செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7088 topics in this forum
-
மாவீரன் நெப்போலியன் மனைவியின் மோதிரம் திருட்டு! மாவீரன் நெப்போலியன் மனைவியின் மோதிரம் ஒன்று திருடப்பட்டுள்ளது. பரிஸின் ஆறாம் வட்டாரத்தில் இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மூன்றாம் நெப்போலியனான Jean-Christophe Napoleon Bonaparte இன் மனைவி பேரரசி யூஜெனீ (Empress Eugenie) இன் மோதிரமே இவ்வாறு திருடப்பட்டுள்ளது. குறித்த மோதிரம் 40 கரட் இரத்தினங்களால் செய்யப்பட்டது எனவும், இதன் இன்றைய மதிப்பு சுமார் ஒரு மில்லியன் யூரோக்களுக்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். http://athavannews.com/மாவீரன்-நெப்போலியன்-மனைவ/
-
- 2 replies
- 767 views
-
-
அந்தக்காலங்களில் எந்த வேலைகளை செய்வதாக இருந்தாலும் நூறு வீதம் மனித சக்தியைப்பயன்படுத்தியே மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இன்றைய காலகட்டத்தை கொஞ்சம் கற்பனை பண்ணிப்பாருங்கள். எமது வேலைகளில் எத்தனை வேலைகளை நாம் சுயமாக செய்கிறோம். எமது அன்றாட அத்தியாவசிய கடமைகளை செய்வதற்கு கூடி அடுத்தவர்களையும் அடுத்தவற்றையும் நாடவேண்டிய ஒரு உலகத்துக்குள்ளே நாமாவே வந்து விழுந்து விட்டோம். இதெற்கெல்லாம் காரணம் இன்றை அதியுயர் தொழில்நுட்ப வளர்ச்சிதான். இதுதான் காலத்தின் கட்டாயம் என்ற நிலையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எமது வேலைகளை இலகுவாக்க அனைத்திற்கும் இயந்திரம். பெண்களின் வீட்டு வேலைகளை செய்வதற்கு கூட இயந்திரம். துணி துவைக்க துப்பரவு செய்ய நீர் ஊற்ற இவைற்றையெல்லாம் விட.. சமையலுக்கு கூடி இயந…
-
- 2 replies
- 1.4k views
-
-
யாழ்ப்பாணத்தில் உயிருடன் வாழந்து கொண்டிருக்கும் ஒருவர் தன்னுடைய மரணக் கொடுப்பனவை வழங்குமாறு விண்ணப்பித்துள்ள சுவாரஸ்யமான சம்பவமொன்று நடைபெற்றுள்ளது. யாழ். மாவட்ட சிகை ஒப்பனையாளர் சங்கம் அங்கத்தவர்கள் மரணித்தால் 10 ஆயிரம் ரூபா வழங்கி வருகிறது. இதில் அங்கம் வகிக்கும் கொக்குவிலைச் சேர்ந்த ஒருவர் அவ் விதம் சங்க நிர்வாகத்திடம் விண்ணப்பித்து இருக்கிறார். விண்ணப்பித்ததுடன் நின்று விடாமல் அடிக்கடி சங்கத்துக்குப் போய் நெருக்கடி கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் அவருக்கு மரணத்தின் பின்பாக வழங்கப்பட வேண்டிய மரணக் கொடுப்பனவை சங்கம் முன்னதாகவே வழங்கி விடவும் தீர்மானித்திருப்பதாகவும் தெரிய வருகிறது. http://www.virakesari.lk/article/local.php?vid=5949
-
- 2 replies
- 245 views
-
-
நித்தியானந்தா வீடியோ போலியானது : நடிகை ரஞ்சிதா பெங்களூரு, ஜுலை.24, 2010 நித்தியானந்தாவுடன் தாம் இருப்பது போன்று சில தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்ட வீடியோ காட்சிகள், போலியாக சித்தரிக்கப்பட்டவை என்று நடிகை ரஞ்சிதா தெரிவித்துள்ளார். கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நித்தியானந்தா தாக்கல் செய்த மனு ஒன்றில், தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். அந்த மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமை நடந்தது. அப்போது, சி.ஐ.டி. போலீஸார் தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், நடிகை ரஞ்சிதாவின் வாக்குமூலம் இணைக்கப்பட்டிருந்தது. அந்த வாக்குமூலத்தில், நித்தியானந்தாவுடன் தாம் தவறான உறவு எதுவும் வைத்துக் கொள்ளவில்லை என்றும், அது த…
-
- 2 replies
- 1.4k views
-
-
இணையத்தில் தேட வேண்டுமா , உதவியாளருக்கு கடிதம் எழுதுவதற்கான வாக்கியங்கள் கூற வேண்டுமா மனதில் நினைத்தால் மட்டும் போதும். என்ன நினைக்கின்றீர்கள் என்பதை மூளையை படிப்பதன் மூலம் கண்டுபிடித்து செய்து கொடுத்து விடுமாம் கணினிகள். கணினி தொழில்நுட்பத்தின் அதிமேதாவியான இன்டெல் நிருவனத்தை சேர்ந்த பொறியாளர்கள் இது போன்றதொரு பணித்திட்டத்தில் இறங்கியுள்ளனர். இனிமேல் மௌஸ், கீபோர்ட் வைத்து நீங்கள் வேலை செய்ய வேண்டாம். கற்பனை மட்டும் செய்யுங்கள் போதும் எங்கள் கணினி அனைத்தையும் செய்து கொடுக்கும் என்கின்றனர் இந்த பணித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளோர். இதற்காக கணினியை பயன்படுத்துவோரின் மூளையைப் பற்றிய விபரமான வரைபடக் குறிப்பு ஒன்றை உருவாக்கி மனிதன் என்ன நினைக்கும் போது எந்த வகையான மாற்றம்…
-
- 2 replies
- 600 views
-
-
மகிந்த - விஜய் நம்பியார் ஒரு கற்பனை உரையாடல்! [saturday, 2011-04-23 02:58:08] நம்பியார்: ஹலோ! மகிந்த இருக்கிறாரா? நான் ஐ.நா செயலாளர் நாயகத்தின் ஆலோசகர் நம்பியார் கதைக்கிறன்.. ராஜபக்ச: ஹலோ! நான்தான் மகிந்த.. எப்படியிருக்கிறியள்.. நம்பியார்: நல்லாயிருக்கிறம்.. உங்களுக்கு எனது புதுவருட வாழ்த்துக்கள்! ராஜபக்ச: என்னுடைய புதுவருடக் கொண்டாட்டத்தைத்தான் கெடுத்துப் போட்டியளே? நம்பியார்: என்ன நிபுணர் குழு அறிக்கையை வாசித்திட்டியள்போல.. ராஜபக்ச: பேப்பரிலை பார்த்தனான். நம்பியார்: என்ன! உங்களுக்கு அனுப்பினதை நீங்கள் பேப்பருக்குக் கொடுத்திட்டு, அதிலை வந்ததைதான் வாசித்தீர்களோ? ராஜபக்ச: ஆமாம். வங்கியில் கொள்ளையடிப்பவர்கள். காசை எண்ணிப் பார்ப்பதி…
-
- 2 replies
- 1k views
-
-
அகிம்சையெல்லாம் வாளெடுத்து ஆடிடும்போது -எம் அன்னையவள் அறவழியில் நீதியும் கேட்டாள் திகில் பிடிக்கச் சிரமெடுக்கும் தீயவர்தம்மை கண்டு தேடுமொரு சுதந்திரத் தாய் தேவையைக் கேட்டாள் துகில்பறித்து மகிழ்வு கொள்ளும் துச்சாதனரும் -எங்கும் ... துணிபிடிக்கும் தீயைக்கண்டு துயருறுவாரோ முகிழ்வெடித்து மலர் தொடுத்தமாலைகள் தம்மை -ஓடி மரம் பிடித்து தாவுமினம் மதிப்பதுமுண்டோ விலைகொடுத்து உயிர்கொடுத்து வேண்டிழுதாய் -ஆயின் வினைபிடித்தோர் குடலுருவல் விட்டதுமில்லை குலை நடுங்க கொலைபுரிய கூடிய கூட்டம் -என்றும் குறையிலதைவிட்டு வாழ்வு கொடுக்கவுமில்லை சிலை யிருந்தால் அழுகைகண்டு சற்றுஇரங்கும் கெட்ட சீழ்பிடித்த மனமெடுத்தோர் சிந்தைகொள்வரோ நிலையிதுவோ அழுக்கெடுத்த சாக்கடைநீரில்…
-
- 2 replies
- 460 views
-
-
மருத்துவரால் தாக்கப்பட்டு உயிரிழந்த நோயாளி மருத்துவர் ஒருவரால் தாக்கப்பட்ட நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் ரஷ்யாவில் இடம்பெற்றுள்ளது. இத்தாக்குதலின் போது பதிவுசெய்யப்பட்ட வீடியோவொன்றும் இணையத்தில் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் பெல்குரோட் நகரிலுள்ள வைத்தியசாலையொன்றில் கடந்த டிசெம்பர் 29 ஆம் திகதி இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. எனினும், மேற்படி நோயாளியே முதலில் வன்முறையாக நடந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. தாதி ஒருவரை அந்நோயாளி காலால் தாக்கியதாகவும் அதையடுத்தே அவரை மருத்துவர் தாக்கியதாகவும் ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. …
-
- 2 replies
- 348 views
-
-
மனைவியின் மேக்கப் இல்லா முகத்தைப் பார்த்து அதிர்ந்து விவாகரத்துப் பெற்ற கணவர் O திருமணமான புதிதில் கடலில் நீந்தச்சென்ற போது, தனது மனைவியை மேக்கப் (ஒப்பனை) இல்லாமல் பார்த்து அதிர்ந்து போன கணவர், நீதிமன்றத்தை நாடி விவாகரத்துப் பெற்றுள்ளார். துபாயைச் சேர்ந்த 34 வயது நபர், 28 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவர் ஷார்ஜாவில் உள்ள அல் மம்ஸார் கடற்கரையில் நீந்தச் சென்றபோது, அவரது மனைவியின் முழு ஒப்பனையும் கலைந்து, அவர் யார் என்று அடையாளம் தெரியாத அளவுக்கு உருமாறிப் போயிருந்ததைப் பார்த்து அதிர்ந்து போனார். உடனடியாக நீதிமன்றத்தில் விவகாரத்துக் கோரிப் பெற்றுவிட்டார். மணப்பெண் அளவுக்கு அதிகமாக மேக்கப்பில் இருந்துள்ளார். அவரது கண் இமைகள் கூட உண்…
-
- 2 replies
- 569 views
-
-
கோட்டயம் பிப்ரவரி 23,2013,01:12 IST தேங்காயை, குப்பையில் போட்டதற்காக, உருவான சண்டையில், மருமகளின் காதை கடித்துக் குதறினார் மாமியார். பதிலுக்கு மாமியாரின் கைகளை உடைத்ததோடு, உதட்டையும் கடித்து பழி தீர்த்தார் மருமகள். கேரளா, கோட்டயம், கொல்லாட்டை சேர்ந்தவர் லால்ஜி; இவரின் மனைவி ரஜினி. இவர்களுடன், லால்ஜியின் தாய், சாந்தம்மாவும் வசித்து வருகிறார். நேற்று முன் தினம், லால்ஜி வெளியே போயிருந்தபோது, முற்றத்தில் விழுந்த தேங்காயை எடுத்து பார்த்தார் ரஜினி. கெட்டுப் போன, தேங்காய் என்பதால், அதை குப்பையில் வீசினார்.இதை பார்த்து அங்கு வந்த மாமியார் சாந்தம்மா, "நல்ல தேங்காயை ஏன் குப்பையில் தூக்கி எறிந்தாய்' என, கேட்டு, மருமகளிடம் வாக்குவாதம் செய்தார். இந்த வாக்குவாதம் முற்…
-
- 2 replies
- 453 views
-
-
மனைவியை அசத்த நினைத்து 'மாற்றி யோசித்து' சிக்கலில் மாட்டிய கணவர் இந்த வாரம் ஒருநாள் காலை வேளையில் சௌதி அரேபியாவிலுள்ள மகளிர் பள்ளி ஒன்றில், ஆசிரியைகளின் அறையில் நுழைந்த தலைமையாசிரியர் அதிர்ச்சியடைந்தார். காதலை வெளிக்காட்டும் தலைசிறந்த அலங்காரங்கள் அங்கு செய்யப்பட்டிருந்ததை கண்டு அவர் குழப்பமடைந்தார். படத்தின் காப்புரிமைYOUTUBE/URGENTNEWS Image captionபணம், கேக், அணிகலன், பூக்கள் - சௌதி அரேபியாவில் மன்னிப்பை வெளிப்படுத்தும் ஒரு வழி ரோஜா இதழ்கள் மற்றும் பணநோட்டுகள் தரையிலும், நாற்காலி மற்றும் மேசையிலும் சிதறிக்கிடந்தன. மிக பெரிய ஹீலியம் பலூன்கள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. அந்த அறையின் நடுவில்…
-
- 2 replies
- 1.7k views
-
-
தீபாவளி நெருங்க நெருங்க பஜார்களில் கூட்டம் அலை மோதுகிறது. ஜவுளி எடுத்து வெளியே வருவதற்குள் விழி பிதுங்குகிறது. குழந்தை குட்டிகளுடன் தீபாவளி பர்ச்சேஸ் முடிப்பது பெரும் பாடாக இருக்கிறது. இவ்வாறு அனுபவப்பட்டு அலுத்துப் போனவர்கள்தான் பெரும்பாலும் ஆன்லைனில் ஷாப்பிங்கை முடிக்கின்றனர். பேஸ்ட், பிரஷ், சோப், கேமரா, பீரோ, கட்டில்.. ஆகியவற்றை ஆன்லைன் ஷாப்பிங்கில் வாங்குவதில் பிரச்னை இல்லை. ஜவுளி? ஆயிரம்தான் டிஸ்பிளேயில் தெரிந்தாலும், முந்தானை உள்பட முழு புடவையின் டிசைனையும் பார்க்க முடிந்தாலும், புடவையை தொட்டுப் பார்த்து வாங்கினால்தான் பெண்களுக்கு திருப்தி. ஆன்லைனில் எப்படி தொட்டுப் பார்த்து வாங்குவது? சாத்தியம் என்கிறார் ஷரோன் பர்லே. லண்டனின் ப்ரூனல் பல்கலைக்கழகத்தில் டிசைனிங் …
-
- 2 replies
- 854 views
-
-
அரேபியாவில் மாடு, கழுதை என்று திட்டிய கணவன் மீது வழக்கு! [Tuesday, 2014-05-06 22:46:59] சவுதி அரேபியாவில் மாடு, கழுதை என்று பொது இடத்தில் திட்டிய கணவனை கோர்ட்டுக்கு இழுத்துள்ளார் மனைவி.இதுகுறித்து சவுதி கெசட்டில் கூறியிருப்பதாவது: சவுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் (பெயர் வெளியிடப்படவில்லை), கிரிமினல் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தனது கணவர் அடிக்கடி தன்னை மாடு, கழுதை என்று திட்டி அவமானப்படுத்துகிறார். அத்துடன் தகாத வார்த்தைகளில் அசிங்கமாக பேசுகிறார். பொது இடங்கள் என்று கூட பார்க்காமல், மாடு, கழுதை என்று திட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்� என்று புகார் கூறியுள்ளார். இதையடுத்து பெண்ணின் கணவரை ஆஜர்படுத்த மாவட்ட நிர்வாகத்துக்கு கோர…
-
- 2 replies
- 548 views
-
-
நடையாக நடக்க வேண்டியிருக்கிறது என எப்போதாவது நொந்துகொள்ள நேர்ந்தால் அமெரிக்க தொழிலாளி ஜேம்ஸ் ராபர்ட்சனை நினைத்துக்கொள்ளுங்கள். தினமும் நடையாக நடக்க வேண்டும் என்றாலும் அவரை நினைத்துக்கொள்ளுங்கள், தானாக ஊக்கம் பிறக்கும். ஏனெனில் அவர் தினமும் 33 கிமீ நடந்து வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளாக, தனது பணியிடத்திற்கு இப்படி 33 கி.மீ தொலைவு நடந்து வந்து கொண்டிருக்கும் இந்த கடமை வீரரின் மன உறுதியையும், ஈடுபாட்டையும் பார்த்து நெகிழ்ந்து போனவர்கள், இணையம் மூலம் கைகொடுத்து அவருக்கு கார் வாங்கி கொடுக்க நிதியை அள்ளிக்கொடுத்துள்ளனர். அவருக்கு கார் வாங்குவதற்காக 25,000 நிதி திரட்ட இலக்கு நிர்ணயித்தற்கு மாறாக ஒரே நாளில் ஒரு லட்சம் டாலர்களுக்கும் அதிகமாக அள்ளிக்கொடுத்த…
-
- 2 replies
- 618 views
-
-
சிவ மேனகை பெற்றோலியத்தை சீராக பெறுவதற்கு இந்து சமுத்திரத்தை கடைய போகும் சீனாவும் அமெரிக்காவும் ,,,,,,,,,,,,,,,,, அமிர்தத்தை பெறுவதற்காக தேவர்களும் அசுரர்களும் மந்தர மலையை மத்தாகவும் வாசுகி பாம்பை கயிறாகவும் கொண்டு பாற்கடலை கடைந்தார்கள் . ,வலிதாங்க முடியாமல் பாம்பு விசத்தை கக்கியது ,அமிர்தத்துக்கு பதிலாக வந்த விசத்தை சிவபெருமான் உட்கொண்டு உலக மக்களை காப்பாற்றினார் ,,இது புராணம் கூறும் வரலாறு இன்றைய புது யுகம் எமக்கு சொல்லபோவது என்னவென்றால் இலங்கையை மத்தாகவும் இந்தியாவை கயிறாகவும் கொண்டு சீனாவும் அமெரிக்காவும் இந்து சமுத்திரத்தை குண்டுகளால் குடைய போகின்றார்கள் பொற்றோல் வருகின்றதா எரியும் நச்சு வாயு வருகின்றதா என்பதை பொற…
-
- 2 replies
- 960 views
-
-
தண்ணீர், விளக்காகுமா? முடியுமென்கிறார் இந்த ஒளிப்படத்தில்... சூரிய ஒளி கிடைக்கும் பகலில், இருண்ட அறைகளுக்கு மின்சார செலவில்லாமல் வெளிச்சம் கொடுக்க இந்த வினோத யுக்தியை பயன்படுத்தலாமென்கிறார். கூரையின் பொருத்தப்படும் ஒளிக்கசிவு தகடுகளால் பெறும் வெளிச்சத்தை விட இவ்வகை விளக்குகளால் ஒளிச்சிதறல் முழுமையாக ஒரே விதத்தில் அறை முழுவதும் பரவுவதால் மின்சார விளக்கு போலவே ஒளியை தருகிறது.. http://youtu.be/_zMAWztZ6TI
-
- 2 replies
- 714 views
-
-
நாயின் காலில் 12 லட்சம் மதிப்புள்ள ஆப்பிள் வாட்ச் கட்டிய வாலிபர்: வெடிக்கும் சர்ச்சை [ சீனாவில் இளைஞர் ஒருவர் நாயின் காலில் ஆப்பிள் வாட்சை கட்டி அந்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர் வாங் ஜியாலின். சிறிது நாட்களுக்கு முன்பு இவரது 27 வயது மகன் வாங் சிகாங் ஒரு புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்தார். அந்த படத்தில் நாய் ஒன்றின் இரண்டு கால்களில் சுமார் 12 லட்சம் மதிப்புள்ள ஆப்பிள் வாட்ச் கட்டப்பட்டிருந்தது. மேலும் உங்களிடம் இந்த வாட்ச் உள்ளதா என்றும் கேட்கப்பட்டிருந்தது. இது சீனாவில் பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையே நிலவும் வேறுபாட்டை காட்டுவதாக இணையத்…
-
- 2 replies
- 388 views
-
-
விஞ்செல்சீ கடற்கரையில் பின்லாடன் முகம் கொண்ட அபூர்வச் சிப்பி! சசெக்ஸ் நகரத்தை அண்டிய விஞ்செல்சீ கடற்கரைப் பகுதியில் ஒசாமா பின்லேடன் உருவம் போன்ற கடற்சிப்பியை கண்டெடுத்த பெண் ஒருவர் அதனை ஆச்சரியத்துடன் சமூகவலைத் தளங்களில் பகிர்ந்து வருகிறார். அழகிய கடற்கரைகளைக் கொண்ட கிழக்கு சசெக்ஸ் நகரத்திற்கு அதிகளவான சுற்றுலாப்பயணிகள் வருகை தருவது வழக்கம். அந்த வகையில், மேற்கு லண்டனின் பிரென்ற்ஃபேர்ட் (Brentford) நகரைச் சேர்ந்த டெப்ரா ஒலிவர் என்பவர், தனது 42 வது திருமண நாளைக் கொண்டாடுவதற்காக கிழக்கு சசெக்ஸ் பகுதியில் உள்ள விஞ்செல்சீ கடற்கரைக்கு தனது கணவருடன் சென்றிருந்தார். கடற்கரையில் கிடந்த சங்குகளையும், சிறு சிறு சிப்பிகளையும் வேடிக்கைபார்த்த வண்ணம் டெப்ரா ஒலிவர் உ…
-
- 2 replies
- 538 views
-
-
கல்கிஸை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் துப்பாக்கி மற்றும் பல தோட்டாக்களுடன் தப்பிச் சென்றுள்ளார். மேலும், குறித்த கான்ஸ்டபிள் நேற்று (08) இரவு வீதி சோதனை நடவடிக்கைக்காக சென்றபோது மேற்படி துப்பாக்கியையும் 30 தோட்டாக்களையும் தன்னுடன் எடுத்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இருப்பினும், சம்பந்தப்பட்ட அதிகாரி வீதி சோதனை நடவடிக்கைக்கு சமூகமளிக்காததால், அவரைத் தொடர்பு கொண்டபோது அவரது கையடக்க தொலைபேசி நிறுத்தப்பட்டுள்ளது. பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளில், சந்தேக நபர் நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து டுபாய்க்கு சென்றுள்ளமை தெரியவந்தது. அதன்படி, சந்தேகத்திற்குரிய பொலிஸ் அதிகாரியை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவத…
-
-
- 2 replies
- 219 views
- 1 follower
-
-
மனிதர்களைவிட நாய்கள் நல்லவை’ என்கிறார் 23 வயது ஆண்ட்ரூ. வீடில்லாதவர். சாலைகளில் வசிப்பவர். இவருக்கு உற்றத் துணை இவரது செல்ல நாய் ஸ்மோக்கிதான். என்னுடைய வாழ்க்கையைத் தவிர என்னுடன் தொடர்ந்து வருவது இந்த நாய்தான்’ என்று நன்றியுடன் சொல்லுகிறார் ஆண்ட்ரூ. இவர் மட்டும் அல்ல ரொறான்ரோ வீதிகளில் வசிக்கும் பல வீடில்லா அனாதைகளின் உற்ற தோழனாக நாய்கள்தாம் இருக்கின்றன. நாய்கள் வளர்ப்பதனால் இவர்கள் முக்கியமான ஒரு பிரச்சனையைச் சந்திக்க நேரிடுகிறது. இவர்களை பல ஆதரவற்றோர் இல்லங்களில் சேர்த்துக் கொள்ளுவதில்லை. அங்கெல்லாம் நாய்கள் வளர்க்க தடை இருக்கிறது. ‘நாய்கள் வளர்ப்பது இவர்களுக்கு ஆறுதலாக இருக்கிறது. மனிதர்களுடன் பழக முடியாத இவர்களூக்கு நாய்கள்தாம் வாழ்க்கையை நகற்ற உதவுகிறது’ என்கிறார…
-
- 2 replies
- 539 views
-
-
தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க சரியான நேரம் வந்து விட்டது: ராஜபக்சேவுக்கு அமெரிக்கா கண்டிப்பு தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கக் கூடிய சரியான நேரம் வந்து விட்டது என்றும், இனியும் காலம் கடத்தாமல் செயல்பட வேண்டும் என இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அமெரிக்க வெளியுறவுத் துணை அமைச்சர் ராபர்ட் பிளேக் கண்டிப்புடன் கூடிய அறிவுரையை வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது, ராஜபக்சேவின் நிர்வாகம், தமிழ் மக்களையும் சென்றடைய வேண்டும். அவர்களுக்கு எதிர்காலம் பற்றிய நம்பிக்கை ஏற்பட வேண்டும். இன்னும் ஒரு லட்சம் தமிழர்கள் முகாம்களில் உள்ளார்கள். அவர்கள் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். இதை செய்தால் தான், மனித உரிமைகள் மீது இலங்கை அரசு ம…
-
- 2 replies
- 589 views
-
-
3 வருடங்கள் காதலித்த யுவதியை கரம்பிடித்த இளைஞர்: திருமணம் முடித்து வாகனத்தில் பயணித்த போது மனைவியின் தோளில் சாய்ந்தபடியே மரணம் - அதிக மகிழ்ச்சி, வேலைப் பளுவே மரணத்துக்கு காரணங்கள் என அறிக்கை 2016-10-11 09:09:15 (ரெ.கிறிஷ்ணகாந்) திருமணம் முடிந்து வீடுதிரும்பிக் கொண்டிருந்த போது மணமகள் தோள் மீது சாய்ந்து கொண்டு சென்ற மணமகனொருவர் திடீரென மாரடைப்பினால் உயிரிழந்த சம்பவம் ஒன்று இப்பாகமுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் இசுரு சம்பத் ரணதுங்க(25) என்ற இப்பாகமுவ பிரதேசத்தை சேர்ந்த இளைஞராவார். கடந்த 3 வருடங்களாக தான் காதலித்து வந்த மாத்தறை ஹக்மன பனமவில பிர…
-
- 2 replies
- 319 views
-
-
கடந்த 160 ஆண்டுகளில் இல்லாத விதமாக 2010ஆம் ஆண்டு மிகுந்த வெப்பம் நிறைந்ததாக இருக்கும் என இங்கிலாந்து வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதுதொடர்பாக இங்கிலாந்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், “இயற்கைப் பருவநிலை மாற்றம் காரணமாக புவியின் வெப்பம் அதிகரிக்கும் என்ற போதிலும், 2010ஆம் ஆண்டில் மனித குலத்தால் ஏற்பட்ட பருவநிலை மாற்றம் காரணமாகவே வெப்பம் அதிகரிக்கும். இந்த வெப்பத்தின் அளவு கடந்த 1998இல் காணப்பட்டதை விட அதிகமாக இருக்கும். கடந்த 1961 முதல் 1990 வரையிலான காலகட்டத்தில் உலகம் அனுபவித்த சராசரி வெப்பத்தின் அளவை விட, 2010ஆம் ஆண்டில் உலகளவில் 0.6 டிகிரி வெப்பம் அதிகமாக (அதாவது 14.58 டிகிரி) காணப்படும். 2010ஆம் ஆண்டு மட்டுமின்றி வரும் 2019 வரையிலான கா…
-
- 2 replies
- 604 views
-
-
சீனாவின் அதிகாரி ஒருவர் தனது வீட்டின் முன்னால் உள்ள புத்தர் சிலையில் ஆபாச திரைப்பட சீடிக்களையும், பணத்தையும் பதுக்கிவைத்துள்ளார். சீனாவின் பிரதமர் ஊழல் மற்றும் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் மீது கடுமையாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் சீனாவின் மங்கோலியா உள் பகுதியை சேர்ந்த அரசு அதிகாரி வு ஷிஷோங் (63)என்ற கம்யூனிஸ்டு தலைவருக்கு 34 சொசுகு பங்காளாக்கள் இருப்பதும், அதில் ஒன்று கனடாவில் வாங்கபட்டு உள்ளதும் தற்போது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இவரை கைது செய்த பொலிசார் நடத்திய விசாரணையில், இவர் தினமும் வீட்டின் முன் பிரார்த்தனை செய்யும் புத்தர் சிலையின் அடியில் ரகசிய அறை ஒன்று அமைத்துள்ளார் என்றும் அதில் தான் ஊழல் செய்து சேர்த்த 2,000 பணக்கட்டுகள், தங்க கட்டிகள்,…
-
- 2 replies
- 1.3k views
-
-
புதிய கூட்டணியுடன் வருகிறார் ராமர் பிள்ளை ஜூனியர் விகடனில் இருந்து... பெட்ரோல் விலை ஏறும்போது எல்லாம் ராமர் பிள்ளை முகம் ஞாபகத்துக்கு வரும். என்ன செய்கிறார் என்று தேடிப் பார்த்தோம். சென்னையில் வசித்தாலும் ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டு இருக்கும் அவரை ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தில் பிடித்தோம். இன்னும் அதே உற்சாகத்தோடு இருக்கிறார். ''ஆகஸ்ட் வரைக்கும் காத்திருங்க சார். நாட்டு மக்களுக்கு நல்ல செய்தியோட வர்றேன். எல்லா சதிகளையும் முறியடிச்சு வெற்றிக்கோட்டை நெருங் கிட்டேன்'' என்று உற்சாகம் ததும்பப் பேசும் ராமர் பிள்ளையின் பேச்சு முழுவதும் அதிரடி சரவெடி. ''நான் சாதாரணக் கிராமத்து மனுஷன். உலகத் தையே வாட்டி வதைக்கிற எரிபொருள் பிரச்னைக்கு என் அறிவுக்கு…
-
- 2 replies
- 636 views
-