனர். வடக்கு ஜெர்மனியில் உள்ள சல்ஸ்கிட்டர் பகுதியில் வசித்து வந்த 31 வயதாகும் இளைஞரின் வீட்டிற்கு தொடர்ந்து அதிகப்படியான தண்ணீர் கட்டணம் வந்துள்ளது. அவரது வீட்டில் ஒரு ஆண்டில் 7 மில்லியன் லிட்டர் (1.85 மில்லியன் கலோன்கள்) நீர் பயன்படுத்தப்பட்டிருந்தது. சல்ஸ்கிட்டர் பகுதியில் வசிக்கும் குடும்பங்களின் தண்ணீர் பயன்பாடு சராசரியாக 44,000 லிட்டர்களாக இருக்கும் நிலையில், இவர் வீட்டில் 7 மில்லியன்…

  5. விபரீத விளம்பரத்தால் 24 மணித்தியாலத்தில் 517 விபத்துக்கள்: மொஸ்கோவில் பரபரப்பு பெண்ணொருவரின் மார்பகங்களை காட்சிப்படுத்தும் வகையில் விளம்பர நிறுவனம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட விளம்பர பிரச்சாரம் ஒன்றினால் 24 மணித்தியாலத்துக்குள் 500க்கும் மேற்பட்ட வாகன விபத்துக்கள் ஏற்பட்ட விபரீதச் சம்பவமொன்று ரஷ்யாவின் தலைநகரான மொஸ்கோவில் இடம்பெற்றுள்ளது. மொஸ்கோ நகரில் உள்ள 'சரப்பேன்' என்ற விளம்பர நிறுவனம், ஒரு பெண் தனது இரு மார்பகங்களையும் கையில் ஏந்தியவாறு இருக்கும் வகையில் அமைந்த பாரிய படத்தை கொண்ட விளம்பர காட்சியை 30 வேன்களில் வைத்து பேரணியாக சென்றுள்ளன. அதாவது மொஸ்கோ நகரில் உள்ள வர்த்தக நிலையங்களின் விளம்பரங்களை இந்த சுவரொட்டியின் பக்கத்தில் வைத்தால் மக்களிடத்தில் கூடுதலான வரவேற்…

    • 2 replies
    • 535 views
  6. 30ஆயிரம் ரூபா பெறு­ம­தி­யான உணவை தான­மாக வழங்­கிய யாசகர் அப்­பு­ஹாமி இலங்­கையில் வெசாக் மற்றும் பொசன் காலங்­களில் பர­வ­லாக நடத்­தப்­படும் தான­சா­லை­களில் யாச­கர்­களும் உணவு மற்றும் பான­வ­கை­களை அருந்­து­வது பொது­வான செய்தி. ஆனால், யாசகர் ஒருவர் நடத்­திய தான­சா­லையில் பொது­மக்கள் கலந்­து­கொண்ட செய்­தி­யொன்று மாத்­த­றை­யி­லி­ருந்து கிடைக்கப் பெற்­றுள்­ளது. கடந்த பொசன் போயா தினத்தை முன்­னிட்டு, 28ஆம் திகதி மாத்­தறை மாந­கர சபை முன்­றலில் இத்­தா­ன­சாலை நடை­பெற்­றது. இது­பற்றித் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, மாத்­தறை மாந­கர சபைக்கு முன்னால் யாசகம் பெற்று வரு­பவர் யாசகர் அப்­பு­ஹாமி. இவரை அப்­பு­ஹாமி மாமா என அங்­குள்ளோர் அழைத்து வரு­கின்­றனர். இவ­ருக்கு …

  7. கொசோவோ நாட்டில் ஜேர்மனின் முன்னாள் சர்வாதிகாரி ஹிட்லரை போலவே நபர் ஒருவர் வசிப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜேர்மனியில் தனது சர்வாதிகார ஆதிக்கத்தை நிலைநாட்டி, உலகையே ஸ்தம்பிக்க வைத்த ஒரு மாபெறும் கொடூர தலைவர் ஹிட்லர். இவரை போலவே கொசோவோ நாட்டில் மிட்ரோவிகா(Mitrovica) நகரில் இமின் ட்ஜினொவ்சி(Emin Djinovci Age-49)என்ற நபர் வசித்து வருகிறார். அந்நாட்டு மக்கள் எல்லோரும் இவரை ‘கொசோவோ ஹிட்லர்’(Kosovo Hitler)என்று அழைக்கிறார்கள். ஏனெனில் இவர் தலை முடி, மீசை, நடை, உடை, பாவனை எல்லாமே ஹிட்லரைப் போலவே செய்துகொண்டு வலம் வருகிறார். கடந்த 1998ம் ஆண்டு ஜேர்மனியிலிருந்து கோசோவோவுக்கு சென்ற இவர், செர்பியாவுடன் நடந்த யுத்தத்தில் பங்கேற்றார். அப்போது போரினால் ஏற்பட்ட பலத…

  8. திருமண மண்டபத்தில் இருந்து நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளையை மணக்க மறுத்து, தர்ம அடி கொடுத்து மணப்பெண் விரட்டியடித்த சம்பவம், வாணியம்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கோணம்பேட்டையை சேர்ந்தவர் அசோகன். இவரது மகள் பிரீத்தி. இவருக்கும், பெங்களூரு விஜினாபுரத்தை சேர்ந்த சதீஷ் என்பவருக்கும், வாணியம்பாடியில், நேற்று முன்தினம் (26ம் தேதி) காலை திருமணம் நடப்பதாக இருந்தது. அதிகாலை, 4 .30 மணிக்கு மணப்பெண்ணுக்கு செய்ய வேண்டிய சடங்குகளை செய்ய மணமகன் சதீஷையும், அவரது உறவினர்களையும் பெண் வீட்டார் தேடினர். சதீஷ் மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்களை திருமண மண்டபத்தில் காணவில்லை. அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார், சதீஷை பல இடங்களில் தேடியும் கிடை…

  9. [size=4]கோவை: வால்பாறை அரசு பள்ளியில் அசாம் மாநிலக் குழந்தைகள் தமிழ் பாடத்தை ஆர்வமுடன் படித்து வருகிறார்கள்.[/size] [size=3][size=4]கோவை மாவட்டம் வால்பாறையில் தேயிலை தொழிலில் ஈடுபட்ட தமிழக தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, வன விலங்குகளால் அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட இடங்களில் குடியேறிவிட்டனர். இதனால் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டது. அதை சமாளிக்க அசாம், மஹாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.[/size][/size] [size=3][size=4]அவர்களின் குழந்தைகள் வால்பாறையில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். அங்கு அவர்கள் தமிழை மொழிப் பாடமாக படித்து வருகிறார்கள். இந்நிலையில் வால…

  10. ஸ்டீவ் ஜொப்ஸ் மறைந்து சுமார் ஒரு வருடத்திற்குப் பின்னர் அவருக்கென பிரத்தியேகமாக நிர்மாணிக்கப்பட்டு வந்த சொகுசுக் கப்பல் நேற்று அவரின் குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த கப்பலின் புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளன. இக் கப்பலின் பெயர் 'வீனஸ்" ஆகும். இது ஜொப்ஸ் இறப்பதற்கு முன்பிலிருந்தே தயாரிக்கபட்டு வந்துள்ளது. எனினும் அவர் இறந்து சுமார் ஒரு வருடத்திற்குப் பின்னரே இக்கப்பலின் நிர்மாணப்பணிகள் நிறைவடைந்துள்ளன. ஸ்டீவ் மற்றும் அப்பிள் நிறுவனத்தின் முக்கிய வடிவமைப்பாளர்கள் சிலர் இணைந்தே இதனை வடிவமைத்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கப்பலானது தோற்றத்தில் அப்பிள் ஸ்டோர் மற்றும் ஐ போன் வடிவத்தை ஒத்ததாக கா…

  11. “மிகவும் அச்சமடையக் கூடிய... அளவிற்கு, கொரோனா தொற்று கொடிய நோய் அல்ல” கொரோனா தொற்று மிகவும் அச்சமடையக்கூடிய அளவிலான கொடிய நோய் அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், 100 க்கு 81 விகிதமானவர்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டதை அறியாமல் வைரஸிலிருந்து மீண்டு வருவதாக கூறினார். மக்களிடையே காணப்படும் தேவையற்ற அச்சமே இறப்புகளுக்கு முக்கிய காரணம் என்றும் அவர் அவர் சுட்டிக்காட்டினார். மேலும் இலங்கையில் இறப்பு விகிதம் இன்னும் 1.9 சதவீதமாக உள்ளது என்றும் எஸ்.பி. திசாநாயக்க குறிப்பிட்டார். https://athavannews.com/2021/1236313

  12. மனைவியின் அடிக்கு பயந்து மரத்தில் குடியேறிய கணவன்! உ.பி., மாநிலத்தில் மனைவியிடம் அடி வாங்கிய கணவன் தொடர் அடிக்கு பயந்து போய் ஒரு மாத காலமாக மரத்தில் குடியிருந்து வருகிறார். இவரது நடவடிக்கை சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. உ.பி., மாநிலம் மவூ மாவட்டத்தை சேர்ந்தவர் ராம் பிரவேஷ் (42) இவருக்கும் இவரது மனைவிக்கும் அடிக்கடி சண்டை நடைபெறுவது வழக்கமான ஒன்றாகும். சண்டையில் மனைவி ராம் பிரவேஷை அடித்து நொறுக்கி விடுவாராம். பொறுத்தது பார்த்த ராம் திடீரென முடிவு ஒன்றை எடுத்தார். அதன்படி 80 அடி உயர மரம் ஒன்றில் ஏறி குடியிருக்க துவங்கினார். உணவு குடிநீர் உள்ளிட்டவை அவரது குடும்பத்தினர் கயிறு கட்டி மேலே அனுப்பி வைப்பார்கள். இதனிடையே ராம் நடவடிக்கை பக்கத்து வீட்டுக்கா…

  13. இறைச்சிக்கறியில் எலி - பங்களாதேஷ் பல்கலைக்கழகத்தில் பரபரப்பு _ வீரகேசரி இணையம் 12/8/2010 2:37:31 PM பங்களாதேஷில் உள்ள பிரபல பல்கலைக்கழக சிற்றுண்டிச் சாலையொன்றில் பரிமாறப்பட்ட கோழி இறைச்சிக்கறியில் எலியொன்றின் தலை கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திங்கட்கிழமை பகல் மாணவர் ஒருவர் உணவு உட்கொண்டிருந்த வேளையில் தனக்கு பரிமாறப்பட்ட கோழிக்கறியில் எலியின் தலை இருப்பதை அவதானித்துள்ளதுடன் உடனடியாக சுகயீனத்திற்கும் உள்ளாகியுள்ளார். இதனைத்தொடர்ந்து மாணவர்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலையும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸ…

  14. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறந்ததும், அவரது உடலைப் பொதிந்து அடக்கம் செய்ததாக கருதப்படும் துணி இத்தாலி நாட்டின் தூரின் நகர தேவாலயத்தில் உள்ளது. 14.3 அடி நீளமும், 3.7 அடி அகலமும் கொண்ட இந்த துணியில் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட ஒருவரது உடலின் முன் மற்றும் பின் பகுதி பதிந்துள்ளது. ஈட்டியால் குத்தியதில் இயேசுவின் விலாவில் ஏற்பட்ட காயத்தின் வடுவும் இதில் காணப்படுகிறது. 1988ஆம் ஆண்டு இந்த துணியின் சிறு பகுதியை ஆய்வு செய்த அமெரிக்க விஞ்ஞானிகள், இது 13ஆம் நூற்றாண்டளவில் போலியாக தயாரிக்கப்பட்ட ஓவியமாக இருக்கலாம் என கருத்து தெரிவித்தனர். இந்நிலையில், இத்தாலியின் பதுவா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இந்த துணியின் மற்றொரு பகுதியை ஆய்வுக்கு உட்படுத்தினர். கார்பன் …

  15. 10 MAY, 2023 | 10:22 PM குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறின்போது காலில் கயமடைந்த நபரை பொலிஸார் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு வந்த நிலையில், அங்கு சிகிச்சையளித்த பெண் வைத்தியரை குறித்த நபர் கொலை செய்துள்ளார். இச் சம்பவம் இந்தியாவின் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டாரக்கரை தாலுகா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. குறித்த வைத்தியசாலையில் வைத்தியராக பணியாற்றிய 23 வயதான வந்தனா தாஸ் என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவ தினமான இன்று (10) அதிகாலையில் குறித்த வைத்தியர் பணியில் இருந்தபோது, சந்தீப் என்ற நபருக்கு காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளிப்பதற்காக பொலிஸார் வைத்தியசாலைக்கு கொண்டு வந்துள்ளனர். …

  16. நோர்வேயின் பன்னாட்டு அபிவிருத்தித்துறை அமைச்சர் எரிக் சொல்கெய்ம் அவர்கள் புது டெல்லிக்குச் சென்றுள்ளார். எதிர்வரும் 27 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாக உள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மாநாட்டில் அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் மேற்கொள்ள உத்தேசித்திருக்கும் சிறிலங்காவுக்கு எதிரான நகர்விற்கு ஆதரவு தேடி அவர் அங்கு சென்றுள்ளதாகச் சில இணையத் தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வேறு சில இணையத் தளங்கள், டெல்லியிலுள்ள எரிசக்தி வள பல்கலைக்கழகம் தனக்கு வழங்கிய கௌரவ கலாநிதிப் பட்டத்தினை ஏற்றுக்கொள்ளவே நோர்வே அமைச்சர் எரிக் சொல்கெய்ம் அவர்கள் அங்கு செல்கின்றார் என்று தெரிவித்துள்ளன. காரணங்கள் எதுவாயிருந்தாலும், அமைச்சர் எரிக் சொல்கெய்ம் அவர்கள் இந்தியத் தலைநகருக்கு மீண்டும…

    • 2 replies
    • 629 views
  17. காதலனின் குற்றத்திற்காக தூக்கிலிடப்பட்ட 'அசாதாரண' பெண்ணின் உருக்கமான கதை கட்டுரை தகவல் எழுதியவர்,டிம் ஸ்டோக்ஸ் பதவி,பிபிசி நியூஸ் 10 ஜனவரி 2023, 06:10 GMT பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, செய்யாத குற்றத்திற்காக தூக்கிலிடப்பட்ட எடித் தாம்சன் 1923ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி பிரிட்டனை சேர்ந்த ஓர் இளம்பெண் தான் செய்யாத ஒரு குற்றத்திற்காக மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். எடித் தாம்ஸன் என்ற அந்த பெண்ணுக்கும் அவரது காதலர் ஃப்ரெடிரிக் பைவாட்டர்ஸுக்கும் ஒரே நாளில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. தனது காதலனால் தன்னுடை…

  18. செப் 19, 2012 கடந்த 17.09.2012 அன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழின உணர்வாளர் விஜயராஜ் அவர்கள் எமது இனத்தை அழித்த மகிந்த ராஜபக்ஷவின் வருகையை எதிர்த்து தன்னுயிரைத் தீக்கிரையாக்கி வீரமரணத்தைத் தழுவிக்கொண்டார். அவருக்கு உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் சார்பில் எமது வீரவணக்கத்தினைத் தெரிவித்துக்கொள்கிறோம். அவரது தமிழின உணர்விற்கு சிரம் தாழ்த்தும் அதேவேளை எம்மினப் பகைவனோடு போராடுவோம், அப்போராட்டத்தில் மடிந்தால் மடிவோம், தன்னைத்தானே மாய்த்துக் கொள்ளமாட்டோம் என உறுதி எடுத்துக் கொள்வோம். தமிழின உணர்வாளர் விஜயராஜ் அவர்களது தமிழினப் பற்றுணர்வினைப் புரிந்து உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் நாம் அணிதிரண்டு, ஓ…

    • 2 replies
    • 560 views
  19. எவருக்கும் அறிவிக்காமல் வீட்டை விட்டு வெளியேறிய மகனொருவர் இரு வருடங்கள் கழித்து வீடு திரும்பியபோது தனது கல்லறைக்கு தனது பெற்றோர் பூங்கொத்து வைத்துக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சம்பவம் போலந்தில் இடம்பெற்றுள்ளது. சியட்லிஸ்கா நகரைச் சேர்ந்த ஜரோஸ்லாவ் கரோலின்ஸ்சி (38 வயது) என்ற மேற்படி நபர் 2011 ஆம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறினார். இந் நிலையில் கடந்த வாரம் மனம் மாறி வீடு திரும்பிய ஜரோஸ்லாவ் தனது கல்லறைக்கு பெற்றோர் பூங்கொத்து வைத்து அஞ்சலி செலுத்துவதைக் அவதானித்துள்ளார். இந்நிலையில் தனது கல்லறையில் ஏறிய ஜரோஸ்லாவ் 'ஹலோ அம்மா, அப்பா, நான் திரும்பி வந்துவிட்டேன்" எனத் தெரிவிக்கவும் அதிர்ச்சிக்குள்ளாகிய அவரது தாயார் மயங்கி விழுந்துள்ளார். உக்ரேனிய எல்லைக்கு அர…

  20. திருட சென்ற இடத்தில் திருடனின் மனிதாபிமானம்..! திருடனால் காப்பாற்றப்பட்ட வயதான பெண்மணி, யாழ்.சாவகச்சோில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம்.. யாழ்.சாவகச்சோியில் வீடு புகுந்து திருடுவதற்காக சென்றிருந்தபோது வீட்டின் உரிமையாளருக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் உடனடியாக சுடு தண்ணீர் வைத்து கொடுத்த திருடன் அவரை ஆறுதல் படுத்தியதன் பின் திருடி சென்ற சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. சாவகச்சோி - கல்வயல் பெருங்குளம் வேதன பிள்ளையார் கோவில் மற்றும் நுணாவில் கந்தசுவாமி கோவில் பகுதிகளில் சுமார் 6 வீடுகளில் நேற்று இரவு தொடர் கொள்ளை சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. இதில் நுணாவில் வேலங்கேணி கந்தசுவாமி கோவிலடியில் உள்ள வீடொன்றின் கதவுகளை உடைத்துக் கொண்டு திருடர்கள் உள்நுழைந்துள்ளனர். …

  21. ரஷ்ய அதிபரின் மலக்கழிவுகளை பத்திரப்படுத்தும் பாதுகாவலர்கள் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வெளிநாடு செல்லும் போது, அவரது மலம் பத்திரமாக பெட்டியில் ரஷ்யா எடுத்து வரப்படுவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. கண்காணிப்பு பிரபல புலனாய்வு பத்திரிகையாளர்களான ரெஜிஸ் ஜென்டே, மிகைல் ருபெயன் இருவரும் பிரான்சிலிருந்து வெளியாகும் ‘பாரிஸ் மேட்ச்’ செய்தி பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதியுள்ளனர். அதில் கூறப்பட்டுஉள்ளதாவது: புடின் வெளிநாடு சென்றால், அங்கு கழிப்பறையில் அவரது மலத்தை சேகரித்து பெட்டியில் வைத்து ரஷ்யா எடுத்து வரும் வேலையை, அவரது பாதுகாவலர்கள் செய்து வருகின்றனர். மல சோதனையில் புடின் உடல்நிலை குறித்த எந்த தகவல்களும் வெளிநாடுகளுக்கு கிடைக்கக் கூடாது என்பதற்காகவ…

  22. அமெரிக்காவில் அணில் ஒன்று நூற்றுக்கணக்கான வால்நட் கொட்டைகளை காருக்குள் ஒளித்து வைத்திருந்த சுவாரசிய நிகழ்வு நடந்துள்ளது. பென்சில்வேனியா மகாணத்தில் உள்ள பீட்ஸ்பர்க் நகரில் ஒரு தம்பதியினர் தங்கள் காரை வீட்டின் பின்புறம் உள்ள வால்நட் மரத்தின் கீழ் நிறுத்தியிருந்தனர். சிலநாட்கள் கழித்து மனைவிக்கு போன் செய்த கணவர் காரை எடுத்துக் கொண்டு நூலகத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். சிறிது தூரம் ஓடிய கார் திடீரென நின்று போனது. காருக்குள் விசித்திரமான சப்தம் கேட்பதையும், புகை வருவதையும் உணர்ந்த அந்த பெண், காரின் என்ஜின் பகுதியில் கூடுகட்டியிருந்த அணில் அதனுள் நூற்றுக்கணக்கான வால்நட் கொட்டைகளை மறைத்து வைத்திருந்ததைப் பார்த்தார். பின்னர் காரை பழுது நீக்கும் இடத்திற்கு இருவர…

  23. கனடாவில் சேவல் சண்டை தொடர்பில் ஒரு குடும்பத்திற்கே பிடியாணை பிறப்பிப்பு! கனடாவில் சேவல் சண்டை தொடர்பில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் மிருகவதை தடுப்பு அமைப்பு, சர்ரேயில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர் மீது இந்த பிடியாணையை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டிலிருந்து பறவைகள் எவையும் கைப்பற்றப்படாத நிலையில், ஆதாரங்கள் சிலவற்றை கைப்பற்றியுள்ள அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர். ஆதாரங்களை வைத்து அந்த இடத்தில் குற்றங்கள் இடம்பெற்றனவா என்பதை ஆராய்ந்து வருவதாக மிருக வதை தடுப்பு அமைப்பின் தலைமை அலுவலர் ஒருவர் தெரிவித்தார். கால்நடைகள் மீதான வன்முறை குற்றவியல் சட்டத்தின் இரண்டு பிரிவு…

  24. சவுதி அரேபிய காதலருக்கும் ரஷ்ய பெண்ணுக்கும் இந்து முறைப்படி திருமணம்! காதல்... மதம், இனம் , மொழி,கடந்தது என்பதை நிரூபிக்கும்விதத்தில் குஜராத்தில் சவுதி அரேபிய ஆணுக்கும், ரஷ்ய பெண்ணுக்கும் இந்து முறைப்படி திருமணம் நடந்துள்ளது. குஜராத் மாநிலம் சூரத் நகரை சேர்ந்தவர் கிஷான் தோலியா. இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் பங்கேற்க கிஷான் தோலியாவின் அரேபிய நண்பர் ஹமீத் அல் ஹமாத் தனது ரஷ்யத் தோழியான ஜுலியானாவுடன் சூரத் வந்திருந்தார். ஹமித் சாப்ட்வேர் இன்ஜினியராக சீனாவில் பணியாற்றுகிறார். ஜுலியானா ஜவுளி வர்த்தகத்தில் ஈடுபடுபவர். இருவரும் சீனாவில்தான் வசித்து வருகின்றனர். சூரத்தில் இந்து கலாச்காரப்படி கிஷான் தோலியாவி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.